Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன் தலைமறைவு

Posted: 03 Jun 2013 02:23 PM PDT

பாட்னா, ஜுன் 3- பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், நஷ்ரத்பூர் கிராமத்தை சேர்ந்த உபேந்திரா மஹ்தோ என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரினா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக தருவதாக கூறிய எருமை மாட்டை ரினா தேவியின் பெற்றோர்கள் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக மனைவியிடம் உபேந்திரா அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். நேற்றும் ரினா தேவியிடம் உபேந்திரா இதுபோல் சண்டை போட்டார். ரினா தேவியும் அவரை எதிர்த்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உபேந்திரா, வீட்டில் ...

"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி

Posted: 03 Jun 2013 02:20 PM PDT

சென்னை: "சேது சமுத்திரத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்வராவிட்டால், போர்..போர்..போர்.. என்பதே, என்னுடைய 90 வது பிறந்த நாள் செய்தி,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:என்னுடைய பிறந்த நாளில், ஒரே நாளில் 1.20 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக கட்சியினர் அளித்துள்ளனர்; இதைக் கண்டு எதிரிகள் பொறாமைப்படுவர். இந்த நிதி, வரும் தேர்தல்களில், நியாயமாக செலவு செய்யப்படும் என, உறுதி அளிக்கிறேன். இதன் மூலம் தேர்தலில் பகையை ...

நோமோபோபியாவால் (Nomophobia) அவதியுறும் இளைய தலைமுறை

Posted: 03 Jun 2013 02:16 PM PDT

மொபைல்போன் தொலைந்துபோவ‌தாக நினைத்து பயம் கொள்ளும் நோமோபோபியாவால், இளைய தலைமுறையினரில் 10ல் 9 ‌பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான சிஸ்கோ நிறுவனம், 30 வயதிற்குட்பட்ட 3800 பேரிடம் சமீபத்தில் நோமோபோபியா குறி்த்து கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது கொரியர் மெயில் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. அதில் இந்நோயால், 10ல் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், ஒவ்வொரு 10 நிமி‌டத்திற்கு ஒருமுறை, தங்களுக்கு ...

முகத்தில் ’ஜட்டி’ முகமூடியுடன் உலா வரும் ஜப்பானின் ‘பேண்டி ஹீரோக்கள்’!

Posted: 03 Jun 2013 11:09 AM PDT

டோக்கியோ: முகத்தில் விதவிதமான முகமூடி போடும் ஜப்பானியர்கள், தற்போது ஜட்டியையும் முகமூடியாக அணிய ஆரம்பித்துள்ளார்களாம். சூப்பர் மேன் பேண்ட் மேலே ஜட்டியுடன் தோன்றுவார். அதனைப்பார்த்து நம்மூர் சிறுசுகள் பல சூப்பர் மேன் டிரஸ், சக்திமான் டிரஸ் என வாங்கித்தரச் சொல்லி அடம் பிடித்த கதை நமக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்று தான். நம்மூர் மாதிரியே, ஜப்பானில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே, தற்போது, ஒரு புது பேஷன் உருவாகியுள்ளது கார்ட்டூனால் வந்த வினை... ஜப்பானில் பிரபலமான, கற்பனை கார்ட்டூன் ...

மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man

Posted: 03 Jun 2013 11:07 AM PDT

செயற்கறிய செய்தார் பெரியார் என்னும் வாக்கிற்கு ஏற்ப இவர் தனது வாழ்நாளில் செய்த காரியம் மிக மிக பெரியது. பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த இவர் மிகவும் ஏழ்மையாக குடும்பத்தில் பிறந்தவர் அந்த கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு செல்ல வேன்டுமானால் 75 கி.மீ தூரம் மலைகளை சுற்றி தான் செல்ல வேன்டும். எனவே அடிப்படி தேவைகளுக்காகவும் கூட அந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள பட்டினத்தை அடைய மிக தொலைவு செல்ல வேன்டியிருந்தது. இப்படியாக ஒரு நாள் மான்சியின் மனைவி ...

பாடும் போது நான் தென்றல் காற்று - இனிமையான எம்ஜியார் பாடல்

Posted: 03 Jun 2013 10:42 AM PDT

நைஜீரியா பெண்களை ஸ்பெயின் சாலையோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது

Posted: 03 Jun 2013 10:37 AM PDT

மாட்ரிட், ஜுன் 3- நைஜீரியாவில் இருந்து இளம்பெண்களை கடத்திவந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனின் நகர சாலையோரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண் உள்பட 6 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர். வறுமை நிலையில் இருக்கும் இளம்பெண்களை நைஜீரியாவில் இருந்து கடத்திவரும் விபசார தரகர்கள், மொரக்கோ நாட்டிற்கு அழைத்து வருகின்றனர். பின்னர், கள்ளத் தோணியில் ஏற்றி ஸ்பெயின் நாட்டுக்குள் கடத்தி வந்து மாட்ரிட், பார்செலோனா, மலாகா போன்ற முக்கிய நகரங்களின் சாலையோரங்களில் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இதற்கு ...

செகோஸ்லோவேக்கியா நாட்டு இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன

Posted: 03 Jun 2013 10:36 AM PDT

பிரேக், ஜுன் 3- செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. 1949ம் ஆண்டிற்கு பிறகான அந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. செகோஸ்லோவேக்கியாவை சேர்ந்த அலெக்சாண்டிரா கினோவா(23) என்ற பெண் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று 'சிசேரியன்' முறையில் நடைபெற்ற பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகளையும், 1 பெண் குழந்தையையும் ...

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Posted: 03 Jun 2013 10:28 AM PDT

தேன் சிந்துதே வானம் - இதையும் கேளுங்க

Posted: 03 Jun 2013 10:23 AM PDT

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல - இதையும் கேளுங்க

Posted: 03 Jun 2013 10:17 AM PDT

BMW

Posted: 03 Jun 2013 10:14 AM PDT

the BMW Pininfarina Gran Lusso Coupé

பொண்ணுக்கு துணி துவைக்கவே தெரியல

Posted: 03 Jun 2013 10:09 AM PDT

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் 'அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு' அப்படின்னு சொன்னா. ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல. பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து ...

ஒரு வானவில் போலே... கேளுங்கள் இனிய பாடலை

Posted: 03 Jun 2013 10:08 AM PDT

குட்டிப்புலி திரைப்படம்

Posted: 03 Jun 2013 09:57 AM PDT



இப்படத்தின் சுட்டி இணையத்திலிருந்து எடுத்து இங்கு பயன்படுத்தப்படுகிறது!

பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை

Posted: 03 Jun 2013 09:37 AM PDT

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார். 2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. 3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார். 4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன. 6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன. 7. ...

சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Posted: 03 Jun 2013 09:36 AM PDT

நடிகர்கள்:சூர்யா,அனுஷ்கா,ஹன்சிகா.விவேக் இயக்கம்:ஹரி இசை:தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள் 1.அச்சமில்லை 2.கண்ணுக்குள்ள 3.புரியவில்லை 4.சிங்கம் டான்ஸ் 5.வால வால 6.விதை போல நன்றி:தமிழ்டுயூன்ஸ்

தீரா - மீரா 21

Posted: 03 Jun 2013 09:32 AM PDT

காந்தமும் இரும்புமாய் மீரா-தீரா; பிரிக்க முடியாத நிலையில் தீரா பிரிய முடியாத நிலையில் மீரா இருவரின் உடல் எழும்பும் உரசிக் கொள்ள தசைகள் ஒட்டிக் கொண்டன; மதுவில் இருக்கும் போதை நினைவுக்கு தெரியும் மலரில் இருக்கும் போதை வண்டுக்கு புரியும் பிரிவில் இருக்கும் போதை அனைப்பில் அறியும் அப்படித்தான் தீராவும் - மீராவும்; நெருப்பும், தீ பந்தமுமாக கடலும், உப்புமாக வானும், மேகமுமாக மண்ணும், வேருமாக வாளும், வீரமுமாக காற்றும், வியர்வையுமாக பாறையும், பளபளப்புமாக தீராவும், மீராவும் ஒட்டிக்கிடந்தனர்; வெளியில் பார்த்தா ...

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Posted: 03 Jun 2013 09:32 AM PDT

நான் காகிதத்தில்
கிறுக்கியது
கவிதையானது

நீ விரலில்
நறுக்கியது
நிலாவானது

நான் கடற்கரை மணலில்
பொறுக்கியது
காதல் சின்னமானது

என் இதயத்தில்
நீ சறுக்கியதும்
அது சின்னாபின்னமானது

ஓ !
எனக்கும்
தொடங்கிவிட்டதோ காதல் !

தீரா-மீரா 20

Posted: 03 Jun 2013 09:31 AM PDT

வரலாற்று போரில் வாள் பாய்ந்து இறந்தவர்கள் உண்டு; வார்த்தைகள் பாய்ந்து இறந்தவர்களும் உண்டு; தீரா... வார்த்தையால் வறுத்தெடுக்கப்பட்டான் பார்த்தா தங்கையின் பதில்களால்; அடுத்த வார்த்தை... மீரா-வின் இல்லம் மணக்கோலத்தில் மீரா-வின் உள்ளம் மரண கோலத்தில்; என்றாள் வெண்ணிலா; தீரா-வின் பொறுமை பொசுக்கப்பட்டது; தீரா-வின் கோபம் கொழுந்துவிட்டது; அடுத்த கணம் காற்றாய் பறக்க ஆரம்பித்தான் பார்த்தன் தடுக்கவில்லை பின் தொடர்ந்தான்; தீரா குதிரையில் செல்வதை பார்த்த பார்த்தனின் கண்களில்: ...

சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை

Posted: 03 Jun 2013 09:18 AM PDT

சிறைகளில் இருந்தே, வெளியில் நடக்கும், கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள் உருவாவதாக, தகவல் கிடைத்ததால், புழல் சிறையில், நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.தமிழகத்தில், கூலிப் படையைக் கொண்டு நடத்தப்படும் கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள், சிறைக்குள் உருவாகுவதாகவும், மொபைல் போன்கள் மூலம், திட்டமிடப்படுவதாகவும், சிறைத் துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதிக்குத் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, பெருகும் கொலைகளைத் தடுக்க, சிறைகளில் சோதனையிட அவர் உத்தரவிட்டார். புழலில் சோதனை : இந்நிலையில், சென்னை புழல் ...

மஹாபாரதம் - ஆதிபர்வம் பகுதிகள் 1 முதல் 100 இலவச பதிவிறக்கம்

Posted: 03 Jun 2013 09:16 AM PDT

அனைவரும் மஹாபாரதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவே முழு மஹாபாரதம். அவ்வலைப்பூவில் இன்று வரை நான் மொழிபெயர்த்த அனைத்துப் பகுதிகளையும் எளிதாக படிக்கும் வகையிலும், அப்புத்தகம் மேலும் மேலும் பகிரப்படும் என்ற நம்பிக்கையிலும் பிடிஎப் கோப்புகளாக இங்கே தருகிறேன். நாம் அறிந்து கொள்வதைப் போல மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகையால், நண்பர்களுக்குப் பகிருங்கள். பரிந்துரை செய்யுங்கள். இதை, மின்னஞ்சல் மூலமாக, முகநூல் மூலமாக, கீச்சு மூலமாக, - என பல வழிகளில் பகிரலாம், ...

1001 பதிவுகளை கடந்த ஹைதராபாத் அற்புத விளக்கு அகலுக்கு வாழ்த்துகள்

Posted: 03 Jun 2013 09:16 AM PDT

1001 பதிவுகளை பர பரவென பத்திக்கிட்டு பரந்த காக்கை சிறகு ஹய்தராபாத் பிரியாணி அலாவுதீன் ஆலம்பனா விளக்கு அகலுக்கு வாழ்த்துகள்

22000 பதிவுகளை கடந்த நம்ம ஓமன் கிளை தல தளபதி பாலாவுக்கு வாழ்த்துக்கள்!!

Posted: 03 Jun 2013 09:10 AM PDT

பதிவுகளை கடந்த நம்ம ஓமன் கிளை தல தளபதி பாலாவுக்கு வாழ்த்துக்கள்.! இன்னும் பல கிளைகளை பெற்று சீரும் சிறப்போடும் இருக்க ஈகரை சார்பாக வாழ்த்துகிறோம்

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

Posted: 03 Jun 2013 08:47 AM PDT

நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி ...

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி

Posted: 03 Jun 2013 08:44 AM PDT

புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள் அரசியல் கட்சிகளை கொண்டு வரும் முடிவுக்கு ம்ததிய தகவல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கலங்கி போய் இருக்கின்றன. அத்துடன் இதற்கு பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது. ஆளும் காங்கிரஸ் அரசின் சாதனை சட்டமாக தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமைப்புகள் குறித்து எந்தவொரு கேள்விக்கும் தகவல் பெற முடிந்தது. இதன் மூலம் பல்வேறு ஊழல்கள் மற்றும் மறைக்கப்பட்ட தகவல்கள் ...

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Posted: 03 Jun 2013 08:40 AM PDT

பிரதமருடன் ஜப்பானுக்குப் பயணித்தது பெரிதல்ல. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கியபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிந்ததே, அதுதான் பெரிது. தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள். இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, ...

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2

Posted: 03 Jun 2013 08:39 AM PDT

1) "நாலு பேரு பேச்சைக் கேட்டு நட" ன்னு சொல்றாங்களே...! யார் அந்த நாலு பேர்? 2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்? 3) "தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…" என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்? 4) 'தமிழிசை வளர்த்த தாய்' என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்? 5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்? 6) சுந்தரரை ...

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Posted: 03 Jun 2013 07:04 AM PDT

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா தகுந்த விளக்கம் தரவும் .

நன்றி

உதவுங்கள் - டிரைவர் மென்பொருள்

Posted: 03 Jun 2013 06:39 AM PDT

டெல் மடிக்கணினி N4010 க்கான இலவச டிரைவர் மென்பொருள்(driver software) பெறுவதற்கான இணைப்பு தந்து உதவுங்கள்..

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1

Posted: 03 Jun 2013 06:04 AM PDT

1) அ + உ + ம = 2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக. 3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்) 4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக. 5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக. 6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்? 7) .............................................உருகார் எதற்கும் உருகார். 8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்? 9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்? 10) தற்போது ...

குட்டி குட்டி சைக்கிள்!

Posted: 03 Jun 2013 05:58 AM PDT

சின்னா ஒரு ஏழைப் பையன். சிறுவயதிலேயே குடும்பத்தை காப்பாற்றும் கடமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால், வேலை செய்யக் கிளம்பிட்டான். சின்னா, பக்கத்து ஊரிலிருந்த ஒரு கிழவரின் வீட்டில் வேலை செய்து வந்தான். மாதா மாதம், அவர் கொடுக்கும் சம்பளத்தை ஊருக்கு அனுப்பிவிடுவான். இப்படியே, ஒரு வருஷமாயிற்று. ஒருநாள் சின்னாவிற்கு, தன் அம்மாவை பார்க்க வேண்டும்போல ஆசையாக இருந்தது. தன் விருப்பத்தை கிழவரிடம் சொன்ன போது, அவர் சின்னாவிடம் வாத்து ஒன்றை கொடுத்து, ""இதன் காதில் நான் சொல்லும் மந்திரத்தைச் சொன்னால், ...

அழகு பராமரிப்பில் கற்பூரத்தின் நன்மைகள்!!!

Posted: 03 Jun 2013 05:46 AM PDT

கற்பூரத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் இருந்து வெளிவரும் நறுமணத்திற்கு காரணம், இதில் உள்ள கெமிக்கல் தான். கற்பூரம் சாமி கும்பிடும் போது மட்டும் பயன்படாமல், சில அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதுவும் முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதனால் தான் அது ஆயுர்வேத அழகுப் பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதிக முகப்பருக்கள் மற்றும் பிம்பிளால் அவஸ்தைப்படுபவர்கள், கற்பூரத்தை கொண்டு சரிசெய்யலாம். இதுப் போன்று கற்பூரம் அழகிற்கு ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -15)

Posted: 03 Jun 2013 04:30 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

Posted: 03 Jun 2013 04:18 AM PDT

பாக்தாத்: சரியாக ஈராக் போர் நடந்து முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், போரில் உபயோகிக்கப்பட்ட வெடிகுண்டுகளின் தாக்கம் இன்னும் அங்கு தொடர்கிறது. ஒன்றும் அறியா இளம் தளிர்கள் பிறக்கும் போதே உடல் குறையுடனும், ரத்தப் புற்று நோய் போன்ற கொடிய நோயுடனும் பிறக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம். கடந்த 2003-ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற போரில்,பெருமளவில் வெடிகுண்டுகள் பயன் படுத்தப்பட்டன். ஏறக்குறைய போர் நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், அதன் எதிர் விளைவுகள் தற்போது அங்கு வாழும் ...

sd card கேள்வி பட்டு இருக்கிறோம் shdc என்றால் என்ன விளக்கம் ப்ளீஸ்?

Posted: 03 Jun 2013 04:15 AM PDT

விளக்கம் கொடுங்களேன் ??

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 03 Jun 2013 04:07 AM PDT

முகநூலில் ரசித்தவை-2

Posted: 03 Jun 2013 04:02 AM PDT



சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் ..

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!

Posted: 03 Jun 2013 03:43 AM PDT

பல நேரங்களில் நாம் நமக்குள் இருக்கும் மன உலகத்தை புறக்கணித்து விட்டு வெளி உலகத்தை பற்றியே கவனம் கொண்டு அதை பற்றியே ஆர்வத்துடன் இருக்கிறோம். உண்மையில் நாம் எத்தனை முறை, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ள முயற்சித்திருப்போம்?? இது வரை நாம் அதனை செய்ய தவறவிட்டாலும், வாழ்வின் அங்கமாய் இருக்கும் சில விஷயங்களை கொண்டு, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ளலாம். அதுவே ஒரு மனிதனின் தனி தன்மையை வெளிபடுத்தும் சில விஷயங்கள். ஆகவே ஒவ்வொருவரும் அவரது தனித்தன்மையை அடுத்தவரிடம் மறைக்க முடியும் என்று எண்ண வேண்டாம். ...

நம்பிக்கை...- கதை

Posted: 03 Jun 2013 03:41 AM PDT

நம்பிக்கை... ------------------ அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகி விடுவேன்' என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்' என நினைத்தான். அன்றிலிருந்து ...

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Posted: 03 Jun 2013 03:28 AM PDT

டிவி' சேனல்களில், நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத வகையில், அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை பார்த்து, வெறுப்படைத்த நேயர்கள், அக்டோபர் மாதம் முதல் நிம்மதி அடையும் வகையில், அதிரடி மாற்றம் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங் களை இடம் பெறச் செய்ய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. கோரிக்கை : "டிவி' மற்றும் ரேடியோவில், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும், வர்த்தக விளம்பரங்கள், நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்கள் நேயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் ...

அதிகம் அறியப்படாத பிரவுசர்கள்!!

Posted: 03 Jun 2013 02:32 AM PDT

இணையத்தை நம்முடன் இணைக்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் (சபாரி மற்றும் ஆப்பரா ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆகிய பிரவுசர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஏறத்தாழ இவை தரும் வசதிகளுடனும், திறனுடனும் இன்னும் சில பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடன் செயல்படும் வகையில் வடிவைக்கப்படவில்லை என்றாலும், இவற்றையும் விரும்பினால் பயன்படுத்திப் பார்க்கலாம். 1. ஸீ மங்கி (SeaMonkey): இங்கு தரப்படும் மற்ற பிரவுசர்களைப் போல் இல்லாமல், ...

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Posted: 03 Jun 2013 02:10 AM PDT

எனது pen drive ஒன்று வைரஸ் பாதிக்கப்பட்டது. கணினியில் போட்டால் deduct ஆகவே இல்லை. என்ன செய்தால் deduct செய்ய வைக்க முடியும்.

தயவு செய்து உதவுங்கள்!!

முருகனுக்கு அப்பாவான சிவாஜி!

Posted: 03 Jun 2013 01:46 AM PDT

கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது சிவனின் அருமை பெருமைகளை கூறி வந்தார். திடீரென்று, ஒரு சிறுவனை பார்த்து, "முருகனின் அப்பா பெயர் என்ன?" என்று கேள்வி கேட்டார். அந்த சிறுவன் சற்றும் தயங்காமல், "சிவாஜி" என்று பதில் கூறினான். வாரியார் எந்தவித அதிர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமயத்திற்கு ஏற்றது போல், "பையன் கூறுவது சரி தான்" என்றார். இதைக்கேட்டு கூட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதை புரிந்து கொண்ட வாரியார், "பெரியவர்களை நாம் காந்திஜி, நேருஜி என்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™