Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

Posted:

பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது. ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர். இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சமீப காலமாக, பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில், ஆசிரியர்களே ஈடுபடுவது தான், அதிகமாக நடக்கிறது. பல்வேறு ...

ஆறு அரசியல் கட்சிகளுக்கு தகவல் உரிமை சட்டம் பொருந்தும்

Posted:

புதுடில்லி :"தகவல் அறியும் உரிமைச் சட்டம், காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட, ஆறு அரசியல் கட்சிகளுக்கும் இனி பொருந்தும்' என, மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இந்த ஆறு அரசியல் கட்சிகளும், தாங்கள் பெற்ற நன்கொடை, தேர்தல் செலவு உள்ளிட்ட விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் கேட்டால், அதற்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்.

@subtitle@சீர்திருத்தம்:@@subtitle@@
சமூக ஆர்வலர், சுபாஷ் அகர்வால், "ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம்' என்ற அமைப்பை சேர்ந்த, அனில் பெய்ர்வால் ஆகியோர், மத்திய தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:காங்கிரஸ், ...

உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

Posted:

எப்பாடு பட்டாவது, உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி, அடுத்த பொதுத் தேர்தலில், அதை தங்களின் சாதனை பட்டியலில், சேர்த்துவிட வேண்டும் என்பதில், காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆனால், இந்த சட்டத்தால், தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதால், தமிழகம் உட்பட, சில மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.

@subtitle@குறைந்த விலையில்,:@@subtitle@@
அடுத்த ஆண்டு பார்லிமென்டிற்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலை சந்திக்க ஏற்ற வகையில், ஏழைகளுக்கு குறைந்த விலையில், உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும், உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி, அதை முன்னிலைப்படுத்தி ...

"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி: மத்திய, மாநில அரசுக்கு எச்சரிக்கை

Posted:

சென்னை:""சேது சமுத்திரத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்வராவிட்டால், போர்..போர்..போர்.. என்பதே, என்னுடைய 90 வது பிறந்த நாள் செய்தி,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:என்னுடைய பிறந்த நாளில், ஒரே நாளில் 1.20 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக கட்சியினர் அளித்துள்ளனர்; இதைக் கண்டு எதிரிகள் பொறாமைப்படுவர். இந்த நிதி, வரும் தேர்தல்களில், நியாயமாக செலவு செய்யப்படும் என, உறுதி அளிக்கிறேன். இதன் மூலம் தேர்தலில் பகையை சந்தித்து, வெற்றி வாகை சூடுவோம். முடிந்தால் ஆட்சி அமைப்போம். இல்லை ...

கருணாநிதி, ஸ்டாலின் மீது முதல்வர் பாய்ச்சல்:குட்டி கதை கூறி சாடினார்

Posted:

திருச்சி : தி.மு.க., தலைவர் கருணாநிதியையும், அவரது மகன் ஸ்டாலினையும், கடுமையாகச் சாடி, ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில், குட்டிக் கதை கூறி முதல்வர் ஜெயலலிதா பேசினார்.திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று மாலை நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா கூறிய கதை:ஒரு ஊரில் தந்தையும், மகனும் இருந்தனர். அவர்கள் நினைவு மண்டபம் முன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்தவர்கள், யாருடைய மண்டபம் என்று, இருவரிடமும் கேட்டனர். அதற்கு தந்தையோ, இந்த மண்டபத்தில் பெரிய மகான் புதைக்கப்பட்டுள்ளார். அவரது சமாதி முன் சிறிது நேரம் தியானம் செய்து, அங்குள்ள உண்டியலில் ...

சுற்றுச்சூழல் அபாயம் அதிகம் ஏற்படும் மணப்பாறை பகுதியில் காகித அட்டை ஆலை தேவையா?

Posted:

முதல்வர் தொகுதியில் அமைய உள்ள மரக்கூழ் காகித அட்டை தயாரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு, மரக்கூழ்களால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் (டி.என்.பி.எல்.,) காகிதம், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி, மணப்பாறை தாலுகாவுக்குட்பட்ட மொண்டிப்பட்டி பஞ்சாயத்தில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், 989 ஏக்கர் நிலப்பரப்பில், பிரமாண்ட காகித அட்டை தொழிற்சாலை அமைக்க உள்ளது.இது இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆலை. இதுபோன்ற ஆலை சர்வதேச ...

கிரிக்கெட் போட்டி முடிவை மாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்த்த புரோக்கர்கள்

Posted:

டில்லி தரகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கிரிக்கெட் போட்டிகளின் முடிவை மாற்றிச் சொல்லி, சென்னையில் உள்ள பலரிடம், கோடிக்கணக்கில் சென்னை சூதாட்ட புரோக்கர்கள் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.சென்னையில், ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக, பிரசாந்த், கிட்டி, சஞ்சய் பாவ்னா, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட, பத்துபேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆறு பேர் இந்தவழக்கில் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், பிரசாந்த் உள்ளிட்ட, ஆறு பேரிடம் போலீசார், விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.மேலும், விசாரணை முடிந்த நிலையில், கிட்டி, சஞ்சய் பாவ்னா தவிர மற்றவர்கள் அனைவரும், ...

குறுவைக்கு சாகுபடி செய்ய தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா?

Posted:

மேட்டூர்:காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரம் அடைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 1,600 கனஅடியாக அதிகரித்தது. தீவிரமாகியுள்ள தென்மேற்கு பருவமழை, குறுவைக்கு கைகொடுக்குமா என, டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கடந்த ஆண்டு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட வறட்சியால், மேட்டூர் அணை நீர்வரத்து கடுமையாக சரிந்தது. பாசனத்துக்கு நீர்திறக்காததால் கடந்த ஆண்டு தமிழக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்தது. வறட்சியால் மேட்டூர் அணை நீர்மட்டமும் ...

திருமணம் முடிந்த கையோடு சிறை வாசம்: குரூப்-2 வழக்கில் சிக்கிய துணை கமிஷனர்

Posted:

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில், வணிக வரித்துறை துணை கமிஷனர் ரவிக்குமார், திருமணமான மறுநாளே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழகத்தில், கடந்த, 2012ம் ஆகஸ்ட் மாதம் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஈரோடு, தர்மபுரி அரூரில் தேர்வுக்கு முன்பாக, வினாத்தாள் வெளியாகி, தேர்வு ரத்தானது. ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில், தனக்கொடி, ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராவ், ஒடிசாவை சேர்ந்த ஹகன் என, 15க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. ...

"மாவோயிஸ்ட் பிரச்னை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவு'

Posted:

புதுடில்லி :"மாவோயிஸ்ட் பிரச்னை பற்றி விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்' என, ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஐ.மு., கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடந்த இக்கூட்டத்தில், காங்., தலைவர் சோனியா, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மசோதா பற்றி விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பற்றி விவாதிக்கப்படவில்லை. இக்கூட்டம் ...

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற பார்லியை முன்னதாகவே கூட்டுங்க : ராஜ்நாத்

Posted:

ஐதராபாத்: ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகானை, அத்வானி பாராட்டி பேசியதை, எதிர்க்கட்சிகள் திசை திருப்புகின்றன. சவுகானை பாராட்டி பேசினார் என்பதற்காக, நரேந்திர மோடியை, அத்வானி குறைத்து மதிப்பிட்டதாக கருதக் கூடாது,'' என, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.நல்ல வளர்ச்சி: ஆந்திராவைச் சேர்ந்த, சுயேச்சை எம்.எல்.ஏ., ஒருவர், நேற்று, பா.ஜ.,வில் சேர்ந்தார். இதற்கான விழா, ஐதராபாத்தில் நடந்தது. விழாவில் பங்கேற்க வந்திருந்த, பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் கூறியதாவது: பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, ம.பி., முதல்வரும், எங்கள் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™