Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆலப்புழா ஏரியில் உல்லாச படகு கவிழ்ந்து புதுமண தம்பதி பலி

Posted: 12 Jun 2013 11:29 PM PDT

விசாகப்பட்டினம் மாவட்டம் ஷாமுனிபட்டினத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மகள் நாகமணி (26). இவருக்கும் விசாகப்பட்டினம் விசாலாட்சி நகரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணா சாகர் என்பவருக்கும் கடந்த மாதம் 31-ந் தேதி திருமணம் நடந்தது. வெங்கடகிருஷ்ணா சாகர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்காக ஐதராபாத் வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் மனைவியுடன் அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு இருந்தார். அமெரிக்கா செல்ல அனைத்து ஏற்பாடுகளையும்

கேரளாவில் மழை நீடிப்பு: அணைகளில் தண்ணீர் பெருகியதால் நீர் மின் உற்பத்தி தொடங்கியது

Posted: 12 Jun 2013 11:10 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறிப்பிட்ட படி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகளில் தண்ணீர் பெருகி உள்ளது. கேரள மாநிலம் நீர் மின்சாரத்தையே நம்பி உள்ள மாநிலமாகும். இதனால் இங்கு நீர் மின் உற்பத்தி திட்டங்களும்

நடிகை ஜியாகான் தற்கொலை: காதலன் சூரஜ் மீது கற்பழிப்பு புகார்

Posted: 12 Jun 2013 10:35 PM PDT

நடிகை ஜியாகான் தற்கொலை தொடர்பாக காதலன் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனுடன் நிசப்த் படத்திலும் கஜினி இந்திப் படத்திலும் நடித்த நடிகை ஜியாகான் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டாலும் காரணம் என்ன என்று தெரியவில்லை.

மும்பையில் 17 கி.மீ. நீள பிரமாண்ட மேம்பாலம் இன்று திறப்பு

Posted: 12 Jun 2013 10:26 PM PDT

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மேம்பாலம் மும்பையில் மக்கள் பயன்பாடுக்காக திறக்கப்பட உள்ளது.

திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக இதுவரை ரூ.44 கோடி குவிந்தது

Posted: 12 Jun 2013 10:19 PM PDT

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கை மூலம் தினமும் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வருமானமாக கிடைக்கிறது. இது தவிர தேஸ்தான

தடையை மீறி நாளை தெலுங்கானா போராட்டம்: ஐதராபாத்தில் 144 தடை உத்தரவு

Posted: 12 Jun 2013 10:16 PM PDT

ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி சட்டசபையை நோக்கி பேரணி நடத்தப்போவதாக தெலுங்கானா போராட்ட குழு அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை. பேரணியில் மாவேஸ்டு தீவிரவாதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா திட்டவட்டமாக கூறி விட்டார்.

அத்வானி கையில் இருக்கும் கிளி நிதிஷ் குமார்: லல்லு பிரசாத் யாதவ்

Posted: 12 Jun 2013 09:12 PM PDT

பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அங்கமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி உள்ளது. இது குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சமீபத்தில் கோவாவில் நடந்த பாரதீய ஜனதா

நிதிஷ் விலகவேண்டாமென கேட்க பாதலிடம் அத்வானி வேண்டுகோள்

Posted: 12 Jun 2013 06:15 PM PDT

பாரதீய ஜனதா கட்சி குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடி

மோடி வாரணாசி, அலகாபாத் அல்லது லக்னோ தொகுதியிலிருந்து போட்டியிடலாம்

Posted: 12 Jun 2013 01:23 PM PDT

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி எந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் பிரதமர் பதவிக்காக அக்கட்சியில் இருந்து முன்னிறுத்தப்பட பெரும்பாலோரால் எதிர்பார்க்கப்படுகிறார்.

குஜராத் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 12 பாகிஸ்தானியர்கள் கைது

Posted: 12 Jun 2013 12:41 PM PDT

குஜராத் கடல் பகுதியில் சர்வதேச எல்லையை கடந்து பாகிஸ்தானை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த திங்களன்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். கடல் எல்லையில் இருந்து 33 கடல் மைலில் இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ரஹ்மான் பாபா என்று எழுதப்பட்டிருந்த போட்டையும், மீனவர்களையும் அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களையும்,

சோதனைக்கு பயந்து அட்டை பெட்டிகளில் குழந்தை தொழிலாளர்களை மறைத்து வைத்த கொடுமை

Posted: 12 Jun 2013 07:25 AM PDT

தலைநகர் டெல்லியின் வடமேற்கே உள்ளது பத்லி தொழிற்பேட்டை பகுதியாகும். இங்குள்ள நான்கு தொழிற்சாலைகளிலும், சீசன் வியாபாரமான குளிரூட்டும் பெட்டிகளை சீர் செய்து அட்டைப்பெட்டிகளில் அடுக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அங்கு வேலை செய்துகொண்டிருந்த அனைவருமே 10லிருந்து 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே மேற்கு வங்கம், பீகார், உத்திரப்பிரதேசம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது: மேற்பார்வைக் குழு கூட்டத்தில் கர்நாடகம் கைவிரிப்பு

Posted: 12 Jun 2013 06:57 AM PDT

தமிழ்நாட்டில் சாகுபடிக்காக காவிரியில் ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்த காவிரி மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Posted: 12 Jun 2013 06:45 AM PDT

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் பட்டியலில் டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு அடுத்து, 3-வது இடத்தில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா உள்ளது என்று தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் பதிவு ஒரு லட்சத்தைத் தாண்டியது

Posted: 12 Jun 2013 06:36 AM PDT

தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்களும் பெற்ற நிலையில், மாணவர்கள் அடுத்த கட்டமான கல்லூரியைத் தேர்வு செய்வதை நோக்கிப் படையெடுத்துள்ளனர். தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பு தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களின் பதிவு இதுவரை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மொத்தம் 1,16,291 விண்ணப்பங்கள்

சோனியா மருமகனுக்கு நிலம் ஒதுக்கீடு: விவரங்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

Posted: 12 Jun 2013 06:27 AM PDT

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து நில மோசடியில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது குற்றச்சாட்டு உள்ளது.

சி.பி.ஐ. நடவடிக்கை திட்டமிட்ட சதி: தாசரி நாராயணராவ் ஆவேசம்

Posted: 12 Jun 2013 05:18 AM PDT

மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் ஒதுக்கீடு முறையில் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது. இந்த காலக்கட்டத்தில் 151 தனியார் நிறுவனங்கள் 68 நிலக்கரி சுரங்கங்களை பெற்றன. அதாவது 1700 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 42 லட்சம் கோடியாகும்.

பாராளுமன்ற தேர்தல்: 3-வது அணி அமைக்க மம்தா பானர்ஜி தீவிரம்

Posted: 12 Jun 2013 04:42 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் 3வது அணி அமையும் - அமையாது என்பது தொடர்பாக இரு வேறு கருத்துகள் நிலவி வரும் அரசியல் சூழலில் 3வது அணியை அமைத்தே தீருவது என்ற நோக்கத்தில் மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மும்முரம் காட்டி வருகிறார். இன்று, கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து ஐக்கிய

உ.பி. பா.ஜனதா பொறுப்பாளராக மோடியின் நெருங்கிய ஆதரவாளர் அமித் ஷா நியமனம்

Posted: 12 Jun 2013 04:29 AM PDT

பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்த அத்வானி, மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமா முடிவை கைவிட்டார். அத்துடன் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவினை

ஜூலை 15-ம் தேதி முதல் தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் முடிவு

Posted: 12 Jun 2013 03:43 AM PDT

இந்தியாவில் 1855-ம் ஆண்டு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை இந்திய தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இது 1990-ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

மிசோரம் அருகில் இயங்கும் 27 வங்கதேச போராளிகள் முகாம்கள்: எல்லைப் பாதுகாப்பு படை எச்சரிக்கை

Posted: 12 Jun 2013 03:25 AM PDT

மிசோரம் அருகே வங்கதேச பகுதிக்குள் பல்வேறு போராளிக் குழுக்களின் 27 முகாம்கள் செயல்படுவதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் லால் தன்ஹாவாலா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™