Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


'இன்சாட் 3டி' செயற்கைகோள் அடுத்த மாதம் ஏவப்படுகிறது

Posted: 14 Jun 2013 11:16 PM PDT

வானிலை தொடர்பாக மிகத்துல்லியமான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக 'இன்சாட் 3-டி' எனும் அதிநவீன செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது. இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஒரு செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளது. அதன் பிறகு இன்சாட் 3டி விண்ணில் ஏவப்படும். பிரெஞ்சு கயானாவில் இருந்து இன்சாட் 3டி செயற்கை கோளை பறக்க விட திட்டமிடப்பட்டுள்ளது. அனேகமாக அடுத்த மாதம் (ஜூலை) 26-ந்தேதி இன்சாட் 3டி ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொச்சி பகவதி அம்மன் கோவிலில் ஸ்ரீசாந்த் துலாபாரம்

Posted: 14 Jun 2013 09:12 PM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் கைதான ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் சொந்த வீடான கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வீட்டில் தங்கினார். நேற்று அவர் கொச்சி அருகே திருப்பணித்துறையில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த ஸ்ரீசாந்த் தனது எடைக்கு நிகராக 85 கிலோ கதளி பழத்தை துலாபாரமாக செலுத்தினார். பின்னர் கோவிலை வலம் வந்து அம்மனை வேண்டிய அவர் மேல்சாந்தியிடம் தீர்த்தம் வாங்கி

காவல்துறையினரின் சேமிப்பிலேயே கை வைத்த திருடன்

Posted: 14 Jun 2013 06:24 PM PDT

காவல்துறையினரே பாதுகாப்பு தேடும் காலம் இது போலும். மும்பை கொலாபா பகுதியில் உள்ள தலைமை காவல்நிலையத்தின் அருகில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து காவல்துறையினர் பலரின் சேமிப்பில் இருந்த பணம் களவாடப்பட்டுள்ளது. அதுவும், கிரீஸ் நாட்டிலிருந்து இந்தப் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

ஜார்கண்ட்: கூண்டுக்குள் நுழைந்த கருநாகத்தை 2 துண்டுகளாக்கிய சிங்க ஜோடி

Posted: 14 Jun 2013 05:18 PM PDT

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் டாட்டா வனவிலங்கு காப்பகம் உள்ளது. தற்போது அப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் விஷத்தன்மை வாய்ந்த கருநாகம் ஒன்று மெல்ல ஊர்ந்து சிங்கத்தின் கூண்டுக்குள் புகுந்துக் கொண்டது.

போலீஸ் காவலில் கைதிகள் மரணம்: அஸ்ஸாம் முதல் இடம்

Posted: 14 Jun 2013 05:03 PM PDT

போலீஸ் காவலில் கைதிகள் மரணமடைவதில் அஸ்ஸாம் மாநிலம் முதலிடம் பெறுகின்றது என்ற தேசீயக் குற்றப் பதிவு மையத்தின் அறிக்கை, அஸ்ஸாம் காவல்துறையினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டில் இங்கு 11 மரணங்கள் நடந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பிரேதப்பரிசோதனை, வழக்குப் பதிவு, நீதிமன்ற

ஜம்முவை காஷ்மீருடன் இணைக்கும் ரெயில் சேவை: 25-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted: 14 Jun 2013 03:42 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு ஏற்படும் போதெல்லாம் ஜவஹர் சுரங்கம் மூடப்படுவதால் ஜம்முவின் பனிஹால் நெடுஞ்சாலையும் காஷ்மீரின் காசிகுண்ட் நெடுஞ்சாலையும் முற்றிலுமாக முடங்கி விடும். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் உலகின் 2-வது சிறந்த விமான நிலையமாக தேர்வு

Posted: 14 Jun 2013 03:19 PM PDT

உலகில் உள்ள அனைத்து விமானநிலையங்களும் அவற்றின் பயணிகளுக்கு அளிக்கும் சேவைகளைப் பொறுத்து தரவரிசைப் படுத்தப்படுகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட சர்வதேச விமான நிலைய மன்றம், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இயங்கிவருகின்றது. 275 விமானநிலையங்கள் இந்த அமைப்பின் கீழ் உள்ளன. இவற்றில் சிறந்த விமான நிலையங்களுக்கு இந்த மன்றம் ஆண்டுதோறும் விருது வழங்கி

கங்கையில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி

Posted: 14 Jun 2013 02:21 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் நேற்று காலை 7.45 மணியளவில் கங்கை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஒரு படகு கவிழ்ந்தது. தலைநகரான கொல்கத்தாவில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் மாணிக்சக் என்ற பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. வேகமான காற்று வீசியதால் படகு கவிழ்ந்ததாக

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் 3-வது அணி அமையும்: ஏ.பி. பரதன் பேட்டி

Posted: 14 Jun 2013 02:13 PM PDT

2014-பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையுமா ? அமையாதா ? என்பது தொடர்பாக பரபரப்பான பட்டிமன்றம் நடந்துவரும் சூழ்நிலையில் தேர்தலுக்கு பிறகுதான் மூன்றாவது அணி அமையும் என்று இடது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார். புதுடெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய மந்திரியுமான சரத்பவாரை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் ஏ.பி. பரதன் கூறியதாவது:-

அசாம்: அரசு ரத்த வங்கியின் மெத்தனத்தால் 4 பேருக்கு எய்ட்ஸ் கிருமித் தொற்று

Posted: 14 Jun 2013 12:48 PM PDT

அசாம் மாநிலம், டர்ரங் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உடல்நலக்குறைவுக்கான காரணத்தை அறிந்துக் கொள்வதற்காக ரத்த பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது தனது ரத்தத்தில் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான 'எச்.ஐ.வி. பாசிட்டிவ்' நோய்த் தொற்று இருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.

141 ‘ஐ.கியூ’ புள்ளிகளுடன் அமெரிக்க அதிபர்களுக்கு இணையான அறிவுத்திறன் கொண்ட 2 வயது அதிசய சிறுவன்

Posted: 14 Jun 2013 12:19 PM PDT

சராசரியாக வளர்ந்த மணிதனின் அறிவுத்திறனை 'ஐ.கியூ' அடிப்படையில் 90-109 புள்ளிகளாக விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர். 110-119 புள்ளிகள் என்பது சிறந்த அறிவாற்றலாகவும், 120-140 மிகச் சிறந்த அறிவாற்றலாகவும், 140 புள்ளிகளை கடந்த நிலை என்பது மேதாவித்தனத்துக்கு உரிய அறிவாற்றலாகவும் கருதப்படுகிறது.

ஜூன் 17-30 பா.ஜ.க.வின் நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டம்: ராஜ்நாத் சிங், சுஷ்மா பங்கேற்பு

Posted: 14 Jun 2013 11:36 AM PDT

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெருகி வரும் ஊழல், விலைவாசி உயர்வு, அரசு துறைகளை தவறான வழியில் பிரயோகிப்பது ஆகியவற்றை கண்டித்து வரும் 17-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்திற்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய

4 மாநிலத்திற்கு புதிய காங். மகளிர் அணி தலைவிகளை சோனியா நியமித்தார்

Posted: 14 Jun 2013 11:19 AM PDT

டெல்லி, அசாம், மணிப்பூர், மிஜோரம் ஆகிய 4 மாநில மகளிர் காங்கிரஸ் தலைவிகளின் பெயரை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இது தொடர்பாக புதுடெல்லியில் இன்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டெல்லி மகளிர் அணி

பிரதமர் மன்மோகன் சிங் 17-ம் தேதி ராஜ்ய சபை எம்.பி.யாக பதவியேற்பு

Posted: 14 Jun 2013 10:46 AM PDT

பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக பிரதமர் மன்மோகன் சிங், வரும் 17-ம் தேதி பதவி ஏற்றுக் கொள்கிறார். அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற எம்.பி.க்களுக்கான தேர்தல் கடந்த (மே) மாதம் 30-ம் தேதி நடைபெற்றது.

மும்பை துறைமுகத்தில் 2-ம் உலகப்போர் குண்டுகள்-ஏவுகணைகள் கண்டுபிடிப்பு

Posted: 14 Jun 2013 09:11 AM PDT

மும்பை துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கப்பல்கள் வரும் பிரதான பாதையை ஆழப்படுத்தி, விரிவுபடுத்தும் பணியில் 2 தூர்வாரும் கப்பல்கள் ஈடுபட்டன. அப்போது புதையுண்டிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் வெளியே வந்தன.

பா.ஜனதா கூட்டணியில் ஒற்றுமை அவசியம்: சுஷ்மா

Posted: 14 Jun 2013 05:27 AM PDT

பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழுவின் தலைவராக மோடியை நியமித்ததால் அதிருப்தியடைந்த ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும்

திருப்பதியில் நகை கடை அதிபர்கள் 5 பேர் ரூ.10 கோடி மோசடி: கடையை மூடி விட்டு தப்பி ஓட்டம்

Posted: 14 Jun 2013 04:59 AM PDT

திருப்பதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த உறவினர்கள் 5 பேர் பத்மாவதிபுரத்தில் 5 இடங்களில் தனித்தனியாக நகை கடைகள் வைத்துள்ளனர். இந்த கடைகளில் பலர் நகைபெற தவணை முறையில் பணம் கட்டினர். ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் கட்டினர். ஏறத்தாழ ரூ.10 கோடி வரை பணம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடைகள் பூட்டி கிடந்தது.

மாலத்தீவு அருகே சரக்குக் கப்பலில் தவித்த 22 ஊழியர்கள் மீட்பு

Posted: 14 Jun 2013 04:43 AM PDT

கடந்த திங்கட்கிழமை மாலத்தீவில் பதிவு செய்யப்பட்ட 'எம்.வி. ஏசியன் எக்ஸ்பிரஸ்' என்ற 5955 டன் எடை கொண்ட சரக்குக் கப்பல் சிமெண்ட், மண் ஆகிய பொருட்களுடன் பாகிஸ்தானில் உள்ள எ.டி.பின் காசிம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. அதில் 22 ஊழியர்களும் இருந்தனர். கப்பல் மினிக்காய் தீவுகளுக்கு 50 மைல்களுக்கு அப்பால் சென்று கொண்டிருந்தபோது, எஞ்ஜீன் திடீரெனப் பழுதடைந்ததால் நடுக்கடலில் நிலைதடுமாறி நின்றது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கடலில் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டதாலும் ஊழியர்கள் ஏதும் செய்ய இயலாமல் தவித்தனர். நேற்றுமுன்தினம், இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல் 'வருணா', லட்சத் தீவுகள் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அதன்

பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் உறவில் கசப்புணர்வு: நிதிஷ் குமார்

Posted: 14 Jun 2013 03:36 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இதற்கு பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகவும் முடிவு செய்துள்ளது. அவ்வாறு விலகினால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கும் அளிக்கும் ஆதரவை பா.ஜனதா விலக்கிக்கொள்ளும். இருந்தாலும் கூட்டணியை இழக்க மனமில்லாத பா.ஜனதா, நிதிஷ் குமாரை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது.

மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம்

Posted: 14 Jun 2013 03:06 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் கரஹ்கோல் கிராமத்தில் மகனைக் காதலித்த பெண்ணை தீ வைத்து எரித்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரஹ்கோல் என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்சு என்ற பெண் ரஞ்சித் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இதற்கு ரஞ்சித்தின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து ஊர்பஞ்சாயத்தையும் கூட்டினர். பஞ்சாயத்தில், காதலர்களை சேர்த்து வைக்குமாறு மஞ்சுவின் தாய் கோரிக்கை வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்தின் பெற்றோர், மஞ்சுவின் தாயாரை சரமாரியாக தாக்கினர். இதைப்பார்த்ததும் மஞ்சு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™