ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தாகூரின் கீதாஞ்சலி
- ஓரிதழ் தாமரை
- இந்தியாவின் சாய்ந்த கோபுரம்
- தயிர்
- இந்தோனேசியாவில் காட்டு தீ: மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்
- ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி
- உத்தரகாண்ட் வெள்ளம்: காவல் தெய்வம் தாரி தேவி இடம் மாறியதுதான் காரணமா?
- 1300 ஆண்டுகளுக்கு முன்பே தேவாரப் பாடல்கள் போற்றிய கேதார்நாத் எனும் திருக்கேதாரம்!
- கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
- கோடியிலும் கிடைக்காத மன திருப்தி!
- முன்னேற்றம் (அன்றும் இன்றும்)
- எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
- கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ...
- அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!
- சரித்திரம் ...!
- ஆயிரம் முத்தம் ...!
- இந்த சுகம் போதும் அன்பே ....
- காதலில் இப்படி பேசுவது ..
- அழகு அழகு அழகு ...
- நில்லாத வாரம் தா ...!!!
- மீண்டும் முயற்சித்துப்பார் ....!!!
- நீ என்னை மறவாமல் இருக்க...!
- நிலையானது நம் .. நினைவுகள் தான் ...!!!
- காதல் ஜீன்கள் ...!
- உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா :)
- HD டிவி/வீடியோ என்றால் என்ன?
- குஜராத்துக்கு வெளியேயும் சாதித்தார் மோடி
- துன்பத்தில் சுகம் .. தருகிறது ...!!!
- 22,000 பதிவுகளை கடந்த ராஜாவுக்கு வாழ்த்துகள்
- 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்!
- உத்தரகண்டில் இந்திய ராணுவ வீரர்களின் மீட்பு பணிகளின் தொகுப்பு
- ஹைக்கூ தொடர் ....
- இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
- கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
- சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்
- இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்!
- 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..
- நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......
- வரமா ? சாபமா?
- ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?
- “என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..?”
- கிரிக்கெட்டில் பெற்ற தங்க பேட்டை உத்தரகாண்டில் பலியானோர்களுக்கு அர்ப்பணித்தார் ஷிகர் தவான்
- கவிதைப் போட்டி 6-ல் இடம் பெற்ற கவிதைகளை காண வாருங்கள்
- பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
- நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள்
- பூவோ சிரிக்கிறது ...
| Posted: 24 Jun 2013 02:57 PM PDT உலகப் புகழ்பெற்ற ஞானக் கருவூலமாகிய "கீதாஞ்சலி' என்ற நூலை ரவீந்திரநாத் தாகூர் தன் 51-ஆவது வயதில் எழுதினார். இந்த நூலுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1912-இல் தாகூரின் அன்பு மனைவியும் பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக மரணம் அடைந்தனர். தனித்துவிடப்பட்டார் தாகூர். அப்போது தனிமை சோகத்தைப் போக்க நீர்த்தடாகங்களில் படகில் அமர்ந்தபடி தாகூரால் எழுதப்பட்டதுதான் கீதாஞ்சலி. இதில் 103 பாசுரங்கள் உள்ளன. |
| Posted: 24 Jun 2013 02:54 PM PDT • இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையைச் சேர்ந்தது. • இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. • தூக்கமின்மை, நேரத்துக்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் உடல்நிலை பாதிக்கப்படுவது ஓரிதழ் தாமரையால் குணமாகிறது. • இதன் இலை, தண்டு, வேர், பூ, காய் ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, காய வைத்து, பொடி செய்து, பாலில் கலந்து, இரு வேளையும் அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். • காய்ச்சலால் அவதியுறுவோர் ஓரிதழ் தாமரை கஷாயம் அருந்தினால் குணம் பெறலாம். • இரைப்பை நோய்க்கு ... |
| Posted: 24 Jun 2013 02:50 PM PDT ஒரிசா மாநிலத்தில் உள்ள ஹியுமா என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் கோபுரம் சாய்ந்த கோபுரமாகும். இக்கோபுரம் 47 டிகிரி கோணத்தில் சாய்வாக உள்ளது. 1670-ம் ஆண்டு சௌகான் வம்சத்தைச் சேர்ந்த பலியார்சிங் என்ற அரசனால் இக்கோயில் கட்டப்பட்டது. இத்தாலியின் பைசா சாய்ந்த கோபுரத்தைப் போன்று இது இந்தியாவின் சாய்ந்த கோயில் எனப்படுகிறது. |
| Posted: 24 Jun 2013 02:25 PM PDT • தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும். • உறை ஊற்றிய பின் சில சமயம் நன்கு உறையாமல் இருக்கும். (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும்.) அது வயிற்றில் வேகமாகத் புளிக்கத் தொடங்கி பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகிவற்றிற்கு வழி வகுக்கும். • மண் சட்டியிலிருந்து புரை குத்திய தயிர்தான் நமது தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அது கெட்டியாகவும் இருக்கும். • ஒருபோதும் தயிரை ... |
| இந்தோனேசியாவில் காட்டு தீ: மலேசியாவில் அவசர நிலை பிரகடனம் Posted: 24 Jun 2013 02:20 PM PDT கோலாலம்பூர்: இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், மலேசியாவில் கடும் புகை சூழ்ந்துள்ளதால் அங்கு 2 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள காடுகளில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருக்கிறது. காற்றின் வேகத்தினால் புகை மண்டலம் அருகே உள்ள சிங்கப்பூர், மலேசியாவை பாதிப்படைய வைத்துள்ளது. புகை மண்டலம் காரணமாக கடந்த வாரம் சிங்கப்பூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மலேசியாவிலும் கடும் புகை சூழ்ந்துள்ளதால், ... |
| ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி Posted: 24 Jun 2013 02:09 PM PDT ஸ்ரீநகர்: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா நாளை ஸ்ரீநகர் வரும் நிலையில், ராணுவ கான்வாயை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். ஸ்ரீநகர் அருகேயுள்ள பெர்மினா பகுதியில், ராணுவ வாகனங்கள் சென்ற போது, பயங்கரவாதிகள் இரு புறமும் இருந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இதனையடுத்து அந்த பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் ... |
| உத்தரகாண்ட் வெள்ளம்: காவல் தெய்வம் தாரி தேவி இடம் மாறியதுதான் காரணமா? Posted: 24 Jun 2013 02:04 PM PDT டேராடூன்: உத்தரகண்ட் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு அம்மாநிலத்தின் காவல் தெய்வமான தாரி தேவியின் கோபம் தான் காரணம் என்று மக்கள் நம்புகின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் திடீர் என்று பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5,000 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்துக்களின் புனித தலமான கேதர்நாத் பெரும் சேதத்தை சந்தித்தபோதிலும் அங்குள்ள கோவில் மட்டும் அப்படியே உள்ளது மக்களை வியக்க வைத்துள்ளது. இந்நிலையில் ... |
| 1300 ஆண்டுகளுக்கு முன்பே தேவாரப் பாடல்கள் போற்றிய கேதார்நாத் எனும் திருக்கேதாரம்! Posted: 24 Jun 2013 01:56 PM PDT உருக்குலைந்து கிடைக்கிறது உத்தர்நாத்.. இனி 3 ஆண்டுகளுக்கு நான்குபடை வீடு யாத்திரை அல்லது சார் தாம் யாத்திரை என்ற இமயமலை யாத்திரையை நினைத்துக் கூட பார்க்க முடியாது.. குறிப்பாக பல கிலோ மீட்டர் மிக அபாயகரமான பாதையில் பயணித்தாலும் தரிசித்தே ஆக வேண்டும் என்ற கேதார்நாத் திருக்கோயிலை மீண்டும் பழைய நிலையில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறி... உத்தர்காண்ட்டில் இமயமலை யாத்திரை சென்றோரில் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டவரும் அடக்கம்..குறிப்பாக இவர்களில் பலரும் கேதார்நாத் செல்லும் வழியில் சிக்கியவர்கள்...தமிழகத்துக்கும் ... |
| கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா? Posted: 24 Jun 2013 01:52 PM PDT சென்னை: ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள்தான். தற்போது 6வது எம்.பி. இடத்துக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெறட்டுமே என்று கை கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் மோதுகின்றனர். திமுக வேட்பாளருக்கு மொத்தம் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ... |
| கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Posted: 24 Jun 2013 11:31 AM PDT மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேஷ்: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது. புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், ... |
| Posted: 24 Jun 2013 11:13 AM PDT அதிகாலைப் பொழுது! அச்சிறு வயது ஆழ்ந்த தூக்கம் முட்டிய ஒன்னுக்கால் முழுவதும் கலைந்தது அருகில்… 'கொர்ர்ர்… கொர்ர்ர்…' அய்யாவின் குரட்டை சத்தம். அவிழ்ந்த டவுசரில் முடிச்சுப் போட்டவாறே அங்கனக்குழி புறப்பட்டேன். என் காலடிச் சத்தம் கேட்டு அரங்குவீட்டுள் அடைகாக்கும் கோழி 'கொக்…கொக்…' என்றது. குதிர் மேலிருந்த பூனை காதுகளை விரைத்து தலை நிமிர்த்திப் பார்க்க, வந்தது நானென்றதும் ஓடுபாலமாய் உடலை வளைத்து வாலை நிமிர்த்தி வாய் பிளந்த கொட்டாவியால் சோம்பலை முறித்தது. அதைப் பார்த்து ... |
| எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை) Posted: 24 Jun 2013 11:12 AM PDT உயிர் நண்பன் .. முதல் காதலி .. வரம்பு மீறாத பெற்றோர் ... காலைக்குளிர் .. இரவு வெயில் .. மாலை தளிர் ... ஆவியாய் அலையும் நீர் .. நீராய் மாறும் புகை .... முத்தாய் மாறும் மழைத்துளி .. ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் .. அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி .. காற்றில் கபடியாடும் பஞ்சு...!!! (150 வரிகளைக்கொண்ட கவிதை தொடரும் ) |
| கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ... Posted: 24 Jun 2013 11:11 AM PDT கண்ணீர் என்னும் நீரால் ... காதல் என்னும் மரம் .. வளர்கிறது .... உதிரும் இலைகள் கூட .. உன் பெயரையே உச்சரிக்கிறது ..... உன்னை நினைக்கும் போது வரும் கண்ணீரை விட உன்னை மறக்கும் போது வரும் கண்ணீர் குறைவுதான் ... உன் கண்கள் என்னை கடக்கும் போது -நான் கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ... கஸல் ;168 |
| அதிக நேரம் பார்க்கிறேன் ...!!! Posted: 24 Jun 2013 11:10 AM PDT இறைவா என் காதலியை .. மன்னித்துவிடு ... அவள் எனக்கு ;;; வலிதரவேண்டும் என்று தருவதில்லை ... சிறுவயதில் கண்ட கனவில் முகம் தெரியாமல் .. முழித்ததுபோல் ... உன் நினைவு.. இடைஇடையே ... வந்து போகிறது .... போக்கு வரத்து நெரிசல் எனக்கு பிடிக்கும் .. அதில் தான் உன்னை .. அதிக நேரம் பார்க்கிறேன் ...!!! கஸல் ;169 |
| Posted: 24 Jun 2013 11:09 AM PDT சாரிரம் படிக்கச் சென்றேன் சரித்திரம் படித்துவிட்டேன் இசையில் அல்ல அவள் இதயத்தில் ...! |
| Posted: 24 Jun 2013 11:08 AM PDT ஆயிரம் முறை யோசித்து அரை முத்தம் தந்தேன் என் அருகில் யாரும் இல்லாததால் இருந்தால் ஆயிரம் முத்தம் தந்திருப்பேன் இதய சத்தத்தில் ...! |
| Posted: 24 Jun 2013 11:07 AM PDT அதிகாலை வேளை.... அகிலமே அமைதியாய் ... இரு விழியை அகன்றேன் ... வான் குருவிகள் வானிசை .. சில்லென்ற காற்று உடல் பட ... எனைமறந்து உன்னை நினைத்தேன் ... (இந்த சுகம் போதும் அன்பே ...) தண்ணிரை மோர்ந்தேன் .... பன்னீரை போல் உன் மென்மை.. ஒருதுளி உடலில் பட ... இணைந்துவிட்டேன் உன் ... நினைவில் ...... (இந்த சுகம் போதும் அன்பே ...) ஒற்றையடி பாதையிலே ஓற்றைசடை முடி தேடி ... பற்றைக்குள் பதுங்கி இருக்க ... பற்றை செடிகள் ஆடியது ... காற்று அசைக்க வில்லை .. என் இதய துடிப்பு அசைத்தத்தடி ... |
| Posted: 24 Jun 2013 11:06 AM PDT நான் சிறு சண்டைக்கு உன்னை.. வேண்டுமென்றே இழுத்து.... பேசுகின்ற பொழுதெல்லாம்.... கொண்டுவிடுவேன் என்று... அடிக்கடி சொல்கின்றாயே...!!! காதலியால் கொல்லப்படுவது .. எத்துணை சந்தோசம் எனக்கு .. அன்பே.... நீ மட்டும் என்னை கொல்வாயானால் நான் நான் எத்தனைமுறையும் இறக்க தயார் ...!!! காதலில் இப்படி பேசுவது .. ஒன்றும் புதிரில்லை ...!!! |
| Posted: 24 Jun 2013 11:05 AM PDT கண்ணுக்கு இமை அழகு விண்ணுக்கு இறை அழகு பல்லுக்கு வெண்மை அழகு சொல்லுக்கு உண்மை அழகு பொருளுக்கு மதிப்பு அழகு புலிக்கு வீரம் அழகு உனக்கு நானே அழகு எனக்கு நீயே அழகு |
| Posted: 24 Jun 2013 11:03 AM PDT என்பார்வை தந்து .. இதயத்தில் பூவாய் மலர்ந்து உன் கொஞ்சும் தமிழ் பேச்சினில் எனை மயக்கி .. என்னை பித்தனாக்கியவளே ... உனக்காக கவிதை படைக்கிறேன். உன் ஓரப்பார்வையால் உள்ளம் கிளர்ந்து உடல் சிலிர்த்து.... உன் வசமாகிறேன்... நித்தமும் தேவி தரிசனம் .. பக்கனுக்கு கிடைக்க ... காதல் தேவதையே ... நில்லாத வரம் தா ...!!! |
| மீண்டும் முயற்சித்துப்பார் ....!!! Posted: 24 Jun 2013 11:02 AM PDT காற்றும் இசை ஆகும் நீ அதை சுவாசித்தால்... வார்த்தைகளும் கவிதை ஆகும் நீ அதை வாசித்தால்... இந்த உலகமே உனதாகும் நீ உன்னை நேசித்தால்... முடிந்தால் என்னை காதலித்துப்பார் .... முடியாது என்றால் ... மீண்டும் முயற்சித்துப்பார் ....!!! |
| Posted: 24 Jun 2013 10:59 AM PDT மலருக்கும் ஆசை மண்ணில் விழாமல் இருக்க...! நிலவுக்கும் ஆசை ... அமாவாசையில் மறையாமல் இருக்க .. எனக்கும் ஆசை நீ என்னை மறவாமல் இருக்க...! |
| நிலையானது நம் .. நினைவுகள் தான் ...!!! Posted: 24 Jun 2013 10:57 AM PDT அன்பே! பிரிவென்ற வலைக்குள் நாம் சிக்கிக்கொண்ட போதும் நினைக்க நினைக்க இனிக்கும் உன் நினைவுகளில் தான் நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன்...! கடல் ஆவியாகி மலை இடிந்து விழுந்து பாலைவனம் பற்றி எரிந்து போனாலும் அழியாது காதல் ஒன்றுதான் ..!! அதிலும் நிலையானது நம் .. நினைவுகள் தான் ...!!! |
| Posted: 24 Jun 2013 10:56 AM PDT தொற்று வியாதி பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன் நீ தொற்றிக்கொள்ள மட்டும் ஏன் தடை விதிக்கிறது காதல் ஜீன்கள் ...! |
| உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா :) Posted: 24 Jun 2013 10:55 AM PDT நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப் அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு தொடர்ந்து படியுங்கோ முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று ... |
| Posted: 24 Jun 2013 10:50 AM PDT ஹை டெபனிசன் டிவி( High Definition TV ) என்பது டிஜிடல் டிவியின்( Digital TV) வரையறைக்குட்பட்டது. இதுவரை நாம் அனலாக்(Analog) எனப்படும் முறையிலேயே டிவி சேனல்களின் வீடியோகளை நம் வீட்டு அனலாக் டிவியில்(Analog TV) பார்த்து வந்தோம். தற்போது டிஜிட்டல் முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அதாவது டிஜிட்டல் டேட்டாக்களை நேரடியாக வாங்கி நமக்கு வீடியோவை கொடுக்கக் கூடிய டிவிக்கள்( LCD, LED, Plasma தற்போது வந்துவிட்டன. இதற்கு நமக்குத் தேவை HD TV மற்றும் ஹைச் டி செட்டாப் பாக்ஸ்(HD Set-top box).செட்டாப் ... |
| குஜராத்துக்கு வெளியேயும் சாதித்தார் மோடி Posted: 24 Jun 2013 10:49 AM PDT டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தை உருக்குலைத்த, "இமயமலை சுனாமி' எனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, குஜராத் முதல்வர் மோடி, நேரடியாகவே களத்தில் இறங்கினார். ஹெலிகாப்டர், நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் உதவியுடன், 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். அதோடு நின்றுவிடாத மோடி, உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் உதவியுடன், நிவராண முகாம்களை ஏற்படுத்தினார். வெள்ளம், நிலச்சரிவால் உத்தரகண்ட், மாநிலமே உருக்குலைந்து விட்டது. பல மாநிலங்களில் இருந்து, புனித யாத்திரை சென்ற பக்தர்கள், இதில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் ... |
| துன்பத்தில் சுகம் .. தருகிறது ...!!! Posted: 24 Jun 2013 10:47 AM PDT உன் கண் புருவத்தின் .. ஒவ்வொரு முடியும் .. எனக்கு ஒவ்வொரு .. கவிதைகள் .... உன் கண் இமைகள் .. ஒவ்வொன்றும் கறுப்பு வானவில் ... கண்ணீரால் -நீ தரும் துன்பம் .. கூட இன்பத்தை .. தராவிட்டாலும் .. துன்பத்தில் சுகம் .. தருகிறது ...!!! கஸல் 170 |
| 22,000 பதிவுகளை கடந்த ராஜாவுக்கு வாழ்த்துகள் Posted: 24 Jun 2013 10:00 AM PDT 22,000 பதிவுகளை கடந்த ராஜாவுக்கு வாழ்த்துகள் தொடர்ந்து நல் பதிவுகளை தந்து சிறக்க வாழ்த்துகள் ராஜா. |
| 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்! Posted: 24 Jun 2013 09:43 AM PDT இன்று காலை நடைபெற்ற 13 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தில், 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் முதலிலும், அவரைத் தொடர்ந்து துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இரண்டாவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் தேசிய முன்னணியைச் சேர்ந்த 133 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நஜிப் தலைமையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், ... |
| உத்தரகண்டில் இந்திய ராணுவ வீரர்களின் மீட்பு பணிகளின் தொகுப்பு Posted: 24 Jun 2013 09:14 AM PDT உத்தரகண்டில் இந்திய ராணுவ வீரர்களின் மீட்பு பணிகளின் தொகுப்பு படங்களில் சந்தேகமோ அல்லது உலங்கு வானூர்தியின் பெயரை பற்றி சந்தேகம் இருந்தால் கேட்கலாம் படங்கள் லெப்டினென்ட் கர்னல் குணால் பிஸ்வாஸ் மற்றும் சாயா சார் அவர்கள் |
| Posted: 24 Jun 2013 09:03 AM PDT சில்லென்று வீசும் சிறுமழைத் தூறல் +நிலத்துக்கு முத்தம் + ****************** காதுகளை கௌவும் காற்றின் ஆவிகள் +இசை+ ********************* சிந்தனை கதவை திறக்கும் சாவி +அறிவு + ******************** இருட்டு குடிசை விரட்டும்பேய் +ஒளி + ********************* உயிரின் கதவை இறுக்கும் பூட்டு. +சாவு + |
| இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Posted: 24 Jun 2013 08:38 AM PDT அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01) இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - |
| கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் வேகத்தை அதிகரிப்பது எப்படி? Posted: 24 Jun 2013 08:27 AM PDT வணக்கம் நண்பர்களே, நம்மில் கம்பியூட்டர் அல்லது லேப்டாப் உபயோகிக்கும் அனைவருக்கும் உள்ள பிரச்சினை விண்டோஸ் இன்ஸ்டால் செய்து சில காலம் சென்ற பிறகு நமது கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் மிகமெதுவாக இயங்க ஆரம்பிப்பதுதான். இந்த பிரச்சினைக்கு பலரும் சொல்லும் ஒரே தீர்வு உடனே உங்க OS மறுபடியும் இன்ஸ்டால் பண்ணுங்க என்பதுதான். ஆனால் அப்படி நாம் மீண்டும் OS இன்ஸ்டால் பண்ணும்போது நாம் உபயோகித்துக்கொண்டிருக்கும் அனைத்து சாப்ட்வேர்களையும் மறுபடியும் இன்ஸ்டால் பண்ண வேண்டும். இன்ஸ்டால் செய்வதோடு நின்றுவிட்டால் ... |
| Posted: 24 Jun 2013 08:24 AM PDT "பிற்படுத்தப்பட்ட நிலையைத் தீர்மானிப்பது பிறப்புதான், மதமாற்றம் அல்ல. ஆகவே மதம் மாறுகிற ஒருவர் தன் சமூக நிலையை இழந்துவிடுகிறார். முந்தைய மதத்தில் தனக்குக் கிடைத்த சாதி சார்ந்த சட்டப்பூர்வ ஏற்பாடுகளைப் புதிய மதத்தில் அவர் கோர முடியாது..." சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. சுப்பிரமணியன் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார். நீதிமன்றம் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பட்டியல் சாதிகளையும் சேர்ந்தவர்கள் ... |
| இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்! Posted: 24 Jun 2013 08:11 AM PDT கடந்த ஒரு வாரமாக வட இந்தியாவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வெள்ளமென்றால் சாதாரண வெள்ளமல்ல.. இந்தத் தலைமுறை தன் வாழ்நாளில் கண்டிராத வெள்ளம். இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கின்றன மீடியாக்கள். குறிப்பாக உத்தர்கண்டின் பனிபடர்ந்த இமயமலைச் சிகரங்களையொட்டிய சிறு நகரங்களும் கிராமங்களும் முற்றாக உருக்குலைந்து போயிருக்கின்றன. சுமார் 5500 பேர்களுக்கு மேல் மூழ்கிப் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதார் நாத் என்ற புனிதத் தலமே முற்றாக மண்ணில் புதைந்திருக்கிறது, அங்கிருந்த சிவன் ... |
| 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்.. Posted: 24 Jun 2013 08:08 AM PDT இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்.. இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது. அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் . அதே காலகட்டத்தில் 'ஜவகரிஸ்ட்'என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது! அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த ... |
| நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்....... Posted: 24 Jun 2013 08:05 AM PDT நீண்ட பாதைகள் எல்லாம் நீ இல்லாமல் நீண்டு கொண்டே நிழல் தரும் மரங்கள் கூட நீ இல்லாமல் நிழலை தர மறுத்தே நின்றிடும் இடமெல்லாம் கூடவே நிறுத்திவிடுகிறது இதயமும் துடிப்பதை ..... நித்திரை மறந்த விழிகள் கூட நீ இல்லாமல் நீலம் பூத்ததே நிமிடதிற்க்கு நிமிடம் தேடும் விழிகள் நிற்பவர் கூட நிற்பதை அறியாமல் நிறமிழந்ததோ இந்த நீல கண்கள் .... நித்தம் நித்தம் நினைக்கும் நினைவுகளுக்குள் ஒரு நீண்ட பயணம் நீங்காது தூங்கும் வரை நில்லாது துடிக்கும் இதயம் நிறுத்தும் ... |
| Posted: 24 Jun 2013 08:03 AM PDT நீ எனக்கு கிடைத்தால் அது முன் ஜென்ம சாபம் ...! நான் உனக்கு கிடைக்காவிட்டால் அதுவே பின் ஜென்ம வரம் ...! |
| ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Posted: 24 Jun 2013 07:59 AM PDT பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம். அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல் பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர். ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்சு(ஸ்)பி 2 என்ற புரதம்தான் காரணமாம். பெண்கள் ஒரு நாளைக்கு ... |
| “என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..?” Posted: 24 Jun 2013 07:05 AM PDT அறிவிக்கப்படாத மின் வெட்டு.. தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது. பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. 'இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை' என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், "புன்னை, கைவிடாது என்னை... !" என்று தெம்பாகச் சொன்னபடி, ... |
| கிரிக்கெட்டில் பெற்ற தங்க பேட்டை உத்தரகாண்டில் பலியானோர்களுக்கு அர்ப்பணித்தார் ஷிகர் தவான் Posted: 24 Jun 2013 06:49 AM PDT ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா மீண்டும் சாம்பியன் ஆனாது. இந்த கிரிக்கெட் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி 363 ரன்கள் எடுத்தற்காக ஷிகர் தவானுக்கு தங்க பேட் விருது வழங்கப்பட்டது. பின்னர் நன்றி தெரிவித்த ஷிகார் தவான், தனது திறமைக்காக வழங்கப்பட்ட இந்த தங்க பேட் விருதை உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு சமர்பிப்பதாக அறிவித்தார். மேலும் அங்கு தவிக்கவிடப்பட்டுள்ளவர்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டி நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார். ... |
| கவிதைப் போட்டி 6-ல் இடம் பெற்ற கவிதைகளை காண வாருங்கள் Posted: 24 Jun 2013 06:03 AM PDT ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ல் இடம்பெற்ற கவிதைகள் பின்வரும் இணைய முகவரியில் உங்கள் பார்வைக்கு பதியபட்டுள்ளது. http://poemcontest6.blogspot.com/ காண வாருங்கள் உறவுகளே |
| பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்! Posted: 24 Jun 2013 04:13 AM PDT நீங்க பேஸ்புக் பயன்படுத்துபவரா அப்படி என்றால் பொண்ணுங்களோட இந்த ஸ்லேங் தெரியுமா? இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க. இதோ அந்த பொண்ணுங்க ரகசியம் இதுதான்….. உன்ன நான் எப்டி கூப்பிட்றது?? அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?"னுஅர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். "உங்க இஷ்டம்"னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி"னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா ... |
| Posted: 24 Jun 2013 02:28 AM PDT நான் புதிதாக சிஷ்டம் வாங்க உள்ளேன். ரு.28000க்குள். இதற்கு தகுந்த ஏஎம்டி பிராசசர் போர்டு உள்ள நல்ல கான்பிக்குரேஷன் வாங்க ஆலோசனை தாருங்கள். |
| Posted: 24 Jun 2013 02:26 AM PDT குளிர்ந்த நீரை .. உன்னிடம் கேட்கிறேன் .. நீ வெந்நீர் தருகிறாய் ... கண்ணீரால் காதல் பூவரைகிறேன் .. பூவோ சிரிக்கிறது ... நீ என்ன புதிய புதிய முகமூடி விற்பனை வியாபாரியா ..? அழகழகாக வந்துபோகிறாய் ...!!! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |