Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சி.பி.ஐ., மூலம் என்னை மிரட்ட மத்திய அரசு முயற்சி: முதல்வர் நரேந்திர மோடி புகார்

Posted:

காந்திநகர்:""சி.பி.ஐ.,யை வைத்து, என்னையும், என் அமைச்சரவையில் உள்ளவர்களையும், மத்திய அரசு, மிரட்ட முயற்சிக்கிறது. இந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். தன் அரசியல் எஜமானர்களின் உத்தரவுக்கேற்ப, சி.பி.ஐ., செயல்படுகிறது,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.குஜராத் மாநிலம், காந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நரேந்திர மோடி பேசியதாவது:காங்கிரஸ் தலைமையிலான, மத்திய அரசு, தன் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு, சி.பி.ஐ.,யை, ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும், நாளிதழ்களை படித்தால், சி.பி.ஐ., யின் நடவடிக்கைகள் ...

சிதம்பரம், ஷிண்டே மீது, "சீட்டிங்' வழக்கு பதிவு

Posted:

ஐதராபாத்:மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீது, ஆந்திர போலீஸ் ஸ்டேஷனில், "ஏமாற்றுதல்' பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக அறிவித்து, இது வரை செயல்படுத்தாததை கண்டித்து, அவர்கள் இருவர் மீதும், கோர்ட் உத்தரவு படி வழக்கு தொடரப்பட்டுள்ளது."ஆந்திராவை பிரித்து, தனித் தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்த வேண்டும்' என, அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். போராட்டம் வலுத்துள்ள நிலையில், ஐதராபாதில் உள்ள, உஸ்மானியா பல்கலைக் கழகத்திலும், ...

உத்தரகண்டில் பலி எண்ணிக்கை 5,000 ஆக உயர்வு: 15,000 பேர் கதி என்ன?

Posted:

டேராடூன்:"உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த பேய் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை, 5,000த்தை தாண்டியிருக்கும்' என, மாநில அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், முதல்வர், விஜய் பகுகுணா, "இறந்தவர்கள் எண்ணிக்கை, 1,000த்திற்குள் தான் இருக்கும்' என, தெரிவித்து வருகிறார்.பலத்த மழை காரணமாக, நேற்று மீட்பு பணி துவக்கப்படவில்லை. இதனால், வெட்டவெளியில், பலத்த மழையில் தத்தளிக்கும், 15 ஆயிரம் பேர் கதி என்னவாயிற்று என தெரியவில்லை.

பக்தர்கள் பாதுகாப்பு:
கடந்த 17ம் தேதி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்த பேய் மழையால், காட்டாறுகளில் ...

"நான் வாய் திறந்தால் பேஜாராகும்!' பா.ஜ.,வினருக்கு நிதிஷ் காட்டம்

Posted:

பாட்னா:""நான் வாய் திறந்தால், பா.ஜ.,விலுள்ள பலருக்கு சிக்கலாக அமையும்,'' என, பீகார் முதல்வர், நிதிஷ்குமார் கூறினார்.பா.ஜ.,வுடன், 17 ஆண்டு கால கூட்டணியை, ஐக்கிய ஜனதா தளம் முறித்து கொண்டது. பீகாரில், கூட்டணி அரசில் இருந்து, பா.ஜ., கழற்றிவிடப்பட்டது.பா.ஜ.,வில் கிளம்பியிருக்கும், "மோடி' விவகாரத்தை, தாங்கி கொள்ள முடியாமல், ஜக்கிய ஜனதா தளம் கொதித்து எழுந்தது. குஜராத்தில், நரேந்திர மோடி போல், பீகாரில் வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி, நன்றாக ஆட்சி செய்வதாக பெயர் எடுத்துள்ள முதல்வர் நிதிஷ் குமாருக்கு, மோடியை முன்னிலைபடுத்துவது பிடிக்கவில்லை. பகிரங்கமாக அதை ...

சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட்

Posted:

டேராடூன்:"உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மாநில மக்களை, எந்த மாநில அரசும் தனிப்பட்ட முறையில் மீட்கும் செயல்களில் இறங்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது.ஏராளமான புனிதத்தலங்களை கொண்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த, 17ம் தேதி ஏற்பட்ட பேய் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 5,000த்திற்கும் மேற்பட்டோர் இறந்திருந்துள்ளனர்.உத்தரகண்ட் நிலவரம் பற்றி அறிந்ததும், கடந்த சனிக்கிழமை, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் அதிகாரிகள் குழுவினருடன் உத்தரகண்ட் சென்று, 15 ஆயிரம் பேரை மீட்டு, விமானங்களில் ...

கர்நாடக அணைகளில் உயருகிறது நீர்மட்டம் : மேட்டூர் அணையோ வறண்டு போகும் அபாயம்

Posted:

தென்மேற்கு பருவழையால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, தமிழகத்துக்கு, நீர்திறக்காததால், குடிநீருக்கே தண்ணீர் இன்றி, மேட்டூர் அணை வறண்டும் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புபடி ,கர்நாடகம், ஜூன் மாதம், 10 டி.எம்.சி., ஜூலை மாதம், 34 டி.எம்.சி., தண்ணீர், மேட்டூர் அணைக்கு விடுவிக்க வேண்டும். டில்லியில்,11ம் தேதி கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், ஜூன் மாதம், 10ம் தேதி வரை, ஒதுக்கீடான, 6.6 டி.எம்.சி., நீரை, கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.கோரிக்கை தொடர்பாக, ...

குன்னூர் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்ற இலங்கை அதிகாரிகள் வெளியேற்றம்

Posted:

குன்னூர் :வெலிங்டன் ராணுவ மையத்தில், பயிற்சி பெற்று வந்த, இலங்கை ராணுவ அதிகாரிகள், திடீரென பெங்களூருவுக்கு, நேற்று புறப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில், இலங்கை விங் கமாண்டர் பண்டார திசனாயகே மற்றும் மேஜர் ஹரிசந்திரஎட்டின் ஆகியோர், பயிற்சி பெற்று வந்தனர்.பிரமருக்கு கடிதம்:"இவர்களுக்கு தமிழகத்தில், பயிற்சி அளிக்கக் கூடாது; உடனடியாக வெளியேற்ற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு, கடிதம் எழுதியுள்ளார். இலங்கை ராணுவ அதிகாரிகளை, வெளியேற்றக் கோரி, போராட்டமும் திவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, ...

பிரதமர் செல்லவுள்ள நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted:

புதுடில்லி:இரண்டு நாள் பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங், இன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் செல்லவுள்ள நிலையில், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில், ராணுவ வாகனங்களின் மீது, நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், ராணுவ வீரர்கள் எட்டு பேர் பலியாயினர்; 11 பேர் படுகாயமடைந்தனர்.

சோனியா பங்கேற்பு:
பிரதமர் மன்மோகன்சிங், இரண்டு நாள் பயணமாக, இன்று, ஜம்மு - காஷ்மீர் செல்கிறார்; அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் செல்கிறார். அங்கு, குவாசிகுந்த் மற்றும் பனிகால் இடையேயான ரயில் போக்குவரத்தை, இருவரும் துவக்கி வைக்கின்றனர்.ஜம்மு - காஷ்மீரில், ...

சி.பி.ஐ., அமைப்பின் விசாரணைகளை மேற்பார்வையிட நீதிபதிகள் குழு?

Posted:

புதுடில்லி:"சி.பி.ஐ., அமைப்பின், விசாரணை நடவடிக்கைகளை மேற்பார்வையிட, ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை, மத்திய அரசு அமைக்கலாம்' என, எதிர்பார்க்கப்படுகிறது."சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகளில், அரசின் தலையீடு கூடாது. இதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.ஐ.,யின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் தலைமையில், அமைச்சரவை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, டில்லியில் நேற்று கூடி, ஆலோசனை நடத்தியது. கூட்டம் ...

தமிழக காங்கிரசின் சஸ்பென்ஸ் நீடிப்பு : டில்லியில் மேலிடம் இன்று முக்கிய முடிவு?

Posted:

ராஜ்யசபா தேர்தலில், ஆறாவது சீட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்கு என்ற, "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை எதிர்நோக்கியுள்ள நிலையில், யாருக்கு ஆதரவு என்ற முக்கிய முடிவை, டில்லி மேலிடம் இன்று எடுக்க உள்ளது. நேற்று வரை எந்த பதிலையும், காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்காமல் இருப்பதால், மத்திய அரசுக்கு எதிராக, எந்த கருத்தும் தெரிவிக்காமல், தி.மு.க., தலைவர் கருணாநிதி மவுனம் காத்து வருகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நீண்ட காலத்திற்கு பின், தமிழகத்தில், ராஜ்யசபா தேர்தல், களை கட்டியுள்ள ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™