Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…!

Posted: 23 Jun 2013 01:04 PM PDT

ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டலாம். ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு பிளாட்டை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியிருக்கின்றனர், சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் துறையினர். அப்படி இந்த கட்டடத்தில் என்னதான் சிறப்பும் வித்தியாசமும் என்கிறீர்களா? இதன் மூலப் பொருட்கள் தான். முற்றிலும் வித்தியாசமான இதன் மூலப்பொருள் குறித்து பார்ப்போம்... ஜிஎப்ஆர்ஜி என்றால் என்ன? உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி ...

சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன்

Posted: 23 Jun 2013 12:42 PM PDT

லண்டன்: லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் செய்தார்.ஆனால் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி துவங்குவதில் பல மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் ...

ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!

Posted: 23 Jun 2013 11:19 AM PDT

பல நேரங்களில் நாம் நமக்குள் இருக்கும் மன உலகத்தை புறக்கணித்து விட்டு வெளி உலகத்தை பற்றியே கவனம் கொண்டு அதை பற்றியே ஆர்வத்துடன் இருக்கிறோம். உண்மையில் நாம் எத்தனை முறை, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ள முயற்சித்திருப்போம்?? இது வரை நாம் அதனை செய்ய தவறவிட்டாலும், வாழ்வின் அங்கமாய் இருக்கும் சில விஷயங்களை கொண்டு, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ளலாம். அதுவே ஒரு மனிதனின் தனி தன்மையை வெளிபடுத்தும் சில விஷயங்கள். ஆகவே ஒவ்வொருவரும் அவரது தனித்தன்மையை அடுத்தவரிடம் மறைக்க முடியும் என்று எண்ண வேண்டாம். ...

உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Posted: 23 Jun 2013 11:09 AM PDT

உள்ளதை உள்ள படியே  உள்ளவாறு  சொல்லிடுதே   உள்ளம்  உன்னை  கண்டால்   உளறவும்  செய்யுதே அதே   உள்ளம்  உண்மையை  சொல்ல வா ... உள்ளிருந்து  சொல்லிவிட்டு   உண்மையை  தள்ளிவிட்டு   உன்னை கண்டால்  மட்டும்  ஏனோ   உதவாததை மட்டும்  உளறியே  உணர்வற்று நிற்கிறேன்  உண்மை சொல்ல வா ... உளி கொண்டு செதுக்கும்   உணர்வுள்ள உன்விழிகள்  என்னுள்ளே  உருவாக்கும்  ஊமை  சிற்பங்கள்  உயிர் பெறும் உன்னத நாள்  எப்போது   உனக்காக  நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ... உள்ளுக்குள்ளே  ஒடுடிடும்   உதிரம்  உறைந்து ...

எம்.ஜி.ஆரின் கோப நாடகம்!

Posted: 23 Jun 2013 10:23 AM PDT

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் , ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம் " பள்ளிக்கூடம் போனயா ?" " போனேன் " " சாப்பிட்டாயா ?" "ம்... சாப்பிட்டேன் " "என்ன சாப்பிட்ட கண்ணா ?" சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் . தோட்டத்தை ...

மதுரையில் ரவுடியாக மாற பயிற்சி: 30 புது ரவுடிகள்... போலீஸ் அதிர்ச்சி

Posted: 23 Jun 2013 08:28 AM PDT

மதுரை: மதுரையில் 30 ரவுடிகளுக்கு பயிற்சி அளித்து தமிழகம் முழுவதும் கூலிப்படையாக செயல்பட அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் சமீபகாலமாக புதிய ரவுடிகள் பலர் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதில் சிலர், பிரபல ரவுடிகளிடம், பல ஆண்டுகளாக, உதவியாளர்களாக இருப்பவர்கள். கடந்த ஜனவரி 31ம் தேதி தி.மு.க., பிரமுகர், "பொட்டு' சுரேஷ் கொலையில், கைதானவர்களில் ஐந்து பேர், நட்புக்காக ஈடுபட்டவர்கள். மீதமுள்ள பலர் கொலை செய்யத்தான் உடன் செல்கிறோம்' என, ...

நம் முன்னோர்களின் திறமையே திறமை !

Posted: 23 Jun 2013 08:27 AM PDT

பார்பதற்கு ஒரு யானை போன்றே இருக்கும் இந்த சிலையை சற்று உற்றுக்  கவனித்துப்  பாருங்கள். பல பெண்களை சிலையாக செதுக்கி செய்த சிற்பம். அதுவே தமிழனின் தனிச்சிறப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குருங்கடி என்ற ஊரில் உள்ள கோவிலில் இது உள்ளது. http://img11.imageshack.us/img11/9915/dbpy.jpg கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் கோவிலில் ஒரு மண்டபத்திற்குள் செல்லும் படியின் ஆரம்பத்தில் கீழ்க்காணும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காளையும் ஒரு யானையும் ஒன்றோடொன்று இணைந்துள்ளதைக் காணுங்கள். ...

உலகில் ஏழல்ல அதிசயங்கள்..

Posted: 23 Jun 2013 07:09 AM PDT

நமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன. இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ... சஹாரா கண்... : மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது ...

ஆஹா !அற்புதம் !! வினோதம் !!!

Posted: 23 Jun 2013 05:00 AM PDT

நான் பயந்தோடி வந்தேன்...உன்னிடம் உண்மைக் கூற....

Posted: 23 Jun 2013 04:56 AM PDT

இரும்பிலே முளைத்தவை ....

Posted: 23 Jun 2013 04:53 AM PDT

இரும்பிலே முளைத்தவை ....iron ஆர்ட்ஸ்



விந்தையான நீர் உற்றுகள்

Posted: 23 Jun 2013 04:50 AM PDT

60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்

Posted: 23 Jun 2013 04:32 AM PDT

சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் சுமார் 60 லட்சம் பயனாளிகளின் தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி சாஃப்ட்வேர் மூலம் முறைகேடாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், நிதி மற்றும் இதர தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும், தவறான நோக்கத்துடன் இவை பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து இ-மெயில் மூலம் ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 23 Jun 2013 04:30 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

காதல் நீ

Posted: 23 Jun 2013 04:24 AM PDT

அங்குமிங்கும்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
காற்று வெளியெங்கும்
கவிதை.
ஒரு தென்றலாய்.
உன்னைப்போல் ...!!!

இனியவன் ஹைக்கூ ...

Posted: 23 Jun 2013 04:24 AM PDT

சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
+நிலத்துக்கு முத்தம் +

******************
காதுகளை கௌவும்
காற்றின் ஆவிகள் 
+இசை+

*********************
சிந்தனை கதவை
திறக்கும் சாவி
+அறிவு +

********************
இருட்டு குடிசை 
விரட்டும்பேய் 
+ஒளி +

*********************

உயிரின் கதவை
இறுக்கும் பூட்டு.
+சாவு +

தத்துவ வரிகள்

Posted: 23 Jun 2013 04:24 AM PDT

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் ************************************* துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும் ************************************* உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும் விரட்டுகிறது ************************************* அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். ...

காதல் வெண்பா - எல்லாமே நீ

Posted: 23 Jun 2013 04:23 AM PDT

காதல் வெண்பா ..03 எல்லாமே நீ  கவிபாடிப் பார்த்தேன்-என்   கவிதையில் நீ! கொஞ்சம்நான்  கண்மூடிப் பார்த்தேன்   கனவில் நீ! -கண் திறந்து  மேகம் தனைப்பார்த்தேன்   முழு நிலா நீ! இதயமது துடிக்கும்  இடம்பார்த்தேன்       நீ.

துடிக்கும் நினைவுகள்

Posted: 23 Jun 2013 04:21 AM PDT

ஒரு தியானம் போல்
உள்ளிழுத்து  நிறுத்தி
காற்றை மூச்சாக்கி
கண்மூடி களிக்கையில்
மெல்ல.. மெல்ல..
எட்டிப் பார்க்கிறது
உன் நினைவுகள் 
உனக்காக எழுதிய வரி 
ஒன்று என்னை 
விட்டு வர மறுக்கிறது

காதல் வெண்பா- தொடர்வேன்

Posted: 23 Jun 2013 04:21 AM PDT

காதல் வெண்பா 05 தொடர்வேன்  ******************* நீ-பிரிந்து போனாலும்        நெஞ்சுக்குள் நீ உதிர்த்த  சிரிப்பு பிரிந்து போகவில்லை.         பெண்ணே என் - பாதம் தொடர்ந்து  உன்பின்னால் வந்துகொண்டிருக்கும்         பின்னால் திரும்பித்தான்                பார்.

காதல் வெண்பா - போலி தியானம்

Posted: 23 Jun 2013 04:19 AM PDT

காதல் வெண்பா 04 போலி தியானம்  வீதிவழி நீநடந்தால்          உன் தேகவாசம் -என்  பாதிஉயிர் போக்குதடி         பின்தொடர்ந்து -ஞானம் தேடி  போய் அமர்ந்தேன் தியானமடி       தேன்மொழியே  உன்நினைவால் மூலாதார சக்கரமே முடங்கி விட்டதடி..!!!

காதல் வெண்பா- புள்ளிக்கோலமே

Posted: 23 Jun 2013 04:18 AM PDT

காதல் வெண்பா 02  புள்ளிக்கோலமே ************************* எட்டு புள்ளிவைத்து நீபோட்ட    முற்றத்து கோலம் உள்ளுக்குள்  கிள்ளிவைத்துச் சென்றாய்   அடிமனதை!- தாமரையே  நாளை வருவாயா கோலமிட    நானிருப்பேன் கால் கடுக்க  காலை வரும்வரையில்        காத்து.

காதல் நட்பு வெண்பா (01)

Posted: 23 Jun 2013 04:17 AM PDT

காதல் வெண்பா -01 மழை. ******** சோக பெருமூச்சை     என்னிதய வலிகீதத்தை  போக்கும் உனது     கடைக்கண் பார்வை! -தூக்கக் கனவுக்குள் பேசும்உன்     கண்கள்! அவையென்  மனதுக்குள் பெய்யும்       மழை. ********************************************* நட்பு வெண்பா 01  தென்றல் காற்று  ********  துன்ப பெருமூச்சை          என்னிதய சுமையை  தாங்கும் உன் கரங்கள் -துடிக்கும்          என்னிதய அறைக்குள்   நீ விடும் காற்று         அவையனைத்தும் என் உயிரில்  தென்றல் காற்று 

காலடிச்சுவடுகள்

Posted: 23 Jun 2013 04:07 AM PDT

மிகப்பெரிய ஏட்டினிலே
           புரியாத கவிதையாய்
கடற்கரை மணலில்
            அவளின் காலடிச்சுவடுகள்....

கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்!

Posted: 23 Jun 2013 04:05 AM PDT

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள பாகிஸ்தானியர்களின் கருப்புப் பண முதலீடு, இந்தியர்களின் முதலீட்டை விட அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது. ஸ்விட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி பாகிஸ்தானைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிதி மேலாண்மை நிறுவனங்களின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.9,200 கோடியாக உள்ளது. இது இந்தியர்களின் ரூ.9,000 கோடி முதலீட்டைவிட அதிகம் ஆகும். மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தான் ...

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Posted: 23 Jun 2013 04:02 AM PDT

கம்பியில்லா இணைய இணைப்பை சாத்தியமாக்கி WiFi தொழில்நுட்பத்தில் உள்ள அபாயங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதற்கு முன்பு வைஃபை(WiFi) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். WiFi என்பது wireless fidelity என்பதின் சுருக்கம். இது ஒரு wireless local area network ஆகும். கணினி - இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவட தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ...

அழகுக் குறிப்பு!

Posted: 23 Jun 2013 03:49 AM PDT

* கடலைமாவும், கோதுமை மாவும் சரிசமமாக எடுத்து நன்கு சலித்து காய்ச்சிய பாலை கொண்டு விழுது தயாரித்து முகம், கை, கால்களில் தடவி குளித்தால், அழகுக்கு அழகு சேர்க்கும். அழுக்கும் வெளியேறும். * பாதாம் பருப்பை காய வைத்து பொடித்து ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பொன் போல் மின்னும். * தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் எடுத்து விட முகம் பளிச் என இருக்கும். பவுன்டேஷன் இல்லாமலேயே மேக்கப் போடலாம். * கஸ்தூரி மஞ்சளுடன், பயத்தம் மாவும் ...

என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியில் ஈகரை

Posted: 23 Jun 2013 03:46 AM PDT

என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியில் ஈகரை என்று ஒரு வெப்சைட் உள்ள்து என்று ஒரு ஆசிரியர் கூறினார்.

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை

Posted: 23 Jun 2013 03:45 AM PDT

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று. 1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். 2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும். 3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. ...

நண்பர்களே usb பிரட்சனை

Posted: 23 Jun 2013 03:43 AM PDT

வணக்கம் நண்பர்களே usb பிரட்சனை என்னுடைய computur விண்டோஸ் 7 64பிட் 6 usb போர்ட் உள்ளது அனைத்து usb பிளாஷ் டிரைவ் களும் ஒர்க் ஆகுது ஆனால் alfa wireless மட்டும் ஒர்க் ஆகவில்லை டிரைவர் இருக்குது usb மாட்டியதும் விட்டு விட்டு போகிறது அனால் விண்டோஸ் xp இல் பிரச்சனை இல்லை usb விடாமல் கனெக்ட் ஆக இன்ன வழி சொல்லுங்களேன்

22000 பதிவுகள் கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....

Posted: 23 Jun 2013 03:38 AM PDT

22000 பதிவுகள் கடந்த உங்களுக்கு  வாழ்த்துக்கள்  அண்ணா  , மேலும்  பல  லட்சங்கள் கடக்க வாழ்த்துக்கள் 

இறப்பும் சிரிப்பும்

Posted: 23 Jun 2013 12:00 AM PDT

உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது

உனது
பூக்கூடையில்
பூக்கள் !

தமிழ்ப் பேராயம்!

Posted: 22 Jun 2013 11:35 PM PDT

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் மகாகவி பாரதி, ""பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்'' என்று விரும்பியது மெத்த சரி. ஆனால், இன்றைய தேவை அதுவல்ல. எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் வந்து குவிகின்றன. பாரதி சொன்னதுபோல, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் மட்டுமல்லாமல், மேல்நாட்டுக் இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்துமே மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. இன்றைய இன்றியமையாத தேவை "நம் நாட்டு ...

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?

Posted: 22 Jun 2013 11:24 PM PDT

மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? யாரும் சொல்ல முடியுமா? புன்னகை

சென்னையில் ஒரு மாநாடு

Posted: 22 Jun 2013 11:01 PM PDT

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் "திருக்குறள் தேசிய நூல் மாநாடு" சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர். சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் ...

புதுச்சேரி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளி பலி

Posted: 22 Jun 2013 10:53 PM PDT

புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது. சுதந்திர பொன்விழா நகர், சாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கழிவுநீர் இங்குள்ள 15 அடி ஆழ தொட்டிக்கு வந்து சேரும். பின்னர் மோட்டார் மூலம் குருசுகுப்பம் பகுதிக்கு அனுப்பப்படும். இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுதந்திர பொன்விழா நகரில் உள்ள கழிவுநீர் தொட்டியை தூர்வாரும் பணி தொடங்கியது. இதற்காக வெளியில் இருந்து வரும் கழிவுநீர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. தூர்வாரும் பணி முடிந்ததால் நேற்று மாலை ...

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Posted: 22 Jun 2013 10:28 PM PDT

வணக்கம் நண்பர்களே..! கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள். புதிய வைரஸ் எச்சரிக்கை: அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக ...

கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Posted: 22 Jun 2013 10:20 PM PDT

தன் வீட்டு வாசலுக்கு வரும் பூச்சிகள் எறும்புகள் கூடப் பசியுடன் திரும்பக்கூடாது என்பதற்காக அரிசிமாவில் கோலம் போடுவது நம் தமிழர்களின் பண்பாடு. ஆனால், பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட, பார்க்காததுபோல் செல்கிறார்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தில் ஊ(நா)றிப் போன சில மக்கள். நன்றி - தமிழால் இணைவோம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™