மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருவனந்தபுரம் அருகே பன்றிக்கு வைத்த கண்ணியில் சிக்கிய சிறுத்தைப்புலி
- பாதுகாப்பு விவகாரம்: சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு
- மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்: மூத்த அமைச்சர்கள் சிலர் நீக்கப்படுகிறார்கள்
- திருப்பதியில் இடியுடன் பலத்த மழை: கோவில், தங்கும் விடுதிக்குள் வெள்ளம் புகுந்தது
- தனி தெலுங்கானா பிரச்சினையில் இந்த மாதம் முடிவு எடுக்கப்படும்: குலாம் நபி ஆசாத்
- கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 5 பேர் பலி
- தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்
- தெருநாய்களின் கருத்தடைக்கு ரூ.75 லட்சம் செலவு செய்ய நாசிக் நிர்வாகம் முடிவு
- ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட சாத்தியமில்லை: சித்தராமையா
- சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையில் மாற்றம்: கபில் சிபல்
- வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன் தலைமறைவு
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவதை பா.ஜனதா எதிர்க்கவில்லை: சுஷ்மா சுவராஜ்
- தனித்தெலுங்கானா விவகாரத்தில் பாராளுமன்ற குமாஸ்தாவுக்கு இருக்கும் வேதனை கூட பிரதமருக்கு இல்லை: சந்திரசேகர ராவ்
- பாரதீய ஜனதாவில் உள்கட்சி சண்டை நடக்கிறது: காங்கிரஸ் கேலி
- மத்திய போலீசில் பழங்குடியின இளைஞர்கள் சேரக்கூடாது: மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
- அக்டோபர் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் குறைக்கப்படும்
| திருவனந்தபுரம் அருகே பன்றிக்கு வைத்த கண்ணியில் சிக்கிய சிறுத்தைப்புலி Posted: 02 Jun 2013 10:38 PM PDT திருவனந்தபுரத்தை அடுத்த பத்தினம்திட்டை, கோனி வனப்பகுதியை ஒட்டி ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு காட்டுப்பன்றிகள் நுழைந்து தோட்டங்களை நாசமாக்கி வந்தன. இதனால் தோட்டத்தின் உரிமையாளர்கள் பன்றிகளை பிடிக்க தோட்டத்தையொட்டி கண்ணிகள் அமைத்திருந்தனர். இதில், சிக்கும் பன்றிகளை தோட்டத்தின் உரிமையாளர்கள் பிடித்து அழிப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு நாளும் காலையில் தோட்டத்தின் வேலையாட்கள் அங்குச் சென்று கண்ணிகளில் பன்றிகள் சிக்கி இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். இதுபோல நேற்று காலையிலும் தோட்டத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சென்றபோது பன்றிக்கு வைத்த கண்ணியில் சிறுத்தைப்புலி ஒன்று சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை கண்டனர். உடனே இதனை தோட்ட |
| பாதுகாப்பு விவகாரம்: சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு Posted: 02 Jun 2013 10:32 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார், முன்னாள் மந்திரி மகேந்திர கர்மா உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியினர் பரிவர்த்தன் யாத்திரை நடத்தி விட்டு திரும்பும்போது இந்த தாக்குதல் நடந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி நடத்தும் ராமன்சிங் தலைமையிலான அரசு காங்கிரஸ் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும், பரிவர்த்தன் யாத்திரைக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடந்து இருக்காது என்றும் |
| மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்: மூத்த அமைச்சர்கள் சிலர் நீக்கப்படுகிறார்கள் Posted: 02 Jun 2013 10:22 PM PDT மத்திய மந்திரி சபையில் இருந்து கடந்த மார்ச் மாதம் தி.மு.க.வைச் சேர்ந்த மந்திரிகள் விலகினார்கள். இதையடுத்து கடந்த மாதம் ஊழல் புகார் காரணமாக ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலும், சி.பி.ஐ. அறிக்கையை திருத்திய விவகாரத்தில் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் பதவியை ராஜினாமா செய்தனர். தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மந்திரிகள் விலகலால் மத்திய அமைச்சரவையில் சில முக்கிய இலாகாக்கள் காலி இடங்களாக உள்ளன. இந்த காலி இடங்களுக்கு விரைவில் புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். இதையடுத்து புதிய மந்திரிகளாக யார், யாரை நியமனம் |
| திருப்பதியில் இடியுடன் பலத்த மழை: கோவில், தங்கும் விடுதிக்குள் வெள்ளம் புகுந்தது Posted: 02 Jun 2013 10:21 PM PDT கோடை விடுமுறை முடிய இருப்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். தர்ம தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது. இந்த நிலையில் நேற்று மாலை திருப்பதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 1/2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏழுமலையான் கோவிலை மழை சூழ்ந்தது. அதோடு கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. பக்தர்கள் தரிசன கியூவில் வெள்ளம் |
| தனி தெலுங்கானா பிரச்சினையில் இந்த மாதம் முடிவு எடுக்கப்படும்: குலாம் நபி ஆசாத் Posted: 02 Jun 2013 10:01 PM PDT ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் எம்.பிக்கள் கட்சி தலைமைக்கு கெடு விதித்து இருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் கட்சி தலைமை எந்த முடிவும் எடுக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மந்தா ஜகநாதம், விவேகானந்தா ஆகியோர் கட்சியில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் அதன் தலைவர் சந்திரசேகர ராவ் முன்னிலையில் இணைந்தனர். |
| கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 5 பேர் பலி Posted: 02 Jun 2013 09:30 PM PDT கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழைக்கால நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோடு மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. பத்தினம்திட்டா, கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்களில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. கொல்லம், வேப்பமூடு பகுதியில் டெங்கு பாதித்த சுரேஷ்குமார் (வயது 44), செர்லி (39) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். பத்தினம் திட்டை மாவட்டத்தில் ரமணி (62), ஜோஸ் (25) ஆகியோர் பலியானார்கள். கோழிக்கோட்டில் ஷீலா (45) என்ற பெண்ணும் டெங்கு நோய்க்கு பலியாகி |
| தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் Posted: 02 Jun 2013 09:26 PM PDT கேரளாவில் வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி கடந்த 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பாறசாலை முதல் காசர் கோடு வரை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது. அதிகபட்சமாக கண்ணூரில் 28.91 செ.மீ. மழை பெய்தது. கொடுங்கல்லூரில் 8 செ.மீ., பொன்னானி, வைக்கம் 7 செ.மீ., சேர்தலா 6, சாலக்குடி, மாவேலிக்கரா 5, திருவனந்தபுரம் 2 என்ற அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் அந்த வழியாக வாகன போக்குவரத்து முடங்கியது. |
| தெருநாய்களின் கருத்தடைக்கு ரூ.75 லட்சம் செலவு செய்ய நாசிக் நிர்வாகம் முடிவு Posted: 02 Jun 2013 09:19 PM PDT மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தெருநாய்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்து வந்தனர். இதனை தடுப்பதற்கான முயற்சியில் தற்போது அந்நகர நிர்வாகம் இறங்கியுள்ளது. உத்கிர் பகுதியில் இயங்கிவரும் அரசு சாரா அமைப்பான பிராணிகள் தடுப்பு வதை சங்கம் தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்கும் வகையில் அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. |
| ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட சாத்தியமில்லை: சித்தராமையா Posted: 02 Jun 2013 08:37 PM PDT கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ராய்சூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அவர் சிந்தனூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பயிர் இழப்பீட்டுக்கு ஈடுசெய்ய ரூ.2,500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதோடு ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அந்த மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு உரிய ஆதாரங்களுடன் பதில் அளிக்கும். |
| சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையில் மாற்றம்: கபில் சிபல் Posted: 02 Jun 2013 08:12 PM PDT சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் குழு சிபாரிசு செய்து, ஜனாதிபதி நியமிக்கும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறையில் மாற்றம் வரப்போகிறது. இதுகுறித்து மத்திய சட்டமந்திரி கபில் சிபல் நேற்று அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- (சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில்) நீதிபதிகளை நியமனம் செய்யும் தற்போதைய முறை எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை என்று கருதுகிறோம். ஏன், நீதித்துறை எதிர்பார்ப்புக்கு ஏற்றபடிகூட இல்லை என்று |
| வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன் தலைமறைவு Posted: 02 Jun 2013 03:53 PM PDT பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், நஷ்ரத்பூர் கிராமத்தை சேர்ந்த உபேந்திரா மஹ்தோ என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரினா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக தருவதாக கூறிய எருமை மாட்டை ரினா தேவியின் பெற்றோர்கள் |
| பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவதை பா.ஜனதா எதிர்க்கவில்லை: சுஷ்மா சுவராஜ் Posted: 02 Jun 2013 02:30 PM PDT உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவதை பாரதீய ஜனதா எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார். தேசிய உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதில் மத்திய அரசு |
| Posted: 02 Jun 2013 01:37 PM PDT காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 2 எம்.பி.க்கள் தனித்தெலுங்கானா ராஷ்டிரீய சமிதியில் இணையும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தனித்தெலுங்கானா ராஷ்டிரீய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் பேசியதாவது |
| பாரதீய ஜனதாவில் உள்கட்சி சண்டை நடக்கிறது: காங்கிரஸ் கேலி Posted: 02 Jun 2013 08:52 AM PDT பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்துவது என்று பெரும்பாலான தலைவர்கள் முன்பு கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் நரேந்திர மோடியை விட மத்திய பிரதேச முதல் மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் சிறந்தவர் என்று அத்வானி அவருக்கு வக்காளத்து |
| மத்திய போலீசில் பழங்குடியின இளைஞர்கள் சேரக்கூடாது: மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை Posted: 02 Jun 2013 08:41 AM PDT சத்தீஸ்கரில் காங்கிரஸ் யாத்திரையில் தாக்குதல் நடத்தி 28 பேரை மாவோயிஸ்டுகள் கொன்றனர். இந்நிலையில் அங்கு நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பஸ்தர், பிஜாப்பூர், தண்டேவாடா, கொண்டகன், நாராயன்பூர், சுக்மா, ராஜ்நண்டகான் ஆகிய மாவட்டங்களில் மத்திய |
| அக்டோபர் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் குறைக்கப்படும் Posted: 02 Jun 2013 08:31 AM PDT தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையில் அடிக்கடி வரும் நீண்ட விளம்பரங்களால் வெறுப்படையும் பார்வையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அக்டோபர் முதல் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |