Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜன்னலில் பூத்த காட்டு பூ மனோரஞ்சன் எழுதும் கவிதை

Posted: 21 Jun 2013 03:03 PM PDT

ஜன்னலில் பூத்த காட்டு பூ அவள்!! ! " அவளை அந்த நிலவுடன் ஒப்பிட்டு பேசலாம் அவ்வளவு அழகு ! மேகமாதான் உலாவினேன் எப்படி என்னுள் வந்தாய் அடி பெண்ணே! ! வசந்த காலத்தில் பூத்த மலரடி நீ! பூங்காற்றே கொஞ்சன் காதலை சொல்வாயா! ! "நீ வாசலில் இடும் கோளத்திற்காக காத்திருக்கு ஒரு ஜீவன் தான் ! ! "உனக்காக அழகிய ரோஜாவை பரித்தேன் அதுவும் கொஞ்சம் உன்னை போல் தான் நல்ல மனச பார்க்காமல் சட்டென்று குத்திவிடுது பாவம் அதுக்கு என்ன தெரியும் பூங்காற்றே!! ! ! கண்ணாலே கட்டி இழுக்கும் காந்த கண்ணடி உனக்கு ஒன்னும் ...

தமிழ் கற்கலாம் வாங்க!

Posted: 21 Jun 2013 01:21 PM PDT

\

அரை நூற்றாண்டு ஆதிக்கத்தில் தமிழையும் இப்படி வெளிப்படுத்த முடியும்னு காட்டிட்டாங்களே!

அடச்சே...! இப்படில்லாம் தமிழைக் கத்துக்காதீங்க... போங்க .... போங்க!

-- தினமணி

அரசியல் ஜோக்ஸ்

Posted: 21 Jun 2013 01:11 PM PDT

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார் துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! *************** தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்? ஆக்டோபஸ்னு சொல்லிட்டு, ஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்.. ******************** ''தலைவர் 'ஐபிஎல்'ல பத்தியெல்லாம் பேசுறாரே?''''ஆமாம்... அதப் படிச் சுட்டா, வக்கீலாகலாமான்னு கேட்குறார்!'' *************** ''தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப ...

ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்

Posted: 21 Jun 2013 01:11 PM PDT

ஆண்ட்ராய்டு synchronization இதை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருந்தாலும் ஒரு சிலரே இதனை பயன்படுத்திகொண்டிருப்போம் .இதுவரை பயன் படுத்தாதவர்களுக்கு  இந்த பதிவு இதன் மூலம் synchronization  ய் மிக எளிதாக நமக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தும் முறைகளை பார்க்கலாம் தனிப்பட்ட முறையில் ஆண்ட்ராய்டு மொபைல்க்கென்று ஒரு மெயில் உருவாக்கி கொள்வது நலம் இதனால் நம் பர்சனல் மெயில் களில் தேவையில்லாத மெயில்கள் வருவதை தடுக்கலாம் ,மேலும் ஆண்ட்ராய்டு சம்பந்தமான சில தளங்களில் நுழைய பயன்படுத்திகொள்ளலாம் இவ்வாறு ...

மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!

Posted: 21 Jun 2013 12:53 PM PDT

ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கையில், நேற்றைய முன்தினம் செவ்வாய்க்கிழமை மலேசியாவின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு பட்டியல் பலத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. விளம்பரப் பக்கம் போல் தோற்றமளிக்கும் அந்த செய்தியில் யார் அந்த விளம்பரத்தை வெளியிடுகின்றார்கள் என்பது பற்றியோ, எந்த அமைப்பு அந்த தேர்வைச் செய்தது என்பது பற்றியோ எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. அல்லது அந்தப் பக்கம் ஸ்டார் ஆசிரியர் குழுவினரின் தேர்வா என்பது பற்றிய குறிப்பும் இல்லை. பிரதமரின் மனைவியான டத்தின்ஸ்ரீ ...

உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை

Posted: 21 Jun 2013 12:48 PM PDT

வாணியம்பாடி : உயர்நிலைப்பள்ளி மாணவர் எண்ணிக்கையில் பாதி பேருக்கு மேல் மதிய உணவு கிடைக்காதால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் பசியால் அழுதனர். வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக அனைத்து மாணவர்களும் ...

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Posted: 21 Jun 2013 12:44 PM PDT

பள்ளி மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுத்த கண்டக்டருக்கு "இனி மேல் மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என 200 முறை எழுதச்சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்காக போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர். பள்ளி வாகனத்திலோ, பள்ளியிலோ நடக்கும் ராக்கிங், மன நிலை பாதிப்பு, பள்ளியின் அருகில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் ரகசிய விற்பனை மற்றும் மாணவர்களின் வீட்டில் உள்ள அசாதாரண சூழல் குறித்தும் 'புகார்ப்பெட்டி'யில் மனுவாக ...

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Posted: 21 Jun 2013 12:37 PM PDT

நாம் எல்லோரும் நமது வேலைகளை தலைவலி என்கிறோம் சிலநேரங்களில். ஆனால் தலையால் வலி ஏற்படும் ஒரு வேiலையையே வலி இன்றி செய்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் ஒரு சீனர். 47 வயதான லி ஸின் எனும் சீனாவைச்சேர்ந்த மனிதரே இவ்வாறான ஒரு அரிய சாதனைக்கு சொந்தக்காரர். கூரிய ஆணி ஒன்றை பூமியில் நிறுத்தி அதன் மேல் தலையை ஊன்றி தலைகீழாக நின்கிறார் இவர். அவரது உடல் எடை முழுவதும் ஆணியின் மீது தாக்குகிறது. 60 கிலோ உடல் எடை கொண்ட இவர் சுமார் 10 விநாடிகள் வiரை ஆணியின் மீது தனது தலையை ஊன்றி நின்கிறார். ஆம் இவரது தலைக்கு ...

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Posted: 21 Jun 2013 11:48 AM PDT

இன்டர்நெட், ஐபாட், ஐபோன், டேப்லெட், மேக்புக் என்று உலகமே இன்று நவீன கணினியின் தாக்கத்தில் இயங்கிக் கொண்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல் முயற்சியாகவும் தோன்றியது 'ஆப்பிள்-1' வகை கம்ப்யூட்டர் தான். இவ்வகை கம்ப்யூட்டரின் முதல் தயாரிப்பு 1976ம் ஆண்டு தொடங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீம் வோஸ்னியாக் ஆகியோரின் வடிவமைப்பான இந்த ஆப்பிள்-1 வகை கம்ப்யூட்டர்கள் அறிமுக காலத்தில் 666.66 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 39 ஆயிரத்து 800 ரூபாய்) விற்கப்பட்டது. இந்த ...

Stand and deliver ஆங்கிலப்படம் முழு படம் தரவிரக்க சுட்டி கிடைக்குமா?

Posted: 21 Jun 2013 11:46 AM PDT

Stand and deliver முழு படம் தரவிரக்க சுட்டி கிடைக்குமா?

இலவசமாக ஆன்லைன் ரேடியோ தொடங்குவது எப்படி ?

Posted: 21 Jun 2013 11:44 AM PDT

ரேடியோ தொடங்க முதலில் இந்த தளத்திற்கு http://www.iradeo.com/ செல்லவும் பிறகு புதிதாக உங்களுக்கு என்று ஒரு புதிய கணக்கை திறக்கவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் பிறகு basic free என்பதை கிளிக் செய்யவும் அடுத்து ஈமெயில் ,கடவுச்சொல் குடுத்து புதிய கணக்கை திறக்கவும் அடுத்து create new station கிளிக் செய்யவும் அடுத்து ரேடியோவிற்கு குடுக்க நினைக்கும் பெயர் மட்டும் வண்ணம் தேர்வு செய்து கொள்ளவும் (குறிப்பு : mp3 file  மட்டுமே அப்லோட் செய்யவும்  mp3 file  மட்டும் ...

அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை!

Posted: 21 Jun 2013 11:38 AM PDT

ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றிப் பலரும் அறிவோம். இவரது துப்பறியும் திறமையே தனிப்பட்ட ஒன்று. அதனால்தான், அவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக, நம்மிடையே உலவி வருகிறார். ஆனால் ஹோம்ஸுக்கு முன்பு கூட அவர் போன்ற கதாபாத்திரங்களை எட்கார் ஆலன் போ மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பேரறிஞர் வால்டேர் போன்ற சிலர் படைத்திருக்கிறார்கள். வால்டேர் தனது நண்பருக்காக, வேடிக்கையாக ஜடிக் என்ற அதிமேதையை வைத்து ஓர் அருமையான கதையைக் கூறினார். ஜடிக் ஒரு அதிமேதாவி. இவர் ஒரு நாள் ஒரு காட்டின் வழியே சென்று ...

அகல்மொழி பத்து - பாகம் 4

Posted: 21 Jun 2013 10:26 AM PDT

http://2.bp.blogspot.com/-idU79eSnn2E/UcRBopyx7bI/AAAAAAAACVM/ElA9v3yVUCk/s1600/8698409597_b672639da1_c.jpg 31. ஒரு சமூகப் பிரச்சனைக்கு பதியம் போடுவது மேல் வர்க்கம், அதனால் வரும் விளைவுகளை தூரம் நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பது நடுத்தர வர்க்கம், எதிர்த்து நின்று போராடிச்சாவது கீழ் வர்க்கம். இவ்வுலகின் எழுதப்படாத விதி இது. 32. எனது மதமும் அதன் கொள்கைகளும் மட்டுமே சிறந்தது அதை மட்டுமே கடைபிடிப்பேன் என்று கூறும் ஒரு இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ ஆபத்து என்றவுடன் ரத்த வங்கிகளில் ஒரு யூனிட் ...

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

Posted: 21 Jun 2013 10:23 AM PDT

1. ஜாடிக்கேத்த மூடி. ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்த பழமொழியை வைத்து கூறுவார்கள். அதாவது மிக பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 2. ஏழைக்கேத்த எள்ளுருண்டை. ஏழைகள் விலையுயர்ந்த சாப்பாடு சாப்பிட முடியாது. கஞ்சியோ கூழோ எது கிடைத்தாலும் அதை மன நிறைவுடன் சாப்பிடுவார்கள். சாப்பிடும்போது இந்த பழமொழியைக் கூறிக்கொண்டே திருப்தியாக சாப்பிடுவார்கள். 3. சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை. கண்டிப்பாக நமக்கு ...

மனதோடு சாரலாய் தூவியே .....

Posted: 21 Jun 2013 08:41 AM PDT

தென்னைகள் அசைய மெல்லமாய் தென்றல் வந்து வீசிட தெக்கத்தி மேகம் கருக்க தெம்மாங்கு பாடிடும்  பாடல் கேட்க தொழில்  புரியும் தோழர்  எல்லாம்   தோளில் சுமந்த  புல்கட்டோடு தலை   தெறிக்க ஓடிடவே  ... தொட்டு தொட்டு முத்தமிடும்   தொலைதூர  மேகங்கள் எல்லாம் தொடுத்தது யார்  என்றே தெரியாமல் தொடர்ந்து  சிந்தித்தும்  தொடரும்   தொடர்கதையாகவே  .... தெருவெல்லாம்  சிலிர்த்திடவே தேரென ஓடியதே தெருவெல்லாம் தெளியாத  வெள்ளமென  வான்   தெளித்த தண்ணீரால் ... மண்தொட்டு  மரங்கள் வரை   மனம்தொட்டு ...

நண்பர்களே usb பிரட்சனை

Posted: 21 Jun 2013 08:17 AM PDT

வணக்கம் நண்பர்களே usb பிரட்சனை என்னுடைய computur விண்டோஸ் 7 64பிட் 6 usb போர்ட் உள்ளது அனைத்து usb பிளாஷ் டிரைவ் களும் ஒர்க் ஆகுது ஆனால் alfa wireless மட்டும் ஒர்க் ஆகவில்லை டிரைவர் இருக்குது usb மாட்டியதும் விட்டு விட்டு போகிறது அனால் விண்டோஸ் xp இல் பிரச்சனை இல்லை usb விடாமல் கனெக்ட் ஆக இன்ன வழி சொல்லுங்களேன்

நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள்

Posted: 21 Jun 2013 08:13 AM PDT

நான் புதிதாக சிஷ்டம் வாங்க உள்ளேன். ரு.28000க்குள். இதற்கு தகுந்த ஏஎம்டி பிராசசர் போர்டு உள்ள நல்ல கான்பிக்குரேஷன் வாங்க ஆலோசனை தாருங்கள்.

கட்சி அரசியலை வேரறுப்போம் !

Posted: 21 Jun 2013 06:55 AM PDT

சிதறி கிடந்த மக்களை ஒன்றுபடுத்த அன்று கட்சி ஆரம்பிக்கப்பட்டது . ஆனால் இன்று அந்த கட்சி தான் மக்களைப் பிரிக்கிறது . நமது நாடு பாரம்பரியமானது . பல்வேறு விதமான கலாச்சாரங்கள் பின்பற்றப் படுகின்றன . பல்வேறு விதமான மொழிகள் பேசப் படுகின்றன . பல்வேறு விதமான மதங்கள் பின்பற்றப் படுகின்றன . இப்படி எத்தனையோ பேதங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் . ஆனால் நம் ஒற்றுமையை கட்சி பேதங்கள் அசைத்துப் பார்க்கிறது .  மக்கள் நலன் சார்ந்த அரசியல் அழிந்து வருகிறது . கட்சி நலன் சார்ந்த அரசியல் வளர்ந்து வருகிறது ...

என் அம்மாவும் ஒரு அக்காவும்..

Posted: 21 Jun 2013 06:15 AM PDT

என் வீட்டில் நான் தொடும் பொருள்களில் எல்லாம் அவள் வாசம் நிரம்பியிருக்கும் .. இன்றும் திருநீறு பூசினால் மறக்காமல் ஊதி விடுவாள் கண்ணில் படாமல் .. பசு ஒரு கையிலும் புல் கட்டு தலையிலும் சுமந்து என்னை கரை சேர்த்தவள்.. எல்லோரும் கை விரிக்க கண்ணீருடன் மருத்துவச்சி கால் பிடித்து என் உயிர் மீட்டவள். விறகடுப்பில் தோசைக்கல் வைத்து நீர் தெளித்து என் மகன் என்று நெய் ஊத்தி சுட்டு தருவாளே தோசை என்னுள் இப்போதும் மணமனக்கும். அவள் வைத்த கோழிகுழம்பு அடுப்பில் கொதிக்கும் போதே என் நாக்கு குறுக்குறுக்கும்... அவள் ...

கவிதையில் யாப்பு

Posted: 21 Jun 2013 05:59 AM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

இரசிக்க அருமையான பாடல்கள்

Posted: 21 Jun 2013 05:20 AM PDT

1.அசலும் நகலும்



வட மாநில வெள்ளம்: இதுவரை 207 பேர் பலி ; மீட்பு விமானம் விபத்தில் சிக்கியது

Posted: 21 Jun 2013 05:15 AM PDT

டேராடூன்: வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட மாநிலங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இங்கு ஏற்பட்ட அழிவுகள் மக்களை பெரும் துயரத்திற் குள்ளாக்கியிருக்கிறது. உத்தர்கண்ட், இமாச்சல பிரதேசத்தில் உள்ள யாத்திரை ஸ்தலங்கள் பல மூழ்கி கிடக்கின்றன. இங்கு வந்த பக்தர்கள் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இதற்கிடையில் மீட்பு பணிக்கு சென்ற ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சதேம் ஏதுமில்லை. பைலட் காயத்துடன் மீட்கப்பட்டார். பஞ்சாப், ...

வெள்ளை மற்றும் சில அரிய பாம்புகளின் புகைப்படங்கள்

Posted: 21 Jun 2013 04:30 AM PDT

உத்தரகண்டை புரட்டி போட்ட ‘இமாலய சுனாமி’ -- புகைப்படங்கள்

Posted: 21 Jun 2013 04:30 AM PDT

நன்றி : தினகரன்





தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?

Posted: 21 Jun 2013 04:21 AM PDT

ஆங்கிலத்தில் A வில் ஆரம்பிக்கும் 6 எழுத்து கொண்ட சொற்கள் எத்தனை, es இல் முடியும் சொற்கள் எத்தனை என்பதை போல பல வித சொல் தேடல்களை செய்து கொடுக்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன எடுத்துக்காட்டாக http://www.wordbyletter.com/ என்ற இணையதளம் இது போன்ற சேவைகளை கொடுக்கிறது. இதே போல் தமிழுக்கு என ஏதாவது இணையதளங்கள் உள்ளனவா? என்று தெரிந்தவர்கள் இருந்தால் உதவி செய்யுங்கள்.

‘கோலாலம்பூர் உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று’ எனச் சொல்லப்படுவதை போலீஸ் நிராகரித்தது

Posted: 21 Jun 2013 04:14 AM PDT

உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று- கோலாலம்பூர் என ஒர் இணையத்தளம் ஒன்று 'பட்டியலிட்டுள்ளதை' அரச மலேசியப் போலீஸ் படை மறுத்துள்ளது. அந்த இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் அந்தத் தகவலை நம்பவும் வேண்டாம் பரப்பவும் வேண்டாம் என போலீஸ் படையின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது. "அந்தத் தாகவல் ஆதாரமற்றது, போலீசிடம் அது குறித்து கேட்கப்படவில்லை," என அது கூறியது. "மலேசியர்கள் அதிகாரத்துவ வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை ...

மலேசியா: நாளை பேரணியா? தேவை நேர்ந்தால் ராணுவம் அழைக்கப்படும்

Posted: 21 Jun 2013 03:50 AM PDT

நாளை சனிக்கிழமை தலைநகரில் எதிர்க்கட்சிகள் பேரணியை நடத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவல் துறைக்கு ஒத்துழைப்பாக செயல்பட ராணுவ உதவியும் நாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேரணியை எதிர்கொள்ள அரச மலேசிய காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் எதிர்பாராத விடயங்களைச் சமாளிக்க இராணுவ உதவியும் பெறப்படக் கூடும் என்று உள்துறை பொது அமைதி பாதுகாப்புத் துறை இயக்குனர் டத்தோஸ்ரீ சாலே மாட் ரஷிட் தெரிவித்தார். பாடாங் மெர்போக்கில் நடத்தப்படும் அந்தப் பேரணியில் ...

கடுகு கவிதைகள்

Posted: 21 Jun 2013 03:43 AM PDT

அன்பின் வழியே
தோற்கடிப்பதற்கும்
தேற்றுவதும்..
தோள் சாய்வதற்கும்...
வர வேண்டும்...
ஆனால்
வரமே நீயே ஆனாய்..

ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்?

Posted: 21 Jun 2013 03:41 AM PDT

மகாராஷ்டிரா, ஜல்கான் மாவட்டத்தில் திரு கோபால் பிஸே என்ற எளிய விவசாயி மகத்தான சாதனை புரிந்திருக்கிறார். ஏதோ கொஞ்சம் நிலமே உள்ள ஏழை, இவரால் கலப்பை, ஏர் கூட வாங்க இயலவில்லை. வாடகைக்கு எடுக்கக்கூட இவரிடம் பணம் இல்லை. பிறகுதானே ட்ராக்டரைப் பற்றி யோசிக்க வேண்டும். ஒருநாள் இவர் தமது வயலுக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒரு சைக்களின் மேல் நான்கு மூட்டைகளை வைத்து எடுத்துச் சென்றார். நான்கு மூட்டைகள் மாவு எவ்வளவு கனம் இருக்கும்? இருப்பினும், ஒரு மாட்டு வண்டியில் அவற்றை எடுத்துச் செல்லாது, சைக்கிளின்மீது ...

தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு

Posted: 21 Jun 2013 03:34 AM PDT

போபால்: தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முடியாத வகையில், புதிய மின் விசிறியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் வடிவமைத்துள்ளார். ஜபல்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவர், டாக்டர் ஆர்.எஸ். சர்மா. சில தினங்களுக்கு முன், இவர் வீட்டின் அருகில் வசித்த மாணவி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். இந்த சம்பவம், சர்மாவை வெகுவாக பாதித்தது. இதையடுத்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண எண்ணிய சர்மா, பொறியாளர்களுடன் ஆலோசனை செய்து, ...

கார்ட்டூன் : போடுங்கம்மா ஓட்டு

Posted: 21 Jun 2013 03:06 AM PDT



-- தினமணி

என் கைவேலைப்பாடு - பின் தையல்.

Posted: 21 Jun 2013 02:50 AM PDT

பின் தையல் (back stitch)


தோற்றாலும் அது எனக்கு வெற்றிதான் ....!!!

Posted: 21 Jun 2013 02:41 AM PDT

கொவ்வை பழம் தின்ன
காத்திருந்த கிளி போல்
ஒற்றைக்காலில் காத்திருந்தேன்
வெடித்து பறந்தபோதுதான் ..
உணர்ந்தேன் -நீ எனக்கு
உரியவளில்லை ....!!!

காதலிப்பது -இலகு
காதலை சொல்லுவதுதான்
கடினம் -காதலை நினைப்பதில்
தோல்வியில்லை சொல்லுவதால்
தோல்வியும் வலியும்

உன்னிடம் நான் எத்தனை முறை
தோற்றாலும் அது எனக்கு
வெற்றிதான் ....!!!

இரங்கல் கவிதை ...!

Posted: 21 Jun 2013 02:39 AM PDT

மணி சுற்றுகிறது மலர்வளையம் பற்ற வண்ணம் மறைந்தது ஏனோ ?அவர் எண்ணமெல்லாம் திரை இறைவா என்னது இது உன் குறைவா? தந்தை இழந்த மகனுக்கு தன் கை உதிவி செய்தாயோ ? மங்கையர் தாயின் குங்குமத்தை மரணத்தில் விதைத்தாயோ ? சங்கமிக்கும் திரைக்கடலில் சரித்திரம் படைத்த கலங்கரை அங்கம் மாட்டும் ஆடுகிறது மனையில் அடுத்தடி பாதரசம் இல்லாமல் நகைச்சுவையே ... ஒரு திரி எரிய பல விழி கரையத் தேராய் போகும் கலையே உனக்காக உலகமே வழியனுப்பிவைத்தது நல்லொரு திரைப் பிரம்மனை இழந்துவிட்டோமோ என்று !

மலிவுவிலை அம்மா மினரல் வாட்டர் திட்டம்

Posted: 21 Jun 2013 02:29 AM PDT

சென்னை: தமிழக அரசின் சார்பில் குறைந்த விலை மினரல்வாட்டர் தயாரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியி்ல், ஏழ‌ை-எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், மலிவு விலையில் அம்மா மினரல்வாட்டர் திட்டம் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம் அண்ணா பிறந்த நா‌ளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் துவக்கப்படும். இந்த மினரல் வாட்டர் பாட்டல்கள், அனைத்து அரசு பேருந்து நிலையங்களில் கிடைக்கும் . இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

-- தினமலர்

சிறையில் பவர் ஸ்டார் : திரையில் லிட்டில் பவர் ஸ்டார்

Posted: 21 Jun 2013 01:22 AM PDT

சென்னை: பவர் ஸ்டார் பல்வேறு மோசடி வழக்குகளில் சிறைக்குள் இருக்கிறார். இந்நிலையில் லிட்டில் பவர் ஸ்டார் திரைக்கு வந்துள்ளார். டாக்டர் சீனிவாசன் தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பட்டம் அளித்துக் கொண்டு சுய விளம்பரம் செய்து வந்தார். இந்நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த பவரை சந்தானம் கலாய்த்து கலாய்த்து அவரின் மார்க்கெட்டை ஏற்றிவிட்டார். இந்த படத்தை அடுத்து பவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன. இந்நிலையில் அவர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ...

சின்ன சின்ன கலப்பு ஜோக்ஸ் ...

Posted: 21 Jun 2013 12:49 AM PDT

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க? டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான். ——————————————————————————————— நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர். ——————————————————————————————— வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா? சர்தார்: ஆகிவிட்டது. வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்? சர்தார்: ஒர் பெண்ணை. வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்? சர்தார்: ...

சரக்கு வணிக நடவடிக்கை வரி ஜூலை 1 முதல் அமல்

Posted: 21 Jun 2013 12:28 AM PDT

புதுடெல்லி: தங்கம், சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட விவசாயம் சாரா பொருள்களுக்கு மத்திய அரசு புதிய வரி விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஜூலை 1ந் தேதி அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசு சரக்கு வணிக நடவடிக்கை வரி என்று புதிய வரியை அறிமுகம் செய்கிறது. இந்த வரி 0.01% விதிக்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பை மத்திய நிதித் துறை வெளியிட்டுள்ளது. தங்கம், வெள்ளி, அடிப்படை உலோகங்கள், கச்சா எண்ணெய், பசை உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு இந்த வரி விதிப்பு கீழ் வருகிறது.அதே நேரம் கோதுமை, ...

எண்ணத்தை மாற்றுகிறாய் ...!!!

Posted: 21 Jun 2013 12:23 AM PDT

உன்னை பார்த்தபின்பு
என்னை புரிந்துகொண்டேன்
உனக்காகவே பிறந்தேன் நான்

எல்லா காவியங்களும்
காப்பியங்களும் காதால்
பிரபலமானவை -நம்
காதலால் நாமும்
பிரபல்ஜமாவோம் ...

நாடகத்தில் போடும்
வேசம் போல் -நீ
நிமிடத்துக்கு நிமிடம்
எண்ணத்தை மாற்றுகிறாய் ...!!!

கஸல் ;161

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 21 Jun 2013 12:18 AM PDT

இந்தோனேஷிய காட்டுத்தீ புகை மூட்டம் ; சிங்கப்பூர் - மலேசியாவில் கடும் பாதிப்பு

Posted: 21 Jun 2013 12:04 AM PDT

இந்தோனேஷியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் எழும்பிய கரும்புகை அருகில் உள்ள மலேசியா , சிங்கப்பூர் பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதுடன், பலரும் மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த புகை மூட்டம் இயற்கையாக வந்ததா அல்லது வனத்தை அழிக்கும் நோக்கில் உருவான சதிச்செயலா என கண்டுபிடிக்க முடியாமல் தொழில் நுட்ப பிரிவினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அவ்வப்போது நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அழிவு மூலம் பெரும் துயரை சந்திக்கும் ...

மெழுகுவர்த்தியின் அறிவுரை

Posted: 21 Jun 2013 12:02 AM PDT

தன்னை உருக்கி ஒளியைக் கொடுக்கும்
தன்னலம் அற்றவனாம் நான், நம்பிவிடாதே!
தன்னலவாதிகளின் தந்திரம் அது

என்னை நான் உருக்கவில்லை
என்னை இவர்கள் உருக்குகிறார்கள்
என் தவறு ஒன்று தான்
எனக்குள் திரியை அனுமதித்தது

கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்

Posted: 20 Jun 2013 11:55 PM PDT

ரிஷிகேஷ் : வட இந்தியாவில் இமயமலையை ஒட்டிய இந்துக்களின் புனித யாத்திரை தலமான கேதார்நாத்தில் இயற்கை ஏற்படுத்தி உள்ள சீர்குலைவுக்கும், வெள்ள பேரழிவிற்கு காரணம் இயற்கை மட்டுமல்ல மனிதர்களாகிய நாமும் தான் என விஞ்ஞானிகள் அதி்ர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். இயற்கை பேரழிவு : உத்தர்கண்ட் மாநிலத்தில் யாத்திரைக்குப் போன சுமார் 60 ஆயிரம் பேர் கேதர்நாத்துக்கும், ருத்பிரயாக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாக செயற்கைக் கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அதே செயற்கைக் கோள் புகைப்படங்கள் சில ஒப்பீடுகளையும் நமக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™