Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அசாம் கன பரிசத் கட்சி பற்றி விமர்சனம்: ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

Posted: 05 Jun 2013 10:35 PM PDT

அசாம் கன பரிசத் கட்சி அசாமில் 1985-89 மற்றும் 1996-2001 ஆண்டுகளில் ஆட்சி செய்தது. இந்த கட்சி குறித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவதூராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க கோரி அக்கட்சியின் இளைஞர் அணி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பதி கோவிலில் கூடுதல் விலைக்கு லட்டு டோக்கன் விற்றவர் கைது

Posted: 05 Jun 2013 09:57 PM PDT

திருப்பதி கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்தி லட்டு பிரசாதங்களை கூடுதல் விலைக்கு விற்ற இடைத்தரகர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் அருள்குமார். பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் நேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் நின்ற பக்தர்களிடம் 20 ரூபாய் லட்டு டோக்கனை கூடுதல் விலைக்கு விற்றார். இதனை கண்காணித்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 24 லட்டு டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டது

ஜெகன்மோகன் ரெட்டி நாளை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்

Posted: 05 Jun 2013 09:42 PM PDT

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது 5 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு வருடத்துக்கு மேலாக ஐதராபாத் சஞ்சலகுடா சிறையில் விசாரணை கைதியாகவே உள்ளார். வீடியோகான்பரன்சிங் மூலம் அவரது நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வந்தது. கடைசியாக ஜெகன்மோகன் ரெட்டியின் காவல் வருகிற 17-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெகன்மோகன் மீது தாக்கல்

ஸ்ரீசாந்த் பணத்துக்கு ஆசைப்படுபவர் அல்ல: தாய் கண்ணீர் பேட்டி

Posted: 05 Jun 2013 09:34 PM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை ஸ்ரீசாந்துக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் மராட்டிய மாநில அரசும் ஸ்ரீசாந்த் மீது மொக்கா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஸ்ரீசாந்த் கேரளாவைச் சேர்ந்தவர். அவரது தந்தை சாந்தகுமாரன் நாயர், தாய் சாவித்திரிதேவி. இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார்கள். ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டது பற்றி அவரது தாய் சாவித்திரி தேவி கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நரேந்திர மோடிக்கு பிரசார குழு தலைவர் பதவி

Posted: 05 Jun 2013 09:10 PM PDT

குஜராத் மாநில சட்ட சபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நரேந்திர மோடியின் தீர்க்கதரிசனமான செயல்பாடுகளும், மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் குஜராத்தை தாண்டி நாடெங்கும் வரவேற்பை பெற்றுள்ளது. நரேந்திர மோடிக்கு நாடெங்கும் செல்வாக்கு உருவாகி இருப்பதால், அவரை பா.ஜ.க. சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தோழமை கட்சித் தலைவரான ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முதல்-மந்திரியுமான நிதீஷ்குமார் கடுமையாக எதிர்த்தார்.

உத்திர பிரதேசம்: நேபாளதிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த 3 பேர் கைது

Posted: 05 Jun 2013 09:03 PM PDT

உத்திரபிரதேச மாநிலத்தில் நேற்று நேபாள நாட்டிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். உத்திர பிரதேசம் பக்ரைச் மாவட்டத்தில் அவர்களை கைது செய்த போலீஸ், அவர்களிடம் விசாரணை நடத்தியது.

சுற்றுச்சூழல் அமைச்சகம், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்காது: மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன்

Posted: 05 Jun 2013 07:55 PM PDT

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டது. இதையட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டின் வளர்ச்சிப்பாதைக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு தடையாக இருக்காது. அதே நேரத்தில், சுற்றுச்சூழல் இல்லாமல் எந்தவொரு வளர்ச்சியையும் அடைந்து விட முடியாது. சுற்றுச்சூழல் அனுமதிக்காக ஒரு திட்டம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த திட்டத்துக்கு என்று ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்: பா.ஜ.க. அறிவிப்பு

Posted: 05 Jun 2013 04:54 PM PDT

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்(88) உடல்நிலை குன்றிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக புதுடெல்லி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் நேற்று வதந்திகள் பரவின. அவரது நலவிரும்பிகள் பலர் பா.ஜ.க. தலைமை அலுவலகங்களுக்கு போன் செய்து வாஜ்பாய்க்கு

குஜராத்: வறுமை தாங்காமல் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Posted: 05 Jun 2013 02:49 PM PDT

குஜராத் மாநிலம் பவா நகரை சேர்ந்த இளம் விதவை, ஆஷா பர்மர்(35). காச நோயால் பாதிக்கப்பட்ட இவரது கணவர் சமீபத்தில் மரணமடைந்தார். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவரின் மரணத்திற்கு பிறகு யாருடைய உதவியும் கிடைக்காமல் பிள்ளைகளை வளர்க்க ஆஷா மிகவும் சிரமப்பட்டு

நாடு தழுவிய அளவில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2ம் இடம்

Posted: 05 Jun 2013 01:37 PM PDT

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடெங்கிலும் 86 கோடியே 16 லட்சம் மக்கள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான செல்போன் வாடிக்கையாளர்கள்

முன்னாள் மந்திரியாக இருந்தார் என்பதற்காக அரசின் செலவில் பாதுகாப்பு வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

Posted: 05 Jun 2013 12:57 PM PDT

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது மாயாவதியின் அமைச்சரவையில் மந்திரியாக பதவி வகித்தவர் ராம்வீர் உபாத்யாய். மந்திரியாக இருந்தபோது இவருக்கு 'ஒய்' பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது

பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும்: மம்தா நம்பிக்கை

Posted: 05 Jun 2013 12:26 PM PDT

மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெட்ரோல், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின்

பார்வையற்ற 14 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் கைது

Posted: 05 Jun 2013 12:09 PM PDT

குஜராத் மாநிலம், ஒதாவ் பகுதியை சேர்ந்த பார்வையற்ற 14 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவுக்கு மேல் அந்த மாடிக்கு வந்த மணிஷ் பர்மர்(25) என்பவன் சிறுமியின் வாயை துணியால் அடைத்து

பெங்களூரில் சங்கிலியால் கட்டி சிறைவைக்கப்பட்ட முதியவர் மீட்பு

Posted: 05 Jun 2013 08:47 AM PDT

பெங்களூர் பனசங்கரி நகரை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவரை, அவரது மகன் கடந்த 7 மாதமாக செயினால் கட்டி சித்ரவதை செய்வதாக போலீசாருக்கு செய்தி வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரை மீட்டனர். பிறகு உடனடியாக அவர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை எதிர்த்தால் நாடு கடும் விளைவுகளை சந்திக்கும்: சிதம்பரம் எச்சரிக்கை

Posted: 05 Jun 2013 07:23 AM PDT

உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல் அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். ஆனால் இந்த தேசிய தீவிரவாத தடுப்பு மையம் நாட்டில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பு

சண்டிகரில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி

Posted: 05 Jun 2013 06:47 AM PDT

பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின்போது, டான் டரன் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுக்ராஜ் சிங் பகூர்பூர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்யாத மாநில அரசைக் கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சண்டிகரில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் அரசியல் கட்சிகளை சேர்க்க மம்தா ஆதரவு

Posted: 05 Jun 2013 05:46 AM PDT

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளையும் கொண்டு வருவதற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரசியல் கட்சிகளின் வரவு-செலவு கணக்குகள், நன்கொடைகள் ஆகியவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பொதுமக்கள் கேட்டுப் பெற முடியும். தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ்

பீகாரில் மின்னல் தாக்கி இறந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

Posted: 05 Jun 2013 04:51 AM PDT

வடமாநிலங்களான இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நேற்று இடியுடன் கூடிய கன மழை பெய்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் இந்த பருவ மழையின் போது பீகாரில் மின்னல் தாக்குவது வழக்கமான ஒன்று என்று சொல்லப்படுகிறது.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஏற்படுத்த மோடி எதிர்ப்பு

Posted: 05 Jun 2013 04:40 AM PDT

ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தபோது தேசிய தீவிரவாத தடுப்பு மையம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இது அவசியம் ஏற்படும்போது மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் செய்திகள் வெளியாவதை தடுத்து தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வழி வகை செய்கிறது.

ராஜ்நாத் சிங்-அத்வானியுடன் மோடி சந்திப்பு: பா.ஜனதாவில் புதிய திருப்பம்

Posted: 05 Jun 2013 04:23 AM PDT

முதல்வர் மாநாட்டில் பங்கேற்க சென்ற குஜராத் முதல்வர் மோடி, இன்று டெல்லியில் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அப்போது பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பா.ஜனதாவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது குஜராத் இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு மோடிக்கு, ராஜ்நாத் சிங் வாழ்த்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™