Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


யார் இவ‌ள் என் விழியில்.....!

Posted: 20 Jun 2013 03:19 PM PDT

வளையல் சத்தம்... கேட்ட போது. திரும்பிப் பார்த்தேன். அழகி ஒருத்தி..._ என்னை அழைத்த விதத்தை வியர்ந்து பார்த்தேன். வழி தவறி வந்த பார்வையா...? என்னை வாழ வைக்க வந்த பாவையா...? திசை மாறிப் போகும் என் கால்க‌ள். பசை போட்டு ஒட்டிவிட்டால் ஒரு நொடியில். யார் இவ‌ள் என் விழியில்... யார் இவ‌ள் என் வழியில்...! தேன் மொழியில் வ‌ரும் வார்த்தை தென்ற‌லால் ம‌ய‌ங்கி கேட்க‌வில்லை என் செவியில். உன் உத‌டுக‌ளால் உலாவும் அசைவுக‌ள். உத‌ய‌மாகி உல‌கையே குளிர‌ வைக்கின்ற‌து என் எதிரில். யார் இவ‌ள் என் ...

நீங்களும் பாருங்கள்

Posted: 20 Jun 2013 01:14 PM PDT

உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Posted: 20 Jun 2013 12:58 PM PDT

உன்னை பிடிக்கும் வரை   உன்விழிகள் என்னோடு   உறவாடியது எல்லாம் வாதமே உன்னை பிடித்த பிறகோ உன்விழிகள் என்னோடு உறவாடுவதோ  பிடிவாதமே .... உருக உருக உணர்த்திய   உந்தன்  காதலை நீயோ   உணர உணர மறந்தே என்னையோ உளற உளற வைத்தே   உதறி போனது  ஏனோ  ... உள்ளூரும்  உணர்வு நீ உள்  துடிக்கும் இதயமும்  நீ உறவென இருந்தவள்  நீ   உணர மட்டும் மறந்தது ஏனோ  .... உனக்காக உறவாடிய போது ஊமையாய்  இருந்த விழிகள் உதறி போன பின்பு ஏனோ   உருக உருக கண்ணீர் விடுகிறதே ! உன்னோடு  உள்ளம் பேசுதே ...

உலகின் பெரிய பாலைவனங்கள்,

Posted: 20 Jun 2013 12:22 PM PDT

உலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு, பரப்பளவு. (சதுரமைல்) 1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000 2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000 3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000 4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000 5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000 6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000 7.தக்லிமாகன் சீனா 1,40,000 8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000 9.தார் இந்தியா 1,00,000 10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000 thamilworld.com

அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்

Posted: 20 Jun 2013 12:18 PM PDT

ஐதராபாத் : அரசியலில் வளர்ச்சியை ஏற்படுத்துவோர் 2014ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது : என்னை பொறுத்த வரை அரசியல் என்பது 2 பிரிவுகளை கொண்டது; ஒன்று அரசியல் ரீதியான அரசியல்; மற்றொன்று வளர்ச்சி ரீதியிலான அரசியல்; நம் நாட்டில் 70 சதவீதம் அரசியல் சார்ந்த அரசியலே நடக்கிறது; 30 சதவீதம் மட்டுமே வளர்ச்சி சார்ந்த அரசியல் நடக்கிறது; இது எதிர்மறை ...

எச்சரிக்கை: வைரசுடன் வரும் PDF File -கள்

Posted: 20 Jun 2013 11:30 AM PDT

இணையத்தில் தற்போது பல வழிகளில் வைரஸ் பரவி வருகிறது. குறிப்பிட்ட தளங்களுக்கு செல்வதால், குறிப்பிட்ட File களை ஓபன் செய்வதால் என்று தொடரும் இந்த லிஸ்டில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒன்று மின்னஞ்சலில் வரும் PDF File கள். கடந்த இரண்டு வருடங்களில் இது அதிகமாகி வருகிறது. இதைப் பற்றி பார்ப்போம். இணையத்தில் நாம் பல இடங்களில் நம் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து வருகிறோம், அவற்றில் நம்பிக்கையற்ற பல தளங்கள் நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை பல தவறான நபர்களிடம் விற்று விடுகின்றன. அவ்வாறாக விற்கப்பட்ட ...

வாக்கிங் செல்லும்போது வயிறு வலிப்பது ஏன்?

Posted: 20 Jun 2013 11:26 AM PDT

எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார். பெப்டிக் அல்சர் என்பது என்ன? விவரிக்கவும். சாப்பிட்டு வயிறு காலியானவுடன் வலி ஏற்படும். இதற்கு பெப்டிக் அல்சர் என்று பெயர். இந்த பிரச்னைக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்து உணவு முறையில் மாற்றம் செய்து மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும். இரவில் குறைவாக சாப்பிடவேண்டும் என்று சொல்கிறார்கள் ஏன்? இரவு ...

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Posted: 20 Jun 2013 10:28 AM PDT

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும் திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் ...

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்

Posted: 20 Jun 2013 10:16 AM PDT

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி. போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர். சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். ...

சிரிங்க கொஞ்ச நேரம்

Posted: 20 Jun 2013 09:47 AM PDT

தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…? தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. *************** "டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?" "நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால நீங்க அடிமுட்டாள் சார்." *************** டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை. நிஜமாவா? ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான். **************** பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் ...

தேன் பட்டால் முடி நரைது விடும் என்பது உம்மையா ?

Posted: 20 Jun 2013 09:06 AM PDT

தேன் பட்டால் முடி நரைது விடும் என்பது உம்மையா ?

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

Posted: 20 Jun 2013 08:54 AM PDT

சில பயனுள்ள இனையத்தளங்கள்! சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdf http://www.tn.gov.in/appforms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-community.pdf 6) ...

பூமியை நோக்கி விழும் ரஷ்ய விண்கல் சிதைவுகள்

Posted: 20 Jun 2013 08:46 AM PDT

செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்டு தோல்வி கண்ட விண்கலமான புரோபொஸ் இரண்டு சனிக்கிழமை பூமியை நோக்கி விழ ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் நூற்றுக்கணக்கான மீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி விழும் இந்த விண்கலம் எச்சமயமும் எமது வளிமண்டலத்தில் நுழைந்து தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறலாம் என நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இதன்பிரகாரம் 200 கிலோகிராம் நிறையுடைய மேற்படி விண்கலம் 2030 துண்டுகளாக வெடித்துச் சிதறி பூமியின் மேற்பரப்பை வந்தடையவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு இந்த விண்கல ...

தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து

Posted: 20 Jun 2013 08:43 AM PDT

வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது. சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை. ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 20 Jun 2013 08:17 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!

Posted: 20 Jun 2013 08:14 AM PDT

விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் .



GT-P3100
ROM: Sungsonic™ HD

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Posted: 20 Jun 2013 08:05 AM PDT

ஈகரையில் ஆங்கிலத்தில் டைப் செய்து எண்டர் செய்து தமிழ் சொற்களை எழூதுகிறோம். அப்படி நாம் எழுதும் போது சில சொற்கள் சரியாக வராது. எடுத்துக்காட்டாக அறிஞர் என்ற சொல்லை எழுத "aringar" என்று டைப் செய்தால் அறிங்கர், ஆரிங்கர், அரிங்கார் என்று தான் வரும் (படத்தில் 1,2,3 பார்க்கவும்) அல்லது நாம் வேவேறு ஆங்கில சொற்கள் முறையை (aringhar, aringgar... என) டைப் செய்து பார்த்து அறிஞர் சொல்லை கொண்டுவரவேண்டும். இது போன்ற சொற்களை நாமே திருத்திக்கொள்ளும் வசதி தற்போது நாம் ஈகரையில் பயன்படுத்தும் கீபோர்டில் கிடைக்கிறது. ...

வெங்காயம், தக்காளி ரூ.30... மலிவு விலை காய்கறி கடையை திறந்து வைத்தார் ஜெயலலிதா

Posted: 20 Jun 2013 06:50 AM PDT

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று (20.6.2013) தலைமைச் செயலகத்தில் வீடியோ காண்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது: விவசாயிகளின் விளை நிலங்களிலிருந்தும், கூட்டுறவு சங்கங்களின் கொள்முதல் மையங்களிலிருந்தும் காய்கறிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து நேரிடையாக ஒவ்வொரு நாளும் கொள்முதல் ...

இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!

Posted: 20 Jun 2013 06:37 AM PDT

டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் அளவில் சரிந்துள்ளது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.93 என்ற நிலையை அடைந்துவிட்டது. அமெரிக்க நிதி நிலையை சீராக்க அந் நாட்டு அரசு சில திட்டங்களை நேற்று அறிவித்தது. அதன்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகளை அந் நாடு குறைக்கவுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது தவிர சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவதால் டாலர்களில் முதலீடு செய்வது (டாலர்களில் முதலீடு செய்யப்படும் பங்குகள்) அதிகரித்துள்ளது. ...

இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..

Posted: 20 Jun 2013 06:30 AM PDT

http://img580.imageshack.us/img580/5193/ypuk.jpg இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இருக்கட்டும். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் தினக்கூலி 200 ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் தெரிந்துகொள்வோம். ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் பெண்தான் ...

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Posted: 20 Jun 2013 06:04 AM PDT

ஸ்ரீரங்கம்-சென்னை கிளாசிக் சொகுசு பஸ்சை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இந்த பஸ்சில் ரெயில் - விமானங்களில் உள்ளது போல் உணவகம் மற்றும் கழிப்பறை வசதிகள் இடம் பெற்றுள்ளது. இப்போது கர்நாடக மாநில பஸ்களில் மட்டும் கழிப்பறை வசதியுடன் பஸ்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனையில் உணவகம் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு காலை 9 மணிக்கும், ...

பத்தாயிரம் பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதிற்கு வாழ்த்துகள்!

Posted: 20 Jun 2013 06:02 AM PDT


வாழ்த்துகள் நண்பா! மேலும் தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களாகட்டும்!

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம்

Posted: 20 Jun 2013 05:59 AM PDT

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆதரவோடு ஒரு கும்பல் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது என்று ஆசிய மனித உரிமை கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பிஎம்எல்-என் கட்சியின் ஆதரவுள்ள நில அதிபர் அப்துல் ராஷீத் என்பவரின் மகன் முகமது முனீர். அவரால் ஏவப்பட்ட அடியாட்கள் சிலர் கடந்த 3ம் தேதி இரவு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் ...

எனது 10000 -மாவது சிறப்பு பதிவு உலகின் முதல் 'விமான கார்' ஏலம் - ஆரம்ப விலை ரூ.5 1/2 கோடி

Posted: 20 Jun 2013 05:32 AM PDT

எனது 10000 -மாவது சிறப்பு பதிவு உலகின் முதல் 'விமான கார்' ஏலம் - ஆரம்ப விலை ரூ.5 1/2 கோடி லண்டன், ஜூன் 19- உலகின் முதல் விமான கார் இணைய தளம் மூலம் ஏலம் விடப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த மவுல்டன் டெய்லர் என்பவர் தரையிலும் ஓடி, ஆகாயத்திலும் பறக்கக்கூடிய இந்த விமான காரை 1949ம் ஆண்டு தயாரித்தார். 21 அடி நீளமுள்ள இந்த காரில் 2 பேர் அமரலாம். 4 சக்கரங்களை கொண்ட இந்த காரின் பின் சக்கரத்தின் மேற்பகுதியில் 0-320 'லைகமிங்' ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 100 மைல் வேகத்தில் ...

வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

Posted: 20 Jun 2013 05:25 AM PDT

புதுடில்லி: உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மீட்பு பணிகளி்ல் மந்தமாக செயல்பட்டதற்கு ‌சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தர்கண்ட் அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. உத்தர்கண்ட், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த, பேய் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை, 150 ஆக, அதிகரித்துள்ளது. புனித தலமான, கேதார்நாத்தில் மட்டும், 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்னும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நிலச்சரிவு, வெள்ளத்தில் ...

இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு

Posted: 20 Jun 2013 05:19 AM PDT

புதுடெல்லி, ஜூன் 20- அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம், முக்கிய இணைய நிறுவனங்களின் மூலம் இணையத்தில் உள்ளவர்களில் தகவல்களை ரகசியமாக பெற்றது சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபர் ஒபாமா இது போன்ற உளவு வேலைகளை செய்ததன் மூலம் பல தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதாக விளக்கம் அளித்தார். அதேபோன்று இந்தியாவும் தொலைபேசி மற்றும் இணைய பயன்பாட்டாளர்களின் நடவடிக்கையை கண்காணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 90 கோடி பேர் தொலைபேசி பயன்படுத்துகின்றனர். 12 கோடி ...

வேற்றுக்கிரக வாசிகளுக்கு மெசேஜ்: சக்தி வாய்ந்த ஆன்டெனா ரெடி

Posted: 20 Jun 2013 05:15 AM PDT

வாஷிங்டன்: வேற்றுக்கிரக வாசிகள் பறக்கும் தட்டில் வந்தார்கள், போனார்கள் என்று எத்தனை காலம்தான் வெட்டிக் கதை பேசுவது. வாருங்கள்.. எல்லாருமாக சேர்ந்து 'நாங்க பூமியில இருக்கோம்' என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்புவோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். பறக்கும் தட்டுகள் பறப்பதாகவும் வேற்றுக்கிரகவாசிகள் எட்டிப் பார்த்ததாகவும் உலகம் முழுவதும் அவ்வப்போது கதைகள் உலா வருகின்றன. மேலே இருந்து விழுந்து எரிந்த பறக்கும் தட்டில் இருந்து விழுந்து எரிந்து கருகிப்போன வேற்றுக்கிரக வாசியின் ...

விண்வெளியில் இருந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய சீன வீராங்கனை

Posted: 20 Jun 2013 05:14 AM PDT

சீனா கடந்த 11-ம் தேதி, 'ஷென்சு- 10' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இரண்டு விண்வெளி வீரர்களும், ஒருவீராங்கனையும் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு 15 நாட்கள் தங்கி ஆய்வுப்பணிகள் மேற்கொள்கிறார்கள். அதில் சென்றுள்ள வாங் யாபிங் என்ற சீன விண்வெளி வீராங்கனை ஆரம்ப மற்றம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அங்கிருந்தபடி இயற்பியல் வகுப்புகள் எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவர் நேற்று விண்வெளியில் உள்ள 'டியாங்காங்-1' ஆராய்ச்சி நிலையத்தில் இருந்தபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். ...

அவள் அப்படித்தான் !

Posted: 20 Jun 2013 05:09 AM PDT

தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு திரைப்படங்களைத் தவிர்த்து வாழ்வது மிகவும் கடினமான காரியம் . அந்த அளவிற்கு திரைப்படங்கள் நம் வாழ்வுடன் பிண்ணிப்  பிணைந்து உள்ளன . எந்த மாதிரியான படங்களை பார்க்க வேண்டும் என்பதை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன . இது ரசனை சார்ந்த விசயம் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்படியான திரைப்படம் இதுவரை எடுக்கப்படவில்லை .ஒருவருக்கு  பிடிக்கும் ஒரு திரைப்படம் மற்றவருக்கு பிடிக்காது . அவரவர்களுக்கு பிடிக்கும் படங்களைப் பார்க்க வேண்டியது தான் . ஒரு சிலருக்கு சிறுவயதில் பார்க்க ...

சொந்தக்கதை....சோகக்கதை.

Posted: 20 Jun 2013 05:08 AM PDT

எங்கள் அழகான தாய்நாட்டை.. நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம். என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது. எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம். விழித்தகண் விழித்ததுதான். - எங்கள் உடல் தான் கனடாவில். உயிர் எங்கள் தாய் மண்ணில்... மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை. நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை. சோகமான வாழ்க்கைதான். எங்கள் அம்மா, அப்பா, தம்பி. பெரியக்காவின் மகன்,மகள். சின்னக்காவின் மகன்.... இவர்கள் எல்லாம் எங்களை விட்டு இறைவனிடம் ...

புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு?

Posted: 20 Jun 2013 05:05 AM PDT

இதற்கு Windows இயங்கு தளத்திலே வசதியுள்ளது. Windows இல் இருக்கும் Command Prompt இனை பயன்படுத்தி எமது கணனியில் ஏராளமான விடயங்களை செய்யலாம். அந்தவகையில் புகைப்படத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஒரு புகைப்படத்தினுள் குறிப்பிட்ட செய்தி ஒன்றினை மறைப்பதற்கும் இதுவே உதவுகின்றது. இதற்கு உங்கள் கணனியில் இருக்கும் Command Prompt ஐ திறந்து கொள்ளுங்கள். (Command Prompt ஐ திறக்க, WinKey+R அழுத்துவதன் மூலம் Run ஐ திறக்கலாம் Run இல் cmd என தட்டச்சு செய்து Enter செய்யுங்கள்.) குறிப்பிட்ட புகைப்படத்தையும் ...

மோசடியில் இது புதுசு

Posted: 20 Jun 2013 05:02 AM PDT

சென்னை : ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதாக கூறி ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ.120 வீதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல். பொதுமக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கும் வகை யில் ஆதார் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையில் குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை, கண்விழி உள்ளிட்ட பதிவுகள், போட்டோ போன்றவை இடம் பெற்றிக்கும். ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் அடையாள ...

எமது நூல்கள் வெளியீட்டு விழா

Posted: 20 Jun 2013 04:33 AM PDT

ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம். யாம் தொகுத்து உருவாக்கிய "தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள்" தொகுதி – 1, தொகுதி – 2  ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவிற்கு சென்னை வாழ் ஈகரை நண்பர்களை அன்புடன் வரவேற்கின்றோம். விழா பற்றிய விபரங்கள் இடம்:- சென்னை, T.நகர், வாணிமகால் நாள்:- 21 – 06 – 2013, வெள்ளிக் கிழமை நேரம்:- மாலை 6-00 மணி முதல் பிரதி வெளியிடுபவர்:- S.P. முத்துராமன் (திரைப் பட இயக்குநர்) முதல் பிரதி பெறுபவர்:- நல்லி சில்க்ஸ் நல்லி குப்புசாமி செட்டியார் (குறிப்பு:- ...

கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக.

Posted: 20 Jun 2013 03:57 AM PDT

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு வெற்றிக் கனியை பறித்துக் கொடுக்க வேண்டும் என்பதில், தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு சந்தித்து பேசி, காங்கிரஸ் ஆதரவை நாடினார். சென்னையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மனிதநேய மக்கள் கட்சி(ம.ம.க.,) தலைவர்கள் சந்தித்து, தங்கள் கட்சியின் ஆதரவை தி.மு.க.,வுக்கு தெரிவித்தனர். சென்னை, மண்ணடியில் உள்ள ம.ம.க., அலுவலகத்திற்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, தி.மு.க., முன்னாள் ...

இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

Posted: 20 Jun 2013 03:44 AM PDT

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)


இனியவனின் திருக்குறள்-சென்ரியூ

எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -

வேலை பளுவால் அமைச்சர் மயக்கம்

Posted: 20 Jun 2013 03:38 AM PDT

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில், வேலைப் பளு காரணமாக, அலுவலகப் பணிகளில் ஈடுபட்டிருந்த, மாநில அமைச்சர் மயங்கி விழுந்தார். மாநில, விளையாட்டு, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராக இருப்பவர், சோடின்ட் லுவாங்கா. நேற்று, அலுவலக வேலைகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என, நினைத்த டாக்டர்கள், பரிசோதனை செய்தனர். ஆனால், அவ்வாறு எதுவும் இல்லை. வேலைப் பளு காரணமாக, சோர்வடைந்து விட்டதால், ...

நினைவுகள் போதும் என்கிறாய்..???

Posted: 20 Jun 2013 03:30 AM PDT

உடலாக இருந்த -நான்
உன் நினைவுகளால்
உருகி எலும்பாக
மாறிவிட்டேன்

உன் வாழ்க்கைக்காக
என் வாழ்க்கையை
தானமாக தருகிறேன்
பிழைத்து கொள்

காதலுக்கு காதலி
தேவையில்லை
நினைவுகள் போதும்
என்கிறாய் -நான்
என்ன செய்ய ....???

கஸல் ;160

பார்வை ...???

Posted: 20 Jun 2013 03:30 AM PDT

கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன்
என் உருவம் தெரிகிறது
என்னை மறந்ததும்
கண்ணாடி தெரிகிறது

மனிதரில் என்னைப் பார்க்கிறேன்
என் உணர்வுகள் தெரிகின்றன
என்னை மறந்ததும்
மனிதர்கள் தெரிகிறார்கள்

எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)

Posted: 20 Jun 2013 03:00 AM PDT

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!

(150 வரிகளைக்கொண்ட கவிதை தொடரும் )

சிந்தித்தாயா ....???

Posted: 20 Jun 2013 02:56 AM PDT

நான் வெறும் கடதாசி ..
நீ தான் அதில் உள்ள ..
கவிதை ..

நான் வெறும் ..
துரிகை -நீ தான்
அதில் ஓவியம்

நான் வெறும் உடல்
நீ தான் என் உயிர்
என்று இருந்தேன்
நீ பிரியப்போகிறாய்
என்கிறாயே -என்னை
பற்றி கொஞ்சமேனும்
சிந்தித்தாயா ....???

கஸல் ;159

அரைகுறை வெற்றி ....

Posted: 20 Jun 2013 02:55 AM PDT

அரைகுறை வெற்றியை விட ..
முழுமையான தோல்வி ..
வாழ்க்கையில் எவ்வளவோ ..
மேல் ....
அரைகுறை வெற்றி
காற்றில் அலைந்து திரியும்
பஞ்சைப்போன்றது..
கீழேயும் விழாது மேலேயும் ..
செல்லாது ...!!!
நிறைய வாழ்க்கையில் ..
அரைகுறை வெற்றியால் ..
முழுவெற்றியை இழக்கிறோம் ...
நிறைய மனிதர்கள் அரைகுறை ..
வெற்றியை முழுவெற்றியாக ..
கருதியே சாதனையை இழக்கிறார்கள் ...!!!


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™