Tamil News | Online Tamil News |
- ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு: தி.மு.க., - தே.மு.தி.க., கடும் மோதல்
- மத்திய அரசு திட்டங்களின் எண்ணிக்கை குறைப்பு: அமைச்சரவை அதிரடி முடிவு
- 20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்: ஆசிரியர் பயிற்சி படிப்பின் பரிதாப நிலை
- உத்தரகண்ட், இமாச்சலில் இறந்தோர் எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்வு
- செய்தித்துறை தவறான செய்தியை வெளியிட்டதா? அரசு விளக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி
- நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் சதி: சோனியா குற்றச்சாட்டு
- "ஆபரேஷன் அம்லா': கடலோர மாவட்டங்களில் போலீசார் திடீர் "ரெய்டு'
- சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்: செங்கோட்டை, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை மக்கள் "போட்டா போட்டி'
- மலிவு விலை காய்கறிக்கடைகள்: முதல்வர் துவக்கி வைத்தார்
- கடவுள் கருணையால் வீடு திரும்பினோம்: சென்னை திரும்பிய பக்தர்கள் பேட்டி
| ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு: தி.மு.க., - தே.மு.தி.க., கடும் மோதல் Posted: தமிழகத்தில், 17 ஆண்டுகளுக்கு பின் நடைபெறஉள்ள, ராஜ்யசபா தேர்தலில், ஆறு இடங்களுக்கு, ஏழு பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். ஐந்து இடங்களில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதால், ஆறாவது இடத்தை கைப்பற்ற, தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆதரவு யாருக்கு என்பது குறித்த முடிவு, இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால், "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, இம்மாதம், 27ம் தேதி, தேர்தல் நடைபெறஉள்ளது. அ.தி.மு.க., அணியில் ஐந்து வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. ஆறாவது எம்.பி., ... |
| மத்திய அரசு திட்டங்களின் எண்ணிக்கை குறைப்பு: அமைச்சரவை அதிரடி முடிவு Posted: மத்திய அரசின் திட்டப் பணிகளில், 10 சதவீதத்தை, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், மாநில அரசுகளே வடிவமைத்து செயல்படுத்த, மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது. அத்துடன், மத்திய அரசால் செயல்படுத்தப்படும், திட்டங்களின் எண்ணிக்கையை, 140லிருந்து, 66 ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. அமைச்சரவை கூட்டம்: மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய திட்ட கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா கூறியதாவது: "ஒவ்வொரு மாநிலத்திலும், நிலவும் ... |
| 20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்: ஆசிரியர் பயிற்சி படிப்பின் பரிதாப நிலை Posted: இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர். பயிற்சி நிறுவனங்கள்: தமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்காக, மே, 27 முதல், கடந்த, 12ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், அரசு ஆசிரியர் பயிற்சி ... |
| உத்தரகண்ட், இமாச்சலில் இறந்தோர் எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்வு Posted: டேராடூன்: உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில், கடந்த வாரம் பெய்த பேய் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, உயிரிழந்தோர் எண்ணிக்கை, பல ஆயிரத்தை தொடும் என அஞ்சப்படுகிறது. எனினும், பலியானோரைப் பற்றிக் கவலைப்படாமல், உயிருடன் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை மீட்கும் பணியில், இரு மாநில அரசுகளும், ராணுவமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. டில்லி உட்பட நாட்டின் வட மாநிலங்களில், கடந்த, 15ம் தேதி துவங்கிய தென் மேற்கு பருவ மழை, இவ்வளவு பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் என, யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். நான்கு மாத கடும் ... |
| செய்தித்துறை தவறான செய்தியை வெளியிட்டதா? அரசு விளக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி Posted: சென்னை: "பத்தாம் வகுப்பு மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் எடுத்த மாணவ, மாணவியருக்கு, முதல்வர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார் என, எழுதி, நடைபெற இல்லாத ஒரு நிகழ்ச்சியை நடைபெற்றதைப் போல செய்திக்குறிப்பு தயாரித்து அரசு வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க., அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பே, தவறான தகவலை தருமேயானால், பின் இதற்கு விமோசனம் தான் ஏது?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: "அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் சொதப்பல். தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ... |
| நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் சதி: சோனியா குற்றச்சாட்டு Posted: சூரத்கார் (ராஜஸ்தான்): ""ஆட்சி அதிகாரத்தை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக, நாட்டில், நிலையற்ற தன்மையை உருவாக்க, எதிர்க்கட்சிகள் முற்பட்டுள்ளன,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம், சூரத்காரில், இரண்டு மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய, காங்., தலைவர் சோனியா கூறியதாவது: நம் நாட்டில், யாரும் பசியுடன் தூங்கக் கூடாது என, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்புகிறது; அதற்காகவே, உணவு பாதுகாப்பு மசோதாவை உருவாக்கியுள்ளது. ஆனால், அந்த மசோதா நிறைவேற விடாமல், எதிர்க்கட்சிகள் தடை போடுகின்றன. எதிர்க்கட்சிகள் ... |
| "ஆபரேஷன் அம்லா': கடலோர மாவட்டங்களில் போலீசார் திடீர் "ரெய்டு' Posted: பாதுகாப்பு தொடர்பாக, தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட, "ஆபரேஷன் அம்லா' ஒத்திகை நிகழ்ச்சியில், பயங்கரவாதி போர்வையில் வந்த, 48 பேரை, போலீசார் பிடித்தனர். பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் விதமாகவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், ஆண்டுக்கு, இருமுறை, தமிழகம் முழுவதும், "ஆபரேஷன் அம்லா' என்ற பெயரில், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், பயங்கரவாதி போர்வையில், சாலை, கடல், விமான மார்க்கமாக, தமிழகத்திற்குள் ஊடுருவும், போலீசாரை, பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார், பிடிக்க வேண்டும். இந்த ஒத்திகையின் ... |
| சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்: செங்கோட்டை, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை மக்கள் "போட்டா போட்டி' Posted: "சென்னை எழும்பூர் - மானாமதுரை இடையே இயக்கப்பட உள்ள, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, செங்கோட்டை மற்றும் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டில், "சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். இந்த ரயில், வாரத்தில், இரண்டு நாட்களாக மாற்றி இயக்கப்படும்; மானாமதுரை வரை நீட்டிக்கப்படும்; வரும், 22ம் தேதி முதல், இந்த ரயில் போக்குவரத்து துவக்கப்படும்' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. "இந்த ரயில் சேவையை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்' என, செங்கோட்டை மக்களும், "தூத்துக்குடி வரை ... |
| மலிவு விலை காய்கறிக்கடைகள்: முதல்வர் துவக்கி வைத்தார் Posted: சென்னை: சட்டசபை வைரவிழா நினைவு வளைவு, நேற்று திறக்கப்பட்டது. அத்துடன், சென்னையில், 31 மலிவு விலை காய்கறி கடைகளையும், முதல்வர், ஜெ., துவக்கி வைத்தார். தமிழக சட்டசபை, 60 ஆண்டுகளை நிறைவு செய்தது. அதையொட்டி, சென்னை, கடற்கரை சாலையில், போர் நினைவுச்சின்னம் அருகே, 1.33 கோடி ரூபாய் மதிப்பில், நினைவு வளைவு அமைக்கப்பட்டது. இவ்வளைவு, 108 அடி அகலம், 54 அடி உயரம் கொண்டது. இதை நேற்று காலை, முதல்வர் திறந்து வைத்தார். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 31 மலிவு விலை காய்கறிக் கடைகளை, வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் நேற்று திறந்து வைத்தார். விவசாயிகளிடம், காய்கறிகளை ... |
| கடவுள் கருணையால் வீடு திரும்பினோம்: சென்னை திரும்பிய பக்தர்கள் பேட்டி Posted: சென்னை: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, நடு வழியில் சிக்கிய தமிழக பக்தர்களில், நான்கு பேர் நேற்றிரவு டில்லியிலிருந்து, சென்னைக்கு வந்தனர்.உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன், கடும் மழைப் பொழிவு ஏற்பட்டது. இதில், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் செல்லும் மலைப் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைப் போக்குவரத்து தடைபட்டது. இதில், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் சென்ற பக்தர்கள் பலர் நடுவழியிலேயே சிக்கிக் கொண்டனர். தமிழகத்திலிருந்து, யாத்திரை சென்ற பக்தர்களும் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 21,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |