Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!

Posted: 19 Jun 2013 01:39 PM PDT

ஆண்ட்ராய்டு ரூட்

Posted: 19 Jun 2013 01:29 PM PDT

Android Rooting என்றால் என்ன?                             கிட்டத்தட்ட அனைவரின் கையிலும்  இப்போது ஆண்ட்ராய்டு மொபைல்  தான் இருக்கும் .விலை குறைவு ,புதிய தொழில் நுட்பம் ஆகிய காரணங்கள் முக்கியமானவையாக இருக்கும் .இத்தகைய மொபைல்களில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் os ,version upgrade ,new applications  ,ரூட்   இதில் ரூட் பற்றிய தகவல்களை பார்க்கலாம் ,இதைபற்றி பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் ,சிலர் வாரண்டி காரணமாக ,பழுதாக வாய்ப்பு உள்ளதாக   பயன்படுத்துவதில்லை சுருங்க கூறுவதென்றால் ...

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Posted: 19 Jun 2013 01:26 PM PDT

தமிழ் கருத்துக்களங்களில் நாங்கள் தான் முன்னணியில் உள்ளோம், என ஓரிரு உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றுத்தனமாக பேசிக்கொண்டு திரியும் தளங்களையெல்லாம் புறந்தள்ளி எந்த ஆரவாரமும் இன்றி முன்னேறிவருகிறது நம் தளம். அதில் ஒரு சாதனையாக இன்றுடன் நமது தளத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்துள்ளது. ஈகரையின் வளர்ச்சியில் உறுதுணையாக நிற்கும், அட்மின்கள், நிர்வாக உறுப்பினர்கள், ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்! மேலும் ஈகரை பற்றியும், ...

"குடு குடு' மத்திய அமைச்சரவை

Posted: 19 Jun 2013 01:25 PM PDT

எல்லா கட்சிகளும், இளைஞர் அணி, இளைஞர் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை என "இள ரத்தத்தை' பாய்ச்சிக்கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில், வயதானவர்கள் நிறைய இடம் பெற்று, "தள்ளாடி'க்கொண்டு இருக்கிறது. கேபினட் அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட வயதானவர்களே அதிகம். இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் பட்டியலில் மட்டுமே, சற்று வயது குறைவானவர்கள் தென்படுகின்றனர்.கேபினட்டில் அதிக வயதானவராக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சிஷ்ராம் ...

பறையின் வகைகள்!

Posted: 19 Jun 2013 01:21 PM PDT

தமிழர்களின் தொன்மை இசைக் கருவியான பறை என்றால் நமக்கு தெரியும். அதில் எத்தனை வகை உண்டு என்பது பற்றி தெரியுமா ? பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு;- 1.அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை. அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688). 2.ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.[7] ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40). 3. உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு) 4.சாப்பறை - சாவில் அடிக்கப்படும் ...

பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்

Posted: 19 Jun 2013 01:19 PM PDT

இளம் தம்பதிகள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிசௌரி பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் பயிலும் ஆய்வு மாணவர் ரஸ்ஸல் கிளேட்டனும், ஹவாய் மற்றும் செயின்ட் மேரீஸ் பல்கலைகழக மாணவர்களும் சேர்ந்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு பேஸ்புக் பயன்படுத்தும் 18 முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம், எத்தனை நாளைக்கு ஒருமுறை பேஸ்புக்கை பயன்படுத்துவீர்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்கள், ...

சித்தர்களை தெரிந்துகொள்வோம்

Posted: 19 Jun 2013 01:19 PM PDT

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே.." என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் ...

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...

Posted: 19 Jun 2013 01:18 PM PDT



நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.

தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.

பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.

குருவை வணங்கக் கூசி நிற்காதே.

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?

Posted: 19 Jun 2013 01:16 PM PDT

கருத்தம முனிவரின் மகளான அருந்ததி வசிஷ்டரின் மனைவியானாள். நூறு பிள்ளைகளின் தாய். சப்தரிஷி மண்டலம் என்னும் ஏழுநட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் அருகருகே இருப்பதாக ஐதீகம். திருமணச்சடங்கின் போது, மணமகனும் மணமகளும் அக்னியை மூன்று முறை வலம் வந்து, பதிவிரதையான அருந்ததியையும், வசிஷ்டரையும் வானத்தை நோக்கி வணங்குவது வழக்கம். சிவபெருமான் திகம்பரர் என்னும் பெயரில், பெண்களின் மனதை மயக்கும் அழகுடன் தாருகாவனத்திற்கு வந்தார். அப்போது ரிஷிபத்தினிகள், தாங்கள் திருமணமானவர்கள் என்பதையும் மறந்து ...

மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு

Posted: 19 Jun 2013 01:11 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் ஏற்கெனவே அதிமுக சார்பில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும், அதிமுகவின் ஆதரவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், திமுக வேட்பாளராக கனிமொழியை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்கப் போதுமான சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ...

உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!

Posted: 19 Jun 2013 01:04 PM PDT

டேராடூன்: பெருமழை மற்றும் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். உத்தர்காண்ட் மாநிலமே வெள்ளக்காடாகி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். புனித யாத்திரை தலங்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் நாடு முழுவதும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆங்காங்கே மலைப் பகுதிகளில் தவியாய் தவித்து வருகின்றனர். இம்மாநிலத்தின் புனித தலமான கேதர்நாத் முற்றிலும் நிலைகுலைந்து போய்கிடக்கிறது. வெள்ளம்..பேரழிவு..உத்தர்காண்ட் ...

தோஷம்! சந்தோஷம்!

Posted: 19 Jun 2013 12:56 PM PDT

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் வித்வான் வேடத்தில் தோன்றினார். வித்வானுடைய மனைவியாக வந்த நடிகை அவரைக் கொஞ்சம் திண்டாட விட வேண்டும் என்று எண்ணி,""ஏன்னா, நீங்களும் பல ராஜாக்கள் கிட்டே சன்மானம், சால்வையெல்லாம் வாங்கிண்டு வந்துட்டேள். பெரிய வித்துவான்னு பேரும் வந்துடுத்து. ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம். தோஷம் என்கிற வார்த்தைக்கும், சந்தோஷம் என்கிற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்கோ! பார்க்கலாம்!'' என்றாள். ஒரு நிமிஷம் யோசித்தார் என்.எஸ்.கே. ""அடியே, நீ கேட்ட இந்தக் கேள்விக்கு ...

வாழை இலை

Posted: 19 Jun 2013 12:54 PM PDT

யார் வாழை இலையிலேயே சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாக புராண வரலாறு. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிடும் பழக்கம் மேற்கொள்ள வேண்டும். இதில் சாப்பிடுபவர்கள் லட்சுமி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையிலேயே சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த சிலேத்தும வியாதிகள் தணியும். ஆறாத ரணங்களுக்கு மெல்லிய துணியில் தேங்காய் எண்ணெய்யைத் ...

கீதையின் பெருமை

Posted: 19 Jun 2013 12:51 PM PDT

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் சமஸ்கிருதம் பயின்றவர். பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் முன்னுரையில் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்: ""இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிடலாம். ஆனால் இந்தியாவில் உதித்த இந்த பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்தும் அதன் மக்களும் கடைப்பிடித்தால் நிச்சயம் மேன்மையுறலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!

Posted: 19 Jun 2013 12:46 PM PDT

உள்ளடங்கிய கிராமம் அது. அங்கே, ஏதோ பேருக்கு அமைக்கப்பட்டதுபோல் கருங்கல் சுவரும் விமானமும் உடைய கோயில். முன்மண்டபத்தில் வெயிலுக்காக ஒதுங்கியிருக்கும் சில பெரியவர்கள். ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள். அர்த்த மண்டபம், சாவகாச மண்டபத்தைத் தாண்டினால் கருவறை உள்ளே ஓர் ஊஞ்சல் கிரீடம், நெற்றியில் நாமம், விழித்த விழிகள், முறுக்கிய மீசை, வெளித் தெரியும் கடித்த பற்களுடன் கழுத்தளவு உருவம் கொண்டு அதில் ஆடிக்கொண்டிருக்கிறது கூத்தாண்டவராகிய அந்தத் தெய்வம். வேறு சன்னதியோ பரிவார ...

ஏன் தேங்காய் உடைக்கிறோம்?

Posted: 19 Jun 2013 12:44 PM PDT

திருமண வீடுகளில் விருந்தினர் விடைபெறும்போது, அவர்களுக்கு தேங்காய்ப் பை கொடுப்பது வழக்கம். மங்கலத்தின் சின்னம் தேங்காய். அர்ச்சனைத் தட்டில் தேங்காய்தான் பிரதானம், பூ, பழம், இரண்டாமிடம்தான். தமிழகம் மட்டுமின்றி, பாரதம் முழுக்க உள்ள எல்லா கோயில்களிலும் நைவேத்தியப் பொருளில் தேங்காய் முக்கிய இடம் பெறுவதிலிருந்தே, தொன்மை காலம் முதலே இறைவழிபாட்டில் தேங்காய் இடம் பெற்று வந்திருப்பது தெரிகிறது. இறை வழிபாட்டில் மட்டுமின்றி, ஆன்மிக சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களிலும் தேங்காய்க்கு சிறப்பிடம் ...

வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...

Posted: 19 Jun 2013 12:39 PM PDT

ரிசர்வ் வங்கி அண்மையில் ஒரு முக்கியமான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வங்கிகள் தங்களது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் "தனிப்பட்ட அடையாள எண்' (யுனீக் கஸ்டமர் ஐடென்டிஃபிகேஷன் கோடு) குறிப்பிட்ட கால வரம்புக்குள் கொடுத்திட வேண்டும் என்பதே அது. ஏற்கெனவே, இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) "ஆதார்' அட்டையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கத் தொடங்கிவிட்டது. அந்த அட்டையில், இரண்டு செய்திகள் காணப்படுகின்றன. ஒன்று, "ஆதார்' நாடு முழுவதும் செல்லுபடியாகும். இரண்டு, ...

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!

Posted: 19 Jun 2013 12:39 PM PDT

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார். வில்லிப்புத்தூரார் ...

இன்று உலக அகதிகள் தினம்

Posted: 19 Jun 2013 12:36 PM PDT

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. சொந்த ...

கொடிது கொடிது வறுமை கொடிது

Posted: 19 Jun 2013 12:35 PM PDT

அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே பாலும் பழமும் வேண்டாம் தாயே பசிக்கு சோறு போட்டால் போதும்'' ஹைதர் காலத்து சினிமா பாட்டு. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த நானும் என் சகோதர சகோதரிகளுடன் - "கஸின்ஸ்' என்று நினைத்ததில்லை - இந்தப் பாட்டை பாடிக்கொண்டே இருப்போம். இந்தப் பாட்டின் பொருளைப் புரிந்து கொண்டோமா? அழுகை வரும். ஆனால், வறுமையின் முழுப்பரிமாணமும் புரிந்திருக்காது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பேராசிரியர் கூறினார் - ""சாலைகளில் பிச்சையெடுப்பவர்களைத் திருடர்களென்றும் சோம்பேறிகளென்றும் ...

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

Posted: 19 Jun 2013 12:32 PM PDT

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 'தமிழ்நாட்டுத் தொல்லியல் ...

பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!

Posted: 19 Jun 2013 12:26 PM PDT

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் முதல்வர்கள் மாநாடு தில்லியில் ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றபோது அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு முன்பு நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டின்போது தனது பேச்சிற்கு இடையே பிரதமர் குறுக்கிட்டு மணியடித்துப் பேச்சை முடிக்குமாறு தெரிவித்ததற்குக் கண்டனம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது நடைபெற்ற மாநாட்டிலும் ...

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

Posted: 19 Jun 2013 12:25 PM PDT

"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா" -புலவர் காளமேகம்- (1)காக்கைக்கா காகூகை = காக்கைக்கு ஆகா கூகை (2)கூகைக்கா காகாக்கை = கூகைக்கு ஆகா காக்கை பாடல் பொருள்: இரவில் காக்கைக்கு ஆகாது கூகை (ஆந்தை). அதாவது காக்கையும் கூகையும் பகையானவை. பகலில் கூகைக்குக் காக்கை ஆகாது. பகலில் காக்கை வலிமை பெறும். இரவில் கூகை வலிமை பெறும். அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப் போல காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இல்லையென்றால் ...

வெயிலின் அருமை வியாதியில் தெரியும்

Posted: 19 Jun 2013 12:24 PM PDT

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது, வெயிலின் பாதிப்பும் குறைந்துவிட்டது. மழை பெய்யாதா, குளிர்ந்த சூழல் வராதா என்றே ஏங்குகிறோம். ஆம்...இப்போதெல்லாம் நாம் அனைவருமே ஏப்ரல், மே வந்துவிட்டாலே மனதளவில் வெயிலை நினைத்து அஞ்சத் தொடங்கிவிடுகிறோம். வெயில் என்றாலே அதை எதிரிப்படையை விட கொடுமையானதாகவே நினைக்கிறோம். சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து திரிந்து உழைப்போர் இன்றைக்கும் நம்மில் இருக்கிறார்களே! அவர்கள் வெயிலை என்றைக்குமே வெறுத்ததில்லை. வெயில் வெறுக்கத்தக்கதும் அல்ல. வெயில் ...

சித்தர் பழமொழிகள்.

Posted: 19 Jun 2013 12:16 PM PDT

1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும். 5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும். 6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம் 1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும் உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் ...

அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!

Posted: 19 Jun 2013 12:04 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள், 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், பரிசுகளையும், முதல்வரின் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சி, சண்டை, சச்சரவு, குழப்பங்களுடன் முடிந்தது. முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், ...

அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 18

Posted: 19 Jun 2013 11:21 AM PDT

திருஷ்டி எப்படியும் நீ மறந்துவிடுவாய் என்று தெரிந்து உன் எலுமிச்சை நிறத்திற்கு கன்னக்குழி மச்சமும் காரிருள் கூந்தலுக்கு ஒரு வெண்ணிற முடியும் இயற்கையாக திருஷ்டி கழித்துக் கொண்டிருகிறது ! தவிப்பு சூறாவளிக்குள் சிக்கித் தவிக்கும் பூவிதழ்போல் என் பார்வையும் தவிக்கிறது உன் பார்வைக்குள்ளே ! தோகை கார்மேகக் கூட்டமோ கடும் வெயிலோ தோகையை விரித்தபடி பனை மரம் ! சிறை ஒரு சில வண்ணக் கலவையில் அடியில் இருந்து ஆழப்பாய்ந்து கொண்டிருக்கிறது அனல் குக்கர் சிறையிலிருந்து தப்பித்து ...

ஃபுக்குசீமா அணு ஆலை நிலத்தடி நீரில் கதிரியக்க நச்சுப் பொருள்

Posted: 19 Jun 2013 09:08 AM PDT

ஜப்பானில் சீர்குலைந்துபோன ஃபுக்குசீமா அணு ஆலையின் நிலத்தடி நீரில் உயர் நச்சு வாய்ந்த ஐசோதோப் ஸ்ரோண்டியம்-90 காணப்பட்டதாக அந்த ஆலையின் இயக்குனர்கள் ஒப்புக்கொண்டுளனர். அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் நச்சு ஸ்ரோண்டியம்-90 வேதிப் பொருளின் அளவு கடந்த ஆண்டின் இறுதி முதல் 100 மடங்கால் அதிகரித்திருப்பதாக, அந்த அணு ஆலையை நடத்திவந்த டோக்கியோ எலக்டிரிக் காப்பரேசனை சேர்ந்த அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளனர். இதன்படி பார்த்தால், உலைகளை குளிர் ஊட்டுவதற்கான நீர், நஞ்சடைந்த நிலையில், ...

அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

Posted: 19 Jun 2013 08:46 AM PDT

அன்பு வீசினாலே அடிமையாகும் எங்கள்மீது அமிலம் வீசினால் அடுக்குமா? சிதறி விழும் அமிலத்தால் சில நொடிகளில் சிதைந்து போகிறது முகம்! வாழும்வரை வதைந்து சாகிறது மனம்! கரையகற்றுவதுதானே அமிலத்தின் இயல்பு? கரைகள் உங்கள் மனதில் உறைந்திருக்க, அமிலத்தை எங்கள்மீது எறிவது எவ்விதத்தில் நியாயம்? காதல் மறுக்கும் முகங்களைக் கோரமாக்க நினைக்கும் உங்களில் எத்தனைபேர் காதலிக்கும் பெண்களையே தாரமாக்கத் தயாராயிருக்கிறீர்கள்? உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலெல்லாம் உறங்கிக் கிடக்கும் ...

உயிரே காதல் கவிதைகள்

Posted: 19 Jun 2013 08:44 AM PDT

காதலின் சின்னம் ரோஜா
காதலிக்க தெரியாத பெண்ணின்
கூந்தலில் இருப்பதை விட,
காதலிக்க தெரிந்த ஆணின்
கல்லறையில் இருப்பது மேலானது.!.!.!

நிறைவேற்றியே ஆகவேண்டும் ...!!!

Posted: 19 Jun 2013 08:38 AM PDT

மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே ஆகவேண்டும் ...!!!

புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Posted: 19 Jun 2013 08:37 AM PDT

புல் நுனியோடு  பேசிடும்   புத்தம் புது  பூங்காற்று  போலவே புன்னகையோடு  பேசிடும்   புத்தம் புது  மலர்  நீயோ  ... புதிது  புதிதாய்  பூக்கும் புன்னகை மலர்கள்  மணம் வீசும் புன்னகை பூத்திடும்  நீயோ புதிதாய்  என்  மனம் வீசுகிறாய் ஏனோ ! பூக்கள்  எல்லாம்  மெல்லமாய்   பூங்காற்று  முத்தமிடுகின்றன   புன்னகை  புரியும்  நீயோ   புயலாய்  யுத்தம்  புரிவது ஏனோ  ! புரியாத  மொழிகள் பேசிடும்   புது  மழலை போலவே  நீயோ   புன்னகையில் பேசிடும்  மொழிகள்  யாவும் புரியாத  புதிராய்  என்னுள்ளே ...

சின்ன கவிதை சில நேரங்க்களில் ...

Posted: 19 Jun 2013 08:00 AM PDT

மரணத்தை நோக்கி
நகரும் வாழ்க்கையில்
நம்மை வாழ சொல்லி
வற்புறுத்துவது
காதலும் நட்பும் தான்,
காதலை நேசி .......
.நட்பை சுவாசி........
வாழ்க்கை வசந்தம் ஆகும் ...!!!

காதலி எழுதும் கடிதம்...

Posted: 19 Jun 2013 07:57 AM PDT

அன்பே எனக்கு உன்னில் நல்ல நம்பிக்கை உள்ளது .. நீ என்னை வாழவைப்பாய் என்று ஆனாலும் உன்னை நான் சிறு சோதனை செய்யப்போகிறேன் உன் இதயத்தில் நான் எந்தளவுக்கு இடம் பிடித்திருக்கிறேன் என்று சோதிக்கப்போகிறேன் .உன் மூச்சாக நான் மாறி உன் இதயத்தை வந்து பார்க்க போகிறேன் ...... மூச்சாக மாறினால் அவன் இதயத்தில் புகுந்தாள் ...மூச்சடைக்க ஓடி வந்தாள் .... ஆம் அவன் ஒரு செயின் சுமோக்கற் (தொடர்ந்து புகைப்பவன் ) இதயம் முழுவதும் புகையும் காரியுமாக இருந்தது அப்புறம் எழுதிய கடிதம் தான் இது ...!!! அன்பே ..... என்னை ...

மறதியை மறந்தாலும் ....

Posted: 19 Jun 2013 07:54 AM PDT

கோபுர உச்சியில் உள்ள..
கலசம் போல் என் இதயத்தில் ..
இருக்கிறாய் ..

உன்னை மறக்க எவ்வளவோ ..
முயற்சிக்கிறேன் ..
மறதியை மறந்தாலும்
உன்னை மறக்க முடியவில்லை

உனக்கு தெரியும்
நீ
வெறும் கூடு
உன் இதயம்
உயிர் எல்லாம்
என்னிடம் தானே இருக்கிறது

கஸல் ;156

சுகம்!!!....சுகம்!!!...சுகம்!!!

Posted: 19 Jun 2013 07:53 AM PDT

காதல் கவிதைகள் உணர்ந்து உருகி படைத்துவிட்டு அவற்றின் பொருளானவளைத் தேடித் தவித்தல் ஒரு சுகம்! ********** தனிமையை உணர்த்தும் மாரிக்கால மாலையில் பேர் தெரியாத ஒரு மழலை சிந்திச் சென்ற பிரியச் சிரிப்பு ஒரு சுகம்! ************* அவசரமாய் அலுவலகம் செல்லும் காலை நேரம் சாலையோரம் பேருந்திற்காக காத்திருக்கும் இளம்பெண்ணின் மின்னல் பார்வை ஒரு சுகம்! *************** சிறுவயதில் பொருள் தெரியாமலே பரிச்சயமான ஒரு கண்ணதாசன் பாடல் இன்று அர்த்தம் விளங்குகையில் ஒரு சுகம்! ************** எதிர்பாராத ...

உலகின் 6 உண்மைகள் :

Posted: 19 Jun 2013 07:51 AM PDT

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது ! இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !.. மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால ! நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க ! ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க ! ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 19 Jun 2013 06:23 AM PDT

நான் ரசித்தவை - மது

Posted: 19 Jun 2013 06:21 AM PDT

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Posted: 19 Jun 2013 06:04 AM PDT

1. சில்லென்ற கால்கள் காரணம் - மதுக் கிண்ணத்தைத் தலைகீழாக பிடித்திருக்கிறீர்கள்....நீங்கள் ஊற்றும் மது உங்கள் காலில் விழுவதால் இது நேரிடுகிறது நிவாரணம் - கிண்ணத்தின் திறந்த பகுதி மேல் நோக்கி வரும்வரை திருப்பி பிடிக்கவும் 2. உங்கள் எதிரே இருக்கும் சுவர் முழுக்க கண்ணைப் பறிக்கும் விளக்குகள் காரணம் - ஏன்னா நீங்க தரையில மல்லாந்து கிடக்கிறீங்க நிவாரணம் - உங்கள் உடலை தரையிலிருந்து 90 டிகிரி கோணத்திற்கு திருப்பி நேராக நிற்கவும் 3. தரை மங்கலாகத் தெரிகிறது காரணம் - காலியான ...

திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்!

Posted: 19 Jun 2013 06:00 AM PDT

சென்னை மாவட்ட ஆட்சியராகவும், பண்டாரத் தலைவராகவும் விளங்கியவர் ·பிரான்சிஸ் வைட் எல்லீஸ். அவர் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்ற அறிஞர். திருக்குறள் அறத்துப்பாலை 1812ல் அவர் மொழிபெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும். அவர் தம் உரையில் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூற் பகுதிகளை மேற்கொள் காட்டியுள்ளார். கிடைக்காமல் அழிந்துபோன வளையாபதியிலிருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார். 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி ...

குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Posted: 19 Jun 2013 05:25 AM PDT

[img][/img][img][/img][img]URL=http://img59.imageshack.us/i/488a7dsc06913.jpg/][/URL][/img][img]URL=http://img59.imageshack.us/i/541g.jpg/][/URL][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img [img]URL=http://img440.imageshack.us/i/rubberestateinkkdist.jpg/][/URL][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img][/img] [img]ஜெயின் குகை கோவில் - சிதறால் வட்ட கோட்டை முட்டம் ...

புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி

Posted: 19 Jun 2013 04:27 AM PDT

புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மாணவர்கள்,டிரைவர் உட்பட 8 பேர் பலியாயினர். அறந்தாங்கி சாலையில் வல்லந்திராக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சென்ற மினி ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர் . மேலும் 2 பேர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தினால் இந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இறந்த மாணவர்கள் பெயர் விவரம் ; புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ...

சிறந்த 3D (red and Cyan - anaglyph ) அசையும் படங்கள்

Posted: 19 Jun 2013 04:00 AM PDT

மிகச்சிறந்த anaglyph 3D  வீடியோக்கள். இவற்றைப்பார்பதற்கு சிவப்பு நீலம்கொண்ட விசேட கண்ணாடி தேவை.கண்ணாடி கண்ணாடிக்கடைகளில் விற்பனைக்குண்டு. இல்லாதவிடத்து நீங்களாகவே செய்துகொள்ளும் முறை கீழே தரப்படும் http://www.wikihow.com/Make-Your-Own-3D-Glasses


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™