மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் கிராமம் அடியோடு அழிந்தது: சாவு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும்
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு
- சூரியஒளி மின்சார திட்ட மோசடி: பிஜு ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி
- ஆந்திராவில் செக்ஸ் தொல்லையால் மாணவி தற்கொலை
- திருப்பதி கோவிலில் 3 நாள் சேஷ்டாபிஷேகம் தொடங்கியது: கட்டண சேவைகள் ரத்து
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் ஆந்திர பக்தர்கள் 2350 பேர் தவிப்பு: ஹெலிகாப்டர் மூலம் 800 பேர் மீட்பு
- அமர்நாத் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து: உள்துறை மந்திரி ஷிண்டே
- பா.ஜனதா இந்துத்துவாவை பின்பற்றும் வரை எங்கள் கூட்டணி தொடரும்: உத்தவ் தாக்ரே
- மோடியை முன்னிலைப்படுத்த அத்வானி அவமானப்படுத்தப்படுகிறார்: அத்வானி நண்பர் குற்றச்சாட்டு
- டெல்லி: சோனியாகாந்தியுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு
- ஷீலா தீட்சித் மருமகள் போல் நடித்து வைர வியாபாரியை ஏமாற்ற முயன்ற பெண் கைது
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திரிபுரா பயணம்
- லண்டன் விம்பிள்டன் போட்டியில் 'பூவா? தலையா?' போடும் பாக்கியம் பெற்ற இந்திய சிறுமி
- ஜனாதிபதி மாளிகை ஊழியர்களின் குழந்தைகளுக்கு நவீன விளையாட்டு வளாகம்: பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்
- நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமர் பதவி விலக வேண்டும்: பாரதீய ஜனதா
- அசாமில் பெண்களை கற்பழிக்கும் ‘நிர்வாண மனிதர்கள்’ வதந்தியால் 3 பேர் அடித்துக்கொலை
- கனமழையால் கேதார்நாத் கோவிலுக்கு பாதிப்பு இல்லை: முதல்வர் விஜய் பகுகுணா
- என்னை கொல்ல மார்க்சிஸ்ட்-மாவோயிஸ்டுகள் கூட்டு சதி: மம்தா பானர்ஜி
- உகாண்டா எம்.பி. மீது நடவடிக்கை: மும்பை போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
- உத்தரகாண்ட் மாநில வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: பிரதமர்
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் கிராமம் அடியோடு அழிந்தது: சாவு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் Posted: 19 Jun 2013 11:11 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இமயமலையே அதிரும் வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோரத்தில் இருந்த வீடுகள் அடுக்கு மாடி கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கேதாநாத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து புனித யாத்திரை சென்றனர். அவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.சாலைகள் துண்டிக்கப்பட்டதால் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். வெளியூர் சுற்றுலாப் பயணிகளை மீட்டு அழைத்து வருவதற்காக 13 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மலைப்பகுதியில் சிக்கிக் |
| அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு Posted: 19 Jun 2013 10:46 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்து சில தினங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. |
| சூரியஒளி மின்சார திட்ட மோசடி: பிஜு ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 19 Jun 2013 10:37 PM PDT சூரிய ஒளி மூலம் மின்சார வசதி பெறும் 'சோலார் சிஸ்டம்ஸ்' என்ற கம்பெனி நடத்தி பலரிடம் லட்சக்கணக்' கில் பணம் வசூலித்து கொண்டு சூரிய மின்சாரக் கருவி அமைத்துக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கேரளாவைச் சேர்ந்த பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2-வது மனைவி சரிதா எஸ்.நாயர் |
| ஆந்திராவில் செக்ஸ் தொல்லையால் மாணவி தற்கொலை Posted: 19 Jun 2013 10:37 PM PDT ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கொல்லா மண்டலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசராவ். இவரது மகள் மவுனிகா (வயது 18) கம்மம்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மவுனிகாவுக்கு அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சந்திரசேகர் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். நேற்று செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இதனால் அவமானம் அடைந்த மவுனிகா இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு |
| திருப்பதி கோவிலில் 3 நாள் சேஷ்டாபிஷேகம் தொடங்கியது: கட்டண சேவைகள் ரத்து Posted: 19 Jun 2013 10:29 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி சிலைகளுக்கு பாதிப்பு வராமல் தடுக்க ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3 நாட்கள் தங்க கவசம் நீக்கப்பட்டு மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுவது உண்டு. அபிதேயக சேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கியது. |
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் ஆந்திர பக்தர்கள் 2350 பேர் தவிப்பு: ஹெலிகாப்டர் மூலம் 800 பேர் மீட்பு Posted: 19 Jun 2013 10:06 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த பலத்த மழையால் மாநிலமே உருக்குலைந்து போனது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவாலும், ஆற்றில் வெள்ளப்பெருக்காலும், சாலைகள் துண்டிக்கப்பட்டதிலும் பலர் பலியானார்கள். அங்குள்ள கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட 72 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். வெள்ளத்தில் கேதர்நாத் கோவிலே மூழ்கியது. ஆந்திர மாநிலம் ஐதராபாத், கம்மம், ஸ்ரீகாகுளம், குண்டூர், கடப்பா, கர்னல், மகயூப்நகர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி கரீம்நகர், வரங்கல், அனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புனித யாத்திரை சென்றுள்ளனர். |
| அமர்நாத் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து: உள்துறை மந்திரி ஷிண்டே Posted: 19 Jun 2013 10:05 PM PDT காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோவிலில் இயற்கையாகவே பனிலிங்கம் தோன்றுவது வழக்கம். ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் பனிமலைப் பாதையில் பயணம் மேற்கொண்டு இந்த லிங்கத்தை தரிசித்து வருகிறார்கள். 2 மாதங்கள் மட்டுமே இந்தப் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு யாத்திரை வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் ராணுவ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:- |
| பா.ஜனதா இந்துத்துவாவை பின்பற்றும் வரை எங்கள் கூட்டணி தொடரும்: உத்தவ் தாக்ரே Posted: 19 Jun 2013 09:35 PM PDT சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. |
| மோடியை முன்னிலைப்படுத்த அத்வானி அவமானப்படுத்தப்படுகிறார்: அத்வானி நண்பர் குற்றச்சாட்டு Posted: 19 Jun 2013 09:09 PM PDT சர்வாதிகார மனப்போக்குடன் செயல்படும் நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார்; கட்சியைக் கட்டி வளர்த்த அத்வானி தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறார்" என அத்வானியின் நெருங்கிய நண்பரான சுதீந்திரா குல்கர்னி குற்றம்சாட்டியுள்ளார். அத்வானியின் அரசியல் ஆலோசகரும் அவரது நெருங்கிய நண்பருமான சுதீந்திரா குல்கர்னி இணையதளம் ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானிக்கு 85 வயது ஆகிவிட்டபோதிலும் இந்த நாட்டிற்கும் |
| டெல்லி: சோனியாகாந்தியுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு Posted: 19 Jun 2013 08:08 PM PDT தமிழகத்தில் இருந்து டெல்லி மேல்-சபை தேர்தலில் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட 4 வேட்பாளர்கள் தங்களுடைய 151 எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள். அத்துடன் கூட்டணி கட்சி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ராஜாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பதன் மூலம் 5-வது வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஆறாவது வேட்பாளர் பதவிக்கு தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர். |
| ஷீலா தீட்சித் மருமகள் போல் நடித்து வைர வியாபாரியை ஏமாற்ற முயன்ற பெண் கைது Posted: 19 Jun 2013 03:54 PM PDT டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் உள்ள பிரபல வைர வியாபாரிக்கு நேற்று முன்தினம் ஒரு போன் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் குரல், டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தின் மருமகள் மோனோ தீட்சித் பேசுவதாக கூறியது |
| ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திரிபுரா பயணம் Posted: 19 Jun 2013 02:33 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக இன்று திரிபுரா செல்கிறார். அகர்தலா நகராட்சி அளிக்கும் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் அவர், திரிபுரா மத்திய பல்கலைக் கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். நாளை (21ம் தேதி) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள |
| லண்டன் விம்பிள்டன் போட்டியில் 'பூவா? தலையா?' போடும் பாக்கியம் பெற்ற இந்திய சிறுமி Posted: 19 Jun 2013 02:01 PM PDT உலக புகழ் பெற்ற 'விம்பிள்டன்' ஆடவர் ஒற்றையர் போட்டி வரும் (ஜூலை) மாதம் 7ம் தேதி லண்டனில் உள்ள கிராண்ட் சென்டர் கோர்ட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் பந்தை அடிக்கும் வீரரை தேர்ந்தெடுப்பதற்காக, நாணயத்தை சுண்டி 'பூவா |
| ஜனாதிபதி மாளிகை ஊழியர்களின் குழந்தைகளுக்கு நவீன விளையாட்டு வளாகம்: பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார் Posted: 19 Jun 2013 10:56 AM PDT புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகள் விளையாட்டுகளில் பயிற்சியும், தேர்ச்சியும் பெற உதவிடும் வகையில், ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நவீன விளையாட்டு பயிற்சி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது |
| நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமர் பதவி விலக வேண்டும்: பாரதீய ஜனதா Posted: 19 Jun 2013 09:46 AM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பாரதீய ஜனதா செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறியதாவது:- பிரதமர் அலுவலக அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. அந்த அலுவலகத்தின் மீது விசாரணை |
| அசாமில் பெண்களை கற்பழிக்கும் ‘நிர்வாண மனிதர்கள்’ வதந்தியால் 3 பேர் அடித்துக்கொலை Posted: 19 Jun 2013 08:29 AM PDT அசாம் தேஜ்பூர் பகுதியில் ஆடையில்லா மனிதர்கள் பெண்களை கற்பழிக்கும் நோக்கில் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த வதந்தி பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவத்தொடங்கியது. இதனால் கிராம மக்கள் தங்களது பெண்களை காப்பாற்ற பயங்கர ஆயுதங்களுடன் இரவில் |
| கனமழையால் கேதார்நாத் கோவிலுக்கு பாதிப்பு இல்லை: முதல்வர் விஜய் பகுகுணா Posted: 19 Jun 2013 08:17 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இமயமலையில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதிக்கு சென்ற ஏராளமான பக்தர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் |
| என்னை கொல்ல மார்க்சிஸ்ட்-மாவோயிஸ்டுகள் கூட்டு சதி: மம்தா பானர்ஜி Posted: 19 Jun 2013 07:53 AM PDT மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி இன்று 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். |
| உகாண்டா எம்.பி. மீது நடவடிக்கை: மும்பை போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் Posted: 19 Jun 2013 06:16 AM PDT இந்திய கம்பெனி ஒன்றில் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்தியா வந்த உகாண்டாவின் எம்.பி. உள்பட மூன்று பேர் மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். மேலும் அவர்களின் பாஸ்போர்ட்டுகளையும் முடக்கி வைத்தனர். |
| உத்தரகாண்ட் மாநில வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: பிரதமர் Posted: 19 Jun 2013 06:07 AM PDT கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கன மழையால் உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகள், பள்ளத் தாக்குகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |