Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மூங்கில் காட்டில் 7-வது வகுப்பு மாணவி கற்பழித்து கொலை

Posted: 11 Jun 2013 11:18 PM PDT

ஏழாம் வகுப்பு மாணவியை கற்பழித்துக் கொன்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ள நாடியா மாவட்டம் மூங்கில் காட்டுப் புதருக்குள் 13 வயது மாணவியின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் குறைக்க சவூதி முடிவு: இந்தியா பேச்சு வார்த்தை

Posted: 11 Jun 2013 11:09 PM PDT

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் பயணம் தொடர்பாக இந்தியாவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. சவூதி அரேபியா, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பயணிகள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளிக்கிறது. தற்போது சவூதி அரசு இதில் 20

ஆலப்புழாவில் ஏரியில் படகு கவிழ்ந்து புதுமண தம்பதி பலி

Posted: 11 Jun 2013 09:56 PM PDT

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சாகர் (வயது 30). இவரது மனைவி நாகமணி (23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. சாகர் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நாகமணியும் என்ஜினீயரிங் படித்துள்ளார்

இன்று காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம்: 10 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்குமா?

Posted: 11 Jun 2013 09:52 PM PDT

தமிழ்நாட்டில் சாகுபடிக்காக காவிரியில் ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்த காவிரி மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக மத்திய நீர் வளத்துறை செயலாளர் எஸ்.கே.சர்க்கார் உள்ளார். காவிரி மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் கடந்த 1-ந்தேதி டெல்லியில் நடந்தது. அப்போது தமிழகம் சார்பில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் பருவமழை பெய்யாததால் தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனால் அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

திருவனந்தபுரத்தில் கள்ள நோட்டுகளுடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

Posted: 11 Jun 2013 09:44 PM PDT

கொல்லம் போலீசார் அங்குள்ள பஸ் நிலையத்தில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் நாகர்கோவிலை சேர்ந்த தங்கராஜ், தர்மபுரியை சேர்ந்த மணி என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கள்ள நோட்டு கும்பலை

மாவோயிஸ்டுகளை வேட்டையாட விஜயகுமார் தலைமையில் படை: மத்திய அரசு முடிவு

Posted: 11 Jun 2013 09:21 PM PDT

தமிழக போலீஸ் அதிகாரி விஜயகுமார். இவரது தலைமையிலான அதிரடிப்படை தமிழக-கர்நாடக எல்லையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிடிபடாமல் ஏராளமான கொலை மற்றும் சந்தன கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட வீரப்பனை வேட்டையாடியது. அதன்பிறகு அவர் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டைரக்டர் ஜெனரல் ஆனார். பணி ஓய்வு பெற்ற பின்பு 2012-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் முதன்மை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ஜார்க்கண்ட் மாநில கவர்னரின்

ஜூலை 1–ந்தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி

Posted: 11 Jun 2013 07:54 PM PDT

வளர்ந்து வரும் செல்போன் சந்தையை கருத்தில் கொண்டு, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்த உள்ளது. ஜூலை 1–ந் தேதி இந்த வசதி அமலுக்கு வருகிறது. இதற்கான பிரத்யேக எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிவிக்கும். இந்த வசதியை பயன்படுத்தி, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், தங்களது செல்போன் எண்ணையும், தாங்கள் கணக்கு வைத்துள்ள

இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வாடிக்கையாளர்கள்

Posted: 11 Jun 2013 03:46 PM PDT

புதுடெல்லி குர்கான் பகுதியில் லெம்ப்புருபப் அண்ட் கிட்சன் என்ற உணவகம் இயங்கிவருகின்றது. அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் உணவு அருந்த இளைஞர்கள் கும்பல் ஒன்று வந்துள்ளது. அன்றைய தின ஸ்பெஷல் உணவு வகையென விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஹவாய் நாட்டு உணவினை அந்த இளைஞர்கள் சாப்பிட்டுள்ளனர். பின்னர், நடந்த பணத் தகராறில் நிர்வாகத்தினர் காவல்துறையை அழைத்து அந்த

பெண் வி.ஐ.பி-க்களை காக்க முதல் சி.ஆர்.பி.எப். பெண் கமாண்டோக்கள் அறிமுகம்

Posted: 11 Jun 2013 02:15 PM PDT

தீவிரவாதிகளிடமிருந்து பெண் வி.ஐ.பி-க்களை பாதுகாக்கவும், பிணையக்கைதிகளாக பிடிபட்டுள்ளோர்களை மீட்கவும் அதிரடியாக செயல்படக்கூடிய நன்கு பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ள சி.ஆர்.பி.எப். பெண் கமாண்டோக்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டனர். குரேகானில் உள்ள கடார்பூர் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் இரண்டு

உ.பி. முன்னாள் மந்திரி- எம்.பி. மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

Posted: 11 Jun 2013 08:57 AM PDT

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ராம்வீர் உபாத்யாயா மற்றும் அவரது மனைவியும் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி.யுமான சீமா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராம்வீர் உபாத்யாயா மற்றும் அவரது மனைவி சீமா இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி மீரட்டில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திற்கு சென்று தங்கள் மகளுக்கு முதுகலை மருத்துவம் படிக்க சீட் கேட்டனர். இது தொடர்பாக பல்கலைக்கழக இயக்குனரை சந்திக்க விரும்பினர்.

வி.சி.சுக்லா மறைவு: சத்தீஸ்கரில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

Posted: 11 Jun 2013 08:52 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்குப் போராடிய முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், மத்திய பிரதேச கவர்னர் ராம் நரேஷ், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ''சிறந்த பாராளுமன்றவாதியும், சிறந்த நிர்வாகியும், சிறந்த ராஜதந்திரியுமான சுக்லா, நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் மதிப்புமிக்க பங்களிப்பை செய்துள்ளார். அவரது பங்களிப்பையும், பொதுவாழ்வில்

மோடி விவகாரத்தில் அத்வானி சமரசம்: ராஜினாமாவை வாபஸ் பெற முடிவு

Posted: 11 Jun 2013 06:21 AM PDT

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை விரும்பாத அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

சுவாமி சங்கர் தேவ் மாயம்: பாபா ராம்தேவை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு

Posted: 11 Jun 2013 05:35 AM PDT

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் கடந்த 2007ம் ஆண்டு காலை நேர நடைபயிற்சிக்கு சென்ற பிரபல ஆன்மிகவாதி சுவாமி சங்கர் தேவ் திடீரென்று மாயமானார். இச்சம்பவத்திற்கு சில தினங்களுக்கு பிறகு சுவாமி சங்கர் தேவை யாரோ கடத்தி விட்டார்கள் என்று அவருடன் திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளை மடத்தில் தங்கியிருந்த நண்பர் பாலகிருஷ்ணா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

பிரதமர் பதவிக்கான அத்வானியின் தகுதியை சந்தேகப்பட முடியாது: கந்தூரி

Posted: 11 Jun 2013 05:18 AM PDT

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிலைப்படுத்தும் பணிகளை ஆரம்பம் முதலே ஆதரிக்காமல் இருந்த அத்வானி, சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.

அசாமில் சிறையை உடைத்து 2 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted: 11 Jun 2013 04:59 AM PDT

அசாம் மாநிலம் ஹப்லாங் மத்திய சிறைச்சாலையில் இருந்து 2 கைதிகள் இன்று அதிகாலை தப்பி ஓடிவிட்டனர். நிழல் உலக குழுவான திமா தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த டேவிட் கெம்ப்ராய் என்ற ஆக்சன்

மழலையர் பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு பாடம்: லூதியானாவில் அறிமுகம்

Posted: 11 Jun 2013 03:49 AM PDT

பத்திரிகை செய்திகளில் தினமும் அரசியலுக்குப் பின்னர் இடம்பிடிப்பது பாலியல் பலாத்காரங்கள்தான். அதுவும், வயது வித்தியாசம் பாராமல் 80 வயது கிழவி முதல் பச்சிளம் குழந்தை வரை இந்த பாலியல் தொல்லை செய்திகளில் இடம் பெறுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, பல பள்ளிகளில் இப்போது சிறு வயதினருக்கு பாலியல் விழிப்புணர்வு குறித்து சிறப்பு வகுப்புகள் எடுக்கின்றனர். ஆரம்ப கட்டத்தில் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்போது நிலவி வரும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகங்கள் மழலையர் பள்ளியிலேயே இத்தகைய வகுப்புகளை நடத்தும் முயற்சியில்

அத்வானி விலகல்: பா.ஜனதாவுடன் உறவை மறுஆய்வு செய்கிறது ஐக்கிய ஜனதா தளம்

Posted: 11 Jun 2013 03:26 AM PDT

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த மூத்த தலைவர் அத்வானி, கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார். அவரை சமாதானம் செய்ய மூத்த

ராகுல் காந்தி 13-ம் தேதி அமேதி பயணம்

Posted: 11 Jun 2013 03:05 AM PDT

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி 13-ம் தேதி தனது சொந்த தொகுதியான அமேதிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சையின்போது செல்போன் உபயோகிப்பது அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

Posted: 11 Jun 2013 02:45 AM PDT

மருத்துவர் சமூகம் தங்களின் பராமரிப்பினாலும், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் நோயாளிகள் கவனிப்பு அதிகரித்துள்ளது என்று கூறலாம். ஆனால் அறுவை சிகிச்சை போன்ற முக்கிய நேரங்களிலும் இத்துறையைச் சார்ந்த சிலர் தங்களின் செல்போனை உபயோகப்படுத்தும் மனப்பான்மையில்தான் இருக்கின்றனர். டெல்லியைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று தங்களுடைய ஆய்வில் அறுவை சிகிச்சைகளின்போது சில மருத்துவர்கள், நர்சுகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்றோர் தங்களுடைய செல்போன் அழைப்புகளைத் தவிர்ப்பதில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்காக பேட்டி எடுத்ததில், 90 சதவிகித நர்சுகளும், 50 சதவிகித தொழில்நுட்ப உதவியாளர்களும் தங்களின் செல்போன் அழைப்பிற்கு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா மரணம்

Posted: 11 Jun 2013 02:39 AM PDT

கடந்த மாதம் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த வி.சி.சுக்லா (வயது 86) இன்று மரணம் அடைந்தார். காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 25-ந் தேதி மாவோயிஸ்டுகள் தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடலில் 3 குண்டுகள் பாய்ந்ததால் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். இதற்காக விமானத்தில் டெல்லி அருகே குர்கான் கொண்டு செல்லப்பட்டு மெஜந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேசன் மூலம் குண்டுகள் அகற்றப்பட்டன. மூச்சு திணறல் ஏற்பட்டு தொடர்ந்து அபாய கட்டத்தில் இருந்ததால் மருத்துவ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது சிறுநீரகங்கள் செயல் இழந்ததால்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™