விழியே பேசு... |
- தென் மாநிலங்களில் மின்வெட்டு அபாயம்
- அரவான் நஷ்டத்தை ராட்டினம் சரிகட்டிய கதை!!
- முல்லைப்பெரியாறை தொடர்ந்து கேரளாவின் அடுத்த வம்பு
- நடிகையின் இடுப்பில் டான்ஸ் மாஸ்டர்
- ராஜா வரவேற்பு - தி.மு.க., வருத்தம்
- பகலவன் படத்தில் விஜய் இல்லை சீமான் அறிவிப்பு
- அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு?
- நேட்டோ மாநாட்டில் ஒபாமாவின் உரையில் பாகிஸ்தான் அதிபரின் பெயர் இடம்பெறவில்லை
- இன்றைய செய்திகள் (21-05-2012)
- ஜெயலலிதாவின் ஜனாதிபதி வேட்பாளரை சொந்த கட்சியே ஆதரிக்கவில்லை
- ராட்டினம் திரைப்பட வீடியோ பாடல்கள்
- பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்க பராக் ஒபாமா மறுப்பு
- ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை!
- ஊட்டி, கொடைக்கானலுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு: அரசு
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்
- விஜயகாந்த் ஆதரவு கேட்டால் மேலிடம் முடிவு செய்யும்-தமிழக காங்கிரஸ்
- உலக செஸ் போட்டி 2012 : விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல் வெற்றி
- குடியரசு தின விழா பரேடில் நடிகர், நடிகைகள் டான்ஸ்... மத்திய அரசு முடிவு!
- இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா 2 வருடங்களுக்கு பிறகு விடுதலை
- கருத்துக் கணிப்பில் சோனியா, மன்மோகன், ராகுலை பின்னுக்கு தள்ளிய மோடி
- சித்தார்த், தனுசுடன் இணைத்து பேசுவதா?: ஸ்ருதிஹாசன் ஆவேசம்
- கறுப்பு பணம் பற்றிய வெள்ளை அறிக்கை: பிரணாப்முகர்ஜி தாக்கல் செய்தார்
- ஸ்ருதியால் தனுஷ் - ஐஸ்வர்யா சண்டை உண்மைத்தான்: கஸ்தூரிராஜா
- அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது உண்மைதான்-ஐபிஎல் வீரர் ஒப்புதல்
- என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள போலீஸ் திட்டம்-நடராஜன் அவசர வழக்கு
| தென் மாநிலங்களில் மின்வெட்டு அபாயம் Posted: 21 May 2012 08:43 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) கடந்த 30 நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாய நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக என்எல்சி விரிவாக்கம் செய்தபோது படிப்படியாக கடந்த 20 ஆண்டில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு நிலக்கரி வெட்டும் பணி, கண்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை எடுத்து சென்று மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லுதல் மற்றும் ஆபரேட்டர் பணியாகும். இவர்கள் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம், என்எல்சி ஒப்பந்த தொமுச, ஒப்பந்த பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ ஒப்பந்த சங்கம் என பல்வேறு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் 5 ஆயிரம் உறுப்பினர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்ப்பது, படிப்படியாக பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்பின்னர் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி 2010ம் ஆண்டு 39 நாள் தொடர் போராட்டம் நடத்தினர். மீண்டும் டெல்லியில் நடந்த முத்தரப்பு பேச்சில் முடிவு எட்டப்பட்டது. 2 வருடத்தில் 480 நாட்கள் பணி முடித்த அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என மீண்டும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றக்கோரி பல கட்ட போராட்டங்களை ஒப்பந்த தொழி லாளர் சங்கத்தினர் போ ராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போது பல கட்ட பேச்சு தோல்வியில் முடிந்து, போராட்டம் 30வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே என்எல்சி நிர்வாகம், தற்காலிகமாக புதிய தொழிலாளர் களை பணியில் ஈடுபடுத்தி யது. பணியில் போதிய அனுபவம் இல்லாததால் இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். நிரந்தர ஊழியர் தொழிற் சங்கமும் போராட்டத்தில் குதித்து உள்ளதால் என்எல்சியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது. லட்சம் டன் நிலக்கரி காலி: ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போது ஒரு லட்சம் டன் நிலக்கரி இருப்பில் சேமித்து வைக்கப்பட்டது. தினமும் 6 ஆயிரம் டன் முதல் 10 ஆயிரம் டன் வரை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால் அனைத்து காலியாகி விட்டது. தற்போது நிரந்தர தொழிலாளர்களை கொண்டு நிலக்கரி வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கவில்லை என என்எல்சி நிர்வாகம் கூறியுள்ளது. திடீரென மழை பெய்ததால் சுரங்கத்தில் நீர் சேர்ந்து மின்வெட்டும் பணி பாதிப்பாகும். ஆனால் நெய்வேலியில் கோடை மழையும் பெய்யவில்லை. 2490 மெகாவாட் உற்பத்தி: நெய்வேலி முதல் அனல்மின் நிலையத்தில் இருந்து 600 மெகாவாட், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் இருந்து 420 மெகாவாட், 2ம் அனல்மின் நிலையத்தில் இருந்து ஆயிரத்து 470 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி அனைத்தும் பெங்களூர் மத்திய தொகுப்புக்கு(கிரீடு) சென்று அங்கிருந்து தென் மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. போரா ட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தென் மாநிலங்களுக்கு வினியோகம் தடை படும் அபாய நிலை ஏற்படும் சூழல் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். |
| அரவான் நஷ்டத்தை ராட்டினம் சரிகட்டிய கதை!! Posted: 21 May 2012 08:39 PM PDT சமீபமாக அரவான் படத்தை வாங்கி வெளியிட்டு சற்றே கையை சுட்டுக் கொண்ட வேந்தர் மூவீஸ் எஸ்.மதன்., கடந்த வெள்ளியன்று வெளிவந்துள்ள புதுமுகங்களின் ராட்டினம் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பதின் மூலம் அரவான் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டி விடுவார் என்கின்றனர் ராட்டினம் பார்த்த கோடம்பாக்கத்தின்ர் பலரும்! படம் அத்தனை "நச்சென்று வந்திருப்பதாக கூறும் அவர்களுக்கு தெரியுமா? வேந்தர் மூவீஸ் எஸ்.மதனுக்கு முன்பே இந்தப்படத்தை அழகர்சாமியின் குதிரை மதன் வாங்கி வெளியிட பேசிவந்ததும் அவரை ஆஃப் செய்து வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் சுமார் 3 கோடி கொடுத்து ராட்டினம் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார் என்பதும். எப்படியோ அழகர்சாமியின் குதிரை நஷ்டத்தை சரிகட்ட வேண்டிய ராட்டினம், அரவான் நஷ்டத்தை சரிகட்ட இருக்கிறது அவ்வளவுதான்! அப்படித்தானே?! |
| முல்லைப்பெரியாறை தொடர்ந்து கேரளாவின் அடுத்த வம்பு Posted: 21 May 2012 08:22 PM PDT குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் உள்ள 6,566 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் 1958ம் ஆண்டு நெய்யாறு இடதுகரை சானல் அமைக்க இருமாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதனையடுத்து 1965ல் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 1970 வாக்கில் பணிகள் நிறைவு பெற்று தண்ணீரும் வழங்கப்பட்டு வந்தது. தமிழகம் மற்றும் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியே இருந்து வந்ததால் இதுதொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் போடப்படவில்லை. 2004ம் ஆண்டு வரை தண்ணீர் வழங்கிய கேரளா அதன் பின்னர் தண்ணீர் வழங்குவதை நிறுத்திவிட்டது. 2005ம் ஆண்டு முதல் கேரள சட்டசபையில் அனுமதி பெற்றே தண்ணீர் வழங்க முடியும் எனக்கூறி விட்டது. இதனால் குமரி விவசாயிகள் தண்ணீர்விட இரு மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அனைத்து கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எவ்வித பயனுமில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசும் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மூலம் பலமுறை கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கேரளம் பல்வேறு காரணங்களை கூறி தட்டி கழித்து வந்தது. இறுதியாக தமிழகம் கால்வாய் மற்றும் அணை பராமரிப்பிற்கு தேவையான நிதி தரவேண்டும். தண்ணீருக்கும் பணம் தரவேண்டும் எனக்கூறியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கிடையே தண்ணீர் வழங்கப்பட்டாலும் இதுவரை எந்த மாநிலமும் தண்ணீருக்கு பணம் கேட்டது இல்லை. இந்நிலையில் பராமரிப்பிற்கு தமிழக அரசு பராமரிப்பு நிதியை வழங்கத் தயார் என்ற போதிலும் கேரளா இதுவரை தண்ணீர் வழங்காமல் போக்குகாட்டி வருகிறது. இந்த கால்வாயில் 3 டி.எம்.சி தண்ணீர் தேவை என்ற நிலையில் ஒரு டி.எம்.சி அளவில் மட்டுமே தரமுடியும் எனவும் அதற்கும் பணம் வேண்டும் என ஒருபுறம் தகவல் பரவினாலும் இதுபற்றி அதிகார பூர்வமாக கேரளம் எதனையும் தெரிவிக்காமல் குழப்பம் ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றம் செல்ல முடியுமா? தமிழகம் , கேரளம் இடையே ஒப்பந்தம் இருந்தால் அதனை வைத்து உச்ச நீதிமன்றம் சென்று நியாயம் பெற்றிருக்க முடியும். ஆனால் முல்லைப்பெரியாறில் தனது உரிமைகளை விட்டு கொடுத்தது ஏமாந்தது போல் இதிலும் ஒப்பந்தம் இல்லை என்பதால் நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் நெய்யாறு நீர்பிடிப்பு பகுதி தமிழகத்திலும் உள்ளது. மேலும் நெய்யாறு இடதுகரை சானலில் கேரளத்திற்கு செல்லும் நீர் தமிழகத்தில் சிறிது தூரம் வந்து பின்னர் கேரளா செல்கிறது. இதனை தமிழகம் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திட்டம் என்ன கேரளாவிடம் கையேந்தாமல் மாற்றுத்திட்டங்களை செயல்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி குமரி மாவட்ட பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: * திற்பரப்பு அருவியிலிருந்து 8 கி.மீ தூரத்திற்கு கால்வாய் அமைத்து தாமிரபரணி ஆற்றின் ஒரு பகுதியை திருப்பிவிடலாம். * முல்லையாற்றில் பள்ளிகூட்டம் பகுதியில் தடுப்பணை அமைத்து அரை கி.மீ தூரமே உள்ள நெய்யாறு இடது கரை கிளை கால்வாயில் தண்ணீரை ரிவர்ஸ் முறையில் திருப்பிவிடலாம். (இத்திட்டத்தை குறைந்த செலவில், விரைவில், எளிதில் செயல்படுத்த முடியும்) * தாமிரபரணி ஆற்றிலிருந்து மின்சார நீரேற்றங்கள் (சம்ப்) அமைத்து தண்ணீரை விடலாம். 40 சதவீதம் தமிழக தண்ணீர் இதுபற்றி விஜயதரணி எம்.எல்.ஏ கூறியதாவது: விளவங்கோடு தொகுதியின் ஒரே நீராதாரம் கருத்தையாறு. நெய்யாறு அணைக்கு 40 சதவீதம் தண்ணீர் இங்கிருந்துதான் செல்கிறது. விவசாயத்திற்கு மட்டுமின்றி இதர தேவைகளுக்கும் தண்ணீர் தேவையிருப்பதால் மனிதாபிமானம் மற்றும் மனசாட்சிப்படியும், கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறியபடி இந்த கால்வாயில் தண்ணீர் விடவேண்டும். தற்போது தண்ணீர் விட்டால் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் விரிசலாகியுள்ள இருமாநில மக்களிடையே மீண்டும் நல்லுறவு ஏற்பட அடித்தளமாக இருக்கும். வழக்கு, கேரள எதிர்ப்பு எதுவும் இந்த கால்வாயில் தண்ணீர் விடுவதில் இல்லை என்பதால் உடனடியாக தண்ணீர் விடவேண்டும். இதன்மூலம் குறைந்தது 5 லட்சம் மக்கள் நேரடி பயன்பெறுவார்கள். |
| நடிகையின் இடுப்பில் டான்ஸ் மாஸ்டர் Posted: 21 May 2012 08:15 PM PDT "நான் குடியிருப்பது நுங்கம்பாக்கம்; என் தொழில் நடப்பது கோடம்பாக்கம் எனப் பாடியபடி, "பொம்மை நாய்கள் படத்திற்காக, குத்தாட்டம் போட்டுள்ளார், பாபிலோனா. அவருடன் இணைந்து ஆடியுள்ள நடன இயக்குனர் கொம்பு முருகன், இந்த பாடலில், ஒரு காட்சியில், பாபிலோனாவின் இடுப்பில், எகிறி குதித்து உட்கார்ந்துகொள்வாராம். சும்மா சொல்லக் கூடாது, 65 கிலோ எடையுள்ள அந்த டான்ஸ் மாஸ்டரை, தனது இடுப்பில் சுமந்தபடி, அசராமல் ஆட்டம் போட்டுள்ளார், பாபிலோனா. அம்மணியின் இந்த சாகசத்தை, கோடம்பாக்கமே மெச்சுகிறது. |
| ராஜா வரவேற்பு - தி.மு.க., வருத்தம் Posted: 21 May 2012 08:04 PM PDT ஸ்பெக்ட்ரம் ஊழலில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதும், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. கோர்ட்டிற்கு வெளியே, ராஜா ஆதரவாளர்கள் தி.மு.க., கொடியுடன் கோஷமிட்டனர். கருணாநிதி மற்றும் ராஜாவைத் தவிர, மற்ற வேறு யாருடைய பெயரும், இந்த பாராட்டு கோஷத்தில் சொல்லப்படவில்லை. சிறையிலிருந்து, ராஜா வீட்டிற்கு வந்ததும் கொடுக்கப்பட்ட வரவேற்பு, சொல்லி மாளாது. ஏதோ நாட்டிற்காக, பெரும் போராட்டத்தில் வெற்றி பெற்று வீடு திரும்புவது போல, ராஜாவிற்கு வரவேற்பு. டில்லி திருமணங்களில் பயன்படுத்தப்படும் மேள தாளங்கள் முழங்க, ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடித்துக் கொண்டேயிருக்க, வாண வேடிக்கைகள் வேறு! ராஜாவை சந்திக்க வந்த, தி.மு.க., எம்.பி.,க்களும், மற்ற தலைவர்களும் இந்த வரவேற்பைக் கண்டு முகம் சுளித்தனர். "ராஜாவிற்கு கிடைத்திருப்பது வெறும் ஜாமின். ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்துவிட்டது போல கொண்டாடுகின்றனரே' என, எம்.பி.,க்கள் வருத்தப்பட்டனர். "நம் ஊரில் என்ன வேண்டுமானாலும் கொண்டாடலாம், டில்லியில் அமுக்கி வாசிக்க வேண்டும். இந்த கொண்டாட்டங்கள், "டிவி'யில் காட்டப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நீதிபதி பார்த்தால் என்ன நினைப்பார்' என்கின்றனர். வழக்கு தீர்ப்பு வரும் வரை, வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது தான், ராஜாவிற்கும் நல்லது, தி.மு.க.,விற்கும் நல்லது என்கின்றனர், சில தி.மு.க., தலைவர்கள். ராகுலுக்காக காத்திருக்கும் மோடி: ஒவ்வொருவருக்கும், ஒரு ராசி உண்டு. காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தனி ராசி. அவர் எங்கு போனாலும், பலத்த வரவேற்பு. பத்திரிகை, "டிவி'களில் தலைப்புச் செய்தி வரும். ஆனால், தேர்தலில் காங்கிரஸ் ஊற்றி கொண்டு விடும். இது தான் ராகுல் ராசி. இந்தாண்டு இறுதியில், குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பிரசாரத்திற்கு எப்போது ராகுல் வருவார் என, ஆவலோடு காத்திருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. லோக்கல் கட்சிக்காரர்களின் கருத்தைக் கேட்காமல், காங்கிரஸ் டில்லி மேலிடம் தன் இஷ்டப்படி செயல்படுவது வழக்கம். குஜராத் தேர்தலில், மேலிடம் எச்சரிக்கையாக செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் குஜராத் காங்கிரசார். குஜராத்தில், கோத்ரா விவகாரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, டில்லி காங்கிரசார் அதிகம் பேச வேண்டாம். அப்படி பேச, பேச அது மோடிக்கு சாதகமாக ஆகிவிடும். சென்ற பார்லிமென்ட் தேர்தலிலும், அப்படித்தான் நடந்தது என்று குஜராத் காங்கிரார், டில்லி தலைவர்களிடம் சொல்லி வருகின்றனர். ஆனால், மோடியோ அமைதியாக தன் பிரசாரத்தை ஏற்கனவே துவங்கி விட்டார். குஜராத்தில் மற்ற மாநிலத்தவர் எங்கெங்கு உள்ளனரோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவர்களை அழைத்து வந்து, வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் மோடி. ஆந்திர மாநிலத்தவர் அதிகம் உள்ள சூரத் நகரில், பா.ஜ.,வின் ஆந்திர தலைவர்களை அழைத்து வந்து, தெலுங்கிலேயே பேச வைத்து, பா.ஜ.,விற்கு சாதகமாக பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் மோடி.பீகார் வாசிகள் அதிகம் உள்ள தொகுதிகளுக்கு, பீகார் பா.ஜ., தலைவர்களை வரவழைத்து, பிரசாரம் செய்ய உள்ளார் மோடி. |
| பகலவன் படத்தில் விஜய் இல்லை சீமான் அறிவிப்பு Posted: 21 May 2012 07:46 PM PDT சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த 'பகவலன்' படத்தில் இருந்து விஜய் விலகிவிட்டார். இதனால், 'பகலவன்' படத்தில் யார் நடிப்பார்கள் என்பது குறித்து கோலிவுட்டில் அலசப்பட்டு வருகிறது. " மத்திய அரசிற்கு எதிராக பேசி நான் சிறைக்கு சென்று விட்டதால் என்னால் 'பகவலன்' படத்தினை குறித்த நேரத்தில் துவங்க இயலாமல் போனது. விஜய்யும் அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி விட்டார் " என்று தெரிவித்து இருக்கிறார் சீமான். 'பகவலன்' படத்தின் நாயகன் யார் என்பது குறித்த கேள்விக்கு " அப்படத்தில் நடிக்க விக்ரமிடம் பேசினேன். வெவ்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் நடிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார். நாயகன் வேடத்திற்கு ஆர்யா,விஷால் மற்றும் ஜீவா உள்ளிட்டவர்களில் ஒருவர் பொருத்தமாக இருப்பார். ஜீவா அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். இந்த நாயகர்களில் ஒருவராது நடிக்க ஒப்பந்தமாகி 'பகலவன்' படம் துவங்கினால் சரி தான்! |
| அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு? Posted: 21 May 2012 07:27 PM PDT ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பிலோ, முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த இரு கட்சிகளுக்குமே ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட மெஜாரிட்டி இல்லை. கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், அகாலி தளம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவுடன்தான் காங்கிரஸ் வேட்பாளரோ அல்லது பாரதீய ஜனதா வேட்பாளரோ வெற்றி பெற முடியும். காங்கிரஸ் சார்பில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உள்ளிட்ட சிலரது பெயர்களை பரிசீலித்து வரு கிறது. இது தொடர்பாக தி.மு.க., திரிணாமுல் காங் கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கருத்தை கேட்டறிந்து வருகிறது. பாரதீய ஜனதா அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்ற முடிவில் இருந்தது. ஆனால் அப்துல் கலாம் தன்னை ஒருமனதாக தேர்ந்து எடுக்க வேண்டும். போட்டியிருந்தால் வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்துல் கலாம் ஒருமுறை ஜனாதிபதியாக இருந்துவிட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாரதீய ஜனதாவும் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி பதவி வகித்தவர். மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த 15-ந்தேதி சென்னை வந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை ஜனாதிபதி பதவி வகித்ததில்லை. எனவே அவரை ஆதரிப்பதாக அறிவித்ததுடன் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக நேற்று பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் ஏ.பி.பரதன், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், அகாலி தளம் தலைவரும், பஞ்சாப் முதல்- மந்திரியுமான பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெலிபோனில் பேசினார். அப்போது முன்னாள் சபாநாயகரும், வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி ஆவதற்கு முழு தகுதி உள்ளது. எனவே அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜெயலலிதாவின் வேண்டுகோள் குறித்து கட்சி தலைவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். இதில் பாரதீய ஜனதா கட்சி சங்மாவை ஆதரிக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. டெலிபோனில் பேசிய ஜெயலலிதாவிடம் அத்வானி பதில் அளிக்கும்போது சாதகமான கருத்தை தெரிவித்தார் என்றும் கட்சியின் மற்ற தலைவர்களுடனும், கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் பாரதீய ஜனதா தனி வேட்பாளரை அறிவித்தால் மற்ற கட்சிகள் ஆதரிக்க முன் வராது. அதே சமயம் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவையே பாரதீய ஜனதா எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:- காங்கிரசும், பாரதீய ஜனதாவும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் அதிகாரப்பூர்வமாக பி.ஏ. சங்மாவை அறிவித்து ஆதரவு அளித்தார். தென் இந்திய தலைவர்கள், பிராந்திய மனப்பான்மை கொண்டவர்கள் என்ற கருத்து வடமாநில தலைவர்களிடம் நிலவுகிறது. அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் வட இந்திய தலைவர் உயர்ந்த இடத்துக்கு வர தென்னிந்திய தலைவரான ஜெயலலிதா ஆதரவு அளித்து இருக்கிறார். மேலும் சங்மா கிறிஸ்தவ வேட்பாளர் என்பதால் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஆதரிக்கும் மனப்பான்மையில் முதல்- அமைச்சர் இருப்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அரசியல் எதிரிகள் ஜெயலலிதா உயர்ந்த சாதிக்காரர் என்ற எண்ணத்தை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் சிறுபான்மை சமுதாயத்துக்கு எதிரானவர் அல்ல என்பதையும் நிரூபித்து இருக்கிறார். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவருக்கு ஆதரவு அளித்து இருப்பதும் வட இந்திய தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது என்றார். முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறையால் பாரதீய ஜனதா மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் சங்மாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்கும். காங்கிரஸ் வேட்பாளரை இந்த கட்சிகள் ஒருபோதும் ஆதரிக்க முன்வராது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் முன் வந்துள்ளார். முலாயம்சிங் யாதவ் தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். பி.ஏ.சங்மாவை ஆதரிப்பீர்களா? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத் பவாரிடம் கேட்டபோது, நாங்கள் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறோம். சங்மா எங்கள் கட்சி தலைவர் என்றாலும், காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்து இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார். லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானிடம் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டதற்கு, எல்லோரும் எங்கள் நண்பர்கள்தான். என்றாலும் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளரைத்தான் ஆதரிப்பேன் என்றார். |
| நேட்டோ மாநாட்டில் ஒபாமாவின் உரையில் பாகிஸ்தான் அதிபரின் பெயர் இடம்பெறவில்லை Posted: 21 May 2012 07:21 PM PDT ஆப்கானிஸ்தான் குறித்தான நேட்டோ நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரையில் பாகிஸ்தான் அதிபரின் பெயர் இடம் பெறவில்லை. அதற்கு மாற்றாக மத்திய ஆசியா மற்றும் ரஷ்ய நாட்டு அதிகாரிகளை வரவேற்று பேசினார். மேலும் அவர் தன் உரையில் மத்திய ஆசிய மற்றும் ரஷ்ய நாடுகள் நேட்டோ படைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுவதாக பாராட்டினார். ஒபாமா உரையின் போது சர்தாரி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்வுடன் வட்ட மேசையில் அமர்ந்திருந்தார். நவம்பர் 26 ம் தேதி நடைபெற்ற எல்லை தாண்டிய துப்பாக்கிசூட்டில் 24 பாகிஸ்தான் வீரர்கள் நேட்டோ படையினரால் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தன் நாட்டின் வழியாக நேட்டோ படைகளுக்கு பொருட்கள் அனுப்புவதற்கு தடை விதித்தது. இத்தடையை நீக்க இயலாத சர்தாரியுடன் ஒபாமா பேச்சு வார்த்தை நடத்த வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
| Posted: 21 May 2012 10:31 AM PDT |
| ஜெயலலிதாவின் ஜனாதிபதி வேட்பாளரை சொந்த கட்சியே ஆதரிக்கவில்லை Posted: 21 May 2012 10:18 AM PDT சமாஜ்வாடி கட்சி பி.ஏ. சங்மாவை அவரது சொந்த கட்சியே ஆதரிக்கவில்லை என்றும் அவரை குடியரசுத்தலைவர் பதவிக்கு வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என முலாயம் சிங் யாதவ் இன்று தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 15.5.2012 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை வகித்ததில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவரை ஆதரிப்பதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.ஓடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும் இவரை ஆதரிக்குமாறு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா 18.5.2012 அன்று வேண்டுகோள் விடுத்தார். சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஏ.பி. பரதன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், சிரோன்மணி அகாலிதள் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முதலமைச்சருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மக்களவை முன்னாள் தலைவரும், வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவரும், ஜனாதிபதி ஆவதற்கு முழுமையான தகுதிகளை பெற்றவரும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான பி.ஏ. சங்மாவை நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| ராட்டினம் திரைப்பட வீடியோ பாடல்கள் Posted: 21 May 2012 10:11 AM PDT |
| பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்க பராக் ஒபாமா மறுப்பு Posted: 21 May 2012 10:07 AM PDT ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு ராணுவத்தை வாபஸ் பெறுவது, நிதி உதவி அளிப்பது ஆகியவை குறித்து விவாதிக்க அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மறுத்து விட்டார். முன்னதாக பாகிஸ்தான் பகுதியில் மீது அமெரிக்க ராணுவ விமானம் திடீர்தாக்குதல் நடத்தியதால் 25க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதனையடுத்து பாகிஸ்தானில் அமெரிக்க படை தங்குவதற்கும், பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகளுக்கு தேவையான உணவுப் பொருள்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்கப்படும் சாலை வழியை பயன்படுத்தவும் பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் அமெரிக்கா பாகிஸ்தானிலிருந்து வெளியேறியது. இந்த பிரச்சினையில் அமெரிக்க அரசுக்கு பாகிஸ்தான் ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதாலேயே சர்தாரியை சந்திக்க பராக் ஒபாமா மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நேட்டோ படை பிரச்சினையால் இரு நாடுகள் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. |
| ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை! Posted: 21 May 2012 09:14 AM PDT இந்த ஆண்டில் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் இசை ஆல்பங்களுள் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான்தான். இந்தப் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மான் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் தந்துள்ளார். படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. வரும் ஜூன் மாதம் கோச்சடையான் இசையை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. படமே செப்டம்பரில் வெளியாகிவிடும் என தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறியுள்ள நிலையில், ஜூன் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் கோச்சடையான் இசை வெளியாகவிருக்கிறது. சோனி நிறுவனம் கோச்சடையான் இசையை வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழில் 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையான் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. |
| ஊட்டி, கொடைக்கானலுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு: அரசு Posted: 21 May 2012 09:05 AM PDT சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் இரா.விஸ்வநாதன் அறிவித்துள்ளார். கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சி துவக்க விழா பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். பழனி எம்.எல்.ஏ. வேணுகோபால், அரசு முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, பழனி நகர் மன்றத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோடை விழாவினை துவக்கி வைத்து தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விஸ்வநாதன் பேசியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 2023ம் ஆண்டு தொலை நோக்குத் திட்டம் மூலம் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் படிப்படியாக குறையும். சுற்றுலா நகரங்களான கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மலைப்பகுதியான கொடைக்கானல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சியில் எந்த பகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. மாறாக அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் மூலம் மெகா டூரிசம் திட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலத்தில் கொடைக்கானலும் இணைக்கப்படும். கொடைக்கானலில் பார்க்கிங் பிரச்சனையை தீர்க்க தற்காலிகமாக கொடைக்கானல் அரசு போக்குவரத்துக்கழகம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார். நகரப் பகுதிகளில் கடும் மின் வெட்டு காரணமாக குளிர் பிரதேசமான கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் போது அங்கும் தினசரி பல மணி நேரம் மின் வெட்டு இருந்ததால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. |
| மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம் Posted: 21 May 2012 08:47 AM PDT இணைய உலகில் பேஸ்புக், ஆர்குட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றில் பேஸ்புக் முன்னணியில் உள்ள வலைத்தளமாக விளங்கிவருகிறது. தேடுபொறி உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் கூகுளும் தமக்கென்று கூகுள் பிளஸ் என்ற சமூக வலைத்தளத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இதை ஜிமெயில் பயனாளர்கள் அதிகம் பேர் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் கம்யூட்டர் சாப்ட்வேர் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் புதியதாய் ஒரு சமூக வலைத்தளத்தை துவங்கியிருக்கிறது. கடந்த 2011-ல் சோதனை முறையில் இருந்த இந்த பீட்டா வடிவ சமூக வலைத்தளம், பொதுப்பயன்பாட்டிற்கு தற்போது விடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மைக்ரோசாப்டின் Fuse Labs இதை வடிவமைத்துள்ளது. www.so.cl என்ற பெயரில் இந்த சமூக வலைத்தளம் இயங்குகிறது. சோஷியல் என்ற ஆங்கில வார்த்தையை இரண்டாகப் பிரித்து (so.cl - சோ.சிஎல்) என இதன் வலைப்பக்க முகவரியை அமைத்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். |
| விஜயகாந்த் ஆதரவு கேட்டால் மேலிடம் முடிவு செய்யும்-தமிழக காங்கிரஸ் Posted: 21 May 2012 08:42 AM PDT புதுக்கோட்டை இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும், விஜயகாந்த் ஆதரவு கேட்டால் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார். நிருபர்களிடம் அவர் பேசுகையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது. இந்தத் தொகுதி எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாகும். தி.மு.க. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. இடைத்தேர்தலில் தே.மு.தி.கவுக்கு ஆதரவு அளிக்கும் நிலையை இப்போது எடுக்கவில்லை. விஜயகாந்த் ஆதரவு கேட்கிறாரா இல்லையா என்பது தெரியவிலை. எனவே இதுபற்றி முடிவு உயர் மட்டத்தில்தான் எடுக்கப்படும். விஜயகாந்த் ஆதரவு கேட்டால், காங்கிரஸ் மேலிடதான் முடிவு செய்யும். என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை தமிழக காங்கிரஸ் நிறைவேற்றும். மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று குறைசொல்வதை தமிழக அரசு தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து தனி ஈழம் என்று குரல் வர வர ராஜபக்சே பயப்படுகிறார். தமிழர் பகுதியில் ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீர்மானமாக உள்ளது. ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்களுக்கு வாழ்வு உண்டு என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆகவே தனி ஈழத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. டெசோ அமைப்பு உருவாக்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் உறவுவில் எந்த சிக்கலும் வராது என்றார். |
| உலக செஸ் போட்டி 2012 : விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல் வெற்றி Posted: 21 May 2012 08:33 AM PDT உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே 11-ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் இந்திய செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டும் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் முதல் ஆறு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. நேற்றைய முன்தினம் நடைபெற்ற 7-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் 32-வது நகர்த்தலிலேயே அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். இன்று எட்டாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் 17-வது நகர்த்தலிலேயே கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இன்னும் நான்கு சுற்று ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் யார் அதிக புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே இந்த ஆண்டின் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வார். இந்த நான்கு சுற்றுகளும் டிராவில் முடிந்தால் மே 30-ம் தேதி டை பிரேக்கிங் ஆட்டம் நடைபெறும். தற்போது இருவரும் தலா 4 புள்ளிகளோடு சமநிலையில் உள்ளனர். |
| குடியரசு தின விழா பரேடில் நடிகர், நடிகைகள் டான்ஸ்... மத்திய அரசு முடிவு! Posted: 21 May 2012 08:24 AM PDT டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் நடிகர், நடிகைகளையும் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். இந்திய சினிமாத் துறைக்கு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி திரைத் துறையைக் கெளரவிக்கும் வகையில் இந்த முடிவாம். இந்தியாவின் குடியரசு தின விழாவின்போது டெல்லியில் கண் கவர் அணிவகுப்பு நடைபெறும். முப்படைகளின் சிறப்பை வெளிப்படுத்தும் அணிவகுப்பாக இது இருக்கும். மேலும் பல்வேறு மாநிலங்களின் கலை, கலாச்சாரத்தை, வளர்ச்சியை விளக்கும் வகையில் ரதங்களும் இதில் இடம் பெறும். இந்த அணிவகுப்பில் இதுவரை சினிமாக்காரர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். அவர்களையும் சேர்த்தால் அணிவகுப்பின் கெளரவம் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவில் இருந்தது மத்திய அரசு. ஆனால் தற்போது முதல் முறையாக சினிமாக்காரர்களையும் இந்த அணிவகுப்பில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய திரைத்துறைக்கு 100 வயதாகிறது. இது அடுத்த ஆண்டு வருகிறது. இதையடுத்து 2013ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் திரைத்துறையினரையும், அதாவது நடிகர், நடிகைகளையும் சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாம் மத்திய அரசு. இதில் இந்தி சினிமாக்காரர்கள் மட்டுமே பங்கேற்பார்களா அல்லது ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரும் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. அனேகமாக பாலிவுட் எனப்படும் இந்திய சினிமாவைச் சேர்ந்த நடிகைகள், நடிகர்களை மட்டுமே இந்த பேரணியில் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் பேசும் படம் எனப்படும் ராஜா ஹரிச்சந்திரா என்ற படம் 1913ம் ஆண்டு மே 3ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. |
| இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா 2 வருடங்களுக்கு பிறகு விடுதலை Posted: 21 May 2012 08:20 AM PDT இலங்கை ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரை முன் நின்று நடத்தியவர். போர் முடிந்த பிறகு அதிபர் ராஜபக்சேவுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர் பதவியில் இருந்து விலகி அரசியல்வாதி ஆனார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து, இலங்கை அரசுக்கும், அதிபர் ராஜபக்சேவுக்கும் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதில் சட்ட நடைமுறைகள் முடிவதற்கு இரண்டு நாள் ஆனது. இதனையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து இன்று சரத் பொன்சேகா விடுதலையானார். பொன்சேகாவை அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் கூட்டமாக வந்து வரவேற்றனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. |
| கருத்துக் கணிப்பில் சோனியா, மன்மோகன், ராகுலை பின்னுக்கு தள்ளிய மோடி Posted: 21 May 2012 08:05 AM PDT நாட்டின் அடுத்த பிரதமராக குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரும், சோனியா காந்தி பிரதமராக 9 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ABP நியூஸ் மற்றும் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து ஒரு சர்வே நடத்தியுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, அடுத்த பிரதமராக 17 சதவீதம் பேர் குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரும், சோனியா காந்தி பிரதமராக 9 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 21 சதவீதத்தினரும், மோடிக்கு 12 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர். இப்போது மன்மோகன் சிங்குக்கான ஆதரவு 5 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரத்தில் மோடிக்கான ஆதரவு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக 12 சதவீத ஆதரவை மட்டுமே பெற்று 4வது இடத்தில் இருந்த மோடி, இப்போது மன்மோகன் சிங்கை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துவிட்டார். அதே போல கடந்த ஆண்டு கருத்துக் கணிப்புடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு இருந்த மக்கள் ஆதரவும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 19 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த ராகுல் இப்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார். Read: In English அதே போல 14 சதவீத ஆதரவுடன் 3 இடத்தில் இருந்த சோனியா காந்தி 4வது இடத்துக்கு சரிந்துவிட்டார். அதே நேரத்தில் 37 சதவீதம் பேர் மன்மோகன் சிங்கின் செயல்பாடு நன்றாக உள்ளதாகவும், 33 சதவீதம் பேர் ஆவரேஜ் மார்க்கும் கொடுத்துள்ளனர். 28 சதவீதத்தினர் மட்டுமே மிக மட்டமான பிரதமர் என்று கூறியுள்ளனர். கடந்த ஆட்சியில் அவர் மிகச் சிறப்பாக பணியாற்றியதாக 36 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். |
| சித்தார்த், தனுசுடன் இணைத்து பேசுவதா?: ஸ்ருதிஹாசன் ஆவேசம் Posted: 21 May 2012 07:10 AM PDT சித்தார்த், தனுசுடன் ஸ்ருதி ஹாசனை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. சித்தார்த்தும் ஸ்ருதியும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டதாகவும், பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்தி வெளியானது. '3' படத்தில் நடித்தபோது தனுசுடன் இணைத்து வதந்தி பரவியது. இதற்கு பதில் அளித்து ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- சித்தார்த், தனுசுடன் என்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவது முட்டாள் தனமானது. இருவருடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். எங்களுக்குள் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே உள்ளது. இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது. எனக்கு எல்லாமே சினிமாதான். தனுஷ் திறமையான நடிகர். அவர் மனைவி இயக்கிய படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இசை ஆல்பம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதுதான் எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. |
| கறுப்பு பணம் பற்றிய வெள்ளை அறிக்கை: பிரணாப்முகர்ஜி தாக்கல் செய்தார் Posted: 21 May 2012 06:49 AM PDT பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட லோக்பால் மசோதா இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், பா. ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கறுப்பு பணம் பற்றிய 100 பக்க வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார். இதில் கறுப்பு பணத்தை ஒழிப்பது தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளது. |
| ஸ்ருதியால் தனுஷ் - ஐஸ்வர்யா சண்டை உண்மைத்தான்: கஸ்தூரிராஜா Posted: 21 May 2012 04:33 AM PDT தனுஷ் - ஸ்ருதி விவகாரம் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா - ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், " தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டையே. எந்த வீட்டுலதான் சண்டை இல்லாம இருக்கு. தனுஷ் - ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் தனுஷ் ரொம்ப நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து மருமகள் கடும் கோபமடைந்தது உண்மைதான். எந்தப் பெண்தான் இது சரி என்று சொல்வார்? ஒரு டைரக்டரா அந்த சீன் சரியா வந்தாலும், மனைவியா அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப கோபமானது உண்மைதான். காரணம், ஐஸ்வர்யாவோட அன்பு அப்படி. மருமகளுக்கும் மகனுக்கும் அப்பப்போ இப்படி சின்னச்சின்ன சண்டை வரும். ஆனா அவங்க பிரிஞ்சு வாழறாங்கன்னு சொல்றது தப்பு. தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ் வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா... எல்லோரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் அன்பான குடும்பமா இருக்கோம். இதை எவனாலும் உடைக்க முடியாது!", என்றார். |
| அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது உண்மைதான்-ஐபிஎல் வீரர் ஒப்புதல் Posted: 21 May 2012 04:09 AM PDT அமெரிக்கப் பெண் ஜோஹல் ஹமீதிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான். அப்போது நான் குடிபோதையில் இருந்ததும் உண்மைதான் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் லூக் போமர்ஸ்பேக் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக போலீஸாரிடம் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த தினத்தன்று தான் குடிபோதையில் இருந்ததாகவும், ஜோஹல் ஹமீதின் அறைக்குத் தேவையில்லாமல் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் தவறு செய்தது உண்மைதான் என்றும் போமர்ஸ்பேக் ஒப்புக் கொண்டுள்ளாராம். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐபிஎல் போட்டி முடி்வடைந்த பின்னர் நடந்த மது பார்ட்டியின்போதுதான் போமர்ஸ்பேக் இப்படி தவறாக நடந்து கொண்ட சம்பவம் இடம் பெற்றது. இதுதொடர்பாக ஜோஹல் ஹமீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கிரிக்கெட் வீரர் போமர்ஸ்பேக் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னைக் காப்பாற்ற முயன்ற காதலர் ஷஹீல் பீர்ஸாதாவை தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார் ஜோஹல் ஹமீத். இதையடுத்து போமர்ஸ்பேக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள போலீஸ் திட்டம்-நடராஜன் அவசர வழக்கு Posted: 21 May 2012 03:50 AM PDT என்னை போலியான என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறி ஒரு மனுவை சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சசிகலாவின் கணவர் நடராஜன் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் மத்திய மண்டல ஐஜியான அலெக்சாண்டர் மோன், சரக டிஐஜி அமல்ராஜ் மற்றும் 13 காவல்துறை அதிகாரிகள் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். நில அபகரிப்பு வழக்கில் கைதான நடராஜன் தற்போது ஜாமீனி்ல் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வந்து நீதிபதி நசீர் முகம்மதுவிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தஞ்சாவூர் போலீசார் தவறான புகாரின் பேரில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்தவர் தற்போது வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனால் போலீசார் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டனர். என்னை போலி என்கவுண்ட்டர் மூலம் கொலை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். திருச்சி சிறைக்கு என்னை வேனில் கொண்டு செல்லும்போது வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டில் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து என்கவுண்டர் நடத்த திட்டமிட்டனர். எனவே நான் குற்றம் சாட்டியுள்ள போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் நடராஜன். இந்த மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























