விழியே பேசு... |
- "டிவி' நேரடி ஒளிபரப்பில் மம்தா ஆவேசம்: பாதியில் வெளியேறினார்
- முதல் நாளே ஏமாற்றிய ஃபேஸ்புக்!
- நித்தியானந்தா பற்றி படம் இயக்க போகிறார் ரஞ்சிதா...?
- மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி சென்னையில் கைது
- ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் விஜய்...!
- புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி
- முதல்ல அவங்க சொல்லட்டும்; அப்புறம் நாங்க சொல்லுறோம்: மாயாவதி
- ரெயில்பாதை மின்கம்பத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி
- புதுக்கோட்டை திமுகவினர் '49 ஒ' க்கு வாக்கழிக்க முடிவு?
- ஐ.பி.எல். விளையாட்டு தற்போது 'கருப்பு விளையாட்டு': ராம்தேவ் குற்றச்சாட்டு
- ஐபிஎல் 5: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி
- மேட்ச் பிக்ஸிங் - இலங்கை வீரருக்கு ரூ 10 கோடி... இந்திய வீரர்களும் உடந்தை?
- பாசஞ்சர் ரயிலில் 'தீ' : மூன்று பெட்டிகள் கருகியது
- புத்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்
- கவிஞர் தாமரையின் கணவர் மாயம்! காரணம் என்ன? பரபரக்கும் மீடியா உலகம்!
- அலெக்ஸ் பால் மேனன் வைகோவுடன் சந்திப்பு
- இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்!(வீடியோ)
- 2 அழகிகளுடன் உல்லாசமாய் இருந்த லூக் - விசாரிக்கச் சென்ற போலீஸ் அதிர்ச்சி!
- பாலியல் புகாருக்கு ஆதாரமில்லாததால் கிரிக்கெட் வீரர் லூக்கிற்கு ஜாமீன்
- ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசின் வேண்டாம்! - ஷங்கருக்கு கோரிக்கை
- லூக் விவகாரம் : சித்தார்த் மல்லையா மன்னிப்பு கேட்க வேண்டும்-அமெரிக்கப் பெண் நோட்டீஸ்
- நிரூபமாராவுக்கு கறுப்புகொடி காட்ட முயன்ற 60 பேர் கைது
- தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற முடியாது: ராஜபக்சே
- அழகில் என்னை யாரும் மிஞ்ச முடியாது -ஸ்ரேயா
- 'வயசாயிடுச்சு... இனி ஆக்ஷனுக்கு பை! - ஜாக்கி சான் அதிரடி அறிவிப்பு!
| "டிவி' நேரடி ஒளிபரப்பில் மம்தா ஆவேசம்: பாதியில் வெளியேறினார் Posted: 19 May 2012 09:45 PM PDT கார்ட்டூன் வரைந்த பேராசிரியரை கைது செய்தது, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வருவது ஆகியவை குறித்து, மாணவர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால், ஆவேசமடைந்த மம்தா பானர்ஜி, "டிவி' நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், மாவோயிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்டுகள். அதனால் தான், இப்படி கேள்வி கேட்கின்றனர்' என, மம்தா ஆவேசமாக குற்றம் சாட்டினார். தனியார் ஆங்கில "டிவி' சேனல் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு, விவாத நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேற்கு வங்க முதல்வராக மம்தா பொறுப்பேற்று, ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது குறித்து, இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, தொகுப்பாளரும், மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு, துவக்கத்தில் பொறுமையாகவும், விரிவாகவும் பதில் அளித்தார் மம்தா. சிறிது நேரத்துக்கு பின், மம்தா குறித்து கார்ட்டூன் வரைந்த ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டது குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும், மாணவர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால், மம்தா கடும் ஆத்திரம் அடைந்தார். கார்ட்டூன் சர்ச்சை: மம்தா பேசுகையில், "கார்ட்டூனை வெறுப்பவள் அல்ல நான். அதை அதிகமாக விரும்புவேன். ஆனால், பேராசிரியர் அம்பிகேஷ் வரைந்தது கார்ட்டூன் அல்ல. அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். என்னைப் பற்றி கிண்டலாக கார்ட்டூன் வரைந்து, அவற்றை, 60 பேருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். சம்பந்தப்பட்டவர்களிடம், இதற்கு ஒப்புதல் பெறவில்லை. இவரை கைது செய்தது எப்படி தவறாகும்' என, கேள்வி எழுப்பினார். கார்ட்டூன் விவகாரத்தை பற்றி, மாணவி ஒருவர் கேட்ட கேள்வி, மம்தாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. வேகமாக, மேடையில் இருந்து எழுந்து, அந்த மாணவியை நோக்கி, "நீயும் மாவோயிஸ்ட் தான். ஜாதவ்பூர் பல்கலையை சேர்ந்த மாணவர்களை மட்டும், இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன்? வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை?' என, ஆத்திரத்துடன் பேசினார். வெளியேறினார்: இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது குறித்து, மாணவர் ஒருவர் கேட்ட கேள்வியால், கோபத்தின் உச்சிக்கே சென்றார் மம்தா. "பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து விட்டதாக, பொய் பிரசாரம் செய்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் தான், இந்த பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும், மாவோயிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தான். அதனால் தான், மாவோயிஸ்ட் பற்றியே கேள்வி எழுப்புகின்றனர்' என, கடுமையாக குற்றம் சாட்டிவிட்டு, "டிவி' நிகழ்ச்சியில் இருந்து, பாதியிலேயே வெளியேறினார் மம்தா. இந்த சம்பவம், டில்லி மற்றும் மேற்கு வங்க அரசியலில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| முதல் நாளே ஏமாற்றிய ஃபேஸ்புக்! Posted: 19 May 2012 09:37 PM PDT பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பங்குச் சந்தை வர்த்தகத்தில் நுழைந்த ஃபேஸ்புக்கிற்கு,முதல் நாள் வர்த்தகமே ஏமாற்றமாக அமைந்தது முதலீட்டாளர்களை அதிர்சசிக்குள்ளாக்கி இருக்கிறது. பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,பங்குச் சந்தையில் நுழையப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தபோது,முதலீட்டாளர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து 38 அமெரிக்க டாலர் முக மதிப்பில் ஃபேஸ்புக் பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில்,அப்பங்குகளை வாங்கி வைத்துக்கொண்டால் நாமும் மில்லினாதிபதிதான் (அதாங்க...நாம லட்சாதிபதின்னு சொல்வோமே...!) என்ற நம்பிக்கை ப்ளஸ் எதிர்பார்ப்பில்,அமெரிக்காவின் வழக்கமான தொழில்முறை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மட்டுமல்லாது,கையில் காசு பணம் தாராளமாக புழங்கக்கூடிய மேல்தட்டு அமெரிக்க குடிம்கன்கள் கூட,(நம்ம ஊரில் புறநகர் பக்கம் கிரவுண்ட் 10,000 ரூபாதான் என்று கூவி கூவி விற்பவர்களிடம்,வாங்கிப்போட்டால் கிடக்கிறது என்று வாங்கிப்போடுவோமே...?அதே பாணியில்!) ஃபேஸ்புக் பங்குகளையும் அடித்துப்பிடித்து வாங்கி போட்டனர். இந்நிலையில்தான்,ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ப்ளஸ் முஸ்தீப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில்,வெள்ளியன்று பங்கு பரிவர்த்தனை வர்த்தகத்தில் நுழைந்தது ஃபேஸ்புக்! காலை 11.32 மணிக்கு ஃபேஸ்புக் பங்குகள் வர்த்தகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும்,42.05 டாலராக உயர்ந்த அதன் மதிப்பு,அடுத்த சில நிமிடங்களிலேயே 38.01 டாலராக சரிந்தது. பின்னர் வர்த்தகத்தின் இடையே 6 சதவீதம் உயர்ந்து 40.40 டாலராக உச்சம் தொட்ட அதன் மதிப்பு,தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கவில்லை. அன்றைய வர்த்தகத்தில் ஃபேஸ்புக்கின் 500 மில்லியனுக்கும் அதிமான பங்குகள் கைமாறியபோதிலும்,வர்த்தகம் முடிவடையும்போது எதிர்பார்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு,வெறும் 0.23 சதவீத உயர்வுடன்,அதாவது 38.23 டாலரிலேயே நின்றுபோனது அதன் பங்கு மதிப்பு. இது ஃபேஸ்புக் மீது அபார நம்பிக்கை வைத்து பங்குகளை வாங்கிய அதன் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியும்,ஏமாற்றம் அளிப்பதாகவுமே இருந்தது. ஃபேஸ்புக்கின் சந்தை மதிப்பு 105 பில்லியன் டாலர்.இது அமேசான் டாட் காம், மெக்டெனால்ட் போன்ற நிறுவனங்களை காட்டிலும் அதிகமாகும்.ஆனால் அந்த நிறுவனங்களை காட்டிலும் அதிக பிரபலமான ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்புகள்,ப்ங்குச் சந்தையில் அவ்வளவாக விலைபோகாதது முதலீட்டாளர்களை மட்டுமல்லாது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கே வியப்பையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பங்குச் சந்தை நிபுணர்கள்,"ஆரம்ப எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஃபேஸ்புக்கின் பங்கு விற்பனை அமையாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது என்பது உண்மைதான் என்றாலும்,இதை தோல்வி என்று கருதத் தேவை இல்லை" கூறுகிறார்கள். அதே சமயம் ஃபேஸ்புக், தான் வெளியிட்ட பங்குகளில் வெறும் 20 சதவீதத்தை மட்டுமே பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு கொண்டு வந்துள்ளது.மீதமுள்ள ப்ங்குகளில் பெரும்பாலானவை முதலீட்டு வங்கிகள் மூலமாகவே விற்பனையாகிக் கொண்டிருப்பதால், எதிர்கால சேமிப்பாக கருதி,அதனை வாங்கிப்போடலாம் என்று நினைக்கும் தொழில்முறை அல்லாத மற்றும் இடைத்தரகு முதலீட்டாளர்கள் மத்தியில்,பங்குச் சந்தையில் கிடைத்த ஏமாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால்,ஃபேஸ்புக் நிறுவனம் சற்று கவலையில் ஆழ்ந்துள்ளது. உலக பிரச்னைகளுக்கெல்லாம் தனது தளத்தின் வாயிலாக தீர்வு சொல்லிக்கொண்டிருக்கும் ஃபேஸ்புக்கிற்கும்,அதன் பங்கு மதிப்பு உயர ஏதாவது வழி சொல்லுங்களேன்...! |
| நித்தியானந்தா பற்றி படம் இயக்க போகிறார் ரஞ்சிதா...? Posted: 19 May 2012 09:31 PM PDT நித்தியானந்தாவின் தீவிர சிஷ்யையான நடிகை ரஞ்சிதா அவரை பற்றி படம் இயக்க போகிறாராம். நாடோடி தென்றல், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. இவர், சாமியார் நித்தியானந்தாவுடன் சல்லாப காட்சிகளில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சில பல காலம் தலைமறைவாக இருந்தார் ரஞ்சிதா. ஆனால் தன்னுடைய படத்தையும் ரஞ்சிதா படத்தையும் மார்ப்பிங் முறையில் இணைத்துவிட்டதாக ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் இன்றளவும் பேட்டி கொடுத்து வருகின்றனர். தற்போது நித்தியானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். ரஞ்சிதா தொடர்ந்து அவரது சிஷ்யையாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தா பற்றி குறும்படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சுவாமி நித்தியானந்தா பற்றி குறும்படம் இயக்க இருப்பது உண்மை தான். ஆனால் இதனை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளேன். அதேசமயம் நான் எப்போது வேண்டுமானாலும் இப்படத்தை இயக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது சரி தான், அதற்கு பொருத்தமானவரும் அவர் தான். நித்தியானந்தாவிற்கு கோடிக்கணக்கான சிஷ்யைகள் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவர் என்று கூறியுள்ளார். |
| மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி சென்னையில் கைது Posted: 19 May 2012 09:28 PM PDT மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் என சொல்லப்படும் நபர் நேற்று சென்னையில் பிடிபட்டார். மாறுவேடத்தில் ஒரு வீட்டை சுற்றிவளைத்த போலீசார் அதிரடியாக புகுந்து அவரை கைது செய்தனர். எனினும், அவரது மனைவியும் தேடப்பட்டு வந்த தீவிரவாதியுமான இளம்பெண் எப்படியோ தப்பிவிட்டார். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் விவேக், மத்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் விவேக்கை மேல் விசாரணைக்காக தேனி மாவட்டத்துக்கு அழைத்து செல்கின்றனர். மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தேடுதல் வேட்டையும் கெடுபிடிகளும் தீவிரம் அடைந்துள்ளதால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தமிழகத்தில் களம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை வேகமாக செய்து வருவதாக தமிழக போலீசுக்கு மத்திய உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் மாநிலம் முழுவதும் குறிப்பாக காட்டு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். உளவுத்துறையின் சிறப்பு பிரிவு ஐஜி ஆபாஷ்குமார், கியூ பிரிவு எஸ்பி சம்பத்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு தொடர்ந்தது. இந்த நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பின் தமிழக தலைவர் என கூறப்படும் விவேக் (எ) பாலன் (எ) குமார் (45) ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் சென்னை செனாய் நகருக்கு வந்திருப்பதாக கியூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. உஷாரான தனிப்படை போலீசார் மாறுவேடம் அணிந்து செனாய் நகரில் ஒரு இடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக உள்ளே புகுந்து விவேக்கை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் 'நான் மாவோயிஸ்ட் தலைவர் இல்லை; இன்னமும் சொல்லப்போனால் என் பெயரே விவேக் இல்லை' என்று கூறியிருக்கிறார். ஆனால் போலீசார் தங்கள் பாணியில் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்தான் விவேக் என்பது உறுதியானது. கடந்த 2007ம் ஆண்டில் பெரியகுளம் பகுதியில் காட்டுக்குள் பல இலைஞர்களுக்கு தீவிரவாத பாடம் நடத்தி ஆயுத பயிற்சி அளித்தது விவேக்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அப்போது தகவல் தெரிந்து போலீசார் காட்டுக்குள் புகுந்தபோது விவேக் தப்பி ஓடிவிட்டார். சுந்தரமூர்த்தி என்பவர் மட்டும் சிக்கினார். அதிலிருந்து விவேக்கை தேடி வருகின்றனர். முன்னதாக 2004ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு முகாம் நடத்தி ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்து அந்த இடத்தை போலீசார் சுற்றிவளைத்தபோது தீவிரவாதிகள் துப்பாக்கி களால் சுட்டு சண்டை போட்டனர். அந்த மோதலில் சிவா (எ) பார்த்திபன் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்மா என்ற இளம்பெண் உட்பட பல தீவிரவாதிகள் காயங்களுடன் தப்பிவிட்டனர். அதன் பிறகு பத்மாவை விவேக் திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. சென்னைக்கு அவர்கள் இருவரும் வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததும், அவர்களை உயிருடன் பிடிக்க ரகசியமாக திட்டம் தீட்டினர். ஆனால் விவேக் மட்டும் சிக்கினாரே தவிர இந்த முறையும் பத்மா தப்பிவிட்டார். பெரியகுளம் நீதிமன்றத்தில் விவேக்குக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரை அங்கு ஆஜர்படுத்த வேண்டும். மத்திய உளவுத்துறை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட விவேக் உடனடியாக தேனிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறார். ஈவு இரக்கம் இல்லாமல் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர்களையும் எம்எல்ஏக்களையும் கடத்திச் சென்று பேரம் பேசும் மாவோயிஸ்ட் அமைப்பு தமிழகத்தில் காலூன்ற ஏற்பாடு செய்யும் தகவலால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் விஜய்...! Posted: 19 May 2012 09:20 PM PDT இதுவரை ஒரே கமர்ஷியலாக கொடுத்து வந்த நடிகர் விஜய் நண்பன் படம் மூலம் தன்னுடைய நடிப்பை ஸ்டைலை மாற்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துவரும் படம், "துப்பாக்கி! கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதில், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து விஜய் நடிக்கும் படம், "யோஹன் அத்தியாயம் ஒன்று! கவுதம் மேனன் இயக்கும் இப்படத்தில், துப்பறியும் நிபுணராக தோன்றவுள்ள விஜய், பல கெட்டப்புகளில் நடிக்கிறார். உலக அளவிலான ஒரு பிரச்னையை படமாக்குவதால், இந்த படத்தின் படப்பிடிப்பை, அமெரிக்காவில் துவங்கி, பல முக்கிய நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ள கவுதம், படப்பிடிப்பை ஜூலையில் துவங்க இருக்கிறார். ஆக, "துப்பாக்கி, யோஹன் அத்தியாயம் ஒன்று ஆகிய இரண்டு மெகா படங்களையும் முடித்துவிட்டு, ஏ.எல்.விஜய் இயக்கும், "தலைவன் மற்றும் ராஜேஷ் இயக்கும் படங்களில் நடிக்க, கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். இதில், ராஜேஷ் இயக்கும் படம், முழு நீள காமெடியாக உருவாகிறது. |
| புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி Posted: 19 May 2012 09:15 PM PDT புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற, மாநில சுற்றுச்சூழல் தாக்கீடு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,க்கள் விடுதி அமைந்திருந்த, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், "புதிய தலைமைச் செயலக கட்டடம், நவீன மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சிக்கு உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்' என, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்த்து, ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், "மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மாற்றி அமைக்கக் கூடாது' என, கோர்ட் உத்தரவிட்டது. இதனால், இக்கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மாநில சுற்றுச்சூழல் தாக்கீடு மதிப்பீட்டு ஆணையம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இதுகுறித்து, ஆணையத்தின் தலைவர் தங்கவேலு கூறும்போது, ""புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு, தமது பரிந்துரையை ஆணையத்திற்கு சமீபத்தில் அளித்தது. அதன் அடிப்படையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். இதையடுத்து, புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவமனையாக மாற்றுவதற்கு அனுமதிக்கோரி, தமிழக அரசு, ஐகோர்ட்டில் விரைவில் மேல் முறையீடு செய்யும் என தெரிகிறது. |
| முதல்ல அவங்க சொல்லட்டும்; அப்புறம் நாங்க சொல்லுறோம்: மாயாவதி Posted: 19 May 2012 09:11 PM PDT "பிரணாப் முகர்ஜி தானா காங்கிரஸ் வேட்பாளர் என்பதும் கூட, இன்னும் தெளிவாகவில்லை. எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும், தனது வேட்பாளர்கள் யார் என்பதை, இன்னும் அறிவிக்கவில்லை. இந்த இரு அணிகளும், முதலில் ஒரு முடிவுக்கு வந்து, தத்தமது வேட்பாளரின் பெயர்களை அறிவிக்கட்டும். அதன் பிறகு, ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு எங்களின் ஆதரவு என்பதை, நான் அறிவிக்கிறேன்' என்று, மாயாவதி கூறியுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மாயாவதி, அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, ராஜ்யசபா எம்.பி.,யாகியுள்ள அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு, முதன் முறையாக, நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். சமாஜ்வாதி மீது தாக்கு: அப்போது, அவர் உத்திர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி குறித்து, சரமாரியாக விமர்சனங்களை அடுக்கினார். அவர் கூறுகையில், "சமாஜ்வாதி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, இன்னும் ஓராண்டிற்குள், இந்த ஆட்சியின் லட்சணங்களை, மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று, நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஓராண்டு காலம் வரை காத்திருக்கத் தேவையில்லை என்று, இப்போது தெரிந்துவிட்டது. இரண்டே மாதங்களுக்குள், சமாஜ்வாதி கட்சியின் அலங்கோல ஆட்சியை பார்த்து, மக்கள் வெறுத்துப் போகும் நிலைமை உருவாகியுள்ளது. பகுஜன் சமாஜ் ஆட்சியின் அருமையை, மக்கள் உணரத் துவங்கிவிட்டனர். ஏமாற்றத்தில் மக்கள்: சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டளித்த உ.பி., வாக்காளர்கள் அனைவரும், மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். தேர்தலின் போது அளித்த ஏமாற்று வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற, புதிய அரசால் இயலவில்லை. வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடும் அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குண்டர்களும் ரவுடிகளும் தலைதூக்கும் மாநிலமாகி விட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என, பழையவை அனைத்தும் தலைதூக்கிவிட்டன. சீர்குலைவு: பகுஜன் சமாஜ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை சீர்குலைத்து விட்டனர். தலித் விரோதப் போக்கு என்ற ஒன்றே கொள்கையாகிவிட்டது. ஆட்சி நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு குடும்பம் மட்டுமே கோலோச்சும் மாநிலமாகி விட்டது. குடும்ப உறுப்பினர்கள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கின்றன. காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த புனியாவுக்கு, பகுஜன் சமாஜ் ஆட்சியில் தலைமைச் செயலர் என்ற மிக முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டது. தலித்துகளுக்கு நல்லது செய்வார் என்று பார்த்தால் எதையும் செய்யவில்லை. மாறாக, அவர் இப்போது, நேரு குடும்பத்து சிந்தனாவாதியாகிவிட்டார். என் மீதும், எனது கட்சியினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. ஆதாரமற்றவை. பாரபட்சமற்ற விசாரணையை சந்திக்கத் தயார். காங்கிரசும், பா.ஜ.,வும் சட்டசபைத் தேர்தலின் போது எடுத்த நிலைப்பாடுகளே, எங்களது தோல்விக்கு காரணம். இல்லையெனில், உலகில் எந்த சக்தியாலும் பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு திரும்ப வருவதை தடுத்திருக்க முடியாது' என்று கூறினார். பின், நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, மாயாவதி பதிலளித்தார். ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு,"தற்போதைய சூழ்நிலையில், இதற்கு பதிலளிப்பது சரியாக இருக்காது. எங்கள் கொள்கைக்கும், இயக்கத்திற்கும் தோதான வேட்பாளருக்கே ஆதரவு தரப்படும். இப்போதைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என இரண்டும், என்ன செய்கின்றன என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். யார் தத்தமது வேட்பாளர் என்பதை, இரு அணிகளும் அறிவிக்கட்டும். இந்த அணிகள் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை காத்திருந்து விட்டு, அதன் பிறகு எங்களது முடிவை அறிவிக்கிறோம்' என்றார். தெளிவாகட்டும்: பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டால், ஆதரவு தருவீர்களா என்று கேட்டதற்கு, "காங்கிரசின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தானா என்பதே தெரியவில்லை.அதுவே, இன்னும் தெளிவாகவில்லையே' என்றார். பிஜு ஜனதா தளமும் அ.தி.மு.க.,வும் முன்னிறுத்தியுள்ள முன்னாள் சபாநாயகரும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவருமான பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க முன்வருவீர்களா என்று கேட்டபோது, "அவரது பெயர் முன்னிறுத்தப்பட்டுள்ளதை, பத்திரிகைகள் வாயிலாகவே அறிந்து கொண்டேன். இன்னும் நேரம் உள்ளது. சூழ்நிலைகள் முழுமையடையட்டும். அதன் பிறகு, நாங்கள் முடிவு செய்து அறிவிக்கிறோம்' என்றார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஐந்து ஆண்டு காலம் முழுமையாக ஆட்சியில் இருக்குமா என்ற கேள்விக்கு, "மதவாத சக்திகளை தடுப்பதற்காகவே, மத்திய ஆட்சியை வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் ஆதரிக்கிறது. இந்த ஆட்சி நீடிக்குமா, நீடிக்காதா, கவிழுமா, கவிழாதா என்பதை எல்லாம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடம் தான் கேட்க வேண்டும்' என்றார். |
| ரெயில்பாதை மின்கம்பத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி Posted: 19 May 2012 09:03 PM PDT திருக்கோவிலூரை அடுத்த அந்திலி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38), கூலி தொழிலாளி. நேற்று பிற்பகலில் இவர் அரகண்டநல்லூர் ரெயில் நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக மின் கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்துது. எனினும் உயிரை மாய்க்க முயன்ற சக்திவேலை கண்ட பொதுமக்கள் அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் சக்திவேல் கீழே இறங்க மறுத்தார். இதனிடையே அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் சக்திவேலை சமாதானப்படுத்திட முயன்றும் பலனில்லை. எனவே அவரை மீட்க அதிகாரிகள் முயற்சித்தனர். அதனையறிந்த சக்திவேல் மின்கம்பத்தில் கைலியால் தூக்குப்போட்டு கொண்டதால் பரபரப்பு அதிகரித்தது. உடனே அந்தபகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் மின்கம்பத்தில் ஏறி சக்திவேல் கழுத்தில் இறுகிய கைலியை கத்தியால் அறுத்துவிட்டனர். இதனால் உயரத்தில் இருந்து கீழே விழுந்த சக்திவேலை தீயணைப்பு வீரர்கள் விரித்து வைத்திருந்த தார்ப்பாய் உதவியுடன் காப்பாற்றி மீட்டனர். உயிர்தப்பிய சக்திவேலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சக்திவேல் மது குடிக்கபணம் கேட்டபோது அவர் தந்தை மறுத்து விட்டதே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என தெரியவந்தது. சமயோசிதமாக செயல்பட்டு சக்திவேலை காப்பாற்றிய 3 வாலிபர்களுக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். |
| புதுக்கோட்டை திமுகவினர் '49 ஒ' க்கு வாக்கழிக்க முடிவு? Posted: 19 May 2012 09:01 PM PDT புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்களிப்பதையும் தவிர்க்குமாறு அந்தக் கட்சித் தலைமை உத்தரவிடும் எனத் தெரிகிறது. ஜூன் 12-ந் தேதி நடைபெற உள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இத்தொகுதியில் அதிமுக மற்றும் தேமுதிக இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து திமுக யாரை ஆதரிக்கும்? என்ற கேள்வி எழுந்தது. தற்போதைய நிலையில் தேமுதிகவை ஆதரித்துதான் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது. திமுகவும் எதிர்காலக் கூட்டணியைக் கருத்தில் கொண்டு இதற்கு ஓகே சொன்னாலும் திமுக வாக்குகள் தங்களுக்குத் தேவை இல்லை என்பது தேமுதிகவின் நிலையாக இருக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த திமுக யாருக்குமே வாக்களிக்காமல்விட்டுவிடலாம் என்று முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் புதுக்கோட்டையும் ஒன்று. கடந்த பொதுத் தேர்தலிலும் அதிமுக இங்கு குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிப் பெற முடிந்தது. இத்தொகுதியில் 49 ஓ வை பயன்படுத்தலாம் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியதையும் திமுக தலைமை நிராகரித்திருந்த நிலையில் வாக்குப் பதிவை திமுக புறக்கணிப்பது உறுதியாகி உள்ளது. |
| ஐ.பி.எல். விளையாட்டு தற்போது 'கருப்பு விளையாட்டு': ராம்தேவ் குற்றச்சாட்டு Posted: 19 May 2012 08:32 PM PDT கருப்பு பணம் ஐ.பி.எல் விளையாட்டில் முதலீடு செய்யப்படுவதால் இவ்விளையாட்டு தற்போது 'கருப்பு விளையாட்டு' என ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசியபோது குற்றம் சாட்டினார். கருப்பு பணத்திற்கு எதிராக ராம்தேவ் 'ரோட் ஷோ' நடத்தி வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு குற்றம் சாட்டிய அவர், இது முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார். 300 நேர்மையான எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் நம்நாடு பல தீய சக்திகளிடமிருந்து விடுதலை பெரும் என தெரிவித்த அவர். சில நேர்மையான எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். மறைவிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணம் வெளியில் கொண்டுவரப்படவேண்டும் எனவும், அப்படி திருப்பி கொண்டு வரப்பட்டால் நாட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விடும் எனவும் தெரிவித்த அவர், மாவோயிஸ்டுகளும் கருப்பு பணம் கொண்டே ஆயுதங்கள் வாங்குவதாகவும் குற்றம் சாட்டினார் |
| ஐபிஎல் 5: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி Posted: 19 May 2012 11:21 AM PDT ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய 2வது போட்டியில் 137 ரன்களை சேஸ் செய்த புனே வாரியர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கடைசியில் 34 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீண்டும் தங்கள் பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தி உள்ளது. ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய 2வது போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் புனே வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்க வீரரும் கேப்டனுமான கம்பிர் 1 பவுண்டரி அடித்து 10 ரன்கள் எடுத்து ஆஷிஸ் நெஹ்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலிஸ் 13 ரன்களில் கிளார்க் பந்தில் போல்டானார். அதன்பிறகு துவக்க வீரர் மெக்கல்லம், சாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மோதுவாக உயர்த்தினர். மெக்கல்லம் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஜெஸ்ஸி ரைடரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடிக்கு மாறிய சாகிப் அல் ஹசன் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 42 ரன்கள் எடுத்த போது, புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மனோஜ் திவாரியும், யூசுப் பதானும் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 136 ரன்களை சேர்த்தது. 137 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய புனே வாரியர்ஸ் அணிக்கு துவக்கம் முதலே தடுமாற்றம் ஏற்பட்டது. துவக்க வீரர் ராபின் உத்தப்பா 8 ரன்களை எடுத்து மனோஜ் திவாரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த மைக்கேல் கிளார்க் 13 ரன்கள் எடுத்து மெக்கல்லமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு பொறுப்பாக ஆடி வந்த ஜெஸ்ஸி ரைடர் யூசுப் பதான் பந்தில் போல்டானார். அணி வெற்றி பெற கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கங்குலி 5 ரன்கள் எடுத்து எல்.பி.டபில்யூ ஆனார். அதன்பிறகு வந்த வீரர்களான மஞ்சும்தர்(17), காலம்(12), ஹர்பிரீத் சிங்(6), பார்னல்(3) ஆகியோர் வரிசையாக அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்களின் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 102 ரன்களை எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி 34 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது. |
| மேட்ச் பிக்ஸிங் - இலங்கை வீரருக்கு ரூ 10 கோடி... இந்திய வீரர்களும் உடந்தை? Posted: 19 May 2012 11:13 AM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள் சிலருக்கும் இதில் பங்கிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் கிரிக்கெட் புக்கிகளில் ஒருவரான சோனு யோகேந்திர ஜலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமையன்று இவரையும் பையாஜி என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. உலகில் நடக்கும் மிகப் பெரிய கிரிக்கெட்ட சூதாட்டம் தொடர்புடைய புக்கிகள் இருவருமே. இவர்கள்தான் கிரிக்கெட் வீரர்களை அணுகி பல கோடி பேரம் பேசி, ஒரு அணியை ஜெயிக்க அல்லது தோற்க வைக்கும் கருவிகள். இவர்களிடமிருந்து 25 மொபைல்போன்கள், லேப்டாப்கள், ரூ 5 லட்சம் ரொக்கம் உள்பட பறிமுதல் செய்தனர். சோனு மற்றும் கோத்தாரி பெட்டிங் நெட்வொர்க்கில் ரூ 500 கோடி வரை புழங்குகிறதாம். இதை கட்டுப்படுத்துபவர் பாகிஸ்தானில் உள்ள தாதா சோட்டா ஷகீல் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, சவூதி என இவர்களின் வாடிக்கையாளர்கள் உலகம் எங்கும் நிறைந்துள்ளனர். இதுபோல பல பெட்டிங் நெட்வொர்க்குகளில் பல ஆயிரம் கோடி புழங்குகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சோனு யோகேந்திர ஜலனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர் போலீசார். அந்த வாக்கு மூலத்தில், இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வரை மேட்ச் பிக்ஸிங்கு தரப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்திய வீரர்கள் சிலருக்கும் இந்த பெட்டிங் நெட்வொர்க் மற்றும் பிக்ஸிங்கில் தொடர்புள்ளதாக சோனு கூறியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இன்னும் என்னென்ன பூதங்கள் புறப்பட உள்ளனவோ!! |
| பாசஞ்சர் ரயிலில் 'தீ' : மூன்று பெட்டிகள் கருகியது Posted: 19 May 2012 11:06 AM PDT பாலக்னுமா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென 'தீ' பிடித்தது. அத் தீ மேலும் அடுத்த பெட்டிகளுக்கும் பரவியது. இதனால் மூன்று பெட்டிகள் தீயில் கருகியது. இச்சம்பவம் பகலில் சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்டது. அதிர்ஸ்டவசமாக அப்பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எஞ்சினில் இருந்து புறப்பட்ட தீ பக்கத்து பெட்டிகளுக்கு பரவியதாகவும், எஞ்சினில் ஏற்பட்ட தீப்பொறி காரணாமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறன. இத்தீ யை முதலில் கவனித்த டிரைவர் தீயை அணைக்க முயன்றார், தீ மளமளவென பரவவே தீயனைப்புதுறையினர் வரவழைக்கப்பட்டனர். மூன்று தீயனைப்பு வண்டிகள் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தால், அப்பாதையில் செல்லும் 10 க்கும் மேற்பட்ட ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. |
| புத்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம் Posted: 19 May 2012 07:19 AM PDT பௌத்த சமயத்தை தோற்றுவித்த புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கையில் காட்சிப்படுத்துவதற்காக, தில்லியிலிருந்து அனுப்பப்பட இருக்கிறது. இதனை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் வைகோ குறிப்பிட்டிருப்பதாவது; தில்லியில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் முதல், செப்டெம்பர் மாதம் 5 ஆம் நாள் வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு இம்முடிவை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது. இந்திய அரசின் முடிவு, வெந்து போன தமிழர்களின் நெஞ்சில் வேல் கொண்டு குத்துவதாக இருக்கின்றது. இப்போது, இலங்கையில், தமிழர்களின் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுமையுமே, ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு, இலங்கை அரசு வெறித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது. இரத்தவெறி பிடித்த மகிந்த ராஜபக்சே கூட்டம், புத்தரின் பெயரைச் சொல்லுவதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள். மே 17,18 ஆகிய நாள்களில், படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களை நினைவுகூர்ந்து, உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் வேதனையோடு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கின்ற வேளையில், மே 18ஆம் நாள், இந்தியா இப்படி ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு இருக்கின்றது. இந்திய அரசு, தமிழர்களுக்கு இழைக்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் இது. தில்லி தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ள புத்த பெருமானின் புனிதப் பொருள்கள், இன்றைக்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க, பழமையான பொருள்களுள் ஒன்றாகும். புனிதம் நிறைந்த அப்பொருள்களை இலங்கைக்குக் கொண்டு செல்லக்கூடாது. எனவே, புத்த பெருமானின் புனிதப் பொருள்களை, இலங்கைக்குக் அனுப்புவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| கவிஞர் தாமரையின் கணவர் மாயம்! காரணம் என்ன? பரபரக்கும் மீடியா உலகம்! Posted: 19 May 2012 06:03 AM PDT சினிமா பாடலாசிரியர் தாமாரையின் கணவர் தியாகுவை கடந்த சில நாட்களாக காணவில்லை என்ற தகவல் தற்போது திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஈழப்பிரச்சினையில் தீவிர ஆர்வம் கொண்ட தோழராக அறியப்பட்ட தியாகு கடந்த 13-ம் தேதியில் இருந்து எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. கவிஞர் தாமரையும், தோழர் தியாகுவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள். இருவருக்குமே முதல் திருமண வாழ்க்கை சரியாக இல்லாத காரணத்தினால் இரண்டாவதாக தியாகுவும், தாமரையும் மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்தனர். தங்களுடைய காதலைப் பற்றி கவிஞர் தாமரை பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென தியாகு மாயமாகிவிட்டார். தியாகு யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல் மாயமாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்களிலும், திரைப்படத்துறை வட்டாரங்களிலும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர் தியாகு. அவரை கடந்த 13 ம் தேதி அன்று அந்த அமைப்பில் இருந்து நிர்வாகிகள் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் கூறும் நிர்வாகிகள், தியாகு எந்த வேலையும் பார்க்காமல் தொலைக்காட்சிகளில் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதே. அதேசமயம் கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தியாகு தலைமறைவாகிவிட்டார் என்றும் வதந்திகள் உலா வருகின்றன. ஆனால் கொல்லிமலையைச் சேர்ந்த பெண்ணுக்கும் தியாகுவுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தாமரைதான் தியாகுவை துன்புறுத்தினார் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். இதில் எது உண்மை என்பதை தியாகுவே நேரில் வந்து கூறினால்தான் உண்டு! |
| அலெக்ஸ் பால் மேனன் வைகோவுடன் சந்திப்பு Posted: 19 May 2012 05:53 AM PDT சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன். கடந்த மாதம் 21-ந்தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனனை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்திலிருந்து பலர் குரல் கொடுத்தனர். மாவோயிஸ்டுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலெக்சை மாவோயிஸ்டுகள் இம்மாதம் 3-ந்தேதி விடுவித்தார்கள். விடுதலையான பிறகு சென்னைக்கு வந்துள்ளார். தன்னை மீட்பதற்கு பாடுபட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மே 16-ந்தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். நேற்றைய தினம், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்து நன்றி கூறினார். மேலும், இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கலெக்டரின் மனைவியும் உடன் இருந்தார். தன்னை விடுதலை செய்ய குரல் கொடுத்ததற்காக வைகோவிடம் நன்றி கூறினார். |
| இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்!(வீடியோ) Posted: 19 May 2012 05:34 AM PDT இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்! லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய இசைப் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு படத்தின் இசைக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் தரப்படும் படம், சமீப காலத்தில் நீதானே என் பொன்வசந்தமாகத்தான் இருக்கும். தெலுங்கிலும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த இசை. ரூ 2.50 கோடிக்கு இதன் வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனத்துக்கு தரவிருப்பதாகத் தெரிகிறது. இளையராஜாவின் இசை அபிமானிகளுக்கு இது மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக உள்ளது. குறிப்பாக இந்தத் தலைமுறை ரசிகர்கள் இளையராஜா இசையை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்! |
| 2 அழகிகளுடன் உல்லாசமாய் இருந்த லூக் - விசாரிக்கச் சென்ற போலீஸ் அதிர்ச்சி! Posted: 19 May 2012 04:52 AM PDT லூக் போமெர்ஸ்பேக் சர்ச்சை இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. பணம், பெண்கள், கிரிமினல்தனம் என சகல ஒழுங்கின்மைகளின் இருப்பிடமாக கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல் மாறியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த லூக் போமெர்ஸ்பேக் விவகாரம், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்படியெல்லாம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது. இரு தினங்களுக்கு முன் டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார் போமெர்ஸ்பேக். இரவு மது விருந்தில் ஜோஹெல் ஹமித் என்ற பெண்ணிடம் இவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். அறைக்குள் நுழைந்து அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடித்து சில்மிஷம் செய்தாராம். போதையில் இருந்த அவரை ஜோஹெலின் காதலர் மும்பை மாடல் சேர்ந்த ஷகில் (இந்த ஷகிலின் சந்தேகத் தொடர்புகள் தனி கதை) தடுத்துள்ளார். ஆத்திரத்தில் போமர்ஸ்பேக் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஷகீல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போமர்ஸ்பேக் மீது அறைக்குள் அத்துமீறி நுழைந்தது, பாலியல் தொந்தரவு செய்தது, தாக்குதல் நடத்தியது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது மயங்கி விழுந்ததால் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது முதல் முறையல்ல... குற்றச்சாட்டுக்கு ஆளான போமர்ஸ்பேக்கை விசாரிக்க போலீசார் ஓட்டலுக்கு சென்ற போது குடிபோதையில் அருகில் 2 அரை நிர்வாண இளம்பெண்களுடன் செம ஜாலியாக இருந்துள்ளார் போமர்ஸ்பேக். அதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு தெற்கு ஆஸி. அணிக்காக ஆடிய போது மதுவிருந்தில் கலந்து கொண்டு தாமதமாக வந்து சர்ச்சையில் சிக்கியவர்தான் இவர். அந்த குற்றத்துக்காக இவருடன் சேர்த்து ஷான் மார்ஷ் (இப்போது பஞ்சாப் அணிக்காக விளையாடுபவர்) தண்டிக்கப்பட்டார். 2009ல் போதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கினார். அப்போது போலீசை தாக்கியதற்காக ரூ.5 லட்சம் அபாரதம் செலுத்தினார். அவரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களின் சூதாட்டம், ஷாருக்கான் மோதல் என அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை உலுக்கியுள்ளன. இப்போது ஆஸ்திரேலிய வீரர் மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளதால் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. |
| பாலியல் புகாருக்கு ஆதாரமில்லாததால் கிரிக்கெட் வீரர் லூக்கிற்கு ஜாமீன் Posted: 19 May 2012 04:48 AM PDT ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளவர்களில் ஆஸ்திரேலிய வீரர் லூக் போமெர்ஸ் பேச்சும் ஒருவர். டெல்லி நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் அமெரிக்க வாழ் இந்திய பெண் சொகைல் ஹமீதுவை லூக் மானபங்கப்படுத்த முயன்றார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட லூக், நேற்றைய தினம் ஒருநாள் இடைக்கால ஜாமீனில் விடுதலை ஆனார். இந்நிலையில், அமெரிக்க பெண் லூக் மீது பாலியல் புகார் மனு அளித்திருந்தார். இந்த மனு இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித நீதிபதி, பாலியல் புகாருக்கு போதிய ஆதாரமில்லாததால் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். மேலும், லூக் போமர்ஸ் பேச் இந்த வழக்கு முடியும் வரை இந்தியாவில் இருக்க வேண்டும் என்றும், லூக் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பெண் குறித்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் சித்தார்த் மல்லையா தனது அணி வீரரான லூக்-க்கு ஆதரவாக தனது டுவிட்டர் இணைய தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரது கருத்துக்கு தில்லியிலுள்ள மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. |
| ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசின் வேண்டாம்! - ஷங்கருக்கு கோரிக்கை Posted: 19 May 2012 04:39 AM PDT இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அந்நாட்டுக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என திரையுலகம் தடைவிதித்தது. இதனால் தமிழ் நடிகர், நடிகைகள் யாரும் அங்கு செல்லவில்லை. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இதை மீறி 'ரெடி' என்ற இந்தி படப்பிடிப்பில் பங்கேற்க அசின் இலங்கை சென்றார். இது சர்ச்சையை கிளப்பியது. அசினுக்கு நடிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தமிழ் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலக தமிழர்கள் இப்போது கடை பிடிக்கின்றனர்.ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டு மின்றி ராஜபக்சேயுடன் விருந்தும் சாப்பிட்டார். ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| லூக் விவகாரம் : சித்தார்த் மல்லையா மன்னிப்பு கேட்க வேண்டும்-அமெரிக்கப் பெண் நோட்டீஸ் Posted: 19 May 2012 04:16 AM PDT ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் லூக் மீது பாலியல் புகார் கொடுத்த அமெரிக்கப் பெண் இப்போது அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டெல்லியில் லூக்போம்ஸ்பேர்ச் மது அருந்திவிட்டு தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அமெரிக்கப் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இப்புகார் மனுவைத் தொடர்ந்து லூக் கைது செய்யப்பட்டார். அவருக்கு 1 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் டுவிட்டரில் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையா, லூக் சம்பவம் பற்றி கருத்து தெரிவிக்கையில் புகார் கொடுத்த பெண்ணின் நடத்தையைப் பற்றி விமர்சித்திருந்தார். அந்தப் பெண் முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து சித்தார்த் மல்லையாவுக்கு அமெரிக்கப் பெண் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தம் நடத்தையைப் பற்றி விமர்சித்ததற்காக சித்தார்த் மல்லையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மகளிர் ஆணையத்திடமும் இது பற்றி அந்தப் பெண் புகார் அளிக்க உள்ளார். இன்னொரு சிக்கலில் சித்தார்த் லூக் விவகாரத்தில் தாமே தலையிட்டு தலையிடியை வாங்கிக் கொண்டிருக்கும் சித்தார்த் மல்லையா மற்றொரு சிக்கலிலும் மாட்டியிருக்கிறார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வந்திறங்கியது. அப்போது டுவிட்டர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி ரொம்பவே டென்ஷனாகிப் போனார் சித்தார்த் மல்லையா. யாரும் என்கிட்ட வராதீங்க.. என்று கடுப்படிக்க பத்திரிகையாளர்களோ மீடியாக்களிடம் இப்படி நடக்காதீங்க என்று கூறினர்.. ஆனால். கார் கதவைத் திறந்த சித்தார்த் அப்படித்தான் செய்வேன் என்று எகிறி கோபத்தின் உச்சிக்குப் போனார்கள் பத்திரிகையாளர்கள் |
| நிரூபமாராவுக்கு கறுப்புகொடி காட்ட முயன்ற 60 பேர் கைது Posted: 19 May 2012 04:11 AM PDT புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமாராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆனால் நிரூபமாராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க புதுவை நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பல்கலைகழக வாயில் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதற்கிடையே கவுரவ டாக்டர் பட்டம் பெறவரும் நிரூபமாராவுக்கு கறுப்பு கொடி காட்டபோவதாக புதுவை நாம் தமிழர் கட்சியினர் அறிவித்து இருந்தனர். அதன்படி புதுவை நாம்தமிழர் கட்சியினர் மாநில பொறுப்பாளர் அருமைதாசன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் கறுப்புக் கொடி காட்டி புதுவையில் இருந்து காலாப்பட்டு பல்கலைகழகத்துக்கு சென்றனர். அவர்கள் பிள்ளைச்சாவடி அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்தபோது அவர்களை காலாப்பட்டு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 5 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற முடியாது: ராஜபக்சே Posted: 19 May 2012 04:06 AM PDT இலங்கையில் தமிழர் பகுதியான வடக்கில் இருந்து இலங்கை ராணுவத்தை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இறுதிப் போர் முடிவடைந்து 3-ம் ஆண்டு நிறைவையொட்டி கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்ச்சியில் ராஜபக்சே பேசியதாவது: இலங்கையின் வரலாற்றுப் புத்தகத்தில் இந்த நாள் ஒரு பொன்நாள். 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்திய நாள் இன்று. யுத்தத்தில் தங்களது உயிர்களையும் உடல் உறுப்புக்களையும் இழந்த படையினரை நாம் கௌரவிக்க வேண்டும். நாட்டில் பயங்கரவாதம் நிலைகொண்டிருந்த போது அதனை முற்றாக ஒழிக்கும் பெரும் பொறுப்பு படையினருக்கு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடு என்ற வகையில் சர்வதேச நாடுகளுடன் சுமூகமான உறவு காணப்படுகின்றது. அன்று யுத்தத்தை முற்றாக ஒழிக்க உதவிய நாடுகள், இன்று இலங்கையை அபிவிருத்திக்கும் உதவுகின்றன. விடுதலைப் புலி ஆதரவு சக்திகள் யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடுதான் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமானது. அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும். வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருபவர்களுக்கு சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவுபவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவது தெரியவில்லையா? அவற்றை தடுக்க என்ன செய்தார்கள்? என்றார் அவர். |
| அழகில் என்னை யாரும் மிஞ்ச முடியாது -ஸ்ரேயா Posted: 19 May 2012 04:01 AM PDT ![]() தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இளம் நாயகிகள் வரத்து அவரது மார்க்கெட்டை சரித்து உள்ளது. இது குறித்து ஸ்ரேயாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் முக்கியம். எனக்கு ஒரு சமயம் அதிர்ஷ்டம் இருந்தது நிறைய படங்களில் நடித்தேன். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தேன். இப்போது எனக்கு நேரம் சாதகமாக இல்லை. ஆனால் மீண்டும் அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அழகில் என்னை யாரும் மிஞ்ச முடியாது. சமீபத்தில் சேலை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த படங்களை பார்த்த போது நான் இத்தனை அழகா என்று ஆச்சரியப்பட்டேன். அவ்வளவு அழகாக இருந்தேன். நிறைய பேர் அந்த படங்களை பார்த்து விட்டு இத்தனை நாள் இந்த அழகை எங்கே ஒளித்து வைத்து இருந்தாய் என்று வியந்தார்கள். தெலுங்கு படத்தில் அறிமுகமான போது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். மும்பையில் ஒரு பேஷன் ஷோவில் சமீபத்தில் பங்கேற்றேன். மேடையில் நான் நடந்து வந்த போது கிடைத்த கைதட்டல்கள் மறக்க முடியாதவை. இவ்வாறு ஸ்ரேயா கூறினார். |
| 'வயசாயிடுச்சு... இனி ஆக்ஷனுக்கு பை! - ஜாக்கி சான் அதிரடி அறிவிப்பு! Posted: 19 May 2012 03:44 AM PDT இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை... ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான். கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் தனது ஆர்மர் ஆஃப் காட் மூன்றாம் பாகத்தை அறிமுகப்படுத்தியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பரபரப்பான சண்டைக்காட்சிகளில் நடிக்க தன் வயது தடையாக உள்ளதாகவும், நடிப்பு தன்னை களைப்படைய வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் பிறந்த சீன நடிகர் ஜாக்கி சான். 58 வயதாகும் ஜாக்கி சான் தனது 100வது படமான சைனீஸ் ஜோடியாக்கை (ஆர்மர் ஆப் காட் 3) உருவாக்கி வருகிறார். இந்தப் படம்தான் அவரது கடைசி ஆக்ஷன் படமாகும். கேன்ஸ் திரைப்பட விழாவில் சைனீஸ் ஜோடியாக் புரமோஷனுக்காக வந்திருக்கும் ஜாக்கி சான், இந்தப் படத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்வதாக அறிவித்து, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தார். இப்போது அந்தப் படத்தின் மூன்றாவது பாகமாக வருவதுதான் சைனீஸ் ஜோடியாக். டிசம்பரில் இந்தப் படம் வெளியாகிறது. தனது ஓய்வு குறித்து அறிவித்த ஜாக்கி சான் கூறுகையில், "இன்னும் எத்தனை நாளைக்கு ஆக்ஷன் நாயகனாக நடிப்பது... சண்டை போட்டு போட்டு களைத்துவிட்டது. அதிரடி சண்டைக்கு என் வயசு இடம்கொடுக்கவில்லை. இப்போது உலகம் ரொம்ப வன்முறைக் களமாக மாறிவிட்டது. உண்மையில் எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் என் படங்களில் சண்டைக் காட்சியைக் கூட நகைச்சுவையாக்கிவிட்டேன். கராத்தே கிட் நடிக்கும்போதே, போதும் ஆக்ஷன் என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். சைனீஸ் ஜோடியாக் படத்துக்குப் பின் இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன். திரைக்குப் பின்னால் என் பங்களிப்பு இருக்கும். ராபர்ட் டி நீரோ போல, புதிய பரிமாணத்தில் தோன்றத் திட்டமிட்டுள்ளேன்," என்றார். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























