விழியே பேசு... |
- நயன்தாராவால் புலம்பும் இன்னொரு நடிகர்
- ஜூன் 8-ம் தேதி பில்லா-2?
- கோச்சடையான் ஷூட்டிங்கில் மகனுக்கு பயிற்சி : ஜாக்கி ஷெராப் மகிழ்ச்சி
- கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இங்கிலாந்து எம்.பிக்கள் எதிர்ப்பு
- கருகிய வாசனை பரவியதால் பாராளுமன்ற மேல்-சபை 3 முறை ஒத்திவைப்பு
- பள்ளி மாணவர்கள் காதலை எதிர்க்கும் வித்தியாச கதை
- என்ஜினீயரிங் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி வரை நீட்டிப்பு
- உளவு துறை விசாரணையால் நித்யானந்தா சீடர்கள் பீதி
- இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
- எம்.பி.,க்கு ஓட்டுபோட ஒரு கோடிபேரம் ; 15 எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் சி.பி.ஐ.,ரெய்டு
- ஐ.பி.எல். விவகாரம்: சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்: பா.ஜனதா எம்.பி
- இன்றைய செய்திகள் (18-05-2012)
- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
- கமலின் உதவிக்காக காத்திருக்கும் ஜெயம் ரவி!
- இந்தியில் 'பிதாமகன்'- சல்மான்கான் ஹீரோ!
- ஐ.பி.எல்லே வேண்டாம்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்!
- அஜித் ரெடி! இணைந்து நடிக்க சம்மதிப்பாரா விஜய்?
- ‘ராட்டினம்’ படத்துக்கு வரிவிலகளிக்க திரையுலக பிரபலங்கள் வேண்டுகோள்
- லூக் மீது புகார் கூறிய பெண் நேற்றிரவு என்னிடம்...: மல்லையா மகன்
- கருணாநிதிக்கு சொந்த சரக்கு கிடையாது!: தமிழருவி மணியன் சாடல்
- 'கழுகு' பட இயக்குனர் மீது இளம்பெண் புகார்
- 6ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கி, கருவை கலைக்க மாத்திரை கொடுத்த ஆசிரியர்
- பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பற்றி திடுக்கிடும் தகவல்: இந்திய தூதரகத்தை தகர்க்க திட்டம்
- கருணாநிதி யார்?.. சமத்துவப் பெரியாரா?, சிறுபான்மையினரின் காவலரா?, உற்ற நண்பரா?, இலக்கிய ஏந்தலா?
- மானபங்கப் புகார்: கோர்ட்டில் மயங்கி விழுந்த ஐபிஎல் வீரர் லூக் போமர்ஸ்பேச்
| நயன்தாராவால் புலம்பும் இன்னொரு நடிகர் Posted: 18 May 2012 09:24 PM PDT போர்வை கிடைக்குதேன்னு வேட்டிய அவிழ்த்தெறிகிற ஊர் போலருக்குடா இதுன்னு கன்னட ஹீரோ ஒருவரை புலம்ப விட்டிருக்கிறார் நயன்தாரா. இவருக்கும் கன்னட மொழிக்காரர்களுக்கும் அப்படி ஒரு ராசி போலிருக்கிறது. (மாஸ்டருக்கும் கன்னடம்தானே?) வேறொன்றுமில்லை, அஜீத்துடன் நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கமிட் ஆவதற்கு முன்பாக கன்னடத்தில் சுதீப் என்ற ஹீரோ நடிக்கும் படத்தில் நடிப்பதாக வாய்மொழி சம்மதம் தெரிவித்திருந்தாராம் நயன்தாரா. இந்த நேரத்தில்தான் அஜீத்துடன் நடிக்க வந்தது அழைப்பு. சம்பளமும் ஹெவி. அது போதாதா? சட்டென்று சுதீப்பை தவிக்க விட்டுவிட்டு புதிய படத்தில் கமிட் ஆகிவிட்டார் நயன்தாரா. ஒரு சின்ன தொகையை அட்வான்சா கொடுத்திருந்தா கூட வளைச்சு பிடிச்சு வம்பை கிளப்பியிருக்கலாம். இப்போ அதுவும் முடியாம போச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் சுதீப். வலைக்கு நூல் வாங்கும்போதே வழுக்கறதுக்கு தோள் குலுக்குற ஜாதிங்கடா நாங்கள்ளாம். தெரியும்ல... என்று கொக்கரிக்கிறது நயன்தாரா தரப்பு. |
| Posted: 18 May 2012 09:13 PM PDT ஏகப்பட்ட பில்ட் அப் கொடுக்கப்பட்டு வரும் அஜீத்தின் பில்லா 2 படம் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று முதல் தகவல் கசியவிடப்பட்டுள்ளது. சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 படம் முன்பே முடிந்து, விற்பனையும் நடந்துவிட்டது. மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்றுள்ளது இந்தப் படம். இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால் தயாரித்துள்ள பில்லா 2 -ன் விநியோக உரிமையை ஆஸ்கர் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார். மே முதல் தேதி இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின. ஆனால் பெரிய அளவு ஹிட்டான மாதிரி தெரியவில்லை. ஒருவேளை படம் வந்த பிறகு பாடல்கள் பிரபலமாகலாம். அடுத்து பில்லா 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளனர். வரும் ஜூன் 8-ம் தேதி படம் வெளியாகும் என தங்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக பில்லா 2 விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு முன் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகும் என்றும், அடுத்தவாரம் படத்தின் சென்சார் முடிந்ததும் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. |
| கோச்சடையான் ஷூட்டிங்கில் மகனுக்கு பயிற்சி : ஜாக்கி ஷெராப் மகிழ்ச்சி Posted: 18 May 2012 08:58 PM PDT ஹாங்காங்கில் நடந்த ரஜினி பட ஷூட்டிங்கில் தனது மகன் டைகருடன் பங்கேற்றார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். ரஜினி நடிக்கும் படம் 'கோச்சடையான். இதன் ஷூட்டிங் லண்டனிலும் பின்னர் கேரளாவிலும் நடந்தது. இதையடுத்து ஹாங்காங்கில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்க கடந்த வாரம் புறப்பட்டு சென்றார் ரஜினி. இப்படத்தில் மன்னர் வேடத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். அவர் இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு தனது மகன் டைகரை அழைத்து சென்று, திரும்பியுள்ளார். இது பற்றி ஜாக்கி கூறும்போது, கடந்த வாரம் கோச்சடையான் படத்திற்காக ஹாங்காங் சென்றேன். உடன் என் மகன் டைகரையும் அழைத்து சென்றேன். புதிய தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாகிறது. இது எனக்கு புது அனுபவம். என் மகனும் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார். நடிப்பு அனுபவத்தை நேரில் காண்பதற்காக ஹாங்காங் ஷூட்டிங்குக்கு அழைத்துச் சென்றேன். 20 வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன். தமிழில் ஆரண்ய காண்டம்Õ படத்தில் நடித்தேன். இது இரண்டு தேசிய விருது வென்றது. அடுத்த படம் ரஜினியுடன் நடித்து வருகிறேன். 3வது படமும் பிரபல நடிகருடன் நடிப்பதாக இருக்கும் என்றார். |
| கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இங்கிலாந்து எம்.பிக்கள் எதிர்ப்பு Posted: 18 May 2012 08:48 PM PDT கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மாதக் கணக்கில் தமிழகத்தில் போராட்டம் நடந்து ஓய்ந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து எம்.பிக்கள் கடிதம் அனுப்பி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து எம்.பி.க்கள் தமது கடிதத்தில், கூடங்குளம் சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சிறிய அளவில் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையாலும் கூடங்குளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அணுசக்தி கழகத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர். மேலும் கூடங்குளத்தில் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் இங்கிலாந்து எம்.பிக்கள் தங்களது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளனர். |
| கருகிய வாசனை பரவியதால் பாராளுமன்ற மேல்-சபை 3 முறை ஒத்திவைப்பு Posted: 18 May 2012 08:33 PM PDT டெல்லி பாராளுமன்ற மேல்-சபையில் நேற்று உறுப்பினர் பிரகாஷ் ஜவகர் கொண்டு வந்த தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான தனி நபர் தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது காங்கிரஸ் பெண் உறுப்பினர் சபையில் தீப்பிடித்த கருகிய வாசனை பரவியிருப்பதாக புகார் கூறினார். இது ஜோக் அல்ல உண்மையில் வாசனை பரவுவதாகவும் இதனால் சபை நடவடிக்கையில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து துணை தலைவர் பி.ஜே.குரியன் சபையை பகல் 3.47 மணி அளவில் ஒத்திவைத்தார். 30 நிமிட நேர ஒத்திவைப்புக்கு பின்னர் மீண்டும் சபை கூடியதும் தனிநபர் மசோதா மீதான காரசார விவாதம் மீண்டும் தொடங்கியது. அப்போதும் கருகிய வாசனை இருப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகாசவுத்ரி தொடர்ந்து புகார் கூறினார். அதைத்தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிகழ்வால் நேற்று ஒரே நாளில் மதிய உணவுக்கு பின்னர் மட்டும் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. |
| பள்ளி மாணவர்கள் காதலை எதிர்க்கும் வித்தியாச கதை Posted: 18 May 2012 08:18 PM PDT காதலில் சிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் இழப்புகளை பற்றி சொல்லும் படமாக உருவாகிறது 'படிக்கிற வயசுல'. இந்த படத்தை ராஜேஷ்குமார் எழுதி, இயக்குகிறார். ஹீரோவாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரும், மாணவியும் பள்ளியிலேயே அதிக மதிப்பெண் வாங்குபவர்கள். அவர்கள் இருவர் மனதிலும் படிப்படியாக கல்வி மீதான ஆர்வம் குறைந்து காதல் வலையில் சிக்குகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பு, எதிர்காலத்தில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளது. பள்ளி மாணவர்களிடையே காதல் உணர்வை தூண்டும் கதைகள்தான் இதுவரை வந்திருக்கிறது. ஆனால் இப்படம் படிக்கிற வயதில் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படமாக உருவாகிறது. ஹீரோயின் ராகி. இசை ஹரிபாபு. தயாரிப்பு ராதாகிருஷ்ணன். |
| என்ஜினீயரிங் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி வரை நீட்டிப்பு Posted: 18 May 2012 08:04 PM PDT தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர்வதற்கு பிளஸ்-2 மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி தேர்வு செய்ய உள்ளது. அதன்படி அதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 11-ந்தேதி முதல் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றுச் செல்கிறார்கள். பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான உடன் இணையதளத்தில் இருந்து மார்க் பட்டியல் நகல் எடுத்து அதை சேர்த்து பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களுடன் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்களின் நலன் கருதி அந்த தேதி ஜூன் மாதம் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் விண்ணப்ப படிவங்கள் மே மாதம் 31-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்த தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 45 ஆயிரம் இடங்கள் காலியாக கிடந்தன. இந்தவருடம் மேலும் புதிதாக கல்லூரிகள் தொடங்க உள்ளதால் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் பி.இ. சேர இடம் கிடைக்கும் என்றும் அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| உளவு துறை விசாரணையால் நித்யானந்தா சீடர்கள் பீதி Posted: 18 May 2012 07:55 PM PDT தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பிடதி ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்டு, நித்யானந்தாவுக்கு, நாடு முழுவதும் மட்டுமில்லாது, உலக நாடுகளிலும் ஏராளமான தியான பீடங்கள், ஆசிரமங்கள் உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து கூறப்பட்ட விவகாரத்தில், அனைத்து தியான பீடங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், தியான பீடங்களுக்கு சீடர்கள் வருகை குறைந்தது.பல தியான பீடங்கள், தாக்குதல் பீதியால் பூட்டப்பட்டன. ரஞ்சிதா விவகாரம் அடங்கிய பின், தியான பீடங்கள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தற்போது, நித்யானந்தா, மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதால், மீண்டும் அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்படத் துவங்கியுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், தமிழக உளவுத் துறை போலீசார் மூலம் ரகசிய விசாரணை மேற்கொண்டு, முக்கிய புள்ளி விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, உளவுத் துறை போலீசார், தமிழகம் முழுவதும் உள்ள தியான பீடங்களில், ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, தியான பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்திய உளவுத் துறை போலீசார், பீடத்துக்கு வரும் நித்யானந்தா சீடர்களின் எண்ணிக்கை, அவர்கள் எந்தந்த இடங்களில் இருந்து வருகின்றனர், தியான பீடம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன, தியான பீட நிர்வாகிகள் குடும்பப் பின்னணி ஆகிய புள்ளி விவரங்களை சேகரித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்ததோடு, விசாரணை எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்தனர். இது குறித்து, ஓசூர் தியான பீட அமைப்பாளர் சரவணபாபு கூறியதாவது:தியான பீடத்துக்கு, உளவுப் பிரிவு போலீசார், விசாரணைக்கு வந்தனர். அவர்கள், தியான பீட நடவடிக்கைகள் குறித்து, ஒரு சில தகவல்களைக் கேட்டனர். நாங்களும் அவற்றை தெரிவித்தோம். அவர்கள் எதற்காக வந்தனர் எனத் தெரிவிக்கவில்லை; நாங்களும் எதற்காக வந்தீர்கள் எனக் கேட்கவில்லை.இவ்வாறு சரவணபாபு கூறினார். மதுரை ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்ற பின், மற்ற ஆதீனங்கள், அவருக்கு எதிராக அணி திரண்டுள்ளதால், நித்யானந்தா தன்னுடை தியான பீடங்கள், ஆசிரம நடவடிக்கைகள் குறித்து, நெருக்கமான சீடர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்.வெளியுலக தொடர்புகள், நடவடிக்கைகளை, சமீப காலமாக நிறுத்தி வைத்துள்ளார். மேலும், ஆசிரமங்கள், தியான பீடங்களுக்கு வெளியாட்கள் வருவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், நித்யானந்தாவின் தியான பீட நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக, உளவுத் துறை போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. |
| இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி Posted: 18 May 2012 07:48 PM PDT ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக இந்த தடவை பெண்கள் குத்துச்சண்டை போட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் 51 கிலோ, 60 கிலோ, 75 கிலோ ஆகிய மூன்று எடை பிரிவு இடம் பெறுகிறது. ஒலிம்பிக் தகுதிக்கான பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குன்ஹூவாங்டாவ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் உலகின் 2-ம் நிலை வீராங்கனை நிகோலா ஆடம்சிடம் (இங்கிலாந்து) 13-11 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்ட 5 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் அதிர்ஷ்ட வாய்ப்பில் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மேரிகோம் வயது பிரிவில் ஆசிய கண்டனத்தினருக்கான 2 இடத்தில் ஒரு இடத்தை இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரும், ஆசிய விளையாட்டு சாம்பியனுமான ரென் கேன்கேன் (சீனா) பெற்றுவிட்டார். இன்னொரு இடத்துக்கான வாய்ப்புக்கு கால் இறுதியில் தோல்வி கண்ட மேரிகோம் (இந்தியா), ஹி கிம் (வடகொரியா) ஆகியோர் காத்து இருந்தனர். நேற்று நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் மேரி கோமை கால் இறுதியில் வீழ்த்தி இருந்த நிகோலா ஆடம் 11-6 என்ற புள்ளி கணக்கில் ஹி கிம்மை வென்று இருந்த ரஷியாவின் எலீனா சவெல்யேவாவை வீழ்த்தினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தினருக்கான 2-வது இடத்தை மேரிகோம் பெற்று லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். நிகோலா ஆடம் தோல்வி கண்டு இருந்தால் மேரிகோமுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்காது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான 29 வயது மேரிகோம் கூறுகையில், கடைசியாக ஒலிம்பிக் போட்டியில் இடம் கிடைத்து விட்டது. எனவே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உலக போட்டியில் பதக்கம் இல்லாமல் முதல்முறையாக திரும்புவது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 81 கிலோவுக்கு மேற்பட்ட உடல் எடைப்பிரிவில் கால் இறுதியில் இந்திய வீராங்கனை கவிதா சகால் 15-14 என்ற புள்ளி கணக்கில் துருக்கி வீராங்கனை செம்சி யாராலியை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். |
| எம்.பி.,க்கு ஓட்டுபோட ஒரு கோடிபேரம் ; 15 எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் சி.பி.ஐ.,ரெய்டு Posted: 18 May 2012 07:43 PM PDT ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி.,தேர்வுக்கு எம்.எல்.ஏ.,க்கள் தலா ஒரு கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக சந்தேகிக்கப்படும் எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் காலியாக கிடக்கும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் நிரப்பும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போடுவர். இதன் அடிப்படையில் ஜார்கண்டில் ராஜ்யசபா எம்.பி.,க்கு சுயேச்சையாக ஒருவர் போட்டயிட்டார். இவர் எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ஒரு கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தன. இதனைதொடர்ந்து இங்கு எம்.பி.,தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சி.பி.ஐ.,அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள 15 எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேரத்தில் காங்கிரஸ், மாநிலத்தில் ஆளும் ஜார்கண்ட்முக்தி மோர்ச்சாமற்றும் ராஷ்டிரியஜனதாதள எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி பல கோடிகளை பறிமுதல் செய்தனர். |
| ஐ.பி.எல். விவகாரம்: சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்: பா.ஜனதா எம்.பி Posted: 18 May 2012 07:35 PM PDT டெல்லி ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு விருந்தின்போது, அமெரிக்க இளம்பெண் ஒருவரை, பெங்களூர் அணி வீரர் லூக் முத்தமிட முயற்சித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது. கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பான பிரச்சினையை இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் எழுப்பிப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- டெல்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இளம்பெண்ணை பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் லூக் மானபங்கப்படுத்த முயற்சித்துள்ளார். கிரிக்கெட்டை ஐ.பி.எல். போட்டி ஒரு பொழுதுபோக்காக மாற்றி விட்டது. இந்தப் போட்டியில் தொடர்ந்து ஒரு சர்ச்சை மாறி அடுத்த சர்ச்சை வந்தவண்ணம் இருக்கிறது. டெல்லி ஓட்டல் சம்பவத்துக்கு முன்னதாக ஐ.பி.எல். போட்டியில் 5 வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. மற்றொரு சம்பவத்தில் நடிகர் ஒருவர் (ஷாருக்கான்) குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் கிரிக்கெட் போட்டியை நடனமாகவும், நாடகமாகவும் மாற்றி விட்டது. இதெல்லாம் இந்திய பிரிமியர் லீக்கும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் சட்டத்துக்கு மேலானவர்கள் என்பதாக காட்டுகிறது. இது தொடர்பாக கடிதங்கள் எழுதினாலும், நடவடிக்கை இல்லை. ஐ.பி.எல். போட்டியுடன் தொடர்புடைய தவறுகள் குறித்து ஏற்கனவே நான் பிரச்சினை எழுப்பினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது குரல் கேட்கப்படவில்லை. எனவே ஐ.பி.எல். போட்டியில் எழுந்துள்ள விவகாரங்கள் குறித்து உயர் மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் டெல்லி பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். கீர்த்தி ஆசாத் கோரிக்கைக்கு ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் சரத் யாதவ் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், கீர்த்தி ஆசாத் ஒரு முக்கிய பிரச்சினையை எழுப்பி இருக்கிறார். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். ஐ.பி.எல். போட்டி ஒரு நாடகம்தான். இது இந்தியக் கலாசாரத்தை சீரழிக்கிறது என கூறினார். |
| Posted: 18 May 2012 09:51 AM PDT |
| டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 18 May 2012 07:43 AM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதன்மை நிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை இங்கு பார்க்கவும். துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 131 பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மாநில அரசு மூலம் தேர்வு செய்யப்படும் உயர் பதவிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் நடத்தி வருகிறது. துணை கலெக்டர் - 56, டிஎஸ்பி - 29, உதவி வணிக வரி அலுவலர் - 28, மாவட்ட பதிவாளர் - 7, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் - 10, கோட்ட தீயணைப்பு அலுவலர் - 1 ஆகிய 131 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜுலை மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது. இந்த முடிவுகள் வெளியானதால் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களது தேர்வு முடிவைக் காண டிஎன்பிஎஸ்சி-யின் அதிகார பூர்வ இணையதளத்தை நாடி வருகின்றனர். |
| கமலின் உதவிக்காக காத்திருக்கும் ஜெயம் ரவி! Posted: 18 May 2012 07:23 AM PDT நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் அமீர் இயக்கத்தில் 'ஆதிபகவன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆதிபகவன் படப்பிடிப்பை அமீர் இடைவெளிவிட்டு துவங்கினாலும் விரைவாக முடித்துவிட்டார். ஆதிபகவன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி 'பூலோகம்' படத்திலும் சமுத்திரக்கனி படத்திலும் நடிக்கிறார். பூலோகம் படத்தில் 'கிக் பாக்ஸர்'-ஆக்வும், சமுத்திரக்கனி படத்திலும சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் தனது உடல் மற்றும் மேக்-அப் சம்பந்தமான சில யோசனைகளை கமல்ஹாசனிடம் கேட்கப்போகிறாராம். இத்தனி வயதிலும் தன் உடலை நன்றாக பராமரித்து வரும் கமலின் யோசனைகள் தனக்கு கண்டிப்பாக பயனளிக்கும் என்பது ஜெயம் ரவியின் நம்பிக்கையாம். கமல் தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட வேலைகளுக்காக வெளிநாட்டில் உள்ளார். கமல் சென்னை வந்ததும் அவரை சந்திக்க இருப்பதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். |
| இந்தியில் 'பிதாமகன்'- சல்மான்கான் ஹீரோ! Posted: 18 May 2012 07:11 AM PDT பாலா இயக்கத்தில் வெளியாகி, வெற்றியும் விருதுகளையும் குவித்த பிதாமகன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் விக்ரம் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். சூர்யாவின் வேடத்துக்குப் பொருத்தமான நடிகரை தேடி வருகிறார்கள். சதீஷ் கவுசிக் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே பாலாவின் சேது படத்தை இந்தியில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 9 ஆண்டுகளுக்கு முன் வந்தது பிதாமகன் படம். தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. விக்ரம், சூர்யா இணைந்து நடித்தனர். விக்ரமுக்கு இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. பிதாமகன் ரீமேக் குறித்து சதீஷ் கவுசிக் கூறுகையில், "பிதாமகன்' படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. இந்திக்கேற்ப லேசான மாறுதல்களுடன் இந்தக் கதையை எடுக்கிறேன். விக்ரம் கேரக்டருக்கு சல்மான்கான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளேன். சூர்யா வேடத்துக்கு சில நடிகர்களைப் பார்த்து வைத்திருக்கிறோம். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது," என்றார். |
| ஐ.பி.எல்லே வேண்டாம்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்! Posted: 18 May 2012 06:48 AM PDT நடப்பு ஐ.பிஎல்.5வது தொடரில் ஸ்பாட் பிக்சிங், ஷாருக் ரகளை, லூக் கைது என தொடர்ச்சியான சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில் யாரும் ஐ.பி.எல். ஆட வேண்டாம்.. நடப்பு தொடரையே நிறுத்திவிடுங்கள் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த லாலு, ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்த வேண்டும் என்றார். மும்பை வான்கடே மைதானத்தில் மதுபோதையில் ஷாருக்கான் தகராறு செய்ததால் அவர் அந்த மைதானத்துக்குள் நுழைய 5 ஆண்டு தடைவிதித்துள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம். ஆனால் தமது குழந்தைகளைப் பாதுகாக்கவே கோபப்பட்டேன்... மது அருந்திவிட்டு தகராறு செய்யவில்லை என்று நடிகர் ஷாருக்கான் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத், ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்தக் கோரி வரும் 20-ந் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதேபோல் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவும், இந்திய கலாசாரத்துக்கு எதிராக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வலம் வரும் இந்த ஐ.பி.எல். போட்டிகளே வேண்டாம் என்று கூறியுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ்வும் கூட அரசாங்கம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். |
| அஜித் ரெடி! இணைந்து நடிக்க சம்மதிப்பாரா விஜய்? Posted: 18 May 2012 06:36 AM PDT ரஜினியும் கமலும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள்? , அஜித்தும் விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பர்கள்? என்பது இதுவரையிலும் கேள்விக்குறியை தாங்கியபடியே நிற்கின்றன. ரஜினியும் கமலும் இணைந்து அபூர்வ ராகங்கள், அலிபாபாவும் அற்புதவிளக்கும், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் அஜித்தும் விஜய்யும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. இப்போதைய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக அஜித், விஜய் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அஜித், விஜய் இருவரும் ரஜினி, கமல் சொல்வது போல் கதை எனக்கும், அவருக்கும் பிடித்து நேரமும் கூடிவந்தால் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகின்றனர். கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்கை கையில் எடுத்திருப்பவர், அஜித்தை வைத்து அமராவதி படம் எடுத்த இயக்குனர் செல்வா தான். ரஜினி, கமல் நடித்திருந்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் செல்வா. தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி முதல் படத்தையே வெற்றியடையச் செய்த இயக்குனர் என்கிற முறையில் அவர் ரீமேக் செய்யும் இந்த படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டுள்ளாராம். நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் முன்வந்திருப்பதாக தெரிகிறது. தமிழ் சினிமா ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் செயல்பட்டால் அடுத்ததாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடக்கும் என்பது கோடம்பாக்கத்து தகவல். ஒருவேளை விஜய் இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசப்பட்டால் அஜித்துடன் இணைந்து நடிக்க விஜய் சம்மத்திப்பாரா? என்பது கேள்விக்குறியே. கேள்விக்குறி ஆச்சர்யக்குறியாக மாறுமா?... |
| ‘ராட்டினம்’ படத்துக்கு வரிவிலகளிக்க திரையுலக பிரபலங்கள் வேண்டுகோள் Posted: 18 May 2012 06:11 AM PDT புதுமுகங்கள் நடிக்கும் 'ராட்டினம்' படத்தின் பிரத்யேக காட்சி இன்று பழம்பெரும் நடிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில், சினிமாத் துறையைச் சார்ந்த பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகர் வி.எஸ்.ராகவன், நடிகை ராஜ சுலோச்சனா, நடிகர் செந்தில் ஆகியோர் பார்த்தனர். படம் பார்த்துவிட்டு அவர்கள் கூறுகையில், படம் மிகவும் நன்றாக இருந்தது. படத்தின் திரைக்கதையில் வேகமும், விறுவிறுப்பும் கூட்டியிருக்கிறார் இயக்குனர். புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் யதார்த்தமான கதையை ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பதற்காக இயக்குனருக்கு எங்களது பாராட்டுக்கள். இதுபோன்ற தரமான படங்களுக்கு தமிழக அரசு கட்டாயம் வரிவிலக்கு அளிக்க வேண்டும். வரிவிலக்கு அளிக்கும் பட்சத்தில் இதுபோன்ற நல்ல கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்கள் எடுக்க இயக்குனர்களும், அவர்களுக்கு உறுதுணையாக தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள். இதனால் தமிழக அரசு இப்படத்துக்கு வரி விலக்கு அளித்து தமிழ் சினிமாவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் |
| லூக் மீது புகார் கூறிய பெண் நேற்றிரவு என்னிடம்...: மல்லையா மகன் Posted: 18 May 2012 05:58 AM PDT ராயல் சேலஞ்ர்ஸ் அணி வீரர் லூக் போமர்ஸ்பேச் மீது பாலியல் புகார் கூறும் அமெரிக்க பெண்மணியின் நடத்தை பற்றி அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டிக்குப் பிறகு விடுதிக்குச் சென்ற லூக்போமர்ஸ்பேச் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்கப் பெண்ணிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட அவரது வருங்கால கணவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அப்பெண்ணும் அவரது வருங்கால கணவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் லூக்கை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையல் லூக் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் நடத்தை பற்றி பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, தூங்கி எழுந்து பார்த்தால் லூக் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்கள் வந்துள்ளன. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. 30 நிமிடங்கள் கழித்து அவர் செய்த டுவீட், லூக் தன்னிடம் தவறாக நடந்ததாகவும், தன்னுடைய வருங்கால கணவரை அடித்ததாகவும் அந்த அமெரிக்க பெண் புகார் கூறியுள்ளார். இது என்ன கூத்து. அந்த பெண் நேற்று இரவு என்னை ஓவராக உரசினார். மேலும் என்னுடன் சாட் செய்ய பிளாக்பெர்ரி போனின் பின் நம்பரை கேட்டார். உண்மையிலேயே அவருடன் வந்தவர் அவரின் வருங்கால கணவர் என்றால் அந்த பெண் இப்படியா நடந்திருப்பார்?. முதலில் ஷாருக் கான், தற்போது இது. ஏதாவது சர்ச்சையைத் தான் அனைவரும் விரும்புகிறார்கள். கிரிக்கெட்டை மட்டும் ரசிக்கலாமே. நேற்று கெய்ல் சதமடித்ததை அனைவரும் மறந்து விட்டார்களா? லூக் தவறு செய்திருந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அந்த பெண் செய்வது முட்டாள்தனம் என்று தெரிவித்துள்ளார். சித்தார்த்திடம் ஏன் இவ்வாறு டுவீட் செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளிக்காமல் கோபப்பட்டு காரில் ஏறிச் சென்றுவி்ட்டார். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும், தான் குற்றமற்றவன் என்றும் லூக் தெரிவித்துள்ளார். |
| கருணாநிதிக்கு சொந்த சரக்கு கிடையாது!: தமிழருவி மணியன் சாடல் Posted: 18 May 2012 05:43 AM PDT அடுத்தவர் கருத்தை எடுத்துக்கொண்டு அதை தன்னுடைய கருத்தாக கூறி ஊடகத்தில் பரப்பிவிடுபவர் கருணாநிதி என்று காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டினார். சத்யம் தொலைக்காட்சியில் இன்று காலையில் 11.30 மணிக்கு ஒளிபரப்பான 'சூடா ஒரு டாக்' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழருவி மணியனிடம் ஈழம் குறித்தே பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டன. தனி ஈழம் சாத்தியமா? உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி அதன் மூலமே தனி ஈழம் குறித்து முடிவு செய்யவேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார் பேட்டி கண்டவர். அதற்கு பதிலளித்த தமிழருவி மணியன், எம் இன மக்களை காங்கிரசின் உதவியோடு ராஜபக்ஷே அழித்தெடுத்தான் என்று சூடானார். பின்னர் தொடர்ந்த அவர், அடுத்தவன் கடை சரக்கை எடுத்து தன்னுடைய கடை சரக்காக விற்பவர் கருணாநிதி என்றார். முதன் முதலாக வைகோதான் தமிழ் ஈழம் தேவையா என்பதை ஈழத் தமிழர்கள்தான் நிர்ணயம் செய்யவேண்டும். வாக்கெடுப்பு நடத்தி அவர்களிடம் கருத்துக்களை கேட்டுப் பெறவேண்டும் என்று கூறியவர். அதை இப்போது கூறும் கருணாநிதி தன்னுடைய கருத்தைப்போல பதிவு செய்யப் பார்க்கிறார் என்றார். பேட்டியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் அவர் முன் வைத்த கருத்துக்கள் உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்களை கவர்ந்திருக்கும் என்பது நிச்சயம். |
| 'கழுகு' பட இயக்குனர் மீது இளம்பெண் புகார் Posted: 18 May 2012 05:32 AM PDT கிருஷ்ணா நாயகனாக நடித்த 'கழுகு' படத்தை இயக்கியவர் சத்யசிவா. இப்படம் சமீபத்தில் ரிலீசானது. சத்யசிவா தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக மணப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி போலீசில் புகார் அளித்துள்ளார். சிவரஞ்சனி 'கழுகு' படத்தை தயாரித்த பட்டியல் சேகர் அலுவலகத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒன்றாக சுற்றினார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் சத்யசிவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதாகவும் சிவரஞ்சினியை கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவரஞ்சனி கூறியதாவது:- தயாரிப்பாளர் பட்டியல் சேகர் அலுவலகத்தில் பணியாற்றியபோது 'கழுகு' பட இயக்குனர் சத்யசிவாவை சந்தித்தேன். என்னிடம் வலிய வந்து காதலிப்பதாக கூறினார். நான் ஏற்கவில்லை. நீ இல்லாவிட்டால் செத்து விடுவேன் என்று மிரட்டினார். ஒரு கட்டத்தில் அவர் நீ காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று கூறி மொட்டை மாடியில் நின்று கொண்டு மிரட்டினார். ஒருமுறை தூக்கில் தொங்கப் போவதாக கூறி துப்பாட்டாவை கழுத்தில் மாட்டினார். இப்படி சினிமாவில் வருவதுபோல செய்து காட்டி என்னை மயக்கி விட்டார். என்னை தீவிரமாக காதலிப்பதாக நம்பி நானும் காதலிக்க துவங்கினேன். என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். அவரது பெற்றோரிடம் அழைத்து போய் அறிமுகப்படுத்துவதாகவும் சொன்னார். ஆனால் அதன்படி செய்யவில்லை. திடீரென என்னை புறக்கணிக்க துவங்கினார். வேறு பெண்களுடன் சுற்றுவதாக அறிந்தேன். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் பிழைத்து கொண்டேன். எனக்கு துரோகம் செய்த சத்யசிவா தண்டிக்கப்பட வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். சிவரஞ்சினியின் வீடு மாங்காடு அருகே உள்ள கொளப்பாக்கத்தில் உள்ளது. இதையடுத்து அவரது புகார் மனு மாங்காடு போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிவரஞ்சினியை அழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த விசாரணை குமணன்சாவடி மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். |
| 6ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கி, கருவை கலைக்க மாத்திரை கொடுத்த ஆசிரியர் Posted: 18 May 2012 05:12 AM PDT உத்தர பிரதேசத்தில் 6ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கி கருவை கலைக்க வலுக்கட்டாயமாக மாத்திரை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம் உன்னோவ் பகுதியில் உள்ள பத்தேஹ்பூர் சௌராசி பிளாக்கைச் சேர்ந்தவர் லதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)(14). அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியான கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு திடீர் என்று ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கினார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் அங்குள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக லதாவை லக்னோவில் உள்ள ராணி மேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 10 வார கர்ப்பமாக இருந்த லதாவுக்கு பாதுகாப்பற்ற முறையில் அபார்ஷன் செய்ததால் அவரது கர்பப்பை பாதிக்கப்பட்டு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்ட லதாவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் பிறகே லதா நடந்த உண்மையக் கூறியுள்ளார். அவருக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ஹரி நாராயண் லதாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கற்பழித்துவிட்டு அதை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். அவருக்கு பயந்து லதா இதை யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் லதா கர்ப்பமானார். இதையறிந்த ஆசிரியர் பள்ளியில் சமையல் வேலை செய்யும் அனுராதா மூலம் லதாவுக்கு கருச்சிதைவு மாத்திரை கொடுத்துள்ளார். அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் தான் அவருக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது என்று கூறியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரையும், அனுராதாவையும் கைது செயதனர். இது குறித்து விசாரணை நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் படிக்கும் வேறு எந்த மாணவியும் ஆசிரியர் ஹரி நாரயணால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. |
| பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பற்றி திடுக்கிடும் தகவல்: இந்திய தூதரகத்தை தகர்க்க திட்டம் Posted: 18 May 2012 05:03 AM PDT பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இந்திய தூதரகத்தை தகர்க்க திட்டமிட்டிருந்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள தலோஸ் நகரில் தீவிரவாதி முகமது மெர்ரா கடந்த மார்ச் 22-ந்தேதி சிறப்பு அதிரடிபடையால் சுட்டுக் கொல்லப்பட்டான். தலைநகர் பாரீசில் மார்ச் 15-ந்தேதி அவன் 3 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றான். அதன்பின்னர் 4 நாட்கள் கழித்து யூதர் இனத்தை சேர்ந்த ரப்பி என்பவரையும் அவரது 2 மகன்களையும் பள்ளியில் வைத்து சுட்டு கொன்றான். மேலும் அதே பள்ளி வளாகத்தில் 7 வயது சிறுமியை கொலை செய்ய துரத்தினான். இந்த கொலை காட்சிகள் அனைத்தும் தானியங்கி காமிராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து அவனை தேடி வந்த போலீசார் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அவன் பதுங்கி இருப்பதை அறிந்தனர். அதை தொடர்ந்து 32 மணி நேர முற்றுகைக்கு பிறகு சிறப்பு அதிரடி படை போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட தீவிரவாதி மெர்ரா பற்றிய தகவல் அப்போது வெளியிடப்படவில்லை. அவன் தலிபான் தீவிரவாதி என தற்போது தெரிய வந்துள்ளது. அவன் கடந்த ஆண்டு கோடை காலத்தில் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயிற்சி முகாமில் பங்கேற்று இருக்கிறான். அங்கு அவனுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள இந்திய தூதரகத்தை தகர்க்கும்படி ஜிகாத் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவன் பாரிசில் உள்ள இந்திய தூதரகத்தை தகர்க்க திட்டமிட்டிருந்தான். இந்த தகவலை வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர். இந்த தகவலை பாரிசில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தியாக பிரசுரித்துள்ளது. |
| கருணாநிதி யார்?.. சமத்துவப் பெரியாரா?, சிறுபான்மையினரின் காவலரா?, உற்ற நண்பரா?, இலக்கிய ஏந்தலா? Posted: 18 May 2012 04:57 AM PDT திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி திராவிட கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பீட்டர் அல்போன்ஸ் மக்களாட்சியின் மாண்பறிந்தவர் என்ற தலைப்பிலும், திருமாவளவன் சமத்துவப் பெரியார் எனும் தலைப்பிலும், காதர் மொய்தீன் சிறுபான்மையினரின் சீரியக் காவலர் எனும் தலைப்பிலும், பொன்.குமார் உழைப்போரின் உற்ற நண்பர் எனும் தலைப்பிலும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா இலக்கிய ஏந்தல் எனும் தலைப்பிலும் பேசவுள்ளனர். இது குறித்து திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழ் சமுதாயத்தின் ஒப்பற்ற பாதுகாவலர், தலைவர் கலைஞரின் 89வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2ம் தேதி (சனிக்கிழமை) மாலை கலைஞரை பாடிப் பாராட்டி போற்றும் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவிற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சுகவனம் எம்.பி., சேலம் ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தொடக்கமாக தஞ்சை செல்வி ஐய்யப்பன் குழுவினரின் நாட்டுப்புற தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து திராவிட கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மக்களாட்சியின் மாண்பறிந்தவர் என்ற தலைப்பிலும், திருமாவளவன் சமத்துவப் பெரியார் எனும் தலைப்பிலும், காதர் மொய்தீன் சிறுபான்மையினரின் சீரியக் காவலர் எனும் தலைப்பிலும், பொன்.குமார் உழைப்போரின் உற்ற நண்பர் எனும் தலைப்பிலும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா இலக்கிய ஏந்தல் எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் டெசோ அமைப்புக்கு மறு உயிர் தரும் திமுகவின் நடவடிக்கைகளின்போது தனக்கு அந்தக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திருமாவளவன் வருத்தம் தெரிவித்திருந்தார். இந் நிலையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| மானபங்கப் புகார்: கோர்ட்டில் மயங்கி விழுந்த ஐபிஎல் வீரர் லூக் போமர்ஸ்பேச் Posted: 18 May 2012 10:27 AM PDT புதுடெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிரிக்கெட் வீரர் லூக் போமர்ஸ் பேச் மயக்கமடைந்தார். ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி நேற்று டெல்லி அணியை வீழ்த்தியது. வெற்றியால் உற்சாகம் அடைந்த பெங்களூர் அணி வீரர் லூக் போமர்ஸ் பேச் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று மதுபானம் அருந்தி மகிழ்ச்சியை கொண்டாடினார். அப்போது அங்கு அமெரிக்க வாழ் இந்திய பெண் ஒருவர் தனது காதலனுடன் வந்திருந்தார். அந்த பெண்ணிடம் லூக் போமர்ஸ் பேச் ரகளையில் ஈடுபட்டு மானபங்கம் செய்தாதாக புகார் கூறப்பட்டது. (அந்த வீடியோ) இதனையடுத்து அவரை கைது செய்த டெல்லி போலீஸார், இன்று டெல்லியிலுள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்நிலையில் அவர் கோர்ட்டு வளாகத்தில் மயக்கமடைந்தார். பின்னர் அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்ததாவது; ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான லூக் போமர்ஸ் பேச், அந்த விருந்தின் போது யாரையும் அடிக்கவில்லை. அமெரிக்கப் பெண்ணை மானபங்கமும் செய்யவில்லை என வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லூக் போமர்ஸ் பேச்சிற்கு ஒருநாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புகார் கொடுத்த பெண்ணின் நடத்தை மீது பெங்களூர் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சித்தார்த் மல்லையா சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவருடைய டுவிட்டர் இணையப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; 'விருந்தில் அந்தப் பெண் நடந்து கொண்ட விதம் சரியானதாகத் தெரியவில்லை. அவர் நேற்று நடந்து கொண்ட விதம் அவருடைய காதலனுக்கு எதிர்கால மனைவியாக இருப்பார் என்பதை உறுதி செய்யவில்லை. அப்பெண் போதையில் என் மீதே சாய்ந்து கிடந்தார்.' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா 'லூக் போமர்ஸ்பேச் இனி பெங்களூர் அணியில் விளையாட மாட்டார்'' என்று அறிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























