Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


அசாம் படகு விபத்து: சாவு எண்ணிக்கை 103 ஆக உயர்வு

Posted: 30 Apr 2012 11:02 PM PDT


அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தின் வழியாக பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது. இந்தப் பகுதி மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகு போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். நேற்று மாலை 4 மணி அளவில் துப்ரி பகுதியில் இருந்து ஹத்சிங்கி மரிநோக்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சென்று கொண்டு இருந்தது.

அதில் குழந்தைகள் பெண்கள் என 250 முதல் 300 பயணிகள் வரை இருந்தனர். ஆற்றின் நடுப்பகுதியில் சென்றபோது மோசமான வானிலை நிலவியது. பலத்த சூறாவளியுடன் மழை பெய்தது. இதில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் ஆற்று வெள்ளத்தில் தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த 25 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தனர். அவர்கள் படகு கவிழ்ந்தது பற்றி மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. உள்ளூர் தீயணைப்பு படையினர் போலீசாருடன் இணைந்து படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே மிதந்தது. உடனடியாக 37 பிணங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றது. இன்று காலை வரை 103 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், படகில் பயணம் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் தடுப்பு படை பிரிவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. படகில் 300 பேர் வரை பயணம் செய்துள்ளனர். 25 பேர் மட்டுமே உயிருடன் திரும்பியுள்ளனர். எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று மாவட்ட துணை கமிஷனர் குமுசந்திரக கவிதா கூறினார். படகு விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்து பற்றி விசாரணை நடத்த மாநில முதல்-மந்திரி அருண் கோகாய் உத்தவிட்டுள்ளார். இந்த விபத்து நடந்த அதே நேரத்தில் ஜாலேஸ்வர் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற மற்றொரு படகும் கவிழ்ந்தது. இதில் 12 பேர் பலியானர்கள். இந்தப்பகுதியில் சூறாவளியுடன் மோசமான வானிலை நிலவுவதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதை கவனிக்காமல் சென்றதால் இந்த கோர சம்பவம் நடந்ததாக மாவட்ட துணை கமிஷனர் கவிதா கூறினார்.



தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட உலக வர்த்தக மைய கட்டிடம் நியூயார்க்கில் மீண்டும் உதயம்

Posted: 30 Apr 2012 11:00 PM PDT


a
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்' என்ற பெயரில் உலக வர்த்தக மைய கட்டிடம் இருந்தது. இரட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்று இருந்தது.
 
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி அந்த கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோத வைத்து தகர்த்து தரை மட்டமாக்கினர். இதில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  
 
உலக பெருமை வாய்ந்த அந்த கட்டிடத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நியூயார்க்கில் மீண்டும் இரட்டை கோபுரங்களுடன் வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில், ஒரு கட்டிடம் 1250அடி (381 மீட்டர்) உயரத்திலும், மற்றொன்று 1,776 அடி (541.3 மீட்டர்) உயரத்திலும் கட்டப்படுகிறது.
 
அதில் 1250 அடி உயர கோபுரம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது.   மற்றொரு கோபுரம் அடுத்த ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடம் 104 அடுக்குமாடிகளை கொண்டதாக கட்டப்படுகிறது. இதன் மூலம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் எந்த அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது.



'டீல்'.... ஜனாதிபதி பதவி காங்கிரசுக்கு.. துணை ஜனாதிபதி பதவி பாஜகவுக்கு..!

Posted: 30 Apr 2012 10:53 PM PDT


ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாஜக சொல்லும் நபரை துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுமே வெளியில் நாடகம் போட்டாலும், உள்ளுக்குள் அவர்களிடையே 'டீல்' ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.

வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தலும், ஆகஸ்ட் மாதத்தில் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்கவுள்ளது.

எல்லா கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் தவிர இந்தப் பதவிகளுக்கு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்பில்லை.

இந்த இரு பதவிகளுக்குமே யாரையும் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட பலம் மத்தியில் ஆளும் காங்கிரசுக்கோ, எதிர்க் கட்சியான பாஜகவுக்கோ இல்லை. கூட்டணிக் கட்சிகளும், நடுநிலையில் உள்ள முலாயம் சிங், மாயாவதி, லாலு பிரசாத் போன்றோரும் ஆதரித்தால் மட்டுமே காங்கிரசால் தனது வேட்பாளரை வெல்லச் செய்ய முடியும்.

அதே போல கூட்டணிக் கட்சிகளும் கூட்டணியில் இல்லாத தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களும் ஆதரித்தாலும் கூட பாஜகவாலும் அவ்வளவு எளிதாக தனது வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்க வைத்துவிட முடியாத நிலை உள்ளது.

இதனால் காங்கிரசுக்கு பாஜகவின் உதவியும், பாஜகவுக்கு காங்கிரசின் உதவியும் நிச்சயம் தேவை. இந்த உதவிகளை நேரடியாக செய்து கொண்டால் 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அது பாஜகவுக்கு எதிரானதாக முடியும். பதவிக்காக காங்கிரசுடன் அந்தக் கட்சி கைகோர்த்ததாக பெயர் வந்துவிடும்.

இந்தப் பெயர் வந்துவிடாமல் தவிர்ப்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதனால் மறைமுகமாக ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள காங்கிரசும் பாஜகவும் தயாராகி வருகின்றன.

இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி பதவிக்கு தனது வேட்பாளரையும், துணை ஜனாதிபதி பதவிக்கு பாஜக சொல்லும் நபரையும் நிறுத்த காங்கிரஸ் முன் வந்துள்ளது. இதை பாஜகவும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு சிரோன்மணி அகாலி தளம் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலின் பெயரை காங்கிரசிடம் பாஜக முன் வைத்துள்ளது.

இதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் ஜனாதிபதி பதவிக்கு பாஜக யாரையும் நிறுத்தாது, காங்கிரஸ் முன்மொழியும் வேட்பாளரை ஏற்கும் அல்லது எதிர்க்காமல் நடுநிலை வகிக்கலாம் என்று தெரிகிறது.

இதன்மூலம் காங்கிரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்ற பெயரும் பாஜகவுக்குக் கிடைக்கும்.

காங்கிரஸை பொறுத்தவரை தான் நிறுத்தும் வேட்பாளரை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இதனால் பாஜகவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே எந்த டீலும் செய்து கொள்ள அந்தக் கட்சித் தயாராகவே உள்ளது.

நடுநிலை வகிக்கும் கட்சிகளில் முலாயம் சிங் யாதவையும், கூட்டணிக் கட்சிகளில் மம்தா பானர்ஜியையும் தனது வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால், பிரச்சனையில்லாமல் வென்றுவிடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.

முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை கடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வர உதவிய முஸ்லீம்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அப்துல் கலாமை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். கலாமுக்கு பதில் இன்னொரு இஸ்லாமியரான அன்சாரியை நிறுத்தி அவரை ஆதரிக்குமாறு காங்கிரஸ் கோரினால் அதை அவர் ஏற்பார் என்றே தெரிகிறது.

மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூறி வருகிறார். இந்த விஷயத்தில் மத்திய அரசு விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், அவர் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பார்.



கடத்தப்பட்ட கலெக்டர் நாளை விடுதலை- மாவோயிஸ்டுகள் முடிவு

Posted: 30 Apr 2012 10:46 PM PDT


சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடந்த 21-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால் சிறைகளில் உள்ள 17 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

மாவோயிஸ்டு பிரதிநிதிகளுடன் சமரச பேச்சு நடத்துவதற்காக சத்தீஸ்கர் மாநில முதல்- மந்திரி ராமன்சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மாவோயிஸ்டுகள் சார்பில் பேச ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி.சர்மா, ஐதராபாத் பேராசிரியர் ஹர் கோபால் இருவரும் தேர்வானார்கள். அவர்கள் காட்டுக்குள் சென்று மாவோயிஸ்டுகளுடன் பேசினார்கள். முதல் 3 சுற்று பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

கடந்த சனிக்கிழமை அவர்கள் மீண்டும் மாவோயிஸ்டுகளை சந்தித்து பேசினார்கள். நேற்று ராய்ப்பூர் திரும்பிய அவர்கள் சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி ராமன் சிங் தலைமையிலான 5 பேர் குழுவிடம் பேச்சு நடத்தினார்கள். ராமன்சிங் வீட்டில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அந்த உடன்பாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது 2 பக்க பத்திரமாக தயாரிக்கப்பட்டது. அந்த பத்திரத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

அரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் முடிவு செய்துள்ளனர். 2-ந்தேதிக்குள் அவர் பத்திரமாக வந்து சேர்வார் என்று மாவோயிஸ்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதை சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங்கும் உறுதி செய்தார். கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றிரவு அல்லது நாளை அதிகாலை அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளின் இந்த முடிவால் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 17 பேரை விடுதலை செய்தால்தான் கலெக்டரை விடுவிப்போம் என்று  கூறி வந்த மாவோயிஸ்டுகள் மனம் மாறியது ஏன் என்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளன.

கலெக்டர் அலெக்சை கடத்தியது மாவோயிஸ்டு மூத்த தலைவர்களில் சிலருக்கு பிடிக்கவில்லையாம். மாவோயிஸ்டுகளுக்கு கிராம மக்களிடம் உள்ள இமேஜை கலெக்டர் கடத்தல் விவகாரம் பாழ்படுத்தி விடும் என்று அவர்கள் எச்சரித்தார்களாம். இதையடுத்தே கலெக்டரை விடுவிக்க, மாவோயிஸ்டுகள் முன் வந்ததாக கூறப்படுகிறது. வெறுமனே விடக் கூடாது என்பதற்காகத்தான் மாவோயிஸ்டுகள் மீதான வழக்குகள் பற்றி ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

இந்த கோரிக்கையை சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன்சிங் ஏற்றுக் கொண்டார். கலெக்டர் விடுவிக்கப்பட்ட உடனேயே இந்த உயர் மட்டக்குழு அமைக்கப்படும். அவர்கள் மாவோயிஸ்டு தலைவர்கள் மீதான வழக்குகளை ஆய்வு செய்து விரைவில் விடுதலையாக உதவு வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறைகளில் உள்ள மாவோயிஸ்டுகள் யாரும் விடுதலை செய்யப்படாமலேயே கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மீட்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



அன்சாரி- பிரணாப் முகர்ஜிக்கு நோ ..நோ..; கலாம் ஓகே. ..ஓகே... -பாஜக

Posted: 30 Apr 2012 10:42 PM PDT


ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்கத் தயார் என்று பாஜக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அப்துல் கலாமை பாஜக அரசு தான் ஜனாதிபதியாக்கியது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அவர் மீண்டும் ஜனாதிபதியாகாமல் தடுத்தது. வெளிநாட்டவர் என்பதால் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்ததால் கலாமை காங்கிரஸ் ஓரங்கட்டியது.

இந் நிலையில் மீண்டும் கலாமை ஜனாதிபதியாக்கத் தயார் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமை நிறுத்தலாம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் எங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்க நாங்கள் தயார்.

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் எவரையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

முகர்ஜி தீவிரமான அரசியலில் உள்ளார். அன்சாரிக்கு ஜனாதிபதி பதவிக்கான தகுதி கிடையாது என்பதால் அவர்களை ஆதரிக்க நாங்கள் விரும்பவில்லை. துணை ஜனாதிபதி பதவிக்கு எங்களது வேட்பாளரை நிறுத்திவிட்டு, அதற்கு கைமாறாக காங்கிரஸ் நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை.

நாங்கள் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைக்கான தேர்தலுக்குத் தயாராகி வருகிறோம். எனவே, காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு உள்ளது போன்ற தோற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை.

அதே நேரத்தில் எங்களுக்கும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வாய்ப்புண்டு. அதன்படி அவர்களது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவும், எங்களது துணை ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது. நாங்கள் வெற்றிபெறும் நோக்கத்துடன் போட்டியிடுவோம். வெற்றிபெற எத்தனை வாக்குகள் தேவைப்படும் என்பதை கணக்கிட்டுத் தீர்மானிப்போம் என்றார்.

வேட்பாளர் யார்? கூற மறுக்கும் பாஜக:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு பதிலளிக்க சுஷ்மா மறுத்துவிட்டார்.



கமலின் விஸ்வரூபம் ( டிரெய்லர் Trailer)

Posted: 30 Apr 2012 10:28 PM PDT




கமலின் விஸ்வரூபம் - அசத்தும் முதல் பார்வை!

Posted: 30 Apr 2012 10:11 PM PDT


உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாஸனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் ஸ்டில் மற்றும் 30 வினாடிகள் கொண்ட ட்ரைலர் இன்று வெளியானது.

கமல் ஹாஸன் மிகவும் ரகசியம் காத்து வந்ததால் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கமல் நேற்று இந்தப் படத்தின் முதல் போஸ்டர் ஸ்டில்லை வெளியிட்டார். விஸ்வரூபம் என்ற தலைப்பு, உருது மொழி எழுத்துருவைப் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. பின்னணியில் அமெரிக்கா.

இந்தப் படம் ஆப்கன் தீவிரவாதம் தொடர்பானது என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதன் எழுத்துரு உருது போல அமைந்திருப்பது பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ 30 செகன்ட் ட்ரைலரிலும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது. அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்.. 'முழு நிறைவு பெறும் தருவாயில்... எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாஸன்' என்று முடிகிறது.

இந்த ட்ரைலரை கமல் உருவாக்கியுள்ள ஸ்டைல் அந்தப் படத்தின் தரத்தைக் காட்டுவதாக உள்ளது. எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது.

படத்தை கமல் ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது விஸ்வரூபம்.

கமல் சார்... அடுத்த டீஸர் எப்போ.. ஆர்வம் தாங்கல!



சென்னையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது: வீடு வீடாக சென்று தகவல் சேகரிப்பு

Posted: 30 Apr 2012 09:54 PM PDT

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த வாரம் தொடங்கியது. சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் இன்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி பகுதியில் 14.91 லட்சம் வீடுகள் உள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 65 லட்சம் ஆகும். மண்டல வாரியாக கணக்கெடுப்புக்கு அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7,152 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 

வீடு வீடாக நேரில் சென்று தகவல்களை சேகரித்து வருகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் உறுப்பினர்களின் பெயர், கல்வித் தகுதி, வீட்டின் நிலைமை, பொருளாதார நிலைமை, சாதி உள்பட பல்வேறு கேள்விகள் கேட்டு பதிவு செய்யப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் டி. கார்த்திகேயன் கூறியதாவது:- 

சாதிவாரி கணக்கெடுப்பு பணிக்காக மாநகராட்சி ஆணையர், இணை ஆணையர்கள், மத்திய வட்டார துணை ஆய்வாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 7,152 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 64 பொறுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். 

பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே சரியான தகவல்களை தயக்கமின்றி கணக்கெடுக்க வரும் ஊழியர்களிடம் தெரிவியுங்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் பயனுள்ள பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்ற வாய்ப்பாக அமையும். 

இவ்வாறு அவர் கூறினார்.




சாதிகளே இல்லை என்று சொல்லி கொண்டு இப்படி எந்த ஜாதியில் எத்தனை பேர் இருகிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்துறீங்களே இது தான் ஜாதீ யை ஒழிக்கிற லட்சணமா ...?!





பில்லா 2 பாடல்கள் டவுன்லோட் (Mediafire)

Posted: 30 Apr 2012 09:47 PM PDT

சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன்- பிரசன்னா பேட்டி

Posted: 30 Apr 2012 08:50 PM PDT

நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை சினேகாவுக்கும் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. இது, காதல், கலப்பு திருமணமாகும். சினேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். பிரசன்னா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். 

திருமணம் தொடர்பாக சினேகாவும், பிரசன்னாவும் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்கள். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திருமணத்துக்குப்பின் சினேகா தொடர்ந்து நடிப்பாரா? 
பிரசன்னா பதில்:- திருமணத்துக்குப்பின் சினேகா நடிக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அவர் நல்ல நடிகை என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. திருமணத்துக்குப்பின் அவர் விருப்பப்பட்டால் நடிக்கலாம், நடிக்காமலும் இருக்கலாம். அவருக்கு, நான் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். 

கேள்வி:- தேன் நிலவுக்கு எந்த நாட்டுக்கு போகிறீர்கள்? 
பிரசன்னா பதில்:- சினேகாவும், நானும் நடித்து முடித்துக்கொடுக்க வேண்டிய சில படங்கள் உள்ளன. அந்த படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு, வருகிற ஜுன் மாதம் தேன் நிலவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். எந்த நாட்டுக்கு செல்வது என்பதை முடிவு செய்யவில்லை. திருமணத்துக்குப்பிறகு பார்க்கலாம். 

கேள்வி:- உண்மையை சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? 
பிரசன்னா பதில்:- இரண்டு வருடங்களாக காதலித்தோம். எங்கள் 2 பேரின் வீட்டிலும் சம்மதித்தபிறகுதான், காதல் பற்றி வெளியில் சொல்ல ஆரம்பித்தோம். 

கேள்வி:- உங்கள் இருவரில் காதலை முதலில் பரிமாறிக்கொண்டது யார்?
பிரசன்னா பதில்:- நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். எங்களுக்கிடையே காதல் மலர்ந்தபின் திருமணம் செய்துகொண்டால் என்ன? என்று யோசிக்க ஆரம்பித்தோம். வாழக்கைப் பற்றி நிறைய பேசினோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். நான், அவருக்கு கணவராக இருந்தால் எப்படி இருக்கும்? அவர், எனக்கு மனைவியாக வந்தால் எப்படி இருக்கும்? என்பதை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். இருவருக்குமே வாழ்க்கையைப் பற்றி ஒரேமாதிரியான அபிப்பிராயம் இருந்தது. 

கேள்வி:- உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்கும்? 
பிரசன்னா பதில்:- சினேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் அந்த முறைப்படி முதலில் திருமணம் நடக்கும். அதன்பிறகு எங்கள் பிராமண முறைப்படி நடக்கும். சினேகா கழுத்தில் நான் இரண்டு முறை ஸ்ட்ராங் காக தாலி கட்டுவேன். 

கேள்வி:- திருமணம் முடிந்தபின் தனிக்குடித்தனமா, கூட்டு குடித்தனமா? 
பிரசன்னா பதில்:- தனிக்குடித்தனம்தான். சினேகாவுக்கு சாதாரண பெண்ணாக சமையல் எல்லாம் செய்து வாழவேண்டும் என்று ஆசை. எனவே திருமணம் முடிந்ததும் தனிக்குடித்தனம் போவோம். 

இவ்வாறு பிரசன்னா பதில் அளித்தார். 

அதன்பிறகு சினேகா கூறியதாவது:- 
நான் கடந்த 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. திருமணத்துக்குப்பிறகு நான் நடிப்பதா, வேண்டாமா? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் முடிந்தபிறகு அதை பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். 

மேற்கண்டவாறு சினேகா கூறினார்.




ஐபிஎல் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வென்றது கொல்கத்தா அணி

Posted: 30 Apr 2012 11:32 AM PDT


ஐபிஎல் போட்டித் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.    

சென்னை அணி இதுவரை தான் ஆடிய 9 ஆட்டங்களில் 4 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை தான் ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.   

இந்த ஐபிஎல் சீஸனில் கொல்கத்தா அணியும் சென்னை அணியும் மோதும் முதல் போட்டி இதுவாகும். சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததால் மைக் ஹஸ்ஸி சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். குலசேகராவுக்கு பதிலாக இவர் அணியில் இடம்பிடித்துள்ளர். கடந்த போட்டியில் விளையாடிய விரித்திமன் சஹா நீக்கப்பட்டு யோ மகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.   

கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் துவக்க வீரர்களாக மைக் ஹஸ்ஸியும் டூ பிளிசிஸ்ஸும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை பிரெட் லீ வீசினார். இவரது சிறப்பான பந்துவீச்சில் டு பிளிசிஸ் (3 ரன்கள்) ஆட்டமிழந்தார். 

இவரையடுத்து சுரேஷ் ரெய்னா, மைக் ஹஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆட்டத்தை துவக்கிய ஹஸ்ஸி 18 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.   

இவரையடுத்து ரெய்னாவுடன் பிராவோ ஜோடி சேர்ந்தார். பிராவோ 12 ரன்னும், ரெய்னா 44 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும்  எடுத்து ஆடமிழந்தனர். ரெய்னா 34 ரன்கள் எடுத்தபோது ஐ.பி.எல் போட்டிகளில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை அடைந்தார். ஐ.பி.எல் போட்டிகளில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையோடு ரெய்னா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.    

இறுதி கட்டத்தில் டோனியும், மோர்கலும் அதிரடியாக முயன்றனர். எனினும் கொல்கத்தா வீரர்கள் துல்லியமான, பந்துவீச்சினால் அவர்களால் அதிரடி காட்ட முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. டோனி 34 ரன்னுடனும், மோர்கல் 13 ரன்னுடனும் களத்த்ல் இருந்தனர்.  

பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவுதம் காம்பீர், மெக்கெல்லமும் களம் இறங்கி விளையாடினர். ஆட்டத்தின் 3- வது ஓவரில் மெக்கெல்லம் 2 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் கேட்சானார். 

அடுத்து வந்த ஜாக் காலிஸ் காம்பீருடன் இணைந்து விளையாடினார். 13-வது ஓவரில் காலிஸ் 26 ரன் எடுத்திருந்த போது பிராவோ பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இதணையடுத்து களம் வந்த மனோஜ் திவாரி 13 ரன்னில் வெளியேறினார்.   சிறப்பாக விளையாடி வந்த காம்பீர் 63 ரன் எடுத்து பிராவோ பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் பெவுலியன் திரும்பினார். 

அடுத்து வந்த பதான் 12 வெளியேற அதன் பின் வந்த வீரர்களான தாஸ், சுக்லாவும் சிறப்பாக விளையாடி 19,5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.



விரைவில் உருவாகிறது நவீன டைட்டானிக் கப்பல்

Posted: 30 Apr 2012 08:57 AM PDT


புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய டைட்டானிக் கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்
ஒருவரான கிளைவ் பாமர், அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இவ்வகையான கப்பலை உருவாக்குமாறு சீன அரசுக்கு சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களிடம் கிளைவ் பாமர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலை உருவாக்கும் பணி அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் 2016ஆம் ஆண்டு இக்கப்பல் உருவாக்கப்பட்டு கடல் பயணங்களுக்குத் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.

வடிவமைப்பு, கப்பலின் அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், இது கடந்த நூற்றாண்டின் டைட்டானிக் கப்பலை ஒத்ததாகவே உருவாக்கப்படும் ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதே தனது திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சி.எஸ்.சி. ஜின்லிங் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இக்கப்பலை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே ( ஏப்ரல் 15, 1912) பனிப்பாறையில் மோதி மூழ்கிய ஒரு கப்பல். இக்கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவு தினம் கடந்த ஏப்ரல்-15 ம் தேதி அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' 1st look போட்டோ

Posted: 30 Apr 2012 08:32 AM PDT








நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

Posted: 30 Apr 2012 08:05 AM PDT


நார்வே தமிழ் திரைப்பட  விழாவில் 'வாகை சூட வா'வுக்கு  சிறந்த  பட விருதும், 'உச்சிதனை முகர்ந்தால்' க்கு நள்ளிரவுச் சூரியன் விருதும் வழங்கப்பட்டது.

2012-ம் ஆண்டிற்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25 ம் தேதி நார்வே  தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள்  திரையிடப்பட்டன.

கட்ந்த சனிக்கிழமை குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின்  இறுதிநாளான நேற்று பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ் திரையுலகிலிருந்து இயக்குனர் சற்குணம், நடிகை ரிச்சா, தூங்கா நகரம் இயக்குநர்  கவுரவ், பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு,  புன்னகைப்பூ கீதா, தயாரிப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா  பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே), பிரவீனா(நோர்வே),  மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகியோருடன் 'Yarl stars' இசைக் குழுவினர்  இணைந்து வழங்கும் "நள்ளிரவுச் சூரியன்" இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் திரைப்படங்களுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட விருதுகள்  அறிவிக்கப்பட்டன.

விருதுகள் விவரம்:

சிறந்த படம் - வாகை சூட வா

சிறந்த இயக்குநர் - சற்குணம் (வாகை சூட வா)

சிறந்த நடிகர் - ஸ்பெஷல் ஜூரி விருது - நடிகர் விஷால் (அவன் இவன்)

சிறந்த நடிகர் - எம் சசிகுமார் (போராளி)

சிறந்த நடிகை - ரிச்சா கங்கோபாத்யாய் (மயக்கம் என்ன)

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகை - தேவதர்ஷினி (மகான் கணக்கு)

சிறந்த கதை - புகழேந்தி தங்கராஜ் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த திரைக்கதை- சுசீந்திரன் (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம் நாதன் (கோ)

சிறந்த பாடலாசிரியர் - காசி ஆனந்தன் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த தயாரிப்பு நிறுவனம் - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் (அழகர்சாமியின்  குதிரை)

சிறந்த வில்லன் - சம்பத் (வர்ணம் & ஆரண்ய காண்டம்)

சிறந்த காமெடி - கஞ்சா கருப்பு (போராளி)

சிறந்த காமெடி - சூரி (போராளி)

சிறந்த பின்னணி பாடகர் - சத்யா ('மாசமா...' எங்கேயும் எப்போதும்)

சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ('சர சர சாரக் காத்து...'- வாகை சூட வா)

சிறந்த நடனம் - பாபி (போறானே... - வாகை சூட வா)

சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - பீட்டர் ஹெய்ன் (கோ)

சிறந்த ஸ்டன்ட் நடிகர் - கணேஷ் பாபு (மகான் கணக்கு)

சிறந்த எடிட்டிங் - கோலா பாஸ்கர் (மயக்கம் என்ன)

சிறந்த கலை இயக்குநர் - சீனு (வாகை சூட வா)

சிறந்த பின்னணிக் குரல் - தீபா வெங்கட் (மயக்கம் என்ன)

சிறந்த புதுமுகம் - நீனிகா (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த மேக் அப் - கேபி சசிகுமார் (வாகை சூட வா)

சிறந்த உடை அலங்காரம் - நட்ராஜ் (வாகை சூட வா)


சிறப்பு விருதுகள்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வெங்காயம்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - நர்த்தகி

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - பாலை

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வர்ணம்

வாழ்நாள் சாதனையாளர் விருது - ரகுநாதன்

கலைச்சிகரம் விருது - சத்யராஜ்

நள்ளிரவுச் சூரியன் விருது - உச்சிதனை முகர்ந்தால்

தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தும் படத்துக்கான சிறப்பு விருது கவுரவ் இயக்கிய தூங்கா  நகரம் படத்துக்கு வழங்கப்பட்டது.



எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!

Posted: 30 Apr 2012 07:47 AM PDT


வெடி' படத்தினை அடுத்து விஷால் நடித்துவரும் படம் 'சமரன்'. இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.  ' தீராத விளையாட்டு பிள்ளை'  இயக்கிய  திரு இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது 'சமரன்' என்ற தலைப்பினை 'சமர்' என்று மாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தினை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால்.
மூன்று வேடங்களில் விஷால் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு சுந்தர் சி. 'MGR' (Madhan, Gaja, Raja) என்று தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்கள்.

விஷால் இப்படத்தில் மதன், கஜா, ராஜா என்ற மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இத்தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்களாம்

இப்படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்க இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையில் இப்படத்தில் இடம் பெறும் ஒரு குத்து பாடலுக்கு, சதா நடனமாட இருக்கிறார்.

மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'கொசுறு' கபாலி :  " டைரக்டர் சார்.. உங்க வீட்ல இந்த டைட்டிலுக்கு என்ன சொன்னாங்க? "



மே 1 - துப்பாக்கி

Posted: 30 Apr 2012 07:37 AM PDT


விஜய் ரசிகர்கள் இப்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK-க்கை பார்க்கத் தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. கதைக்களம் மும்பையாக இருப்பதால், அங்கே உள்ள தெருக்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.

படத்தின் FIRST LOOK நாளை (மே 1) வெளியாக இருக்கிறது. ' போக்கிரி ' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் விஜய். ஆனால் அப்படத்தில் சில காட்சிகள் தான் போலீஸ் வேடத்தில் வருவார்.

'துப்பாக்கி' படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக,  போலீஸ் வேடத்தில் நடித்து இருப்பதால் படத்தின் FIRST LOOK எப்படி இருக்கும் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

ஒரு படத்திற்கு ஸ்டில் போட்டோகிராபர் தான் FIRST LOOK எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்.  'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் படத்தின் FIRST LOOK புகைப்படங்களை எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதி விஜய் நடிக்கும் படத்தின் FIRST LOOK வெளியாக இருக்கிறது.



அலெக்ஸ் பால் மேனனை மீட்பதில் புது சிக்கல்: மே 2-ந் தேதி இறுதிக்கெடு

Posted: 30 Apr 2012 07:32 AM PDT


தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். அவரை மாவோயிஸ்டுகள் கடந்த 21-ந்தேதி கடத்திச் சென்று விட்டனர்.  
 
அவரை விடுவிக்க வேண்டுமானால் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், ஜெயிலில் உள்ள 3 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 8 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் முன்னதாக 3 நிபந்தனைகளை விதித்திருந்தனர்.   
 
இந்நிலையில் இன்று கிடைத்த தகவல்களின்படி மாவோயிஸ்டுகள் அறிக்கை விடுத்துள்ளதாவது;
 
* சிறையில் இருக்கும் 76 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும்.
 
* உடல்நலம் குன்றியுள்ள கலெக்டரை காட்டில் வைத்திருக்க விருப்பமில்லை.
 
* கலெக்டரை மீட்பதில் மாநில அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை.
 
* மே-2 ற்குள் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால்  மக்கள் மன்றத்தின் முன்பு கலெக்டர் நிறுத்தப்படுவார்.
 
*மக்கள் மன்றம் எடுக்கும் முடிவுக்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும்
 
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். 
 
கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், சத்தீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில், ஆயுதம் தாங்கிய 400 மாவோயிஸ்டுகளின் கண்காணிப்பில் பிணைக் கைதியாக இருக்கிறார். அவருடன் அம்மாவட்டத்திலுள்ள இளம் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மேலும் 3 பேரையும் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் மீட்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்திருக்கிறது. இதனால் சத்தீஸ்கர் அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அரசு சார்பில் மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தூதுக் குழுவினர், இருதரப்பினரின் பிடிவாதத்தினால் கவலை அடைந்துள்ளதாகவும், இதனால் கலெக்டரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.




ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம்: சுஷ்மா சுவராஜ்

Posted: 30 Apr 2012 07:29 AM PDT


ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதியுடன் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.   

முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவுக்கு ஜனாதிபதியை தன்னிச்சையாக தேர்வு செய்யக்கூடிய அளவுக்கு வாக்குகள் இல்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மூன்று பேரின் பெயர்களை முன்நிறுத்தி ஆதரவு திரட்டுவதில் தீவிரமாகியுள்ளது. 

தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சபாநாயகர் மீராகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை ஜனாதிபதி ஆக்கலாம் என்பது காங்கிரசின் விருப்பமாக உள்ளது. ஆனால் பிரணாப் முகர்ஜி உள்பட, காங்கிரசால் அறிவிக்கப்படும் எந்த வேட்பாளரையும் பாரதீய ஜனதா ஏற்றுக்கொள்ளாது என பா.ஜ தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். 

மேலும் ஹமீத் அன்சாரிக்கு ஜனாதிபதி ஆகும் தகுதி இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசை ஆதரித்துவிட்டு, அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசின் ஆதரவைப் பெறும் திட்டம் எதுவும் பா.ஜ.வுக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளால் அப்துல் கலாம் போன்ற பொதுவான வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் அவரை ஆதரிப்போம் எனவும், அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சிகளின் ஆதரவைப் பெறுவோம் எனவும் சுஷ்மா கூறியுள்ளார்.




நீதிமன்றத்தால் என்னை பதவியில் இருந்து நீக்க முடியாது: பாகிஸ்தான் பிரதமர் கிலானி

Posted: 30 Apr 2012 07:27 AM PDT


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, நீதிமன்றம் தன்னை பதவியில் இருந்து நீக்க எந்த சட்டமும் இல்லை என தெரிவித்தார். முன்னதாக, பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துமாறும், சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதி அவரது வங்கி கணக்குகளை பெறுமாறும் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

அதை கிலானி ஏற்கவில்லை. மேலும், அதிபர் மீது விசாரணை நடத்த தனக்கு அரசியல் சட்டத்தில் அதிகாரம் இல்லை என கூறிவிட்டார். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை நசீர்- உல் முக் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத பிரதமர் கிலானி குற்றவாளி என கடந்த வாரம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதனால் கிலானியின் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. பாகிஸ்தான் அரசியல் சட்டத்தின் 63-வது பிரிவின்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவி வகிக்க முடியாது. 

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கிலானி பிரதமர் பதவி வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் கிலானி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

ஷகித் நசீம், ராணா இலாமுதீன் ஆகிய இருவர் கிலானி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். எந்த சட்டத்தின் அடிப்படையில், நாட்டுக்கு வழிகாட்டும் பிரதமர் பதவியில் நீடிக்கிறார் என கிலானி விளக்கம் அளிக்க வேண்டும் என அவ்வழக்கில் கோரப்பட்டுள்ளது. 

மேலும் பிரதமர் அலுவலகத்தை கிலானி தக்க வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர்கள், பிரதமர் அலுவலகத்தையும், அங்குள்ள வசதிகளையும் கிலானி தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்திருந்தனர். 

இக்கருத்தை மறுத்த பிரதமர் கிலானி, பாராளுமன்றமே இது குறித்து முடிவெடுக்கவேண்டும் எனவும் 180௦ மில்லியன் பாகிஸ்தான் மக்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவே இது குறித்து தீர்மானிக்க இயலும் என தெரிவித்திருந்தார்.   

மேலும் சட்டப்பிரிவு 248 (1) ன் படி தன்னிச்சையாக பிரதமர் செயல்பட முடியும் எனவும் தன் கடமைகளை ஆற்றுவதற்கு எந்த தடையும் இருக்க முடியாது என மேலும் தெரிவித்தார். நீதித்துறையும், முக்கிய எதிர்கட்சியுமான பி.எம்.என்.எல் கட்சியும் ஏன் தன்னுடைய பதவியை பறிப்பதற்கு இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள் என்றும் கிலானி கேள்வி எழுப்பியுள்ளார்.








இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!

Posted: 30 Apr 2012 06:21 AM PDT


பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.




நித்தியானந்தாவை மதுரையை விட்டு வெளியேற்றுக... மதுரை கலெக்டரிடம் மனு

Posted: 30 Apr 2012 05:26 AM PDT


மதுரை ஆதீன மடத்திலிருந்து உடனடியாக நித்தியானந்தாவை வெளியேற்ற வேண்டும். அவரை மதுரையை விட்டு வெளியேற்ற வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பூசைதுரை என்பவர் மதுரை கலெக்டர் சகாயத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில், மதுரை ஆதினமாக நித்தியானந்தாவை பதவியேற்க செய்ததை உடனே ரத்து செய்து, அவரை மதுரையை விட்டு வெளியேற்ற வேண்டும். அவர் மீது உள்ள கிரிமினல் நடவடிக்கைகள் இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

நித்தியானந்தா ஆதினமாகப் போவதை உடனே தடுத்து நிறுத்தி, ஆதின மடத்தை மீட்டு தமிழக அரசு வசம் ஒப்படைக்க வேண்டும். குறுக்கு வழியில் பதவியேற்ற ஆதினப் பதவியை ரத்து செய்ய வேண்டும்.

குற்ற நடவடிக்கையில் இருக்கும் ஒருவரை எப்படி ஆதினமாக, மதுரை ஆதினம் ஏற்றுக்கொண்டார் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளா



பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கருணாநிதி பேட்டி

Posted: 30 Apr 2012 04:55 AM PDT


சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அதன் விவரம் வருமாறு:-
 
கேள்வி:- நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பதாக சிலர் கூறுகிறார்களே?
 
பதில்:- ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப்படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப்படை இந்தியா வந்தபோது அன்று முதல்- அமைச்சராக இருந்த நான் வரவேற்க செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.
 
கே:- இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதை நீங்கள் தடுக்க தவறியதாகவும், இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்களே?
 
ப:- விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.
 
கே:- போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழ தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்.
 
ப:- முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.
 
கே:- பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
 
ப:- போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.
 
கே:- மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?
 
ப:- உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது தி.மு.க.வால் என்பதை மறந்து விடக்கூடாது.
 
கே:- புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?
 
ப:- ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.
 
கே:- இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
 
ப:- இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது.
 
கே:- ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று மத்திய மந்திரி அந்தோணி சொன்னாரா?
 
ப:- என்னிடம் சொன்னார். ஆனால் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
 
கே:- நீங்கள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
 
ப:- நல்ல ஜனாதிபதி வர வேண்டும்.
 
இவ்வாறு கருணாநிதி கூறினார்.







கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ அமைப்பு

Posted: 30 Apr 2012 04:19 AM PDT

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, 'தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு' என்று தமிழிலும் Tamil Eelam Supporters Organaisation (TESO) என்று ஆங்கித்திலும் பெயர் சூட்டப்பட்டது. 

கருணாநிதி தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த அமைப்பின் குறிக்கோள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கை:- 
பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம், மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு 'தனித் தமிழ் ஈழம்' அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. 

வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது. 

இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25-ந்தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு, போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும். என்றும் 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. 

தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழ் ஊர்ப்பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. 

இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. 

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன. 

அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், 

இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது. 

நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு, ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தரவேண்டும்.

தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. 

இதன்மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப்போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது. தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும், அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.




லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்த ஈழத்தமிழ் மாணவர் தேர்வு

Posted: 30 Apr 2012 03:59 AM PDT


லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்துவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் இலங்கையைத் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவரும்.

லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக 8 ஆயிரம் துவாரங்கள் கொண்ட அலுமினிய தீபம் உருவாக்கப்பட்டுள்ளது.

8 ஆயிரம் துவாரங்கள் கொண்ட இத்தீபத்தை 8 ஆயிரம் பேர் 8 ஆயிரம் மைல்கள் எடுத்துச் செல்வர். இந்த ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்படும் பாதைகள், ஏந்திச் செல்வோர் பற்றிய விவரங்கள் அனைத்தும் வெளியாகி உள்ளன.

இப்படி ஏந்திச் செல்வோரில் நியூகாஸ்டல் பல்கலைக் கழகத்தில் உயிரி மருத்துவம் படித்து வரும் முருகேசப்பிள்ளை கோபிநாத் என்ற மாணவரும் ஒருவர்.

இவர் இலங்கை மல்லாவியைச் செர்ந்தவர். தாம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது என்கிறார் முருகேசப்பிள்ளை கோபிநாத்.



விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பேன்: யுவராஜ் சிங்

Posted: 30 Apr 2012 03:47 AM PDT


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று 2 மாதங்களுக்கு முன் நாடு திரும்பினார். தற்போது ஐ.பி.எல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் புனே வாரியர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான யுவராஜ் சிங் விளையாட முடியாத நிலையில் உள்ளார்.
அவருக்கு புனேவில் உள்ள சம்ரிதா ஜிவான் பவுண்டேஷன் சார்பில் நவி சங்வி மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் அவருக்கு ஒர் கார் பரிசளிக்கப்பட்டது. விழாவுக்கு வந்திருந்த அவரை பார்க்க ஏராளமானோர் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய போது:
நான் குணமடைய எனக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்தீர்கள். தொடந்து எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு தற்போது எனது உடலில் சக்தி இல்லை. நான் விரைவில் இந்தியாவுக்காக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் தனது அணியான புனே வாரியர்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் விளையாடிய போட்டியை காண வந்திருந்தார்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™