Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


"அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்

Posted: 29 Apr 2012 10:02 PM PDT


"அக்னி-5' ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை (ஆன்டி ரேடியேசன் மிசைல்) வடிவமைக்கும் பணியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்.,) ஈடுபட்டுள்ளது.

இந்த ஏவுகணை எதிரியின் நவீன எச்சரிக்கை முறையை தாக்கிய அழிக்க வல்லது.
ஐந்தாயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, "அக்னி-5' ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள, ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், அடுத்த கட்டமாக, எதிரிகளின் நவீன எச்சரிக்கை முறையையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, மிக நவீன ஏவுகணையைத் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணையானது தன்னிடம் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேசன் மூலம், ரேடார்களையும், ரேடார் ஆன்டனாக்களையும், டிரான்ஸ்மிட்டர்களையும் எளிதில் கண்டறிந்து அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மட்டுமே, இந்த அதி நவீன ஏவுகணை தற்போது உள்ளது. இந்த கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை, சுகோய் ரக போர் விமானங்களில் பொருத்த முடியும். இந்த வகை விமானங்கள், 140ஐ ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே இந்திய அரசு வாங்கியுள்ளது. மேலும், 100 விமானங்களை விரைவில் ரஷ்யா வழங்கவுள்ளது.

படையில் சேர்கிறது தேஜஸ் : 

இதற்கிடையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தேஜஸ் போர் விமானம், விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும். இத்தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலகு ரக தேஜஸ் போர் விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வின் விமான கட்டுமான மேம்பாட்டு ஏஜென்சியும், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., நிறுவனமும் இணைந்து, இந்த விமானத்தை தயாரித்துள்ளன. இந்த விமானத்தின், அனைத்து பரிசோதனைகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டமாக, இதுவரை, 1,855 மணி நேரம், வானில் பறக்க விடப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதிலிருந்த ஒரு சில குறைபாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து, இந்தாண்டுக்குள், இந்த விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவுள்ளது.இவ்வாறு சரஸ்வத் கூறினார்.





பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கருணாநிதி ஆதரவு!

Posted: 29 Apr 2012 09:55 PM PDT


முஸ்லீம் ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பெண் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை வைத்தார் கருணாநிதி. அவரது கருத்துக்கு ஆதரவு கூடியதையடுத்து பிரதீபா பாட்டீலை களமிறக்கியது காங்கிரஸ்.

இந் நிலையில் கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, அவரிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் திட்டம் குறித்து விவாதித்தார்.

அப்போது இப்போதைய துணை ஜனாதிபதி அன்சாரி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவை சபாநாயகர் மீரா குமார் ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என சோனியா கருதுவதாக கருணாநிதியிடம் ஆண்டனி கூறினார்.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதியாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வர வேண்டும், அந்த வகையில் அன்சாரியை நிறுத்தலாம் என்று கூறிய கருணாநிதி, அதே நேரத்தில் மற்ற கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவானால் பிரணாப் முகர்ஜியையும் ஆதரிக்கத் தயார் என்று கூறியதாகத் தெரிகிறது.

பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவும் கிடைத்துவிடும் என சோனியா கருதுகிறார். கடந்த ஜனாதிபதி தேர்தலிலேயே முகர்ஜியின் பெயரை இடதுசாரிகள் முன் வைத்தது நினைவுகூறத்தக்கது.

அதே நேரத்தில் அரசியல் சாராத ஒருவரையே ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற தேசியவாதி காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் கருத்தை சோனியா ஏற்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சரத் பவாரிடம் சோனியா ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளார். அப்போது முஸ்லீம் அல்லது பிரணாப் என காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என பவார் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

அதே போல மம்தாவிடமும் சோனியா ஒரு சுற்று பேச்சு நடத்திவிட்டார். அவர் பெங்காலியான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தரத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்,

மேலும் பிரணாப் முகர்ஜியையோ அல்லது ஒரு முஸ்லீமையோ நிறுத்தினால் பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், எந்தக் கூட்டணியிலும் இல்லாத முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், ஒரிஸ்ஸா முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவைப் பெறுவதும் எளிதாகிவிடும் என்று சோனியா கருதுகிறார்.

இதன்மூலம் பாஜகவையும் அதிமுகவையும் தனிமைப்படுத்தி தனது வேட்பாளரை வெல்லச் செய்வது சாத்தியம் என்று சோனியா கருதுகிறார். இதற்கு கருணாநிதியையின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

காங்கிரசுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி இல்லாததால் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய கூட்டணிக் கட்சிகள் மற்றும் நடுநிலைக் கட்சிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு நிச்சயம் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட கிறிஸ் கெய்ல் !!

Posted: 29 Apr 2012 09:15 PM PDT


ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், பெங்களூரு அணிக்காக விளையாடி கொண்டு சிக்ஸர் மழை பொழிந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், ஐ.பி.எல்., போட்டி இல்லாத நாட்களில், சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தியிருக்கிறார். சமீபத்தில் கன்னட சினிமாவில் உருவாகி இருக்கும் கில்லாடி கிட்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கிறிஸ் கெய்ல் பங்கேற்றார். இந்த விழாவின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டது மட்டும் இல்லாமல் படத்தின் நாயகி ஹரிப்ரியாவை பார்த்து நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என்று கூறி ஜொள்ளு விட்டு இருக்கிறார்.

இதுகுறித்து ஹரிப்ரியா மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, கிறிஸ் கெய்ல் ரொம்ப நல்ல மனிதர். அவர் என்னிடம் வந்து நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க...! என்று கூறினார். அவர் இப்படி கூறியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. பிறகு அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.

படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது நடன நிகழ்ச்சியும் நடந்தது. அதில் ஹரிப்ரியாவுடன் சேர்ந்தது கிறிஸ் கெய்லும் நடனம் ஆடி விழாவிற்கு வந்த அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் திகைக்க வைத்தார்.



காதல் என்பது மென்னையானது ;அதை கஷ்டப்படுத்துறாங்க : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Posted: 29 Apr 2012 08:50 PM PDT


காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில், சிவாஜி நடித்த, "கர்ணன்' பட விழாவில், கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர்,   '' சிவாஜியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன். என்றுமே, அவர் தான் என் தலைவன். தற்போதுள்ள தலைமுறைக்கு, நீதி, தர்மத்தை பற்றி கவலையில்லை.


சுதந்திரம் பெற்றதே பலருக்குத் தெரியாது. அதனால் தான், தற்போது வரும் மோசமான படங்களை ரசிக்கின்றனர்.

காதல் என்பது மென்னையானது. சினிமாவில் அதை வெளிப்படையாக்கி விட்டனர். மென்மையான காதல் உணர்வை, வன்முறையாக சித்திரிக்கின்றனர். புதிய சினிமாக்களை பார்த்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... பாடலில், காதலர்களின் முகபாவனையைப் பார்த்தால், அதிலுள்ள கண்ணியம் தெரியும். "இருவர் உள்ளம், பார்த்தால் பசி தீரும்' படங்களை, ஆங்கில, "சப்-டைட்டில்' போட்டு, வெளிநாடுகளில் திரையிட வேண்டும். அதில் வரும் காதல் காட்சிகள், உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களை கவரும்''என்று தெரிவித்தார்.



நண்பன் 100-வது நாள் விழாவில் உறவுகளை கொச்சைப்படுத்திய சத்தியராஜ்(வீடியோ)

Posted: 29 Apr 2012 11:23 AM PDT



தமிழகத்தை பொறுத்தவரையில் சில அதிமேதாவிகள் உண்டு ...அதில் திரையுலகத்தை பொறுத்தவரை அதிமேதாவிகள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது செந்தமிழன் ....புரட்சி தமிழன்...சத்தியராஜ் தான் எப்போதும் முதலிடத்தில் இருப்பார்.

இவர் பங்கு பெறும் பொது நிகழ்சிகளில் இவர் பேசாமல் திரும்பியதில்லை மைக் கொடுக்கல்லன்னா கூட புடிங்கியாச்சும் பேசுவதில் வல்லவர். இவர் பேச்சுகள் எப்போதுமே சர்ச்சைகளை உண்டு பண்ணுவது உண்டு.

குறிப்பாக இவர் குறிவைத்து தாக்குவது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தான். ரஜினி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் சிறிது கூட அவை நாகரீங்கம் இல்லாமல் பேசுவதில் வல்லவர். அதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். 


அதில் ஒன்று...






அடுத்ததாக பேச்சுக்கு முன்னூறு தடவை தமிழன் தமிழன் என்று கூறி மக்களை ஏமாற்றுவதிலும் அரசியல் வாதிகளுக்கு சளைத்தவர் அல்ல என்பதை பல நேரங்களில் புரியவைத்திருக்கிறார்.

இப்படி பட்ட புரட்சி தமிழன் அண்மையில் விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் பேசியது தான் இன்று தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழக கலாச்சாரத்தை அல்ல இந்திய கலாச்சாரத்தை அல்ல மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்து காட்டும் மனித உறவுகளின் புனிதத்தையே கொச்சை படுத்தும் விதத்தில் பேசி இருக்கிறார்.

ஆம், அப்பா, மகள் உறவின் மேன்மையை கொச்சை படுத்தும் விதமாக பேசி இருக்கிறார்...இதிலிருந்து அவரின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது....

அந்த வீடியோ....




-சிந்து 




‘யோஹன்’ தலைப்புக்கு கவுதம் விளக்கம்

Posted: 29 Apr 2012 09:14 AM PDT


தமிழில் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'விண்ணைத் தாண்டி வருவாயா' படங்களை இயக்கிய கவுதம் மேனன், விஜய்-ஐ வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு யோஹன் அத்தியாயம் ஒன்று என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு யோஹன் என்ற தலைப்பை தேர்வு செய்ததன் மூலம் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் இயக்குனர் கவுதம் மேனன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யோஹன் என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, யோஹன் என்பது உலகம் முழுவதும் தெரிந்த பெயர். சர்வதேச அளவில் இப்படத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெளிவாக விளக்கியுள்ளார்.

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படம் முடிந்த பிறகு 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் இணைவார் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.



சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்

Posted: 29 Apr 2012 07:07 AM PDT


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது5) என்ற மகள் இருந்தாள். அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.  
 
கடந்த 1.1.2011 அன்று வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீர் என மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவளை காணவில்லை. மறுநாள் அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டு தொழுவத்தில் ராஜலட்சுமி பிணமாக கிடந்தார்.
 
சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.   இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த மலபார் என்ற கருப்பு மற்றும் அவரது தந்தை மகாமுனி (61) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் சில மாதங்களில் இறந்துவிட்டனர்.
 
பின்னர் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி ராஜலட்சுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இதுதொடர்பாக கச்சக்கட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், மதுரை மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் துணை தலைவருமான அயூப்கான் (50), முருகேசன் (54), பொன்னுசாமி (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  
 
சிறுமியை நரபலி கொடுத்தது ஏன்? என்பது குறித்து கைதான அயூப்கான் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-
 
நான் தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி கொண்டு இருக்கின்றேன். அதில் தடை ஏற்பட்டது. இதனால் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால் கட்டிடம் வேகமாக கட்டி விடலாம் என நினைத்தேன்.
 
கச்சகட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகியோரை தொடர்பு கொண்டேன்.   அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதற்காக பல லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறினேன்.
 
அதனை தொடர்ந்து பொன்னுசாமி, மலபார் ஆகியோர் சிறுமி ராஜலட்சுமியை கடத்தி கொண்டு மலபார் வீட்டில் அடைத்து வைத்தனர். சிறுமி காலில் கிடந்த கொலுசை மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.  
 
அதிகாலை 2 மணி அளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுசாமி, லட்சுமி ஆகியோர் பிடித்து கொண்டனர். மலபார் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஒரு வாளியில் பிடித்தார். சிறிது நேரத்தில் சிறுமி இறந்து விட்டாள். அதன் பின்னர் ரத்தத்தை கல்லூரி கட்டிடத்தை சுற்றி தெளித்தேன்.
 
சிறுமியை கொலை செய்ததற்காக மகாமுனிக்கு ரூ.4 லட்சமும், பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சமும் கொடுத்தேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
கைது செய்யப்பட்டுள்ள அயூப்கான் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
 
தற்போது சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமி கொலை தொடர்பாக மலபாரின் மனைவி லட்சுமியை போலீசார் தேடி வருகிறார்கள்.



சச்சினுக்கு எம்.பி. பதவி: காங்கிரஸ் மீது பால் தாக்கரே பாய்ச்சல்

Posted: 29 Apr 2012 06:27 AM PDT


சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலிருந்து வெளிவரும் 'கார்ட்டூன் வாச்' என்னும் இதழ் சார்பில் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 
விருது பெற்ற பின்னர் பேசிய பால்தாக்கரே,
 
ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் பெயரை பரிந்துரை செய்தது காங்கிரஸ் கட்சியின் 'இழிவான நாடகம்' எனவும், இதுதான் உண்மையான 'டர்ட்டி பிக்சர்' எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
 
மேலும், சிவசேனா ஆதரவு இதழான 'சாமனா'வில் ராஜ்ய சபா எம்..பி பதவிக்கு சச்சின் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்ததில் நிச்சயம் ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என பால் தாக்கரே நேற்று கருத்து கூறியிருந்தார்.
 
சச்சினை 'பாரத ரத்னா சச்சின்' என அழைப்பதையே அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்புவார்கள் எனவும், காங்கிரசின் இந்த நாடகத்தால் இப்போது அவர் வெறும் 'சச்சின் எம்.பி' ஆகிவிட்டார் எனவும் தாக்கரே கூறியுள்ளார். 



மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள் அவசரமாக கூடுகின்றன!

Posted: 29 Apr 2012 06:17 AM PDT


நித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும் மதுரை ஆதீனத்தின் இந்த திடீர் முடிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனத்தை மக்கள் தற்போது கேலிப் பொருளாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், இன்னும் ஓரிரு நாளில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். தற்போது நடந்து வருவது மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது. மதுரை ஆதீனம் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். இந்துக்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார், களங்கப்படுத்தியுள்ளார்.

மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டவருக்கு பெங்களூரில் வைத்து முடி சூட்டியுள்ளார். அங்கு போய் மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு யார் என்பதை அவர் கூறியுள்ளார். இது தவறான செயல் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீனங்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

நித்தியானந்தா போன்றவர்களுக்கான பதவி அல்ல இது. அவர் இந்தப் பதவிக்கு வர அருகதை இல்லை. தனது பெயரை முதலில் சரி செய்து விட்டுத்தான் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். தனது பாதுகாவலர்களைக் கூட அவர் பெங்களூருக்குக் கூட்டிச் செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

எந்தவிதமான முறையான அம்சங்களும் இந்த விவகாரத்தில் கையாளப்படவில்லை. இது பெரும் நகைச்சுவையான ஒரு சம்பவமாக மாறியுள்ளது. அதேசமயம், இந்து மக்கள் மனதளவில் புண்பட்டுப் போயுள்ளனர் என்றார் சம்பத்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் கூறுகையில் தனது வாரிசாக மதுரை ஆதீனம் தேர்ந்தெடுக்கும் நபரை ஏற்கவே முடியாது. இதுகுறித்து நாங்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதேபோல விஸ்வ இந்து பரிஷத்தும் மதுரை ஆதீனத்தின் முடிவை விமர்சித்துள்ளது.



உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 20 பேர் பலி

Posted: 29 Apr 2012 06:08 AM PDT


உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் சிலுதால் பாலம் அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20 பயணிகள் பலியாகினர்.
 
கோரக்பூர் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மணிராம் பாலம் அருகே அரசுப் பேருந்துடன், தனியார் பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
 
படுகாயம் அடைந்த 30 பேர் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்துள்ளனர். இறந்துபோன ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.50 ஆயிரமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அரசு சார்பாக ஆணையர் ரவீந்திர நாயக் அறிவித்துள்ளார்.
 
மேலும் சிறுசிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடம் மற்றும் மருத்துவமனையை ஆய்வு செய்த மூத்த அதிகாரிகள், காயம் அடைந்தவர்களில் மேலும் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 




எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?

Posted: 29 Apr 2012 04:38 AM PDT


சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...

ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.

எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.

வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.

ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.

ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.

ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.

எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.

ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.

இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன. இது போக வழக்கமாக அவர் கிரிக்கெட் ஆடும்போது பல லட்சம் சம்பளமாகவும் கிடைக்கும்.

தனது எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு சச்சின் என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!

Posted: 29 Apr 2012 04:03 AM PDT


மதுரை மக்கள் பெரும் வியப்பிலும், குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.

மதம் சார்ந்த மடங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் குன்றக்குடி அடிகளாரும், அவரது மடமும் மட்டுமே. மதம் சார்ந்த ஒரு அதிபதியாக இருந்தாலும் கூட தமிழார்வலராக, தமிழ் ஊழியராக, தமிழுக்காகவும், சமுதாயத்திற்காகவும் தொண்டாற்றிய பெருமை படைத்தவர் குன்றக்குடி அடிகளார்.

தனக்காக, தான் சார்ந்த மதத்திற்காக என்றில்லாமல், தமிழுக்காகவும், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி மக்கள் இன்றளவும் அடிகளாரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மத மாச்சரியமின்றி, அரசியல் பாகுபாடின்றி அத்தனை பேராலும் பாராட்டப்பட்டவர், மதிக்கப்பட்டவர் குன்றக்குடி அடிகளார். அவருக்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது என்பதுதான் உண்மை.

குன்றக்குடி அடிகளாரைப் போல இல்லாவிட்டாலும் கூட சமுதாயம் சார்ந்த ஒரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மதுரை ஆதீனம். ஈழத் தமிழர் போராட்டம், முல்லைப் பெரியாறு அணை போராட்டம் என பல போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் முன்பு இயங்கிய டெசோ அமைப்பில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர்.

சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து அக்கறை காட்டி வந்தவர். அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தவர். இவர் மீதும் சலசலப்புகள், சர்ச்சைகள் இருந்தபோதும் கூட பெரிய அளவில் மக்களிடையே களங்கப்படாதவராகவே இருந்து வந்தார்.

ஆனால் மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவு மதுரை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஆதீனமா இப்படி முடிவெடுத்தார் என்பதை மதுரை முழுக்கப் பேச்சாக உள்ளது.

ஆதீனம் இப்படிச் செய்வார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க, ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை ஆதீனம் என்பது மதுரையின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறிப் போன ஒன்று, மதுரையின் அடையாளங்களில் ஒன்று, மதுரையின் வரலாற்றில் ஒன்று. எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்பது கூட சரியாக தெரியாத அளவுக்கு மிக மிகப் பழையான ஒரு மடம்.

சைவக் குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவித்த மடம் இது. சைவ நெறி பரப்பி வந்த இந்த மடத்தில் இதுவரை இந்த அளவுக்கு பரபரப்பான சம்பவம் எதுவும் நடந்ததில்லை. ஆனால் தற்போது மதுரை ஆதீனம் அகில இந்திய அளவில் ஆச்சரியக் குறியாக எழுந்து நிற்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஆசிரியரான சுப்பிரமணியம் என்பவர் ஆதீனத்தின் முடிவு குறித்துக் கூறுகையில், ஏதோ 'ஏ படம்' பார்த்தது போல இருக்கிறது ஆதீனத்தின் இந்த முடிவு. இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இது மோசமாக கனவாக இருக்க வேண்டும் என்று இப்போது கூட நான் வேண்டுகிறேன். அன்னை மீனாட்சியை தரிசித்து விட்டு ஆதீனம் மடம் வழியாகத்தான் நான் வீட்டுக்குப் போவேன். இனிமேல் நான் இந்த மடத்தைப் பார்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பார்க்கவும் பிடிக்கவில்லை. ரொமபக் கஷ்டமா இருக்கு சார் என்றார்.

மதுரையைச் சேர்ந்தவரான கதிரேசன் என்ற பேராசிரியர் கூறுகையில், மதுரை ஆதீம் என்பது மாபெரும் தலைவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஒரு மடம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் அரவணைத்திருந்த மடம் இது. இதன் வரலாறு 1500 ஆண்டுகளுக்கும் மேலானது. இதற்கு மதுரை ஆதீனம் நியமித்துள்ள புதிய ஆதீனத்தை எங்களால் நிச்சயம் ஏற்க முடியாது என்றார்.

எழுத்தாளர் பிரியதர்ஷனி என்பவர்க கூறுகையில், எனக்கு இந்த நியமனம், அதன் விதிகள் உள்பட எதுவுமே தெரியாது. ஆனால் மதுரை மக்களும், மதுரை நகரமும், மற்றவர்கள் முன்பு கேலிப் பொருளாகி விட்டதை மட்டும் உணர்கிறேன். மதுரையின் பெயர் நிச்சயம் மாசுபட்டு விட்டது என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றார்.

மதுரை மக்களுக்கு ஆதீனம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறாரோ...?




மே தினத்தில் 'பில்லா-2' பாடல், விஸ்வரூபம் 'டிரைலர்' வெளியீடு

Posted: 29 Apr 2012 03:59 AM PDT


அஜீத்தின் பில்லா-2 பாடல் வெளியீடும், கமலின் விஸ்வரூபம் பட டிரெய்லர் ரிலீசும் வருகிற மே 1-ந்தேதி ஒரே நாளில் நடக்கிறது. பில்லா-2 பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட தயாரிப்பு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. முன்னணி நடிகர், நடிகைகளையும் விழாவுக்கு அழைக்க திட்டமிட்டனர்.

அஜீத் ஆடம்பரமில்லாமல் எளிமையாக பாடல்களை வெளியிட விரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரமாண்ட விழா நடத்தாமல் பாடல்களை ரிலீஸ் செய்கின்றனர்.

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பின்னணி பாடகர்கள் ஸ்டெப்னி, ஸ்வெதா பண்டிட், தன் விஷா, சுவிசுரேஷ், ஆண்ட்ரியா, ஜெர்மையா, ரஞ்சித் ஆகியோர் பாடல்களை பாடி உள்ளனர். அஜீத் பிறந்த நாள் மே 1-ந்தேதி என்பதால் அன்றைய தினம் பில்லா-2 பாடல்கள் வெளியாவதை ரசிகர்கள் ஆர்வமாய் எதிர் பார்க்கின்றனர்.

கமலின் விஸ்வரூபம் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தில் கமலின் கெட்டப் எப்படி இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

முதல் தடவையாக மே 1-ந்தேதி டிரைலர் மூலம் அவரது தோற்றம் தெரிய வர உள்ளது. தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றனர்.

30 நொடிகள் பார்க்கும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் கமல் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.



மதுரை ஆதீனம் என்ற ஆலமரத்திற்குக் கீழே முளைத்த காளான் நான்-நித்தியானந்தா

Posted: 29 Apr 2012 03:54 AM PDT


மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி. அவர் ஒரு ஆலமரம். அம் மரத்திற்கு கீழ் காளான் முளைப்பது இயற்கைதான். காளானாக இருந்து சிறப்பாக பணியாற்றுவேன் என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

மதுரை ஆதீன மடத்தில் இன்று மதுரை ஆதீனத்துடன் இணைந்து நித்தியானந்தா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஆதீன மடம் என்பது ஒரு கடல் போன்றது. இதை செம்மையாக நடத்துவேன். சன்னிதான உத்தரவுபடி நான் நடப்பேன். என் மீதான குற்றச்சாட்டை சட்ட ரீதியாக நிரூபிப்பேன். நான் இந்த விஷயத்தில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. பழிப்பது தவறல்ல. அதற்கு பதில் சொல்வேன். ஆனால் சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அதுதான் தவறு என்கிறேன். வேதனைப்படுகிறேன்.

என்னை தமிழக மக்கள் ஏற்பார்கள்

தமிழ்நாட்டில் 800 தியான மையம் உள்ளது. 12 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்தாலும் இன்னும் இங்கு தியான பீடம் நடந்து வருகிறது. பக்தர்கள் எல்லாம் வந்து செல்கிறார்கள். எனவே என்னை தமிழக மக்கள் ஏற்று கொள்வார்கள்.

என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம். அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என சொல்ல முடியாது. உலக அளவில் சிறந்த ஆன்மீகவாதிகளின் பெயர்களை வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள ஸ்ரீரவி சங்கர், அமிர்தானந்தமயி, குருதேவ், என் பெயர் இடம் பெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரை ஆதீன மடத்தில் 293-வது மகா சன்னிதானமாக மனபூர்வமாக ஏற்று கொண்டு முழுமையாக பணியாற்றி சைவ சித்தானந்தத்தை உலகம் முழுவதும் பரப்ப பாடுபடுவேன். நானும் 292-வது சன்னிதானமும் சேர்ந்து ஆதீன மடத்தை முறையாக நடத்துவோம். மதுரை ஆதீனத்துக்குட்பட்ட 4 கோவில்கள் உள்ளது. 4 கோவில்களுக்கும் இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இன்று முதல் ஆதீன மடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படும். 24 மணி நேரமும் இது வழங்கப்படும்.

மேலும் ரூ. 4 கோடி காணிக்கை தருவேன்

குருவுக்கு ரூ.1 கோடி பாத காணிக்கை வழங்கி இருக்கிறேன். மேலும் ரூ.4 கோடி பாத காணிக்கை சமர்பிக்க இருக்கிறேன். மேலும் எனது ஆசிரமத்தில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், படித்த சன்னியாசிகள் 50 பேரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை கவனிக்க மதுரைக்கு அனுப்பி வைப்பேன்.

எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பள்ளி, கல்லூரிகள் நிறுவப்படும். வருகிற ஜுன் 5-ந்தேதி கனகாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இவ்விழாவையொட்டி 100 கிராமங்களில் பள்ளிக்கூடம் தொடங்கப்படும். எனக்கு 40 நாடுகளில் ஆசிரமம் உள்ளது. 1 கோடியே 20 லட்சம் சீடர்கள் உள்ளனர்.

ஆலமரத்திற்குக் கீழே முளைத்த காளான்

மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி. அவர் ஒரு ஆலமரம். அம் மரத்திற்கு கீழ் காளான் முளைப்பது இயற்கைதான். காளானாக இருந்து சிறப்பாக பணியாற்றுவேன். ஆதீனம் ஒரு கடல். நான் அதில் ஒரு துளிதான். இந்த கடலில் கலப்பதில் ஆனந்தமடைகிறேன். ஆதீனம் ஞானமிக்கவர். எனக்கு நல்ல வழி காட்டுபவர். எனவேதான் இந்த பெரிய பொறுப்பை ஏற்றேன். என் மீது பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆன்மீக பணியாற்றும்போது ஓரிரு இடையூறு ஏற்படுவது வழக்கம்தான் என்றார் அவர்.



'3'பட ஆடியோ உரிமை விவகாரம்: தனுஷ், ஐஸ்வர்யா மீது ஐதராபாத் போலீசில் புகார்

Posted: 29 Apr 2012 03:52 AM PDT


ஐதராபாத்தைச் சேர்ந்த என்.கே. தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் நாட்டிகுமார், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், கஸ்தூரி ராஜா, அவரது மகள் விமல கீதா, சோனி மியூசிக் நிறுவனம், ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் ஆகியோர் மீது எஸ்.ஆர். நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் 3 படத்தை தயாரித்தது. இதில் தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் தமிழில் தயாரிக்கப்பட்டது.

30.3.2012 அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றது. இதற்கான ஒப்பந்தம் 21.3.2012 அன்று கையெழுத்தானது.

தெலுங்கில் இப்படத்தின் ஆடியோ உரிமையும் எங்களுக்கே வழங்கப்பட்டது. இதற்கான தொகை ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டது. பின்னர் ஆடியோ உரிமையை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்துவகை உரிமைகளையும் அவர்களிடமே விற்றுவிட்டோம். 

ஆனால், எங்களுக்கு தெரியாமலேயே ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு வேண்டிய நிறுவனமான உண்டார் பிலிம்ஸ் நிறுவனம், 3 படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. அந்த நிறுவனம் 3 பட ஆடியோ சிடிக்களை தயாரித்து சந்தையில் விற்பனைக்கு விட்டுள்ளது.

விசாரித்ததில் சோனி மியூசிக் நிறுவனம் ஆர்.கே. புராடக்ஷன்ஸ் மற்றும், உண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்த உரிமையை பெற்றுள்ளது தெரிய வந்தது.

மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் எங்களை ஏமாற்றி சோனி நிறுவனத்துக்கு விற்றிருக்கிறது. நம்பிக்கை துரோகம் மோசடி மூலம் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 3 பட ஆடியோ உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததன் மூலம் மேற்கண்ட நிறுவனங்களின் இயக்குனர்கள் லாபம் அடைந்துள்ளனர்.

எனவே, மேற்கண்டவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம்

Posted: 29 Apr 2012 03:49 AM PDT


தந்தையும், மகனும் ஒரு 'கம்பெனி'யை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் நானும், நித்தியானந்தாவும் இணைந்து தந்தை, மகன் போல் மதுரை ஆதீனத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை ஆதீனத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மதுரை ஆதீனம் பேசுகையில்,

இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் இந்த மடத்தின் நிர்வாகத்துக்குள் இருந்தது. பின்னர் அரசு எடுத்து கொண்டது.

மதுரை ஆதீனம் 293-வது குரு சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது திடீர் என எடுத்து முடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக புதியவரை நியமிக்க யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்த அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன். இப்போது 293-வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்து எடுத்ததற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சிவன்- பார்வதி ஆசியுடன் நித்தியானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர். நானும் அவரும் இணைந்து நிர்வாகத்தை நடத்துவோம்.

தந்தையும், மகனும் ஒரு கம்பெனியை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் இருவரும் இணைந்து தந்தை, மகன் போல் நடத்துவோம். இவர் இங்கு அடிக்கடி வருவார் என்றார் மதுரை ஆதீனம்.



ஊழல், கருப்புப் பணம் குறித்து பேசுவாரா சச்சின்?... ராம்தேவ் கேள்வி!

Posted: 29 Apr 2012 03:21 AM PDT


காங்கிரஸ் ஆதரவுடன், அக்கட்சி கொடுத்த நெருக்கடிக்குப் பணிந்து ராஜ்யசபா எம்.பியாகி விட்டார் சச்சின். இனி அவர் கருப்புப் பணம், ஊழல் பிரச்சினை குறித்தெல்லாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பேசுவாரா என்று பாபா ராம்தேவ் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கிரிக்கெட் உலகில் தலைசிறந்து விளங்கும் சச்சின் டெண்டுல்கர், நியமன உறுப்பினர் ஆக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனி அவர் விளையாட்டு தவிர ஊழல் பிரச்னை, கறுப்புப் பணம் ஆகிய விவகாரங்களை எழுப்புவாரா என்ற கேள்வியை அவரிடம் கேட்கத் தோன்றுகிறது.

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதன் மூலம் மீட்க முடியும் என்றால் அனைத்து வீரர்கள், பிரபலங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் விளைவுகளை சச்சின் டெண்டுல்கர் நன்றாகவே உணர்ந்திருப்பார்.

ஆனாலும் அவருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் முடிவைத் திணித்துள்ளனர். அதற்கு அவர் பணிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நித்தியானந்தா!

Posted: 29 Apr 2012 03:18 AM PDT


முடி சூட்டலுக்குப் பின்னர் மதுரை திரும்பிய நித்தியானந்தாவை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கூட்டிச் சென்று கோவிலை சுட்டிக் காட்டினார் மதுரை ஆதீனம். இதனால் கோவிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் நேற்று இரவு பெங்களூரிலிருந்து மதுரைக்கு வந்தனர். மதுரை ஆதீன மடத்திற்குள் உள்ள விடுதியில் தங்கினர். நடிகை ரஞ்சிதாவும் இவர்களுடன் பெங்களூரிலிருந்து வந்தார்.

இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களை ஆதீனமும் நித்தியானந்தாவும் சந்தித்தனர். அப்போது மதுரை ஆதீனம் பேசுகையில், மதுரை ஆதீன மடத்தின் அடுத்த ஆதீனமாக 2 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். முறைப்படியான இளைய ஆதீனமாக பட்டம் சூட்டும் விழா ஜூன் 5ம் தேதி நடைபெறும். மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா ரூ. 1 கோடி நிதியுதவி செய்கிறார் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு இருவரும் அருகில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றனர். தற்போது மதுரையில் சித்திரைத் திருவி்ழா நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கோவிலுக்குள் சேர்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நித்தியானந்தாவுக்கு கோவிலைச் சுற்றிக் காட்டினார் மதுரை ஆதீனம். பின்னர் இருவர் பெயரிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.



மதுரை இளைய ஆதீனமாக ரஞ்சிதாவின் நித்யானந்தா பதவியேற்றார்

Posted: 29 Apr 2012 02:26 AM PDT


பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரை மதுரை ஆதீனம் தனது வாரிசாக அறிவித்தார். பெங்களூரு சென்று பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு கிரீடத்தை சூட்டி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
 
நித்யானந்தாவுக்கு முறைப்படி முடிசூட்டு விழா மதுரை ஆதீனம் மடத்தில் இன்று காலை நடந்தது. நித்தியானந்தா முதலில் ஆதீனத்திற்கு தங்க கிரீடமும், துளசி மாலையும் அணிவித்து ஆசி பெற்றார். பின்னர் நித்தியானந்தாவுக்கு ஆதீனம் தங்க கிரீடமும், உத்திராட்சை மாலை அணிவித்து வாரிசாக அறிவித்தார்.
 
பின்னர் நித்தியானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
 
ஆதீன மடம் என்பது ஒரு கடல் போன்றது. இதை செம்மையாக நடத்துவேன். சன்னிதான உத்தரவுபடி நான் நடப்பேன். என் மீதான குற்றச்சாட்டை சட்ட ரீதியாக நிரூபிப்பேன். நான் இந்த விஷயத்தில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. பழிப்பது தவறல்ல. அதற்கு பதில் சொல்வேன். ஆனால் சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அதுதான் தவறு என்கிறேன். வேதனைப்படுகிறேன்.
 
தமிழ்நாட்டில் 800 தியான மையம் உள்ளது. 12 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்தாலும் இன்னும் இங்கு தியான பீடம் நடந்து வருகிறது. பக்தர்கள் எல்லாம் வந்து செல்கிறார்கள். எனவே என்னை தமிழக மக்கள் ஏற்று கொள்வார்கள். என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம். அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என சொல்ல முடியாது. உலக அளவில் சிறந்த ஆன்மீகவாதிகளின் பெயர்களை வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள ஸ்ரீரவி சங்கர், அமிர்தானந்தமயி, குருதேவ், என் பெயர் இடம் பெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
 
மதுரை ஆதீன மடத்தில் 293-வது மகா சன்னிதானமாக மனபூர்வமாக ஏற்று கொண்டு முழுமையாக பணியாற்றி சைவ சித்தானந்தத்தை உலகம் முழுவதும் பரப்ப பாடுபடுவேன். நானும் 292-வது சன்னிதானமும் சேர்ந்து ஆதீன மடத்தை முறையாக நடத்துவோம். மதுரை ஆதீனத்துக்குட்பட்ட 4 கோவில்கள் உள்ளது. 4 கோவில்களுக்கும் இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இன்று முதல் ஆதீன மடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படும். 24 மணி நேரமும் இது வழங்கப்படும்.
 
குருவுக்கு (மதுரை ஆதீனம்) ரூ.1 கோடி பாத காணிக்கை வழங்கி இருக்கிறேன். மேலும் ரூ.4 கோடி பாத காணிக்கை சமர்பிக்க இருக்கிறேன். மேலும் எனது ஆசிரமத்தில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், படித்த சன்னியாசிகள் 50 பேரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை கவனிக்க மதுரைக்கு அனுப்பி வைப்பேன். எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பள்ளி, கல்லூரிகள் நிறுவப்படும். வருகிற ஜுன் 5-ந்தேதி கனகாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
இவ்விழாவையொட்டி 100 கிராமங்களில் பள்ளிக்கூடம் தொடங்கப்படும். எனக்கு 40 நாடுகளில் ஆசிரமம் உள்ளது. 1 கோடியே 20 லட்சம் சீடர்கள் உள்ளனர். மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி. அவர் ஒரு ஆலமரம். அம் மரத்திற்கு கீழ் காளான் முளைப்பது இயற்கைதான். காளானாக இருந்து சிறப்பாக பணியாற்றுவேன். ஆதீனம் ஒரு கடல். நான் அதில் ஒரு துளிதான். இந்த கடலில் கலப்பதில் ஆனந்தமடைகிறேன். ஆதீனம் ஞானமிக்கவர். எனக்கு நல்ல வழி காட்டு பவர். எனவேதான் இந்த பெரிய பொறுப்பை ஏற்றேன். என் மீது பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆன்மீக பணியாற்றும்போது ஓரிரு இடைïறு ஏற்படுவது வழக்கம்தான். இவ்வாறு அவர் கூறினார்.
 
மதுரை ஆதீனம் கூறியதாவது:-
 
இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞான சம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. முன்பு மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் இந்த மடத்தின் நிர்வாகத்துக்குள் இருந்தது. பின்னர் அரசு எடுத்து கொண்டது. மதுரை ஆதீனம் 293-வது குரு சன்னிதானமாக நித்தி யானந்தா சுவாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது `திடீர்' என எடுத்து முடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக புதியவரை நியமிக்க யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்த அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன். இப்போது 293-வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்து எடுத்ததற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
சிவன்- பார்வதி ஆசியுடன் நித்தி யானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர். நானும் அவரும் இணைந்து நிர்வாகத்தை நடத்துவோம். தந்தையும், மகனும் ஒரு கம்பெனியை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் இருவரும் இணைந்து தந்தை, மகன் போல் நடத்துவோம். இவர் இங்கு (மதுரை) அடிக்கடி வருவார்.
 
கேள்வி: நித்தியானந்த சுவாமிக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே?
 
 பதில்: அவர்கள் புரியாமல் அறியாமை காரணமாக குற்றம் சாட்டுகிறார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™