விழியே பேசு... |
- இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா? மத்திய மந்திரி வாசன் பேட்டி
- கருணாநிதி தனி ஈழம் கேட்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை: வைகோ தாக்கு
- லோக்பால் சட்டத்தால் சிறைகள்தான் நிரம்பும்:அப்துல்கலாம் கருத்து
- திமுக எடுத்த முடிவு: கவலையில் அதிமுகவினர்!
- நித்யானந்தாவுக்கு ஆதீனங்கள் வைத்த ஆப்பு.....
- தூங்கிய பெண்ணிடம் கணவர் போல படுத்து உல்லாசம்
- ரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா
- 'ஒபாமாவை படுகொலை செய்ய உத்தரவிட்டார் பின்லேடன்'
- ஆபரேஷன் செய்து பெண்ணாக மாறும் 80 வயது தாத்தா
- காதல் : அஜீத் - ஷாலினி
- ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்
- அரசியல் பிரவேசம் குறித்து சச்சின் தெண்டுல்கர் பேட்டி
- என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிக்க கூடாது- அஜித்
- ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் 'மிரட்டல்' வந்தது!- பிரசன்னா
- மனிதர்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு
- ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியிலும் பிளவு!
- மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை ஏற்க எதிர்ப்பு: ஆதீனங்கள் அவசர ஆலோசனை
- ஜனாதிபதி தேர்தலில் சோம்நாத் சட்டர்ஜியை நிறுத்த தி.மு.க. சிபாரிசு: காங்கிரஸ் கட்சி ஏற்குமா?
- தூக்குத் தண்டனையை குறைக்க வேண்டும்: ராஜீவ் கொலையாளிகள் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்
| இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா? மத்திய மந்திரி வாசன் பேட்டி Posted: 01 May 2012 10:16 PM PDT திருச்சியில் நடந்த ஐ.என்.டி.யூ.சி மாநில மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 'தமிழ் ஈழம்' ஒன்றே தீர்வு என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறி இருக்கிறார். மேலும் டெசோ அமைப்பை கருணாநிதி மீண்டும் தொடங்கி இருப்பதால் தி.மு.க-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படுமா? பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறு வாழ்வையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் தான் நாங்கள் கவனமாக பார்த்து வருகிறோம். அதனால் தான் ஐ.நா. மன்றத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. மேலும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க் கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அந்த குழுவினர் அதிபர் ராஜபக்சேயை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வுகள் தொடர்பான திட்டங்களை கொடுத்து விட்டு வந்து இருக்கிறார்கள். கேள்வி:- புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா? பதில்:- தமிழகத்தை பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க அங்கம் வகிக்கிறது. எனவே தமிழக காங்கிரஸ் தலைவர் இதுபற்றி கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளருக்கு அறிக்கை அனுப்புவார். அதன் பின்னர் தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அகில இந்திய பொதுச்செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். கேள்வி:- காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே? பதில்:- ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. காங்கிரஸ் அரசு, கூட்டணி கட்சி ஆளும் அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு என்றெல்லாம் நாங்கள் பாகுபாடு பார்ப்பது இல்லை. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதும் இல்லை. கேள்வி:- நெய்வேலி அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? பதில்:- என்.எல்.சி சுரங்கத் தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறி இருக்கிறார். எனவே இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின்(ஐ.என்.டி.யூ.சி) 25-வது மாநில மாநாடு நேற்று திருச்சி தேவர் ஹாலில் நடந்தது. மாநாட்டுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ஜி. காளன் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் கல்யாணராமன் வரவேற்று பேசினார். மாநாட்டை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் அகில இந்திய ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சஞ்சீவரெட்டி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஷானிமோள் உஸ்மான், கேரளமாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் பேசினார்கள். |
| கருணாநிதி தனி ஈழம் கேட்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை: வைகோ தாக்கு Posted: 01 May 2012 08:51 PM PDT திமுக தலைவர் கருணாநிதி தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய அரசின் துணையுடனேயே இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தது. அப்போது முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி தன் கடைமையைச் செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் தனது உயிரை மாயத்துக் கொண்டபோது அவர் ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உயிருக்கு போராடியபோது அவரை இறங்கக் கூட விடாமல் சென்னை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டதற்கு கருணாநிதியே காரணம். இவ்வாறெல்லாம் செய்துவிட்டு தற்போது மட்டும் தமிழ் ஈழம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். முப்படைகளைக் கொண்ட தமிழ் ஈழத்தை அப்போதே பிரபாகரன் உருவாக்கியிருந்தார். உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டியது தான் மீதமிருந்தது. அப்போது அதை மத்திய அரசின் துணையோடு அழித்துவிட்டு தனி ஈழம் அமைக்கப்போவதாக கருணாநிதி கூறவது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை என்றார். |
| லோக்பால் சட்டத்தால் சிறைகள்தான் நிரம்பும்:அப்துல்கலாம் கருத்து Posted: 01 May 2012 07:03 PM PDT முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சிறுவர்-சிறுமிகளுடன் நேற்று உரையாடினர். அப்போது அவர் கூறுகையில், லோக்பால் சட்டம் தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்பும். அதனால் சிறைகள்தான் நிரம்பும். ஆனால் சிறுவர்களாகிய நீங்கள் உங்களது வீடுகளில் இருந்து ஊழலை ஒழிக்க பாடுபடுங்கள் என்று கூறினார். மேலும் அவர், என் குடும்பத்தில் யாரும் லஞ்சம் வாங்காதவாறு பார்த்து கொள்வேன். அதன் மூலம் ஊழலற்ற குடும்பம், ஊழலற்ற நாடு உருவாக பாடுபடுவேன் என்று அவர் சிறுவர்களை அப்போது உறுதி மொழியும் எடுத்து கொள்ள செய்தார். |
| திமுக எடுத்த முடிவு: கவலையில் அதிமுகவினர்! Posted: 01 May 2012 10:50 AM PDT புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கும் முன்பே அ.தி.மு.க மட்டும் வேலைகளை தொடங்கி பஞ்சபாண்டவர்களாக 5 அமைச்சர்களை அனுப்பி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் தொகுதியை வைத்திருந்த சி.பி.ஐ, இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து தி.மு.க தலைமையும் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த போட்டியில்லை என்ற அறிவிப்புகள் அ.தி.மு.க வினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத் தியுள்ளது. இது பற்றி அ.தி.மு.க வினர் கூறும் போது, இடைத்தேர்தல் என்றால் பணத்திற்கு பஞ்சமில்லாத களமாக இருக்கும். ஆளும்கட்சியினருக்கு திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் பொதுமக்கள் தெரிந்து கொண்டார்கள். அதே போல புதுக்கோட்டை இடைத் தேர்தலும் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று கட்சிகாரர்கள் பெரும் மகிழ்சியில் இருந்தோம். ஆனால் தொகுதியை வைத்திருந்த சி.பி.ஐ யும் நிற்கவில்லை என்ற அறிவித்தவிட்டது. அடுத்து தி.மு.க வும் இதே நிலை எடுத்தால் எங்கள் இடைத்தேர்தல் திருவிழா கொண்டாட்டம் நடக்காது. இப்பவே பெரிய கனவுகளோடு தேர்தல் களத்திற்கு தயாராகி விட்டோம். ஆனால் இனி எங்க கட்சி மேலிடம் கூட பணம் கொடுக்காதே அப்பறம் எப்படி எங்கள் கனவு நிறைவேறும் என்று கவலையுடன் கூறியதுடன். தி.மு.க போட்டிக்கு வந்தால் நிச்சயம் எங்கள் கனவு நிறைவேறும் என்றும் கூறுகின்றனர். |
| நித்யானந்தாவுக்கு ஆதீனங்கள் வைத்த ஆப்பு..... Posted: 01 May 2012 09:14 AM PDT மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளார். மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும். இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதனை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டது மற்ற ஆதீனங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது. இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சுவாமிகள் தலைமையில் இன்று மாலை தருமபுரத்தில் உள்ள ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்களைக் கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு சுவாமிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், நித்தியானந்தா விவகாரம் பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பியது. அப்போது பேசிய பலரும், நித்தியானந்தா நியமனத்தை இன்னும் பத்து தினங்களுக்குள் மறுபரிசீலனை செய்து மதுரை ஆதினம் அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லை என்றால், இது தொடர்பாக அனைத்து ஆதீனங்களும் சேர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்வோம். இது தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வலியுறுத்துவோம் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தூங்கிய பெண்ணிடம் கணவர் போல படுத்து உல்லாசம் Posted: 01 May 2012 09:07 AM PDT சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது41). கடந்த 22-ந்தேதி இரவு மாரியப்பனும், ராம லட்சுமியும் அருகருகே படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது பின் பக்க கதவு திறந்து இருந்ததால், பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் செல்வராஜ் நைசாக உள்ளே நுழைந்தார். மாரியப்பனின் அருகே படுத்திருந்த ராமலட்சுமியை பார்த்தும் செல்வராஜுக்கு சபலம் ஏற்பட்டது. அவரும் ராமலட்சுமியின் கணவர் போல அருகில் படுத்து ராமலட்சுமியை கட்டி பிடித்து உல்லாசம் அனுபவிக்க தொடங்கினார். தூக்க கலக்கத்தில் இருந்த ராமலட்சுமி இருட்டில் முகத்தை சரியாக கவனிக்காமல் கணவர் தானே என்று விட்டு விட்டார். திடீர் என்று சினிமா படத்தில் நகைச்சுவை காட்சியில் வருவது போல, அவரது கணவர் திரும்பி படுத்து தனது கையை மனைவி மீது போட்டுள்ளார். அப்போது தான் அவரது மனைவி கூடுதலாக ஒரு "கை" எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது அருகில் கணவர் படுத்து தூங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக ராமலட்சுமி அலறி அடித்து எழுந்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் வெளியே ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ராமலட்சுமி திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகிறார்கள். |
| ரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா Posted: 01 May 2012 06:21 AM PDT சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்கும் தீபிகா படுகோனே அவரை அப்பா என்றே அழைக்கிறாராம். இன்றைய தேதிக்கு கோலிவுட், மாலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று அனைத்து உட்களைச் சேர்ந்த நடிகைகளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஏன் நம்ம பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா கூட ரஜினியுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார். அப்பேர்பட்ட ரஜினியுடன் கோச்சடையானில் ஜோடியாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அவரும், ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். படத்தில் ஜோடியாக நடித்தாலும் கேமராவுக்கு பின்னால் ரஜினியை தீபிகா பாசத்துடன் அப்பா என்றே அழைக்கிறாராம். கோச்சடையான் படப்பிடிப்பில் தான் சௌகரியமாக உணர உதவிய சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்து தீபிகா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தான் அவர் ரஜினியை அப்பா என்று அழைப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுந்தர்யா டுவிட்டரில் கூறுயிருப்பதாவது, கேரளாவில் கோச்சடையானின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளோம். தீபிகாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. தீபிகா ஒரு டார்லிங் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு தீபிகாவின் டுவீட், சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு நன்றி. அப்பா, அம்மாவுக்கு எனது அன்பை தெரிவிக்கவும், விரைவில் உங்களை சந்திக்கிறேன். பதிலுக்கு சவுந்தர்யா டுவீட், உங்களை இயக்கியதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திப்போம். அப்பா, அம்மா மற்றும் படக்குழு தங்கள் அன்பை தெரிவித்துக்கொள்கிறார்கள். |
| 'ஒபாமாவை படுகொலை செய்ய உத்தரவிட்டார் பின்லேடன்' Posted: 01 May 2012 06:12 AM PDT பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் படுகொலை செய்ய உத்தரவிட்டிருந்தார் பின்லேடன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் என்பிசி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தியில் கூறுகையில், அபோத்தாபாத் வீட்டில் பின்லேடன் பதுங்கியிருந்தபோதும் தனது தீவிரவாத செயலில் தீவிரமாகவே இருந்துள்ளார். தொடர்ந்து தனது கூட்டாளிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வந்துள்ளார். குறிப்பாக அதிபர் ஒபாமா, ராணுவத் தளபதி டேவிட் பெட்ரிஷியஸ் ஆகியோரைப் படுகொலை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்ததாக அந்த செய்தியின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட் ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து இது தெரிய வந்ததாக அந்த ராணுவ அதிகாரி கூறினாராம். பின்லேடனைக் கொன்ற பின்னர் அவர் பதுங்கியிருந்த வீட்டிலிருந்து கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றை அமெரிக்க சீல் படையினர் கைப்பற்றிச் சென்றனர் என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் அதிபர் ஒபாமாவைப் படுகொலை செய்வது தொடர்பான திட்டம் எதுவும் அந்த வீட்டில் இல்லை என்றும், எதிர்காலத் தாக்குதல்கள் குறித்த திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது. |
| ஆபரேஷன் செய்து பெண்ணாக மாறும் 80 வயது தாத்தா Posted: 01 May 2012 05:31 AM PDT இங்கிலாந்தில் உள்ள சுசக்ஸ் நகரை சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் ரூத் ரோஸ் (வயது 79). இவர் ஆபரேஷன் செய்து பெண்ணாக மாற முடிவு செய்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் அவருக்கு 80 வயது பிறக்கிறது. அப்போது இந்த ஆபரேஷனை செய்ய உள்ளார். தனது 9 வயதிலேயே பெண்ணாக இருக்க ஆசை ஏற்பட்டதாகவும், அதை இப்போது நிறைவேற்ற போவதாகவும் அவர் கூறுகிறார். இவருக்கு 3 குழந்தைகளும் அவர்கள் மூலம் பேரக்குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. |
| Posted: 01 May 2012 05:24 AM PDT ஏய்...' என்ற அலறலோடு அஜீத் கத்தியைக் காற்றில் வீச, எதிரே இருந்த ஷாலினியின் வலது கையில் ரத்தக் கோடு. 'கட்... கட்...' பதறிப்போனது மொத்த யூனிட்டும். திட்டமிட்ட காட்சி அதுதான். ஆனால், நிஜமாகவே ஷாலினி யின் கையைக் கத்தி பதம்பார்த்துவிட்டது எதிர்பாராத திருப்பம். ரத்தம் பார்த்த அஜீத் படபடப்பாகிவிட்டார் தாம்தூம் என்று ஆர்ப்பாட்டம் செய்து, அடுத்த சில நிமிடங்களில், படப்பிடிப்புத் தளத்துக்கு ஒரு ஆஸ்பத்திரியையே கொண்டுவந்துவிட்டார். வலியால் கத்தித் தீர்க்க வேண்டிய ஷாலினி, 'நோ பிராப்ளம்' என்பதுபோல அமைதியாக இருந்தார். ''ஷாலினியின் அந்த நிதானம், என்னை ஆழமாகப் பாதித்துவிட்டது. 'ஒரு பெண்ணால் இத்தனை அமைதியாகப் பிரச்னையை எதிர்கொள்ள முடியுமா?' என்று ஆச்சர்யமாக இருந்தது!''- இப்போது சொல்கிறார் அஜீத். ''அடுத்தவருக்குச் சிறு துன்பம் என்றால் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமா? தான் யார், தன்னுடைய நிலை என்ன... என்பதை எல்லாம் விட்டுவிட்டு, முகத்தில் பதற்றமும் மனதில் அக்கறையுமாக ஒருவரால் அல்லாட முடியுமா என்று வியப்பாக இருந்தது!'' என்று சொல்லும் ஷாலினியின் இதழ் ஓரத்தில் வெட்க இழை! எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இயல்பு தானே... ஷாலினிக்கும் அஜீத்துக்கும் காதல் அரும்பியது அந்தத் தருணத்தில்தான்! ''அஜீத்தும் ஷாலினியும் சந்தித்துக்கொண்டதே அந்தத் தினத்தில்தான். அஜீத்தான் ஹீரோ, ஷாலினிதான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருந்த நான், கஷ்டப்பட்டு ஷாலினியைச் சம்மதிக்கவைத்து அழைத்து வந்தேன். அஜீத் தனியாக வும் ஷாலினி தனியாகவும் நடித்து முடித்த நிலை யில், அடுத்த ஷெட்யூலில் காம்பினேஷன். முதல் சந்திப்பிலேயே ரத்தம். ஷாலினியின் அப்பா, 'இது நல்ல சகுனம்தான்' என்றார். எல்லாம் நல்லவித மாகவே முடிந்திருக்கிறது!'' என்றார் 'அமர்க்களம்' படத்தின் டைரக்டர் சரண். ''ஷாலுவை (ஷாலினியைத்தான் இப்படிச் செல்லமாகக் குறிப்பிடுகிறார்) பார்த்தால் ஆச்சர் யம்தான் மிஞ்சுகிறது. '20 வயதில் ஒரு பெண்ணுக் குள் இத்தனை தீர்க்கமான சிந்தனையா...' என்று பல நேரங்களில் பிரமித்துப்போயிருக்கிறேன்...'' என்கிறார் அஜீத். ''இதற்கு முன் நான் சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் இந்தப் பெண்ணின் பார்வைக்குள்ளும் செயலுக்குள்ளும் ஒளிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது. சட்டென்று எனக்குள் ஒரு மின்னல்... 'என் தேடல் இதை நோக்கித்தானோ...' நேராக ஷாலினியிடம் போய், 'நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்' என்று சொன்னேன். என்ன பதில் வருமோ என்ற பதற்றம் எனக்கு!'' பேசுவதை நிறுத்தித் தலையைக் கோதிவிட்டபடி, பின்னால் சாய்ந்துகொண்டார் அஜீத். ''அஜீத் என்னிடம் வந்து இப்படிக் கேட்டபோது எனக்குள் பெரிய அதிர்ச்சி எல்லாம் எழவில்லை. சொல்லப்போனால், என் மனமே மெள்ள அஜீத் பக்கம் சாயத் தொடங்கிவிட்டதாகத்தான் உணர்ந்தேன். ஆனால், நான் அப்பா பொண்ணு. அதனால், 'எனக்கு ஓ.கே... அப்பாவிடம் பேசி விடுங்கள்' என்று சொல்லிவிட்டேன். அப்பாவிடம் அஜீத் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் சந்தோஷம்!'' என்றார் ஷாலினி. ''எல்லோருக்கும் சந்தோஷம். சரி... ஆனால், ஒரு டைரக்டர் என்ற முறையில் எனக்குப் பெரிய வருத்தம். 'ஷாலினிங்கிற நடிகையை இழந்துட்டோமே'ன்னு. மற்றபடி, நான் அடம்பிடிச்சு சினிமாவில் இவர்களை ஜோடி சேர்த்தது வாழ்க்கையிலும் ஜோடி சேருவதற்குத்தான் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் சரண்! ஆக, இனிமேல் ஷாலினி சினிமாவில் நடிக்கப்போவது இல்லை! ''என் ஆசை அதுதான்... நான் ஒரு காட்டாறு மாதிரி யான மனிதன். எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்துகொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலைத் தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்தக் கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்!'' என்றார் அஜீத். ''நடிப்பது என்பது பணத் தேவைக்காகவோ, அதீதப் புகழுக்காகவோ இல்லை. என் சந்தோஷத்துக்காக... இப்போது அடுத்த பொறுப்பு கிடைத்திருக்கிறது. அங்கே மாறிவிட்டேன்''- மெலிதான புன்னகையோடு சொல்கிறார் ஷாலினி. ''ஷாலுவைவிட எனக்குத்தான் பொறுப்பு அதிகம். ஷாலுவைத் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக மதிக்கின்றன. அவர்கள் எல்லோரும் எனக்கும் ஷாலுவுக்கும் நல்வாழ்த்துக்களை அனுப்பி இருக்கிறார்கள். இப்போது நான் தமிழ்நாட்டின் மருமகன்'' என்றார் அஜீத். ''இப்போது எதிர்காலம் பற்றித்தான் அதிகம் பேசிக் கொள்கிறோம். அஜீத்தின் திட்டங்களைச் சொன்னால் பல பெண்களுக்கு என் மேல் பொறாமை வரும்'' என்று பெரிய பீடிகை போட்டார் ஷாலினி. ''ஒரு நேரத்தில் ஒரு படம்... 15 நாள் சினிமாவுக்கு... 15 நாள் குடும்பத்துக்கு. இந்தத் தொடையில் ஒன்று, அந்தத் தொடையில் ஒன்று... வலது தோளில் ஒன்று, இடது தோளில் ஒன்று... தலையில் ஒன்று... கழுத்தைக் கட்டிக் கொண்டு முன்பக்கம் ஒன்று, பின்பக்கம் ஒன்று... இப்படி நிறையக் குழந்தைகள். என் ஓய்வு நேரங்கள் எல்லாம் என் ஸ்வீட் ஹார்ட்டுக்கும் ஜூனியர் அஜீத், ஷாலினிகளுக்கும்தான். நல்ல தகப்பனாக... நல்ல ஆசிரியனாக... உண்மையான சேவகனாக, நிறைவான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு என்று வாழ்க்கையின் எல்லாக் கதவுகளையும் திறந்துவைக்கப் போகிறேன்!'' - நெகிழ்ச்சி ததும்புகிறது அஜீத் குரலில். ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முடிக்கும் வேகத்தில் இருக்கிறார் ஷாலினி. எல்லாம் முடிந்து இரண்டு குடும்பங் களும் கலந்து பேசி திருமணத்துக்காக ஒரு நல்ல நாளை முடிவு செய்யப்போகிறார்கள். அதுவரையில் இருவர் கை களிலும் இருக்கும் செல்போன்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்கும்... அவர்களின் சந்தோஷ எதிரொலியாக! |
| ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை: அதிர்ச்சி தகவல் Posted: 01 May 2012 04:57 AM PDT பொருளாதார பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனை காரணமாக ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த 4 மாதத்தில் மட்டும் ஓமனில் 23 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 பேரும், ஏப்ரலில் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் உள்ளது என்று டைம்ஸ் ஆப் ஓமன் பத்திரி்க்கை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ருவி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகளின் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஓமனி்ல் 50 இந்தியர்களும், 2011ல் 54 பேரும் தற்கொலை செய்துள்ளனர். ஓமனில் உள்ள இந்தியர்களிடையே அதிகரி்த்து வரும் தற்கொலை எண்ணத்தை மாற்ற இந்திய சமூக மற்றும் மத அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நிதி பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனைகளால் தான் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனஅழுத்ததில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே இந்திய உயர் அதிகாரி தலைமையிலான குழு செயல்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| அரசியல் பிரவேசம் குறித்து சச்சின் தெண்டுல்கர் பேட்டி Posted: 01 May 2012 04:45 AM PDT இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் கடந்த 23 ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு செய்த சேவையை பாராட்டி, மேல்-சபை நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கு முன் நடிகர்கள் சிலருக்கு நியமன எம்.பி. பதவி கொடுத்து, அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்ததுபோல், சச்சினையும் அரசியலுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், சச்சினின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின், 'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்' என்றார். இவ்வாறு கூறியதன் மூலம் சச்சின் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்திருக்கிறார். மேலும், 'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்' எனவும் சச்சின் கூறியுள்ளார். |
| என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிக்க கூடாது- அஜித் Posted: 01 May 2012 04:38 AM PDT நானும் விஜய்யும் சினிமாவுக்கு வெளியே நல்ல நண்பர்கள். என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது முகம் சுளிக்க வைக்கிறது. அதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்றார் அஜீத். நடிகர் அஜித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி: இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்டது? என்னுடைய வளர்ச்சியில் ரசிகர்களின் பங்கை மறக்கமாட்டேன். இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளேன். மோசமான படங்களிலும் நடித்துள்ளேன். நல்ல முடிவுகள் எடுத்தது உண்டு. மோசமான முடிவுகளையும் எடுத்தேன். அற்புதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறேன். இதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இவை என்னை செதுக்கி உள்ளது. கடந்த கால நிகழ்வுகள் பற்றி எந்த வருத்தமும் கிடையாது. உங்களுக்கு போட்டி யார்? லட்சியம் என்ன? எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். எனக்கு பெரிய லட்சியங்கள் கிடையாது. வாழ்க்கை என்பது பெரிய பரிசு. ஆக்கப்பூர்வமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் இல்லை. நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். எனவே நமக்கு கிடைப்பது கிடைக்கும். ஏன் கவலைப்பட வேண்டும். ஒரு வெற்றிப் படத்துக்கான தேவை, பார்முலா என்ன? படத்தின் வெற்றிக்கான பார்முலா தெரிந்தால் எல்லோருமே 100 சதவீத ஹிட் கொடுக்க முடியும். ஒரு படம் ஜெயிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது. அது கூட்டு முயற்சி. படங்களை தேர்வு செய்ய இயக்குனர், தயாரிப்பாளர்களுடனான புரிதல் முக்கியம். கதையும் முக்கியமானது. படத்தை முடிவு செய்த பின் எதிலும் நான் தலையிடமாட்டேன். ரொம்ப வெளிப்படையாகப் பேசுகிறீர்களே? நான் உணர்வு பூர்வமாக பேசுகிறேன். நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று கிடையாது. அரசியல் ரீதியாக இது சரி இல்லாமல் இருக்கலாம். அது என் குற்றம் இல்லை. விஜய்க்கு நீங்கள் போட்டியா? உங்கள் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்களே? அஜித்துக்கும் எனக்கும் தொழில் முறை போட்டிதான் உள்ளது என்றும், சினிமாவுக்கு வெளியே நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும் விஜய் சொல்லி இருப்பது உண்மைதான். விஜய் மனைவி சங்கீதாவும் என் மனைவி ஷாலினியும் நட்புடன் பழகுகிறார்கள். இருவர் குழந்தைகளும் ஒன்றாக இருக்கின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ரசிகர்கள் ஒருத்தரை ஒருத்தர் பற்றி தவறாக கருத்துக்கள் வெளியிடுவது மனதை புண்படுத்துகிறது. சாதாரண மனிதன் இதை பார்க்கும்போது முகம் சுளிக்கிறான். எனவே இவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் முடிவுகளில் மனைவி ஷாலினி குறுக்கிடுவாரா? மனைவி ஷாலினி எல்லா விஷயங்களிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். சினிமா சம்பந்தமாக நான் எடுக்கும் முடிவுகளில் தலையிடுவது இல்லை. நீங்களே சமைத்து விருந்து கொடுப்பதாக அடிக்கடி செய்தி வருகிறதே? நான் நன்றாக சமைப்பேன். எனது அம்மா சிறு வயதில் இருந்தே சமையல் கற்று கொடுத்துள்ளார். ஓய்வு நேரத்தில் சமைத்து நண்பர்களை சந்தோஷப்படுத்துவது எனக்குப் பிடிக்கும். |
| ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் 'மிரட்டல்' வந்தது!- பிரசன்னா Posted: 01 May 2012 03:30 AM PDT கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டனர், நடிகை ஸ்னேகாவும் நடிகர் பிரசன்னாவும். ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து, விவிஐபிக்களை அழைத்து ஓய்ந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இருவரும் சந்தித்துக் கொண்டது, காதல் வளர்த்தது, பெற்றோரின் சம்மதத்துக்குக் காத்திருந்தது, சாதிகளை மீறி திருமணத்துக்கு சம்மதம் வாங்கியது என இத்தனை நாட்களும் மீடியாவில் அரைபட்ட செய்திகள் கேள்விகள், பதில்களாக ஓடிக் கொண்டிருந்தன... பிரசன்னா, ஸ்னேகா திருமணம் வருகிற 11ம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது. தம்பதிகளாகப் போகும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தோம். வாய் நிறைந்த புன்னகையுடன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தனர் இருவரும். அவர்களின் திருமணத் திட்டங்கள், திருமணத்துக்குப் பிந்தைய திட்டங்கள் குறித்து நம்மிடம் கூறியதாவது: இந்தத் திருமணத்தை பிரசன்னாதான் முதலில் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு நீங்கள் எதுவுமே சொல்லாமல் அமைதி காத்தீர்களே? ஸ்னேகா: இருவரும் சேர்ந்து அறிவிக்கத் திட்டமிட்டிருந்தோம். அது கொஞ்சம் முன்கூட்டியே வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு நானே ஒரு பேட்டியில் சொல்லிவிட்டேனே. உண்மையை சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பிருந்தே காதலா? பிரசன்னா: அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பு அவரைப் பிடிக்கும். அந்தப் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்களாகக் காதலித்தோம். எங்கள் 2 பேரின் வீட்டிலும் சம்மதித்தபிறகுதான், காதல் பற்றி வெளியில் சொல்ல ஆரம்பித்தோம். பிரசன்னாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? ஸ்னேகா: அவரது உண்மையான காதல். அந்தக் காதலை எப்போதும் ஒரே மாதிரி அவர் கொண்டாடும் விதம். எனக்கு மிகப் பொருத்தமான இணை அவர் என முடிவு செய்த பிறகே காதலை ஒப்புக் கொண்டேன். மாமனார் மாமியார் பற்றி... ஸ்னேகா: அதை கண்டிப்பாக நான் சொல்லியாக வேண்டும். எனக்கு மாமனார்-மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே பிரசன்னாவின் பெற்றோர் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் ஆறு மாத காலம் தனிக்குடித்தனம் இருக்கிறோம். பின்னர் அனைவரும் ஒரே குடும்பத்தில் சேர்ந்து இருப்போம். எதிர்காலத் திட்டங்கள்... ஸ்னேகா: என்ன திட்டம்... ஓ குழந்தைகள் பற்றியா... அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. கொஞ்சம் ரிலாக்ஸ்டாகத்தான் அதை முடிவு செய்வோம். நிறைய கமிட்மென்ட்ஸ் உள்ளன. எல்லாவற்றையும் முடித்த பிறகே குழந்தைகள். ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் உங்களுக்கு மிரட்டல் வந்ததாமே... பிரசன்னா: அட ஆமாங்க. ட்விட்டர் வலைதளத்தில் சிலர் எங்கள் புன்னகை அரசியையா கல்யாணம் செய்ய போகிறாய் என்று மிரட்டினர். ஆனால் அந்த மிரட்டலை நான் புன்னகையோடு வரவேற்கிறேன். அவர்களுக்கு நான் சொல்வது, திருமணத்திற்கு பிறகும் ஸ்னேகாவை புன்னகை அரசியாகவே பார்த்துக் கொள்வேன் என்றார். பின்னர், "எல்லாரும் திருமணத்துக்கு தவறாம வந்துடுங்க, வாழ்த்துங்க", என்றனர் இருவரும். |
| மனிதர்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு Posted: 01 May 2012 03:22 AM PDT விண்வெளியில் நட்சத்திரங்களை போன்று ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவை பூமியை போன்ற அமைப்பும் தோற்றமும் இருப்பதாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி விஞ்ஞானி ஆதித்யா சோப்ரா குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூமியை போன்றுள்ள அந்த கிரகங்கள் மனிதர்கள் வாழ தகுதியுள்ளவையாக இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை போன்றவை இருப்பது தெரிய வந்துள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிரகங்களில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. |
| ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியிலும் பிளவு! Posted: 01 May 2012 03:21 AM PDT ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்ற பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சு அவரது சொந்தக் கருத்தாகும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பாஜக கூட்டணியில் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுக்கு ஒரு பெயரை கூறி வருகின்றன. அதே போல எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகளும் வாய்க்கு வரும் பெயர்களை சொல்லி வருகின்றன. இந் நிலையில் பாஜக கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அப்துல் கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்கத் தயார் என்றும் அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார். முகர்ஜி தீவிரமான அரசியலில் உள்ளார். அன்சாரிக்கு ஜனாதிபதி பதவிக்கான தகுதி கிடையாது என்றும் அவர் கூறியிருந்தார். இந் நிலையில் இன்று பேட்டியளித்த பாஜக கூட்டணியின் மிக முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத் தலைவரான சரத் யாதவ், சுஷ்மாவின் பேச்சு முழுக்க முழுக்க அவரது சொந்தக் கருத்து. அது கூட்டணியில் கருத்து அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். |
| மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை ஏற்க எதிர்ப்பு: ஆதீனங்கள் அவசர ஆலோசனை Posted: 01 May 2012 03:18 AM PDT மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளார். இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்திற்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியையும் மேலும் பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார் நித்யானந்தா. இந்நிலையில் மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும். இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதனை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டது மற்ற ஆதீனங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது. இதுகுறித்து ஆதீனங்களிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த ஆதீனங்களும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சுவாமிகள் தலைமையில் இன்று மாலையில் தருமபுரத்தில் உள்ள ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்களைக் கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு சுவாமிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை விதிமுறைகளை மீறி நியமித்தது குறித்து ஆதீனங்கள் காரசாரமாக விவாதிக்கின்றனர். மேலும் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதீனங்களின் ஒன்று திரண்ட அணிவகுப்பு மதுரை ஆதீன செயல்களுக்கு கடும் எதிர்ப்பாகவே இருக்கும் என ஆன்மீக அன்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். |
| ஜனாதிபதி தேர்தலில் சோம்நாத் சட்டர்ஜியை நிறுத்த தி.மு.க. சிபாரிசு: காங்கிரஸ் கட்சி ஏற்குமா? Posted: 30 Apr 2012 11:29 PM PDT ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 25-ந்தேதி முடிவடைவதால், ஜூலை முதல் வாரத்தில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சபாநாயகர் மீராகுமார், கரன்சிங் மற்றும் சோனியாவின் குடும்ப நண்பர் ஒருவரது பெயரும் காங்கிரசாரிடம் பரிசீலினையில் உள்ளது. காங்கிரஸ் நிறுத்தும் எந்த வேட்பாளரையும் ஏற்கமாட்டோம் என்று பா.ஜ.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சமாஜ்வாடி, அ.தி. மு.க., தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் களம் இறக்க திட்டமிட்டுள்ள அப்துல் கலாமை ஆதரிக்கத் தயார் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டுமே தன்னிச்சையாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய முடியாது என்பதால், மாநில கட்சிகளின் முடிவையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல மாநில கட்சிகள் கூறி இருப்பதால், இப்போதைக்கு பலரது பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு யூகத்தின் அடிப்படையில் பேசப்பட்டு வருகிறது. பா.ஜ.க. மற்றும் சில மாநில கட்சிகளின் மனதில் அப்துல்கலாமே உள்ளார். இதில் ஒருமித்த கருத்து ஏற்படாதபட்சத்தில் பஞ்சாப் முதல்-மந்திரி பாதலை பா.ஜ.கவும், மாநில கட்சிகளும் சிபாரிசு செய்யலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எனவே மாநில கட்சிகள், அந்த கட்சிகளை ஆதரிக்கும் பா.ஜ.க. விஷயத்தில் அதிக குழப்பம் இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை நிறுத்தினால் இடது சாரி கட்சிகளின் ஒட்டு மொத்த ஆதரவு கிடைக்கும். ஆனால் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒத்துழைக்க மாட்டார். அவரை சமாளிக்க பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி பதவிக்கு களம் இறக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பிரணாப் முகர்ஜியை இடது சாரிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகம். எனவே காங்கிரஸ் தலைவர்கள் இரு தலைகொள்ளி எறும்பாக தவிக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி பெயரை தி.மு.க. சிபாரிசு செய்தது. சோம்நாத் சட்டர்ஜி எல்லா கட்சி தலைவர்களுடனும் சுமூகமாக பழகுபவர். மூத்த தலைவர் என்பதோடு நன்கு அனுபவம் பெற்றவர் என்ற பலமும் அவரிடம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் மம்தா பானர்ஜி அவரை மண்ணின் மைந்தர் என்று ஆதரிக்க வாய்ப்புள்ளது. எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் இடதுசாரி கட்சிகளையும் ஒரே பாதையில் கொண்டுவர சோம்நாத் சட்டர்ஜிதான் சரியான நபராக இருப்பார் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சோம்நாத் சட்டர்ஜிக்கு இடதுசாரி கட்சிகளிடம் ஒருமித்த ஆதரவு கிடைக்குமா? என்று தெரியவில்லை. மேலும் சோம்நாத் சட்டர்ஜியை விரும்பாத மற்ற மாநில கட்சிகள் பா.ஜ.க.வுடன் ஓரணியில் திரள வாய்ப்புள்ளது. இத்தகைய காரணங்களால் சோம்நாத் சட்டர்ஜியை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பார்களா? என்பதில் இழுபறி நீடிக்கிறது. |
| தூக்குத் தண்டனையை குறைக்க வேண்டும்: ராஜீவ் கொலையாளிகள் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் Posted: 30 Apr 2012 11:22 PM PDT ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன். இவர்கள் கருணை மனுவை கடந்த வருடம் ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். எனவே இதை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக தாங்கள் சிறையில் இருப்பதால் தூக்குத் தண்டனையை குறைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து 3 பேரையும் தூக்கில் போட இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த வெங்கடேஷ் என்பவர் இந்த மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்றும், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த மனுவை விசாரிக்க முடிவு செய்தது. அதன்படி, இந்த வழக்கு சிங்வி தலைமையிலான நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் மே 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




















