விழியே பேசு... |
- பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..?
- நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் விருது!!
- ‘பொறுத்திருந்து பாருங்கள்.,பின்னர் கேளுங்கள்’- ஜனாதிபதி பதவி குறித்து அப்துல் கலாம் சுருக்.
- போபோர்ஸ் ஊழலில் சோனியா பெயர் இடம் பெறாதது வியப்பளிக்கிறது : ஆர்.எஸ்.எஸ்.
- கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்னிப்பு கழகம் பிரதமருக்கு கோரிக்கை
- கார்த்திக்கு பிரியாணி கொடுத்து சூர்யாவை ஏமாற்றிய வெங்கட்பிரபு
- விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!
- முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஜாமீனில் விடுதலை: தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
- அபிஷேக்சிங்வி ஆபாச வீடியோ(இணைப்பு): தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை
- எம்.பி. பதவியை ஏற்க சச்சின் தெண்டுல்கர் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கலாம்: ராம்தேவ்
- பிரபு தேவாவின் புது காதலி !
| பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? Posted: 28 Apr 2012 10:04 PM PDT தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி முதல் 15-ந் தேதிக்குள் வெளியாகக் கூடும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பிளஸ்டூ தேர்வு எழுதினர். இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நடைபெற்றது. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் ஒரு மையத்திலும் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் மற்றொரு மையத்திலும் திருத்தப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த 27ந் தேதி முடிவடைந்தது. சுமார் 75 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது. மதிப்பெண் பட்டியல் தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்கு 2.25 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணி மே 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு பின்னர் மதிப்பெண் பதிவு செய்து தேர்வு துறைக்கு அனுப்பப்படும். விடைத்தாள் திருத்தும் பணி முடிந்த பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க 10 நாட்கள் ஆகும். எனவே பிளஸ் டூ தேர்வு முடிவு மே 10ந் தேதியிலிருந்து 15ந் தேதிக்குள் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள். |
| நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் விருது!! Posted: 28 Apr 2012 09:43 PM PDT நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 20 குறும்படங்களில் 5 படங்கள் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த இளைஞர் எஸ் பிரவீண்குமார் தயாரித்த தி மெசையா படம் நடிப்புக்கான சிறந்த குறும்படமாக விருது வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த தேசப்பன் என்ற சிறுவனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படமாக ரோட்சைட் அம்பானிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கேமிராமேன் விருது கள்ளத்தோணி படத்துக்காக பிரபல ஒளிப்பதிவாளர் செழியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நார்வே திரைப்பட விழாவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவை குறும்படங்கள் போட்டிப் பிரிவுதான். ஏராளமான இளைஞர்கள், புதிய படைப்பாளிகள் ஆர்வத்துடன் தங்கள் படங்களை இதற்கு அனுப்பி வைத்தனர். போட்டிக்கு வந்த 50க்கும் மேற்பட்ட படங்களில் 20 படங்களை மட்டும் விழாவில் திரையிட தேர்வு செய்தனர் விழாக் குழுவினர். இந்தப் படங்கள் ஏப்ரல் 25 மற்றும் 26-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் திரையிடப்பட்டன. Kultursalen, Nedre Fossum Gård, Osloதமிழர்கள் மற்றும் நாரேவேயைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் படங்களைப் பார்க்க வந்தனர். இரண்டு நாட்கள் திரையிடலின் முடிவில் 5 படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவை: சிறந்த குறும்படம் - நடிப்பு படம்: தி மெசையா நடிப்பு: தேசப்பன் தயாரிப்பாளர்: எஸ் பிரவீண்குமார் இயக்கம்: ஷரத் ஜோதி. சிறந்த குறும்படம் படம்: ரோட்சைட் அம்பானிஸ் இயக்கம்: கமல் சேது சிறந்த குறும்படம் - இயக்குநர் படம்: நகல் இயக்குநர்: பொன் தயா சிறந்த குறும்படம் - கதை படம்: பூச்சாண்டி இயக்குநர்: சைமன் ஜார்ஜ் சிறந்த குறும்படம் - ஒளிப்பதிவு படம்: கள்ளத்தோணி. ஒளிப்பதிவு: செழியன் இயக்கம்: அருள் எழிலன் விருதுக்கான குறும்படங்களை குளோரியானா செல்வநாதன் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர். |
| ‘பொறுத்திருந்து பாருங்கள்.,பின்னர் கேளுங்கள்’- ஜனாதிபதி பதவி குறித்து அப்துல் கலாம் சுருக். Posted: 28 Apr 2012 09:29 PM PDT மீண்டும் நீங்கள் ஜனாதிபதியாக வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு " சற்று காலம் பொறுத்திருங்கள்,. பின்னர் என்னிடம் கேளுங்கள் அப்போது நான் பதில் சொல்கிறேன்" என மிக ரத்தினச்சுருக்கமாக சொல்லி விட்டு கிளம்பி விட்டார் கலாம். இருப்பினும் இந்த பதிலில் சில சூசகம் இருப்பதாகவே நிருபர்கள் விழித்து கொண்டனர். தற்போதைய ஜனாதிபதி பிரதீபாவின் பதவி காலம் முடிவுஅடைவதையொட்டி வரும் ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான வேட்பாளர் யார் என்ற சஸ்பெண்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில் அப்துல்கலாமை மீண்டும் இந்த பதவியில் அமர்த்த வேண்டும் என பா.ஜ., சமாஜ்வாடி, அ.தி.மு.க., , திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மறைமுக திட்டம் தீட்டி வருகின்றன. ஜனாதிபதி தேர்தல் ஓட்டளிப்பது யார் ? ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்களும், ( 776 பேர் ) அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களும் ( 4 ஆயிரத்து 120 பேர் ) ஓட்டளிக்கும் தகுதி படைத்தவர்கள். இதில் ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு 708 வீதம் மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 . மொத்த எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 474. இதில் தலா ஒரு எம்.எல்.ஏ,.க்களின் மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இரு உறுப்பினர்களும் இணைந்து வரும் பாய்ண்ட்களின் அடிப்படையில் ( மொத்தம் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ) இதில் அதிக ஓட்டுக்கள் பெறுபவரே வெற்றி பெறுவார். ஆனால் ஆளும் காங்கிரசுக்கும், பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கும் மெஜாரிட்டி இல்லை. எனவே ஒருமித்த கருத்துடன் போட்டியில்லாமல் ஒரே வேட்பாளரை நிறுத்திட ( அப்துல்கலாம்) எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மவுனமாக இருந்து வந்த அப்துல்கலாம் நிருபர்களிடம் கூறுகையில் ; இதனை தவிர்க்வில்லை. இருப்பினும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள் , பின்னர் பதில் சொல்கிறேன் என்றார். தமிழக எம்.பி,ஒருவரின் மதிப்பு 308 : தற்போதைய நிலவரப்படி உ .பி.,யில் ஆளும்கட்சியாக இருக்கும் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி முக்கிய இடம் வகிக்கிறது. இங்குள்ள ஒரு எம்.எல்.ஏ.,க்களின் மதிப்பு 495 இது தான் மற்ற மாநில மதிப்பை விட கூடுதல் ஆகும். குறைந்த மதிப்பு சிக்கிம் 19 . தமிழக எம்.பி,ஒருவரின் மதிப்பு 308. ஏ,கே.,அந்தோணி- கருணாநிதி சந்திப்பு : இந்த தேர்தல் தொடர்பாக ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.,தலைவர் கருணாநிதியை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ,கே.,அந்தோணி சந்தித்து பேசுகிறார். |
| போபோர்ஸ் ஊழலில் சோனியா பெயர் இடம் பெறாதது வியப்பளிக்கிறது : ஆர்.எஸ்.எஸ். Posted: 28 Apr 2012 09:14 PM PDT காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் நெருங்கிய உறவினர் இத்தாலி நாட்டை சேர்ந்த ஒட்டாவியோ கோட்ராச்சி போபோர்ஸ் ஊழலில் முக்கிய இடம் பெற்றுள்ளபோது, சோனியாவின் பெயர் இடம் பெறாதது வியப்பளிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ பத்திரிக்கையில் 'மிஸ்ஸிங் நேம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் இதனை தெரிவித்துள்ளது. அதில் ஒட்டாவியோ கோட்ராச்சியை காந்தி குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்த சோனியாவின் பெயர் இவ் ஊழல் வழக்கில் இடம் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. இது ஆச்சர்யமாக இருப்பதாகவும், ஹாரி பாட்டர் தொடரில் வரும் மர்மம் போன்று இவரது பெயரும் இடம் பெறாமல் இருப்பதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆட்சி செய்த மற்ற அரசுகளும் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. இதில் நேரடியாக என்.டி.ஏ.அரசை குறிப்பிடாவிட்டாலும் 1998-2004 ம் ஆண்டு வரை ஆட்சி செய்ததில் என்.டி.ஏ. வும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பாக வி.பி. சிங் தலைமயிலான அரசு பதவிக்கு வந்த 100 நாட்களில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிருத்துவோம் என்று கூறினர். ஆனால் எதுவும் செய்யவில்லை எனவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கிறார்கள். ஆனால் தான் ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்து விடுகிறார்கள் எனவும் அதில் குற்றம் சாட்டியுள்ளது. |
| கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்னிப்பு கழகம் பிரதமருக்கு கோரிக்கை Posted: 28 Apr 2012 09:11 PM PDT கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் அவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும் என பிரதமருக்கு சர்வதேச மன்னிப்பு கழகம் கோரிக்கை விடுத்து கடிதம் செய்யும் எழுதியுள்ளது. மக்கள் தங்கள் உணர்வுகளை தெரிவிக்க சர்வதேச சட்டப்படி உரிமையுள்ளது எனவும் போராட்டக்காரர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் எனவும், உடனடியாக அவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்த கோரியும் கோரிக்கை விடுத்துள்ளது. அக்கடிதத்தில் போராட்டக்குழு எழுப்பிய பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்ற உடைய குமாரின் குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ள அக்கடிதத்தில் உதயகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் மிரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போராட்டக்காரர்களை ஒடுக்க நினைக்கிறது எனவும் ஆனால் போராட்டம் அமைதி வழியில் நடந்து வருவதாகவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் நகல் போரட்ட குழுவிற்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இக்கடிதத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பீட்டர் கேட்டன் உள்பட சர்வதேச மன்னிப்பு கழக உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
| கார்த்திக்கு பிரியாணி கொடுத்து சூர்யாவை ஏமாற்றிய வெங்கட்பிரபு Posted: 28 Apr 2012 06:29 AM PDT மங்காத்தா படத்தின் மூலம் பெற்ற வெற்றிக்கு பிறகு தனது அடுத்த கதையை எழுதிக் கொண்டிருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்ததால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் தான் நடிப்பார் என பேசப்பட்டது. ஆனால் கதைக்கு பொருத்தமாக இயக்குனர் யாரை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வியை கேள்விக்குறி தாங்கிக் கொண்டிருந்தது. தனது மகளின் கோடை விடுமுறையை குளுமையாகக் கொண்டாட வெளிநாடு சென்றிருக்கும் வெங்கட் பிரபு, அடுத்த படத்தின் ஹீரோ கார்த்தி தான் என அறிவித்துவிட்டாராம். எனது கதையம்சத்தை வைத்து பார்த்தால் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி தான் பொருந்துவார். எதிர்காலத்தில் சூர்யாவுடன் ஒரு படம் பண்ணுவேன் என கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு 'பிரியாணி' என பெயர் வைத்திருக்கிறார்களாம். கார்த்திக்கு பிரியாணி! சூர்யாவுக்கு? |
| விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்! Posted: 28 Apr 2012 05:46 AM PDT அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார். அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் 'காவலன்' விநியோக உரிமையை வாங்கியது... விஜய்யை வைத்து 'வேலாயுதம்' படம் எடுத்தது... என நஷ்டம் மேல் நஷ்பட்டிருக்கும் ரவியின் தலையை 'தல' காப்பாத்துமா? |
| முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஜாமீனில் விடுதலை: தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு Posted: 28 Apr 2012 05:11 AM PDT விருதுநகர் மாவட்டம் சேதுராஜபுரத்தைச் சேர்ந்த தபால் அதிகாரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கடந்த 10-ந்தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜனும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதன், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் இருக்கன்குடி போலீசில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில இன்று காலை சாத்தூர் ராமச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையாகி வெளியே வந்த சாத்தூர் ராமச்சந்திரனுக்கு ஏராளமான தி.மு.க. வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். |
| அபிஷேக்சிங்வி ஆபாச வீடியோ(இணைப்பு): தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை Posted: 28 Apr 2012 04:46 AM PDT காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53). மேல்-சபை எம்.பி.யான இவர் இந்தியாவில் உள்ள தலைசிறந்த வக்கீல்களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர். இவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற 'செக்ஸ்' வீடியோ ஒன்று 'யு டியூப்' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியானது. சில தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. அபிஷேக் சிங்வியின் இந்த செக்ஸ் வீடியோ காட்சிகளை பார்த்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டதற்கு 'அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் போலியானவை. என்னிடம் வேலை பார்த்த டிரைவர் ஒருவர்தான் என் பெயரை கெடுப்பதற்காக இந்த போலியான வீடியோ காட்சிகளை இன்டர்நெட்டில் பரப்ப விட்டுள்ளார். இக்காட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று அதிரடியாக மறுத்தார். ஆனால் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'யு டியூப்' இணைய தளத்தில் வெளியான அபிஷேக் சிங்வி 'செக்ஸ்' வீடியோ காட்சிகள் போலியானவை அல்ல. அதில் அவர் பெண் வக்கீல் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் வீடியோ போலியானது என்று கூறி தப்பிவிடமுடியாது. அவர் உடனடியாக பாராளுமன்ற சட்டக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க் கொடி தூக்கின. இதனால் அவர் வேறு வழியின்றி அப்பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலின் பேரின் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அபிஷேக் சிங்வியின் செக்ஸ் வீடியோ காட்சிகள் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனால் அபிஷேக் சிங்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜோத்பூரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி கிஷன்ஜி கூறும்போது, 'யு டியூப்' உள்ளிட்ட ஏராளமான இணையதளங்களில் எங்கள் தலைவர் அபிஷேக் சிங்வி இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ காட்சிகள் போட்டி போட்டு ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் எங்கள் தலைவருக்கும், காங்கிரசுக்கும், நாட்டு மக்களிடம் கெட்டபெயர் ஏற்படுகிறது. எனவே இணைய தளங்களில் எங்கள் தலைவர் இருப்பது போன்ற போலி செக்ஸ் வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றார். சில நாட்களுக்கு முன்பு தனியார் டி.வி.க்களில் இவ்வீடியோ காட்சிகள் காட்டப்பட்டன. இதற்கு தடை கோரி டெல்லி ஐகோர்ட்டில் அபிஷேக்சிங்வி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு, அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தனியார் டி.வி.க்களுக்கு தடை விதித்தது. அபிஷேக் சிங்வி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் இணைய தளங்களில் அதிவேகமாக பரபரப்பப்பட்டு வரும் செக்ஸ் வீடியோ காட்சிகளை பார்த்து மிரண்டு போயுள்ளார். |
| எம்.பி. பதவியை ஏற்க சச்சின் தெண்டுல்கர் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கலாம்: ராம்தேவ் Posted: 28 Apr 2012 04:08 AM PDT நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மேல் சபை எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது குறித்து யோகா குரு ராம்தேவ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்டோர் மேல் சபை எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சச்சினை மேல் சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மூழ்கும் நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை, தாங்கி நிலை நிறுத்தவே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. சச்சினுக்கு பதவி கொடுப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். அதே போல் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவும் இந்திய மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட அரசியல் தரப்பில் எதிர்ப்புகள் வருவதால், அவருக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் அரசியலே. சச்சினை கட்சியில் சேர்க்க நடக்கும் முயற்சியே இது. இந்த பதவியை ஏற்க அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கு பதிலளிப்பது சச்சினின் கையில்தான் உள்ளது. மேல் சபையில் அமைதியாக இருக்கப் போகிறாரா அல்லது ஊழலுக்கும் கருப்பு பணத்துக்கும் எதிராக குரல் கொடுக்கப் போகிறாரா என்று சச்சின்தான் பதிலளிக்க வேண்டும். பல சதங்களையும் சிக்சர்களையும் அடித்துள்ள அவருக்கு இது குறித்து தெளிவான முடிவெடுக்க எல்லா உரிமையும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். |
| Posted: 28 Apr 2012 03:39 AM PDT பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தமாகி ஐதராபாத்துக்கும் கோடம்பாக்கத்துக்குமாய் போய் வந்து கொண்டு இருக்கிறார். பிரபுதேவா மும்பையில் தங்கி 'ரவுடி ரத்தோர்' படத்தை டைரக்டு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சோனாக்சி சின்கா. பெங்களூர் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை காண பிரபுதேவாவும் சோனாக்சி சின்காவும் ஜோடியாக வந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரது கண்களும் அவர்களையே மொய்த்தன. எதிர்பாராதவிதமாக மழை பெய்து போட்டியை நடக்க விடாமல் செய்தது. இதனால் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மும்பை திரையுலகில் இவர்களின் நெருக்கம் பற்றி கிசுகிசு பரவியுள்ளது. சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழாவில் பிரபுதேவா நடனம் ஆடி வீரர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியிலும் பிரபுதேவா பங்கேற்றார். இந்த பிரபலமே சோனாக்சியை பிரபுதேவாவுடன் நெருங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










