விழியே பேசு... |
- சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
- சிம் கார்டு வழங்க புதிய நடைமுறை: நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்
- பில்லா-2 பட பாடல்கள்! (promo videos)
- மே1ம் தேதி 'விஸ்வரூபம்'!
- சச்சின் தெண்டுல்கரின் எம்பி பதவி குறித்து கருணாநிதி பதில்
- திமுகவில் அழகிரி ஆள், ஸ்டாலின் ஆள் என்று யாரும் இல்லை : அழகிரி
- பில்லா-2 பட பாடல்கள்!
- ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்யானந்தா
- மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!
- என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி
- அன்புமணி ராமதாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு
- சச்சின் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை...மஞ்ச்ரேகர் 'ஷாக்'!
- விஜய் கேட்டும் கொடுக்காத படத்தை விஜய்காந்த் மகனுக்காக கொடுத்த தயாரிப்பாளர்!!
- அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயிஸ்டுகள் விளக்கம்!
- ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி
- தெண்டுல்கர் அரசியலில் குதிப்பாரா?
| சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும் Posted: 27 Apr 2012 10:44 PM PDT மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு மாநிலங்களவை எம்.பி.க்களில் பெரும்பாலோனார் வரவேற்றுள்ளனர். காங்கிரஸில் உள்ள இப்போதைய பிரச்னைகளை திசை திருப்பும் வகையிலேயே சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பதாக சிவசேனை எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தலைவர் மீரா குமார், மாயாவதி (பகுஜன் சமாஜ்), முலாயம் சிங் யாதவ் (சமாஜவாதி), சுதிப் பந்தோபாத்யாய (திரிணமூல்), ராஜ் பப்பார் (காங்கிரஸ்) ஆகியோர் சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெயூத், "சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அவரை எம்.பி.யாக நியமித்திருப்பது எல்லோரிடத்திலும் கேள்வியை எழுப்பியுள்ளது. அவர் இப்போதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஓய்வுபெறவில்லை. ஏன் அவருடைய பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கவில்லை. காங்கிரஸில் இப்போதுள்ள பிரச்னைகளை திசை திருப்பும் விதமாகவே அவர்கள் சச்சினை பயன்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் எதை செய்தாலும், அது அரசியல் காரணங்களுக்காகத்தான் இருக்கும். சச்சின் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்' என்றார். அரசியல் காரணத்துக்காகத்தான் சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மறுத்த காங்கிரஸ் எம்.பி. சத்யவிரத சதுர்வேதி, "தனிப்பட்ட ஒருவரைவிட அரசு, நாடு, நாடாளுமன்றம் ஆகியவை உயர்ந்தவை. ஒரு கட்சி அல்லது அரசின் தலையெழுத்தை தனி ஒருவரால் மாற்றிவிட முடியாது. இந்த விஷயத்தில் சிவசேனை கட்சியினர் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். இதற்கு முன்பு இதுபோன்று நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநிலங்களவையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். எம்.எஸ்.சுவாமி நாதன், ஷபானா ஆஸ்மி ஆகியோரின் சிறப்பான பங்களிப்பை யாராவது மறுக்கமுடியுமா?' என்றார். "சச்சின் நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவரின் நியமனத்தை வரவேற்கிறேன்' என்று மீரா குமார் தெரிவித்துள்ளார். "விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நல்ல முடிவு' என்று முலாயம் சிங் கூறியுள்ளார். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் சுதிப் பந்தோபாத்யாய கூறுகையில், "அற்புதமான முடிவு. இது இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்' என்றார். காங்கிரஸ் உறுப்பினர் ராஜ் பப்பர் கூறுகையில், "சச்சின் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை எம்.பி.யாக்கி கெளரவிக்க வேண்டிய நேரமிது. அவர் காங்கிரஸில் இணையாவிட்டாலும், நேர்மறையான எண்ணத்தோடே காங்கிரஸால் எம்.பி.யாக்கப்பட்டுள்ளார் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், "அரசு கிரிக்கெட்டை மட்டும் ஆதரிக்குமானால் அதை ஏற்க முடியாது. கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான விளையாட்டுகளும், வீரர்களும் உள்ளனர். எனவே இந்த விஷயத்தில் அரசு சிந்திக்க வேண்டியது அவசியம். முன்னாள் கேப்டன் கங்குலியின் பெயரையும் எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்க வேண்டும். திரைப்படத் துறை, எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கலாசார மற்றும் இலக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்களையும் எம்.பி.யாக்க வேண்டும். இந்தியா தொழிலாளர்களின் நாடு, எனவே இங்கு தொழிலதிபர்களை எம்.பி.யாக்கக்கூடாது' என்று வலியுறுத்தினார். சச்சினை எம்.பி.யாக்கியதில் அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது சரியானதல்ல என்று கூறிய மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக், "நாங்கள் ஒரு விளையாட்டு வீரரை கெளரவிக்காவிட்டால், விளையாட்டு வீரர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். நிச்சயம் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்' என்றார். |
| சிம் கார்டு வழங்க புதிய நடைமுறை: நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம் Posted: 27 Apr 2012 10:19 PM PDT சிம் கார்டு வழங்குவதற்கு முன்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஏனென்றால், போலி ஆவணங்கள் மூலம் தீவிரவாதிகள் சிம்கார்டுகளை பெற்றிருப்பது மும்பையிலும், டெல்லியிலும் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்போது தெரிய வந்தது. எனவே, சிம்கார்டு வழங்குவதற்கு முன்பு அதை வாங்குபவரின் அடையாளங்களை சரிபார்ப்பது அவசியம்' எனக் கூறி அபிஷேக் கோயங்கா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சிம் கார்டு வழங்குவதற்கு முன்பு, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முறையாக சரிபார்ப்பது தொடர்பான புதிய நடைமுறைகளை உருவாக்க கூட்டு நிபுணர் குழு ஒன்றை நீதிபதிகள் நியமித்தனர். இதுபற்றி நீதிபதிகள் மேலும் கூறும்போது, 'இக்குழுவில், மத்திய தொலைத்தொடர்பு துறை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர்கள் புதிய நடைமுறைகளை வகுத்து, 3 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர். |
| பில்லா-2 பட பாடல்கள்! (promo videos) Posted: 27 Apr 2012 10:13 PM PDT |
| Posted: 27 Apr 2012 09:54 PM PDT கமல் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் விஸ்வரூபம் படத்தின் FIRST LOOK- மே1ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது. கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்து வரும் படம் விஸ்வரூபம். இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் இது. இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள முக்கிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் சங்கர் இஷான் லாய். 30 விநாடிகள் அடங்கிய படத்தின் முதல் முன்னோட்ட காட்சி - FIRST LOOK, YOUTUBE இணையத்தில் மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜுலை மாதம் இப்படத்தினை திரைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. |
| சச்சின் தெண்டுல்கரின் எம்பி பதவி குறித்து கருணாநிதி பதில் Posted: 27 Apr 2012 09:41 PM PDT தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு. கழகத்தின் நிலைப்பாடு என்ன? பதில்:- வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் (மே) 18-ந் தேதி தான் தொடங்குகிறது. எங்கள் நிலையை வருகிற 17-ந் தேதி அறிவிக்கிறோம். கேள்வி:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இன்று நடத்தை விதிகளைத் தளர்த்தியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் முறையாக செயல்படும் என்று நம்புகிறீர்களா? பதில்:- தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவேண்டும். ஆனால் நடுநிலையோடு தேர்தல் கமிஷன் செயல்படுமா என்பது கடந்த கால நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை இல்லை. கேள்வி:- இலங்கை தமிழர்களுக்காக ``டெசோ'' அமைப்பினை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக சொல்லியிருந்தீர்கள். ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பாக பேசுகிறார்களே? பதில்:- நான் தமிழர்களுக்காக சொன்னேன். அதைப் பிடிக்காதவர்கள் அதற்கு மாறாக சொல்லியிருக்கலாம். கேள்வி:- கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை மாநிலங்கள் அவை உறுப்பினராக நியமனம் செய்திருப்பது பற்றி? பதில்:- வரவேற்கிறேன். கேள்வி:- டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்களே? பதில்:- செய்தி பார்த்தேன். அதைப்பற்றிய விவரம் எனக்கு தெரியாது. இவ்வாறு கருணாநிதி கூறினார். |
| திமுகவில் அழகிரி ஆள், ஸ்டாலின் ஆள் என்று யாரும் இல்லை : அழகிரி Posted: 27 Apr 2012 09:22 PM PDT 2 ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவை, சந்திப்பதில் தவறு இல்லை என்றும், கட்சிக்காரர் என்ற வகையில் ராஜாவை தான் சந்தித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். ஆனால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க அழகிரி மறுத்துவிட்டார். மேலும் திமுகவில் அழகிரி ஆள், ஸ்டாலின் ஆள் என்று யாரும் இல்லை, அனைவருமே கருணாநிதியின் ஆட்கள்தான் என்றும் அழகிரி தெரிவித்தார். ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அழகிரி ஆதரவாளர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, திமுகவில் நிர்வாகிகள் நீக்கம் என்பது சாதாரணமானதுதான் என்றும் இங்கு அழகிரியின் ஆட்கள், ஸ்டாலின் ஆட்கள் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கருணாநிதியின் ஆட்கள்தான் எனவும் அழகிரி பதிலளித்தார். |
| Posted: 27 Apr 2012 09:15 PM PDT பில்லா-2 படத்தின் பாடல்கள் மே-1ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் அதற்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களை சிறிது திருப்திபடுத்தும் வகையில் பில்லா-2 பாடல்களின் 1 நிமிட முன்னோட்டத்தை 'யூ டியூபில்' வெளியிட்டுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. "கேங் கேங் கேங்ஸ்டர்" என ஆரம்பிக்கும் அந்த வீடியோவில் அஜித்தின் சில புது படங்களும் வருகின்றன. அடுத்ததாக பில்லா-2 பட பாடல்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளனர். மொத்தம் ஐந்து பாடல்களும் ஒரு தீம் பாடலும் வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா, ஆண்ட்ரியா, ஸ்வேதா பண்டிட் ஆகியோர் இந்த பாடல்களை பாடியுள்ளனர். பில்லா-2 பட பாடல்கள்: 1. கேங்ஸ்டர்......... 2. இதயம்......... 3. ஏதோ மயக்கம்....... 4. மதுரை பொண்ணு...... 5. உனக்குள்ளே மிருகம்...... 6. தீம் மியூசிக்........ |
| ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்யானந்தா Posted: 27 Apr 2012 10:40 AM PDT மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார். சமீபத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்கு நித்தியானந்தா தனது சீடர்களுடன் வந்து ஆதீனத்தை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது 6 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை மதுரை ஆதீனத்துக்கு நித்தியானந்தா வழங்கினார். அப்போதே மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. மதுரை ஆதீனமாவதற்கு நித்தியானந்தா ரூ 1 கோடி வரை செலவுசெய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டிருக்கிறார். பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக அறிவித்தார். பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு. அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார். மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார். இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில் நடிகை ரஞ்சிதா உள்பட பலரும் கல்ந்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. |
| மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!! Posted: 27 Apr 2012 06:50 AM PDT தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது. மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார். பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார். மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர். இந்தியாவின் மிகப் பழமையான ஆதீன மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இது எப்போது தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் இந்த ஆதீனத்தை உயிர்ப்பித்து புதுப்பித்தார். முத்தமிழுக்குச் சங்கம் வைத்த மதுரையில் இந்த ஆதீனத்தை திருஞான சம்பந்தர் நிறுவினார். இப்படிப்பட்ட ஆதீனத்தின் அடுத்த தலைவராக நித்தியானந்தரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
| என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி Posted: 27 Apr 2012 06:22 AM PDT பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், பத்து பத்து, கோ, மிருகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கனிமொழி என்ற படத்தையும் தயாரித்தார். சமீபத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில்ஏற்பட்ட தகராறில் போலீஸ், கோர்ட் என்றெல்லாம் சென்று வந்தார். சினிமாவில் பட்ட கஷ்டங்களை படமாக்கப் போவதாக சோனா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- என் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றை சினிமா படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தை நானே டைரக்டு செய்யப் போகிறேன். சில மாதங்களாக சினிமா பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். யுனிக் என்ற நிறுவனத்தை துவங்கி வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இந்த நிறுவனம் பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டனுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ நடத்த உள்ளது. இதற்காக மாடல் அழகிகளுடன் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறேன். இவ்வாறு சோனா கூறினார். பின்னர் பேஷன் ஷோவில் பங்கேற்கும் அழகிகளை சோனா அறிமுகப்படுத்தினார். நடிகை சோனியா அகர்வால், சிட்னி ஷெல்டன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். |
| அன்புமணி ராமதாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 27 Apr 2012 05:55 AM PDT பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகனான அன்புமணி ராமதாஸ், கடந்த 2004 -ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சாராக பதவி வகித்து வந்தார். 2009- ல் நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து, ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அவர் பதவியில் இருந்த காலத்தில் ம. பிரதேசம் இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட அடிப்படை தகுதிகள் இல்லாத நிலையிலும் தனது பதவியை பயன்படுத்தி அங்கீகாரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் அவர் மீதும் மேலும் 9 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் அங்குள்ள சப்தர்ஜங் என்கிற மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களான டி.கே.குப்தா, ஜே.எஸ்.தூபியா ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு Posted: 27 Apr 2012 05:44 AM PDT நகைச்சுவைப் புயல் தன் ஓய்வு காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த படத்துக்கான வேலைகளில் பரபரப்பாகிவிட்டார். அவரது அடுத்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் 2-ம் பாகம்தான் என நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். இப்போது சிம்பு தேவனுடன் கதை விவாதம் நடத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வடிவேலு, புதிய பொலிவுடன், அசத்தலான திரைக்கதையுடன் கூடிய படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார். தனது அடுத்த படம் குறித்து வடிவேலு கூறுகையில், "சினிமாவில் சில காலம் இடைவெளி விட்டு விட்டேன். இதனால் நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. சினிமாவில் பல வருடங்களாக பிசியாக நடித்து வந்தேன். இதனால் எனது குடும்பத்தினருடன் செலவிட நேரம் இல்லாமல் போனது. இப்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறேன். இந்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ரெஸ்ட் போதும்னு முடிவு பண்ணி, மீண்டும் சினிமாவில் நடிக்க கதை தேடுகிறேன். சிலர் பல கதைகள் சொல்லி உள்ளனர். சிம்புத்தேவன் பிரமாதமான கதையொன்று சொல்லி இருக்கிறார். விரைவில் அறிவிப்பை வெளியிடுவேன்," என்றார். இந்த ஓய்வு நேரத்தில் வடிவேலு இணையதளங்களின் பயன்பாடு, அதில் வரும் செய்திகள் பார்ப்பது போன்றவற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டுவிட்டாராம். பேஸ்புக், ட்விட்டர்ல எப்போ அப்டேட் பண்ணப் போறீங்க? |
| சச்சின் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை...மஞ்ச்ரேகர் 'ஷாக்'! Posted: 27 Apr 2012 05:32 AM PDT கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளராகவோ, வர்னணையாளராகவோ அல்லது ஏதாவது சமூக சேவையிலோதான் சச்சின் ஈடுபடுவார் என நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் ராஜ்யசபா உறுப்பினராவார், ஒரு கட்சி கொடுத்த சீட்டை ஏற்பார் என நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று சச்சினுடன் கிரிக்கெட் விளையாடியவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கொடுத்த ராஜ்யசபா சீட்டை சச்சின் பெற்றது குறித்து இருவிதமான கருத்துக்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. பலர் இதை வரவேற்றுள்ளனர். இருப்பினும் சச்சின் இதை ஏற்றது சரியல்ல என்பது போலவும் சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேகர் சச்சின் முடிவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். சச்சினைப் போலவே மஞ்ச்ரேகரும் மும்பையைச் சேர்ந்தவர்தான். இருவரும் இணைந்து மும்பை அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் ஆடியுள்ளனர். சச்சின் எம்.பியாகியிருப்பது குறித்து அவர் கூறுகையில், எனக்கு ஆச்சரியத்தை விட அதிர்ச்சிதான் மேலோங்கியது. சச்சினை எம்.பியாக்கப் போவதாக எந்தவித முன் செய்தியும் இல்லை. திடீரென செய்துள்ளனர். இது முதல் அதிர்ச்சி என்றால், இந்த வாய்ப்பை சச்சின் ஏற்றுக் கொண்டது 2வது அதிர்ச்சி, அதை விட பெரிய அதிர்ச்சி. ஓய்வுக்குப் பிறகு சச்சின் என்ன செய்ய வாய்ப்புள்ளது என்று நான் யோசித்துப் பார்த்தபோது, கிரிக்கெட் சம்பந்தமான ஒன்றில் அவர் ஈடுபடலாம் - பயிற்சியாளராகலாம், டிவி வர்னணையாளராகலாம், வர்த்தகத்தில் ஈடுபடலாம், சமூக சேவையில் ஈடுபடலாம். இப்படித்தான் தோன்றியது. ஆனால் எனது கனவில் கூட அவர் எம்.பியாவார் என்பதை நினைக்க முடியவில்லை. நாடாளுமன்றத்திற்கு செல்ல சச்சினுக்கு நேரம் கிடைப்பதில் சிரமம் இருக்காது என்றே கருதுகிறேன். முன்பு போல அவர் அனைத்துப் போட்டிகளிலும் ஆடுவதில்லை. எனவே அவர் நாடாளுமன்றத்திற்குப் போக சிரமம் இருக்காது. அவர் போக வேண்டும் என்பதையே மக்களும் விரும்புவார்கள். இயற்கையிலேயே அமைதியானவர் சச்சின். எது குறித்தும் வெளிப்படையாக கருத்து கூற மாட்டார். பொது விஷயங்கள் குறித்தும் அவர் பேசியதாக நினைவில்லை. எனவே எம்.பி பதவி என்பது முற்றிலும் வித்தியாசமான சவாலாக அவருக்கு இருக்கும் என்றார் அவர். |
| விஜய் கேட்டும் கொடுக்காத படத்தை விஜய்காந்த் மகனுக்காக கொடுத்த தயாரிப்பாளர்!! Posted: 27 Apr 2012 05:25 AM PDT நடிகர் விஜய் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்கள் கேட்டும் கூட கொடுக்காமலிருந்த ஒரு படத்தின் ரீமேக் உரிமையை, விஜயகாந்த் மகனுக்காக கொடுத்திருக்கிறார் தெலுங்கு தயாரிப்பாளர். அந்தப் படம் என்டிஆர் நடித்த தெலுங்குப் படம் பிருந்தாவனம். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமாகிறார். இதனை விஜயகாந்தே அறிவித்திருந்தார். இதற்காக பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் விஜய்காந்த். ஆனால் எதுவும் சரியாக வராததால், ஒரு தெலுங்குப் படத்தை ரீமேக் பண்ணும் பாதுகாப்பான முயற்சியில் இறங்கிவிட்டார். அதுதான் ஜூனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம். விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் சண்முகபாண்டியனின் அறிமுகப் படமாக ரீமேக் செய்கிறது. படத்தில் சண்முக பாண்டியனுக்கு இரண்டு நாயகிகளாம். முன்னணி இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பிருந்தாவனம் படத்தின் ரீமேக் உரிமைக்கு விஜய் உள்ளிட்ட தமிழ் முன்னணி நடிகர்களிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் அவர்களுக்கெல்லாம் தராத தயாரிப்பாளர், விஜயகாந்த் மகனுக்கு என்றதும் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டாராம்! |
| அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயிஸ்டுகள் விளக்கம்! Posted: 27 Apr 2012 03:31 AM PDT சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன் என்பது குறித்து மாவோயிஸ்டுகள் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மாவோயிஸ்டு அமைப்பதின் தென் பஸ்தான் பிராந்திய கமிட்டியின் செயலாளர் கணேஸ் உகியின் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் பஸ்தார் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட சித்தரவதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அலெக்ஸ்பால் மேனன் ஆட்சியராகப் பொறுப்பேற்ற காலத்தில் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டோரின் பட்டியலையும் படுகொலை செய்யப்பட்டோர் விவரமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடி மக்களை சித்ரவதை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கார்க்கு குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்பட்ட போதும்கூட அலெக்ஸ்பால் அமைதியாகவே இருந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் அந்த காவல்துறை கண்காணிப்பாளர் எத்தனை அப்பாவிகளை சித்தரவதைக்குள்ளாக்கினார் என்பது அலெக்ஸ்பால் மேனனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலக வங்கியின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டுள்ள கிராம் சுராஜ் திட்டத்தைக் கைவிடுமாறு ஏற்கெனவே தாங்கள் எச்சரித்திருந்த போதும் மாவட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசாங்க நிர்வாகமானது அதை புறக்கணித்ததுடன் பஸ்தார் பிராந்தியத்தின் பெருமளவு இயற்கை கனிமவளத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கவும் முயற்சித்தனர் என்றும் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளனர். தண்டேவாடா சிறையில் 150 பேரைத்தான் அடைத்து வைக்க முடியும்... ஆனால் 700க்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்துள்ளனர். இதேபோல் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பழங்குடி மக்களை சிறையில் அடைத்துள்ளனர் என்றும் மாவோயிஸ்டுகள் அதில் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்டுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கடத்தல் சம்பவங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது தங்களது கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகக் கூறி ஆட்சியரைக் கடத்தியிருப்பதற்கு மாவோயிஸ்டுகள் விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. |
| ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி Posted: 27 Apr 2012 03:25 AM PDT முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவி்ததுள்ளார். ஜெயசூரியாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் குருநாகல் பகுதியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2009ம் ஆண்டு இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000க்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின. இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார். அவர் கொடுத்த தைரியத்தில் தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா. ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. |
| தெண்டுல்கர் அரசியலில் குதிப்பாரா? Posted: 27 Apr 2012 03:18 AM PDT இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் சச்சின் தெண்டுல்கர். 1989-ல் தனது 16 வயதில் கிரிக்கெட் விளையாட வந்த அவர் 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்தி வருகிறார். சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிராக 100-வது சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். விளையாட்டு துறைக்கு அவரது சேவையை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் விமர்சனங்கள் எழுந்ததால் வாய்ப்பு நழுவியது. தற்போது டெல்லி மேல்-சபை எம்.பி.யாக தெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு துறையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நியமன எம்.பி. பதவிக்கு தெண்டுல்கர் பெயரை மத்திய அரசு சிபாரிசு செய்தது. அதை ஏற்று எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் நடிகர்கள் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன், சுனில் தத் போன்றோரை நியமன எம்.பி. பதவி கொடுத்து பின்னர் அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்தது. அதேபோல் தெண்டுல்கரையும் அரசியலுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தெண்டுல்கரின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மராட்டிய மாநில தலைவர் கோபிநாத் முண்டே கூறுகையில், தெண்டுல்கரை கவுரவப்படுத்துவதாக இருந்தால் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து இருக்கலாம். எம்.பி.யாக நியமித்ததன் மூலம் அவரை காங்கிரஸ் அரசியலுக்கு இழுத்து வந்துவிட்டது என்றார். மராட்டிய பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மாதவ் பண்டாரி கூறும்போது, நான் தெண்டுல்கரின் ரசிகன் என்ற முறையில் அவருக்கு எம்.பி. பதவி கொடுத்ததை வரவேற்கிறேன். அதே சமயம் அரசியல்வாதியாக பார்க்கும் போது அவருக்கு பாரத ரத்னா விருதுதான் கொடுத்து இருக்க வேண்டும். எம்.பி.யாக நியமித்து அவர் மீது காங்கிரஸ் அரசியல் சாயம் பூசி விட்டது என்றார். இந்த விஷயத்தில் சிவசேனா கட்சி எந்த கருத்தும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறது. அதன் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டதற்கு பாரத ரத்னாவோ, எம்.பி. பதவியோ அது தெண்டுல்கருக்கும், காங்கிரசுக்கும் இடையேயானது. இதில் நான் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார். மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் தெண்டுல்கருக்கு அரசியல் கலந்த எம்.பி. பதவி கொடுத்து இருப்பதை விரும்பவில்லை. பாரத ரத்னா விருது கொடுத்து இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் பாரதீய ஜனதா மேலிட தலைவர்கள் தெண்டுல்கருக்கு எம்.பி. பதவி வழங்கியதை வரவேற்றுள்ளனர். பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், தெண்டுல்கர் சிறந்த விளையாட்டு வீரர். அவருக்கு எம்.பி. பதவி கொடுத்து இருப்பதை வரவேற்கிறேன். பெருமைப்படுகிறேன் என்றார். மத்திய மந்திரி அம்பிகா சோனி கூறுகையில், சச்சினுக்கு எம்.பி. பதவி கொடுத்து இருப்பது மிகச்சரியான முடிவு என்றார். இதுபோல் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களும் மத்திய மந்திரிகளும் வரவேற்றுள்ளனர். பாரத ரத்னா விருதுக்கு தெண்டுல்கர் பெயர் அடிபட்ட போது அதை முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அசாருதீன் மறைமுகமாக எதிர்த்தார். இப்போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தெண்டுல்கரின் 100-வது சதம் அடிக்கும் முயற்சியில் பலமுறை தோல்வி அடைந்தபோது அவர் ஓய்வு பெறவேண்டும் என்று விமர்சனத்துக்கு ஆளானார். இப்போது அவரது நியமன எம்.பி. பதவியும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 100-வது சதம் அடித்து முடிந்ததும் தன்னை விமர்சித்தவர்களை தெண்டுல்கர் கடுமையாக சாடினார். எனது உடலில் வலு இருக்கும்வரை விளையாடுவேன். ஓய்வு பெறுவது பற்றி நான்தான் முடிவு செய்வேன். யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம் என்று வாயை அடைத்தார். தற்போது தெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ந்து அவர் விளையாட வேண்டும். ஆட்டத்திறன் குறையும் வரை அவர் ஓய்வு பெறக்கூடாது என்பது ரசிகர்கள் கருத்தாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. அதுவரை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















