விழியே பேசு... |
- சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துரையை ஏற்பு
- தனி ஈழம் வேண்டும் என்று எந்தத் தமிழரும் கூறவில்லை: சிபிஎம்
- அஜீத் நாயகிக்கு கல்யாணம்!
- அன்னா ஹசாரே வை சந்திக்க பால் தாக்கரே மறுப்பு
- மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒடிசா எம்.எல்.ஏ. விடுதலை
- சிம்பு போஸ்டர் பின்னணி என்ன?
- அணையை தகர்க்க வெடிமருந்தை ரெடியாக வைத்திருக்கும் கேரளா: வைகோ
- தமிழர்களை கொல்ல இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு
- புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் ஆண்ட்ரியா கோபம்!!
- சசிகலா கணவர் நடராஜன் மீது தொடர்ந்த வழக்கு வாபஸ்
- "என் தோற்றத்தை கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!'' - அஜீத்
- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன்
- சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களை எம்.பி. பதவி?
- அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாராட்டு!
| சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துரையை ஏற்பு Posted: 26 Apr 2012 08:28 PM PDT சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். இதன் மூலம் ராஜ்ய சபா உறுப்பினராகும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த வியாழனன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து இப்பதவியை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இதை தொடர்ந்து இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது கிடைப்பதற்கான வாய்ப்பு நெருங்கி வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறனர். ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு இவ்விருதுக்கு சச்சினை பரிந்துரைத்திருந்தது குறிபிடத்தக்கது. |
| தனி ஈழம் வேண்டும் என்று எந்தத் தமிழரும் கூறவில்லை: சிபிஎம் Posted: 26 Apr 2012 08:18 PM PDT தனி ஈழம் வேண்டும் என்று இலங்கையில் எந்தத் தமிழரும் கூறவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும அதைக் கூறவில்லை. பிற தமிழ்க் கட்சிகளும் அதை வலியுறுத்தவில்லை. மார்கிச்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமுதாயத்தினரும் சம அதிகாரத்துடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்பதே கொள்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இடம் பெற்றிருந்தார். இலங்கை சென்ற இந்தக் குழு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளை மட்டுமின்றி பல்வேறு தமிழக அமைப்புகள் குழுக்களின் பிரதிநிதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால், குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு, முழுநிவாரணம், முகாம்களில் தங்கியுள்ளவர்களை மீள்குடியமர்த்துதல், தமிழர்கள் பகுதியிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கி கொள்வது ஆகியவை தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் உடனடி கோரிக்கையாக உள்ளது. மேலும், இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. சுற்றுப் பயணம் முடித்து, சென்னையில் பேட்டியளித்த டி.கே.ரங்கராஜன் இலங்கைத் தமிழர் அமைப்புகளும், பொதுமக்களும் தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவல் அடிப்படையில் அரசியல் தீர்வையே வலியுறுத்துகின்றன என்று குறிப்பிட்டார். திமுக தலைவர் கருணாநிதி முரசொலி ஏட்டில் எழுதியுள்ள கடிதத்தில் தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் வலியுறுத்தவில்லை என்று கூறியுள்ளதற்காக டி.கே.ரங்கராஜனை விமர்சித்துள்ளார். இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தைத்தான் டி.கே.ரங்கராஜன் எடுத்துரைத்துள்ளார். தனி ஈழத்திற்குக் குறைவான எதற்கும் இலங்கைத் தமிழர்கள் எதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருணாநிதியின் கருத்து குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவிடமும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றுகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதையே வலியுறுத்தினார். இப்போதும் கூட அவர் தனி ஈழத்திற்குக் குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று கூறவில்லை. மாறாக, தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளார். தமிழர் தேசிய கூட்டமைப்புதான் அதிகாரப்பரவல் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட வேண்டும். அவர்கள் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன், இலங்கையில் வாழ வேண்டும். நிலம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழர் பகுதியிலிருந்து ராணுவம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதும் அதற்காக இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதும் இந்திய அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவதும் தான் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதாக அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. எந்த ஒரு பிரச்சனையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி, அர்த்தபூர்வமான அதிகாரப்பரவல் என்பதையே முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி 1991-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைப் பிரச்னையில் முரணற்ற வகையில் நிலையெடுத்து வந்துள்ளதை சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகளின் தனிஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை ஒப்புக்கொண்டு உரையாற்றினார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இலங்கை தமிழர்கள் முன் இப்போதுள்ள முக்கிய பிரச்னை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நிவாரணம், மறுவாழ்வு, அதிகாரப்பரவல் என்பதை ஒன்றுபட்ட முறையில் அழுத்தமாக முன்வைப்பதே இலங்கைத்தமிழ் மக்களுக்கு உதவுவதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று கூறியுள்ளார். |
| Posted: 26 Apr 2012 08:08 PM PDT அஜீத்துடன் இணைந்து பில்லா-2 படத்தில் நடித்து வரும் பிரேசில் நாட்டு பேரழகி புரூனா அப்துல்லாவுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாம். இதனால் விரைவிலேயே அவர் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பம் நடத்தப் போகிறாராம். பில்லா 2 படம்தான் அவருடைய கடைசிப் படமாம். புரூனாவை மணக்கப் போகும் நபர் ஒரு பெங்காலியாம். கடந்த 3 வருடங்களாக அவர்கள் மும்முரமாக காதலித்து வருகின்றனராம். சமீபத்தில் புரூனாவுடன் பிரேசில் போய் அவருடைய அம்மா, அப்பாவைப் பார்த்து விட்டு வந்தாராம் இந்தக் காதலர். புரூனா வீட்டில் அத்தனை பேருக்கும் அவரது காதலரைப் பிடித்து விட்டதாம். இதனால் நிச்சயம் செய்து விட்டனர். இருப்பினும் பில்லா படத்தை முடித்து விட்டு வந்து விடுகிறேன், அதற்குப் பிறகு கல்யாணம், கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என்று புரூனா கூறியுள்ளதால் படம் முடிந்த பிறகுதான் கல்யாணமாம். வெரிகுட்..! |
| அன்னா ஹசாரே வை சந்திக்க பால் தாக்கரே மறுப்பு Posted: 26 Apr 2012 07:48 PM PDT வலுவான லோக்பால் மசோதாவை வலியுறித்தி மும்பையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். முன்னதாக, மகாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவுகான் மற்றும் மகராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரை சந்தித்து இது குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், சிவ சேனா தலைவர் பால் தாக்கரே, அன்னா ஹசாரே வை சந்திக்க மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அன்னா ஹசாரே கூறும்போது தன் சுயநலத்திற்காக லோக்பால் மசோதாவை கோரவில்லை எனவும், நாட்டின் நலத்திற்காகவே தான் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோருவதாகவும், தன்னை அவர் சந்திக்கவில்லை என்றால் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என தெரிவித்தார். இப்பிரச்சினை குறித்து பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே கூறும்போது, அன்னா ஹசாரே வை ஊழல்வாதிகள் ஆதரிப்பதாகவும், அவர்கள் அவரை ஆதரிக்கும் வரை சிவ சேனா கட்சி அன்னா ஹசாரே உடன் எந்த தொடர்பும் வைக்கப்போவதில்லை எனவும் சிவ சேனா கட்சியின் தலைவர் அவரை சந்திக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். |
| மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒடிசா எம்.எல்.ஏ. விடுதலை Posted: 26 Apr 2012 08:22 AM PDT ஒடிசா மாநில பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். இவரை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் இருக்கும் 29 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இவர்களில் 25 பேரை விடுவிக்க மாநில அரசு சம்மதித்தது. மீதம் உள்ள 4 பேரை விடுவிக்க எதிர்ப்பு கிளம்பியதால் கடத்தல் நாடகம் முடிவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே எம்.எல்.ஏ. கடத்தப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் ஆனதால் அவரை மேலும் பணைய கைதியாக வைத்திருக்க மாவோயிஸ்டுகள் விரும்ப வில்லை. இதனால் அவரை மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முடிவு செய்யப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். அதன்படி மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள கிராம நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை ஆஜர்படுத்தினர். அப்போது அவர் அரசும், தனது கட்சி பிரதிநிதிகளும் தன்னை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறை கூறினார். தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலக வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இதை ஹிகாகா எம்.எல்.ஏ. ஏற்றுக் கொண்டார். இதை அவர் உறுதி மொழியாக எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு அவரை விடுதலை செய்வதாக மக்கள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் மாவோயிஸ்டுகளின் வக்கீல் நிகர்ரஞ்சன் பட்நாயக் மூலம் அரசுக்கும், எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே காலை 10 மணிக்கு முன்னரே எம்.எல்.ஏ. விடுதலை செய்யப்பட்டார். காட்டுப் பகுதியில் தங்கள் பிடியில் இருந்த எம்.எல்.ஏ.வை அதிகாலையில் மாவோயிஸ்டுகள் கோரபுட் மாவட்டத்தில் நாராயண்பட்டினம் கிராமத்துக்கு அழைத்து வந்து கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து கிராம மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் எம்.எல்.ஏ.வை அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் முதல்- மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக ஒடிசாவில் நிலவி வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது. |
| Posted: 26 Apr 2012 08:16 AM PDT சிம்பு நடித்த ஒரு படம் கூட இப்போதைக்கு ரிலீஸ் இல்லை, என்றாலும் சென்னையில் எங்கு திரும்பினாலும் சிம்புவின் போஸ்டர்தான் தென்படுகிறது. இந்த நேரத்தில் எதற்காக என ஆச்சர்யப்படுபவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அது ஸ்ரீதர் என்ற படத்தில் நட்புக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். அதற்கு நன்றி தெரிவித்துதான் வைக்கப்பட்ட போஸ்டர்கள் என்று. இதே போல், மதில் மேல் பூனை என்ற படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்குமே என்று நினைத்த அந்த படக்குழு. எப்படியோ சிம்புவை அணுகி பாட வைத்துவிட்டனராம். சிம்புவோட கால்ஷஈட்டை இவங்க ரெண்டு கம்பெனி மட்டும் எப்படி சுலபமா பிடிச்சதுன்னு கிர்ரடித்துப் போயிருக்கிறதாம் கோடம்பாக்கம். |
| அணையை தகர்க்க வெடிமருந்தை ரெடியாக வைத்திருக்கும் கேரளா: வைகோ Posted: 26 Apr 2012 08:00 AM PDT முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதித் திட்டம் தீட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழ்நாட்டில் 2,17,000 ஏக்கர் விவசாயிகளின் பாசனத்திற்கும், 85 லட்சம் மக்களின் குடிநீருக்கும் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையை எவ்விதத்திலும் உடைத்து விடுவது என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு பல வழிகளில் முயற்சிகள் நடக்கின்றன. இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமையை நிலைநாட்டித் தந்த தீர்ப்பை, குப்பையில் தூக்கி எறிவது போல கேரள அரசு, அக்கிரமமாக நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து அன்றைய அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. மூன்றரை ஆண்டுகள் கேரள அரசு வாய்தா கேட்டு வழக்கை இழுத்தடித்தது. தமிழ்நாட்டுக்கு நீதி உறுதிப்படுத்தப்படும் நிலையைத் தடுப்பதற்காக வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற முன்வைத்த கோரிக்கையை எதிர்க்க வேண்டிய கடமையைச் செய்யாமல் கருணாநிதி அரசு இசைவு தந்ததால், தமிழகத்துக்குப் பாதகமான பின்னடைவு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் வலிமையை ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட அதிகாரக் குழுவை நியமித்தது. அக்குழுவின் ஏற்பாட்டில் எட்டு வல்லுநர் குழுக்கள் அளித்த அணையின் வலிமை குறித்த 13 அறிக்கைகளை உள்ளடக்கி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. மே 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கின்றது. இதற்கு இடையில் அணையின் வலு குறித்து ஆய்வு செய்வதற்கு பிரதான அணையில் நவீன கருவிகளைக் கொண்டு ஏழு துளைகளைக் குடைந்தனர். 130 அடி ஆழம் முதல் மையப்பகுதியில் 190 அடிகள் வரையிலும், ஆறு அங்குல விட்டத்தில் செங்குத்தாக இந்தத் துளைகள் குடையப்பட்டன. ஒரு துளையில் கருவி சிக்கிக் கொண்டதால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டார்கள். வெளியில் எடுத்து குழியை மூடவில்லை. அனைத்துச் சோதனைகளும் முடிந்த பின்னர் துளைகளை மூடுவதற்குத் தமிழகப் பொறியாளர்கள் முயன்றபோது கேரளப் பொறியாளர்களும், அதிகாரிகளும், காவல்துறையினரும் மிரட்டி அச்சுறுத்தித் தடுத்துவிட்டார்கள். இந்த ஆழமான துளைகளில் தண்ணீர் தேங்குமானால் அதில் இருந்து தண்ணீர் வடிவதற்கும், பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக, அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் அஞ்சுகிறார்கள். அணையைப் பராமரிக்கின்ற முழு உரிமையும், அதிகாரமும், தமிழக அரசுக்குத் தான் உண்டு. நமக்கு உரிமை உள்ள பென்னி குயிக் கட்டிய அணையில், ஆழமான துளையைப் போட்டு அணைக்கட்டின் கலவையை மாதிரி எடுத்த பிறகு துளைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். பிரதான அணையில் ஏழு துளைகளும், பேபி அணையில் ஒரு துளையும் குடையப்பட்டன. நமக்கு உரிமை உள்ள அணையை உடைப்பதற்கு கேரள அரசு மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்திலேயே ஐம்பது கோடி ரூபாயை ஒதுக்கியதோடு, புதிய அணை கட்ட 668 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையையும் நீதிபதி ஆனந்த் குழுவினரிடம் தந்ததோடு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சலிடமும் ஒப்புதல் பெறக் கொடுத்து உள்ளது. புதிய அணைக்கான ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததே மத்திய அரசு தமிழ்நாட்டுக்குச் செய்த பச்சைத் துரோகம் ஆகும். அணையை உடைக்கின்ற நடவடிக்கைகளில், கேரளத்தினர் ஈடுபட்டதால் தான் தமிழகம் கொந்தளித்து எழுந்தது; பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடந்தது. நரித்தந்திரத்தோடு கேரளம் தற்போது பதுங்கி இருக்கிறது. அணையை உடைப்பதற்காக வெடிமருந்தையும் கேரளத்தினர் ஆயத்தமாக வைத்து உள்ளனர். நமது அணையில் உள்ள துளைகளை மூடாவிட்டால், சதித்திட்டம் செய்து, இத்துளைகளையே பயன்படுத்தி, கேரளத்தினர் அணையை உடைக்கவும் கூடும். அப்படி ஒரு பேராபத்து ஏற்பட்டுவிட்டால் தென்தமிழ்நாடு, தாங்க முடியாத துன்பத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாக நேரும். பாலை நிலமாகி, பஞ்சமும், பட்டினியும் வாட்டி வதைக்கும் அபாயம் ஏற்படும். வருமுன் காப்பதுதான் அறிவுடைமை ஆகும். எனவே, முல்லைப் பெரியாறு அணையில் குடைந்த துளைகளை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைத் தடுப்பதற்கு முனையும் கேரள அரசை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். |
| தமிழர்களை கொல்ல இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு Posted: 26 Apr 2012 07:54 AM PDT கிளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்துக் குண்டுகள் பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த தடைகளையும் மீறி இலங்கை ராணுவம் விடுதலைபுலிகளுக்கு ஏதிரான போரின் போது, இந்த கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியது. போர் நடைபெறும் போதே இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளை வீசி அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இலங்கை ராணுவம் மறுத்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர், புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு கொத்துக் குண்டைக் கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, வெடிக்காத நிலையில் கொத்து குண்டு ஒன்றை தான் கண்டுபிடித்ததாக அந்த ஐ.நா.பணியாளர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரின் போது அப்பாவி ஈழ்த்தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்த புதுக்குடியிருப்பு பகுதிமேல் இலங்கை விமானப்படை இந்த கொத்துக் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது. இந்த வகை குண்டை தற்போது ஐ.நா பணியாளர் கண்டுபிடித்திருப்பதன் மூலம் இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் இலங்கை அரசை மேலும் கலங்க வைத்துள்ளது. போர்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று பல்வேறு உலகநாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இலங்கை அரசோ இலங்கையில் போர் குற்றம் எதுவும் நிகழவில்லை என மறுப்பு தெரிவித்துவரும் நிலையில் ஐ.நா பணியாளரின் இந்த கொத்துக்குண்டு கண்டுபிடிப்பு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. |
| புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் ஆண்ட்ரியா கோபம்!! Posted: 26 Apr 2012 06:50 AM PDT புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் நடிகை ஆண்ட்ரியா கோபத்தில் இருக்கிறாராம். தற்போது திருப்பங்கள் என்ற படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா, அந்த படத்தில் புடவை மாற்றும் காட்சியொன்றில் நடித்திருந்தாராம். அந்த ஸ்டில்களை பப்ளிசிட்டிக்காக பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு அனுப்பியிருக்கிறார் இயக்குனர். ஸ்டில்கள் வெளியான சிறிது நேரத்திலேயே டைரக்டரை போனில் அழைத்து தாறுமாறாக திட்டித் தீர்த்திருக்கிறார் ஆண்ட்ரியா. என் இமேஜே உங்களால் போய்விட்டது, என்று கோபத்துடன் கூறிய ஆண்ட்ரியா, எல்லா போட்டோவையும் வாபஸ் வாங்குங்க என்று ருத்ர தாண்டவமே ஆடி விட்டாராம். |
| சசிகலா கணவர் நடராஜன் மீது தொடர்ந்த வழக்கு வாபஸ் Posted: 26 Apr 2012 06:13 AM PDT சசிகலா கணவர் நடராஜன் மீது தாம் கொடுத்த புகாரை தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார். எம். நடராஜன், அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது கடந்த மாதம் தஞ்சாவூர் அன்பு நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன் நிலஅபகரிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை ரங்கராஜன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடராஜன் மற்றும் அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது தவறுதலாக வழக்கு தொடர்ந்து விட்டேன் என்று கூறியுள்லார். மேலும் அந்த வழக்கில் குறிப்பிட்டபடி நிலஅபகரிப்பு ஏதும் நடக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நிலத்தை சுவாமிநாதன் விலைக்கு வாங்கி முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் தெரிந்த கொண்டதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாகவும் அதில் ரங்கராஜன்குறிப்பிட்டுள்ளார். இதனால் நடராஜன் மீதான வழக்குகளில் ஒன்று குறைந்திருக்கிறது. |
| "என் தோற்றத்தை கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!'' - அஜீத் Posted: 26 Apr 2012 05:32 AM PDT என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார். சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்... செல்ப் புரமோஷன் கிடையாது... "நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!'' மனதை பாதித்த விமர்சனம்... ''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன். நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!'' நெகடிவ் விமர்சனங்கள் குறித்து... ''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!'' ரசிகர்களுக்கு... ''இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!'' -இவ்வாறு அவர் கூறியுள்ளார். |
| புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன் Posted: 26 Apr 2012 05:17 AM PDT புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் அறிவித்துள்ளார். வேறு கட்சி ஆதரவு கோரினால் அந்தக் கட்சியைப் பொறுத்து ஆதரவு தருவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந் நிலையில் புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எ.ல்.ஏ. முத்துக்குமரன் விபத்தில் மரணமடைந்ததால் ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இங்கு அதிமுக ஆதரவோடு தனது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற இந்திய கம்யூனிஸ்ட் திட்டமிட்டிருந்தது. அதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க தேதி கேட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு நேரம் ஒதுக்காததோடு ஒரு மரியாதைக் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரிவிக்காமல் அதிமுக இந்தத் தொகுதியில் தனது வேட்பாளராக கார்த்திக் தொண்டமானை அறிவித்துள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் இதைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், புதுக்கோட்டை தொகுதியை தங்களுக்கு விட்டுத் தருமாறு அதிமுக தலைமைக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தனது வேட்பாளரை அதிமுக அறிவித்துவிட்டது. இதனால் நாங்கள் அங்கு போட்டியிடுவது நேர விரயம் என்பதால் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அங்கு போட்டியிடும் எந்தக் கட்சியாவது ஆதரவு கோரினால் அதைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவு தர முன் வந்த சிபிஎம்: முன்னதாக இடைத்தேர்தலில் சிபிஐ போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்டால் அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிகவை ஆதரித்தோம். இதனால் அந்த கட்சியும் இந்தக் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது என்றார். ஆனால், தா.பாண்டியன் போட்டியில்லை என அறிவித்துவிட்டதால் சிபிஎம் ஆதரவு என்பது தேவையில்லாமல் போய்விட்டது. இப்போது சிபிஎம், சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை ஆதரிக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், தேமுதிக புதுக்கோட்டையில் போட்டியிடுமா என்பது இதுவரை தெரியவில்லை. திமுக-தேமுதிக ஆலோசனை: இந்த இடைத் தேரிதலில் போட்டியிடுவது குறித்து தேமுதிக தனது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை. திமுக இங்கு போட்டியிடும் என்றே தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணனை கட்சித் தலைமை அழைத்துள்ளதையடுத்து அவர் சென்னை விரைந்துள்ளார். அதே போல தேமுதிக மாவட்டச் செயலாளர் ஜாகீரும் சென்னை தலைமை அலுவலக்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் நிலை பற்றி மேலிடம் முடிவு செய்யும்-ஞானதேசிகன்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை இடைத் தேர்தல் இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரசின் நிலை பற்றி தமிழக பொறுப்பாளரும் அகில இந்திய பொதுச் செயலாளருமான குலாம்நபி ஆசாத்திடம் கலந்து பேசி அவரது கருத்தை பெற்ற பிறகு கட்சி மேலிடம் முடிவு செய்யும். திமுவுடனான உறவு தொடர்ந்து நீடிக்கிறது என்றார். |
| சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களை எம்.பி. பதவி? Posted: 26 Apr 2012 05:13 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. தற்போது பாரத ரத்னா விருதுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது குறித்து குடியரசு தலைவரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவருடன் இந்தி நடிகை ரேகா உள்ளிட்ட 4 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று அவரது இல்லத்தில் சச்சின் தெண்டுல்கரும் அவரது மனைவி அஞ்சலியும் நேரில் சந்தித்தனர். அரைமணி நேரம் நீடித்த சந்திப்பில் ஐ.பி.எல் தலைவர் ராஜேஷ் சுக்லா உடனிருந்தார். மேலும், 100-வது சதத்தை பூர்த்தி செய்த சச்சினுக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
| அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாராட்டு! Posted: 26 Apr 2012 02:48 AM PDT பில்லா 2 படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர். வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள். இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜீத்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள். மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சி அது. நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டன்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார். ஏகத்துக்கும் ஏத்தி விடறாங்களே...! |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |













