விழியே பேசு... |
- கேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்!
- செக்ஸ் மன்னன் அபிஷேக் சிங்வி தொடர்பான பொதுநல மனு தள்ளுபடி
- பெனாசிர் கொலை வழக்கு:முஷாரப்பை ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து அறிவிப்பு
- 'சில்வர் ஜூப்ளி' காணும் இசைஞானியின் 'ஹவ் டூ நேம் இட்'!(வீடியோ)
- 19-வது ஓவரில் சரவெடி நிகழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி
- பிரச்சினைகளை சந்தித்தேன்....கஷ்டங்களை அனுபவித்தேன்...:நயன்தாரா
- அடுத்த பட ஹீரோ விக்ரம்தான் - முடிவுக்கு வந்தார் ஷங்கர்!
- போபர்ஸ் ஊழலில் ராஜீவ்காந்தி- அமிதாப்பச்சனுக்கு தொடர்பா?: சுவீடன் போலீஸ் அதிகாரி தகவல்
- சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா ஜோடி!
- மதிய உணவுத் திட்டம்: 'வரலாற்றையே மாற்ற அதிமுக முயற்சி'- ஈ.வி.கே.எஸ். புகார்
- 'தண்ணி' யடிக்காத இளைஞர்களுக்கு பரிசு: சைதை துரைசாமி
- தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்: யுவராஜ்சிங்
| கேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்! Posted: 25 Apr 2012 10:24 PM PDT புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் பிரிவில்' தமிழ்ப் படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரையிடப்படுகிறது. சர்வதேச அளவில் புதிய திறமைகள் மற்றும் சினிமா போக்குகள் பற்றி தெரிவிக்கும் விதத்தில் இந்தப் பிரிவில் 2004-ம் ஆண்டு முதல் படங்களைத் திரையிடுகிறார்கள். உலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இடம்பெற்றுள்ள அமைப்பு இது. இந்த விழாவுக்கு முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்ரெட் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் கேன்ஸ் நகரில் வரும் மே 16 முதல் 27-ம் தேதி வரை இந்த விழா நடக்கிரது. இதில் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் மே 17 முதல் 23 வரை நடக்கிறது. விழாவின் துவக்க நாளில் முப்பொழுதும் உன் கற்பனைகள் டீமுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. 22-ம் தேதி படம் திரையிடப்படுகிறது. "இதனை மிகப்பெரிய கவுரவமாக நாங்கள் கருதுகிறோம்," என்று படத்தின் இயக்குநர் எல்ரெட் குமார் கூறியுள்ளார். எல்ரெட் குமார் இயக்கிய முதல் படம் இந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணைத் தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் இவரே! |
| செக்ஸ் மன்னன் அபிஷேக் சிங்வி தொடர்பான பொதுநல மனு தள்ளுபடி Posted: 25 Apr 2012 10:21 PM PDT வழக்கறிஞரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் சிங்வி தொடர்பான சி.டி.யை வெளியிட்ட அபிஷேக் சிங்வியின் முன்னாள் டிரைவர் முகேஷ் லால் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பிரச்சினையில் அபிஷேக் சிங்வி மற்றும் அவரது முன்னாள் டிரைவர் முகேஷ் லால் ஆகியோர் சமரசமாக பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்வதாக கடந்த 19-ம் தேதி கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சி.டி.யை வைத்துள்ள ஊடகங்கள், அதை கொடுத்தவரிடமே திருப்பி கொடுத்துவிடுவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளன. எனவே, இந்த வழக்கு விஷயத்தில் ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாலும், வழக்கறிஞர் ஒருவரின் வேலையாள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதாலும் இந்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். |
| பெனாசிர் கொலை வழக்கு:முஷாரப்பை ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து அறிவிப்பு Posted: 25 Apr 2012 09:10 PM PDT பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். சரியான பாதுகாப்பு வழங்கப்படாததுதான் அவர் கொலைக்கு காரணம் எனக் கூறி, அப்போதைய அதிபரான முஷாரப் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் முஷாரப் உச்ச நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டார். முஷாரப் மீது இரண்டாவது முறையாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதனை முஷாரப்புக்கு தெரியப்படுத்துவதற்காக, அவர் வீட்டில் எப்.ஐ.ஆர். நோட்டீஸ் ஒட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முஷாரப் தற்போது லண்டன் மற்றும் துபாயில் வசித்து வருகிறார். இந்த வழக்கில் ஏற்கனவே, கடந்த மாதம் வழங்கப்பட்ட முதல் நோட்டீசுக்கு, முஷாரப் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை, அதனால் 2-வது நோட்டீஸ் அவரது வீட்டிலேயே ஒட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் தேடப்பட்டு வருவதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச போலீஸ் மூலமாக இங்கிலாந்து அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பி இருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளது. மரண தண்டனை அமலில் உள்ள நாடுகளிடம் எந்த தனிநபரையும் ஒப்படைக்க மாட்டோம் என்று இங்கிலாந்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. |
| 'சில்வர் ஜூப்ளி' காணும் இசைஞானியின் 'ஹவ் டூ நேம் இட்'!(வீடியோ) Posted: 25 Apr 2012 11:09 AM PDT ஹவ் டூ நேம் இட்... இசைஞானியின் ரசிகர்களின் ரத்தத்தில், சுவாசத்தில் கலந்த இந்தப் பெயரை மறக்க முடியுமா... வெளியாகி, இசை வானில் சிறகடித்து, இன்னிசையால் இதயங்களை நனைய வைத்து, இளக வைத்து, உருக வைத்து, அழ வைத்து 25 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது ஹவ் டூ நேம் இட். 1986ம் ஆண்டு வெளியான ஹவ் டூ நேம் இட் அக்காலத்தில் பெரும் இசை லயிப்பலைகளை ஏற்படுத்திய இசைஞானியின் இசை மழைத் தொகுப்பாகும். அதுவரை திரையிசைப் பாடல்களை மட்டுமே கேட்டு வந்த இந்திய இசை ரசிகர்களின் காதுகளை இளையராஜாவி்ன் இந்த இசை ஆல்பம் புதியதொரு பாணியில் லயிக்க வைத்தது. இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கலவையாக அமைந்த ஹவ் டூ நேம் இட் இசை ஆல்பத்தில் இடம் பெற்றிருந்த இரு இசைக் கலவைகளை தியாகையருக்கும், ஜெர்மனி இசை மேதை ஜே.எஸ்.பாக்குக்கும் சமர்ப்பித்திருந்தார் இளையராஜா. இந்திய இசையமைப்பாளர் ஒருவர் வெளியிட்ட முதல் இசை ஆல்பம் என்ற பெருமை ஹவ் டூ நேம் இட்டுக்கு உண்டு. இன்று அந்த இசைத் தொகுப்பு 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி சென்னையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஹவ் டூ நேம் இட் தொகுப்பில் இடம் பெற்றுள்ளவற்றை அம்பி சுப்பிரமணியமும், ராஜேஷ் வைத்யாவும் நேரடியாக ரசிகர்களுக்கு இசைத்து வழங்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இசைஞானியின் இசைப் படையில் இணைந்துள்ள 40க்கும் மேற்பட்ட இசை வீரர்கள் கலந்து கொண்டு காதுகளுக்கு களிப்பூட்டவுள்ளனர். |
| 19-வது ஓவரில் சரவெடி நிகழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி Posted: 25 Apr 2012 07:20 AM PDT ஐபிஎல் போட்டித் தொடரின் 33-வது லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டேவிட் ஹஸ்ஸி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் கில்கிறிஸ்ட் இடம் பெறவில்லை. பஞ்சாப் அணி இதுவரை தான் ஆடிய 7 ஆட்டங்களில் 3 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை தான் ஆடிய 6 ஆட்டங்களில் 3 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. இந்த சீஸனில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களே இந்த ஆட்டத்திலும் விளையாடுவார்கள் என பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் ஹஸ்சி தெரிவித்தார். மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்டத்தில் விளையாடிய பிரக்யான் ஓஜா, திஸ்ஸர பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ராபின் பீட்டர்சன், கிளின்ட் மெக்கே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக நிதின் சைனியும் மன்தீப் சிங்கும் களமிறங்கினர். மன்தீப் சிங் 16 பந்துகளில் 22 ரன்கள் குவித்திருந்த போது ஆர்.பி.சிங் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து நிதின் சைனியுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். நிதின் சைனி 17 ரன்கள் எடுத்திருந்த போது மெக்கே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து ஷான் மார்ஷ் உடன் டேவிட் ஹஸ்ஸி ஜோடி சேர்ந்தார். ஷான் மார்ஷ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து டேவிட் ஹஸ்ஸியுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஆரம்பத்தில் நிதனமாக ஆடினாலும் போகப் போக அதிரடிக்கு மாறினார்கள். சிறப்பாக ஆடி அரைசதமடித்த டேவிட் ஹஸ்ஸி 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 68 ரன்களும், மில்லர் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 34 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு மும்பை அணி களமிறங்கியது. இந்த அணியின் துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரும் ஜேம்ஸ் பிராங்ளினும் களமிறங்கினர். நிதானமாக ஆடிய பிராங்ளின் 22 ரன்கள் எடுத்திருந்த போது அசார் மொகமது பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து சச்சினுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிவந்த சச்சின் 34 ரன்கள் எடுத்திருந்த போது அசார் மொகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 3 ரன்கள் எடுத்திருந்த போது, பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து ரோகித் சர்மாவுடன் கிரென் பொலார்டு ஜோடி சேர்ந்தார். பொலார்டும் 3 ரன்கள் எடுத்த திருப்தியில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்பஜன் சிங் ரன் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். இவர்களையடுத்து அம்பதி ராயுடுவும், ராபின் பீட்டர்சனும் ஜோடி சேர்ந்தனர். 18 ஓவர்கள் வரை பஞ்சாப் அணி பக்கமே வெற்றி இருந்தது. இன்னும் 12 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. 19-வது ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். இந்த ஓவரே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். இந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களை மும்பை அணியினர் குவித்தனர். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 5 பந்துகளில் 7 ரன்கள் அடித்து மும்பை அணி போராடி வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அம்பதி ராயுடு 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களும், ராபின் பீட்டர்சன் 7 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 16 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். |
| பிரச்சினைகளை சந்தித்தேன்....கஷ்டங்களை அனுபவித்தேன்...:நயன்தாரா Posted: 25 Apr 2012 04:44 AM PDT நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காததால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் திருமணத்துக்காக காத்திருந்த தன்னை பிரபு தேவா ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கலங்குவதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமாவில் இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தையும் அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன். பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன். பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும். திரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். |
| அடுத்த பட ஹீரோ விக்ரம்தான் - முடிவுக்கு வந்தார் ஷங்கர்! Posted: 25 Apr 2012 04:40 AM PDT தனது அடுத்த மெகா படத்தின் ஹீரோ யார் என்பதில் இயக்குநர் ஷங்கர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். எதிர்ப்பார்த்த மாதிரியே, விக்ரம்தான் அவரது அடுத்த பட ஹீரோ. இந்தப் படத்துக்கு முதல் முறையாக எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் மற்றும் பாலா) வசனம் எழுதுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் முதலில் விக்ரம் நடிப்பார் என்றும், இல்லையில்லை சூர்யா நடிப்பார் என்றும் மாறிமாறி தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது படத்தின் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தாண்டவம்' படத்தின் பணிகள் முடிந்ததும் ஷங்கர் படத்துக்கு வந்துவிடுவாராம் விக்ரம். சிங்கம் 2 படத்தின் ஹீரோ சூர்யா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அடுத்த நாள், ஷங்கர் பட ஹீரோ விக்ரம் என செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
| போபர்ஸ் ஊழலில் ராஜீவ்காந்தி- அமிதாப்பச்சனுக்கு தொடர்பா?: சுவீடன் போலீஸ் அதிகாரி தகவல் Posted: 25 Apr 2012 04:30 AM PDT போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலாக வீசியது. ராஜீவ்காந்தியின் இமேஜை இந்த விவகாரம் கடுமையாக பாதித்தது. சுவீடனில் இருந்து போபர்ஸ் பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட வகையில், ராஜீவ்காந்தி, சோனியாவின் உறவினர் குவாத்ரோச்சி மற்றும் மத்திய மந்திரிகள் சிலர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதையடுத்து பீரங்கி பேர ஊழல் விவகாரம் மேலும் சூடுபிடித்தது. இந்தியாவிலும், சுவீடனிலும் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் டெல்லி கோர்ட்டு அளித்த தீர்ப்பில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவ்காந்தியின் பங்கு பற்றிய புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. அப்போது ராஜீவ் காந்தி உயிருடன் இல்லை. அதே சமயம், பீரங்கி பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட குவாத்ரோச்சி மற்றும் சிலருக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ. சொன்னதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து விசாரணை நடத்திய சுவீடன் முன்னாள் போலீஸ் துறை தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ரோம், அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து விவரித்தார். அவர் கூறியதாவது:- போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு உண்டு என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியான குவாத்ரோச்சியை காப்பாற்ற இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியேயும் (சுவீடன்) அவர் தீவிரமாக முயன்றார். அவரை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதற்காக பல்வேறு இந்திய நிறுவனங்களும், அப்பாவிகளும் தண்டிக்கப்பட்டனர். குவாத்ரோச்சியை விசாரிக்க இந்திய விசாரணை அமைப்பு எங்களை அனுமதிக்கவில்லை. குவாத்ரோச்சி உள்ளிட்ட சிலருக்கு முன்னணி நிறுவனமாக ஏ.இ.சர்வீசஸ் மூலம்தான் லஞ்சம் தரப்பட்டது. லஞ்சப் பணம் நேரடியாக தராமல் குவாத்ரோச்சி வங்கி கணக்கில் போடப்பட்டது. பேரம் பேசப்பட்டது, லஞ்சப்பணம் கைமாறியது எல்லாமே ஜெனீவாவில்தான் நடைபெற்றது. இதுபற்றி போபர்ஸ் பீரங்கி நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்ட்போ எழுதி வைத்துள்ள குறிப்பில், இந்த குற்றச்சாட்டில் மிஸ்டர் என் (அருண்நேரு) சிக்கியதை பற்றிய யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால், மிஸ்டர் கியூவின் (குவாத்ரோச்சி) அடையாளம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டப்பட்டது. ஏனெனில், அவர் மிஸ்டர் ஆர்-ன் (ராஜீவ்காந்தி) நெருக்கமானவர் என்பதால் இந்த அக்கறை காட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. சுவீடனுக்கு வந்திருந்த இந்திய விசாரணை குழுவினர், ஒரு பட்டியலை என்னிடம் தந்து, அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்குமாறு கூறினார். அதில் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர் இருந்தது. மேலும், இங்குள்ள பத்திரிகையான டோஜன்ஸ் நைஹெட்டர் மூலம் அமிதாப்பச்சனுக்கும் தூண்டில் போடப்பட்டது. விசாரணையில் போபர்ஸ் பேர ஊழலில் அமிதாப்பச்சனுக்கோ அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ துளியளவுகூட தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. சுவீடன் பத்திரிகையில், இவர் மற்றும் சிலரது பெயர் அனாவசியமாக வெளியான காரணமாக இருந்தவர்கள் இந்திய விசாரணை அமைப்பை சேர்ந்த குழுவினர்தான். இவ்வாறு அவர் கூறினார். |
| சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா ஜோடி! Posted: 25 Apr 2012 04:24 AM PDT சிங்கம் 2 படத்தில் சூர்யா நடிப்பார், நடிக்க மாட்டார் என்று பல வித செய்திகள் வந்த நிலையில், சூர்யா நடிப்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். மாற்றான் முடிந்ததும் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இந்த சிங்கம் -2 தான். அவருக்கு அனுஷ்கா, ஹன்ஸிகா என இரு ஜோடிகள். சிங்கம் படத்தை இயக்கிய ஹரிதான் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். 'சிங்கம் 2' படத்திற்கான அனைத்து திரைக்கதை பணிகளையும் முடித்து விட்டாராம் ஹரி. 'மாற்றான்' படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து கொடுத்து விட்டு 'சிங்கம் 2' படத்தில் நடிக்க கால்ஷீட் தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. 'சிங்கம்' படத்தினை போலவே 'சிங்கம்' 2ம் பாகத்திற்கும் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவருடன் ஹன்சிகா, விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர், ரகுமான் மற்றும் பல புதிய கதாபாத்திரங்கள் இணைய இருக்கிறார்கள். சந்தானம் இப்படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சென்னை, ஹைதராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற இருக்கிறது. இயக்குனர் ஹரி முதன் முறையாக படத்தின் சில முக்கிய காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை தென் ஆப்ரிக்கா, கென்யா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் படமாக்குகிறார். 'சிங்கம்' படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். ஒளிப்பதிவுக்கு ப்ரியன், படத்தொகுப்புக்கு V.T.விஜயன் , பாடல்களுக்கு நா,முத்துக்குமார், விவேகா, மதன் கார்க்கி, மக்கள் தொடர்பாளரா ஜான்சன், கலை இயக்குனராக கதிர் ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பில் லக்ஷ்மணன் இப்படத்தினை தயாரிக்கிறார். |
| மதிய உணவுத் திட்டம்: 'வரலாற்றையே மாற்ற அதிமுக முயற்சி'- ஈ.வி.கே.எஸ். புகார் Posted: 25 Apr 2012 04:21 AM PDT மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜர் குறித்து சட்டசபையில் அமைச்சர்கள் தவறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது வரலாற்றை மாற்றும் முயற்சி. உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இதை சட்டசபை குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான் என்று சட்டசபையில் அமைச்சர்களும் அதிமுக எம்எல்ஏக்களும் பேசினர். இந் நிலையில் குடியாத்தத்தில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜர் குறித்து தமிழக சட்டசபையில் தவறான கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இது வரலாற்றை மாற்றும் முயற்சி. உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இதை சட்டசபை குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் நிலை உயர வேண்டும் என்பதற்காக மட்டுமே காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். காமராஜர் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இந்த சேவையை பாராட்டி சென்னையில் காமராஜர் சிலையை அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார். அத்தகைய புகழுக்கு, தியாகத்துக்கு இழுக்கு ஏற்பட காரங்கிரஸ் தொண்டர்கள் விடமாட்டார்கள். இலங்கைக்கு சென்ற எம்.பிக்கள் குழு தமிழர்களுக்கு தனி குடியுரிமை வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளனர். 50,000 வீடுகள் கட்டுவது போன்ற திட்டங்களை உடடினயாக செயல்படுத்த வேண்டும். சட்டீஸ்கரில் கலெக்டர் கடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. அவரை மீட்க உள்துறை அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மின் பற்றாகுறையோ 3,500 மெகாவாட். ஆனால் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 2,000 மெகாவாட் மட்டுமே என்றார். |
| 'தண்ணி' யடிக்காத இளைஞர்களுக்கு பரிசு: சைதை துரைசாமி Posted: 25 Apr 2012 03:39 AM PDT மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும் என சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். கரூர் மாவட்டம் தும்பிவாடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் மண்ணின் மைந்தரும், சென்னை மேயருமான சைதை துரைசாமி கலந்து கொண்டு பேசியதாவது, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும். அதற்கு முதலில் குடிப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும். கிராமங்களில் உள்ள இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளானால் மதிப்பு குறையும், சிந்தனைகள் சிதறும், நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க முடியாது. இதனால் வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியாது. எனவே தான் குடிப்பழக்தை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றேன். இன்று முதல் அடுத்தாண்டு வரை குடிக்காத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும். குடிப்பழக்கம் இல்லாத கிராமமாக தும்பிவாடி மாற வேண்டும். தும்பிவாடி மட்டும் அல்ல தமிழகமும் அது போல மாற வேண்டும். படிக்க முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவிளுக்கு அறக்கட்டளை மூலம் உதவி செய்யப்படும் என்றார். |
| தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்: யுவராஜ்சிங் Posted: 25 Apr 2012 03:20 AM PDT புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பியுள்ள யுவராஜ்சிங் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்க அவரது பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. சர்வதேச போட்டியில் 100 சதம் அடிப்பது சாதாரணமானது இல்லை. இந்த சாதனையை படைத்த தெண்டுல்கருக்கு அடுத்த இலக்கும் இருக்கிறது. 100 டெஸ்டில் விளையாடுவதே சிறப்பானது. அவர் 200 டெஸ்ட் விளையாடுவதை அடுத்த இலக்காக கொண்டுள்ளார். இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











