Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


ராஜபக்சேவுக்காக பொய் சொல்கிறாரா சுஷ்மா??

Posted: 24 Apr 2012 10:10 PM PDT


இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து ராஜபக்சே எதுவுமே பேசவில்லை என்றும், அதுகுறித்து இந்தியக் குழுவும் எதையும் கேட்கவில்லை என்றும் இலங்கையின் தி ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அரசு நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது குழப்பத்தை தருவதாக அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனேவும் இதில் கையெழுத்திட்டனர். அதன் பிறகு 13-வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாகாண அரசுகளுக்கு குறிப்பிட்ட அளவு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுடன் காவல்துறை, நிலம் போன்றவை தொடர்பான அதிகாரங்களையும் வழங்கியது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து வந்த அரசுகள் மறுத்தன. நிலம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்று அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் கூறினர். இலங்கையைப் பொருத்தவரை 80 சதவீத நிலம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. மீதியுள்ள 20 சதவீத நிலம் தனியாருக்குச் சொந்தமானது. மாகாண அரசுகளுக்கு நிலங்கள் மீது எந்த வகையான உரிமையும் கிடையாது.

இந்த சட்டத் திருத்தத்தை இதுவரை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதைத்தான் இந்தியா அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஐலண்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இலங்கைக்கு வந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவிடம் ராஜபட்ச உறுதியளித்ததாக கூறப்படுவதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

எனினும், அதற்கு மேலும் செய்வதற்கு அதிபர் தயாராக இருக்கிறார் கூறப்பட்டுள்ளது. மேலும், அப்படியொரு உறுதிமொழி கோரப்படவுமில்லை, தரப்படவுமில்லை என்று இலங்கையின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் மீது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றுதான் ராஜபக்சே கூறியிருக்கிறாராம். இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது அவர் கூறுகையில், 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தை அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே மீது இந்தியா திணித்தது என்று கூறிய அவர் அதை எப்படி செய்தது இந்தியா என்றும் விளக்கியுள்ளார். இந்த சட்டத் திருத்தத்திற்கு இந்திய வம்சாவளி தமிழர்களின் தலைவரான ஆறுமுகம் தொண்டைமான் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார் ராஜபக்சே.

கடந்த மார்ச் 22-ம் தேதி ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, 13-வது திருத்தம் குறித்து உறுதி தரும்படி இலங்கைக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியைப் பார்க்கும்போது 13வது சட்டத் திருத்தம் குறித்து இந்திய எம்.பிக்கள் குழு ஆணித்தரமாக எதையும் பேசவில்லை என்பது தெளிவாகிறது.


பேசாத ஒரு விசயத்தையே பேசினதா சொல்றாங்கனா வாங்கின பார்சலுகுள்ள எவ்ளோ ...இருந்திருக்கும்னு நல்லாவே யூகிக்க முடியுதுங்கோ...



கைவிடப்பட்ட அருள்நிதியின் படம்

Posted: 24 Apr 2012 09:33 PM PDT


மெளனகுரு' படத்தினை அடுத்து அருள்நிதி யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்தன.

'மெளனகுரு' படத்தினை தயாரித்த அருள்நிதியின் தந்தையான மு.க.தமிழரசு தயாரிப்பில் 'அசோகமித்ரன்' என்னும் படத்தில்  நடிக்க ஒப்பந்தமானார் அருள்நிதி.  கரு.பழனியப்பன் இயக்க,  தமன் இசையமைக்கிறார் என்று விளம்பரம் செய்தார்கள்.

'அசோகமித்ரன்' படம் தற்போது கைவிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது " கரு.பழனியப்பன் மற்றும் அருள்நிதி இருவருக்கும் ஆரம்பித்தில் இருந்தே சில விஷயங்கள் சரிவர அமையவில்லை.

அதுமட்டுமல்லாது படத்தின் இயக்குனர் தயாரிப்பாளரிடம் படம் குறித்த தகவல் எதுவும் கூற மறுத்துவிட்டார் இயக்குனர். ஆகையால் தான் படம் கைவிடப்பட்டது " என்று தெரிவித்தார்கள்.

இந்தப் படம் கைவிடப்பட்டாலும் தான் இப்போது நடித்து வரும் படம் குறித்து  மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறாராம் அருள்நிதி.

தயாநிதி அழகிரி தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு 'பகல் கொள்ளை' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை கணேஷ் விநாயக் என்ற  புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : " கரு.பழனியப்பன் தனக்கு கொடுத்த 10 லட்ச ரூபாய் அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டாராம்  "



விஜய்காந்த்திடம் சிக்கிய ரேசன் கடை 'பிராடுகள்': அடுத்து என்ன 'சஸ்பென்ஸ்'!

Posted: 24 Apr 2012 09:34 PM PDT


சட்டப்பேரவையில் தேமுதிகவினர் எந்த விஷயம் குறித்து கேள்வி எழுப்பினாலும் அதற்கு அமைச்சர்களும், முதல்வரும் ஆதாரம் உள்ளதா? அத்தாட்சி உள்ளதா? என கேட்டு வருகிறார்கள். இப்போது 4 நாள்களில் 6 தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து 6 முறைகேடுகள் குறித்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளேன். இந்த ஆதாரங்களை, மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளேன். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்பது சஸ்பென்ஸ் என்றார் விஜயகாந்த்.

ஆத்தூர் அருகே கெங்கவல்லி தொகுதியில் கொண்டையம்பள்ளியில் ரேஷன் கடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் 5 லிட்டர் மண்ணெண்ணைக்கு பணம் வாங்கிக் கொண்டு 4 லிட்டர் மட்டுமே வழங்கிய கடைக்காரர்களை வறுத்து எடுத்தார்.

அப்போது 4 லிட்டர் மட்டுமே வழங்க வேண்டும் என அரசு உத்தரவி்ட்டுள்ளதாக கடைக்காரக்கள் கூற, அதற்கான அரசாணையை கொண்டு வரும்படி விஜயகாந்த் கேட்டார். இதையடுத்து ரேஷன் கடைக்காரர்கள் கடையைப் பூட்டி விட்டு ஓடினர்.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த், இந்த ரேஷன் கடையில் 250 கார்டுதாரர்களில் 200 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது.

அதேபோல், 5 லிட்டர் மண்ணெண்ணெய்க்காக பணம் கொடுத்தவர்களுக்கு 4 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு ரேஷன் கடையில் மட்டும் மாதத்துக்கு 250 லிட்டர் மண்ணெண்ணெய் திருடப்படுகிறது. அதேபோல், 50 கார்டுகளுக்கு வழங்கப்படும் பொருட்களும் திருடப்படுகின்றன என்றார்.

அதிமுகவினர் நில ஆக்கிரமிப்பு:

பின்னர் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொல்லிமலை உறைவிடப் பள்ளியில் விஜயகாந்த் ஆய்வு நடத்தினார். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அவர்,

மலைவாழ் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறிக்கொண்டே மலைவாழ் மக்களின் நிலங்களை ஆளும்கட்சியினர் ஆக்கிரமித்து வருகின்றனர். கொல்லிமலை உறைவிடப் பள்ளியின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் போதிய அளவு மைதானம் இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் நிலங்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த ஆதாரம் போதுமா அமைச்சர்களே?:

சட்டப்பேரவையில் தேமுதிகவினர் எந்த விஷயம் குறித்து கேள்வி எழுப்பினாலும் ஆளுங்கட்சியினர் அதற்கு ஆதாரம் கேட்கின்றனர். அமைச்சர்களும், முதல்வரும் ஆதாரம் உள்ளதா? அத்தாட்சி உள்ளதா? என கேட்டு பதில் கூற மறுத்து வருகிறார்கள். இப்போது 4 நாள்களில் 6 தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து 6 ஆதாரங்களைத் திரட்டியுள்ளேன்.

இடைத்தேர்தலில் பணம் கொடுத்துத்தான் அதிமுக வெற்றி பெறும்:

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பணம் கொடுத்துத்தான் அதிமுக வெற்றி பெறும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் புதியவர்களாக இருப்பதால் அவர்களிடமும் குறைகள் இருக்கவே செய்யும். அதை அவர்களே சரி செய்து கொள்வார்கள்.

தேமுதிக வெற்றி பெற்ற தொகுதிகளில் எம்எல்ஏக்களின் பணிகளை ஆய்வு செய்யவும், தொகுதியின் வளர்ச்சி மற்றும் குறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். சேலம் மருத்துவமனையை நான் பார்வையிட்டேன். அங்கு சுகாதார வசதி இல்லை. ஸ்கேன் எந்திரம் இயங்கவில்லை. ஜெனரேட்டர் இயங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் சுதந்திரமாக பணிபுரியவில்லை.

கடந்த ஒரு ஆண்டு ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. பிளஸ் 2, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு பல இடங்களில் லேப்டாப் வழங்கப்படவில்லை. கோடை காலம் துவங்கியுள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. எனக்கு மடியில் கனமில்லை. நான் மக்களுடன் போராட தயாராக இருக்கிறேன்.

கடந்த கால ஆட்சியில் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தால் நான் கட்சி துவங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. தமிழகத்தில் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை மின் தடை உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

மணல் கொள்ளை குறித்து சட்டசபையில் பேச முடியவில்லை. நான் மக்களிடம் மனுக்களை பெறுவதுபோல மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மனு பெற தயாராக உள்ளனரா? விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை நான் முழுமையாக படித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளேன்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பது சஸ்பென்ஸ் என்றார் விஜயகாந்த்.



விஜய் ரெடின்னா நானும் ரெடி - உதயநிதி ஸ்டாலின்!

Posted: 24 Apr 2012 09:24 PM PDT


உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரையில் நடந்தது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியண்ட் மூவீஸ் முதன் முதலில் தயாரித்தது விஜய் நடித்த குருவி படத்தைத் தான் என்பதால் நீங்கள் மறுபடியும் நடிகர் விஜய்யுடன் இணைவீர்களா என நிரூபர்கள் கேட்டனர்.


அதற்கு பதிலளித்த உதயநிதி " விஜய்க்கு ஏற்ற கதை கிடைத்து, அவரது கால்ஷீட்டும் கிடைத்தால் கண்டிப்பாக மற்றொரு படத்தில் அவருடன் இணைவேன்" என்று கூறினார். விஜய்யும் உதயநிதியும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் அ.தி.மு.கவிற்கு ஆதரவளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது உதயநிதி ஸ்டாலின் விஜய்யுடன் மிண்டும் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி தன் நிலையை தெரிவித்துவிட்டதால், விஜய்யின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. சில நாட்களுக்கு முன் நண்பன் படத்தின் நூறாவது நாள் விழாவை கொண்டாடிய விஜய்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார்.

இன்னும் சில பாடல்கள் மட்டுமே மீதம் இருப்பதால், மற்ற வேலைகள் எல்லாம் முடிந்து ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று துப்பாக்கி வெளியிடப்படலாம் என்று கூறுகின்றனர்.



தமிழ் ஈழம்: டி.கே.ரங்கராஜனுக்கு கருணாநிதி 'குட்டு'!

Posted: 24 Apr 2012 09:13 PM PDT


"தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தலைவர் டி.கே.ரங்கராஜனும் இலங்கையிலே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தை கோரவில்லை என்பதைப்போல சொல்லியிருக்கிறார்கள்.

1987-ல் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13-வது திருத்தம் என்று ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத் தான் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பரவல் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஆனால் அந்தத் திருத்தத்தை அரை மனதுடன் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு இன்று வரை அதை நிறைவேற்றும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவாக்கி வருகிறது.

அதனால் தான் இன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே "இலங்கையில் தமிழர்களுக்கு, அவர்களுடைய பாரம்பரியமான நிலப் பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும்; இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும்; சாத்தியம் தானா?'' என்று வினவியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்..

டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. "மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்ற போது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன். இலங்கை போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள்'' என்று அவர் சொல்லியிருக்கிறார்.

தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976-ல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து "தனித் தமிழ் ஈழம்'' தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து; அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள். தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

"தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை-அடக்குமுறை அடாவடிகளாலோ, அதிகார அத்துமீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ-தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.



குடியரசுத்தலைவர் தேர்தல் : கருணாநிதியை சந்திக்க சிறப்பு தூதுவரை அனுப்பினார் சோனியா காந்தி

Posted: 24 Apr 2012 09:09 PM PDT


அடுத்த குடியரசுத்தலைவருக்கான வேட்பாளர் தேர்வில் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
 
இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் கட்சி தனது  கூட்டனி கட்சிகளிடமும் அதரவு திரட்டி  வருகிறது.  இச்சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிறப்பு துதுவர் ஒருவரை கருணாநிதியை சந்திக்க அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமித் அன்சாரியை அடுத்த குடியரசுத்தலைவராக்க திட்டமிட்டு அதற்கு ஆதரவு திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே, துணை குடியரசுத்தலைவர் ஹமித் அன்சாரி குடியரசு தலைவராவதற்கு லாலு பிரசாத் தன் ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
 
இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனால் சமாஜ்வாடி கட்சி இத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
 
சமாஜ்வாடி கட்சியும் மம்தா பானர்ஜி கட்சியும் இணைந்தால் வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.  
 
 மேலும் ஏ.ஐ.ஏ.டி.எம்.கே., பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய பிராந்திய கட்சிகளும் வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்பதும் குறிபிடத்தக்கது.



அலெக்ஸ் பால் மேனனை மீட்க களமிறங்குகிறார் விஜயக்குமார்?

Posted: 24 Apr 2012 08:57 PM PDT


மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள சட்டிஸ்கர் மாவட்ட ஆட்சித் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை பத்திரமாக மீட்பது குறித்த முக்கிய ஆலோசனை டெல்லியில்நடந்தது. இதில் சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரலான தமிழகத்தைச் சேர்ந்த கே.விஜயக்குமார் கலந்து கொண்டார். இதனால் இந்த ஆபரேஷனில் விஜயக்குமார் களம் இறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் முயற்சியில் தற்போது சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸார்தான் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் தலைவரான கிஷன்ஜி சுட்டு வீழ்த்தப்பட்டார். அதன் பின்னணியில் சிஆர்பிஎப் தலைவரான விஜயக்குமார் இருந்ததாக பேச்சு அடிபட்டது.

தமிழகத்தில் தலை சிறந்த காவல்துறை அதிகாரியாக விளங்கியவர் விஜயக்குமார். வீரப்பன் வேட்டை, வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்டர், அயோத்தியா குப்பம் வீரமணி என்கவுண்டர் உள்ளிட்டவற்றுக்கு இவர் பெயர் போனவர். தற்போது சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரலாக இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது அலெக்ஸ் பால் மேனன் மீட்பு நடவடிக்கையில் விஜயக்குமாரின் நேரடி உத்திகள் செயல்படுத்தப்படவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

நேற்று டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது. இதில் விஜயக்குமார் கலந்து கொண்டார். மேலும், சட்டிஸ்கர் மாநில ஏடிஜிபி ராம் நிவாஸ், ராய்ப்பூர் மாவட்ட ஐஜி பங்கஜ் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின்போது கலெக்டரை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், அப்போது விஜயக்குமார் பல யோசனைகளைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே அலெக்ஸ் பால் மேனன் விவகாரம் மேலும் பரபரப்படைந்துள்ளது.



திக்விஜய் சிங் ஒரு தீவிரவாதி: மத்திய பிரதேச சபாநாயகர்

Posted: 24 Apr 2012 08:23 PM PDT


காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் ஒரு தீவிரவாதி என்று மத்திய பிரதேச சபாநாயகர் ஈஸ்வர்தாஸ் ரோஹிணி கூறியுள்ளார்.
 
ஜபல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஈஸ்வர், 'பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் பேசியுள்ளார். மேலும், அல்மார்க்கில் சந்தேகப்படும்படியான தீவிரவாதிகள் வீடுகளுக்கு அவர் சென்றுள்ளார். அவர்களுடன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்த மாநிலத்தில் யார் தீவிரவாதி என்று கேட்டால், அவர் திக்விஜய்சிங் தான் என்று நான் கூறுவேன்' என்றார்.
 
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறுகையில், 'சபாநாயகர் ஈஸ்வர் அவருடைய பதவியின் கண்ணியம், பொறுப்புக்கு ஏற்றார் போல் பேசாமல் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளார். எனக்கு தீவிரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்குத் தான் சிமி போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது. அப்துல் ரசாக் என்ற ஜமைத்-அல்-இ-ஹதீஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிக்கு ஈஸ்வர் தான் அடைக்கலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்க வேண்டும்' என்றார்.




இதுக்கு தான் இவ்ளோ நாடகமா! தேர்தலில் அன்னா ஹசாரே குழு போட்டி

Posted: 24 Apr 2012 07:53 PM PDT


அன்னா ஹசாரே குழு ஊழலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. முன்னதாக இக்குழு தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும், வாக்காளர்களிடம் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பிரச்சாரம் மட்டுமே மேற்கொள்ளும் எனத்தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்துவருவதாக அன்ன ஹசாரே குழுவில் ஒருவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

பல மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளதாகவும், எவ்வளவு மக்கள் தங்களை தேர்தலில் போட்டியிட ஆதரவு தெரிவிப்பார்கள் என தெரியவில்லை எனவும், மக்கள் விரும்பும் பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என மற்றொரு உறுப்பினர் டாக்டர் விஸ்வாஸ் குமார் தெரிவித்தார்.

இருந்தாலும் இது குறித்து பின்னர் கூடும் குழு குட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். இதில் பெரும் கருத்து வேறுபாடுகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே,  வரும் ஜூன் 3-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் பேரணி குறித்து அன்னா ஹசாரே குழுவினர் நொய்டாவில் ஆலோசனை நடத்தினர்.    இதில் பங்குபெற்ற குழு உறுப்பினரான முப்தி சமீம் கஸ்மி முறைகேடாக கூட்ட நிகழ்ச்சியை தன்னுடைய மொபைலில் பதிவு செய்ததாக அவரை ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு அன்னா ஹசாரே குழுவினர் கூறியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேறிய கஸ்மி, அன்னா ஹசாரே குழுவில் இருந்து நீங்குவதாகவும், இந்த அமைப்பு முஸ்லீம் மக்களுக்கு எதிரான அமைப்பு என்றும் குற்றம் சாட்டினார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும், மும்பையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின்போது மக்களை பெருமளவு கவரவில்லை என்பதும், இந்நிலையில் தேர்தலில் போட்டி என்பது எந்த அளவிற்கு அக்குழுவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கும் என்பது தெரியவில்லை.

அன்னாவும் அவரது குழுவினரும் சுயநலமின்றி மக்களுக்காகவே ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதாக மக்கள் கருதியதால் தான் இவர்களின் போராட்டங்களுக்கு தேசம் முழுவதும் ஆதரவாக அலை வீசியது. ஆனால் இவர்கள் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதில் இருந்து இவர்களின் போராட்டங்களும், இவர்களின் நேர்மையும் கேள்விக்குரியதாகி இருக்கிறது....

மொத்தத்தில் இவர்களின் போராட்டங்களும் ஒரு நாடகமே...! இவர்களும் ஒரு கைதேர்ந்த நடிகர்களே...!






40 வயதை நெருங்குகிறார் சச்சின்-இன்று 39வது பிறந்த நாள்!

Posted: 24 Apr 2012 09:52 AM PDT


இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார், அட்டகாச சாதனைகளின் நாயகன், தொய்வின்றி கிரிக்கெட் சேவை புரிந்து வரும் கிரிக்கெட் கடவுள், சச்சின் டெண்டுல்கர் தனது 39வது பிறந்த நாளை இன்று சிம்பிளாக கொண்டாடினார்.

கிரிக்கெட் உலகின் பெரும்பாலான சாதனைகள் சச்சின் பாக்கெட்டில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. என்ன சாதனை இல்லை இவர் பேட்டில் என்று பாட்டுப் பாடும் அளவுக்கு சாதனைகளை படைத்துப் படைத்துக் குவித்துக் கொண்டிருக்கிறார் சச்சின்.

வயதாகி விட்டது ஒதுங்குவது நல்லது என்று எத்தனையோ பேர் கூறியும் கூட அதைப் பொருட்படுத்தாமல் இவரது பேட் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறது- சாதனைகள் மூலம். சமீபத்தில் கூட அவர் ஒர அருமையான சதத்தைப் போட்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 100 சதங்களைப் போட்டு சாதனை படைத்தார் - அதற்கு அவர் ஒரு வருடம் எடுத்துக் கொண்டார் என்பது வேறு விஷயம்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளே என்று வணங்கப்படும் சச்சின் இன்று தனது 39வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். ஐபிஎல் போட்டிக்காக சண்டிகர் வந்துள்ள சச்சின் அங்கு இன்று தனது மனைவியுடன் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் திணேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, கீரன் போலார்ட், பிராங்க்ளின் ஆகியோர் உடன் இருந்தனர்.

23 வருடமாக கிரிக்கெட் ஆடி வரும் சச்சினுக்கு அடுத்த ஆண்டு 40 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

188 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,470 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். இதில் 51 சதம், 65 அரை சதம் அடக்கம். அதேபோல 463 ஒரு நாள் போட்டிகளில் ஆஐடி 18,429 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 40 சதம் மற்றும் 96 அரை சதம் அடக்கம்.

இன்னும் என்னென்ன சாதனைகளையெல்லாம் சச்சின் படைக்கப் போகிறாரோ தெரியவில்லை. அவர் என்ன செய்தாலும் ரசிக்க ரசிகர்கள் ரெடி...



பில்லா 2 துணை இயக்குனர் 'தல' அஜீத்

Posted: 24 Apr 2012 09:44 AM PDT


பில்லா 2 படக்குழுவினர் எப்பொழுது பார்த்தாலும் அஜீத் குமார் புராணம் தான் பாடி வருகின்றனர்.

தல அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்புக்கு சென்றால் யாரைப் பார்த்தாலும் தல போல வருமா என்று தான் பேசிக்கொள்கிறார்கள். என்னங்கையா தல டைலாக்கை சொல்றீங்க என்று கேட்டால், ஆஹா, ஓஹோ என்று அஜீத்தை தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாத குறையாக புகழ்பாடுகிறார்கள். அப்படி தல என்ன மாயமந்திரம் செய்தார் என்றால் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்கத் தேவையான உதவிகளை அஜீத் செய்து வருகிறாராம்.

மேலும் படத்தில் பார்வதி ஓமனகுட்டன், புருனா அப்துல்லா என்று தமிழ் தெரியாத 2 நாயகிகள். அவர்களுக்கு தமிழ் வசன உச்சரிப்புகளை கற்றுக்கொடுக்கிறாராம். இது தவிர படக்குழுவினருக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறாராம். அதனால் தான் இந்த புகழாரம் எல்லாம்.

முன்னதாக பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்ததோடு இல்லாமல், சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் தல என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெரிய நடிகர் எந்த பந்தா சிறிதும் இல்லாமல் ஓடி, ஓடி உதவி செய்வதால் படக்குழுவினர் உருகுகின்றனர்.

என்ன இருந்தாலும் தல தல தான்...



புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

Posted: 24 Apr 2012 07:49 AM PDT


புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்குமரன். கடந்த 1-ந்தேதி கட்சி தொண்டர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கார் கவிழ்ந்து மரணம் அடைந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் தேதியை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 


அதன்படி, வரும் ஜுன் 12-ம் தேதி இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வோர் மே 18-ம் தேதி தாக்கல் செய்யலாம்.  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே.25. வேட்பு மனு மே 26-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுவை வாபஸ் பெற மே 28-ந் தேதி கடைசி நாள். ஜுன் 15-ல் வாக்குகள் எண்ணப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது


இந்த நிலையில் புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்றும், அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி விரைவில் நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் (புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர், புதுக்கோட்டை நகரமன்ற தலைவர்) நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். 

புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. தற்போது அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்து இருப்பதன் மூலம் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. 

கடந்த சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதி ஓட்டு விவரம்:-

முத்துக்குமரன் (இந்திய கம்யூ) 65,466

பெரியண்ணன் அரசு (தி.மு.க.) 62,365

சீனிவாசன் (ஐ.ஜே.கே) 4,098



ஜுன் 12-ல் புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted: 24 Apr 2012 07:39 AM PDT


புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்குமரன் கடந்த 1-ந்தேதி கட்சி தொண்டர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கார் கவிழ்ந்து மரணம் அடைந்தார்.  
இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வந்தது.
 
இந்நிலையில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் தேதியை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, வரும் ஜுன் 12-ம் தேதி இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வோர் மே 18-ம் தேதி தாக்கல் செய்யலாம்.  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே.25. வேட்பு மனு மே 26-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுவை வாபஸ் பெற மே 28-ந் தேதி கடைசி நாள். ஜுன் 15-ல் வாக்குகள் எண்ணப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை உடன் இதர 4 மாநிலங்களில் 27 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஜுன் 12-ல் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் மட்டும் 18 சட்டமன்ற மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. கர்நாடகா, மேற்கு வங்கத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடக்கிறது.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தொகுதிகளில் நடத்தை விதி உடனடியாக அமுலுக்கு வந்தது.




ஐபிஎல் 5: ஷேவாக் அதிரடியில் டெல்லி டேர்டெவில்ஸ் அபார வெற்றி

Posted: 24 Apr 2012 07:20 AM PDT


ஐபிஎல் 5 தொடரின் இன்றைய முதல் போட்டியில் 147 ரன்களை சேஸ் செய்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கேப்டன் ஷேவாக்கின் அதிரடியில் ஆட்டம் மூலம் 16வது ஓவரிலேயே வெற்றிக் கனியை பறித்தது.

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

ஆனால் முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஜெஸ்ஸி ரைடர் ரன் கணக்கை துவக்காமலேயே இர்பான் பதானின் பந்தில் போல்டானார். அடுத்த ஓவரில் கேப்டன் செளரவ் கங்குலி 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு வந்த மனீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா உடன் இணைந்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். மனீஷ் பாண்டே 3 முறை கேட்ச் கொடுத்தும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் கோட்டைவிட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மனீஷ் பாண்டே 56 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 7 பவுண்டரிகளை விளாசி 80 ரன்களை குவித்தார்.

ராபின் உத்தப்பா துவக்கம் முதலே பொறுமையாக ஆடினர். 56 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளை அடித்து 60 ரன்களை சேர்த்தார். இருவரும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 146 ரன்களை குவித்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக இர்பான் பதான், மோனி மார்கல் ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

147 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இந்த நிலையில் ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயவர்த்தனே 18 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

அதன்பிறகு கேப்டன் ஷேவாக் உடன் பீட்டர்சன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். ஷேவாக் அதிரடியை தொடர, பீட்டர்சன் பொறுமையாக ஆடி வந்தார். ஷேவாக் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். 21 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த பீட்டர்சன் 27 ரன்கள் எடுத்த ஜெஸ்ஸி ரைடரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

16வது ஓவரில் வெற்றிப் பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசிய ஷேவாக் அணியின் வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் ஷேவாக் 48 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 10 பவுண்டரிகள் விளாசி 87 ரன்களை குவித்தார்.




காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா செய்ய திட்டம்?

Posted: 24 Apr 2012 07:17 AM PDT


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த தகவல்கள் பின்வருமாறு:

அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இது குறித்து ஆராய்ந்த ஆண்டனி குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, கட்சியை பலப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது

இதனையடுத்து சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று கூடியது. இக்கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர்களாக உள்ள குலாம் நபி ஆசாத், சல்மான் குர்ஷித், வயலார் ரவி மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய உத்தேசித்திருப்பதாகத் தெரிகிறது.

இந்த நால்வரும் தங்களது பதவியை ராஜினமா செய்து விட்டு கட்சிப்பணியில் இறங்க திட்டமிட்டிருப்பதாகவும், இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இருப்பதாகவும் டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்திய மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம்: பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி தர இத்தாலிய அரசு சம்மதம்

Posted: 24 Apr 2012 07:13 AM PDT


கேரள மாநிலம் கொல்லம் கடலில் கடந்த 15-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது அந்த வழியாக வந்த இத்தாலி கப்பல் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
 
இதில் தமிழக மீனவர்கள் அஜிஸ் பிங்கு, ஜெலஸ்டின் ஆகியோர் மீது குண்டு பாய்ந்து இறந்தனர். இதுதொடர்பாக இத்தாலி கப்பல் வீரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
 
மேலும் இத்தாலி கப்பலில் இருந்து மீனவர்களை சுட்டு கொல்ல பயன்படுத்திய துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
 
கைது செய்யப்பட்ட இத்தாலி கப்பல் வீரர்களான லஸ்தோரே மாசிமலியானோ, சால்வத்தோரே ஜிரோன் ஆகிய 2 பேரும் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இத்தாலிய வீரர்களை மீட்கும் முயற்சியில் அந்நாடு பலவித முயற்சிகளை மேற்கொண்டது. பலியானோரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
 
அதனை ஏற்க முதலில் தயக்கம் காட்டிய இத்தாலி அரசு, தற்போது சம்மதம் தெரிவித்திருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இத்தாலி அரசு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி கொடுக்க சம்மதம் தெரிவித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும் இத்தாலிய வீரர்கள் மீதான கேரள அரசின் வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது.



தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக...

Posted: 24 Apr 2012 07:04 AM PDT


தமிழ் திரையுலகினர் கோடையில் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய ஆர்வப்படுவது உண்டு. அப்போது கூட்டம் மற்ற நாட்களைவிட அதிகமாக இருக்கும். வசூலும் எகிறும்.

முந்தைய திரையுலக வரலாற்றை புரட்டினால் முன்னணி நடிகர்களின் படங்கள் கோடையில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியதை அறிய முடியும். ரஜினியின் படையப்பா 1999 ஏப்ரல் 10-ந்தேதியும், கமலின் இந்தியன் 1996 மே 9-ந்தேதியும் ரிலீசானது. இதுபோல் விஜயின் கில்லி, அஜீத்தின் சிட்டிசன், சூர்யாவின் அயன், விக்ரமின் சாமி போன்ற மெகாஹிட் படங்கள் கோடை காலங்களிலேயே ரிலீஸ் செய்யப்பட்டன. கார்த்தியின் பையா படமும் 2010 கோடையில் வந்தது.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு கோடை காலத்தில் பெருமளவு படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இந்த கோடையில் ஏப்ரல், மே மாதங்களில் முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வருகின்றன.

கமலஹாசனின் விசுவரூபம், அஜீத்தின் பில்லா-2, சூர்யாவின் மாற்றான், கார்த்தியின் சகுனி போன்ற படங்களை கோடையில் ரிலீஸ் செய்யப் போவதாகத்தான் படப்பிடிப்பு துவங்கும்போது அறிவித்தனர். ஆனால் அப்படங்கள் வரவில்லை.

பெப்சி தொழிலாளர் போராட்டம் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. எனவே திட்டமிட்டபடி கோடையில் அப்படங்களை வெளியிட முடியவில்லை. ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பயந்தும் சில படங்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எல்., கிரிக்கெட் சினிமாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் ரிலீசான ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிகரமாக ஓடுகிறது.



திரிகோணமலை விநாயகர் கோவிலை இடிக்க இலங்கை அரசு உத்தரவு

Posted: 24 Apr 2012 04:53 AM PDT


திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தம்புள்ளா பகுதியில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசலை கடந்த வாரம் புத்த பிச்சுக்கள் தாக்கினர். இதையடுத்து அந்த பள்ளிவாசல் கட்டிடத்தை இடித்துவிட்டு, வேறு இடத்திற்கு பள்ளிவாசல் மாற்றப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. இதனால் அங்குள்ள முஸ்லிம்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சனை தீருவதற்குள் சாலையை விரிவுபடுத்துவதற்காக திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் 60 ஆண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. போரில் சேதமடைந்த கோவிலை சீரமைத்துள்ளனர். வரும் ஜூன் மாதம் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சாலையை விரிவுபடுத்துவதற்காக அந்த கோவிலை இடிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த உத்தரவால் இந்துக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

போருக்குபு் பிறகு தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு நாடு திரும்பியவுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சென்னையில் இன்று திருமண நாள் கொண்டாடிய அஜித், ஷாலினி

Posted: 24 Apr 2012 04:26 AM PDT


அஜீத், ஷாலினி தம்பதி சென்னையில் இன்று தங்கள் திருமண நாளை கொண்டாடினார்கள். அஜீத் 12 வருடங்களுக்கு முன் 2000 ஏப்ரல் 24-ந் தேதி ஷாலினியை மணந்தார். அப்போது அஜித் கதாநாயகனாக நடித்து வந்தார்.

ஷாலினியும் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தார். இருவரும் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக ஓடுகின்றன. பில்லா, மங்காத்தா ஹிட் படங்கள் வரிசையில் அடுத்து பில்லா-2 வர இருக்கிறது. இவர்களுக்கு 2008-ல் பெண் குழந்தை பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர்.



சிபி சக்கரவர்த்தி புறாவை ரசம் வைத்து சாப்பிட்டிருந்தால்... பண்ருட்டி ராமச்சந்திரன்

Posted: 24 Apr 2012 04:22 AM PDT


போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாற்காலியில் உட்கார வைத்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். இதன் மீது நடந்த விவாதம் விவரம்,

பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டர் கடத்தல், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ. கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. வறுமை, ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால்தான் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தோன்றுகிறார்கள். தமிழகத்தில் வறுமை, துன்பம் ஒருபுறமும், வசதி வாய்ப்பு அதிகரிப்பது என்கிற நிலை மற்றொரு புறம் ஏற்பட்டு ஒரு ஏற்றத்தாழ்வான நிலை இருப்பதால்தான் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா: தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், வறுமை ஏற்றத்தாழ்வு காரணமாக உருவாகிறார்கள் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறினார். அத்தகைய தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் தமிழ்நாட்டில் இல்லை. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் துறையினர் சாதாரண மக்களுக்காக உழைப்பவர்கள். அவர்களுடைய பார்வையில் ஒரு புதிய சமூக கண்ணோட்டம் வேண்டும். சாதாரண மக்கள் காவல் நிலையத்திற்கு செல்வதற்கு அஞ்சும் நிலை வரக் கூடாது. ஏழைகள் காவல் நிலையத்தை கண்டு பயப்படக்கூடாது.

ஜெயலலிதா: காவல் நிலையங்களை கண்டு அஞ்சுகின்ற நிலைமை கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில்தான் இருந்தது. தற்போது அத்தகைய நிலைமை இல்லை. காவல்துறையை மக்கள் நண்பனாகத்தான் கருதுகிறார்கள். போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் காவல் நிலையம் சென்றால் அவர்கள் நன்றாக கவனிக்கப்படுகின்றனர். புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் செல்லும் பொதுமக்களுக்கு மரியாதை செய்து அவர்களை நாற்காலி போட்டு அமர வைத்து புகார்களை பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு இதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 10 இருக்கைகள் போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காவல் நிலையம் வரும் மக்கள் உபசரிக்கப்பட்டு அவர்களிடம் புகார் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 11 மாத கால இந்த ஆட்சியில் காவல் நிலையம் செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்ற நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சரின் நல்ல நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும் அதிலுள்ள சில குறைபாடுகளை எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
உதாரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாத்தியனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற தந்தையும், மகனும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதில் மகன் இறந்து போனதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. எனவே இன்னும் காவல் நிலையத்தை கண்டு பயப்படும் நிலை உள்ளது.

ஜெயலலிதா: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தியை வாசிக்கிறார். பாலமுருகன் என்ற அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என்று தெரியாது. காவல் துறையினர்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இவரிடம் இல்லை. இது பற்றி முறையாக இவர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அந்த மாவட்ட காவல் துறை அதிகாரி மற்றும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருடன் உரிய முறையில் விசாரித்து அரசு உண்மை நிலை குறித்து அறிக்கை வெளியிடும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சருக்கு நன்றி. காவல் நிலையங்களின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றுதான் கூறினேன். சிபி சக்கரவர்த்தி காலத்தில் வல்லூரு ஒன்று புறாவை துரத்த அந்த புறா மன்னன் நமக்கு அடைக்கலம் தருவார் என்ற நம்பிக்கையுடன்தான் அவரிடம் தஞ்சமடைந்தது. அவர் ரசம் வைத்து சாப்பிட்டு விடுவார் என்றால் அங்கு சென்றிருக்குமா?

ஜெயலலிதா: எதிர்க்கட்சி துணைத் தலைவர் புராண காலத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ராமாயணத்தை பற்றி பேசினார். இப்போது சிபி சக்கரவர்த்தி கதை பற்றி சொல்கிறார். தற்போது நவீன காலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் காவல் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: கதையை மட்டும் பார்க்கக் கூடாது. அதன் பின்னால் உள்ள கருத்தையும் பார்க்க வேண்டும். காவல் துறையினரால் பணக்காரர்கள் எவரும் பாதிப்புக்கு ஆளாவதில்லை. சாதாரண ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜெயலலிதா: பணக்காரர்கள் யாரும் காவல் நிலையத்திற்கே செல்வதில்லை. சாதாரண மக்கள்தான் செல்கின்றனர். சாமானியர்களுக்கு காவல் நிலையம் உறுதுணையாக இருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே 4 பேர் மரணம் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா: நாங்கள் ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் ஒரு சில வழக்கில் சாட்சிகளை விசாரணைக்கு அழைத்து சென்றபோது நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம் 4 பேர் மரணமடைந்ததாகத்தான் அரசு தரப்பில் தகவல் உள்ளது. இவர் 11 பேர் மரணம் என்கிறார். அரசுக்கு வராத தகவல் எப்படி இவருக்கு கிடைத்தது. இதற்கு என்ன ஆதாரம்?

காவல் துறையினர் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போதும், வழி காவலின் போதும் எதிர்பாராதவிதமாகவும், நோய் காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பும் போதும் திருடர்கள் என நினைத்து மக்கள் சிலரை தாக்கி அவர்கள் காவல் நிலையம் வரும் போதும் காவல் நிலைய விசாரணைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாலோ அதையெல்லாம் காவல் நிலைய மரணம் என்று சொல்லி விடுகிறார்கள்.

இது தொடர்பாக ஒரு பாரபட்சமற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். அதில் காவல் துறையினர் மீது தவறு இருந்ததாக தெரிய வந்தால் தகுந்த நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. காவல் துறையினரும் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறோம்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: சாலை விபத்துகள் தமிழகத்தில் அதிகம் நடைபெறுகிறது. உயிரிழப்பும் இங்கு அதிக அளவில் ஏற்படுகிறது.

ஜெயலலிதா: தமிழகத்தில் வாகன எண்ணிக்கைகள்தான் அதிகரித்துள்ளது. சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறைந்த அளவில்தான் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு இந்த விவாதம் நடைபெற்றது.

மேலும் முதல்வர் கூறுகையில், போலீசார் ஓய்வு பெற்ற பிறகு சொந்த வீட்டில் வசிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தர்மபுரியில் ஆசிரியரை தாக்கிய டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



ரஜினியே கேட்டும் கோச்சடையானை வேண்டாம் என்று சொன்ன ஏவிஎம்?

Posted: 24 Apr 2012 03:54 AM PDT


மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார். நடிப்பதிலும் அந்தப் படத்தின் தொழில் நுட்பம் குறித்த விஷயங்களிலும் மிக ஆர்வமாகப் பங்கெடுத்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு, ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவில்லையாம்.

அது, இந்தப் படத்தை சௌந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பது!

காரணம் சுல்தானில் சௌந்தர்யா அண்ட் கோ செய்த குழப்படி & குளறுபடியால், தேவையின்றி நீதிமன்ற வழக்கு, பத்திரிகைகளில் தாறுமாறான செய்திகள் என ரஜினிக்கு மனவருத்தம் அடையும் நிலையை ஏற்படுத்தின. கோவா தயாரிப்பிலும் சௌந்தர்யா கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!

அதனால் 'கோச்சடையான்' படத்தினை எப்படியாவது கைமாற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம்.

இதில் ஒரு முயற்சியாக தனக்கு நெருக்கமான ஏவிஎம் சரவணனிடம் தனிப்பட்ட முறையில் கோச்சடையான் பற்றிப் பேசியுள்ளார் ரஜினி.

கேரளா ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் சரவணனைச் சந்தித்த ரஜினி, கோச்சடையான் படத்தயாரிப்பை அப்படியே கை மாற்றிவிட விரும்புவதாகக் கூறினாராம்.

ஆனால் சரவணன் சினிமா தயாரிக்கும் அல்லது வேறு படத்தை வாங்கி விநியோகம் பண்ணும் நிலையில் இல்லை. "சினிமா நிலவரம் சரியில்லை ரஜினி. அதனால் சினிமா தயாரிக்கும் மனநிலையில நாங்கள் இல்லை. நீங்களே வலியவந்து கேட்டும் என்னால் செய்ய முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... ஸாரி" என்றாராம் சரவணன்.

இதே பயத்தில்தான் அயன் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்று, பின் வருத்தப்பட்டார்கள் ஏவிஎம்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சினிமா என்ற குதிரை யாரை குப்புறத்தள்ளுமோ என்ற பயம்தான்!





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™