Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தனி கட்சி திட்டம் இல்லை: பா.ஜ.,வில் இணைகிறார் ரஜினி?

Posted: 07 Oct 2017 07:11 AM PDT

தனிக்கட்சி துவக்கும் எண்ணம், தனக்கு இல்லை என்பதை, சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில், சூசகமாக குறிப்பிட்ட நடிகர் ரஜினி, பா.ஜ.,வில் இணைவது குறித்து, விரைவில் ரசிகர்களின் கருத்துகளை கேட்டறிய திட்டமிட்டுள்ளார்.

கபாலி படப்பிடிப்பு துவக்குவதற்கு முன், ரசிகர்களை ரஜினி சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், 'என் வாழ்க்கையில், அனைத்தையும் தீர்மானிப்பது, ஆண்டவன் தான்; அந்த வகையில், நான் அரசியலுக்கு வருவதும், ஆண்டவன் கையில் தான் உள்ளது.
பதிலடி
'இன்று நான் நடிகன்; ஆண்டவன், நாளை என்னவாக தீர்மானிக்கிறாரோ, அதில், நியாயமான, உண்மையான தர்மத்துடன் ...

ஆதரவு சரிவதால் தினகரன், 'அப்செட்!'

Posted: 07 Oct 2017 07:20 AM PDT

தினகரன், பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி தவித்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்களை, முதல்வர் தரப்பினர் சத்தமின்றி, தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.

ஜெ., மறைந்த பின், சசிகலா குடும்பத்தினர், அ.தி.மு.க.,வை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்; ஆட்சியையும் கொண்டு வர முயற்சித்தனர்.
உள்ளதும் போச்சு!
கட்சி, ஆட்சி இரண்டையும் எளிதாக வசபடுத்தி விடலாம்; அரசியலில், அசைக்க முடியாத சக்தியாக திகழலாம் என, மனக்கோட்டை கட்டினர்.ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. முதலில், ஆட்சி கையை விட்டு போனது. பிளவுபட்ட, அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், ...

5,800 போலி நிறுவனங்களிடம் மத்திய அரசு... விசாரணை! 'மெகா' பண பரிவர்த்தனை மோசடி அம்பலம்

Posted: 07 Oct 2017 07:33 AM PDT

புதுடில்லி, மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில், பல ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உயுள்ளது.

இந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.கடந்த ஆண்டு, நவ., 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பிரதமர், நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதும், அன்றிரவு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்கவும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெளிக் ...

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி: தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.220 ஆகிறது

Posted: 07 Oct 2017 07:52 AM PDT

சென்னை, சினிமா டிக்கெட் கட்டணத்தை, 25 சதவீதம் உயர்த்த,தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஜி.எஸ்.டி., மற்றும், கேளிக்கை வரி என, இரட்டை வரி விதிக்கப் பட்டதற்கு, எதிர்ப்பு கிளம்பியதால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, தியேட்டர் உரிமையாளர்களுக்கு, அரசு சலுகை வழங்கி உள்ளது. இதனால், தியேட்டர்களில், அதிகபட்ச டிக்கெட் விலை, 220 ரூபாயாகிறது.

சினிமா டிக்கெட்டிற்கு, சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., 28 சதவீதம், கேளிக்கை வரி, 10 சதவீதம் என, இரட்டை வரி விதிக்கப் பட்டது. இதனால், பாதிக்கபட்ட தியேட்டர் உரிமையாளர்கள், 'இரட்டை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் ...

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க மத்திய அரசு... அதிரடி! நாடு முழுவதும் மக்களை சந்திக்க அமைச்சர்கள் திட்டம்

Posted: 07 Oct 2017 08:23 AM PDT

புதுடில்லி, நாட்டின் பொருளாதாரம், அரசின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதை, மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை அம்பலப்படுத்தும் நோக்கிலும், மக்களை சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி, மக்களை சந்திக்கும் பணியில், அமைச்சர்கள், பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட உள்ளனர்.

ஏப்., - ஜூன் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 5.7 சதவீதமாக சரிந்தது. முந்தைய காலாண்டில், இது, 6.1 சதவீதமாக இருந்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்ததால், நாட்டின் பல்வேறு ...

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற விவகாரம் தினகரன் பேசியது உண்மை: டில்லி போலீஸ் உறுதி

Posted: 07 Oct 2017 10:17 AM PDT

சென்னை, இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இடைத்தரகர், சுகேஷுடன் நடந்த, அலைபேசி உரையாடல்களில் இருப்பது, தினகரனின் குரல் தான் என்பதை, டில்லி குற்றவியல் போலீசார் உறுதி செய்துள்ளனர்.இதையடுத்து, தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. அடுத்தடுத்த நெருக்கடியால், தினகரன் ஆதரவு வட்டம், ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக,தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி குற்றவியல் ...

'கெயில்' திட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை

Posted: 07 Oct 2017 10:26 AM PDT

சென்னை, 'மீண்டும் கெயில் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய,- மாநில அரசுகள் முயற்சித்தால், விவசாயிகளுடன் இணைந்து, தி.மு.க., போராடும்' என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், விளை நிலங்களுக்கு இடையில், 'கெயில்' நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி,
கிருஷ்ணகிரிஆகிய, ஏழு மாவட்டங்களில், விளைநிலங்களின் வழியாக, 310 கிலோ மீட்டர் துாரத்துக்கு, 20 மீட்டர் அகலத்தில் செல்லும் எரிவாயு குழாய்கள், சிறு- விவசாயிகளின் ...

சசிகலா நடவடிக்கைகளை உளவுத்துறையினர்...கண்காணிப்பு !

Posted: 07 Oct 2017 10:38 AM PDT

ஐந்து நாள் பரோலில் வந்துள்ள, சசிகலாவின் நடவடிக்கைகளை, மத்திய, மாநில உளவுத்துறையினர், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சிறை அதிகாரிகள் விதித்துள்ள நிபந்தனைகளை அவர் மீறினால், பரோல் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சசிகலாவை சந்தித்தால், பதவி பறிப்பு உட்பட, பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தால், அவரின் ஆதரவாளர்கள் யாரும் சந்திக்கவில்லை. இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கணவர் நடராஜனை சசிகலா சந்தித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்ரவரி ...

பிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு

Posted: 07 Oct 2017 10:43 AM PDT

பனாஜி, 'பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்' என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பனாஜியில் மாநில கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறியதாவது:மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பள்ளிகளில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை கண்டிப்பாக வைத்திருக்கும் படி உத்தர விட்டுள்ளது. இவர்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ...

பாக்.,கிற்கு அமெரிக்கா கடும் நெருக்கடி அமைச்சர்களை அனுப்ப டிரம்ப் முடிவு

Posted: 07 Oct 2017 11:56 AM PDT

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தக் கோரி, பாகிஸ்தானுக்கு, அமைச்சர்களை அனுப்ப, அமெரிக்க அதிபர், டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
பயங்கரவாதத்தையும், பயங்கரவாத அமைப்புகளையும், பாகிஸ்தான் ஆதரித்து வருவதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா மற்றும் ஆப்கன் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு, பாகிஸ்தான் ஆதரவு தருவது, அதிபர் டிரம்ப்க்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில், டிரம்ப் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு, ஆண்டுதோறும், கோடி கணக்கான ...

'அடுத்த தலைவர் என் மகன் தான்' ராம்விலாஸ் பஸ்வான் அறிவிப்பு

Posted: 07 Oct 2017 12:52 PM PDT

பாட்னா: ''எனக்கு பின், என் மகன் சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி தலைவராக பொறுப்பேற்பார்,'' என, அக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான, ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, லோக் ஜனசக்தி கட்சியின் இரண்டு நாள் மாநாடு, நாளந்தாவில் நேற்று துவங்கியது.
மாநாட்டை துவக்கி வைத்து, கட்சியின் தலைவரும், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சருமான, ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:
லோக் ஜனசக்தி கட்சியின் ...

ரகுராம் ராஜனுக்கு நோபல்? அமெரிக்க நிறுவனம் கணிப்பு!

Posted: 07 Oct 2017 01:21 PM PDT

பிலடெல்பியா, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக, தனியார் ஆய்வு நிறுவனம் தயாரித்த பட்டியலில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'கிளாரிவேட் அனலிடிக்ஸ்' நிறுவனம், அறிவியல், கல்வி, காப்புரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில், ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிறுவனம், நடப்பாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை தயாரித்துள்ளது; இதில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் பெயர் ...

என்.ஐ.ஏ., விசாரணைக்கு கேரளா கடும் எதிர்ப்பு

Posted: 07 Oct 2017 01:52 PM PDT

புதுடில்லி: 'கேரளாவில், ஹிந்து பெண், முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரணை நடத்துவதற்கான அவசியம் எழவில்லை' என, அம்மாநில அரசு கூறியுள்ளது.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், ஹிந்து பெண் ஒருவர், சமீபத்தில், முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவரை, காதலித்து திருமணம் செய்தார். பின், முஸ்லிமாக மதம் மாறிய அந்த பெண், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அது போன்று பல பெண்கள், முஸ்லிம்களின், 'லவ் ஜிஹாத்'துக்கு இரையாகி வருவதாகவும் புகார் ...

பெட்ரோல் 'பங்க்'குகள் அக்.13ல் ஸ்டிரைக்

Posted: 07 Oct 2017 02:25 PM PDT

சென்னை: பெட்ரோல் 'பங்க்'குகள், வரும், 13ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளன.
மத்திய அரசு, தன் வசம் இருந்த, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை, சில ஆண்டுகளுக்கு முன், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குவழங்கின. அவை, மாதத்திற்கு,இரு முறை, எரிபொருள் விலையை மாற்றின. ஜூன், 16 முதல், தினமும் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனால், முன் எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.இந்நிலையில், தினசரி விலை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™