Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த... தயார்!

Posted: 05 Oct 2017 08:14 AM PDT

நேரம், பண விரயத்தை தவிர்க்கும் வகையில், லோக்சபா மற்றும் மாநிலசட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. செப்., 2018ல், இதை சாத்தியமாக்க தயாராக இருப்பதாக, தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.இதனால், விரைவில், லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல், ஒரே நேரத்தில் நடத்தப்படுவதற்கானவாய்ப்பு அதிகரித்துள்ளது.

லோக்சபா மற்றும் சட்ட சபை தேர்தல்கள், தனித் தனியாக நடத்தப்படுவதால், மக்களின் வரிப் பணம், கோடிக்கணக்கில் செலவாகிறது; மேலும், தேர்தல் நடத்தப்படுவதற்கான முன் னேற்பாடுகளால்,கால விரயமும் ஏற்படுகிறது. ...

அமித் ஷா பயணம் ரத்து: பா.ஜ., 'டென்ஷன்'

Posted: 05 Oct 2017 09:43 AM PDT

திருவனந்தபுரம்: கேரள அரசைக் கண்டித்து, பா.ஜ., நடத்தி வரும் பாத யாத்திரையில் பங்கேற்பதாக இருந்த, கட்சியின் தேசியத் தலைவர், அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுஉள்ளதால், கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.

யாத்திரை
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயகமுன்னணி கூட்டணி அரசு உள்ளது.மாநிலத்தில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து, 'மக்கள் பாதுகாப்பு யாத்திரை' என்ற போராட்டத்தை, பா.ஜ., துவக்கி உள்ளது.மொத்தம், 15 நாட்களில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொள்ளும் இந்த ...

அடி மேல் அடி விழுவதால் சசிகலா, தினகரன் தரப்பு... அதிர்ச்சி!

Posted: 05 Oct 2017 09:58 AM PDT

ஆதரவு அளித்த, எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு, ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தவிடுபொடி, சின்னம் விவகாரத்தை இழுத்தடிக்க போட்ட திட்டம் தோல்வி என, அடி மேல் அடி விழுவதால், சசிகலா, தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய, தேர்தல் கமிஷன், இன்று விசாரணையை துவக்குகிறது. இதற்காக, அ.தி.மு.க., அணிகள், டில்லி சென்றுள்ளன.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது. அ.தி.மு.க., என்ற பெயரை பயன் படுத்தவும், தடை விதிக்கப்பட்டது. இழந்த சின்னத்தையும், கட்சி பெயரையும் ...

சீனா, பாக்., சவாலை முறியடிக்க தயார் நிலையில் விமான படை

Posted: 05 Oct 2017 10:03 AM PDT

புதுடில்லி:''எல்லையில், சீனா, பாகிஸ்தான் நாடுகளின் சவால்களை எதிர்கொள்ள, விமானப் படை தயாராக உள்ளது,'' என, விமானப் படை தளபதி, பி.எஸ்.தனோவா கூறினார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. விமானபடை தினத்தை முன்னிட்டு, டில்லியில் நிருபர்களிடம், விமானப் படை தளபதி, பி.எஸ்.தனோவா கூறியதாவது:இந்திய விமானப் படைக்கு, 42 போர் விமானங்கள் தேவை. இப்போது,33 விமானங் கள் உள்ளன. 2032க்குள், இந்த தேவை நிறை வேறி விடும். வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் போது, போர் விமானங்கள் விபத்துக்கு உள்ளாவது தான் கவலைஅளிக்கிறது; இதை குறைக்க, ...

'டெங்கு' மரணம்: ஸ்டாலின் சந்தேகம்

Posted: 05 Oct 2017 10:31 AM PDT

சென்னை:''டெங்கு காய்ச்சலுக்கு, தமிழகத்தில் தினமும், 10 பேர் வீதம், இதுவரை, 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.சென்னை, கொளத்துார் தொகுதியில், 'டெங்கு' விழிப்புணர்வு பணியை, நேற்று, ஸ்டாலின் பார்வையிட்டார்.பின், அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 'டெங்கு'வால் பாதிக்கபட்டு உள்ள தாக, சுகாதார துறை செயலர் கூறி இருக்கிறார். அவர்,உண்மையை கூறியதற்கு நன்றி. ஆனால், டெங்கு காய்ச்சலுக்கு, இதுவரை, 26 பேர் பலி ஆனதாக, அரசு பொய்யான தகவலை தெரிவித்து இருக்கிறது. 'டெங்கு'வால் தினமும், 10 பேர் ...

மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Posted: 05 Oct 2017 10:38 AM PDT

ஆமதாபாத்:'குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், அப்போதைய முதல்வர், நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீதான சதி குற்றச்சாட்டு களை விசாரிக்க வேண்டும்' என்ற வழக்கை, குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குஜராத்தில், 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு இடங் களில் வன்முறை வெடித்தது. வன்முறையில், காங்., முன்னாள், எம்.பி., ஈஷான் ஜாப்ரி உயிரிழந்தார். அவர் மனைவி ஜாகியா ஜாப்ரி, தன்னார்வலர் தீஸ்தா செதல்வாட் ஆகியோர், 'வன்முறைக்கு காரணமான சதி குறித்து விசாரிக்க வேண்டும்' என, வழக்கு தொடர்ந்தனர்.அப்போது,குஜராத் முதல்வராக தற்போதைய பிரதமர் ...

நடராஜனுக்காக மனித உரிமை மீறல் தானாக கையில் எடுக்குமா நீதிமன்றம்?

Posted: 05 Oct 2017 10:42 AM PDT

திருச்சி:தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறலாக, நடராஜன் உறுப்பு மாற்று ஆப்பரேஷனுக்காக, குற்றுயிராக கிடந்த இளைஞர் உடல், விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டதாக, கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என, மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பழுதடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ...

சமாஜ்வாதி தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்வு

Posted: 05 Oct 2017 10:52 AM PDT

ஆக்ரா:சமாஜ்வாதியின் தேசிய தலைவராக, அகிலேஷ் யாதவ், போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 2022 வரை, அவர், தலைவர் பொறுப்பு வகிப்பார்.

உ.பி.,யில், பா.ஜ., வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்தாண்டு துவக்கத்தில் நடந்த, மாநில சட்டசபை தேர்தலில், அப்போது, ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்ததை அடுத்து, சமாஜ்வாதியில், ஏற்கனவே ஏற்பட்ட விரிசல், மேலும் வலுத்தது. கட்சியின் நிறுவனரும், தந்தையுமான, முலாயம் சிங்மற்றும் அவரது சகோதரர், சிவ்பால் ...

சும்மா கிடைத்த ரூ.3,280 கோடியை கடனாக சுமக்குது மின் வாரியம்

Posted: 05 Oct 2017 11:06 AM PDT

மின் திட்டப் பணிகளை, குறித்த காலத்தில், மின் வாரியம் முடிக்காததால், மத்திய அரசு ஒதுக்கிய, 3,280 கோடி ரூபாய் நிதி, திரும்ப செலுத்தக்கூடிய கடனாக மாறி உள்ளது.

மத்திய அரசு, ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., என்ற, திருத்திஅமைக்கப்பட்ட விரைவு மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தை, 2008ல் துவக்கியது. இத்திட்டம், இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி, 'டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட மின் சாதனங்களில், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பொருத்தி, மின் இழப்பை கண்காணிப்பது; இரண்டாவது, புதிய துணை மின் நிலையம், வழித்தடம் அமைத்து, சீராக மின் சப்ளை செய்வது.திருத்திய திட்ட பணிகளை, மின் ...

அனைத்து வகுப்புகளிலும் பயணம்: ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted: 05 Oct 2017 12:13 PM PDT

புதுடில்லி: 'ரயில் பயணியரின் குறைகளை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் பயணம் செய்ய வேண்டும்' என, ரயில்வே உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில்வேயின் பல்வேறு சேவைகளின் தரம் குறித்த புகார்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ரயிலில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை; படுக்கை சுத்தமாக இல்லை என்பது போன்ற புகார்கள், அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே வாரிய ...

எல்லையில் கண்காணிப்பு

Posted: 05 Oct 2017 01:07 PM PDT

கோல்கட்டா:ரோஹிங்யா முஸ்லிம்கள், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதை தடுக்க, வங்கதேச எல்லையில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவத்தின் தாக்குதலையடுத்து, அங்கு வசித்த ரோஹிங்யா முஸ்லிம்கள், இந்தியா, வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ரோஹிங்யா முஸ்லிம்கள் குடியேறியுள்ளது, சட்ட விரோதம் என தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி, மியான்மர் அரசை வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில், மேற்கு வங்கத்தில், வங்க தேச எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மையங்களை, எல்லை ...

டோக்லாமில் மீண்டும் சீனா அடாவடி: சாலை பணி மேற்கொள்வதாக புகார்

Posted: 05 Oct 2017 02:07 PM PDT

புதுடில்லி: டோக்லாம் எல்லையில், சீனா சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை
சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லை பகுதியை பெய்ஜிங் மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இதே டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயற்சித்த போது முயன்றபோது இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ...

'சென்னையிலிருந்து பதில் வரவில்லை': கர்நாடக சிறைத்துறை விளக்கம்

Posted: 05 Oct 2017 03:11 PM PDT

பெங்களூரு: ''சசிகலா தாக்கல் செய்த, 'பரோல்' மனு தொடர்பாக, சென்னை நகர போலீஸ்கமிஷனரிடமிருந்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வரவில்லை,'' என, பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர், சோமசேகர் தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சை :
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், சசிகலா. இவரின் கணவர் நடராஜன், கல்லீரல், சிறுநீரக செயலிழப்பால், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக, 15 நாட்கள், பரோல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™