Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கேரள அரசை கண்டித்து பேரணி : உ.பி., முதல்வர் யோகி பங்கேற்பு

Posted: 04 Oct 2017 07:46 AM PDT

கீசேரி: கேரளாவில்,பா.ஜ.,மற்றும், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மீதான வன்முறைகளை கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில், உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
'கேரளாவில், பா.ஜ., மற்றும், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, 15 நாட்களுக்கு பேரணி நடத்தப்படும். இதில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்பர்' என, கட்சியின் தேசியத் தலைவர், அமித் ஷா அறிவித்தார். இந்நிலையில், கன்னுார் மாவட்டம் கீசேரியில் நடந்த யாத்திரையில், உ. பி., முதல்வரும்,
...

குடிசை பகுதிகளில் மின் திருட்டை தடுக்க... புதுமை!

Posted: 04 Oct 2017 08:42 AM PDT

புதுடில்லி: குடிசைப் பகுதிகளில், மின் திருட்டு, மின்சாரத்துக்கான கட்டணத்தை செலுத்தாதது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், டில்லியில் உள்ள மின் வினியோக நிறுவனங்கள், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே அடங்கிய, 'அபாஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.

இந்த அபார திட்டத்தால், நிறுவனங்களின் இழப்பு குறைந்ததுடன், வருவாயும் உயர்ந்துள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. டில்லியில் மின் வினியோகத்தில்,டில்லி மின்சார வாரியத்துடன் இணைந்து, பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ...

மறு உத்தரவு வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த... தடை!

Posted: 04 Oct 2017 10:13 AM PDT

சென்னை:சசிகலா ஆதரவு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப் பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை துவங்கியது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மூன்று மணி நேரத்துக்கும் மேல் வாதாடிய பின் விசாரணை வரும் ௯ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும், ௧௮ தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தவும் தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சசிகலா ஆதரவு ...

பிறந்த நாளில் புதுக்கட்சியா? சென்னையில் கமல் ஆலோசனை

Posted: 04 Oct 2017 10:47 AM PDT

சென்னை:அரசியல் பிரவேசம் குறித்து, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன், நடிகர் கமல், சென்னையில்ஆலோசனை நடத்தினார்.

மக்கள் பிரச்னைகளில் திடீர் ஆர்வம் காட்டும் கமல், மத்திய, மாநில அரசுகளை குற்றம் சாட்டி வருகிறார்; விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.சமீபத்தில், சென்னையில் நடந்த, சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில், கமலின் முதல்வர் ஆசையை, ரஜினி கிண்டல் அடித்தார். 'அரசியலுக்கு சினிமா புகழ் மட்டும் போதாது; பொதுமக்களின் ஆதரவும் அவசியம்' என, கமல் முன்னிலையில், ரஜினி குத்தி காட்டினார்.இந்நிலையில் நேற்று, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் ...

மாநில பாதுகாப்பு கமிஷன் அமைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 04 Oct 2017 10:49 AM PDT

சென்னை:'காவல் துறை நிர்வாகத்தின் சீரழிவை தடுத்து நிறுத்த, மாநில பாதுகாப்பு கமிஷனை, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் உடனே அமைக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறை சீரழிந்து நிற்கிறது.சட்டம் - ஒழுங்கு பொறுப்பு, டி.ஜி.பி., யாக, இரு ஆண்டுகள் நியமித்து, பின், அவர் ஓய்வுபெறும் நேரத்தில் பணி நீட்டிப்பு அளித்து, தேர்தல் முறைகேடுகளுக்கும், எதிர் க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடவும் பயன் படுத்தும் கேடு கெட்ட நிர்வாகத்தை, அ.தி.மு.க., அரசு செய்து வருகிறது.பணிபாதுகாப்பு பெறும், ...

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தினகரன் மனு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

Posted: 04 Oct 2017 10:54 AM PDT

மதுரை:அ.தி.மு.க., நிர்வாகி களில் பெரும் பான்மை உள்ள அணிக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, தேர்தல் கமிஷன் முடிவெடுக்க, 2018 பிப்.,வரை கால நீட்டிப்பு வழங்க உத்தரவிடக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

திருச்செந்துார் ராம்குமார் ஆதித்யன், 'அ.தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,-எம்.பி.,க்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். பெரும்பான்மை உள்ள அணிக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய, இந்திய தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என ...

ஜி.எஸ்.டி.,யை பயன்படுத்தி மோசடி மத்திய அரசிடம் குவியும் புகார்கள்

Posted: 04 Oct 2017 11:04 AM PDT

புதுடில்லி:ஜி.எஸ்.டி.,யை பயன்படுத்தி, பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பது குறித்து, மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.

மத்திய அரசின், நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சேவை வரி விதிப்பு
ஜூலை, 1ம் தேதியிலிருந்து, நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. அதன்பின், பொருட்கள் விலை தொடர்பாக, செப்., 30 வரை, நாடு முழுவதுமிருந்து, 717 புகார்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில் இருந்து,143 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஒடிசாவில் இருந்து, 125, ...

'செக்ஸ்' சாமியாருக்கு ஐ.நா., அழைப்பு!

Posted: 04 Oct 2017 12:50 PM PDT

புதுடில்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சாமியார், குர்மீத் ராம் ரஹீம் சிங், போலீசார் கைது செய்துள்ள, அவனது வளர்ப்பு மகள், ஹனிபிரீத் ஆகியோரை, உலக கழிப்பறை தினம் குறித்த பிரசாரத்தில் ஈடுபடும்படி, ஐ.நா., சபை அழைப்பு விடுத்துள்ளது.ஐ.நா., சபை சார்பில், நவ., 19ல், சர்வதேச கழிப்பறை தினம் பின்பற்றப்படுகிறது. இதையொட்டி, கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவம் குறித்து, மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபடும்படி, 'டுவிட்டர்' சமூக வலைதளம் மூலம், ஐ.நா., சபை அழைப்பு விடுக்கிறது.

டுவிட்டரில், ஐ.நா., சபையை பின்தொடரும், குர்மீத் ராம் ரஹீம், அவனது வளர்ப்பு மகள், ...

'மீண்டு வருவோம்': மோடி நம்பிக்கை

Posted: 04 Oct 2017 12:52 PM PDT

புதுடில்லி:"நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் குறைந்தது உண்மைதான்; ஆனால், அதிலிருந் மீண்டு வருவதற்கான உறுதியுடன் உள்ளோம்," என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

கம்பெனி செகரெட்டரி சங்க பொன்விழாவை ஒட்டி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பா.ஜ., அரசு அமைந்த பின்,3ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவீதமாக இருந்தது . நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி விகிதம், 5.7 சதவீதமாக குறைந்துள்ளதை ஒப்புக் கொள்கிறோம்; ஆனால் மீண்டும் வளர்ச்சிப் ...

பரோல் கேட்டு சசிகலா மீண்டும் மனு தாக்கல்

Posted: 04 Oct 2017 01:12 PM PDT

பெங்களூரு:'பரோல்' வழங்கக் கோரி, போதிய ஆவணங்களுடன், இரண்டாவது முறையாக, சசிகலா மனு தாக்கல் செய்துள்ளதையடுத்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்கக் கோரி, சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு, கர்நாடக சிறைத்துறை, நேற்று கடிதம் எழுதியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரது கணவர் நடராஜன், 74, கல்லீரல், சிறுநீரக செயலிழப்பால் சென்னைமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை மோசமடைந்து உள்ளதாக, மருத்துவமனை ...

'நிர்பயா' நிதி இழப்பீடு; மாநில அரசுகளுக்கு சூடு

Posted: 04 Oct 2017 03:16 PM PDT

புதுடில்லி : ‛நிர்பயா நிதி திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் ஒத்துழைப்பதில்லை' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

டில்லியில், 2012ல், மருத்துவ மாணவி ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த, 'நிர்பயா நிதி' என்ற பெயரில், மத்திய அரசு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.'நிர்பயா நிதி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுகுறித்து பதிலளிக்கும்படி, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™