Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ரெயில் வரும்போது ‘செல்பி’ எடுக்க முயன்ற மூன்று சிறார்கள் உயிரிழப்பு

Posted: 04 Oct 2017 10:14 AM PDT

பெங்களூரு, பெங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பிதாதியில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயில் வரும்போது சிறார்கள் செல்பி எடுக்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அவர்கள் மீது ரெயில் மோதி சென்றது. இதில் மூன்று சிறுவர்களும் உடல் சிதைந்து பலியாகினர். ரெயிலுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்து உள்ள சிறார்கள், ரெயில் எவ்வளது அருகில் வருகிறது என்பதை கவனிக்காமல் இருந்து உள்ளனர் என கூறப் படுகிறது. சம்பவம் காலை 9:30 மணியிலிருந்து 10 மணிக்குள் நடந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு ...

உயர்ந்தவர்...! - கவிதை

Posted: 04 Oct 2017 10:12 AM PDT


-
ஏழுமலை மேல்
வீற்றிருக்கும்
பெருமாளை விட
சாலை ஓவியனுக்கு
சில சில்லறை
சம்பாதித்துத் தரும்
நாலடி ஓவியமான
பெருமாளே
மிக உயர்ந்தவராய்
இருக்கிறார்!!
-
--------------------------
கு.வைரச்சந்திரன்
குமுதம்
-
-

உயிர்க்கடிகாரம்

Posted: 04 Oct 2017 10:11 AM PDT

மருத்துவத்திற்கு நோபல் பரிசு 2017 நேற்று அறிவிக்கப்பட்டது .கிர்கார்டியன் ரிதம் ( உயிர்க்கடிகாரம் ) முறையில் மூலக்கூறுகள் இயக்கம் தொடர்பான ஆய்வுகளை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி. ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்குப் பாராட்டுகள்கள் ! அவர்கள் ஆய்வில் என்ன நிறுவினார்கள் என்பது நமக்கு இப்போது தெரியவராது . ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாகவே இந்த உயிர்க்கடிகாரம் பற்றி நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர் .அதை ஒட்டியே நமது வாழ்வியல் ...

ஏனென்றால் நீ ஆண்! (பொலீவியப் பாடல்)

Posted: 04 Oct 2017 10:08 AM PDT

ஏனென்றால் நீ ஆண்! (பொலீவியப் பாடல்) அவள் கடினப்பட்டு வேலை பார்க்கிறாள்! ஏனென்றால்- அவள் கணவனின் சோம்பலை – அவள் ஈடுகட்ட வேண்டியுள்ளது! வீட்டில் அவன் ஒரு- திறமை எதுவும் இல்லாதவன்! வெற்றுப் பந்தாக்காரன்! ஆனாலும் – வீட்டில் அவன்தான் தலைவன்! – ஏனென்றால் அவன் ஆண்! ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது என்றால்- அதை யாரோ ஆள்தான் எழுதியிருக்கவேண்டும்! அவள் அதை ஒரு தாளில் பதிவுதான் செய்தாள்! ஆனால்- எழுதியவர் இன்னார் என்று தெரியாதபோது- அதை அவன்தான் எழுதினான் என்று ஏன் சொல்கிறார்கள்? ஏனென்றால் ...

சொந்தத்தில் பெண் (ஒரு பக்கக் கதை)

Posted: 04 Oct 2017 09:43 AM PDT

சொந்தத்தில் பெண் (ஒரு பக்கக் கதை) ரூபாய் நோட்டுகளில் சில செல்லாது அறிவித்தார்கள்! அந்த நேரத்தில் கணேசனுக்கு வரவேண்டிய பணம் எதுவும் வரவில்லை! சுமார் பத்து லட்சத்துக்கிட்டே முடங்கிவிட்டது ! ஷாக் ஆனான் ! அவ்வளவு தொகை இழப்பைக் கண்டு நொறுங்கிவிட்டான் ! வீட்டில் சில நாட்கள் யாரிடமும் பேசவில்லை! அப்புறம் பார்த்தால் கட்டிலில் இருந்து எழவே இல்லை ! பேச்சும் வரவில்லை! கண், கை, கால் … ம்ஹூம்! எதுவும் அசையவில்லை! மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்! 'கோமா' என்று சொல்லிவிட்டார்கள்! கட்டிய இளம் ...

வான் மழைப் போற்றுதும் !

Posted: 04 Oct 2017 05:50 AM PDT

வான் மழைப் போற்றுதும் ! நேற்று நான் சென்னைமருத்துவ மணைக்குசென்னை வந்திருந்தேன் .கிளம்பும் போது இரவு மணி 8 ஆகிவிட்டது .எங்களைத் துரத்திக்கொண்டே பலத்த மழையும் கூடவே வந்தது .சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது.என அறிந்தோம் இன்று இரவு சென்னையில் மழை பெய்யும் என வானிலை துறை முன்னெச்சரிக்கை செய்திருந்த நிலையில், அதை மெய்ப்பிப்பதை போலவே இன்று இரவு 9 மணியளவில் நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது.என அறிந்தோம் தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், பல்லாவரம், அம்பத்தூர், ஆவடி, மதுரவயல், ...

காற்றில் கரைந்த கனவு

Posted: 04 Oct 2017 03:22 AM PDT

காற்றில் கரைந்த கனவு ஏழை எம்பதியே எமன் கூட போனவளே மூச்சு முட்ட மூட்டைத்தூக்கி முக்காத்துட்டு சேத்த தகப்பன் முன்னே மூச்சுக்காத்த தொலைச்சவளே நெஞ்சு பதறுதே கண்முழி ரெண்டும் நெலகுத்தி நிக்குதே நீ மாண்டு போனனு சொன்ன சொல்ல மனசு கேக்க மறுக்குதே எந்திருச்சி வந்திரு தாயி எம் மகளே ராசாத்தி என் மூச்சிக்காத்தில் பொறந்த மக மூச்சத் தொலைச்சிப் போனேயே பொம்ளையா பொறந்திருந்தா பொரண்டு அழுதிருப்பேன் ஒப்பாாி சொல்லி அழுது ஓச்சும் போயிருப்பேன் ஆம்பளயா பொறந்திட்டேனே மகளே ஆருட்ட நான் சொல்லி ...

காத்திருப்போர் பட்டியலில் இன்னொரு முதல்வர்!

Posted: 03 Oct 2017 08:22 PM PDT

கனவு
-

-
நூறு நாள் ஓடியது
முதல் படம்
காத்திருப்போர் பட்டியலில்
இன்னொரு முதல்வர்!
-
------------------------
ஜி.ஆர் விஜய்
குமுதம் -

பெருமூச்சு - கவிதை

Posted: 03 Oct 2017 06:59 PM PDT

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்களே அதிகம்

Posted: 03 Oct 2017 05:24 PM PDT

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். மொத்த வாக்காளர்கள், பெரிய தொகுதி , சிறிய தொகுதி உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அவர் வெளியிட்டார். தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டம் முழுதும் மாவட்ட ஆட்சியர்களால் அந்தந்த மாவட்ட வாக்காளர்கள், தொகுதி பற்றிய விபரங்கள் இன்று (அக்.3-ம் தேதி) வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதுமான வரைவு வாக்காளர் பட்டியல், தொகுதிகளில் பெரியது சிறியது போன்ற விபரங்களை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் ...

புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

Posted: 03 Oct 2017 05:18 PM PDT

தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதம் உள்ளாட்சி கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்று கடந்த மாதம் 27-ம் தேதி அன்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், டிக்கெட் கட்டணத்தை முறைப் படுத்தவும், கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்யவும் வலியுறுத்தி, அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்த் ...

மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது

Posted: 03 Oct 2017 05:12 PM PDT

புதுடெல்லி, கடந்த நவம்பர் மாதம், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஜூன் 30–ந் தேதிவரையும், பிறகு செப்டம்பர் 30–ந் தேதிவரையும் சேவை கட்டண விலக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சேவை கட்டண விலக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை ரெயில்வே வாரியம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை கட்டண விலக்கு காரணமாக, ரெயில்வேக்கு இதுவரை ...

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்

Posted: 03 Oct 2017 05:06 PM PDT

புதுடில்லி:
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள்
குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து கூறியிருப்பதாவது:
பெட்ரோல் , டீசல் மீதான வரியை மாநில அரசு குறைக்க
வேண்டும் .இதனால் மக்களுக்கு ஏற்படும் சுமை குறையும்
என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
------------------------
தினமலர்

அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'

Posted: 03 Oct 2017 05:03 PM PDT

புதுடில்லி: அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு அமல்படுத்தி உள்ள, புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து, அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது; இதற்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுதல், நிதி திரட்டுதல் தொடர்பாக, சில விதிகளை தளர்த்தி, சட்டத்திருத்த மசோதா, பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த ...

தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்

Posted: 03 Oct 2017 05:02 PM PDT

லக்னோ: ஆக்ராவில் அமைந்துள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை, 156 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவதற்கான திட்டத்தை, மத்திய அரசின் ஒப்புதலுக்கு, அனுப்பி உள்ளதாக, உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வாரணாசி, அயோத்தி மற்றும் மதுரா ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன. உலக ...

மீரட்டில் 100 அடி உயர 'மோடி மந்திர்'

Posted: 03 Oct 2017 05:00 PM PDT

மீரட்:நாட்டின் வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி ஆற்றிய அரும் பணிகளை பாராட்டி, உ.பி.,யில், 100 அடி உயர மோடி சிலை மற்றும் அவரது பெயரில் கோவில் கட்ட, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் திட்டமிட்டு உள்ளார். உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற பொறியாளர், ஜே.பி.சிங், பிரதமர் மோடியின், மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, பிரதமரின் தீவிர ரசிகராக மாறி உள்ளார். இதையடுத்து, தான் வசிக்கும் மீரட்டில், பிரதமர் மோடிக்கு, 100 அடி உயர சிலை ...

புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது

Posted: 03 Oct 2017 04:59 PM PDT

புதுடில்லி: புதிய, 100 ரூபாய் நோட்டுகள், அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளன. ரிசர்வ் வங்கி வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள, ரூபாய் நோட்டு அச்சகங்களில், தற்போது, 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன; இந்த பணி, 2018 மார்ச்சில் முடியும். அதன்பின், மாற்றி வடிவமைக்கப்பட்ட, புதிய, 100 ரூபாய் நோட்டுகள், 2018 ஏப்., முதல், அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்படும். தற்போது, பயன்பாட்டில் உள்ள, 100 ரூபாய் நோட்டுகள், தொடர்ந்து புழக்கத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™