Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பொது போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு அதிரடி!

Posted: 01 Oct 2017 09:34 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும், தனியார் பங்களிப்புடன், அதிநவீன பஸ் நிலையங்களை அமைக்கவும், குறைவான கட்டணத்தில், உலக தரம் வாய்ந்த பேருந்து சேவையை வழங்கவும், மத்திய அரசு அதிரடி திட்டத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப, பொது போக்குவரத்து வசதியை ஏற்படுத்த, மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பிரிட்டன் தலைநகர் லண்டனில், தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டமான, நவீன பஸ் போக்குவரத்தை நம் நாட்டிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ...

ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைய வாய்ப்பு: ஜெட்லி நம்பிக்கை

Posted: 01 Oct 2017 09:38 AM PDT

பரிதாபாத்: "வருவாய் சமநிலையை எட்டும் போது, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை குறைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன," என, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், தற்போது, 5, 12, 18 மற்றும், 28 சதவீத வரிகள் விதிக்கப்படுகின்றன. ஜூலை, 1ல், இருந்து இது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், டில்லியை அடுத்துள்ள பரிதாபாத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில்,
மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது: ஜி.எஸ்.டி., அமலாகி, மூன்று மாதங்களாகிறது. இந்த ...

காங்., தலைவராகிறார் ராகுல்; தீபாவளிக்கு பிறகு பதவியேற்பு?

Posted: 01 Oct 2017 09:40 AM PDT

புதுடில்லி: காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், 47, தீபாவளிக்கு பின், கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த, முன்னாள் பிரதமர், ராஜிவ் மற்றும், காங்., தலைவர், சோனியா ஆகியோரின் மகனான, ராகுல், 2004 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான, அமேதியின், எம்.பி.,யாக இருந்து வருகிறார். கட்சியின் இளைஞர் அணி தலைவர், பொதுச் செயலர் பதவிகளை வகித்துள்ள அவர், தற்போது, கட்சியின் துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.தாயும், கட்சி தலைவருமான சோனியா, சமீபகாலமாக உடல் நலக்குறைவால், கட்சி பணிகளில் தீவிரமாக ...

அ.தி.மு.க., ஆட்சி நீடிக்காது: ஸ்டாலின் ஆரூடம்

Posted: 01 Oct 2017 09:55 AM PDT

சென்னை: ''தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி நீடிக்காது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் அளித்த பேட்டி:
மக்கள் வரிப்பணத்தில் நடத்தும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், அவரது புகழை பேசினால் வரவேற்கிறோம். ஆனால், உட்கட்சி பிரச்னைகள் பற்றியும், எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் பேசி வருகின்றனர்.நீதிமன்றம் தடை விதித்தும்,அரசு நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இனி, எந்த வகையிலும், இந்த ஆட்சி நீடிக்காது.ஏற்கனவே இருந்த கவர்னர் போல் இல்லாமல், புதிய கவர்னர், ஜனநாயகத்தை பாதுகாக்க, தமிழக அரசியல் ...

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்; தமிழகத்திற்கு புதிய கட்டுப்பாடு

Posted: 01 Oct 2017 09:58 AM PDT

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் தரத்தை உறுதி செய்ய, மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாடு முழுவதும், 2022க்குள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் வாயிலாக, இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பு நிதி ஆண்டில், 3.50 லட்சம் வீடுகள் கட்டும் வரைவு திட்டங்களுக்கு, மத்திய அரசு, படிப்படியாக ஒப்புதல் வழங்கி வருகிறது.பிரதமரின்வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்படும் வீடுகளின் உறுதி ...

அரசியல் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு ரஜினி... சூடு!

Posted: 01 Oct 2017 10:13 AM PDT

சென்னை: அரசியல் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு சூடு வைக்கும் வகையில், ''சினிமா செல்வாக்கால், அரசியலில் ஜெயிக்க முடியாது; அதற்கு மேல் ஒன்று உண்டு. அது, என்ன என மக்களுக்குத்தான் தெரியும்,'' என, சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில், ரஜினி பேசினார். 'முரசொலி' பவள விழாவில், 'தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' என, சீண்டிய கமலுக்கு பதிலடியாக அமைந்த ரஜினியின் பேச்சு, விழாவை விவாத மேடையாக்கியது.

சென்னை, அடையாறில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு, 2.8 கோடி ரூபாயில், மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது பிறந்த நாளான நேற்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மணி ...

சிலை கடத்தலில் எஸ்.பி.,க்கள் அலட்சியம்; பொன் மாணிக்கவேல் அதிரடி

Posted: 01 Oct 2017 11:03 AM PDT

'சிலை திருட்டு தொடர்பாக, நான்கு மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்' என, மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயணர் கோவிலில், 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெள்ளி பல்லக்கு, சமீபத்தில் திருடு போனது. இதை, மூடி மறைக்க முயற்சி நடப்பது பற்றி, 'தினமலர்' நாளிதழ் அம்பலப்படுத்தியது.இது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., - பொன் மாணிக்கவேலின் கவனத்திற்கு சென்றது. திருட்டில் தொடர்புடைய பட்டுராஜா, 29, உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இக்கோவிலில், 2016 டிச., முதல், ...

சமையல் காஸ் விலை அதிரடி உயர்வு

Posted: 01 Oct 2017 11:07 AM PDT

சென்னை: பண்டிகைகள் வரிசை கட்டும் நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலை, இரண்டு மாதங்களில், 123.50 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆகிய, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; வணிக பயன்பாட்டுக்கு, 19 கிலோ என, இரண்டு வகையான காஸ் சிலிண்டர்களை வினி யோகம் செய்கின்றன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும்,எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் சிலிண்டர் விலையில், மாற்றம் செய்கின்றன.இதன்படி, சென்னையில், செப்., 1ல், வீட்டு சிலிண்டர் விலை, 607 ரூபாய்க்கும், வணிக பயன்பாட்டு ...

'பொருளாதார சரிவை தடுக்க மத்திய அரசு தலையிட வேண்டும்'

Posted: 01 Oct 2017 11:10 AM PDT

புதுடில்லி: பொருளாதார வளர்ச்சியை ஊக்கு விக்கும் வகையில், பொருளாதார பற்றாக் குறை இலக்கை மாற்றி அமைப்பது, மக்கள் செலவிடுவதைஅதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க, இதில், மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என, 'அசோசெம்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, தொழில் அமைப்பான, அசோசெம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் கடிதம் எழுதியுள்ளது. அவற்றில் கூறியுள்ளதாவது:ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்,5.7 சதவீத மாக குறைந்துள்ளது.இந்நிலையில், ஜி.எஸ்.டி., ...

உயர் நீதிமன்றங்களில் குறையும் வழக்குகள்

Posted: 01 Oct 2017 01:16 PM PDT

புதுடில்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருவதால், தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; எனினும், கீழ் நீதிமன்றங்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள்: உச்ச நீதிமன்றத்தில், 2014ல், 62 ஆயிரத்து, 791 வழக்குகள் நிலுவையில் இருந்தன. புதிய நீதிபதிகள் நியமனம் மற்றும் வழக்கு விசாரணையை வேகப்படுத்தி வருவதால், இந்த எண்ணிக்கை, 2017, ஜூலையில், 58 ஆயிரத்து, 438 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும், 24 மாநில உயர் ...

புதிய, 'ஹஜ்' கொள்கை: மத்திய அரசு தீவிரம்

Posted: 01 Oct 2017 02:12 PM PDT

புதுடில்லி: கடல்வழி பயணம் உட்பட புதிய ஹஜ் கொள்கையை விரைவில் அறிவிக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 'ஹஜ்' எனப்படும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு, விமானக் கட்டண சலுகையை மத்திய அரசு வழங்குகிறது. 2022ம் ஆண்டுக்குள் இந்த மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, 2012ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து, கடல் வழியாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு பயணம் மேற்கொள்வது உள்ளிட்டவை அடங்கிய புதிய ...

சிகிச்சை அளிக்கும்படி டாக்டரை துப்பாக்கியால் மிரட்டிய கும்பல்

Posted: 01 Oct 2017 03:26 PM PDT

கோல்கட்டா: காயமடைந்த நண்பனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி, டாக்டரை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
விபத்து:
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, நேற்று காலை, 6:30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில், ஆறு இளைஞர்கள் வந்துள்ளனர். அதில், ஒருவருக்கு சாலை விபத்தில் காயமடைந்ததால் உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி அந்த கும்பல் கேட்டுள்ளது.
மிரட்டல்:
அவருடைய விபரங்களை நுழைவுச் சீட்டில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™