ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாடு அல்லது இடுகாடு! (உருகுவே நாட்டுப் பாடலின் சுருக்கம்)
- ரயில் இன்ஜின் டிரைவராக நடித்து விட்டேன்!
- தோட்டக்காரரே ! இதயத்தை உடைக்காதீர்! (குர்திஷ் பாடல்)
- பைக்கில் சென்ற ராவணனுக்கு அபராதம்
- நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்!
- இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
- காந்திஜி வாழ்வில்…
- சிங்கம் வழிமறித்தால் என்ன செய்வீர்…’
- எடையை குறை - படக் கதை - சிறுவர் மலர்
- ஒரே பேர்ல ஐந்து டோக்கன்....!
- மொக்க ஜோக்ஸ்…
- நீ அலறும்வரை செய்வேன் ! (ஸ்பானிஷ் பாடல்)
- சிவகுமார் கட்டுரையிலிருந்து....
- ஒரு பேனாவின் பயணம்
- ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு
- மாறுபட்ட கெட்டப்பில் ஸ்ரேயா!
- வில்லி வேடத்தில் வரலட்சுமி!
- நிக்கி கல்ராணியின் டாக்டர் கனவு!
- வடிவேலு படத்தில், ‘கிராபிக்ஸ்’ தொழில்நுட்பம்!
- சினி துளிகள்!
- புதியதோர் உலகு செய்வோம்!
- மனித வாழ்வில் நிறைவு ஏற்பட… –
- எப்படித் தொட்டுக்கொள்வோம் எனபதை நீ மறந்துவிட்டாய் ! (அல்பேனியப் பாடல்)
- அரசியலும் - சினிமாவும்!
- தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
- ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
- செங்கோட்டை, சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
- பழைய நோட்டுக்கு பதில் புதுசு சரத்குமாருக்கு ஐகோர்ட் யோசனை
- பர்தா அணிந்த ஹிந்து பெண்ணால் விமான நிலையத்தில் சலசலப்பு
- சிவாஜிசிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றம்: ஸ்டாலின் கண்டனம்
| நாடு அல்லது இடுகாடு! (உருகுவே நாட்டுப் பாடலின் சுருக்கம்) Posted: 01 Oct 2017 10:45 AM PDT நாடு அல்லது இடுகாடு! (உருகுவே நாட்டுப் பாடலின் சுருக்கம்) கீழ்த்திசையோரே! நம் நாடு அல்லது இடுகாடு! விடுதலை! அல்லது புகழுடன் சாவோம்! நம் ஆன்மாவின் உச்சரிப்பு- சூளுரை! சூளுரை என்பதே! இந்தச் சூளுரையை நாம்- வீரத்துடன் நிறைவேற்றுவோம் ! விடுதலை! விடுதலை! கீழ்த்திசையோரே விடுதலை! இதுவே நமது உயிர் மூச்சு! இதனால் – பயங்கரப் போர்களை எதிர்கொண்டோம் ! இந்த உற்சாகமே நமக்குரிய புகழைத் தந்தது! எதிரிகளை நடுங்கவைத்தது! போரில் விடுதலையே நமது முழக்கம் ! நமது சாவிலும்- விடுதலையே முழக்கமாகும் ... |
| ரயில் இன்ஜின் டிரைவராக நடித்து விட்டேன்! Posted: 01 Oct 2017 08:17 AM PDT பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை விழா ஒன்றில், சிவாஜி கணேசன் கலந்து கொண்டபோது பேசியது: ரயில்வேக்கும், என் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விழுப்புரத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தார், என் தாத்தா. நாகப்பட்டினத்தில் ரயில்வே ஊழியராக இருந்தார், என் தந்தை. பொன்மலை ரயில்வே, 'ஒர்க் ஷாப்'பில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர், என் சித்தப்பா. மேலும், என் மூத்த சகோதரரும், கொஞ்ச காலம் ரயில்வேயில் வேலை பார்த்திருக்கிறார். விட்ட குறை தொட்ட குறையாக, நானும், பச்சை விளக்கு திரைப்படத்தில், ... |
| தோட்டக்காரரே ! இதயத்தை உடைக்காதீர்! (குர்திஷ் பாடல்) Posted: 01 Oct 2017 08:16 AM PDT தோட்டக்காரரே ! இதயத்தை உடைக்காதீர்! (குர்திஷ் பாடல்) வா வா தோட்டக்காரரே! என் இதயத்தை உடைத்துவிடாதே! எனது காதலிக்காக- சிவப்புநிற அழகிய பூங்கொத்தைக் கொண்டுவா! என் காதலிக்கு – நான் வாக்குக் கொடுத்துள்ளேன் ! 'இரத்தச் சிவப்புடைய பூங்கொத்தைக் கொடுக்கிறேன்' என்று! எனது காதலியை- நான் பார்த்து நாட்களாகிவிட்டன! உலகத்தின் துக்கமெல்லாம் – என் மீது பனியைப்போல மூடிக்கொண்டுள்ளது ! என் காதல் பழுதாகிவிட்டது ! ஓ கடவுளே! அவள் ஒரு சிவந்த பூவை விரும்புகிறாள்- ஓ! தோட்டக்காரரே! நான் ... |
| பைக்கில் சென்ற ராவணனுக்கு அபராதம் Posted: 01 Oct 2017 07:36 AM PDT - புதுடில்லி: தலைநகர் டில்லியில், ஹெல்மட் அணியாமல் கிரீடம் அணிந்து பைக்கில் சென்ற ராவணன் வேட நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில், ஆண்டுதோறும் நவராத்திரியை ஒட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ராவணன் வேடத்தில் நடித்த முகேஷ் ரிஷி, ராவணன் தோற்றத்தில் கிரீடம் அணிந்தபடி டில்லி சாலைகளில் பைக்கில் பயணம் செய்தார். இந்த படம் சமூக வலை தளங்களில் வெளியானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். போக்குவரத்து போலீஸ் ... |
| நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவை கழற்றி காப்பாற்றிய பெண்! Posted: 01 Oct 2017 07:35 AM PDT - அமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில், இரண்டும் பற்றி எரிந்தன. இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்த்துவிட்டு ஜவாஹெர் என்ற இளம் பெண் தோழியுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ட்ரக் எரிந்து கொண்டிருப்பதையும் உதவி கேட்டு ஒருவர் போராடுவதையும் பார்த்த ஜவாஹெர் உடனடியாக காரை நிறுத்தினார். பின்னர், தன் பர்தாவை கழற்றியதோடு, தோழியின் பர்தாவையும் ... |
| இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல் Posted: 01 Oct 2017 07:34 AM PDT சர்வதேச அளவில் பயணத்துக்கு ஏற்ற நகரங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நாட்டில் இருந்தும் முக்கிய நகரங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் பயணத்துக்கு ஏற்ற நகரங்களாக 100 நகரங்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, புனே, கொல்கத்தா ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியாவில் சென்னை நகரம்தான் பயணத்துக்கு ஏற்ற முதல் நகரம் என்ற அந்தஸ்தை பிடித்துள்ளது. – ————————- மாலைமலர் |
| Posted: 01 Oct 2017 07:33 AM PDT காந்திஜி, தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது, நிகழ்ந்த சம்பவம் இது… காந்திஜியின் ஜெர்மானிய நண்பர், கேலன்பாச், குண்டுகள் நிரம்பிய கைத் துப்பாக்கி ஒன்றை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். ஒருநாள், அவரிடம், 'இதை ஏன் அனாவசியமாகச் சுமந்து கொண்டிருக்கிறீர்?' என்று கேட்டார், காந்திஜி. 'சகோதரரே… தங்களை ஆபத்து சூழ்ந்துள்ளது; சில முரட்டு வெள்ளையர்கள் தங்களைத் தாக்க திட்டமிட்டுள்ளனர்…' என்றார், கேலன்பாச். 'அப்படியென்றால், நீங்கள் என்னைக் காப்பாற்ற அக்கறை கொண்டிருக்கிறீர்கள்… அப்படித் தானே…' ... |
| சிங்கம் வழிமறித்தால் என்ன செய்வீர்…’ Posted: 01 Oct 2017 07:32 AM PDT – ஒருமுறை காந்திஜியிடம், 'நீங்களும், உங்கள் பெற்றோரும் காட்டில் சென்று கொண்டிருக்கிறீர்கள்… அப்போது, சிங்கம் ஒன்று வந்தால் என்ன செய்வீர்…' என்று கேட்டார், கோபால கிருஷ்ண கோகலே . 'முதலில் சிங்கத்துக்கு நான் இரையாவேன்; அதனால், என் பெற்றோர் பிழைத்துக் கொள்வர் அல்லவா…' என்றார், அமைதியாக காந்திஜி! – —————————————— -நடுத்தெரு நாராயணன் திண்ணை பகுதி, வாரமலர் |
| எடையை குறை - படக் கதை - சிறுவர் மலர் Posted: 01 Oct 2017 07:31 AM PDT ![]() |
| Posted: 01 Oct 2017 07:30 AM PDT - - |
| Posted: 01 Oct 2017 07:29 AM PDT ![]() |
| நீ அலறும்வரை செய்வேன் ! (ஸ்பானிஷ் பாடல்) Posted: 01 Oct 2017 07:28 AM PDT நீ அலறும்வரை செய்வேன் ! (ஸ்பானிஷ் பாடல்) ஆமாம்! ரொம்ப நேரமா நான் உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்! நான் இன்று உன்னோடு நடனம் ஆடவேண்டும்! உன் கண்களின் அந்தப் பார்வை – என்னை அழைத்துக்கொண்டிருக்கிறதே! நான் செல்லக் கூடிய வழியை – நீ எனக்குக் காட்டேன்! நீ - நீ ஒரு காந்தம் ! நான் ஒரு இரும்பு! நான் உன்னருகே நெருங்குகிறேன்!- ஒரு திட்டத்தையும் போடுகிறேன் ! இதைப்பற்றி நான் நினைத்தாலே- எனது இதயம் படபடன்னு அடிக்கிறது ! இப்போது- முன்னைவிட அதிகமாக ஆசை பெருகுதே! என் புலன்களெல்லாம்- அதிகமாகக் ... |
| சிவகுமார் கட்டுரையிலிருந்து.... Posted: 01 Oct 2017 07:25 AM PDT ![]() |
| Posted: 01 Oct 2017 07:23 AM PDT அனைவருக்கும் வணக்கம் இவனின் சிறு கவிதைகளையும் கட்டுரைகளையும் "ஒரு பேனாவின் பயணம்" என்ற தலைப்புடன் இத்திரியில் தொடங்க எண்ணியிருக்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். அன்புடன், மகேந்திர ராஜ் பிரபாகரன் கடவுள் வாழ்த்தாய் அணிந்துரை இயற்கையின் தலைவனே இங்கிருப்பவனுக்கெல்லாம் தகப்பனே உன் கடையவனின் அடியவன் இவன் – அவன் ஆசியுடன் என் மனம் பதிக்க நினைக்கிறேன் ஆதி உன் அணிந்துரை வேண்டும் உன் ஆகமவிதி அறியா ... |
| ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு Posted: 01 Oct 2017 05:48 AM PDT - நாக்பூர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. என்றாலும் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்ட இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ... |
| Posted: 01 Oct 2017 05:22 AM PDT - அரவிந்த்சாமி நடிக்கும், நரகாசுரன் படத்தில் நடிக்கும், ஸ்ரேயா, இனி, தனக்கு, கதாநாயகி வேடங்கள் கிடைப்பது அரிது என்பதால், தன் ரூட்டை மாற்றியுள்ளார், வீர போக வசந்த ராயலு என்ற தெலுங்கு படத்தில், ஆண்களை போன்று தன் தலைமுடியை, கத்தரித்து, ஆக் ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், மலையாளத்தில், பிரகாசம் பிரதுன்ன பெண்குட்டி என்ற படத்திலும், இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார். திக்குக் கெட்டு திசை மாறி போகிறது! – ——————————– — எலீசா. வாரமலர் |
| Posted: 01 Oct 2017 05:19 AM PDT - விஷாலுடன், வரலட்சுமி இணைந்து நடித்த, மதகஜராஜா படம் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கும் நிலையில், தற்போது, சண்டக்கோழி – 2 படத்தில், மீண்டும் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில், கதைப்படி விஷாலின் முறைப்பெண் என்றாலும், ஒரு கட்டத்தில் அவருக்கே வில்லியாக மாறுகிறார். பாலாவின், தாரைத்தப்பட்டை படத்தில், வரலட்சுமி நடித்த அதிரடியான வேடத்தைப் பார்த்து, இந்த வில்லி வேடத்தை அவருக்கு கொடுத்துள்ளார், இயக்குனர் லிங்குசாமி. போனதும், வந்ததும் பொன்னம்பலம்; திரும்பி வந்ததும் திருவம்பலம்! – ———————————— — ... |
| நிக்கி கல்ராணியின் டாக்டர் கனவு! Posted: 01 Oct 2017 05:18 AM PDT - நடிகை நிக்கி கல்ராணி, டாக்டராக வேண்டும் என்ற ஆசையில், அறிவியல் பாடம் எடுத்து படித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக, சினிமா நடிகையாகி விட்டதால், அவரது டாக்டர் கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், நெருப்புடா படத்தில், மருத்துவ கல்லுாரி மாணவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, மகிழ்ச்சி அடைந்து, தன்னை நிஜ டாக்டராகவே நினைத்து, அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர், 'இந்த வேடம், என் கேரியரில் மறக்க முடியாததாக அமைந்து விட்டது…' என்கிறார். காணக் கிடைத்தது, கார்த்திகை பிறைப் போல! – ————————————– — ... |
| வடிவேலு படத்தில், ‘கிராபிக்ஸ்’ தொழில்நுட்பம்! Posted: 01 Oct 2017 05:17 AM PDT - சிம்புதேவன் இயக்கத்தில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில், கதாநாயகனாக நடித்த வடிவேலு, தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஆனால், அவரது உடல், 'வெயிட்' போட்டிருப்பதால், அவரை, 'ஸ்லிம்'மாக காட்டுவதற்காக, 'கிராபிக்ஸ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். அத்துடன், ஒரு பாடல் காட்சியில், கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டனும் இணைந்து, இன்றைய இளவட்ட நடிகர்களுக்கு இணையாக, ஸ்டைலிஷாக நடனமாடவும், வடிவேலுவுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. – ——————————— – சினிமா பொன்னையா |
| Posted: 01 Oct 2017 05:16 AM PDT - * சிவகார்த்திகேயன் நடித்துள்ள, வேலைக்காரன் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், சினேகா. – * ஸ்கெட்ச் படத்தில், ஹோம்லியான வேடத்தில் நடித்துள்ளார், தமன்னா. – விஜயசேதுபதி, சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில், திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். – —————- வாரமலர் |
| Posted: 01 Oct 2017 01:55 AM PDT வன்முறையின் உச்சத்தில் உலகம்... வரம்பின்றி ஓடுகிறது குருதியாறு! - வயதுவரம்பின்றி சாகின்றனர் மக்கள் மனிதநேயம் குன்றியதால் மிருகங்களாயினர் பலர்! - தாய்மொழி பேசியதால் வாய்மொழியின்றி நின்றனர் சிலர் வாழ்வே கேள்விக்குறியாய்! - பட்டம் வாங்கச் சென்றவர்களை படுகொலை செய்தனர் இனவெறியின் பிடியில் இளைய சமுதாயம் மேலைநாடுகளில்! - மனமென்னும் நிலத்தில் மதமென்னும் விதையை நட்டு வெறியென்னும் அமிலம் விட்டால் வேரோடு சாய்ந்து விடும் மனிதச் சமுதாயம்! - உதரத்தில் துவங்கட்டும் மாற்றம் உயர் பண்போடு ... |
| Posted: 01 Oct 2017 01:54 AM PDT *எங்கு இருந்தாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனாக மனிதன் வாழ வேண்டும். *பெரியவர்கள் வகுத்த தர்மம், நியாயத்தை சரிவரக் கடைபிடித்தால் நிம்மதியாக வாழலாம். *'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது மனித வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். *சமூக சேவை, கடவுள் தொண்டை விட குடும்பத்துக்கு செய்யும் கடமையே முக்கியம். *போட்டி மனப்பான்மை இருக்கும் வரை, மனித வாழ்வில் நிறைவு ஏற்படாது. – —————————– – காஞ்சிப்பெரியவர் |
| எப்படித் தொட்டுக்கொள்வோம் எனபதை நீ மறந்துவிட்டாய் ! (அல்பேனியப் பாடல்) Posted: 01 Oct 2017 01:53 AM PDT எப்படித் தொட்டுக்கொள்வோம் எனபதை நீ மறந்துவிட்டாய் ! (அல்பேனியப் பாடல்) ஹரம் ! ஹரம் ! உன்னிடத்திலிருந்து என்னைப் பிரிக்க முடியாது! என் தோலுக்கு அடியில் உன்னை வைத்திருக்கிறேன் ! இது என்னுடைய தவறு என்றா சொல்கிறாய்? ஆம்….. இதயத்தோடும் இரத்தத்தோடும்- உன்னை ஒருவர் கதலிக்கும்போது – அது 'என்றும் நிலைத்தது' என்று சொல்வது – அவ்வளவு பொருத்தமில்லை! நாம் திரும்பவும் இருவரும் சந்திக்கவேண்டும்- என்னை நீ எங்கு கடைசியாகச் சந்தித்தாயோ அங்கு! நான் எப்படி இருக்கிறேன் என்பதில் உனக்குக் கவலை இல்லை! நாம் ... |
| Posted: 01 Oct 2017 01:10 AM PDT மரபை மீறும் சினிமாவும் - மாற்றத்தை தேடும் அரசியலும்!! - எழுத்ததிகாரன். ஆழமானது - அதே நேரத்தில் சாதாரணமானது. தெளிவானது - அதே நேரத்தில் கேலிக்கூத்தையும் கொண்டது. உணர்ச்சி மிக்க பல்வேறு கோணங்களில் அரசியல் ஆய்வு, இவைகளையெல்லாம் ஒருங்கே கொண்டதுதான் திரைப்படக்கலை. சினிமாவின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். லூமியரும், ஜியார்ஜ் மீலேவும் அங்குதான் தோன்றினார்கள். ஆனால் இதை ஒரு வெகுஜன பொழுது போக்காக மாற்ற வேண்டும் என்ற தேவை அமெரிக்காவில்தான் உணரப்பட்டது. உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கு ... |
| தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்? Posted: 30 Sep 2017 11:33 PM PDT சென்னை: தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதனால், திரைத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறி, கடந்த மாதம் தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ... |
| ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை Posted: 30 Sep 2017 11:29 PM PDT ஆசியாவில் முதல் முறையாக 19 வயது பெண்ணிற்கு கை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து கேரள மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மூளைச் சாவு அடைந்த 20 வயது இளைஞரின் கை ஸ்ரேயா என்ற 19 வயது பெண்ணிற்கு பொறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடந்த ஒரு விபத்தில் ஸ்ரேயா தனது இரண்டு கைகளையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. – —————— தினகரன் |
| செங்கோட்டை, சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம் Posted: 30 Sep 2017 09:47 PM PDT 2017-10-01 சென்னை: தெற்கு ரயில்வே அறிக்கை: சென்னை சென்ட்ரலில் இருந்து சந்திரகாசி வரை செல்லும் ரயில் (எண் 06058) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 4, 11, 18 மற்றும் 25 ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் 3.15 மணிக்கு புறப்பட்டு கூடூர், விஜயவாடா, அனகாபள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம், புவனேஸ்வர், கட்டாக், பலாசூர் மற்றும் காரக்பூர் வழியாக அடுத்தநாள் இரவு 7 மணிக்கு சந்திரகாசி சென்றடையும்,. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை செல்லக்கூடிய சிறப்பு ரயில் (எண் 06071) ... |
| பழைய நோட்டுக்கு பதில் புதுசு சரத்குமாருக்கு ஐகோர்ட் யோசனை Posted: 30 Sep 2017 06:43 PM PDT சென்னை: தேர்தலின் போது, கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய நோட்டுகளாக மாற்றி தர, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, நடிகர் சரத்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 9 லட்சம் ரூபாய்தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருச்செந்துார் தொகுதியில், ச.ம.க., தலைவர், நடிகர் சரத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். தேர்தல் செலவுக்காக, சரத்குமார், ஒன்பது லட்சம் ரூபாயை, காரில் வைத்திருந்த போது, தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். ... |
| பர்தா அணிந்த ஹிந்து பெண்ணால் விமான நிலையத்தில் சலசலப்பு Posted: 30 Sep 2017 06:39 PM PDT புதுடில்லி: ஹிந்து பெண் ஒருவர், பர்தா அணிந்து வந்திருந்தது, டில்லி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இடையே, சலசலப்பு நிலவியது. டில்லி விமான நிலையத்தில், சமீபத்தில் மும்பைக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக, 43 வயது பெண் ஒருவர், உடலை மறைக்கும் வகையில், முஸ்லிம் பெண்கள் அணியும், பர்தா அணிந்து வந்திருந்தார். அவருடைய பயணச்சீட்டை பரிசோதித்தபோது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, ஹிந்து பெண் பெயர் இருந்தது. அந்த பெண்ணுடன், வளைகுடா நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஜட்டாவைச் ... |
| சிவாஜிசிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றம்: ஸ்டாலின் கண்டனம் Posted: 30 Sep 2017 06:36 PM PDT சென்னை: சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றப்பட்டதற்கு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: சிவாஜி சிலை பீடத்தில் இருந்து தி.மு.க தலைவர் கருணாநிதி பெயர் நீக்கப்பட்டிருப்பது திரை உலத்தையும்,சிவாஜி ரசிகர்களையும் அவமானப்படுத்தும் செயலாகும். அரசியல் விளையாட்டுகளால் மன்னிக்க முடியாத துரோகத்தை முதல்வர் பழனிசாமி செய்துள்ளார். முதல்வர் பழனிசாமியை திரை உலகம்ஒருபோதும் மன்னிக்காது என கூறி உள்ளார். - --------------------------- தினமலர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


