Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பாக்., - சீனாவுடன் போரை எதிர்கொள்ள இந்தியா தயார்!

Posted: 07 Sep 2017 09:53 AM PDT

புதுடில்லி: ''தற்போதைக்கு ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியுள்ளதால், எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று கூற முடியாது. ஒரே நேரத்தில் இருமுனை போரை சந்திக்க, தயார் நிலையில் உள்ளோம்,'' என, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.

சீனாவுடனான, டோக்லாம் பிரச்னையில், சமீபத்தில் பேச்சு நடத்தி, சுமுகத் தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில், ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத், பேசியதாவது:அணு ஆயுத பலம் இருந்தாலும், நம் நாடு, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் எப்போதும், ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.மேற்கு பகுதியில் ...

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு தூக்கு

Posted: 07 Sep 2017 10:22 AM PDT

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில்,1993ல் நடந்த, 257 பேரை பலி வாங்கிய, தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், தாஹிர் மெர்ச்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் கானுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, தாதா அபு சலீமுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, 24 ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கில், தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. 1993ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் சரத்பவார் தலைமையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. முதல்வராக, சரத்பவார், மார்ச் 6ல், பொறுப்பேற்றார்.மார்ச், 12ல், ...

லஞ்ச வழக்கில் லாலு, தேஜஸ்வி விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்'

Posted: 07 Sep 2017 10:25 AM PDT

புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி., ஓட்டல் பராமரிப்பு பணிகளை, தனியாருக்கு வழங்கியதில், லஞ்சம் பெற்ற புகார் தொடர்பான வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ், அவரது மகன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பி உள்ளது.

லஞ்சம்:
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. மத்தியில்,
காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, 2004ல், ...

அரசியல்வாதிகளின் வருமான பின்னணி சட்டம் கொண்டு வர தேர்தல் கமிஷன் சிபாரிசு

Posted: 07 Sep 2017 10:28 AM PDT

புதுடில்லி: 'தேர்தலில் போட்டியிடுபவர்கள், அவர்களுக்கு வருமானம் வந்த பின்னணி விபரங்களை தெரிவிப்பது தொடர்பாக, பார்லிமென்டில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்' என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர், தங்கள் சொத்து விபரங்களை தெரிவிப்பது, கட்டாயமாக்க பட்டு உள்ளது. ஆனால், சொத்து விபரங்களுடன், வருமானம் வந்த விபரம், நெருங்கிய உறவினர்களின் சொத்துவிபரங்களை தாக்கல் செய்யகோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நேற்று, செல்லமேஸ்வர் மற்றும் அப்துல் நசீர் அமர்வு முன், ...

தினகரன் பிடியில் இருந்து ஜக்கையன், 'எஸ்கேப்'; முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு என அறிவிப்பு

Posted: 07 Sep 2017 10:37 AM PDT

முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்த, தினகரன் அணி எம்.எல்.ஏ., ஜக்கையன், நேற்று முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து, தினகரன் பிடியில் இருந்து, மேலும் சிலர் அணி மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தினகரன் அணியை சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், ஆக., 22ல், கவர்னரை சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்தனர். இதனால், அரசுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலை ஏற்பட்டது.இதனால், ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தீர்வு காண, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, ...

எதிர்க்கட்சிகளை சமாளிக்க பா.ஜ., புது வியூகம்

Posted: 07 Sep 2017 10:39 AM PDT

'நீட்' தேர்வு குறித்து, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக, புதிய புள்ளி விபரங்களை, பா.ஜ., சேகரித்துள்ளது. திருச்சியில், நாளை நடக்கும் பொது கூட்டத்தில், அவை வெளியிடப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில், நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக, பா.ஜ.,வை குறிவைத்து, எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரத்தை துவங்கியுள்ளன. அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக, சென்னை, கமலாலயத்தில், மாநில தலைவர், தமிழிசைதலைமையில், நேற்று, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் ...

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 07 Sep 2017 10:44 AM PDT

மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ ஜியோ' சார்பில் செப்.,7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது.வேலை நிறுத்தத்தால் அரசுப் பணிகள், ...

கறுப்பு பணத்தை ஒப்படைக்கும் திட்டம்; வங்கியில் ரூ.4,900 கோடி, 'டிபாசிட்'

Posted: 07 Sep 2017 10:46 AM PDT

புதுடில்லி: கறுப்பு பணத்தை, தாமாக முன் வந்து, வங்கியில் செலுத்தும் திட்டத்தில், 21 ஆயிரம் பேர், 4,900 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாக,வருமான வரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, வருமான வரி உயர் அதிகாரி ஒருவர், கூறியதாவது:

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, தாமாகவே முன்வந்து வரி செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. 2016 ஜூன் - செப்டம்பர் காலத்தில், 71 ஆயிரத்து 726 பேர், கறுப்புப்பணத்தை ஒப்படைத்துள்ளனர். அவர்கள்,வங்கியில் டிபாசிட் செய்த, 67 ஆயிரத்து 382 கோடி ரூபாய்க்கு, வரியாக, 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.இதைத் ...

செப்., 10ல் கவர்னருடன் சந்திப்பு

Posted: 07 Sep 2017 10:49 AM PDT

சென்னை: தினகரனை தொடர்ந்து, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினும், கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

ஆக., 22ல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து,'பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதால், சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, ஸ்டாலின் எழுதிய கடிதம், கவர்னரிடம் வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர், ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி ...

சோமனூர் விபத்து: சிசிடிவி காட்சி வெளியீடு

Posted: 07 Sep 2017 11:41 AM PDT

கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாயினர். 14 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பஸ் ஸ்டாண்ட் மேற்கூரையின் கீழ் பஸ்சுக்காவும், நிழலுக்காகவும் பலர் நின்றிருக்க திடீரென்று மேற்கூரை இடிந்து விழுந்தது. தப்பித்தால் போதும் என பலர் தெறித்து ஓட, தப்பிக்க இயலாதவர்கள் உள்ளே மாட்டிக் கொண்டனர். இச்சம்பவத்தில் 5 பேர் பலியாயினர். 14 பேர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ...

திருச்சியில் ‛ப்ளூ வேல்' விளையாடிய 10 வயது சிறுவன் மீட்பு

Posted: 07 Sep 2017 12:33 PM PDT

திருச்சி: திருச்சியில் ‛ப்ளூ வேல்' ஆன்லைன் விளையாட்டு விளையாடிய 10 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்
ப்ளூ வேல்:
உயிரை குடிக்கும், 'ப்ளூ வேல்' ஆன்லைன் விளையாட்டு தற்போது இந்தியாவில் அதிகளவில் மாணவர், இளைஞர்களின் உயிரை பறித்து வருகிறது. இதனை விளையாடும் நபர், 50 நாட்களில் பல்வேறு இலக்குகளை கடந்து, இறுதியில் தற்கொலைக்கு தூண்டப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்
10 வயது சிறுவன்:
தற்போது தமிழகத்திலும் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‛ப்ளூ வேல்' விளையாடிய 5ம் வகுப்பு ...

ஆருஷி கொலை வழக்கில் அக். 12-ல் தீர்ப்பு

Posted: 07 Sep 2017 01:49 PM PDT

அலகாபாத்: சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் இறுதி தீர்ப்பு அக்டோபர் 12-ல் வெளியாக உள்ளது. கடந்த 2008ல், உ.பி., மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டு வேலையாள், ஹேம்ராஜ், 45, ஆகியோர், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்த இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு எழுந்தது.நாட்டை உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரணை ...

கலெக்டர்களுடன் ஆலோசனை: மாநில தேர்தல் கமிஷன் முடிவு

Posted: 07 Sep 2017 02:06 PM PDT

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஓரிரு நாட்களில், மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் கமிஷன் ஆலோசிக்கவுள்ளது.

தமிழகத்தில், 2016ல் நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல், உயர் நீதிமன்ற தடையால் நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
சமீபத்தில், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'நவ., 17ல், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான தேர்தல் அறிவிப்பை, வரும், 18ல் வெளியிட வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களுடன், தேர்தல் ஏற்பாடுகள் ...

'பிரிக்ஸ்' தீர்மானம்; பாக்., அச்சம்?

Posted: 07 Sep 2017 02:38 PM PDT

பீஜிங் : 'பிரிக்ஸ்' மாநாட்டில், பயங்கரவாதத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பாக்., வெளியுறவு அமைச்சர் முகமது ஆசிப், நேற்று, சீனாவுக்கு விரைந்துள்ளார்.
தீர்மானம்:
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ள, ஐந்து நாடுகளின், 'பிரிக்ஸ்' மாநாடு, சமீபத்தில், சீனாவில் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார். இம்மாநாட்டில், பாகிஸ்தானில் செயல்படும், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து, தீர்மானம் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™