Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'போயிங்' விமான உதிரிபாக ஆலை: முதலீட்டை ஈர்க்க தமிழகம் முயற்சி

Posted: 06 Sep 2017 06:25 AM PDT

அமெரிக்கா சென்ற தமிழக அதிகாரிகள் குழு, அங்குள்ள, 'போயிங்' உள்ளிட்ட விமான மற்றும் பல்வேறு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனத்தினரை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்து உள்ளது.

தொழில் முதலீடுகள் : தமிழகத்திற்கு புதிதாக, முதலீட்டாளர்கள் வரத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தொழில் முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு முயற்சி களை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில்துறை செயலர், அதுல்யா மிஸ்ரா தலைமையில்,தமிழக அதிகாரிகள் குழு,அமெரிக்கா சென்று திரும்பியுள்ளது.இது குறித்து, தொழில் ...

ரோஹிங்யா பிரச்னையில் மியான்மருக்கு மோடி உறுதி!

Posted: 06 Sep 2017 08:15 AM PDT

நேபிடா: நம் நாட்டில், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பிரச்னை தலைதுாக்கியுள்ள நிலையில், அண்டை நாடான மியான்மரில், அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளால் வன்முறை வெடித்துள்ளது.

ரோஹிங்யா பிரச்னையை நேரடியாக குறிப்பிடாமல், 'மியான்மரியில் நடந்து வரும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்; அதற்கு உதவத் தயார்' என, பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.அண்டை நாடான மியான்மரில், ராஹினே மாகாணத்தில், ரோஹிங்யா முஸ்லிம் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில்,400க்கும் மேற்பட்டோர் கொல்ல பட்டுள்ளனர்; 1.20 ...

பயங்கரவாதிகளுக்கு ஹவாலா பணம்: டில்லி, ஸ்ரீநகரில் என்.ஐ.ஏ., சோதனை

Posted: 06 Sep 2017 09:27 AM PDT

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம், நிதி திரட்டி வந்த, டில்லி, ஸ்ரீநகரைச் சேர்ந்த வர்த்தகர்களின், 16 இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று, அதிரடி சோதனை மேற்கொண்டது.

இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: ஹவாலா வர்த்தகம் மூலம் திரட்டப்படும் நிதி, ஜம்மு - காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகளுக்கு, சென்றடைவதாக புகார் எழுந்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, இது பயன் படுத்தப்படுவது தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தபட்டு உள்ளன. இதன் ஒரு கட்டமாக, ...

'நீட்' போராட்ட பின்னணியில் கல்லூரி நிர்வாகம்? யு.ஜி.சி. உத்தரவால் விசாரணை துவக்கம்

Posted: 06 Sep 2017 09:55 AM PDT

'நீட்' தேர்வுக்கு எதிராக, தனியார் கல்லுாரி மாணவர் போராட்டங்களின் பின்னணியில், கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனரா என, விசாரணை துவங்கி உள்ளது.'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாததால், பிளஸ் ௨ முடித்த மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.

போராட்டங்கள் :
அதனால், தமிழகம் முழுவதும் மீண்டும், 'நீட்' தேர்வை எதிர்த்து, சில மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆதரவு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதில், இதுவரை இல்லாத அளவுக்கு, மாநிலத்தில் உள்ள சில தனியார் கல்லுாரிகள், குறிப்பாக, மருத்துவத்துக்கு தொடர்பில்லாத ...

பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டும் பணி: அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் தீவிரம்

Posted: 06 Sep 2017 10:11 AM PDT

அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும், அழைத்து வருவதற்கான முயற்சிகளை, அ.தி.மு.க., நிர்வாகிகள் துவக்கி உள்ளனர்.

அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், செப்., 12ல் அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வது; அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது குறித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அத்துடன், பொதுச் செயலராக வேறு யாரையும் தேர்வு செய்யாமல், கட்சியை வழி நடத்த, ...

முதல்வரை தகுதியிழப்பு செய்யலாமா? வழக்கில் செப்., 13 வரை அவகாசம்

Posted: 06 Sep 2017 10:31 AM PDT

மதுரை: சிறையில் சசிகலாவை சந்தித்த விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி மற்றும் நான்கு அமைச்சர்களை தகுதியிழப்பு செய்ய கோரிய வழக்கில், 13ம் தேதி வரை அவகாசம் அளித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்துார்ஆணழகன் தாக்கல் செய்த பொதுநல மனு:அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, சீனிவாசன், காமராஜ், பிப்., 28ல், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர். அவர்கள், 'அரசின் செயல்பாடுகள் பற்றி சசிகலாவிடம் பேசினோம்' என்றனர். இதற்கு, முதல்வர் பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்களின் செயல், அரசியலமைப்பு ...

 முதல்வர் பழனிசாமி அரசுக்கு தினகரன்... பூச்சாண்டி

Posted: 06 Sep 2017 11:09 AM PDT

முதல்வர் பழனிசாமி அரசுக்கு, பூச்சாண்டி காட்டும் விதமாக, முதல்வர் மற்றும் அமைச்சர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய தினகரன், அடுத்த கட்டமாக, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன், இன்று கவர்னரை சந்திக்கிறார். இதன்படி, அ.தி.மு.க.,வின் அதிகார மையம் தான் தான் எனக்காட்ட, அவர் முயற்சிக்கிறார். முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, உட்கட்சி சார்ந்த பிரச்னை என்பதால், தினகரன் அதிகம் ஏமாற வாய்ப்புள்ளது.

அ.தி.மு.க.,விலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரனுக்கு, 21 எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு அளித்துள்ளனர். அவர்கள் வெளியில் இருந்தால், மனம் மாறி முதல்வர் பக்கம் சென்று ...

அரசு ஊழியர்கள் சங்கங்கள்,'டமார்; ஒரு தரப்பினர் இன்று முதல்,'ஸ்டிரைக்'

Posted: 06 Sep 2017 11:13 AM PDT

முதல்வர் பழனிசாமியின் பேச்சுக்கு பின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, இரண்டாக உடைந்தது. ஒரு தரப்பினர், வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகினர்; மற்றொரு தரப்பினர், இன்று வேலை நிறுத்தத்தை துவங்குகின்றனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தது.இதையடுத்து, கூட்டமைப்பின் உயர்மட்டக் ...

வருமானம் பல மடங்கு உயர்ந்த எம்.எம்.ஏ., - எம்.பி.,க்கள் யார்? எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Posted: 06 Sep 2017 11:17 AM PDT

பதவிக்கு வந்த பின், வருமானம் பல மடங்கு உயர்ந்த, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் யார் ; அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய வருமானம் குறித்த தகவலுடன், அந்த வருவாய்க்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, 'லோக் பிரஹாரி' என்ற, அரசு சாரா அமைப்பு, வழக்கு தொடுத்துஉள்ளது. இந்த வழக்கு, நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.ஏ.அப்துல் நசீர் அடங்கிய, உச்சநீதிமன்ற அமர்வின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான, மூத்த ...

நீட் விவகாரத்தில் தமிழக அரசு போராடும்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted: 06 Sep 2017 11:36 AM PDT

சென்னை: ‛நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும்' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக தமிழக மாணவர்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும். இவ்விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படும். இவ்வாறு அவர் ...

குழந்தை திருமண சட்டத்தில் திருத்தம்; சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 06 Sep 2017 01:29 PM PDT

புதுடில்லி : 'இந்திய தண்டனை சட்டத்தின், 375-வது பிரிவில், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன், தாம்பத்ய உறவு கொள்வது, பலாத்கார குற்றம் அல்ல என கூறப்பட்டுள்ளதை திருத்த வேண்டும்' என கோரி, தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, பொது நல மனு விபரம்: நாட்டில், பெண்களுக்கு திருமண வயது, 18 என்றும், ஆண்களுக்கு, 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட பெண்கள், சிறுமியராக கருதப்படுகின்றனர். 15 வயதுக்கு மேற்பட்ட சிறுமியை திருமணம் ...

இந்தியாவில் சாலை விபத்துகள்; தினமும் 400 பேர் பலி

Posted: 06 Sep 2017 02:15 PM PDT

புதுடில்லி: இந்தியாவில், கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், தினமும், 4௦௦ பேர் இறந்ததாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழகத்தில் தான் அதிக விபத்துகள் நடந்துள்ளன.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி, 'இந்தியாவில் சாலை விபத்துகள்- 2016' அறிக்கையை, டில்லியில், நேற்று வெளியிட்டார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2016ல், சாலை விபத்துகள், 4.1 சதவீதமும், இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 3.2 சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, 4 லட்சத்து, 80 ஆயிரத்து, 652 சாலை விபத்துகள் நடந்தன. இதில், 1 ...

சமூக வலைதள தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்த குழு

Posted: 06 Sep 2017 03:07 PM PDT

புதுடில்லி: வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற, சமூக வலைதளங்களில், தகவல்கள் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான கமிட்டி, அமைக்கப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'இந்திய அரசியல் சட்டத்தின்படி, தனிநபர் ரகசியம், அடிப்படை உரிமையே' என, ஆதார் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஒன்பது நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில், தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்ற, சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை பாதுகாப்பது ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™