Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீனா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி; 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்பு

Posted: 03 Sep 2017 08:55 AM PDT

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் பயணமாக சீனா, மியான்மர் நாடுகளுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். சீனாவில் நடை பெறும், 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் மோடி, சீன அதிபரை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உறுப்பினர் களாகக் கொண்டு, 'பிரிக்ஸ்' அமைப்பு செயல் பட்டு வருகிறது. இந்த அமைப்பின், ஒன்பதா வது உச்சி மாநாடு, சீனாவின் சியாமென் நகரில் நடக்கிறது. நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகளாவிய பொருளாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப் பட உள்ளது. இதில் ...

மீண்டும் அணு குண்டு சோதனை நடத்தி வட கொரியா... அடாவடி!

Posted: 03 Sep 2017 09:00 AM PDT

சியோல்:கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனையை நேற்று நடத்தியது. செயற்கை நிலநடுக்கத்தைஏற்படுத்திய இந்த சோதனை யின்போது, ஹைட்ரஜன் அணுகுண்டை வெடிக்க வைத்து, சோதனை நடத்தியதாக வட கொரியா கூறியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் அதிபராக, கிம் ஜாங் யுன், 2011ல் பொறுப் பேற்றார். அது முதல், அணு குண்டு சோதனை கள்,அணு ஆயுத சோதனைகளில்,வட கொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு, ஐ.நா., அமைப்பும், பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன; பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது.இருப்பினும் அணு ஆயுத சோதனைகளில் வட கொரியா ...

உட்கட்சி மோதல்: வாய்ப்பை இழந்த அ.தி.மு.க.,

Posted: 03 Sep 2017 09:03 AM PDT

புதுடில்லி:அ.தி.மு.க.,வில், மீண்டும் அரங் கேறி வரும் உட்கட்சி மோதலே, அக்கட்சி, மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படாததற்கு காரணம் என, டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அளவில், பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு அடுத்தபடியாக, அதிக, எம்.பி.,க்கள் உடைய கட்சியாக, அ.தி.மு.க., உள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ.,விற்கும், அ.தி.மு.க., விற்கும் நெருங்கிய உறவு உள்ளது.இதனால், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகரானார். மறைந்த முதல்வர், ஜெயலலிதா இருந்தவரை, மத்திய அரசில், அ.தி.மு.க., சேர விரும்பவில்லை. அவர் மறைவுக்கு பின், கட்சி இரண்டாக ...

'மத்திய அரசை எச்சரித்தேன்!' ரகுராம் ராஜன் விளக்கம்

Posted: 03 Sep 2017 09:04 AM PDT

புதுடில்லி: 'செல்லாத நோட்டு குறித்த அறிவிப்பு, நீண்ட கால பயனை விட, குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தி விடும்' என, மத்திய அரசை எச்சரித்த தாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு, 2016, நவ., 8ல் அறிவித்தது. இந்த நடவடிக்கையால், பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், இவ்விவகாரம் தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரி யராக ...

தமிழகத்தின் நிா்மலா சீதாராமனுக்கு ராணுவத்துறை

Posted: 03 Sep 2017 10:37 AM PDT

புதுடில்லி:மத்திய அமைச்சரவை மாற்றத்தில், நான்கு இணையமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களாக உயர்த்தப்பட்டனர்; புதிதாக, ஒன்பது பேர் இணையமைச்சர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணுவ அமைச்சர் பதவி, தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம், இந்திராவுக்கு பின், ராணுவ அமைச்சராகும் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் அமைந்த பின், இதுவரை, இரண்டு முறை மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என, சில ...

நாளை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்; சிக்கலை தீர்க்க தினகரன் அணிக்கும் அழைப்பு

Posted: 03 Sep 2017 10:39 AM PDT

அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பிறகும் கட்சியில் சிக்கல்கள் தொடர்வதால் பொதுக்குழுவுக்கு முன் அதற்கு தீர்வு காண முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை அவசரமாக நடத்தப்படுகிறது. தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படும் என, கட்சியினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும் தினகரன் அணியினர், சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக ...

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தி.மு.க., இன்று முடிவு?

Posted: 03 Sep 2017 10:51 AM PDT

தமிழகத்தில், அரசியல் குழப்பத்தால் வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளன. 'நீட்' விவகாரத்தில் மாணவி அனிதாவின் மறைவு, அரசு மீதான மக்களின் கோபத்தை அதிகரித் துள்ளது. இதற்காக, போராட்டம் நடத்த அனைத்து எதிர்க்கட்சிகளுடன் தி.மு.க., இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

ஆளும்கட்சிக்கு எதிராக தினகரன், தன் ஆட்டத்தை துவக்கி உள்ளார். அவரது அணிக்கு, 19 எம்.எல்.ஏ., க்கள் சென்றதால், ஆட்சிக்கு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. 'சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என, கவர்னரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.அதை முறியடிக்க, முதல்வர் பல்வேறு வகை ...

தி.மு.க., கூட்டத்தில் பங்கேற்பில்லை திவாகரனுக்கு தினகரன் மறுப்பு

Posted: 03 Sep 2017 10:55 AM PDT

பெரம்பலுார்:''தி.மு.க., சார்பில், நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், நாங்கள் பங்கேற்க மாட்டோம்,'' என்று, தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பெரம்பலுாருக்கு வந்த தினகரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:'நீட்' தேர்வு தொடர்பாக, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் தலைமையகமான அறிவாலயத் தில் நடைபெற உள்ள, அனைத்து கட்சி கூட்டத் தில், நாங்கள் பங்கேற்க மாட்டோம்.'எங்கள் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள்' என, திவாகரன் கூறியது, அவரது சொந்த கருத்து. அவர், ஏதோ, ஆர்வத்தில் சொல்லி இருக்கலாம்.பழனிசாமி அணியினருக்கு, மத்திய ...

குறைந்த விலை வீடுகளுக்கான விதிகளை தளர்த்துகிறது அரசு

Posted: 03 Sep 2017 10:57 AM PDT

குறைந்த விலையில் கட்டப்படும் வீடுகளுக் காக, பரப்பளவு, கட்டட உயரம், மனை அளவு உள்ளிட்ட, கட்டட விதிகளை தளர்த்த, அரசு முடிவுசெய்துள்ளது.

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத் தின் ஒரு பகுதியாக, பிரதமரின் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில், குடிசை மாற்று வாரியம் வாயி லாக, ஏழை மக்களுக்காக,அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட உள்ளன.இதில், நகர மைப்புசட்டப்படி வகுக்கப்பட்டுஉள்ள விதி முறைகள் இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.நகரமைப்பு சட்டப்படி வகுக்கப்பட்ட கட்டட விதிகள், வணிக நோக்கில் செயல்படும் தனியார் ...

பாதுகாப்பு துறையில் முக்கிய முடிவுகள்?; ஜெட்லி ஜப்பான் பயணம்

Posted: 03 Sep 2017 12:18 PM PDT

புதுடில்லி : மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் நேற்று, பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், ஜப்பானில், இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு துறை தொடர்பான முக்கிய பேச்சு, இன்று(செப்., 4) நடைபெறுகிறது.

பேச்சுவார்த்தை:
பாதுகாப்பு துறையை கூடுதலாக கவனித்து வந்த, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த பேச்சில் பங்கேற்கிறார். மிக முக்கியமான இந்த பேச்சில், அவர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன. எனவே, அவருக்கு பதிலாக, நிர்மலா சீதாராமன் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முன்கூட்டியே, ...

விரக்தியில் தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள்

Posted: 03 Sep 2017 01:26 PM PDT

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தே.மு.தி.க.,வில் இருந்து பலரும் வெளியேறி விட்டதால், ஓட்டு வங்கி சரிந்துள்ளது.
ஜனவரி முதல், உட்கட்சி தேர்தல் நடத்தி, கீழ்மட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, மாவட்ட செயலர்கள், அவைத்தலைவர், பொருளாளர், துணை செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல், இன்று துவங்கி, வரும், 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தற்போது, கட்சிக்கு செலவு செய்ய வேண்டும் என்பதால், இப்பதவிகளை பெற பலரும் ஆர்வம் காட்டாததால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.
- நமது நிருபர் ...

காப்பியடித்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் : சென்னை பல்கலை எச்சரிக்கை

Posted: 03 Sep 2017 02:24 PM PDT

சென்னை: 'மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தால், கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை பல்கலை எச்சரித்துள்ளது.
சென்னை பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், மாணவர்களை, ஒரு சில கல்லுாரி நிர்வாகமே காப்பியடிக்க அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த தேர்வில், ஒரு கல்லுாரியைச் சேர்ந்த, நான்கு மாணவர்களின் கையெழுத்து, ஒரே மாதிரியாக இருந்துள்ளது.ஒரு மாணவர், விடைத்தாளுடன், 500 ரூபாயை இணைத்துள்ளார். அத்துடன், மொபைல் போன் எண்ணையும் தெரிவித்துள்ள அந்த மாணவர், 'எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்' என, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™