Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனிதாவுக்கு அஞ்சலி !

Posted: 03 Sep 2017 03:21 PM PDT

நம்பவைத்துக் கழுத்தறுத்த நாடாளும் கும்பலொன்றின்
...நயவஞ்சக சூழ்ச்சிக்குப் பலியானாய் அனிதா !
எம்பிபிஸ் படிப்பெல்லாம் ஏழைக்கு இல்லையெனும்
...எழுதாத சட்டத்தை ஏனோநீ மறந்தாய் !
நம்பியுனைப் படிக்கவைக்க நல்லவராம் தந்தையினை
...நட்டாற்றில் தவிக்கவிட்டு நீமட்டும் கண்மூட
வெம்பியுளம் வேகுதம்மா ! வேதனையில் தவிக்குதம்மா !
...வெள்ளைமனம் கொண்டவளே ! வெந்துவிட்டாய் கனவுடனே !

’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Posted: 03 Sep 2017 12:22 PM PDT

'நேரம் காலம்' என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை) அது செம்பரம்பாக்கத் தண்ணீரால் தி.நகர், மேற்கு மாம்பலம் உட்பட்ட பல பகுதிகள் நீரில் மிதந்த நேரம் ! மேற்கு மாம்பலத்தில் ஓர் அடுக்ககம்; "இங்கெல்லாம் தண்ணி வராது" என்றவர்கள் மனம் கலங்குமாறு தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது; நீர் மட்டம் ஏறியது; கீழ்த் தளத்தில் உள்ளோர் மேல் தளத்திற்குத் தஞ்சமானார்கள்! எங்கும் இருட்டு!மெழுகுவர்த்தி கிடைக்கவில்லை! பால் கிடைக்கவில்லை! தண்ணீர் கிடைக்கவில்லை! யாரும் சமைக்கமுடியவில்லை! அப்போது ஒருவர் – அவர் பெயர் சந்தானம் ...

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

Posted: 03 Sep 2017 08:16 AM PDT

லக்னோ, பாலியாவின் ரியோதி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 15 வயது சிறுமி வெளியே சென்று இருந்த போது போலீஸ் மற்றும் கிராம தலைவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். சிறுமியின் அழுகுரல் கேட்டு கிராம மக்கள் ஓடி சென்று அவரை காப்பாற்றி உள்ளனர். குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் தெரியவந்ததும் சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கான்ஸ்டபிள்ளை போலீஸ் கைது செய்து ...

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி

Posted: 03 Sep 2017 08:14 AM PDT

ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி ட்ராக்கியோவ் (22) என்பவர் பளு தூக்கும் போட்டியில் கடந்த 2008 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவர். தற்போது சர்வதேச அளவில் ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் ஹபரோவ்ஸ்க் என்ற நகரில் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது, சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் வேடிக்கை பார்த்த நிலையில் அனார் ஆலாகவர்னோவ்  ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (200)

Posted: 03 Sep 2017 07:40 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

கொடுப்பினை! – கவிதை

Posted: 03 Sep 2017 07:29 AM PDT

மனித வாழ்வில் எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு விதத்தில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்… மனை, மனைவி மகன், மருமகன் மகள், மருமகள், சம்மந்தி மாமியார், மாமனார்… சொந்த பந்தம் உற்றார் உறவினர் சுற்றம் நட்பு… உண்மையான ஊழியர்கள் அன்பு காட்டும் முதலாளி பண ஆசையற்ற மருத்துவர்… நல்ல வாகனம் நல்ல ஓட்டுனர் வழக்கறிஞர், ஆடிட்டர்… இத்தனைக்கும் கொடுத்து வைத்திருந்தாலும் எத்தனை பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறது… சிரித்துக் கொண்டே இறப்பதற்கு! – —————————– 'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை. நன்றி- ...

அலைப்பேசி கோபுரம்! (Cellphone Tower)

Posted: 03 Sep 2017 07:27 AM PDT

அலைப்பேசி கோபுரம்!
உயர்ந்து உயர்ந்து நிற்கிறது
உலகை அழைத்து நிற்கிறது – கதீர்வீச்சால்
உன்னத பறவைகளை அழித்துவிட்டு!

தொடத் தொடத் தொல்காப்பியம்(457)

Posted: 03 Sep 2017 07:24 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்

Posted: 03 Sep 2017 06:38 AM PDT

பாரதியாரின் குயில்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் அண்ணாநகரை சேர்ந்த கவிஞர் சுப்பராமன் அவர்கள். இதோ (Full Poem download click here ) காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாத்ல் சாதல் சாதல் 2. SONG OF THE CUCKOO. (This is a beautiful song set to music) Love, love, love Love failing Death, death, death! (Love….) Compassion real light Light extinguished, light extinguished Darkness, darkness, darkness! (Love……) Joy, ...

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Posted: 03 Sep 2017 06:36 AM PDT

சுதந்திரப் பறவை காற்றின் திசைகளில் போகிறது; சூரியக்கிரணங்களில் சிறகை நனைத்துக்கொள்கிறது; வானங்களில் ஏறத் துணிவு கொள்கிறது. கூண்டுப்பறவை அதன் குறுகிய கூண்டுக்குள் உலவுகிறது; வெட்டப்பட்ட சிறகுடன், கட்டப்பட்ட காலுடன் பாடுவதற்கு வாயைத் திறக்கிறது. கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்; அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது; ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது. சுதந்திரப் பறவை இன்னொரு தென்றலைப் பற்றி நினைத்துக் கொள்கிறது; மரங்களுக்கடையே ...

பதினைந்து வயதில் – நாடோடிப் பாடல்

Posted: 03 Sep 2017 06:33 AM PDT

நான்- பதினைந்து வயதில் படையில் சேர்ந்தேன் எண்பது வயதில் இல்லம் திரும்பினேன் ஊர் திரும்பிதும் ஒருவனைக் கேட்டேன்- என்றன் வீட்டில் இருப்பவர் யாரோ? – "மண்டிய புதர்கள், மரங்கள் மறைத்திட இருப்பதுதான் உங்கள் இல்லம். அங்கே நாய்வளை யூடே முயல்விளை யாடும் கூரையிலிருந்து குருவிகள் பறக்கும் முற்றம் தனிலே முளைத்திடும் கதிர்கள் கிணற்றோரத்தில் கிளைத்திடும் கொடிகள்" என்றவன் கூறக் – கதிரை அறுத்துக் கூழ்சமைத்திடுவேன் காட்டுக் கொடிகளைக் குழம்பாக்கிடுவேன் என்று சொல்லி இல்லம் அடைந்தேன். கூழும் குழம்பும் ...

ஆண்மை எது ?

Posted: 03 Sep 2017 06:31 AM PDT

மரமே அறம், அரமே மறம்.
இது புது வார்தை விளையாட்டா
இல்லை பழைய வாழ்கை விளையாட்டு
மறமும் அன்பின் துணை என்றாரே அவர்
அரம் கொண்டு மரம் அறுப்பது அறமா?
மரம் அறுத்து அன்பாய் மானுடம் வளர்க்கிறோமோ!
கரத்தில் அரம் கொண்டு இயற்கை நீட்டும் அன்புக்கரத்தை வெட்டுகிறோம் .
கரம் மட்டும் கொண்டு வாழத்துணிந்தால்
மரமே அறம், அரமே மறம்.

ஞாபக மறதியைப் போக்க வழி !

Posted: 02 Sep 2017 10:11 PM PDT

ஞாபக மறதியைப் போக்க வழி !

மகன் – ஞாபக மறதியைப் போக்க ஒரு ஸ்லோகம் சொல்லித்தந்தியேப்பா, , அதில் மூணு வரி ஞாபகம் இருக்கு நாலாவது வரி என்ன? சொல்லுப்பா!

தந்தை – நாலாவது வரி …… அது … ஞாபகம் இல்லியே!

மகன் - ?!... ?!... ?! …

கடல் போல் இருக்கும் மனைவி!

Posted: 02 Sep 2017 10:09 PM PDT

ஒரு கணவன் தன் மனைவியிடம், 'நீ கடல் போன்றவள்!' என்றான். உச்சிக் குளிர்ந்துபோன அந்த மனைவி, 'ஏன்? நான் அவ்வளவு பிரம்மாண்டமாக, அழகாக, ரொமான்ட்டிக்காக இருக்கிறேனா?' என்றாள். கணவனோ, "இல்லை! இல்லை! கப்பலில் பலநாட்கள் பயணித்தால் கடலைப் பார்த்து வெறுப்பு ஏற்படுவதைப் போல, உன்னைப் பார்த்தால் வெறுப்படைகிறேன்," என்றான். – —————————

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?

Posted: 02 Sep 2017 10:08 PM PDT

--
-

நமக்கு வாய்த்த தலைவர்

Posted: 02 Sep 2017 10:07 PM PDT

ஒருமுறை ஒரு யூத தொழிலதிபர் தன் நண்பரை விருந்திற்கு அழைத்தார். அவர் தன் நண்பரை நன்றாக உபசரித்து, சிறந்த உணவு வகைகளை பரிமாறினார். அவர் கிளம்பத் தயாரானபோது, உணவிற்கும் உபசரிப்பிற்கும் 800 டாலருக்கான பில் ஒன்றை அவரிடம் நீட்டினார். நண்பர் கொதித்துப்போனார், 'என்ன இது? என்னை விருந்திற்கு அழைத்ததால்தான் நான் வந்தேன். வந்தபின் என்னிடம் கட்டணம் கேட்கிறாயே?' என்றார். அந்த தொழிலதிபர், 'இல்லை, இது வியாபாரம், நான் உன்னை அழைத்தது உண்மைதான். ஆனால் நீதான் வந்தாய், நீதான் உணவு உண்டாய். அதனால் நீ ...

அவசரப்படாதே மச்சி!!

Posted: 02 Sep 2017 10:04 PM PDT

ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர். அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது. இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி ...

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!

Posted: 02 Sep 2017 09:59 PM PDT

ஆமை வடை இருக்கா..? – லேட்டா ஆகும், பரவாயில்லையா…? – வி.சாரதிடேச்சு – ——————————- – தலைவர் தன்னோட பேச்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே கூட்டத்தைப் பார்த்து ஏன் எல்லோரும் ஜோரா ஒருமுறை கைத்தட்டுங்க'னு சொல்றாரு? – இதுக்கு முன்னாலே அவர் தெருவிலே போக வித்தை காட்டிக்கிட்டிருந்தவராச்சே! – எஸ்.ஆர் – ——————————————- – பின்னால மஞ்சள் புடவை கட்டிக்கிட்டிருக்காங்களே அந்த மேடத்துக்கு நீங்க டிக்கெட் எடுத்திருக்கீங்களா சார்…? – இல்லே….வேணும்னா எடுக்கறேன்! – -வி.ரேவதி – —————————————— – எதிரி ...

வீரக்காதலன்

Posted: 02 Sep 2017 09:58 PM PDT

வீரக்காதலன் உன்னோடு சேர்ந்து நகரத்தில் வாழ்வதற்கு செத்து நரகத்தில் வாழ்ந்துவிடுவேன் என் மக்களுக்காக.. ஊஞ்சல் ஆடும் என் குழந்தைகளும் உயிர் ஊசல் ஆடுகிறது உன் கேவல சிரிப்பை கண்டு... என் வீட்டு பெண்களும் ஓர் குலமாய் இருந்தவர்கள் இன்று கண்ணீர் குளமாய் நீரை இரைக்கிறார்கள். உன் முகத்தை கூட முழுதாக காட்ட முடியவில்லை நீ.... உன் வீரத்தை கட்டப்போகிறாயா.... என் வீட்டு தலை குனிந்த பெண்கள் தலை நிமிர்ந்து பார்த்தாலே கருகிவிடுவாய்.... மறந்தும் இறந்துவிடாதே ...

கடவுளே......

Posted: 02 Sep 2017 09:54 PM PDT

இளமையைத் தொலைத்து வாடும் முதுமையின் முகத் தோற்றம் பதுமையைச் பார்த்து மருளும் புதுமையில் தொலைந்து போகும் இளமைக்கு இடையில் கிடக்கும் கவலையெல்லாம் தலைவியைப் கண்ட மாத்திரத்தில் மாயமாகும இளமையில் இளைப்பாறும் இளைஞனின் மனம் கூட அடிக்கடி அவள் மடி தேடும் இலையில்லா கிளையாகும் போதும் மனம் விலையில்லா விளக்காகும் இள-மயில் இவள் இன்முகத்தால்...... என்னவள் என் மகளானால் அவளுக்கு நான் தாயாவேன்...... உன் கருணை அருளிருந்தால்.......

என்ன சொல்வது எதை சொல்வது

Posted: 02 Sep 2017 08:45 PM PDT

என்ன சொல்வது எதை சொல்வது ! வீட்டு வேலைக்காரிக்கு (கத்தாமா) பாமிலி ஸ்டேட்டஸ்! சவுதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்குபொக்கிசமாக வந்த குழந்தை. இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலைக்காரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து ...

ப்ளூ வேல் தரவிறக்கம் செய்யலாம்---சரவணன் இருக்க பயமேன் !

Posted: 02 Sep 2017 04:18 PM PDT

ப்ளூ வேல் தரவிறக்கம் செய்யலாம்---சரவணன் இருக்க பயமேன் !நன்றி முகநூல்.

ரமணியன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™