Tamil News | Online Tamil News |
- அரியாசனமா; ஆட்சி கலைப்பா? பழனிசாமிக்கு பிரதமர் மோடி, 'செக்' டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்
- மக்கள் தொகையை விட அதிகரிக்கும் வாக்காளர்கள்!
- அக்., 2ல் மேட்டூர் அணை திறப்பு பயிர் காப்பீட்டுக்கு ரூ.522 கோடி
- கூட்ட நெரிசலில் சிக்கி 25 பேர் பலி பரிதாபம்! வதந்தியால் மும்பை ரயில் நிலையத்தில் சோகம்
- மினி லாரியில் ஆவணங்களை சமர்ப்பித்த அ.தி.மு.க.,
- தனியார் ஆம்புலன்சில் ஜெ.,வை அழைத்து சென்றது ஏன்:: ஸ்டாலின்
- தென்பெண்ணையில் 4,000 கன அடி திறப்பு ரசாயன நுரை பொங்கியதால் மக்கள் அச்சம்
- 30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் பிரகாசம்!
- கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆந்திரா
- எதிரிகளை எரித்து கொல்லுங்கள்! ஐ.எஸ்., அமைப்பு தலைவன் உத்தரவு
- வேலூர் ஏ.டி.எம்.,களில் அதிக நீளத்தில் ரூ.500 நோட்டு
| அரியாசனமா; ஆட்சி கலைப்பா? பழனிசாமிக்கு பிரதமர் மோடி, 'செக்' டில்லியில் நடந்த பரபரப்பு பேரம் Posted: 29 Sep 2017 07:49 AM PDT தமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.பா.ஜ., மேலிடத்தின் இத்திட்டத்தை, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மூலமாக அறிந்த, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், ... |
| மக்கள் தொகையை விட அதிகரிக்கும் வாக்காளர்கள்! Posted: 29 Sep 2017 08:49 AM PDT தமிழகத்தில், அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வாக்காளர் மற்றும் வாக்காளர் அல்லாதோர் எண்ணிக்கை, மக்கள் தொகையை எண்ணிக்கையை விட, அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் துவக்க உள்ளது என்ற தகவல் கிடைத்ததும், அரசியல் கட்சியினர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,லட்சக்கணக்கான விண்ணப்பங்களை வழங்குகின்றனர்.அவற்றை முறையாக ஆய்வு செய்யாமல், ஊழியர்கள், பட்டியலில் சேர்க்கின்றனர். இடம் மாறி செல்வோர், போகுமிடமெல்லாம் ... |
| அக்., 2ல் மேட்டூர் அணை திறப்பு பயிர் காப்பீட்டுக்கு ரூ.522 கோடி Posted: 29 Sep 2017 08:54 AM PDT சென்னை: 'பாசனத்திற்காக, அக்டோபர், 2ல், மேட்டூர் அணை திறக்கப்படும். விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்காக, 522 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மேட்டூர் அணையில், போதிய அளவு நீர் இல்லாததால், குறுவை நெல் சாகுபடிக்கு, ஜூன், 12ல், தண்ணீர் திறக்க முடியவில்லை. அதனால், 56.92 கோடி ரூபாய் மதிப்பில், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தேன். நடப்பாண்டில், டெல்டா பகுதிகளில், 4.43 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல் மற்றும் பயறு சாகுபடி நடந்துள்ளது.தற்போது, இயல்பை விட அதிக மழை ... |
| கூட்ட நெரிசலில் சிக்கி 25 பேர் பலி பரிதாபம்! வதந்தியால் மும்பை ரயில் நிலையத்தில் சோகம் Posted: 29 Sep 2017 09:00 AM PDT மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, பரேலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலைய நடைபாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 25 பேர் பரிதாபமாக பலியாயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடும் மழை பெய்த நிலையில், மின்சாரம் பாய்வதாக பரப்பப்பட்ட வதந்தியால் தப்பிக்க முயன்றபோது, இந்த விபந்து நடந்தது. மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மும்பையில் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருப்பது, புறநகர் ரயில் சேவையே. நாட்டிலேயே, அதிக அளவுக்கு புறநகர் ரயில் போக்குவரத்து ... |
| மினி லாரியில் ஆவணங்களை சமர்ப்பித்த அ.தி.மு.க., Posted: 29 Sep 2017 09:03 AM PDT புதுடில்லி: கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து, முடிவு செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, அ.தி.மு.க., சார்பில், மினி லாரியில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டன. 'அ.தி.மு.க., கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை, அக்., 31க்குள் முடிவு செய்ய வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, செப்., 29ம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுசூதனன், பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு, தேர்தல் கமிஷன், ... |
| தனியார் ஆம்புலன்சில் ஜெ.,வை அழைத்து சென்றது ஏன்:: ஸ்டாலின் Posted: 29 Sep 2017 09:19 AM PDT சென்னை: ''மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதாவை, தனியார் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றது ஏன்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:மயங்கிய நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, காவிரி பற்றி ஆலோசித்ததாக, அரசு கூறியுள்ளது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்இருந்த அவர், காவிரி பிரச்னை குறித்து, எப்படி ஆலோசிக்க முடியும்.வீட்டில் மயங்கி கிடந்தவரை, தனியார் ஆம்புலன்சில், அழைத்துச் சென்றது ஏன்? உயர் பாதுகாப்பில் உள்ள ஜெ.,வீட்டில், ஆம்புலன்ஸ் வாகனம் தயார்நிலையில் இருக்காதது ஏன் ... |
| தென்பெண்ணையில் 4,000 கன அடி திறப்பு ரசாயன நுரை பொங்கியதால் மக்கள் அச்சம் Posted: 29 Sep 2017 09:30 AM PDT ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையில், 4,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கர்நாடகாவில் இருந்து வந்த தொழிற்சாலை ரசாயன கழிவுகளால், தட்டிகானப்பள்ளி தரைப்பாலத்தில் நுரை தேங்கி நின்றது. கர்நாடக மாநிலம், நந்தி ஹில்ஸ் பகுதியில் கனமழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள, ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை, 4,485 கன அடிதண்ணீர் வந்தது.அணையின் மொத்த கொள்ளளவான, 44.28 அடியில், 43.70 அடிக்கு தண்ணீர் தேங்கியதால், பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில், 4,000 கன அடி நீர் ... |
| 30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் பிரகாசம்! Posted: 29 Sep 2017 10:34 AM PDT தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 30 ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் பிரதமராக, ராஜிவ் இருந்த போது, 1986ல், தேசிய கல்வி கொள்கை உருவாக்க பட்டது. அனைத்து மாநிலங் களிலும், ஏழை, பழங்குடியின மாணவ -- மாணவியர் தரமான கல்வி பெற, ஜவஹர் நவோதயா பள்ளிகள் துவக்கப்பட்டன. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில், இரண்டு பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது, 598 பள்ளிகள் ... |
| கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆந்திரா Posted: 29 Sep 2017 11:23 AM PDT ஐதராபாத்: எதிர்பார்த்த வரி வருவாய் கிடைக்காததாலும், கடன் வாங்கும் எல்லையை நெருங்கி விட்டதாலும், நிலுவையில் உள்ள, 'பில்'களை செலுத்த முடியாத அளவு, கடும் நிதி நெருக்கடியில், ஆந்திரா தவிக்கிறது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. பல்வேறு பில்களை செலுத்த முடியாத அளவுக்கு, நிதி நெருக்கடியில், ஆந்திரா, தற்போது உள்ளது.இது குறித்து, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:நடப்பு, 2017 - 18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 415.80 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருக்கும் என, கூறப்பட்டது. ஆனால், ஏற்கனவே, 1,400 ... |
| எதிரிகளை எரித்து கொல்லுங்கள்! ஐ.எஸ்., அமைப்பு தலைவன் உத்தரவு Posted: 29 Sep 2017 01:14 PM PDT கெய்ரோ: ''இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும், மீடியா மையங்கள் உட்பட எதிரிகள் அனைவரையும் எரித்து கொல்லுங்கள்,'' என, பயங்கரவாதிகளுக்கு, ஐ.எஸ்., தலைவன், அல் பாக்தாதி உத்தரவிட்டுள்ளான். மேற்காசிய நாடான, ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம், சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி ... |
| வேலூர் ஏ.டி.எம்.,களில் அதிக நீளத்தில் ரூ.500 நோட்டு Posted: 29 Sep 2017 03:17 PM PDT வேலுார்: வேலுார், ஏ.டி.எம்.,களில், சரியாக வெட்டப்படாத, 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. வேலுார், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில், ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்., மில் நேற்று முன்தினம் இரவு, ஒருவர் பணம் எடுத்தார். இதில் 500 ரூபாய் சரியான அளவில் வெட்டப்படாமல், ஒரு முனையில் மட்டும் நீளமாக இருந்தது. இதுபோன்ற நோட்டுகள், சத்துவாச்சாரி, வேலுாரில் உள்ள ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்.,களில் மட்டும், பலருக்கு வந்தது. வங்கிகள் தொடர் விடுமுறையால், அவற்றை மாற்ற முடியாமல் 20க்கும் மேற்பட்டோர் புலம்பினர். இதற்கு வங்கி நிர்வாகமே காரணம் என அவர்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 30,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |