Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரயில் பயணியரின் பாதுகாப்புக்கு... உறுதி!

Posted: 28 Sep 2017 08:24 AM PDT

ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கப் போவதாக ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நடந்த பல்வேறு விபத்துக்களை தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக, பா.ஜ., மூத்த தலைவர், சுரேஷ் பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கண்காணிப்பு
ரயில்வேயில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பியுஷ் கோயல் நேற்று ...

தினகரன் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் கமிஷன்

Posted: 28 Sep 2017 08:27 AM PDT

கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும் விவகாரத்தில், கூடுதல் அவகாசம் கேட்டு, தினகரன் தரப்பு வைத்த கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது.

மனப்பூர்வ சம்மதம்
அ.தி.மு.க.,வில், கட்சிக்கும், இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணி, சமீபத்தில், தலைமை தேர்தல் ஆணையத்தில், பொதுவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.சசிகலா என்ற ஒரு அணியே இல்லாதது போலவும், பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் மட்டும் இருந்து, இரண்டும் ஒன்றாகி விட்டது போலவும், ...

'நேரடி மானிய திட்டத்தால் ரூ.58 ஆயிரம் கோடி மிச்சம்'

Posted: 28 Sep 2017 09:45 AM PDT

புதுடில்லி:''நேரடி மானிய பலன் திட்டத்தால், மத்திய அரசுக்கு, 58 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம், சமையல், 'காஸ்' உட்பட, பல்வேறு திட்டங்களுக்கான மானியப் பலன் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்த நேரடி மானிய பலன் திட்டத்தால், இடைத் தரகர்கள் தவிர்க்கப்பட்டு உள்ளனர்.போலியான பயனாளிகள் ...

பேட்டியளித்த பிரபலங்கள்... பீதி!

Posted: 28 Sep 2017 09:54 AM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அடுத்த வாரம் அதிரடி விசாரணையை துவக்குகிறது. அதனால், கமிஷனின் விசாரணை வளையத்துக்குள், யார் யார் வருவர் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெ.,வை பார்க்க, அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்த பிரபலங்களும், 'விரைவில் வீடு திரும்புவார்' என, பேட்டி அளித்தவர்களும், 'சம்மன் வருமோ...' என்ற பீதியில் உள்ளனர். ஜெ.,வை பார்க்காமல், பார்த்ததாக பேட்டி அளித்த யாரும், விசாரணை வரம்பில் இருந்து தப்ப முடியாது என்பதால், கலக்கம் அடைந்துள்ளனர்.திடீர் உடல் ...

பா.ஜ., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி

Posted: 28 Sep 2017 09:56 AM PDT

மும்பை:மத்தியில் ஆளும், பா.ஜ.,வை, அதன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், 'பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, அந்த கட்சி வலியுறுத்திஉள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமையை விமர்சித்து, பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்ஹா, சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்; இது, அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ.,கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் பத்திரிகையான, 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறப்பட்டு ...

துவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா... மோசம்!

Posted: 28 Sep 2017 10:26 AM PDT

வாஷிங்டன்:'பாடங்களை புரிந்து கொள்ளாத பள்ளிப் படிப்புகள் வீண். இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், துவக்கக் கல்வி முறை மிகவும் மோசமாக உள்ளது; இது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்' என, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கல்வியின் மூலம் கற்றுக் கொள்ளுதல் குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வியின் உண்மையான நோக்கம், மாணவர் கள் அதை படித்து புரிந்து, தங்களுடைய திறமைகளை, அறிவை வளர்த்துக் கொள்வது தான். துவக்க நிலை கல்வியில், இவ்வாறு புரிந்து படிக்காத மாணவர்கள், எதிர்காலத்தில் ...

ஏ.டி.எம்.,களில் ரூ.1 லட்சம் கோடி தொடர் விடுமுறையை சமாளிக்க நடவடிக்கை

Posted: 28 Sep 2017 10:34 AM PDT

தொடர் விடுமுறையால், தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளின், ஏ.டி.எம்.,களில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பணம் நிரப்பப்படுகிறது. தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வங்கிகளுக்கு, இன்று முதல், நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை. அதனால், வங்கி, ஏ.டி.எம்.,களில், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்குமா என, மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு, நேற்று சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களும், ...

பிரதமரே வந்தாலும் குழந்தைகளை அழைக்க அதிகாரம் இல்லை!

Posted: 28 Sep 2017 10:39 AM PDT

சென்னை:'பிரிட்டன் ராணி வந்தாலும், பிரதமர் வந்தாலும், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல, அதிகாரம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், நாராயணன் தாக்கல் செய்த மனுவில், 'எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல, தடை விதிக்க வேண்டும்.'பள்ளி வளாகத்துக்கு வெளியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்களில், பள்ளி குழந்தைகள் பங்கேற்கும்போது, பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.
15 ...

பசு தோல் போர்த்திய எலி தினகரன் ஜெயகுமார், 'செம' நக்கல்

Posted: 28 Sep 2017 10:41 AM PDT

சென்னை:''தினகரன் தரப்பில் ஆட்களை தேடிக் கொண்டிருப்பதால், தேர்தல் கமிஷனில் அவகாசம் கேட்டுள்ளனர்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:
தினகரன் தரப்பில், ஆட்களை தேடிக் கொண்டிருப்பதால், தேர்தல் கமிஷனில், கால அவகாசம் கேட்டுள்ளனர். அவர்களிடம், 3 சதவீத பொதுக்குழு உறுப்பினர் கூட இல்லை. எங்கள் தரப்பில், 98 சதவீத, பொதுக்குழு உறுப்பினர்களிடம், பிரமாண பத்திரத்தில், வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் எடுத்தமுடிவு அடிப்படையில், தேர்தல் கமிஷனில், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.பொதுமக்கள், ...

காய்ச்சல்: தமிழகத்தில் 69 பேர் இறப்பு

Posted: 28 Sep 2017 11:58 AM PDT

சென்னை: ''தமிழகத்தில் பல்வேறு காய்ச்சல்களால், இந்தாண்டில், 69 பேர் இறந்துள்ளனர்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர், குழந்தைசாமி கூறினார்.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நாள் ஒன்றுக்கு, மூன்று பேராவது உயிர் இழக்கின்றனர்.அவர்கள், 'டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் இறக்கவில்லை; வேறு காரணங்களே காரணம்' என, சுகாதாரத்துறை, சமாளித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக, 69 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர், குழந்தைசாமி கூறுகையில், ''இந்தாண்டு, ...

ஆதாருடன் கூடிய வருகை பதிவு : புனே மாநகராட்சி அசத்தல்

Posted: 28 Sep 2017 01:05 PM PDT

புனே: மஹாராஷ்டிர மாநிலம், புனே மாநகராட்சி, ஆதார் எண்ணுடன் கூடிய வருகை பதிவை பயன்படுத்த துவங்கியுள்ளது.
மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற, 'ஆதார்' எண் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சமையல், 'காஸ்' மானியம், ரேஷன் பொருட்கள், முதியோர் உதவித் தொகை என அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரி கட்டுவதற்கு பயன்படும், 'பான்' கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இறப்பை பதிவு செய்யவும், ஆதார் எண் கட்டாயம் என, ...

சிறப்பு பஸ்கள் இயக்குவதில் தொழில் நகரங்கள் புறக்கணிப்பு

Posted: 28 Sep 2017 01:32 PM PDT

சேலம்: சரஸ்வதி பூஜை, தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்குவதில், தொழில் நகரங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது, தென் மாவட்ட மக்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க, முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
தற்போது, வழக்கமாக இயக்கப்பட்டு வரும் ...

பெண்கள் பிரச்னைகளை அறிய முதல்வர் சேலை கட்டணுமாம்

Posted: 28 Sep 2017 03:11 PM PDT

திருவனந்தபுரம்: ''பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்ள, முதல்வர் பினராயி விஜயன், சேலை கட்ட வேண்டும்,'' என, கம்யூ., மூத்த தலைவர், கே.ஆர்.கவுரியம்மா கூறினார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபையின், வைர விழா கொண்டாட்டம் நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, கேரள முதல் சட்டசபையில், உறுப்பினர்களாக இருந்த, கம்யூ., மூத்த தலைவர்கள், கே.ஆர்.கவுரியம்மா, சந்திரசேகரன்,, ஆகியோருக்கு, திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடந்தது.
உடல் நிலை காரணமாக, விழாவில், சந்திரசேகரன் ...

சிகரெட் விற்கும் கடைகளில் சாக்லேட் விற்க அதிரடி தடை

Posted: 28 Sep 2017 03:58 PM PDT

மும்பை: 'புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், குழந்தைகள் சாப்பிடும், சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது' என, மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சாதாரண பெட்டிக் கடைகளில், சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களுடன், பிஸ்கட், குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. தங்களுக்கான பொருட்களை வாங்க செல்லும் குழந்தைகள், அங்கு விற்கப்படும் புகையிலை பொருட்களால் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™