Tamil News | Online Tamil News |
- 'மாஜி' அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவால் பா.ஜ.,வில்... புயல்!
- 'ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில், 'கேமரா' இல்லை'
- வேட்பு மனுவில் ஜெ., கைரேகை... உண்மையா?
- மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு
- அரசு ஊழியர் ஊதிய உயர்வு எப்போது? அலுவலர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
- நடராஜனை பார்க்க வர மாட்டேன்: சசிகலா
- வீடுகளில் பெட்ரோல் சப்ளை: அமைச்சர் தீவிரம்
- ரூ.25 ஆயிரம் கோடியில் உள்நாட்டு பாதுகாப்பு திட்டம்
- மத்திய அரசு டாக்டர்கள் 65 வயது வரை பணியாற்றலாம்
- 'வார விடுமுறை நாளிலும் போலீசார் வேலைக்கு வரணும்'
- கூர்க்கா போராட்டம், 'வாபஸ்' : டார்ஜிலிங்கில் இயல்பு நிலை
- பாக்., சிறுமிக்கு, 'விசா' : சுஷ்மா நடவடிக்கை
- 'போபர்ஸ் வழக்கில் மேல் முறையீட்டுக்கு காங்., அரசு அனுமதிக்கவில்லை'
- வேட்பாளர் செலவு கணக்கில் முறைகேடு: மதுகோடா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை
| 'மாஜி' அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவால் பா.ஜ.,வில்... புயல்! Posted: 27 Sep 2017 09:43 AM PDT புதுடில்லி:''நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது; செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, முறையாக செயல்படுத்தாத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை உள்ளிட்டவை, அதை மேலும் மோசமாக்கியுள்ளது,'' என, முன்னாள் மத்திய நிதியமைச்சர், யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளது, மத்தியில் ஆளும், பா.ஜ.,வில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து எழுதியுள்ள ஒரு கட்டுரையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக இருந்த, யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளதாவது:நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோச மான நிலையில் ... |
| 'ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில், 'கேமரா' இல்லை' Posted: 27 Sep 2017 09:44 AM PDT 'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறையில், 'சி.சி.டி.வி., கேமரா' பொருத்தப்படவில்லை' என, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறிஉள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வரும் நிலையில், நேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாக இயக்குனர், பிரதாப் ரெட்டி வந்துஇருந்தார்.அவர், நிருபர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதாவுக்கு எங்களால் இயன்ற வரை, உயர் தர சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது மரணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அரசிடம்அளித்துள்ளோம்,'' என்றார்.இவருடன் ... |
| வேட்பு மனுவில் ஜெ., கைரேகை... உண்மையா? Posted: 27 Sep 2017 10:16 AM PDT சென்னை:திருப்பரங்குன்றம் இடைதேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கான வேட்பு மனுவில்,ஜெ., கைரேகையை பதிவு செய்தது உண்மையா; அதிகாரப்பூர்வ வேட்பாளர் என, அவர் ஒப்புதல் அளித்தாரா என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம், கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் வில்ப்ரெட், அக்., 6ல் ஆஜராகி பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளது. தமிழக சட்டசபைக்கு,2016 மே மாதம் தேர்தல் நடந்தது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சீனிவேல் வெற்றி பெற்றார்; தேர்தல் ... |
| மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு Posted: 27 Sep 2017 10:36 AM PDT வாஷிங்டன்:பிரதமர், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம், அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அமெரிக்க அதிபராக, ஜனவரியில், டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்.தலைநகர்வாஷிங்டனில், பிரதமர், மோடியின் வாழ்க்கை குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.'தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற இந்த புத்தகம், இந்தாண்டு, ஜூலையில், இந்தியாவில் வெளியிட பட்டது.புத்தகத்தின் பிரதியை, அமெரிக்க, எம்.பி.,க்கள், மார்கன் கிரிப்பித், தாமஸ் காரட் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்; மோடியின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.புத்தகத்தில், மோடி, பிரதமராக ... |
| அரசு ஊழியர் ஊதிய உயர்வு எப்போது? அலுவலர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு Posted: 27 Sep 2017 10:42 AM PDT சென்னை:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்கான, ஐந்து பேர் இடம் பெற்ற அலுவலர் குழு, நேற்று, முதல்வர் பழனிசாமியிடம், அறிக்கை வழங்கியது. அதைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தலின் போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும்,ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். அவரது அறிவிப்பை ... |
| நடராஜனை பார்க்க வர மாட்டேன்: சசிகலா Posted: 27 Sep 2017 10:52 AM PDT மருத்துவமனையில், உயிருக்கு போராடும் கணவர் நடராஜனை பார்க்க, 'பரோலில்' வர, சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நடராஜனுக்கு, சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்சசிகலாவை, கர்நாடக, அ.தி.மு.க., ... |
| வீடுகளில் பெட்ரோல் சப்ளை: அமைச்சர் தீவிரம் Posted: 27 Sep 2017 10:54 AM PDT புதுடில்லி:வீட்டு வாசலுக்கே, பெட்ரோல், டீசலை வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். பால், செய்திதாள்கள், வீட்டு வாசலுக்கே வந்து வழங்கப்படுவது போல், பெட்ரோல், டீசலையும், வீட்டு வாசலுக்கே வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பெட்ரோலியத்துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான், ஏப்ரலில் தெரிவித்தார்,அப்போது, அவர் கூறியதாவது: மின்னணு வர்த்தகத்தில், பெட்ரோல், டீசலையும் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதலில், சிறிய மற்றும் நடமாடும் பெட்ரோல், 'பங்க்'கள் அமைக்கப்பட ... |
| ரூ.25 ஆயிரம் கோடியில் உள்நாட்டு பாதுகாப்பு திட்டம் Posted: 27 Sep 2017 11:10 AM PDT புதுடில்லி:"காவல்துறை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது," என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பிரதமர், நரேந்திர மோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த மூன்று நிதியாண்டுகளில் மேற்கொள்ள உள்ள திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் கூறியதாவது:காவல்துறையை நவீனப்படுத்துதல் என்ற திட்டத்தின் கீழ், 2017 -18 மற்றும், 2019-20 நிதி ஆண்டுகளில் ... |
| மத்திய அரசு டாக்டர்கள் 65 வயது வரை பணியாற்றலாம் Posted: 27 Sep 2017 11:16 AM PDT புதுடில்லி:மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களின், ஓய்வு வயது, 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை, ௬௫ ஆக உயர்த்தி, மே மாதம், மத்திய அரசு உத்தரவு இட்டது. இதையடுத்து, மத்திய சுகாதார பணிகளில், 'ஸ்பெஷலிஸ்ட்'களாக உள்ள டாக்டர்களின் ஓய்வு பெறும் வயது, ஜூலையில் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையில், நேற்று, மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசின், மேலும் சில துறைகளில் பணிபுரியும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை, ... |
| 'வார விடுமுறை நாளிலும் போலீசார் வேலைக்கு வரணும்' Posted: 27 Sep 2017 11:50 AM PDT
பிலாஸ்பூர்: 'நக்சல் ஆதிக்க பகுதிகளில் பணிபுரியும் போலீசார், வார விடுமுறை நாட்களிலும் பணிபுரிய வேண்டும்' என்ற பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து, இரண்டு மாதங்களில் முடிவெடுக்கும்படி, சத்தீஸ்கர் அரசுக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநல மனு : சத்தீஸ்கர் மாநிலத்தில், முதல்வர் ரமண் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிலாஸ்பூரில் வசிக்கும் ராகேஷ் யாதவ் என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு: போலீசாருக்கு எட்டு மணி நேர பணி, வார விடுமுறை, நக்சல் போன்ற தீவிரவாத ஆதிக்கத்தில் ... |
| கூர்க்கா போராட்டம், 'வாபஸ்' : டார்ஜிலிங்கில் இயல்பு நிலை Posted: 27 Sep 2017 12:48 PM PDT டார்ஜிலிங்: ஜி.ஜே.எம்., எனப்படும், கூர்க்கா ஜன் முக்கி மோர்ச்சா அமைப்பு, தனி மாநிலம் கோரி, 104 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் கோரிக்கையை ஏற்று, 'வாபஸ்' பெற்றது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மலைப் பகுதியான, டார்ஜிலிங், கலிம்போங், குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதிகளை பிரித்து, கூர்க்காலாந்து என, தனி மாநிலமாக அறிவிக்க, ஜி.ஜே.எம்., தொடர்ந்து கோரி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஜூலைல், காலவரையற்ற ... |
| பாக்., சிறுமிக்கு, 'விசா' : சுஷ்மா நடவடிக்கை Posted: 27 Sep 2017 01:59 PM PDT புதுடில்லி: இதய அறுவை சிகிச்சைக்காக, நம் நாட்டுக்கு வருவதற்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஏழு வயது சிறுமிக்கு, 'விசா' வழங்க, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த, ஹிஜாப் ஆசிப் என்ற பெண், இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு, இந்தியா வருவதற்கான விசா வழங்க, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ், ஜூலையில் உத்தரவிட்டிருந்தார். அப்போது, சுஷ்மா சுவராஜ் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து, அந்த பெண், 'உங்களை, கடவுள் என, கூறுவதா... மிகச் சிறந்த பெண் என கூறுவதா... ... |
| 'போபர்ஸ் வழக்கில் மேல் முறையீட்டுக்கு காங்., அரசு அனுமதிக்கவில்லை' Posted: 27 Sep 2017 02:46 PM PDT புதுடில்லி: போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தொழில் செய்து வரும், இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துஜா சகோதரர்களை விடுதலை செய்யும், டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மத்திய அரசு அனுமதிக்கவில்லை என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர், ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, ராணுவத்துக்கு போபர்ஸ் பீரங்கி வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 65 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. போபர்ஸ் அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் ... |
| வேட்பாளர் செலவு கணக்கில் முறைகேடு: மதுகோடா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை Posted: 27 Sep 2017 04:08 PM PDT
புதுடில்லி: பார்லி.லோக்சபா தேர்தலில் தவறான செலவு கணக்கை காண்பித்த புகாரில் ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடா மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிங்பூம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியி்டு வெற்றி பெற்றார். தேர்தல் விதிமுறையின்படி வேட்பாளர் செலவு கணக்கை தாக்கல் செய்தார் அதில் 18 லட்சத்து 92 ஆயிரத்து 353 ரூபாய் செலவழித்ததாக கூறியிருந்தார். ஆனால் ரூ.9 கோடிக்கு மேல் செலவிட்டதாக புகார் எழுந்தது. 2010-ம் ஆண்டு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 28,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |