Tamil News | Online Tamil News |
- பக்தர்களுக்காக வசதி கேட்டு, தி.மு.க., மனு
- மோடியின், 'ஜிம்' திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திணறல்!
- சூரிய சக்தி மின்சாரம்: தனியாருடன் ஒப்பந்தம்
- அரசு கேபிள், 'டிவி'க்கு மத்திய அரசு, 'கிடுக்கிப்பிடி'
- கட்டண கொள்ளை: ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
- வாய்க்கு வந்தபடி பேசும் மந்திரிகளால் முதல்வர், 'அப்செட்'
- பரவிய வதந்திகளால் பதற்றம்
- கருணாநிதி நலமுடன் உள்ளார்: ஸ்டாலின்
- 'இந்தியாவுக்கு உதவுவோம்!' அமெரிக்கா திட்டவட்டம்
- உ.பி., ராணுவ பள்ளியில் மாணவியர் சேர வாய்ப்பு
- சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி
- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்
| பக்தர்களுக்காக வசதி கேட்டு, தி.மு.க., மனு Posted: 26 Sep 2017 08:55 AM PDT முருக பக்தர்களின் வசதிக்காக, பழநி-சென்னை இடையே, எக்ஸ்பிரஸ் ரயிலில், கூடுதல் பெட்டிகளை இணைக்கும்படி, ரயில்வே அமைச்சரிடம், தி.மு.க., சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. ராஜ்யசபா, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா, நேற்று டில்லியில், ரயில்வேஅமைச்சர், பியுஷ் கோயலை, சந்தித்தார். ரயில்வே துறைக்கு பொறுப்பு ஏற்றதற்காக, பியுஷ் கோயலுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்திய, சிவா, அவரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தார்.கோரிக்கை : அதில், கூறப்பட்டுள்ளதாவது: திருச்சி - பெங்களூரு இடையே, 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' இயக்க வேண்டு மென, நீண்டகால கோரிக்கை உள்ளது. ... |
| மோடியின், 'ஜிம்' திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திணறல்! Posted: 26 Sep 2017 09:10 AM PDT புதுடில்லி: அதிகாரிகள், ஊழியர்களின் உடல்நலனைப் பேணி காக்கும் வகையில், 'ஜிம்' எனப்படும், உடற்பயிற்சிகூடங்கள் அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த போதிய இடமில்லாமல், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் திணறுகின்றன. மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் மனச்சோர்வை குறைக்கும் வகையிலும், நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து அமைச்சகங்கள், துறைகளில், 'ஜிம்' வசதியை ஏற்படுத்த வேண்டும் என, மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பரில் உத்தர விட்டது. ரூ.10 லட்சம் இதற்காக, தனியாக நிதி அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ... |
| சூரிய சக்தி மின்சாரம்: தனியாருடன் ஒப்பந்தம் Posted: 26 Sep 2017 09:51 AM PDT சென்னை: தமிழகத்தில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில், 16 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், நேற்று, முதல்வர் பழனிசாமி முன்னிலையில், நான்கு நிறுவனங்களுடன் கையெழுத்தானது. தமிழகத்தில், 16 நிறுவனங்களிடம் இருந்து, 1,500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை, யூனிட் ஒன்றுக்கு, 3.47 ரூபாய் விலையில் வாங்க, ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதல் பெறப்பட்டது. அந்த வகையில், ஒரு மெகாவாட்டுக்கு, 6 கோடி ரூபாய் வீதம், 1,500மெகாவாட்டிற்கு, 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட ... |
| அரசு கேபிள், 'டிவி'க்கு மத்திய அரசு, 'கிடுக்கிப்பிடி' Posted: 26 Sep 2017 10:10 AM PDT 'அனலாக் ஒளிபரப்பை நிறுத்தி விட்டோம் என, 10 நாட்களுக்குள் உத்தரவாதம் தர வேண்டும்; இல்லையெனில், டிஜிட்டல் உரிமம் ரத்து செய்யப்படும்' என, தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வழியாக, 70 லட்சம் வாடிக்கையாளர்கள், 'அனலாக்' என்ற, சாதாரண தொழில் நுட்பத்தில், 'டிவி' நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும், 'டிஜிட்டல்' ஒளிபரப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதனால், 'டிஜிட்டல்' உரிமம் கோரி, தமிழக .அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் விண்ணப்பித்ததுமே மாதம் அனுமதிவழங்கிய, 'டிராய்' என்ற, மத்திய ... |
| கட்டண கொள்ளை: ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை Posted: 26 Sep 2017 10:19 AM PDT சென்னை: தீபாவளி நெருங்குவதால், பயணியரிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடும், 'ஆம்னி' பஸ்களுக்கு, அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'அதிக கட்டணம் வசூலித்தால், பஸ் உரிமம் ரத்து செய்யப்படும்' என, கண்டிப்புடன் கூறியுள்ளது. தீபாவளி கூட்டத்தை சமாளிக்க, மாநிலம் முழுவதும், 7,000 பஸ்கள் இயக்கவும், அரசு ஏற்பாடு செய்துள்ளது. தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை, பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்தது.இதில், போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை செயலர், டேவிதார், இணை ஆணையர், வேலுச்சாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ... |
| வாய்க்கு வந்தபடி பேசும் மந்திரிகளால் முதல்வர், 'அப்செட்' Posted: 26 Sep 2017 10:36 AM PDT ஜெ., மரணம் தொடர்பாக, அமைச்சர்கள், வாய்க்கு வந்தபடி பேசுவதால், முதல்வர் பழனிசாமி, 'அப்செட்' ஆகி உள்ளார். 'இந்த விவகாரத்தில், அனைவரும் ரகசியம் காக்க வேண்டும்' என, அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 செப்., 22ல், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, ஜெ., அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவரை, மக்கள் பார்க்கவில்லை. சிகிச்சைப் பலனின்றி, டிச., 5ல் இறந்தார்.மருத்துவமனையில் ஜெ., இருந்தபோது, 'அவரை பார்த்தோம்; நலமாக உள்ளார்; விரைவில் வீடு திரும்புவார்.இட்லி சாப்பிட்டார்; அதிகாரிகளுடன் ஆலோசித்தார்' என, தினமும் ஒரு செய்தியை, ... |
| Posted: 26 Sep 2017 10:38 AM PDT தமிழகம் முழுவதும், நேற்று திடீரென பரவிய வதந்திகளால், ஆங்காங்கே பதற்றமும், பீதியும் ஏற்பட்டது. 'மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட, ஆயுதப்படை போலீசார், உடனடியாக தலைமையிடத்திற்கு திரும்ப வேண்டும். மாவட்ட போலீசாரை பயன்படுத்தி, சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, போலீஸ் டி.ஜி.பி., அனுப்பிய கடிதம், நேற்று மாலை வெளியானது.இது, வழக்கமான நடைமுறை என்ற போதிலும், 'மாநிலம் முழுவதும், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஏதோ நடைபெற உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கவே, டி.ஜி.பி., இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்' என, ... |
| கருணாநிதி நலமுடன் உள்ளார்: ஸ்டாலின் Posted: 26 Sep 2017 10:42 AM PDT சென்னை:''தி.மு.க., தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து, நேற்று திடீரென வதந்தி பரவியது. அவரிடம் நலம் விசாரிக்க, சென்னைகோபாலபுரம் இல்லத்திற்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், பொதுச்செயலர் அன்பழகன். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, முன்னாள் அமைச்சர் வீராசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள்சென்றனர்.இதுகுறித்து, ஸ்டாலின் கூறுகையில், ''கருணாநிதி நலமாக உள்ளார். வீண் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை ... |
| 'இந்தியாவுக்கு உதவுவோம்!' அமெரிக்கா திட்டவட்டம் Posted: 26 Sep 2017 10:56 AM PDT புதுடில்லி: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை களில், இந்தியாவின் முயற்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக, அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவ அமைச்சர், ஜேம்ஸ் மாட்டிஸ், நம் ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்தார். அப்போது, இருதரப்பு ராணுவ, பாதுகாப்பு உறவு, பயங்கரவாத பிரச்னை குறித்து இருவரும் விவாதித்தனர்.அப்போது, நம் அண்டை நாட்டில் உள்ள நிலைமை குறித்தும், எல்லைதாண்டி நடத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. 'பயங்கரவாதம்' மிகப் பெரிய ... |
| உ.பி., ராணுவ பள்ளியில் மாணவியர் சேர வாய்ப்பு Posted: 26 Sep 2017 12:26 PM PDT
லக்னோ: உ.பி.,யில் உள்ள, ராணுவ பள்ளியில், முதன்முறையாக, மாணவியரின் சேர்க்கைக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுவதும், ராணுவ பள்ளிகளில், நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடல் தகுதிக்கான மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்தப்படும் இந்த பள்ளிகளில், படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில், உ.பி., மாநிலம், லக்னோவில் உள்ள, ... |
| சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி Posted: 26 Sep 2017 12:55 PM PDT ஜெத்தா: சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்து அந்நாட்டு அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது பெண்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகவும் பார்க்கப்பட்டது. பல உலக மீடியாக்களில் இந்த விவகாரம் பல சமயங்களில் விவாதப்பொருளானது. இந்நிலையில் தற்போது சவுதி அரசர் சல்மான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சவுதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட இனி தடையில்லை எனவும், பெண்களுக்கு வாகனம் ... |
| வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் Posted: 26 Sep 2017 02:01 PM PDT
சென்னை: ''தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளோம்,'' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், உதயகுமார் கூறினார். வடகிழக்கு பருவமழையை ஒட்டி, மேற்கொள்ள வேண்டிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை, எழிலகத்தில், அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. பின், அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகாரிகள் அடங்கிய, மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகும், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய, முன்னெச்சரிக்கை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 27,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |