Tamil News | Online Tamil News |
- மைக்ரோ ஏ.டி.எம்.,முடன் தபால்காரரை களமிறக்க திட்டம் புதுமை!
- 'மக்களின் கருத்தை பிரதிபலிக்கவே மன் கீ பாத் நிகழ்ச்சி'
- பார்லி., குழு தலைவர் பதவியை பா.ஜ.,விடம் இழக்கும் காங்கிரஸ்
- பதவி பறிபோன தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்...தூது!
- ஜெ., இறந்தது எப்படி: சி.பி.ஐ., விசாரணை?
- 30 நாட்களில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி; இரு வாரத்தில் வருது புதிய நடைமுறை
- சீனாவை கண்காணிக்க ஆளில்லா விமானம் வாங்க முடிவு
- கரூரில் 4 நாட்களாக நடந்த வருமான வரி, 'ரெய்டு' முடிந்தது
- 'எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்' ஜெ., மரணத்தில் அமைச்சர் 'அடம்'
- நீர் வளத்துக்கு தனி துறை : தமிழக அரசு முடிவு
- ரயில்வே, 'பிளாட்பார்ம்'களில் கலாசார புத்தகங்கள் விற்பனை
- அகதிகளுக்கு 'சிம்' வழங்க தடை : வங்கதேசம் கட்டுப்பாடு
- தாதா தாவூத் மனைவி மும்பை வந்தது எப்படி?
| மைக்ரோ ஏ.டி.எம்.,முடன் தபால்காரரை களமிறக்க திட்டம் புதுமை! Posted: 24 Sep 2017 09:06 AM PDT புதுடில்லி:வரும், 2018, மார்ச் முதல், பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை, தபால்காரர் எடுத்து வரும், நவீன சாதனம் மூலம் நிறைவேற்றும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது. இந்திய தபால் துறை, 'பேமென்ட் பேங்க்' எனப்படும், வங்கி சேவையை நடத்தி வருகிறது. ரிசர்வ் வங்கி அனுமதியுடன் நடத்தப்படும், இந்த சேவையில், வாடிக்கையாளர்கள், அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்த தொகை, வருங்காலத்தில்,அதிகரிக்கப்படலாம். இவ்வகை வங்கிகள், கடன் தரவோ, கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகளை வினியோகிக்கவோ முடியாது. இந்நிலையில், 2018, ... |
| 'மக்களின் கருத்தை பிரதிபலிக்கவே மன் கீ பாத் நிகழ்ச்சி' Posted: 24 Sep 2017 09:09 AM PDT புதுடில்லி:''மக்களின் கருத்துக்களை, விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையிலேயே, 'மன் கீ பாத்' ரேடியோ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். 2014, அக்., 2ல் துவக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளது. தன் கருத்துக்களை சொல்வதற்காகவே, மோடி, இந்த ரேடியோ நிகழ்ச்சியை நடத்துவதாக, சில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.அதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று ஒலிபரப்பான, 36வது, மன் கீ ... |
| பார்லி., குழு தலைவர் பதவியை பா.ஜ.,விடம் இழக்கும் காங்கிரஸ் Posted: 24 Sep 2017 09:14 AM PDT புதுடில்லி:ராஜ்யசபாவில், காங்., கட்சியின் பலம் குறைந்துள்ளதால், முக்கியத்துவம் வாய்ந்த, பார்லி., நிலைக்குழுவின் தலைமை பொறுப்பை, பா.ஜ.,விடம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்கள் அடங்கிய, எட்டு பார்லிமென்ட் நிலைக்குழுக்களில், மூன்றின் தலைவர்களாக, காங்., கட்சியை சேர்ந்த, எம்.பி.,க்கள் உள்ளனர். பா.ஜ.,வை சேர்ந்த, எம்.பி.,க்கள் இரண்டிலும், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்., கட்சிகளின், எம்.பி.,க்கள், தலா ஒன்றிலும் தலைவர்களாக உள்ளனர்.உள்துறை விவகாரம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பணியாளர் குறைகள், சட்டம், நீதி ஆகிய மூன்று ... |
| பதவி பறிபோன தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்...தூது! Posted: 24 Sep 2017 09:40 AM PDT பதவி பறிபோன தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், 'எங்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்; பெரிய பதவிகள் வேண்டாம்; கட்சியில் அங்கீகாரம் தந்தால் போதும்' என, முதல்வர் பழனிசாமிக்கு, துாது அனுப்பி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனால், தங்களின் அரசியல் எதிர்காலம் நாசமாகி விட்டதாகவும் புலம்பி உள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் அணியைச் சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது, கட்சி தாவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா பரிந்துரை ... |
| ஜெ., இறந்தது எப்படி: சி.பி.ஐ., விசாரணை? Posted: 24 Sep 2017 10:07 AM PDT சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில், 'மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஜெ., மரணம் தொடர்பாக, பல்வேறு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 'ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி, ஒரு மாதமாகியும், இன்னும் விசாரணை நடத்த, நீதிபதி நியமிக்க படவில்லை. இந்நிலையில், பொதுகூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், 'ஜெ., மரணத்திற்கு, சசிகலா தான் காரணம்; ... |
| 30 நாட்களில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி; இரு வாரத்தில் வருது புதிய நடைமுறை Posted: 24 Sep 2017 10:28 AM PDT மத்திய அரசின் கிடுக்கிப் பிடியால், கட்டுமான திட்டங்களுக்கான அனுமதியை, ஒற்றைச் சாளர முறையில், 30 நாட்களில் வழங்கும் புதிய நடைமுறையை, இரு வாரங்களில், தமிழக அரசு துவக்க உள்ளது. இதனால், திட்டபணிகள் வேகம் பெறுவதோடு, புதிய முதலீடுகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.முடுக்கி விட்டுள்ளது நாடு முழுவதும், கட்டுமான திட்டங்களுக்கான அனுமதியை, 30 நாட்களில் வழங்கும் பணிகளை, மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன்படி, பல்வேறு மாநிலங்களிலும், ஒற்றை சாளர முறையில், திட்ட அனுமதி வழங்கும் நடைமுறை துவங்கி உள்ளது.ஆனால், தமிழகத்தில், இந்த பணிகள் ஆமை ... |
| சீனாவை கண்காணிக்க ஆளில்லா விமானம் வாங்க முடிவு Posted: 24 Sep 2017 10:34 AM PDT புதுடில்லி:கடற்பகுதிகளில், உளவு வேலைக்கு பயன்படும், உலகின் அதிநவீன, ஆளில்லா சிறு விமானங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, அமெரிக்காவிடம் இருந்து வாங்க, இந்தியா திட்டமிட்டுள்ளது. சீனா, கடற்பகுதிகளில், தன் ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க ராணுவ அமைச்சர், ஜேம்ஸ் மாட்டிஸ், அரசு முறைப்பயணமாக, 26 - 28 தேதிகளில், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.அப்போது, இரு தரப்பு ராணுவ உறவை மேம்படுத்தும் வகையில், பேச்சுகளில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. உலகின் ... |
| கரூரில் 4 நாட்களாக நடந்த வருமான வரி, 'ரெய்டு' முடிந்தது Posted: 24 Sep 2017 10:45 AM PDT கரூர்:கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் நான்கு நாட்களாக, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நேற்று முடிந்தது. கரூரைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், நிதி நிறுவனம் மற்றும் வீடுகளில், 21ம் தேதி முதல், வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 60 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிகிறது. மேலும், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய், தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் ... |
| 'எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்' ஜெ., மரணத்தில் அமைச்சர் 'அடம்' Posted: 24 Sep 2017 10:50 AM PDT திண்டுக்கல்:''ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் உண்மை தெரிந்தாக வேண்டும்,'' என அமைச்சர் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் நேற்று அவர் கூறியதாவது: ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, சசிகலா குடும்பத்தினர் தான், உள்ளே சென்று அவரை பார்த்து வந்தனர். 'இட்லி சாப்பிட்டாங்க, காபி சாப்பிட்டாங்க, சுவீட் கொடுத்தாங்க' என, தெரிவித்தனர். அதை நாங்கள் மக்களிடம் தெரிவித்தோம்.அப்பல்லோ மருத்துவமனையில் தான் கண்காணிப்பு கேமரா இருந்தது. ஜெ., சிகிச்சையில் இருந்த வீடியோ குறித்து, மருத்துவமனை நிர்வாகம் தான் விளக்க வேண்டும். ஜெ.,யை யாரும் பார்க்க விடாமல் ... |
| நீர் வளத்துக்கு தனி துறை : தமிழக அரசு முடிவு Posted: 24 Sep 2017 11:50 AM PDT
பொதுப்பணித் துறையில் இருந்து, நீர் வளத்துறையை பிரித்து, பிரத்யேக துறையாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர்வளத் துறை, நீராய்வு நிறுவனம், கொதிகலன் இயக்கம் உட்பட, பல பிரிவுகள் உள்ளன. கட்டடங்கள் பிரிவின் கீழ், உயர் நீதிமன்றம், அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. நீர் வளத் துறையானது, அணைகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு போன்றவற்றை கவனிக்கிறது. நீர்வழித்தடங்களை மேம்படுத்தும் பணியையும் மேற்கொள்கிறது. கேரளா, கர்நாடகா ... |
| ரயில்வே, 'பிளாட்பார்ம்'களில் கலாசார புத்தகங்கள் விற்பனை Posted: 24 Sep 2017 12:40 PM PDT
புதுடில்லி: 'ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை கடைகள் அனைத்திலும், நம் நாட்டின் கலாசாரம் தொடர்பான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும்' என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. புதிய கொள்கை : ரயில்வே வாரியம், சமீபத்தில், ரயில்வே பொதுமேலாளர்களுக்கு, வணிக ரீதியிலான சுற்றறிக்கை அனுப்பியுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை கடைகள் தொடர்பாக, புதிய கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடைபாதையிலுள்ள புத்தக ஸ்டால்கள், மருந்து கடைகள், கலைப் பொருள் விற்பனை நிலையங்கள் ஆகிய அனைத்து ... |
| அகதிகளுக்கு 'சிம்' வழங்க தடை : வங்கதேசம் கட்டுப்பாடு Posted: 24 Sep 2017 02:03 PM PDT
தாகா: மியான்மரில் இருந்து வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு, அலைபேசி 'சிம்' கார்டுகளை விற்பனை செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள், அண்டை நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு 'சிம்' விற்பனை செய்வதற்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சர் தரனா ஹாலிம் ... |
| தாதா தாவூத் மனைவி மும்பை வந்தது எப்படி? Posted: 24 Sep 2017 02:55 PM PDT
புதுடில்லி: 'நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமின் மனைவி, மும்பைக்கு ரகசியமாக வந்து சென்றது குறித்து, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்' என, காங்கிரஸ் கூறியுள்ளது. நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமின் சகோதரன், இக்பால் ரஹீம் கஸ்கர், சமீபத்தில் கைது செய்யப்பட்டான். தாவூத்தின் மனைவி, மெஹஜாபின் ஷேக், 2016ல், மும்பை வந்து, பெற்றோரை சந்தித்ததாக, கஸ்கர் விசாரணையில் தெரிவித்தான். இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:ஒரு பயங்கரவாதியின் மனைவி, மும்பைக்கு வந்து சென்றுள்ளது, மஹாராஷ்டிரா ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 25,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |