Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)

Posted: 24 Sep 2017 09:18 AM PDT

அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை) ஓக் மரத்து இலை ஒன்று ! அது குளிராலும், வெப்பத்தாலும், துக்கத்தாலும்- வாடியிருந்தது ! ஸ்டெப்பிப் புல்வெளியைக் கடந்து- இரக்கமற்ற புயலால் கடைசியாக – கருங்கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது! கருங்கடல் கரையில் நின்றது – ஓர் இளைய பிளேன் மரம்! காற்று பிளேன்மரக் கிளைகளைத் தடவிக்கொடுத்தது! மென்மையான பறவைகள் கிளைகளிலிருந்து- கடல் அரசியைப் பற்றிப் பாடிக்கொண்டிருந்தன! பிளேன் மரத்து நிழலில் ஒதுங்கியது – அந்த ஓக் இலை! ஓக் இலை சொன்னது ...

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)

Posted: 24 Sep 2017 09:12 AM PDT

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்) உழவர்கள் மகிழ்வாய் இருக்கின்றனரே! அறுவடை நேரத்தில் உழவர்கள்- இன்பமாய் இருக்கின்றனரே! ஒவ்வொரு பட்டுப் புழுவையும் விலைக்கு விற்கிறார்களே! அரிசியை ஏராளமாய் அடித்துச் சேர்க்கிறார்களே! வீட்டு வாடகையை – ஒழுங்காய்க் கொடுக்கிறார்களே! வரிகளையும் அவர்கள்- ஒழுங்காய்க் கட்டுகிறார்களே! நிலவு வெளிச்சத்தில் – உழவர்கள் எல்லாமும் செய்கிறார்களே! இரவுக் காற்றை அனுபவிக்கிறார்களே! 'ஹா ஹா' என்று சிரிக்கிறார்களே! மகிழ்ச்சியான உழவர்கள்! – மிக்க மகிழ்ச்சியான ...

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....

Posted: 24 Sep 2017 09:00 AM PDT

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 25 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்துள்ளது.   முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றும். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ...

எல்லாம் பிறர்க்காகவே!

Posted: 24 Sep 2017 08:32 AM PDT

எல்லாம் பிறர்க்காகவே! மலர்கள் பரப்பும் நறுமணம் மயக்க வைக்கின்றன ஆனாலும் மணம் முழுவதும் சோலைகளுக்கு சொந்தமில்லை! -- சுவை தரும் கனிகள் நாவிற்கு விருந்தளிக்கின்றன ஆனாலும் கனிகள் முழுவதும் மரங்களுக்கு சொந்தமில்லை! - நிலத்தில் விளையும் தானியங்கள் பசி போக்குகிறது ஆனாலும் அவை நிலத்திற்கு சொந்தமில்லை! - குளத்தில் நிறையும் மழைநீர் தாகம் தீர்க்கிறது ஆனாலும் நிறைகின்ற நீர் முழுவதையும் கன்று குடிப்பதில்லை! - பசுவின் பால் ஊட்டம் தருகிறது ஆனாலும் பால் முழுவதையும் கன்று ...

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)

Posted: 24 Sep 2017 08:18 AM PDT

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்) இடது கையில் டிரம்! வலது கையில் தாளம்! டிரம்மையும் தாளத்தையும் கொண்டு நாம் பாட்டுப் பாடுவோமே! வேற பாட்டு எதுவும் எனக்குத் தெரியாதே! மிகவும் மோசம் ! மிகவும் மோசம் ! என் விதி மிகவும் மோசம் ! எப்போதுமே எனக்குத் துணை- சரியாக அமையவில்லையே! பணக்காரர்கள் எல்லாமே – இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே!- இந்த முதியவர் மட்டும் எப்போதும் - டிரம்தானே வாசிக்கீறார்? மோசம் ! மிக மோசம் !எனது விதி மிகவும் மோசம் ! என் வாழ்க்கை ...

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)

Posted: 24 Sep 2017 08:15 AM PDT

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்) ஒருநாள் காலை எழுந்திருந்தேன்! போய் வருகிறேன் , என் அழகே! போய்வருகிறேன், என் அழகே! ஒருநாள் காலை எழுந்திருந்தேன்! அப்போ- படையெடுத்து வந்தோர் திரண்டு வந்தனர் ! ஓ! இத்தாலிய வீரனே! என்னை எடுத்துச் செல் ! போய்வருகிறேன், என் அழகே! ஓ! இத்தாலிய வீரனே ! நீ என்னை எடுத்துச் செல்!- நான் இறப்பதைப்போல நினைக்கிறேன் ! நான் ஒரு இத்தாலிய வீரனாக இறந்தால், நீ என்னைப் புதைக்க வேண்டும்!- அங்கே மலை மீது புதைக்கவேண்டும் ! போய் வருகிறேன் , என் அழகே! போய்வருகிறேன், ...

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது

Posted: 24 Sep 2017 06:54 AM PDT

உஸ்மனாபாத், மகாராஷ்டிராவில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் 12.03 மணியளவில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.  அந்த குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் என பெற்றோரால் பெயரிடப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். இந்நிலையில், 12.09 மணியளவில் ஆன்லைன் வழியே அந்த பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆதார் எண்ணும் கிடைத்துள்ளது.  இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ண கேம் தெரிவித்துள்ளார். இது உஸ்மனாபாத்திற்கு பெருமை ...

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு

Posted: 24 Sep 2017 06:33 AM PDT

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 24 Sep 2017 05:58 AM PDT


-

-
-

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)

Posted: 24 Sep 2017 05:55 AM PDT

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை) அழகுக்கு எடுத்துக்கட்டு நீதான் ! தேவதைக்கு நீ மாதிரி! உனது தோற்றத்தால் – சந்தேகமே இல்லை ,நீ கடவுளால் எனக்கு அளிக்கப்பட்டவள்! உனக்கு யாரும் ஈடு இல்லை! இணையுமில்லை! தேவதையானாலும்- உன் அருகில் நிற்கமுடியாது ! ஆனால்- ஒன்றை நினைவிலே கொள்! அழகின் வாழ்வு என்பது- கொஞ்ச நாள்தான் ! உனக்கு- எங்கு சென்றாலும் வெற்றி கிட்டட்டும் ! அழகு அழகான எண்ணங்கள்- உன் உணர்ச்சிகளில் பொங்கட்டும் !- என்றும் ! எப்போதும் ! ('SUNDARTAKO TIMI' என்ற நேபாளக் ...

நேபாளிக் காதல் கவிதை !

Posted: 24 Sep 2017 05:43 AM PDT

நேபாளிக் காதல் கவிதை ! நினைப்பை ஏற்படுத்தும் நெஞ்சை நாம்- மாற்றுவதே நல்லது! வலியை எற்படுத்தும் நெஞ்சை நாம்- மாற்றுவதே நல்லது ! ஒவ்வொரு இரவும் நல்ல நல்ல கனவுகள்! ஆனால் – அவ்வளவும் சிதறிச் சிதறி உள்ளனவே! சிதறிய கனவால் என்ன பயன்? கனவே வேண்டாம் கண்களை மூடிக்கொள்ளலாம்! வாழ்க்கை என்றால் – மகிழ்ச்சி இன்பம் என்றிருந்தேன் ! ஆனால்- அன்புடையவராலே ஏமாற்றம் ஏற்படுகிறதே? அர்த்தமற்ற இந்த உலகத்திலே – இருப்பதைவிட இறப்பதே மேலல்லவா? (SAMJHINE MUTU (EDGE BAND) – என்ற நேபாளிக் கவிதையை ஆங்கிலத்திலிருந்து ...

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்

Posted: 24 Sep 2017 03:48 AM PDT

புதுடில்லி: ''சட்டம், ஏழை மக்களுக்கு எட்டாத, விலை உயர்ந்த பொருளாகி விட்டது,'' என, சட்ட ஆணைய தலைவர், பி.எஸ்.சவுகான் பேசினார். விலையுயர்ந்த பொருள்டில்லியில், சிறை கைதிகள் உரிமை தொடர்பான கருத்தரங்கு, நேற்று நடந்தது. இதில், தேசிய சட்ட ஆணையத்தின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி, பி.எஸ்.சவுகான் பேசியதாவது: - சட்டம், ஏழை மக்களுக்கு எட்டாத, விலைஉயர்ந்த பொருளாகி விட்டது. ஏழை கைதிகள், ஜாமின் பெறுவது கடினமாக உள்ளது. ஆனால், பணக்காரர்களுக்கு, முன்ஜாமின் பெற்றுத் தர, வ ழக்கறிஞர்கள் போட்டி போடுகின்றனர். ...

புதிரான போர் - கவிதை

Posted: 24 Sep 2017 03:46 AM PDT

காதல்  - புதிரான போர் தோற்றவர்களையே வரலாறு தோளில் சுமக்கும்! - ----------------------- காதல் - கவிதை - பூக்களோடு தான் புறப்பட்டு வரும்! போரையே நிகழ்த்தி விட்டுப் போய்விடும்! - ------------------- விழிகள் பற்றவைக்க இதழ்கள்நெய் வார்க்க இதயத்தில் பிடிக்கும் தீ! - -------------------- = -நெல்லை ஜெயந்தா தென்றலோடு சில தினங்கள் - தொகுப்பிலிருந்து

பேதம் இல்லாத காதல் - கவிதை

Posted: 24 Sep 2017 03:45 AM PDT

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்

Posted: 24 Sep 2017 03:43 AM PDT

கூட்டு குடும்பம் - கவிதை

Posted: 24 Sep 2017 03:40 AM PDT

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...

Posted: 24 Sep 2017 03:37 AM PDT

வேலுபிரபாகரனின் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான படம் கடவுள். அப்படத்தில் நாத்திகத்திற்கு எதிரான பல கருத்துகள் இடம் பெற்றிருந்தது. அதில் வேலுபிரபாகரன் நடித்திருந்தார்.    அதன் பின் அவர் 2009ம் ஆண்டு இவர் இயக்கிய 'காதல் கதை' படம் வெளிவந்தது. அப்படத்தில் நடித்த ஷிர்லி தாஸையே அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சமீபத்தில் அவர் இயக்கிய 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' படம் வெளிவந்தது.   இந்நிலையில், கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். ...

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்

Posted: 24 Sep 2017 01:22 AM PDT

காதல் என்பது...

Posted: 24 Sep 2017 12:51 AM PDT

அடிபடுகையில்  மகிழ்ச்சி! விடுதலையாகையில் விரக்தி! எப்படி வந்தது இப்படி ஒரு சிறை! - -------------------- - பருவப் போராட்டம்! கண்களின் பேச்சு வார்த்தையை இதயங்கள் ஏற்றால் உயிர்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தம்! - ---------------------- - விசித்திர விவசாயம்! விதைகள் விருப்பப்படும் வாலிபம்! அறுவடைக்கே ஆசைப்படும்  வயோதிகம்! - ---------------------- - -நெல்லை ஜெயந்தா தென்றலோடு சில தினங்கள் - தொகுப்பிலிருந்து

காதல் - கவிதை

Posted: 24 Sep 2017 12:50 AM PDT

காதல் கவிதை - சிறகுகள் இரண்டு சேரும்! இருந்த ஓர் இதயம் தொலையும்! - - ---------------------- காதல் - கவிதை - புதிரான போர் தோற்றவர்களையே வரலாறு தோளில் சுமக்கும்! - ----------------------- காதல் - கவிதை - பூக்களோடு தான் புறப்பட்டு வரும்! போரையே நிகழ்த்தி விட்டுப் போய்விடும்! - ------------------- -நெல்லை ஜெயந்தா தென்றலோடு சில தினங்கள் - தொகுப்பிலிருந்து _________________

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Posted: 24 Sep 2017 12:44 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!

Posted: 23 Sep 2017 06:00 PM PDT


-

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!

Posted: 23 Sep 2017 05:51 PM PDT

நவ எனும் சொல், மிக சிறப்பு வாய்ந்தது. இதற்கான பொருள் இரண்டுமே, பொருத்தமாய் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஒன்று, ஒன்பது; மற்றொன்று புதியது. ஆக, இந்த நவராத்திரியை, ஒன்பது ராத்திரிகள் என்று பொருள் கொள்வதைவிட, புதிய ராத்திரிகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற வரிசைப்படி பார்த்தால், முதலில் பிரம்மா, பின், விஷ்ணு, முடிவில், சிவன் இம்மூவரின் துணைவியர் முறையே சரஸ்வதி,லட்சுமி, துர்க்கை என்று தான் வர வேண்டும் ஆனால், நவராத்திரியின்போது, இந்த ...

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை

Posted: 23 Sep 2017 05:46 PM PDT

- கவுகாத்தி, அசாம் மாநிலம், கவுகாத்தியில், துர்கா பூஜையையொட்டி, 5,000 மூங்கில்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள, 101 அடி உயர துர்கா சிலை, 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்தா சோனவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், கவுகாத்தி நகரில், துர்கா பூஜை கொண்டாட்டத்தையொட்டி, பிஷ்னுபூர் சர்போஜன் துர்கா பூஜை கமிட்டிக்காக, 101 அடி உயர, துர்கா சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 5,000 மூங்கில்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. கலை இயக்குனர், ...

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!

Posted: 23 Sep 2017 05:41 PM PDT

'இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' கிடைப்பது சிரமம்' என, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 2011 முதல், லேப் - டாப்களை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதுவரை, 40 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2016 - 17 கல்வியாண்டில், லேப் - டாப் கொள்முதலுக்கு, 'டெண்டர்' விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது, இந்த கல்வியாண்டிலும், அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்ப ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™