Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நிம்மதியை தந்த நீதிமன்ற உத்தரவுகள்! சசி குடும்பம் மட்டும் கதிகலக்கம்

Posted: 23 Sep 2017 06:06 AM PDT

சென்னை உயர் நீதிமன்றமும், டில்லி சி.பி.ஐ., நீதிமன்றமும் வழங்கிய உத்தரவுகள், தமிழக அரசியல் கட்சிகளிடமும், பொது மக்களிடமும், நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.அக்., 4 வரை, ஆளும் கட்சியும், அடுத்த மாதம், 25ம் தேதி வரை, தி.மு.க.,வும் அமைதி காக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்தினருக்கு மட்டும், இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, தமிழக அரசியல்களத்தை, நாடே உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க முயன்றதினகரன் ஆதரவாளர்கள்,18 பேரின் எம்.எல்.ஏ., பதவியை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சபாநாயகர் தனபால் ...

உள்நாட்டிலேயே நவீன நீர்மூழ்கி கப்பல் தயாரித்து... சாதனை! கடல் பகுதி கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை

Posted: 23 Sep 2017 06:25 AM PDT

புதுடில்லி, டீசல் மற்றும் எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பத்தில் இயங்கும், அதிநவீன நீர்மூழ்கி கப்பல், 'கல்வாரி' உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, கப்பல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம், நம் கடற் படையின் பலம் மேலும், அதிகரிப்பதுடன், கடல் பகுதியில் எதிரிகளை கண்காணிக்கும் பணி வேகமெடுக்குமென எதிர்பார்க்கபடுகிறது.

நம் நாட்டின் நீர்மூழ்கி கப்பல் பலம் குறைந்து வருகிறது. டீசல் மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்கள், 21 இருந்தன; இது, பல்வேறு காரணங்களால், 13 ஆக குறைந்து விட்டன.பல ஆண்டுகளாக, பழைய கப்பல்களை மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படவில்லை; இதனால், ஏற்கனவே ...

சசிகலாவால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்து விவரம்... சேகரிப்பு..!

Posted: 23 Sep 2017 06:40 AM PDT

பழனிசாமி ஆட்சியைக் கலைக்க முயலும், சசி கும்பலின் ஆட்டத்தை அடக்கும் வகையில், ஜெ., உயிருடன் இருந்தபோது சசிகலா, மற்றவர்களை மிரட்டி வாங்கிய சொத்துக் களின் விவரங்கள் திரட்டப்படுகின்றன. ஆதாரங்கள் முழுமையாக கிடைத்தவுடன், அவற்றை வைத்து, சசிகலா மீது வழக்கு போடலாம் என, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

முதல்வராக இருந்த, ஜெ., இறந்த பின், அப் பதவியில் அமர முயன்றார் சசிகலா; ஆனால், அ.தி.மு.க.,வின் மற்ற உறுப்பினர்கள், பன்னீர்செல்வத்தை முதல்வராக அமர்த்த விரும்பினர். வேறு வழியில்லாமல் அதைச் செய்த சசிகலா, அவரை, பல வகைகளில் அவமானபடுத்தினார். இதனால், பதவியை ...

'கட்சியை விட நாட்டின் வளர்ச்சியே முக்கியம்'

Posted: 23 Sep 2017 08:14 AM PDT

வாரணாசி, ''ஓட்டு வங்கி அரசி யலுக்காக நிர்வாகம் செய்வது முக்கியமல்ல; கட்சியின் வளர்ச்சியை விட, நாட்டின் வளர்ச்சியே முக்கியம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதி, எம்.பி.,யான, பிரதமர் மோடி, இங்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாரணாசியில் நேற்று, விவசாயிகளுக்கான நலதிட்ட துவக்க விழாவில், அவர் பேசிய தாவது:தேர்தலில் வெற்றி பெறுவது அல்லது ஓட்டுவங்கி அரசியலுக்காக நிர்வாகம் செய்வது, எங்களுக்கு முக்கியமல்ல. நாட்டின் வளர்ச்சியே, எங்கள் லட்சியம். கட்சியை விட, நாட்டின் வளர்ச்சியையே ...

இணையத்தை பயன்படுத்தும் பயங்கரவாதிகளால் ஆபத்து! உலக நாடுகள் ஒன்றிணைந்து தடுக்க வலியுறுத்தல்

Posted: 23 Sep 2017 09:20 AM PDT

நியூயார்க், 'பயங்கரவாதிகள், விஷம கருத்துக்களை பரப்பவும், தாக்குதல்களை நடத்தவும், இணையத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இந்த ஆபத்தை தடுக்க, உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, ஐ.நா., சபையிடம், இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பமான இணையம், ஆக்க சக்திக்கு பயன்படுவதை போலவே, பயங்கர வாதிகளின் கைகளில் சிக்கி, அழிவுக்கும் வழி வகுக்கிறது. உலகின் பல நாடுகளில், பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய பல தாக்குதல்களுக்கு, இணையம், மிக முக்கிய கருவியாக பயன்பட்டுள்ளது. அது போலவே, சமூகவலைதளங்கள் வாயிலாக, பயங்கர வாதிகள், விஷம ...

'தி.மு.க., குடும்ப கட்சி தான்!'

Posted: 23 Sep 2017 10:25 AM PDT

சென்னை, 'தி.மு.க., குடும்ப கட்சி தான்' என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:உட்கட்சி தேர்தலை முறைப்படி நடத்த, தேவையான நடைமுறைகளும் துவங்கி உள்ளன. அதற்காக, புதிய உறுப்பினர்களை சேர்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.
பல்வேறு நெருக்கடி
தி.மு.க.,வில் உறுப்பினராக சேர, 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், உறுப்பினர் சேர்ப்பு அமைய வேண்டும். உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல், நவ., 15ல் நிறைவு பெறுகிறது. ...

'மாஜி' செந்தில் பாலாஜி சொந்தங்கள் ரூ.60 கோடி வரி ஏய்ப்பு அட்டகாசம்

Posted: 23 Sep 2017 10:32 AM PDT

வருமான வரித்துறையினர் மூன்று நாட்களாக நடத்திய சோதனையில், 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்தங்கள் பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டு,60 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்து உள்ளது. பினாமிகள் பெயரில் இருந்த, 10 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கிய வரித்துறை, அவை யாருடையன என,'கிடுக்கிப்பிடி'விசாரணையை துவக்கி உள்ளது.

கரூரைச் சேர்ந்தவர், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி. தினகரன் ஆதரவாளரான இவரின், எம்.எல்.ஏ., பதவி, சமீபத்தில் பறிக்கப்பட்டது.இந்நிலையில், கரூரில் உள்ள அவரின் நெருங்கிய நண்பர்களின் ...

நாங்கள் சொன்னதெல்லாம் பொய் மன்னிச்சிருங்க

Posted: 23 Sep 2017 10:47 AM PDT

மதுரை:முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்து, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ''ஜெ., சிகிச்சை பெற்ற போது யாருமே பார்க்கவில்லை; இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என சொன்னதெல்லாம் பொய்,'' எனக்கூறி பகிரங்க மன்னிப்பு கேட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

மேலும், ''ஜெ., சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ காட்சிகள் உள்ளதாக தினகரன் தரப்பினர்கூறுகின்றனர். அதை வெளியிட வேண்டியதுதானே. வெளியிட்டால் அனைவருக்கும் சந்தேகம் தீரும்,'' என சவால் விடுத்தார்.மதுரையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம், நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. ...

'மாஜி' செந்தில் பாலாஜிக்கு இறுகுகிறது வளையம்

Posted: 23 Sep 2017 10:54 AM PDT

கரூர்:கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில், ஏராளமான ஆதாரங்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளன; இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடக்க உள்ளது.

கடந்த, 21 முதல், கரூரில், தினகரன் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானோர், வருமான வரித் துறை சோதனையில் சிக்கி உள்ளனர். இவர்களின், ஜவுளி நிறுவனம், நிதி நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை, 10:00 மணி முதல், ஆர்த்தி ஏ டிரேடர்ஸ் ...

'ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்

Posted: 23 Sep 2017 12:12 PM PDT

புதுடில்லி: ''சட்டம், ஏழை மக்களுக்கு எட்டாத, விலை உயர்ந்த பொருளா கிவிட்டது,'' என, சட்ட ஆணைய தலைவர், பி.எஸ்.சவுகான் பேசினார்.விலையுயர்ந்த பொருள்டில்லியில், சிறை கைதிகள் உரிமை தொடர்பான கருத்தரங்கு, நேற்று நடந்தது.

என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள்; மனுவை பரிசீலிக்க உத்தரவு

Posted: 23 Sep 2017 01:13 PM PDT

சென்னை: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில் பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் புருஷோத்தமன், தாக்கல் செய்த மனு:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆரம்ப நிலையில் உள்ளகுழந்தைகளுக்கு, மூன்றுஅல்லது நான்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.இந்த குழந்தைகளுக்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் ...

கல் வீசும் குற்றவாளிகளை சிறையில் அடைக்க திட்டம்

Posted: 23 Sep 2017 02:06 PM PDT

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்தினர் மீது, கல் வீசும் இளைஞர்களை, வழக்கமான சிறைகளில் அடைப்பதற்கு பதில், புல்வாமாவில் உள்ள, சிறப்பு சிறையில் அடைத்து, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில், அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து, ராணுவத்தினர் மீது கல் வீசும் இளைஞர்களை கைது செய்யும் போலீசார், அவர்களை, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வந்தனர்.
கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை, மற்ற ...

மாடுகள் வாங்க அதிகாரிகள் ஆந்திரா பயணம்

Posted: 23 Sep 2017 03:12 PM PDT

தமிழகத்தில், பயனாளிகளுக்கு இலவசமாக கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு, மாடுகளை வாங்குவதற்காக, அதிகாரிகள், ஆந்திரா சென்றுள்ளனர்.
தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, ஆறு ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும், பெண்களுக்கு, இலவசமாக, ஆடு மற்றும் கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும், 2016ல், கடும் வறட்சி நிலவியதால், இலவச, ஆடு, மாடு வழங்கும் திட்டம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சில இடங்களில், மீண்டும் மழை பெய்ய துவங்கியதால், இத்திட்டங்களுக்காக, பெண் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி துவங்கியது. இதற்காக, மாடுகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™