Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தினகரன் கூடாரம் காலியாகிறது

Posted: 22 Sep 2017 07:52 AM PDT

தினகரன் ஆதரவு எம்.பி., வசந்தி முருகேசன், நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அணி மாற திட்டமிட்டிருப்பதால், தினகரன் கூடாரம் காலியாகிறது.

டில்லி, திஹார் சிறையில்இருந்து, தினகரன் வெளியில் வந்தபோது,37 எம்.எல்.ஏ.,க்கள், சென்னையில் அவரை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும்,தினகரனை ஓரங்கட்டியதும், அவரின் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில் பலரும் அணி மாறினர். இறுதியாக,19 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், தினகரன் பக்கம் சென்றனர்.
தகுதி நீக்கம்
மேலும், பலஎம்.எல்.ஏ.,க்கள், ...

திருமண மோசடி செய்யும் என்.ஆர்.ஐ., பாஸ்போர்ட் ரத்து!

Posted: 22 Sep 2017 08:43 AM PDT

புதுடில்லி: 'என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களை திருமணம் செய்து பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், என்.ஆர்.ஐ.,யின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யலாம்' என, மத்திய அரசுக்கு உயர்நிலை நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.

'திருமணத்துக்கு பின் மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதில்லை; அங்கு அவர்களை கொடுமைபடுத்துகின்றனர்' என, என்.ஆர்.ஐ.,க்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன.தேசிய பெண்கள் ஆணையத்தின் தகவலின்படி, 2014ல் மட்டும், என்.ஆர்.ஐ.,க்களை திருமணம் செய்த பெண்கள், 346 புகார்களை அளித்துள்ளனர். இதை தடுக்கவும், ...

பாக்., பிரதமர் பேச்சுக்கு ஐ.நா.,வில் இந்தியா சவுக்கடி!

Posted: 22 Sep 2017 08:49 AM PDT

நியூயார்க்: ஐ.நா., சபையில், பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு, இந்தியா சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.

'டெரரிஸ்தானாக' மாறியுள்ள பாகிஸ்தானில், பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் தொழில், மிகவும் சிறப்பாக நடக்கிறது என்றும், பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்காவின், நியூயார்க் நகரில், ஐ.நா., சபையின் ஆண்டு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பேசிய, பாக்., பிரதமர், ஷாகித் கஹான் அப்பாஸி, 'பாக்., மீது, இந்தியா மறைமுகப் போரை தொடுத்து வருகிறது. 'பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையில், அதிகளவு செலவிடும் பாக்., மீது, பொய் புகார்கள் கூறப்படுகின்றன. எங்கள் நாடு, ...

மேற்கு வங்கத்தில் மக்களை ஈர்க்க துர்கா பூஜை கொண்டாடும் கம்யூனிஸ்டுகள்

Posted: 22 Sep 2017 09:54 AM PDT

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில், மக்கள் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்த ஆண்டு, துர்கா பூஜை விழா கொண்டாடி வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலத்தில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி, முதல்வராக உள்ளார். இங்கு, ஆண்டு தோறும், துர்கா பூஜை, உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மக்களை ஈர்க்க இந்த ஆண்டு துர்கா பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது; வரும் விஜயதசமியுடன் விழா நிறைவுபெறுகிறது. இந்த விழாவில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், ஆண்டுதோறும் பங்கேற்பது வழக்கம். ஆனால், மார்க்சிஸ்ட் ...

முடக்கப்பட்ட அ.தி.மு.க., சின்னம் பெற பழனிசாமி...முனைப்பு

Posted: 22 Sep 2017 10:08 AM PDT

தேர்தல் கமிஷன் முடக்கிய, அ.தி.மு.க., மற்றும் இரட்டை இலை சின்னத்தை பெற, முதல்வர் பழனிசாமி தரப்பு, முனைப்பு காட்டி வருகிறது. இரண்டு அணிகள் இணைந்ததற்கான ஆவணங்கள் மற்றும் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பெறுவதற்கான மனு, டில்லியில், நேற்று தலைமை தேர்தல் கமிஷனிடம் அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டதில் இருந்து, நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களைக் காட்டிலும், தேர்தல் கமிஷனுக்கு, அதிக குழப்பம் ஏற்பட்டது. இந்தியாவில், இதுவரை எந்த கட்சிக்கும் ஏற்படாத, புது சிக்கலுக்கு தீர்வு சொல்லும்படி, அ.தி.மு.க., அணிகள் மல்லுக்கு நின்றன;இதனால், தேர்தல் ...

கரூரில் 2வது நாளாக, 'ரெய்டு'; 'மாஜி'யின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

Posted: 22 Sep 2017 10:38 AM PDT

கரூர்:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் கரூர் நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நேற்று, இரண்டாவது நாளாக, சோதனை நடத்தினர்.

கரூரைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜி, தற்போது, தினகரன் அணியில் உள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களில், இவரும் ஒருவர்.நேற்று முன்தினம் காலை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். நேற்று இரண்டாவது நாளாக, 'நவ்ரங் டையிங்' உரிமையாளர் சுப்பிரமணி அலுவலகம், 'ஆசி டெக்ஸ்டைல்ஸ்' ...

'டாஸ்மாக்' மதுபானம் கொள்முதல்; சசிகலா நிறுவனத்துக்கு, டாடா

Posted: 22 Sep 2017 10:51 AM PDT

'டாஸ்மாக்' நிறுவனம், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான, 'மிடாஸ்' நிறுவனத்திடம் இருந்து, மது வகைகள் கொள்முதல் செய்வதை, அதிரடியாக குறைந்துள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 'மிடாஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், எஸ்.என்.ஜே.,' உட்பட, 11 நிறுவனங்களிடம் இருந்து, மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும், கொள்முதல் செய்கிறது.இதில், மிடாஸ் நிறுவனம், சசிகலாவின் குடும்பத்தினருக்கு சொந்தமானது. அதனால், அந்நிறுவனத்திடம் இருந்து தான், டாஸ்மாக், அதிகளவில் மது வகைகளை கொள்முதல் செய்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும், இது தொடர்ந்தது. ஆனால், அ.தி.மு.க., ...

ஆர்.கே.நகர் பட்டுவாடா: ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 22 Sep 2017 10:52 AM PDT

சென்னை:'சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்த, 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: 'ஆர்.கே.நகர் தேர்தலில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் கொடுத்த புகார் பற்றி,
விசாரிக்க வேண்டிய பொறுப்பு, சென்னை போலீஸ் கமிஷனருக்கு இருக்கிறது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார்.
எனவே, தலைமை தேர்தல் அதிகாரி, தன் அரசியல் சட்ட கடமையிலிருந்து விலகிச் செல்கிறாரோ என, சந்தேகம் ...

மத்திய அரசு பரிசீலனை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி ஊக்குவிப்பு திட்டம்

Posted: 22 Sep 2017 11:49 AM PDT

புதுடில்லி:மத்திய அரசு, நாட்டின் பொருளாதார மந்த நிலையை கருத்தில் வைத்து, 40 - 50 ஆயிரம்கோடி ரூபாய் வரை, ஊக்குவிப்பு திட்டங்களைசெயல்படுத்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., அமல் காரணமாக, 2-வது காலாண்டிலும், வளர்ச்சி குறித்து உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது.இதனால், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கத்தை தடுக்க, ஊக்குவிப்பு ...

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட விபத்துகள் குறைவு

Posted: 22 Sep 2017 12:17 PM PDT

சென்னை: தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைந்துள்ளது. மேலும், விபத்துகள் குறைய, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என, பொதுமக்களுக்கு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, போக்குவரத்து கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில், சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க, அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, சாலை விபத்துகள் குறைந்துள்ளன. 2016 ஜன., - ஆக., வரை நடந்த விபத்துகளை விட, இந்தாண்டு ஜன., - ஆக., வரை, 3,899 சாலை விபத்துகளும், 319 உயிரிழப்புகளும் ...

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை மீண்டும் நவம்பரில் ஏவ திட்டம்

Posted: 22 Sep 2017 02:01 PM PDT

திருவனந்தபுரம்: பி.எஸ்.எல்.வி., ராக்கெட், கடந்த மாதம், விண்ணில் ஏவப்பட்டு தோல்வியில் முடிவடைந்த நிலையில், வரும், நவம்பர் அல்லது டிசம்பரில் மீண்டும், அந்த வகை ராக்கெட்டை விண்ணில் ஏவ, இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

தோல்வி:
'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.,-1 எச்' செயற்கைக்கோளை, ஆந்திராவின், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 'பி.எஸ்.எல்.வி - சி 39' ராக்கெட் மூலம், ஆகஸ்ட்டில் விண்ணில் செலுத்தியது. திட்டமிட்ட புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படாமல், இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. எனினும், அடுத்த ...

சிறுவனை கடித்து கொன்ற நாய்கள்: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்

Posted: 22 Sep 2017 02:34 PM PDT

குண்டூர்: ஆந்திராவில், வெறி நாய்கள் கடித்து குதறியபோது காப்பாற்றாமல், பொதுமக்கள், மொபைல்போனில் வீடியோ எடுத்ததால், 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். குண்டூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில், கூலி தொழில் செய்யும் தம்பதியின், 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய்கள், திடீரென, சிறுவன் மீது பாய்ந்து, அவனை கடித்து குதறின.
கொடூர சம்பவம்
அவ்வழியே சென்ற பொதுமக்கள், சிறுவனை ...

பெற்றோரை சந்திக்க ரகசியமாக மும்பை வந்த தாவூத் மனைவி

Posted: 22 Sep 2017 03:13 PM PDT

மும்பை: நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமின் மனைவி, மெஹஜாபின் ஷேக், கடந்த ஆண்டு மும்பை வந்து பெற்றோரை சந்தித்த தகவல் வெளியாகியுள்ளது.
கைது:
மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான, நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். அவனுடைய சகோதரன், இக்பால் கஸ்கர், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், சமீபத்தில், மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
விசாரணை
கஸ்கரிடம் விசாரித்த பின், போலீசார் கூறியதாவது: பாகிஸ்தானின் கராச்சி நகரில், ...

அசல் ஓட்டுனர் உரிமம் மறந்தால் சிறையா?: ஐகோர்ட் கேள்வி

Posted: 22 Sep 2017 04:03 PM PDT

சென்னை: 'அசல் ஓட்டுனர் உரிமத்தை மறந்து வைத்து விட்டாலும், சிறை தண்டனை விதிப்பது சரியா?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உத்தரவு:
வாகனங்களை ஓட்டுபவர்கள், அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என, தமிழக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது. அதை தொடர்ந்து, 'ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி.,யின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விசாரணை:
இதை எதிர்த்து, சென்னை உயர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™