Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு

Posted: 21 Sep 2017 09:22 AM PDT

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூட்டை தணிக்கும் வகையில், சென்னையில் நேற்று, அரசியல், 'காமெடி' நிகழ்வு அரங்கேறியுள்ளது. டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலும், நடிகர் கமலும் சந்தித்து, அரசியல் பேசினர்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியில் முதல்வராக இருந்தாலும், அரசியல் வட்டாரங்களில், காமெடியன் போலவே பார்க்கப்படுகிறார்.
'ஜன் லோக்பால்'
அவர், 'மோடியை வீழ்த்திக் காட்டுவேன்' என கொக்கரித்தபோதும், வாரணாசியில், 3.37 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியபோதும், 'மாநில அரசியலே போதும்' என, டில்லிக்கு ஓடிய போதும், ...

தொடரும் டில்லி பயணங்கள்: குவியும் மனுக்கள்

Posted: 21 Sep 2017 09:36 AM PDT

சமீபத்தில், தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் டில்லிக்கு வந்து திரும்பிய நிலையில், அமைச்சர் தங்கமணி, டில்லிக்கு வந்து, மரியாதை நிமித்தமாக, மத்திய அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழக அமைச்சர்கள் டில்லிக்கு வருகை தருவது அதிகரித்து வந்த நிலையில், சமீபகாலமாகவே, வாரத்துக்கு இரண்டு அமைச்சர்களாவது டில்லி பக்கம் தென்படுகின்றனர். 'நீட்' தேர்வு விலக்கு கோரி வந்திருப்பதாக கூறினர்.
ஆலோசனை
அந்த பிரச்னை ஓய்ந்துவிட்ட நிலையிலும், தமிழக அமைச்சர்களின் டில்லி பயணங்கள் தொடர்கின்றன. ...

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா; பிரதமருக்கு சோனியா கடிதம்

Posted: 21 Sep 2017 09:44 AM PDT

புதுடில்லி: 'பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, லோக்சபாவில் உடனடியாக நிறைவேற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்., தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார்.

பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 2010ல்,ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது; எனினும் லோக்சபாவில் நிறைவேற்றபடவில்லை.அப்போது, மத்தியில், காங்., ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி, லாலு பிரசாத் ...

ரயில் கொள்ளை வழக்கில் திணறல்; பீஹாரில் தமிழக போலீசார் முகாம்

Posted: 21 Sep 2017 09:47 AM PDT

சேலம் - சென்னை விரைவு ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, 5.78 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், துப்பு துலக்க முடியாமல் திணறி வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், தற்போது, பீஹாரில் முகாமிட்டுள்ளனர்.

சேலத்தில் இருந்து,2016 ஆக.,7ல், சென்னைக்கு விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில், 13 பெட்டிகளில், பயணியர் இருந்தனர். இன்ஜினுக்கு அருகில் உள்ள, 3பெட்டிகளில், சேலம், நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் இந்தியன் வங்கி என, பல வங்கி கிளைகளில் சேகரிக்க பட்ட, பழையது, கிழிந்தது என, 342.75 கோடி ரூபாய் ஏற்றப்பட்டு இருந்தது.ரிசர்வ் வங்கிக்கு ...

நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி... கைதாவாரா?

Posted: 21 Sep 2017 10:29 AM PDT

கரூர் மற்றும் திருச்சியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சிலரின் வீடுகள் மற்றும் ஒன்பது நிதி நிறுவனங்கள் உட்பட, 24 இடங்களில், வருமான வரித்துறையினர், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான ஆவணங்களும், தங்கக் காசுகளும் சிக்கி உள்ளன. இது தவிர, மோசடி வழக்கிலும், செந்தில் பாலாஜி சிக்கியுள்ளதால், அவர் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

நாடு முழுவதும், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, வருமான வரித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பண மதிப்பிழப்பு ...

சம்பள கமிஷன்: ஐகோர்ட் கெடு; ஆஜரானார் தலைமை செயலர்

Posted: 21 Sep 2017 10:38 AM PDT

மதுரை: தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நேற்று ஆஜரானார்.

'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது. அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை, நிறுத்தி வைக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தை ஈடு செய்ய, சனிக்கிழமை விடுமுறை நாட்களில் பணிபுரிய வேண்டும்.'சம்பளக் கமிஷன் பரிந்துரையை, செப்., 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நடைமுறை படுத்துவது குறித்து, அக்., 13க்குள் முடிவை தெரிவிக்க வேண்டும்' என, அரசுக்கு ...

'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு

Posted: 21 Sep 2017 10:53 AM PDT

சென்னை: ''மாவட்டத்திற்கு, தலா, ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை பல்கலை, நுாற்றாண்டு விழா கலையரங்கில், 2,315 முதுகலை ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பாசிரியர்களுக்கும், பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், தேசிய விருது பெற்ற, 22 ஆசிரியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், உயர் ...

எதிர்பார்க்கும் தீர்ப்பு நிச்சயம் வரும்: ஸ்டாலின்

Posted: 21 Sep 2017 10:55 AM PDT

சென்னை:''எம்.எல்.ஏ.க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், நாங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு நிச்சயம் வரும்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வின், 18 எம்.எல்.ஏ.,க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட
விவகாரத்தில்,நீதியும், நியாயமும் வெற்றி பெறும் என்பதை, நீதிபதி தெளிவாகவே கூறியிருக்கிறார். எனவே, அக்., 4ல், நாங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு நிச்சயம்வரும். நீதிமன்றத்தின் முடிவு தெரிந்த பின், அடுத்த கட்ட முடிவுஎடுப்போம்.சாமியாரை சென்று பார்ப்பது, மயிலாடுதுறையில் ...

கிருஷ்ணா மருமகன் வீடு அலுவலகங்களில், 'ரெய்டு'

Posted: 21 Sep 2017 10:57 AM PDT

பெங்களூரு:கர்நாடகாவைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வீடு, எஸ்டேட் மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான, கிருஷ்ணா, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்தார். இவரது மருமகனும், காங்., பிரமுகருமான, சித்தார்த், வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, அவருக்கு சொந்தமான பெங்களூரு, சென்னை, சிக்கமகளூரு, கோவா, மடிகேரி என ...

சுனந்தா புஷ்கர் மரணத்தில் விசாரணை எப்போது முடியும்?

Posted: 21 Sep 2017 12:34 PM PDT

புதுடில்லி: 'காங்கிரஸ், எம்.பி., சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், விசாரணை எப்போது முடியும்?' என டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர், டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், 2014, ஜன., 17ல், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பான வழக்கை, டில்லி உயர் நீதி மன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'தடயவியல் சார்ந்த உளவியல் முறை என்ற நவீன முறையில், விசாரணை மேற்கொள்ள உள்ளோம். அதற்கு, எட்டு ...

'செக்ஸ்' சாமியார் குர்மீத் வங்கி கணக்கில் ரூ.75 கோடி இருப்பது அம்பலம்

Posted: 21 Sep 2017 01:59 PM PDT

சண்டிகர்: ஹரியானாவை சேர்ந்த, செக்ஸ் சாமியார், குர்மீத் ராம் ரஹீமின், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் பெயரில், 504 வங்கிக் கணக்குகள் இருப்பதும், அவற்றில், 75 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

20 ஆண்டு சிறை
ஹரியானாவில், பா.ஜ.,வை சேர்ந்த, மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். சிர்சா மாவட்டத்தில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பை நடத்தி வந்த, குர்மீத் ராம் ரஹீமுக்கு, பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சிறையில் அடைக்கப் பட்டுள்ளான்.
கடந்த மாதம், குர்மீத் ராம் ரஹீம், ...

ரயில் உணவு தரம்: மத்திய அரசு அதிரடி

Posted: 21 Sep 2017 03:05 PM PDT

புதுடில்லி: 'ரயில்களில், பயணியருக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களில், அவற்றின் அளவு, 'பேக்' செய்யப்பட்ட தேதி மற்றும் ஒப்பந்ததாரரின் பெயர் விபரம் உள்ளிட்டவை கட்டாயம் இடம் பெற வேண்டும்' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, ரயில்வே மண்டல பொது மேலாளர்கள் மற்றும் இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு, அமைச்சர், பியுஷ் கோயல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரயில் பயணியருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. ரயில்களில் சமைப்பதை நிறுத்தி, ரயில் நிலையங்களில் ...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை

Posted: 21 Sep 2017 04:02 PM PDT

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(செப்., 23) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், ஒரு வாரமாக பருவ மழை விலகி, வெயில் அதிகரித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில், சில இடங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™