ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
- கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
- ஐபோன் பரிசு
- குந்தியும் நிஷாத பெண்களும்
- கா(த)ல் பந்து – கவிதை
- டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
- இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
- வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
- முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
- திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
- Introduction
- ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
- அரசியல் கார்ட்டூன்
- பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
- போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
- திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
- முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
- கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
- கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
- 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
- மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
| தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை! Posted: 21 Sep 2017 03:25 PM PDT தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்...! உங்களுக்கு சேவை செய்யவும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தவும் முடிவெடுத்து அடுத்த தேர்தலில் போட்டியிட புதிய அரசியல் கட்சி தொடங்க முடிவெடுத்திருக்கிறோம். (கட்சி தொடங்கலாமா வேண்டாமா? என்பதற்கான ஆலோசனைகளும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மக்களின் ஆதரவைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும்.) மெரினாவிற்கு பொண்ணு பார்க்க போனவர்கள் எல்லாம் போராட்டம் செய்தோம் என்று புகைப்படமெடுப்பதை பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போகிறது... அரசை எதிர்த்து ... |
| கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு Posted: 21 Sep 2017 02:58 PM PDT கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு ................................................................................................................................................... நம்மள போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான எவனோ எழுதியிருக்கான் ஆனா செம- *உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற விளம்பரங்கள் நிஜமா????? காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி ... |
| Posted: 21 Sep 2017 02:25 PM PDT ஐபோன் பரிசு கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்....., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவை தேடி போய் பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை.. Apple iphone 7 box அவர் கைல. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க, மாப்பிள்ளை எரிச்சலோடு சொன்னார்.... "இப்படி தானே இருந்து இருக்கும் எனக்கும்" ------------------------------------------------------------------------------------- ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, ... |
| Posted: 21 Sep 2017 09:01 AM PDT விளிம்புநிலை மக்களைத் தங்களின் சுயநலத்துக்காகக் காவு கொடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு ஒரு சாட்டையடியாக அமைந்திருப்பது வங்கமொழி இலக்கியத்தின் புகழ் மிக்க படைப்பாளியும்,சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவியின் 'குந்தியும் நிஷாதப் பெண்ணும்'என்னும் மீட்டுருவாக்கச் சிறுகதை. இன்றைய சமூகத் தளத்திலும் -கூடங்குளம் முதல் முல்லைப் பெரியாறு வரை...பல வகையான அர்த்தப் பரிமாணங்களிலும் வைத்து வாசிக்க இடம் தரும் அந்தக் கதை குறித்துச் சில பகிர்வுகள்... பாரதப் போர் முடிந்த பின்பு வானப் பிரஸ்தவனவாசம் மேற்கொள்ளும் ... |
| Posted: 21 Sep 2017 08:47 AM PDT காதலும் கால்பந்தும் ஒன்று தான்! - இரண்டும் இளமையின் விளையாட்டு! - இரண்டிற்கும் ஏது தொடக்கமும் முடிவும்...? - இவை வருவதன் நோக்கமே வலைக்குள் விழுவது தான்! - கோப்பைகள் மட்டும்... கால்பந்தில் வென்றவனிடம்! காதலில் தோற்றவனிடம்! - --------------------- நெல்லை ஜெயந்தா தென்றலோடு சில தினங்கள் - தொகுப்பிலிருந்து |
| டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம் Posted: 21 Sep 2017 08:30 AM PDT புதுடெல்லி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 67–வது நாளாக நீடித்தது. இதையொட்டி விவசாயிகள் தங்களது முகத்தில் கரியை பூசிக்கொண்டு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, விவசாயிகளின் முகத்தில் பிரதமர் மோடி கரியை பூசி ஏமாற்றி விட்டதாக கோஷம் எழுப்பினார்கள். - --------------------- தினத்தந்தி |
| இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல் Posted: 21 Sep 2017 08:23 AM PDT வியாழன், 21 செப்டம்பர் 2017 (00:50 IST) எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த ஆறு வங்கிகளின் செக்புக் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின்னர் செல்லாது என்றும் எனவே வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் செக்புக்குகளை வங்கிகளில் ரிட்டன் கொடுத்துவிட்டு புதிய செக்புக்குகளை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஆறு வங்கிகளின் IFSC கோட் எண்களும் மாற்றப்பட்டுள்ளதாகவும், மாற்றப்பட்ட புதிய கோட் எண்களை அந்தந்த வங்கியில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் ... |
| வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை) Posted: 21 Sep 2017 08:20 AM PDT வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை) குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்; அதில் ஒருவர் மற்றவரிடம் , "குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !" என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்! "ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!" இன்னொருவர் புலம்பினார் ! ஒரு வாரம் ஆயிற்று! குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது! "அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!" ... |
| முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா" Posted: 21 Sep 2017 04:24 AM PDT முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா" mediafire.com file/krbpje9m2gbgps6/POOKOLAM%20PODAVAA-MR.pdf |
| திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் Posted: 21 Sep 2017 12:26 AM PDT பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ... |
| Posted: 20 Sep 2017 10:54 PM PDT பெயர்: சந்திரசேகரன் சொந்த ஊர்: சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இனைய தல தேடல் பொழுதுபோக்கு: ஜோதிடம் தொழில்: சயின்டிஸ்ட் மேலும் என்னைப் பற்றி: தற்போது வசிப்பது சிங்கப்பூரில் |
| ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம் Posted: 20 Sep 2017 10:31 PM PDT பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், இப்போது தாய்மையை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார். - செப்டம்பர் முதல் தேதி, அவருக்குப் பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் ஜுனியர் (Alexis Olympia Ohanian Junior) என்று பெயர் சூட்டியிருக்கிறார் செரினா. - தாய்மையைக் கொண்டாடும்விதமாக, தனது குழந்தைக்காக இன்ஸ்டாகிராமில் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். தன் குழந்தையை அணுஅணுவாக ரசிக்கும் செரினா, தன் தாய் ஒரசினி ப்ரெஸிற்கு (Oracene Price) ... |
| Posted: 20 Sep 2017 10:13 PM PDT ![]() |
| பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை Posted: 20 Sep 2017 07:10 PM PDT புதுடெல்லி இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருது பத்ம பூஷண். கிரிக்கெட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக பத்மபூஷண் விருதுக்காக இந்திய கிரிக்கெட் ஆணையம் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை பரிந்துரை செய்து உள்ளது. இந்த ஆண்டு பத்ம விருதுக்கு டோனியின் பெயரை மட்டுமே பரிந்துரைத்து அனுப்பி உள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஒருவரை அனைவராலும் ஒரு மனதாக பரிந்துரைத்து உள்ளனர். அவர் தலைமையில் இரண்டு உலக கோப்பைகளை ... |
| போக்குவரத்து விளக்கு உருவான கதை..! Posted: 20 Sep 2017 07:08 PM PDT முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. நம் அன்றாட வாழ்வில் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட எச்சரிக்கை விளக்கு (சிக்னல்) கம்பத்தை சாலையில் பார்த்திருக்கிறோம். இவ்விளக்குகள் 3 வண்ணங்களில் அமைந்திருக்கும். அவை முறையே சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகியன. ஆனால் இவை எப்பொழுது, எங்கே, யாரால்? கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை. அது பற்றி பார்ப்போம்..! 19-ம் நூற்றாண்டில் ... |
| திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை Posted: 20 Sep 2017 07:02 PM PDT கோவாய், திரிபுரா மாநிலம் கோவாய் பகுதிகளில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக வெடித்தது. இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் டிவி சேனல் நிருபர் சாந்தனு போம் விக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கலவரம் பரவாமல் தடுக்க கோவாய் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. டி.வி.நிருபர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து முதல்-மந்திரி வீடு முன்பாக பத்திரிக்கையாளர்கள் கோஷம் ... |
| முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு Posted: 20 Sep 2017 06:55 PM PDT புதுடில்லி: முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுடில்லியில் வசித்து வந்த என்.டி திவாரிக்கு மூளை வாத நோய் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவரது உடல் நிலைமோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். என்.டி.திவாரி உ.பி., உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களில் முதல்வராக இருந்தவர் உ.பி.,யில் 3 முறையும். உத்தரகண்ட்டில் ஒரு முறையும் முதல்வராக இருந்துள்ளார் . இவர் காங்கிரசில் ... |
| கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு Posted: 20 Sep 2017 06:54 PM PDT லக்னோ: உ.பி.,யில், கள்ளச்சாராய விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும், 'மாபியா' கும்பலை ஒடுக்கும் நோக்கில், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் ஷரத்தை, அமல்படுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். கள்ளச் சாராய சாவுகளை தடுப்பது தொடர்பாக, சக அமைச்சர்களுடன், முதல்வர் ஆதித்யநாத், நேற்று கலந்தாலோசித்தார். கூட்டத்திற்கு பின், உ.பி., அரசு வெளியிட்ட அறிக்கை: ... |
| கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி Posted: 20 Sep 2017 06:50 PM PDT கோல்கட்டா: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, கோல்கட்டாவில் இன்று(செப்.,21) நடக்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில், ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் வாய்ப்புள்ளது. கோல்கட்டாவில் இன்று மழை வர 80 சதவீதம் வாய்ப்புள்ளது. - ------------------------ தினமலர் |
| 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்? Posted: 20 Sep 2017 06:49 PM PDT 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்க, மின் வாரியம் சலுகை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, நுகர்வோரிடம் எழுந்து உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், ரொக்க பணம், வங்கி காசோலை மற்றும் வரைவோலை, இணையதளம், 'மொபைல் ஆப்' வாயிலாக, மின் கட்டணம் வசூலிக்கிறது. இணைய பரிவர்த்தனை : மொத்தமுள்ள, இரண்டு கோடி மின் நுகர்வோரில், 30 லட்சம் பேர், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துகின்றனர். இந்தாண்டு ஜூலையில் துவக்கிய, 'மொபைல் ஆப்' சேவை வழியாக, இதுவரை, 65 ஆயிரம் பேர், 10.30 கோடி ... |
| மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து Posted: 20 Sep 2017 06:47 PM PDT மும்பை: மும்பையில் கனமழை காரணமாக 75 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் மும்பை சர்வதேச விமானநிலையம்,உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரவேண்டிய 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலைய ஓடுபாதை நாளை காலை 6மணிவரை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - ----------------------------- தினமலர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
