Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கூப்பிட்டதும் வந்து கும்பிடு போடுற பழனிசாமி அல்ல நான் முதல்வரின் அதிரடிகளால் நிலைகுலைந்த சசி குடும்பம்!

Posted: 02 Sep 2017 06:28 AM PDT

அமைச்சராக இருப்பது கூட, வௌியில் தெரியாதபடி, அமைதியாக வலம் வந்த பழனி சாமி, முதல்வரான பின், பதவியை தக்க வைத்துக் கொள்ள மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள்,சசிகலா குடும்பத் தினரை நிலைகுலைய வைத்துள்ளது.

ஜெ., மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வ ரானார். சசிகலா குடும்பத்தினர் மிரட்டியதும், அவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், சசிகலா முதல்வராக முயற்சித்தார்.
ஆலோசனை
அவரால் முதல்வராக முடியாத நிலை ஏற்பட்ட தும், யாரை முதல்வராக்குவது என, சசிகலா குடும்பத்தினர் கூடி ஆலோசித்தனர்.அப்போது, அமைதியாக தங்கள் சொல்படி நடக்கும் பழனி சாமியை, பெயருக்கு ...

 தேசிய நதிகள் இணைப்பு பணி விரைவில். துவக்கம்!  ரூ.5.5 லட்சம் கோடி செலவில் அரசு திட்டம்

Posted: 02 Sep 2017 06:55 AM PDT

நாட்டில், வெயில் காலங்களில் வறட்சியற்ற சூழலை உருவாக்கவும், மழைக் காலங்களில், வெள்ளப் பெருக்கால் ஏற்படும் பேரழிவை தடுக்கவும், 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், தேசிய நதிகள் இணைப்பு திட்டப் பணிகள் சூடுபிடித்து உள்ளன.

முதற்கட்டமாக, உ.பி., - ம.பி., மாநிலங்களில் பாயும், கென் - பெட்வா நதிகளை இணைக்கும் பணிகள், இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரி வித்து உள்ளன.நாட்டின் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்,இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவியது. அதற்கு நேர்மாறாக, இந்த ஆண்டு கொட்டித் தீர்த்த கனமழையால், ...

ஆட்சிக்கு ஆபத்தில்லை என்பதால் முதல்வர் பழனிசாமி...குஷி

Posted: 02 Sep 2017 07:24 AM PDT

தினகரனாலோ, தி.மு.க.,வாலோ, ஆட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பது உறுதியாகி உள்ளதால், முதல்வர் பழனிசாமி, 'செம குஷி'யாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

19 எம்.எல்.ஏ.,க்களை காட்டி மிரட்டிய, தினகரன் அணிக்குள், இப்போது கடும் குழப்பம் ஏற்பட்டுள் ளது. எந்நேரத்திலும், அந்த அணி உடையும் நிலையில் இருப்பதால், அவர்களை நம்பி ஆற்றில் இறங்க, தி.மு.க.,வும் தயாராக இல்லை. அதனால், அரசுக்கு எதிராக, நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியை, ஸ்டாலின் தள்ளிப் போட்டுள்ள தாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.அ.தி.மு.க.,வில், பன்னீர் அணி உருவான போது, அதிக, ...

ஹரியானாவில் மாணவன் சுட்டுக்கொலை அதிர்ச்சி! அமெரிக்கா போல அதிகரிக்கும் வன்முறை

Posted: 02 Sep 2017 09:15 AM PDT

சண்டிகர்,ஹரியானாவில், ஐ.டி.ஐ., எனப்படும், தொழில்நுட்ப பயிற்சி பள்ளியில், வகுப்பறைக் குள், சக மாணவனை, மற்ற இரு மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்காவை போல, இங்கும், மாணவர்க ளிடையே, துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவது, பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சோனிபட் மாவட்டத்தில், ஐ.டி.ஐ., எனப்படும், தொழில்நுட்ப பயிற்சி பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடையே, அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவருமே, 20 ...

தரமற்ற மசூர் பருப்பு 30 ஆயிரம் டன் வாங்க முடிவு

Posted: 02 Sep 2017 09:48 AM PDT

ரேஷனில் தரும் மசூர் பருப்பை, யாரும் வாங்காத நிலையில், மீண்டும், 30 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில ஆண்டுகளாக, துவரம் பருப்பிற்கு பதில், அதே சுவை உடைய, கனடா மஞ்சள் பருப்பு வழங்கப் பட்டது. தற்போது, அதுவும் நிறுத்தப்பட்டு, மசூர் பருப்பு வழங்கப்படுகிறது. இது, தரமற்று இருப்பதால், மக்கள் வாங்குவதில்லை. இந்நிலையில், மீண்டும், 30 ஆயிரம் டன் மசூர் பருப்பு வாங்க, நுகர் பொருள் வாணிப கழகம், டெண்டர் கோரியுள்ளது.இது குறித்து, கூட்டுறவு ...

'ஓரிரு நாட்களில் அடுத்தகட்ட நடவடிக்கை' புதுச்சேரியில் முகாமிட்ட தினகரன் ஆவேசம்

Posted: 02 Sep 2017 10:02 AM PDT

புதுச்சேரி, ''ஓரிரு நாட்களில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்,'' என, தினகரன் கூறி னார்.புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினம் விண்ட் பிளவர் விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க தினகரன் நேற்று வந்தார்.

அவர் கூறியதாவது: கட்சிக்கு துரோகம் செய்த முதல்வர் பழனிசாமி எப்படி மக்களுக்கு நல்லது செய்வார். இதனால்தான் எங்களின் எம்.எல்.ஏ.,க் கள் 'முதல்வரை மாற்ற வேண்டும்' என கூறி வருகின்றனர்.காலதாமதம் ஆனால் எம்.எல். ஏ.,க்கள் மனம் மாறி தானாக வெளியேறி விடு வர் என்று, நினைக்கின்றனர். சுய லாபத்துக்காக எம்.எல்.ஏ.,க் கள் இங்கு தங்கியிருக்கவில்லை. ...

ரூ.1 கோடி சொத்து வாங்கியது யார் 500 பேருக்கு ஐ.டி., 'நோட்டீஸ்'

Posted: 02 Sep 2017 10:50 AM PDT

தமிழகத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக, நில பரிவர்த்தனை செய்த, 500க்கும் மேற்பட் டோருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்த பின், ஜனவரி இறுதியில், 'ஆப்பரேஷன் கிளீன் மணி' என்ற பெயரில், கணக்கில் வராத பணத்தை கண்டு பிடிக்கும் முயற்சியை, வருமான வரித் துறை துவக்கியது. 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் தடை செய்யப் பட்ட பின், வங்கிகளில், 'டிபாசிட்' செய்த, 14 லட்சம் பேர் மீது, வருமான வரித்துறைக்கு சந்தே கம் ஏற்பட்டது. அவர்கள், அதற்கு முந்தைய ஆண்டு களில் தாக்கல் செய்த, வருமான வரி கணக்கில் குறிப்பிட்டிருந்ததை ...

மத்திய அமைச்சரவை பதவியேற்பதில்... 'ரிலே ரேஸ் '

Posted: 02 Sep 2017 11:14 AM PDT

புதுடில்லி:அடுத்த லோக்சபா தேர்தலை எதிர் கொள்ளும் வகையில், மத்திய அமைச்சரவை யில், இன்று அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது அமைச்சர்களாக உள்ள, பா.ஜ., தலைவர்கள் சிலர், கட்சி பணிகளுக்கு அனுப் பப்படுகின்றனர். அவர்களிடமிருந்த இலாகாக் கள், புதுமுகங்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2014ல், மத்திய அமைச்சரவை அமைந்த பின், இரு முறை, அமைச்சரவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்ற பலரது செயல்பாடுகள், பிரதமர் மோடிக்கு திருப்தி அளிக்கவில்லை. பல அமைச்சர்கள் மந்த கதியில் செயல்படுவதாக புகார்கள் ...

'நீட்' விவகாரம், அனிதா மரணம் தமிழக பா.ஜ.,வுக்கு பின்னடைவு

Posted: 02 Sep 2017 11:17 AM PDT

மாணவி அனிதாவின் தற்கொலை, தமிழகத் தில், பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக, அக்கட்சியினர் கருதுகின்றனர்.

'நீட்' தேர்வு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத் தில், மத்திய அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நீட் தேர்வை எதிர்த்து, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற, அரியலுாரை சேர்ந்த, மாணவி அனிதா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் தான், மருத்துவ மாணவர் சேர்க்கை என, தீர்ப்பு அளிக்கப்பட்டது.அதனால், பொது மக்களின் கோபம், மத்திய, மாநில அரசுகள் மீது திரும்பியது. சமூக வலைதளங்களில், நீட் குறித்த ...

'தானமாக தந்த நிலத்தை அழித்தால் பசுவை கொன்ற பாவம் வரும்'

Posted: 02 Sep 2017 12:49 PM PDT

'கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தை அழிப்பவருக்கு, பசுக்களை கொன்ற பாவம் கிடைக்கும்' என்ற தகவல், 11ம் நுாற்றாண்டு கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளது.
'அறம்' வரலாற்று ஆய்வு மையத்தினர் நடத்திய கள ஆய்வில், கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லிகார்ஜூனா துர்கம் என்ற மலையில், சோழர் காலத்தைச் சேர்ந்த, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, அந்த மையத்தின் தலைவர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையில் இருந்து, 10 கி.மீ., தொலைவில், ஒகேனக்கல் சாலையை ஒட்டி, 1,200 அடி உயர, மல்லிகார்ஜூனா துர்கம் என்ற மலை ...

இந்தியாவுக்கு உதவுவோம்: சுவிஸ் அதிபர் உறுதி

Posted: 02 Sep 2017 01:47 PM PDT

புதுடில்லி, ''கறுப்புப் பணத்துக்கு எதிரான, இந்தியாவின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக உள்ளோம்,'' என, சுவிட்சர்லாந்து அதிபர், டோரிஸ் லுதார்டு கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தின் பெண் அதிபர், டோரிஸ் லுதார்டு, நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் உள்ள, சுவிட்சர்லாந்து துாதரகத்தில் நேற்று முன்தினம் இரவு, இரு நாட்டு துாதரக உறவு தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, டோரிஸ் பேசியதாவது: சுவிட்சர்லாந்துடன், சிறந்த நட்பு நாடாக, இந்தியா திகழ்கிறது. பரஸ்பர ஒத்துழைப்புடன் திகழும் இந்த ...

ரேஷன் பொருள் சப்ளை: புதிய விதி முறை அமல்

Posted: 02 Sep 2017 02:49 PM PDT

ரேஷன் கடைகளுக்கு, உணவுப் பொருட்கள்வினியோகம் செய்வதில், புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. இவற்றை, நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது.
மாத துவக்கத்தில் பொருட்கள் வழங்க வேண்டும் என்பதால், அதற்கு முந்தைய மாத இறுதியில் இருந்தே, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு மாதமும், 25ம் தேதி முதல், அடுத்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™