Tamil News | Online Tamil News |
- மத்திய தொகுப்பில் முழு மின்சாரம்: பிரதமருக்கு தமிழக அரசு கோரிக்கை
- குறுக்கு வழி முயற்சி: எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்
- அன்று நீக்கப்பட்டார்; இன்று நீக்கினார்!
- சுங்கச்சாவடிகளில் வாகன காத்திருப்பு பிரச்னைக்கு தீர்வு! புது தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்
- அனலை கிளப்பிய அடுத்தடுத்த சந்திப்பு
- 'தூய்மையே சேவை' பிரசாரம்; பிரபலங்களுக்கு பிரதமர் அழைப்பு
- சசியின் திட்டம்... தவிடுபொடி! 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறித்தார் சபாநாயகர்
- பழனிசாமி அதிரடியில், சசி குடும்பம் மிரட்சி
- சசி அணியின் செந்தில் பாலாஜி கைது?
- மிரட்டல் வழக்கில் தாவூத் இப்ராஹிம் சகோதரர் கைது
- பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
- ஆளில்லா ரயில்வே, 'கேட்'கள் ஓராண்டுக்குள் அகற்ற உத்தரவு
- இலவச மின்சாரத்தில் குடிநீர் வியாபாரம்!
- கூண்டோடு ராஜினாமாவா? தி.மு.க., இன்று ஆலோசனை
| மத்திய தொகுப்பில் முழு மின்சாரம்: பிரதமருக்கு தமிழக அரசு கோரிக்கை Posted: 18 Sep 2017 07:08 AM PDT மத்திய தொகுப்பில் ஒதுக்கியுள்ள, முழு மின்சாரத்தையும் வழங்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசுக்கு, தமிழகத்தில், நெய்வேலி, கல்பாக்கம், வல்லுார், கூடங்குளம்; ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, கர்நாடக மாநிலங்களில், மின் நிலையங்கள் உள்ளன.5,919 மெகாவாட் இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், மேற்கண்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்திற்கு, மத்திய தொகுப்பில் தற்போது, 5,919 மெகாவாட் ஒதுக்கப்பட்டு உள்ளது. தினமும் சராசரியாக, 4,000 மெகாவாட் வழங்கப்படும்.இந்நிலையில், ... |
| குறுக்கு வழி முயற்சி: எதிர்க்கட்சிகள் பாய்ச்சல் Posted: 18 Sep 2017 09:16 AM PDT சென்னை: ''குறுக்கு வழியில் ஆட்சியை காப்பாற்ற, முதல்வர் பழனிசாமி முயற்சி செய்கிறார்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். குறுக்கு வழியில் சென்னையில் நேற்று, ஸ்டாலின் அளித்த பேட்டி: எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில், சபாநாயகரும், முதல்வரும் கூட்டு சேர்ந்து, ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில், தற்போதுள்ள அசாதாரண அரசியல் நெருக்கடிக்கு, மத்திய அரசும், கவர்னர் வித்யாசாகர் ராவும் முழு பொறுப்பேற்க வேண்டும்.குறுக்கு வழியில், நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த முயற்சிக்கும், முதல்வர் பழனிசாமி அரசு, ... |
| அன்று நீக்கப்பட்டார்; இன்று நீக்கினார்! Posted: 18 Sep 2017 09:21 AM PDT சட்டசபையில், 29 ஆண்டுகளுக்கு முன், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,வான தனபால், இன்று சபாநாயகராகி, 18 எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்துள்ளார். அ.தி.மு.க.,வை துவக்கிய, எம்.ஜி.ஆர்., 1987 டிச., 24ல் மறைந்தார். உடன், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள், எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியை ஆதரித்தனர்; அவர், முதல்வராகபொறுப்பேற்றார். ஜானகி அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, 1988 ஜன., 28ல், சட்ட சபை கூடியது. 29 ஆண்டுகளுக்கு பின் ஜானகி அணியில், 98 எம்.எல்.ஏ.,க்கள், ஜெ., அணியில், 28 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். அன்று,கடும் அமளிக்கிடையே, ... |
| சுங்கச்சாவடிகளில் வாகன காத்திருப்பு பிரச்னைக்கு தீர்வு! புது தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம் Posted: 18 Sep 2017 09:21 AM PDT புதுடில்லி: நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில், கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் பிரச்னைக்கு தீர்வாக, வாகனங்களில், 'பாஸ்ட் டேக்' எனப்படும், ரேடியோ அதிர்வலை அடையாள சாதனத்தை பொருத்தும் திட்டம், அக்., 31 முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும், நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட துார இடைவெளிகளில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு சுங்கச்சாவடிகளுக்கு இடைப்பட்ட துாரத்தை கணக்கிட்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும், இந்த பணம் ... |
| அனலை கிளப்பிய அடுத்தடுத்த சந்திப்பு Posted: 18 Sep 2017 09:36 AM PDT இரட்டை இலை சின்னத்தை மீட்க, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய கோரிக்கை மனுவை, எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து, ஏற்கனவே இப்பிரச்னையில் ஆஜராகி வாதாடிய, தங்கள் அணிகளின் வழக்கறிஞர்களுடன், அ.தி.மு.க., தலைவர்கள், டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு, தலைநகர் டில்லியிலும் நேற்று எதிரொலித்தது. தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார் மற்றும், அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள், முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர், சென்னையிலிருந்து, நேற்று டில்லி வந்தனர்.இரு அணிகளும் இணைந்துவிட்டதால், தேர்தல் ஆணையத்திற்கு சென்று, ... |
| 'தூய்மையே சேவை' பிரசாரம்; பிரபலங்களுக்கு பிரதமர் அழைப்பு Posted: 18 Sep 2017 10:02 AM PDT புதுடில்லி: 'துாய்மை இந்தியா' திட்டத்தை, மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கு உதவும்படி, விளையாட்டு, சினிமா என, பல துறை சார்ந்த பிரபலங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பொது இடங்களை துாய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கில், 2014ல், பிரதமர் மோடி, 'துாய்மை இந்தியா' திட்டத்தை அறிவித்தார். இதன் மூன்றாண்டு நிறைவு விழா, காந்தி ஜெயந்தியான, அக்., 2ல் கொண்டாடப்பட உள்ளது.இதன் ஒரு பகுதியாக, 'துாய்மையே சேவை' என்ற பெயரில், பிரசார இயக்கத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்நிலையில், இத்திட்டத்தை பிரபலப்படுத்த ... |
| சசியின் திட்டம்... தவிடுபொடி! 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறித்தார் சபாநாயகர் Posted: 18 Sep 2017 11:12 AM PDT முதல்வருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, சசியால் ஏவி விடப்பட்ட தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று அதிரடி உத்தரவிட்டார். அனைவரையும் இணைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என, பகல் கனவு கண்டு கொண்டிருந்த, தினகரனின் திட்டம், தவிடுபொடியானது. அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வர் பதவியில் அமர, ஆளாளுக்கு முயற்சி செய்தனர். தோழி சசிகலா; அவரை அடுத்து, அவர் குடும்பத்தைச் சேர்ந்த, கணவர் நடராஜன்; பின், தம்பி திவாகரன்; தற்போது, அக்கா மகன் தினகரன் என, 'மியூசிக்கல் சேர்' விளையாட்டு நடந்து வந்தது. சசிகலா ... |
| பழனிசாமி அதிரடியில், சசி குடும்பம் மிரட்சி Posted: 18 Sep 2017 11:20 AM PDT முதல்வர் பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை, சசிகலா குடும்பத்தினரை மிரள வைத்துள்ளது. ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 21 பேர் உதவியுடன், முதல்வர் பழனிசாமியை மிரட்டி பணிய வைக்க, சசிகலா குடும்பத்தினர் முயற்சித்தனர். அவர், மிரட்டலுக்கு பயப்படாமல், பொதுக்குழுவை கூட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியிலிருந்து, சசிகலாவை துாக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்த தினகரன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தபோது, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் கோட்டை விட்ட, தி.மு.க., இம்முறை தினகரன் ஆதரவுடன், தீவிர முயற்சியில் இறங்கியது. அதனால், ... |
| சசி அணியின் செந்தில் பாலாஜி கைது? Posted: 18 Sep 2017 11:20 AM PDT சென்னை,:அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மெக்கானிக் வேலை வாங்கி தருவதாக, 4.25 கோடி ரூபாய் மோசடி செய்ததது தொடர்பாக, சசிகலா அணியின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2015 வரை, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. கமிஷனரிடம் புகார்இவர் மீது, 2016, மார்ச்சில், சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த, கோபி உட்பட, 40க்கும் மேற்பட்டோர், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:போக்குவரத்து துறையில், நடத்துனர், ஓட்டுனர் மற்றும் மெக்கானிக் ... |
| மிரட்டல் வழக்கில் தாவூத் இப்ராஹிம் சகோதரர் கைது Posted: 18 Sep 2017 12:05 PM PDT மும்பை: மிரட்டல் வழக்கில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரரை மும்பை போலீசார் கைது செய்தனர்.நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இவரது மூத்த சகேதாரர் இக்பால் கஷ்கர், இவர் மீது பல்வேறு கொலை, ஆட்கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன.இந்நிலையில் தானே பகுதியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம் பல கோடி கேட்டு இக்பால் கஷ்கர் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ... |
| பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை Posted: 18 Sep 2017 01:06 PM PDT
'காவிரியில் திறக்கப்படும் நீரை, பாசனத்திற்கு பயன்படுத்தக் கூடாது' என, விவசாயிகளுக்கு, அரசு தடை விதித்துள்ளது. தென் மேற்கு பருவமழையால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரும், மேட்டூர் அணைக்கு வருகிறது. இங்கிருந்து, குடிநீருக்காக, நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதை, பாசனத்திற்கு பயன்படுத்த, அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து, பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மட்டுமின்றி, கரூர் மாவட்டம், மாயனுார் காவிரியில் இருந்தும், மூன்று கிளை ... |
| ஆளில்லா ரயில்வே, 'கேட்'கள் ஓராண்டுக்குள் அகற்ற உத்தரவு Posted: 18 Sep 2017 02:06 PM PDT
சென்னை:'தமிழகத்தில் உள்ள, ஆளில்லா ரயில்வே, 'கேட்'களை ஓராண்டுக்குள் அகற்ற வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். தெற்கு ரயில்வே மற்றும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பின் திட்டப் பணிகள் குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், சென்னையில் ஆய்வு செய்தார். அப்போது, ரயில்வே அதிகாரிகளுக்கு பல உத்தரவுகள் பிறப்பித்தார். அதன் விபரம்:
|
| இலவச மின்சாரத்தில் குடிநீர் வியாபாரம்! Posted: 18 Sep 2017 02:40 PM PDT விவசாயத்துக்காக தரப்படும், இலவச மின்சாரத்தை பயன்படுத்தி எடுக்கும் தண்ணீரை, அதிகாரிகள் துணையுடன், கட்டுமானம், ஓட்டல் போன்றவற்றிற்கு, சிலர் விற்பதாக, புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கான செலவை, மின் வாரியத்திற்கு, அரசு வழங்குகிறது. விவசாய மின்சாரத்தில் எடுக்கும் தண்ணீரை, வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது. இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: வேளாண் தொழிலை ஊக்குவிக்கவே, இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தற்போது, தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கிறது. அதிக நிலம் ... |
| கூண்டோடு ராஜினாமாவா? தி.மு.க., இன்று ஆலோசனை Posted: 18 Sep 2017 03:41 PM PDT
'குட்கா' விவகாரம் தொடர்பாக, 21 பேர் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுப்பதற்கு முன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து முடிவு எடுக்க, சென்னை, அறிவாலயத்தில், இன்று(செப்., 19), அக்கட்சி செயல் தலைவர், ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபைக்குள் குட்கா போதைப் பொருள் எடுத்து வந்தது தொடர்பாக, ஸ்டாலின் உட்பட, 21 எம்.எல்.ஏ.,க்கள் மீது, உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு உள்ளது. அதில், உரிமை குழு சார்பில், 21 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. அதை எதிர்த்து, சென்னை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 19,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |