Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பயணியர் தூங்கும் நேரத்துக்கு ரயில்வே கட்டுப்பாடு!

Posted: 17 Sep 2017 08:25 AM PDT

புதுடில்லி: பயணியரின் துாங்கும் நேரத்தை குறைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

துாங்கும் வசதி உடைய பெட்டிகளில், பயணியருக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரயில்களில், துாங்கும் வசதியுடைய ரயில் பெட்டிகளில், எப்போதும் துாங்கி வழியும் பயணியரால், பிற பயணியருக்கு பிரச்னை ஏற்படுகிறது. துாக்கம் போதும்; சற்று அமரலாம் என சிலர், விரும்புவர். அப்போது, பெட்டியில், உடன் பயணிக்கும் பயணியர் ஒத்துழைக்காவிட்டால், அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கை.துாங்கும் வசதி உடைய பெட்டிகளில், இரவு, ...

சியாச்சினில் மலைப்பகுதியை தூய்மை படுத்தும் பணி துவக்கம்

Posted: 17 Sep 2017 08:57 AM PDT

ஸ்ரீநகர்: சியாச்சின் மலைப்பகுதியை தூய்மையாக்கும் பணி துவங்கி உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சியாச்சின்கிளாசியர் மலை பகுதி இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான பகுதியாக விளங்கி வருகிறது.பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக இந்த மலைப்பகுதியில் நமது ராணுவ வீரர்கள் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். இந்த மலை பகுதிகள் சுமார் 21 ஆயிரம் அடி உயரம் கொண்டவையாக உள்ளது. ஆண்டுமுழுவதும் பனிபொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் இம்மலைப்பகுதியை தூய்மை செய்யும் பணி இன்று( செப்.,17) துவங்கி உள்ளது. வரும் அக்டோபர் ...

சசி சிறையில், 'ரெய்டு' ஏன்? பரபரப்பு தகவல் அம்பலம்

Posted: 17 Sep 2017 09:30 AM PDT

பெங்களூரு: சசிகலா அடைக்கப்பட்டுள்ள, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், முறைகேடுகள் தொடர்ந்ததால் தான், 'ரெய்டு' நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடக மாநிலம்,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, போலீஸ் உயர் அதிகாரிகள், சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிஇருந்தார். இது தொடர்பாக, உயர்மட்ட விசாரணையும் நடக்கிறது.சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ள ...

குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Posted: 17 Sep 2017 09:36 AM PDT

தபோய்: நாட்டின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய, உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணையான, சர்தார் சரோவர் அணை, 56 ஆண்டு போராட்டங் களுக்கு பின், நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தில், 10 ஆயிரம் கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ள இந்த அணையை, பிரதமர் நரேந்திர மோடி, தன், 67வது பிறந்த நாளான நேற்று, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள நர்மதை நதியின் குறுக்கே கட்டப் பட்டுஉள்ள, சர்தார் சரோவர் அணையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டுக்கு ...

தலைக்காவிரியில், 'புனித நீராடல்' தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'ஜாலி'

Posted: 17 Sep 2017 10:12 AM PDT

குடகு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், காவிரி உற்பத்தியாகும் இடமான தலைக்காவிரியில், நேற்று, புனித நீராடினர்.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலை காரணமாக, புதுச்சேரியில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 7ம் தேதி இரவு, ரிசார்ட்டை காலி செய்து, கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள, 'பேடிங்டன்' ரிசார்ட்டில், தஞ்சம் புகுந்து உள்ளனர்.விசாரணைக்காக, தமிழக போலீசார், ரிசார்ட்டுக்கு சென்றனர். போலீசார் வரும் தகவலறிந்த, முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டி, எம்.எல்.ஏ.,வுமான தினகரன் ஆதரவாளர் பழனியப்பன், தப்பி
ஓடியதாக தகவல் வெளியானது. ...

19 தொகுதிகளில் தேர்தல்; முதல்வர் திடீர் முடிவு

Posted: 17 Sep 2017 10:19 AM PDT

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து விட்டு, ஆர்.கே.நகருடன் சேர்ந்து, 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி, சட்ட நிபுணர்களுடன் ஆலோனை நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது.

'முதல்வர் பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறுகிறோம்' என, கவர்னரிடம் கடிதம் கொடுத்த, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேருக்கு விளக்கம் கேட்டு, சட்டசபை சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார். இதில், ஜக்கையன் மட்டும் பதில் அளித்தார்; அத்துடன், முதல்வர் அணிக்கும் மாறினார். ஆனால், மற்ற, 18 பேர் இன்னும் விளக்கம் ...

ஜெ., சிகிச்சை போட்டோ வெளியிட தினகரன் திட்டம்

Posted: 17 Sep 2017 10:24 AM PDT

'ஜெயலலிதா மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்' என, அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சிசிச்சை தொடர்பான போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பின், தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். செப்., 15ல், வடசென்னையில் நடந்த பொது கூட்டத்தில், 'தினகரன், மாமியார் வீட்டிற்கு செல்வார்' என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, 'தினகரன் கதை, இன்னும் மூன்று நாட்களில் முடியும்' என, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். 'ஜெ., மரணத்திற்கு, சசிகலா ...

'பெட்ரோல், டீசல் விலையை குறையுங்க!'

Posted: 17 Sep 2017 10:38 AM PDT

சென்னை: 'பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது நேற்றைய அறிக்கை:காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட, தற்போது, சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை, பேரலுக்கு, 52 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் விலை, 50
சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இது, பா.ஜ., அளித்ததேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்பட்டதாகும்.விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசோ, மக்கள் படும் வேதனைகளை அமைதியாக வேடிக்கை ...

அபராதத்தில் யாருக்கு விலக்கு? எஸ்.பி.ஐ., தீவிர ஆலோசனை

Posted: 17 Sep 2017 10:49 AM PDT

மும்பை: சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையில் இருந்து, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விலக்கு அளிப்பது குறித்து, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஆலோசித்து வருகிறது.

நாட்டின் மிகப் பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை இந்தாண்டு ஏப்ரலில் அமல்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இதில் மாற்றம் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக, வங்கி ...

ஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டதாரி இல்லை; டி.ஆர்.பி., தேர்வில் 865 இடங்கள், 'அவுட்'

Posted: 17 Sep 2017 11:56 AM PDT

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் எடுக்க, முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கபடுகின்றனர். அரசு பள்ளிகளில், இந்த பதவிக்கு காலியாக உள்ள, 3,375 இடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஜூலை, 2ல் எழுத்து தேர்வு
நடத்தப்பட்டது.இந்த தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்; முடிவுகள், ஆக., 11ல் வெளியிட பட்டன. தேர்ச்சி ...

'சி.பி.ஐ.,க்கு விலக்கு ஆர்.டி.ஐ.,யில் கிடையாது'

Posted: 17 Sep 2017 12:43 PM PDT

புதுடில்லி: 'ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.ஐ.,க்கு முழு விலக்கு அளிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஐ.பி., - 'ரா' - என்.ஐ.ஏ., - சி.பி.ஐ., உள்ளிட்ட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கும் ஷரத்துக்களை சேர்த்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, தகவல் உரிமை சட்டப் பிரிவில் உள்ள ஷரத்துக்களை மேற்கோள் காட்டி, பதில் ...

பத்மநாப சுவாமியை தரிசிக்க பாடகர் யேசுதாஸ் விண்ணப்பம்

Posted: 17 Sep 2017 02:40 PM PDT

திருவனந்தபுரம்: கர்நாடக இசைக் கலைஞர், கே.ஜே.யேசுதாஸ், திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கோரி, கோவில் நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த, கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பின்னணி பாடகருமான, கே.ஜே.யேசுதாஸ், ...

'பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது உறுதி': அமெரிக்கா

Posted: 17 Sep 2017 03:26 PM PDT

வாஷிங்டன் : 'பருவநிலை மாறுபாடு தொடர்பான, பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவில், எந்த மாற்றமும் இல்லை' என, அமெரிக்கா அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், சர்வதேச நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கடந்தாண்டு பிரான்ஸ் தலைநகர், பாரிஸில் நடந்த பருவநிலை மாறுபாடு மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 190க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. அதன்படி, கடந்தாண்டு நவம்பரில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™