Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பழனி - பன்னீர் ஆதரவாளர்கள்... போட்டா போட்டி

Posted: 16 Sep 2017 06:47 AM PDT

இரு அணிகள் இணைந்து, சசிகலா குடும்பத்தினரை அடியோடு வெளியேற்றி விட்ட நிலையில், அ.தி.மு.க.,வில், கட்சிப் பதவி மற்றும் வாரிய பதவிகளை பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்சியை வழி நடத்த அமைக்க பட உள்ள குழுவில் இடம் பிடிப்பதிலும், இரு தரப்பையும் சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஜெ., மறைவுக்கு பின், இரண்டாக பிளவுபட்ட, அ.தி.மு.க., அணிகள், ஆகஸ்ட், 21ல் இணைந்தன. இரு அணிகளும் இணைந்ததும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைத்தனர். ...

பெரிய்ய்ய்ய கூட்டணி... பா.ஜ., கணக்கு பலிக்குமா?

Posted: 16 Sep 2017 07:12 AM PDT

வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை சந்திக்க, தமிழகத்தில், மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், பா.ஜ., இறங்கியுள்ளது.

தி.மு.க.,வை பரம எதிரியாக கருதி, விமர்சித்து வந்த, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சென்னையில் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். அப்போது வைகோவை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார்.பின், செப்., 5ல் நடந்த, 'முரசொலி' பவள விழாவிலும், வைகோ பங்கேற்றார்.
கோரிக்கை
இதையடுத்து, 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., ...

கறுப்பு பணத்தை பதுக்க பண முதலைகள்... புது வழி! ஆசியாவில் போலி நிறுவனங்களில் முதலீடு

Posted: 16 Sep 2017 07:34 AM PDT

புதுடில்லி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பணத்தை பதுக்கி வைப்பதை விட, மிகவும் சுலபமான வழியை, நம் நாட்டைச் சேர்ந்த கறுப்புப் பண முதலைகள் கண்டுபிடித்துள்ளனர்.

சிங்கப்பூர், ஹாங்காங், மலேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், போலி நிறுவனங்கள் பெயரில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் நடைமுறை, அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், வரி சொர்க்கம் என அழைக்கப்படுகின்றன. இங்குள்ள வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில், எந்த நாட்டைச் சேர்ந்தவரும் முதலீடு செய்யலாம். அந்த முதலீடு எப்படி வந்தது என்பதற்கான ...

2019 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ., சுறுசுறு! கறைபடாத நபர்களை களத்தில் இறக்க திட்டம்

Posted: 16 Sep 2017 08:14 AM PDT

வரும், 2019ல், நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வேட்பாளர்களை, பல்வேறு தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்ய, ஆளும், பா.ஜ., தயாராகி வருகிறது. கறைபடாத, திறமையான நபர்களுக்கு, வாய்ப்பு அளிக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

கடந்த, 2014ல், நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி சார்பில், பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி நிறுத்தப்பட்டு, அமோக வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலிலும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், பல்வேறு அதிரடி திட்டங்களை, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல அமைச்சர்களின் ...

49,000 ஆதார் பதிவு மையங்கள் கறுப்பு பட்டியலில் சேர்ப்பு

Posted: 16 Sep 2017 10:01 AM PDT

புதுடில்லி, புதிதாக ஆதார் அடையாள அட்டை பெற வருவோரிடமும், அதில் மாற்றங்கள் செய்ய விரும்புவோரிடமும், அதிகளவில் கட்டணம் வசூலித்து, முறைகேடுகளில் ஈடுபட்ட, 49 ஆயிரம், ஆதார் பதிவு மையங்கள், ஆதார் அடையாள அட்டை ஆணையத்தால், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின், கனவுத்திட்ட மான, 'டிஜிட்டல் இந்தியா'வை நிறைவேற்ற, ஆதார் அடையாள அட்டை பெரியளவில் உதவி வருகிறது.வங்கிகள், பென்ஷன், வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை, ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மத்திய --- மாநில அரசுகளின் பல்வேறு ...

மெஜாரிட்டி நிரூபிக்க இந்த வாரம் சட்டசபை கூடுமா? எதிர்பாா்ப்பு

Posted: 16 Sep 2017 10:28 AM PDT

முதல்வர் பழனிசாமி அரசு, மெஜாரிட்டியை நிரூபிக்க, இந்த வாரம் சட்டசபை கூடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முடிவு செய்ய, கவர்னர் வித்யாசாகர் ராவ், நாளை சென்னை வருகிறார். பலப்பரீட்சையை சந்திக்க, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், ஆகஸ்ட், 22ல், கவர்னரை நேரில் சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், முதல்வருக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு ...

ஆட்சிக்கு மிரட்டல் விடுக்கும் தினகரன் மீது மந்திரிகள் பாய்ச்சல் ஜெ.,வை, சசி குடும்பத்தினர் கொலை செய்ததாக ஆவேசம்

Posted: 16 Sep 2017 10:38 AM PDT

ஆட்சியை கவிழ்க்கப் போவதாக, மிரட்டல் விடுத்து வரும் தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆவேச பாய்ச்சலை துவங்கியுள்ளனர்.

ஜெ.,வை, சசி குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்ததாக, மந்திரி சீனிவாசன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டில், ஸ்டாலினுடன் தினகரன் ரகசிய பேச்சு நடத்தியதாகவும், பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.அ.தி.மு.க., அணிகள் இணையாது என, தினகரன் நம்பினார். எனவே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உதவியுடன், முதல்வரை மிரட்டி, பணிய வைக்க முயற்சித்தார். அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக, அணிகள் இணைந்தன.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ...

பத்மநாப சுவாமி கோவிலில்மாயமான வைரங்கள் மீட்பு

Posted: 16 Sep 2017 10:44 AM PDT

திருவனந்தபுரம், திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலில் மாயமான, ௧௨ வைரங்கள் மீட்கப்பட்டதாக, விசாரணை குழு தெரிவித்துள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில், சுவாமிக்கு அணிவிக்கப்படும், வைரக்கற்கள் பொருத்தப்பட்ட மாலையிலிருந்து, விலை மதிப்பில்லாத, ௨௬ வைரங்கள் காணாமல் போயுள்ளதாக, புகார் எழுந்தது.இது குறித்து விசாரிக்க, சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த குழு, தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில், காணாமல் போன, ௨௬ வைர ...

மாமியார் வீட்டுக்கு பல தடவை சென்றவன் நான்: தினகரன், 'காமெடி'

Posted: 16 Sep 2017 10:50 AM PDT

சென்னை:''மாமியார் வீட்டுக்கு, நான் பலமுறை சென்று வந்து விட்டேன். ஆட்சி கலைக்கப்பட்டதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மாமியார் வீட்டுக்கு செல்வது உறுதி,'' என, தினகரன் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத் தியாகி போல அவர் பேசியது, சுற்றி இருந்தவர்களைநகைப்புக்குள்ளாக்கியது.

சென்னையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., சார்பில் நடந்த, அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், 'தினகரன், விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார்' என்றார்.அதற்கு பதில் அளித்து, நேற்று சென்னையில் தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:இவர்கள் ...

வட கொரியாவுக்கு ஐ.நா., கண்டனம்

Posted: 16 Sep 2017 11:47 AM PDT

ஐ.நா., ஏவுகணை சோதனை நடத்திய, வட கொரியாவுக்கு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை, வட கொரியா நடத்தியது.
அந்த ஏவுகணை, ஜப்பான் வான் எல்லை வழியே பாய்ந்து சென்று, பசிபிக் கடலில் விழுந்தது. வட கொரியாவின் இந்த அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும் ...

ஓரிரு நாளில் நல்ல செய்தி வரும்: ஸ்டாலின் நம்பிக்கை

Posted: 16 Sep 2017 12:16 PM PDT

திண்டுக்கல், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகிக் கொண்டு இருக்கிறது. நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என திண்டுக்கல்லில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் செயல்தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது:தமிழக அரசியலில் முதல்வர், துணைமுதல்வர், அடிவருடி அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் இத்தனை பேர் இருந்தாலும், தமிழகத்திற்கு பிரச்னை என்றால் முதல் குரல் கொடுப்பது தி.மு.க.,தான்.ஒட்டு மொத்த தமிழகமும் தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வரும் என்ற மனநிலையில்தான் உள்ளது.
ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, 'இந்த ...

சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம்:பேச்சு தோல்வி

Posted: 16 Sep 2017 12:42 PM PDT

வாஷிங்டன், சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்து, அமெரிக்காவில், இந்தியா - பாக்., நடத்திய பேச்சு, எந்த உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்தியா - பாக், இடையே, 1960ல், உலக வங்கி உதவியுடன், சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஜீலம் மற்றும் செனாப் ஆற்றுப் பகுதியில், கிஷன்கங்கா, ராட்லே ஆகிய நீர்மின் நிலையங்களை அமைக்க, இந்தியா திட்ட மிட்டது. அதற்கு, பாக்., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் குறித்து, இந்தியா - பாக்., இடையே, செயலர்கள் அளவிலான பேச்சு, அமெரிக்க ...

குஜராத்தில் சர்தார் சரோவர் அணை : நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

Posted: 16 Sep 2017 01:33 PM PDT

ஆமதாபாத்: குஜராத்தில் சர்தார் சரோவர் அணை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அணையை நாட்டுக்கு அர்ப்பணி்க்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். .இதையொட்டி குஜராத் வருகை தருகிறார். அப்போது தனது தாயார் ஹிராபாயை சந்தித்து ஆசி பெறுகிறார். குஜராத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரஉள்ளதையொட்டி பா.ஜ. வெற்றி வியூகம் வகுத்து வருகிறது.இதையொட்டி குஜராத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு ஜப்பான் நிதியுதவியுடன் புல்லட் ரயில் ...

ஜப்பான் முதலீடு: சீனா வயிற்றெரிச்சல்

Posted: 16 Sep 2017 02:10 PM PDT

பீஜிங்: இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது' என, சீனா புலம்பியுள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நடந்த புல்லட்ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற,ஜப்பான் பிரதமர், ஷின்சு அபே, 'இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், ஜப்பான் முதலீடு அதிகரிக்கப்படும்' என, தெரிவித்தார்.ஜப்பான் பிரதமரின் இந்த அறிவிப்பு, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது,
சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர். சுன்யிங் கூறியதாவது:பிரச்னைக்குரிய பகுதிகளில், எவ்வித முதலீட்டையும், சீனா ஏற்காது. இந்தியா - சீனா எல்லை, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™